Home Antiheroகாதலி – 17

அத்தியாயம் – 17

இமைகளில் கனவுகளை விதைத்தேனே

ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இங்கு வெறும் காற்றிலே

நான் விரல் நீட்டினேன்

உன் கையோடு கை சேரத்தான்

உன் உறவும் இல்லை

என் நிழலும் இல்லை

இனி என் காதல்

தொலைதூரம்தான்…

ஸ்ரீமதி மருத்துவமனை:

இரவு நேரம் மிகவும் நிசப்தமாக இருந்தது அந்த மருத்துவமனை வளாகம். அது விஐபிகள் மட்டுமே வந்து செல்லும் மருத்துவமனை என்பதால் கூட்டமும் சத்தமும் கொஞ்சமும் இல்லை. லலிதாவின் தோழியான சுமதியின் மருத்துவமனைதான் அது. அங்குதான் நாகம்மையை அட்மிட் செய்திருந்தார்கள்.

பெரியவர்கள் மூவரும் வீட்டிற்கு சென்றிருக்க, சபரி வெளியில் சேரில் சாய்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். இருக்கிறேன் என்ற முத்தம்மாவை அவரது உடல்நிலையை மனதில் வைத்து வீட்டிற்கு அனுப்பியிருக்க, நாகம்மையின் அருகில் ஒரு இருக்கையில் அமர்ந்தபடியே சங்கவி விழிப்பும், உறக்கமுமாக அமர்ந்திருந்தாள். ஆனால் நாகம்மையோ படுத்தவாக்கில் தனக்கு மேலேத் தெரிந்த விட்டத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்களின் இருபுறமும் நீர் வழிய, சத்தமில்லாமல் உள்ளம் தேம்பிக் கொண்டிருக்க, ட்ரிப்ஸ் இல்லாத மற்றொரு கை தன் சூழ் இருந்த பெட்டகத்தை வருடிப் பார்த்தது. ‘ஏன் போனாய் தங்கமே, உனக்கும் என்னைப் பிடிக்கவில்லையா? அம்மாவைப் பிடிக்கவில்லையா? என்ன கோபம் என்னோடு? என்னை விட்டுப் போய்விட்டாயே! உன்னை வேண்டாமென்று ஒரு நொடிகூட நான் நினைக்கவில்லையே, எப்படி உன்னைக் காத்துக் கொள்வது என்றுதானே நினைத்து பயந்தேன். அந்த பயம்கூட தப்பென்று உணர வைத்துவிட்டாயே செல்லமே…

இனி உன்னை எப்போதும் பார்க்க முடியாதே, நான் செய்த பாவம்தான் என்ன? நீ வந்ததை நினைத்து மகிழக்கூட இல்லையே, நொடியில் என்னை மொத்தமாக உடைத்து விட்டாயே!’ என கரைந்து போன கருவிடம் காற்றில் பேசிக் கொண்டிருக்க, தனக்கு முன்னே நின்ற நெடிய உருவம்கூட அவள் கண்ணுக்குத் தெரியவில்லை.

அவளருகே நெருங்கி வந்தவன் காதோரம் வழிந்த நீரைத் துடைத்தபடியே மனைவியின் முகம் காண, அப்போதும் அவள் சிந்தனை வந்தவனிடம் இல்லை. தன் ஒட்டு மொத்த அன்பையும் காட்டும் விதமாக, “ஸ்ரீ…” என்றவன் அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ள, கணவனின் அணைப்பில் சுயம் வந்தவள், “பா… வா… பாவா…” என அவனைக் கட்டிக் கொண்டுக் கதறியவள்,

“எனக்குத் தெரியல பாவா, எப்படி… என்னனு ஒன்னுமே தெரியல. நான் வேணும்னு பண்ணல பாவா.” என்ற வார்த்தைகள் தவிர்த்து வேறொன்றும் வரவில்லை அவளிடமிருந்து.

அந்த வார்த்தைகளும் அது கொடுத்த வலியையும் தாங்கிக்கொண்டே, “ஒன்னுமில்லடா… ஒன்னுமில்லடா…” என்றவனின் குரலும் உடைய, உடலும் அழுகையில் குலுங்கியது. நாகம்மையின் சத்ததில் எழுந்த சங்கவியும் இருவரின் நிலையைப் பார்க்க, அவள் விழிகளிலும் நீர் உடைப்பெடுக்க அங்கு நிற்கமுடியாமல் வெளியில் வந்துவிட, இருவரின் அணைப்பும் அழுகையும் மட்டும் நிற்கவில்லை.

சில நிமிடங்களில் தன்னை சுதாரித்த ஷ்யாம் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, கலைந்திருந்த கூந்தலைக் காதோரம் ஒதுக்கி, முகத்தை வருடியபடியே, “சாரி குட்டிமா… ரொம்ப சாரிடா. எனக்குத் தெரியும் மன்னிப்புக் கேட்டா மட்டும் என் தப்பு சரியாகிடாது. உன்னை எந்தளவுக்கு கஷ்டப்படுத்திருந்தா நீ இப்படி வேதனை பட்டிருப்ப? எங்கிட்ட சொல்லிருக்கலாமேடா…” என்றவனின் குரல் மீண்டும் உடைய, கேட்டவளோ பதிலேதும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்து சிறுபிள்ளையாய் உதடு பிதுக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.

“இல்ல குட்டிம்மா… ஒன்னுமில்ல. நான் ஒன்னும் சொல்லல, இங்க பாரு, என்னைப் பாரு… நான் உன்னை ஒன்னும் சொல்லலடா. ஆனா ஏன் கண்ணா, ஏன் சொல்லல? எங்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு நான் உன்னை கொடுமை பண்ணிட்டேன்ல, அதான் உன்னால சொல்ல முடியல இல்ல.” என்றவன், அவள் நெற்றியில் தன் முகத்தைப் பதித்து ஆழ மூச்செடுத்து தன்னைக் கட்டுப்படுத்த முயற்சித்தான்.

அதிலேயே அவன் அழுவதைக் கட்டுப்படுத்துகிறான் என்று புரிய, “சாரி… நானும் நீங்க சொல்லும் போதே அந்த மாத்திரை எல்லாம் சாப்பிட்டுருக்கணும், செஞ்சிருந்தா இப்படி ஒரு உயிர் உருவாகாமலே போயிருக்கும். இந்தளவுக்கு கஷ்டப்பட்டிருக்கவும் வேண்டாம்.” என்ற குரலில் இருந்த விலகலும், பாவா என்ற அவளின் அழைப்பு இல்லாததிலுமே புரிந்துகொண்டான், மனைவி இயல்புக்கு வந்துவிட்டாள் என்று.

இப்போது அவளை விட்டு தள்ளி அமர்ந்தவன் தன்னைப் பார்க்கும்படி மனைவியின் முகத்தை நேராகப் பிடித்தவன், “இப்போ சொல்லு, என்ன நடந்தது? எப்போ உனக்கு தெரிஞ்சது?” என்ற குரலில் இருந்த இறுக்கம் நாகம்மையை நடுங்க வைத்தது.

பயத்துடன் விழி மலர்த்தி பார்த்தவளின் பார்வையில் என்ன கண்டானோ மீண்டும் தன்னோடு இறுக்கியவன், “எனக்குத் தெரியணும் ஸ்ரீ, உனக்கு எப்போ தெரியும்?” என்றான் இப்போது கெஞ்சலாக.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“ரெண்டு நாளுக்கு முன்னாடி…” இறுக்காமான வார்த்தைகளுக்கு வாய் திறக்காதவள், கணவனின் கெஞ்சலான வார்த்தைகளுக்கு வாய் திறந்திருந்தாள்.

“வீட்டுல யாருக்கும் சொன்னியா?” என்றவனிடம், ‘இல்லை’ என்ற தலையாட்டல் பதிலாக வர, “ஏன்?” என்ற கேள்வி நொடியில் வந்து விழுந்தது கணவனிடமிருந்து.

“பயமா இருந்துச்சு, உங்ககிட்டதான் முதல்ல சொல்லணும், அப்புறம் நீங்க என்ன முடிவு எடுக்கிறீங்கனு பார்த்துட்டு, ஒருவேளை டைவோர்ஸ் கேட்டா கொடுத்துட்டு அம்மா வீட்டுக்கு போயிடலாம்னு நினைச்சேன். ஆனா அப்பவும் குழந்தையைக் கலைக்கணும்னு எல்லாம் நினைக்கக்கூட இல்லை. ஆனா அதுக்குகூட என்னைப் பிடிக்கல போல, அப்படியே போயிடுச்சு…” என்று கதறியவளின் கதறலைக் கேட்டு ஓடிவந்த சங்கவியும் சபரியும் இருவரின் நிலையைப் பார்த்து மீண்டும் வெளியில் சென்றுவிட்டனர்.

“சரிடா… சரிடா… ஒன்னுமில்ல, இங்க பாரு ஒன்னுமில்ல. அதுதான் நான் வந்துட்டேன்னே, பார்த்துக்கலாம் விடு. இப்போ அழறதை நிறுத்து.” என்று மீண்டும் தன்னில் இருந்து பிரித்து, அவள் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு சாய்த்துக்கொண்டான். அப்போதும் அவள் முகம் தெளியவில்லை.

மனைவியின் குழப்பமான முகம் பார்த்தவன், ‘என்ன’ என புருவம் உயத்த, “உங்களுக்கு… உங்களுக்கு கோபம் இல்லையா என் மேல? நான் வேணும்னு…” என சொல்ல வரும் போதே வாயில் விரல் வைத்து தடுத்தவன்,

“எதுவும் பேசாத, உன்மேல எனக்கு கோபம் அது கொஞ்சமும் இல்ல. தப்பு என் பேர்லனும்போது உன்மேல நான் எப்படி கோபப்பட முடியும்? எனக்கு எந்த கோபமும் இல்லை, அதை மனசுல பதிய வச்சிக்கோ. இப்போ நிம்மதியா தூங்கு, மீதியை காலைல பேசிப்போம்.” என்றவன் அவளைத் தட்டிக் கொடுத்தபடியே உறங்க வைக்க, அவளுக்கும் அந்நேரம் அதுதான் தேவை என்பது போல விழிகளை மூடிக் கொண்டாள்.

மனைவியை அணைத்தபடியே அமர்ந்திருந்தவன் மனதில் இப்போது பேரமைதி. அந்த அமைதி அவனது விழிகளையும் மெல்ல மெல்ல தூக்கத்திற்கு இழுத்துச் சென்றது.

அறையில் எந்த சத்தமும் வராமல் போக எட்டிப்பார்த்த சங்கவி மீண்டும் வெளியேறி, சபரியின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். “என்ன குட்டிம்மா தூக்கம் வருதா? இல்ல காஃபி வேணுமா?” என தங்கையிடம் சபரி கேட்க,

“ம்ச்… இல்ல சபரிண்ணா, நான் ஷ்யாமண்ணாவ திட்டிட்டேன் ரொம்ப. அவனுக்கும் வருத்தம் இருக்கும்தான… அது தெரியாம, அவனும் எப்படி அழுதான் பார்த்தீங்கள்ள? என்கூட பேசமாட்டானா?” என பாவமாகக் கேட்க,

“ஹா… ஹா… மங்கிப் பிசாசே, நீ என்ன செஞ்சி வச்ச? எப்பவும் இப்படி மூக்கை நுழைக்காதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.” என தங்கையின் தலையில் தட்ட, “ம்ச்… தட்டாதடா பக்கி… அவன் என்ன பண்ணான் தெரியுமா? அண்ணிக்கு அபார்ட் ஆகிடுச்சினு சொன்னா, ஏன் யாரும் சொல்லல, இந்த சபரிகூட எங்கிட்ட சொல்லலன்னு சொல்றான். கோபம் வருமா வராதா சொல்லு? அதான் திட்டிவிட்டுட்டேன்.” என இப்போதும் கடுப்பாகவே பேச,

“ச்ச… எதுக்குடி இப்படி ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி கத்துற? இப்போதான் என் பொண்டாட்டி தூங்க ஆரம்பிச்சா, நீ கத்தி எழுப்பி விட்டுடாத. சொல்றதை தெளிவா சொல்லணும் பக்கி. நீ அண்ணினு சொன்னா நான் அனு அண்ணியத்தான் அண்ணினு நினைப்பேன், ஏன் பாலாண்ணினு சொன்னா உனக்கு என்ன முத்து உதிர்ந்திடுமா?” என தங்கையின் தலையில் தட்டிவிட்டு, அவளுக்கு மறுபுறம் வந்து அமர்ந்தான் ஷ்யாம்.

“ப்ச்… தலையிலயே தட்டாதீங்கடா எருமைகளா…” என தலையில் தடவியபடி அவனை முறைக்க,

“பாலா தூங்கியாச்சா ஷ்யாமா? இப்போ ஓகேவா? நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்த, ஃப்ளைட்லயா?” என தம்பியிடம் சபரி விசாரிக்க,

“தூங்கிட்டா சபரி. ஆனா ஏன் இப்படி இருக்கா? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிஞ்சிட்டா, யாரும் பார்த்துக்குறது இல்லையா?” என இப்போது ஷ்யாமின் குரலில் சுதி ஏறியிருந்தது.

“உன் பொண்டாட்டி நீதான் பார்த்துக்கணும், நாங்க பார்த்துக்கணும்னு நீ எப்படி எதிர்பார்க்கிற?” நறுக்கென்று வந்து விழுந்தது பதில் சபரியிடமிருந்து.

“ஏன், இவதான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஒத்தக்கால்ல நின்ன உங்கப்பா பார்த்துக்க மாட்டாரா? அப்புறம்…” என்றவன் அடுத்து வந்த வார்த்தைகளை முழுங்கித் தன்னைக் கட்டுப்படுத்தி, பக்கத்தில் இருந்த சுவற்றை ஓங்கிக் குத்த, அதில் சங்கவி எழுந்து அவன் கையைப் பிடிக்க, “விடுடீ.. விடுனு சொல்றேன்ல, எப்படி இருக்கா பார்த்தியா? வாய் கிழிய எல்லாம் பேசுறயில்ல, இவளைப்பத்தி பேச மாட்டியா? இப்போ பாரு…” என கத்த,

“டேய் ஷ்யாமா சொல்றதை கேளு, கொஞ்சம் அமைதியா இரு. இது ஹாஸ்பிடல். எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிப்போம். இனி இப்படி ஆகாம பார்த்துக்கலாம், நீ உட்கார். உட்காருன்னு சொல்றேன்ல, உட்கார்.” என அதட்டி உட்கார வைத்தவன் தங்கையிடம், “சவி இவனைப் பார்த்துக்கோ, நான் போய் காபி வாங்கிட்டு வரேன்.” என்று கேன்டீன் நோக்கிச் செல்ல, ஷ்யாமின் கையைப் பிடித்த சங்கவியோ “ரிலாக்ஸ் அண்ணா, ஆல்ரெடி அண்ணி ரொம்ப வீக்கா இருக்காங்க. நீயும் பேசி அவங்களைக் கஷ்டப்படுத்தாத, வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிப்போம்.” எனவும், “ம்ம்…” என்று உறுமியவன் வேறொன்றும் பேசவில்லை.

சீற்றத்துடன் அமர்ந்திருந்தவனிடம் பேசக்கூட பயமாக இருந்தது. ‘இந்த எருமைக்கிட்ட தனியா மாட்டிவிட்டுட்டு போய்ட்டானே காட்டெருமை’ என மனதுக்குள் பொறுமியவள், “ஷ்யாமண்ணா…” என ஆரம்பிக்கும் முன்னே, “அம்மா எங்க, ஏன் அவங்க இங்க இல்லை? நீ எதுக்கு இங்க இருக்க?” என வரிசையாக கேள்விகளை அடுக்க, ‘ஆரம்பிச்சிட்டான்டா ட்ரில் மாஸ்டர் வேலையை’ என நினைத்தவள், “அம்மா இருக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. அண்ணியும் அவங்கம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. அத்தைக்கும் உடம்பு முடில அதுதான் நான்…” என முடிக்கும் முன்பே, “ஓ…” என்றதோடு நிறுத்திவிட்டான்.

சபரி காஃபியோடு வர அமைதியாக காஃபியை குடித்தவன், “சபரி என்ன நடக்குது வீட்டுல? ஏன் அம்மா இப்படி பண்றாங்க?” என்றதும்,

“அதை ஏன் கேட்குற, அம்மா பண்றது எதுவும் எனக்கு பிடிக்கல. அண்ணிதான் எல்லா வேலையும் பண்றாங்க, வேலைக்காரங்களக் கூட நிறுத்திட்டாங்க.” என ஆரம்பித்து வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, ஷ்யாமின் உடல் கோபத்தில் இறுகிப் போனது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“எங்கிட்ட ஏன் முன்னமே சொல்லல?” என்றான் அதே இறுகியக் குரலில். “அண்ணிதான் நீங்க தூரமா இருக்கீங்க, தெரிஞ்சா வருத்தப்படுவீங்கனு சொல்ல வேண்டாம் சொன்னாங்க.” என தயங்கியபடியே சங்கவி சொல்ல,

“தூரமாதானே இருந்தேன், செத்துப் போகலையே?” எனவும், “டேய், அண்ணா…” என மற்ற இருவரும் பதற, “ம்ச்… அவ சொன்னா உனக்கு அறிவில்ல? எதை மறைக்கணும், மறைக்கக்கூடாதுனு தெரியாது இடியட்…” என்று ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தவனை சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது இருவருக்கும்.

இதற்கே இந்த குதி குதிப்பவன் தன் உயிர் கரைந்ததற்கு காரணம் தன் தாய்தான் என்று அறிந்தால் என்ன செய்வான்? இருவரும் ஆளுக்கு ஒருபுறமாக நின்று அவனை சமாதானம் செய்து கொண்டிருந்த வேளை, முருகேஷனும் மாரியம்மாவும் பதட்டமாக அவ்விடம் வந்து சேர்ந்தனர்.

பெரியவர்கள் யாரும் இல்லாமல் இருக்கும் போதே, அந்த வீட்டில் நாகம்மையின் நிலையை ஓரளவுக்கு கணித்துவிட்டான் முருகேசன். மாரியம்மாவைப் பார்த்ததும் அவர் கையைப் பிடித்த சங்கவி, நாகம்மையின் அறைக்கு அழைத்துச் செல்ல வெளியில் நின்றிருந்த முருகேஷனிடம் பேச ஆரம்பித்தான் சபரி.

வந்த இருவரையும் கண்டு கொள்ளவில்லை ஷ்யாம். அவன் நாகம்மையின் அறை வாயிலையேப் பார்த்துக் கொண்டிருக்க, சபரியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் முருகேஷனின் பார்வை மொத்தமும் ஷ்யாமிடம்தான் முறைத்துக் கொண்டிருந்தது.

You may also like

1 comment

M. Sarathi Rio September 23, 2026 - 3:51 pm

நல்லா நாக்கைப் புடுங்கிட்டு சாகுற மாதிரி நாலு வார்த்தை கேட்டுடட்டே போ முருகேசா.
தப்பே கிடையாது.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured