Home Antiheroகாதலி – 06

அத்தியாயம் – 06

கடந்து போகும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவங்களைக் கொடுத்து செல்லும் இந்த வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது?

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

கணவன் தன்னிடம் நடந்துகொண்ட முறையிலும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையிலும் தன்மேல் உண்டான சுயபச்சாதாபமும் சேர்ந்து, மொத்தமும் அவளை வெகுநேரம் உறங்க விடவில்லை. அழுது அழுது உடலும் மனமும் வெகுவாக சோர்ந்து போயிருந்தது நாகம்மைக்கு.

இரவு கணவன் வர வெகு நேரமாயிருக்க, அனைவரையும் உறங்க அனுப்பிவிட்டு முத்தம்மாவிற்கு துணையாக அமர்ந்துவிட்டாள். நேரம் கடந்ததே ஒழிய அப்போதும் அவன் வராமல் போக, முத்தம்மாதான் அவளை சத்தம் போட்டு அனுப்பி வைத்தார்.

முதல்நாள் போல இன்றும் அவன் வந்து எதுவும் பேசிவிடுவானோ என்ற பயத்தில் இருந்தவள், அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள். எப்படியும் அவன் வரும்வரை உறங்க முடியாது. வந்ததும் தன்னுடைய ஜாகையை மாற்றிக் கொள்ளலாம் என நினைத்துதான் அங்கு அமர்ந்தது.

வெயிலில் தோட்டத்தில் இருந்ததும் எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் கண்ணை சொக்க வைக்க, அப்படியே தூங்கியிருந்தாள். சிறு சத்தத்திலும் முழித்துக்கொள்பவள், அவன் கதவைத் திறக்கும் சத்தத்தில் எழுந்து விடலாம் என்று நினைத்திருக்க, உடலில் இருந்த அசதி அவளை எழும்ப விடவில்லை.

அவன் மேலே வந்து விழும் வரைக்குமே எழவில்லை. விழுந்த பிறகு அடித்துப் பிடித்து எழ முயற்சிக்க, அவன் விட்டால் தானே? அவன் விழுந்ததும் இதழ்கள் நேராக அவளது கழுத்தடியில் புதைய, கைகளோ இடையை இணக்கமாகப் பிடித்திருந்தது. அவள் திமிற, அதை லேசாக தலை உயர்த்திப் பார்த்தவன் மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.

கழுத்தடியில் புதைந்த உதடுகள் மெல்ல மெல்ல மேலேறி காது மடல்களை உரச, திமிறிய உடல் அப்படியே இளைய, கைகள் தானாக அவனுடைய சட்டைக் காலரை பற்றிக்கொண்டது. முதன்முறையாக உணரும் ஒரு ஆணின் ஸ்பரிசம். அந்த புதுவிதமான உணர்வில் கட்டுண்டவள் தன் நிலையை மறந்து அவனோடு இணக்கமானாள். உடலில் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தில் கன்னங்கள் தானாகவே சிவப்பிற்கு மாறியது.

மூச்சுக் காற்றின் வெப்பம் நெருங்கவே உடலெல்லாம் தகிப்பது போன்ற உணர்வு அவளுக்குள் புயலாக பரவியது. கன்னங்களில் படிந்த அவனது கரங்களால் விழித்துப் பார்த்தவள், அவனது விழுங்கி விடும் பார்வையைக் காணவே, விழியகற்ற முடியாமல் ஸ்தம்பித்துப் போனாள்.

அவள் விழிகள் இரண்டும் ஒருவிதமான எதிர்பார்ப்பில் மூடிக்கொள்ள, சட்டென்று இதழோடு இதழ்களைக் கலந்தவன், இலக்கணமில்லாத புதுக்கவிதை ஒன்றை எழுதத் துவங்கியிருந்தான். அவனுக்குள்ளயே புதைந்து போக முயன்றவளை இறுக்கிக்கொண்டான் ஷ்யாம். கரங்கள் சுற்றி வளைக்க, மயக்கத்துடன் பாடம் கற்றுக் கொண்டவள், அதுவரை உணர்ந்திராத புதுவித உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினாள்.

சீண்டலும் சிணுங்கலும் நிரைந்த பயணத்தை முடிக்க மனமின்றி மீண்டும் மீண்டும் அவளை நாட, அப்போதுதான் அவன் அந்த வார்த்தைகள் எனும் அமிலத்தை அவள் மீது கொட்டினான்.

இருவருக்குமான கூடல் முடிந்து அவளை விலக்கி, அவள் நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தை வைத்து, “நயனா… லவ் யூ நயனா!” என்றுத் தன் மீதுப் போட்டுக்கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.

அதுவரை வானில் பட்டமாக பறந்து கொண்டிருந்தவளை அந்த வார்த்தைகள், புயலில் சிக்கிய நூலறுந்த பட்டமாக எங்கோ ஓர் இடத்தில் கொண்டுபோய் போட்டது. விழிகள் தன் பாட்டிற்கு நீரைக் கொட்ட அவனிடமிருந்து பிரிய முயன்றும் முடியாமல், தன் நிலையை எண்ணி அவளுக்கே அருவெறுப்பானது.

முடிந்தவரை அவனைத் தள்ளி, தன்னைப் பிரித்து வேகமாக குளியலறைக்குள் ஓடி நீருக்குள் நின்றாள். முதன்முறையாகத் தன்னையே வெறுத்தாள் பெண். இவனைப் பற்றித் தெரிந்தும் அவனிடம் இளைந்தோமே என்று தன்மேலே கோபம் பொங்கியது.

ஒரு பெண்ணை அதிலும் மனைவியானவளின் விருப்பம் கூட இல்லாமல் தொட்டு, ஆண்டு அதன்பிறகு மனைவியின் இடத்தில் வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்வது, அவளை அவமனாப்படுத்தியது போல் ஒரு எரிச்சல். ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் மனதின் மேலேறி அவளைத் துண்டு துண்டாக்க, உடலெல்லாம் அருவெறுப்பில் கூசியது.

வெகுநேரமாக நீரில் நின்றது உடல் நடுங்க ஆரம்பிக்க, சுய உணர்விற்கு வந்தவள் உடையைக் கழட்டி அங்கிருந்த கூடையில் போட்டுவிட்டு, டவலோடு வந்தவள் அவன் விழுத்துக் கொள்வானோ என்ற பயத்திலேயே வேகமாக கையில் கிடைத்த ஒரு துணியை எடுத்து மாட்டிக்கொண்டு டவலைத் தலையில் சுற்றினாள்.

உடலில் ஏற்பட்ட குளிர் வேறெதையும் யோசிக்கவிடாமல் செய்ய, சூடாக ஏதேனும் தொண்டையில் இறக்கியே ஆகவேண்டும் என்றுத் தோன்ற, அப்போது அவள் கண்ணில் பட்டது அவனுக்காக கொண்டு வந்திருந்த பால் இருந்த ஃப்ளாஸ்க்.

சூடாக இருந்த பாலை டம்ளரில் ஊற்றியவள், பால்கனியில் சென்று நின்றுகொண்டாள். வானம் முழுவதும் நட்சத்திரப் பூக்கள் பூத்துக் குலுங்க, பால் நிலா இவளைப் பார்த்து புன்னகைத்தது. சூடான பால் உள்ளே இறங்க இறங்கவே அவள் இழந்து கொண்டிருந்த தைரியம் மெல்ல மெல்ல மீண்டுக் கொண்டிருந்தது. பாலும் முடிய அவளது முகமும் மனதும் ஒரு தெளிவிற்கு வந்திருந்தது.

இப்போது மனம் அவனுக்காக யோசிக்கத் தொடங்கியது. அவன்தான் முன்னமே பிடிக்காது என்று சொல்லிவிட்டானே, அப்படி இருக்கும் போது அவன் இடத்தில் தன்னைப் பார்த்ததும் காதலிதான் என்று நினைத்திருப்பான். அவனும் பாவம், காதல் வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவன், கணவனுக்காக காரணங்களைத் தேட ஆரம்பித்தது. அவனது மனம் படும்பாடை அவளால் உணர முடிந்தது.

என்னதான் அவன் டைவோர்ஸ் என்று பேசினாலும் அவள் கொடுக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம். தன் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒருமுறைதான் என்பதில் உறுதியாக இருந்தாள் அவனைப் போல. அப்படியிருக்க, இவனைப் பிரிந்து இன்னொரு வாழ்வெல்லாம் அவளால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.

எத்தனை கஷ்டங்கள் என்றாலும் இந்த வாழ்க்கையில் போராடி தன் இடத்தைப் பிடித்துதான் ஆகவேண்டும். அப்படி இல்லாமல் தோற்று தன் வீட்டிற்கு சென்றால், தாயும் சகோதரிகளும் வருத்தப்படுவார்கள். அடுத்தடுத்து இருக்கும் இரு சகோதரிகளின் வாழ்வும் தன்னால் கெட்டுவிடும் என்று நினைத்தாள். அதனால் அவன் இருக்கும் இந்த இரண்டு நாட்களில் அவன் கண் முன்னமே வராமல் இருந்துகொண்டால், அவனும் கண்டு கொள்ளாமல் கிளம்பிவிடுவான் என்று புதிதாக ஒரு கணக்கை யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள், அங்கிருந்த சேரில் அப்படியே உறங்கியும் போனாள்.

இதையெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தவளுக்கு தன் முட்டாள்தனம் புரிகிறதுதான். ஆனால் வீட்டில் இருப்பவர்களின் நிம்மதி முக்கியம் என்று, தன் நிம்மதியைத் தொலைக்க தொடங்கினாள் நாகம்மை.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

கனவே கனவே கலைவதேனோ

கரங்கள் கணமாய் கரைவதேனோ

நினைவே நினைவே அறைவதேனோ

எனது உலகம் உடைவதேனோ

You may also like

1 comment

M. Sarathi Rio September 8, 2026 - 9:53 pm

அடிப்பாவி..! அப்படியெல்லாம் லேசுல விட்டுறவனா அவன்…?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured