Home Antiheroபரிதி – 06

பரிதி – 06 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரில் மேஸ்ஹில்ஸ் எனுமிடத்தில் சிட்னி முருகன் என்ற பெயரில் நம் கந்தன் கருணைக்கடலாக காட்சியளிக்கிறான்.

‘குன்று தோறும் குமரன் இருப்பான்’ என்ற சொல் இங்கும் பொய்க்கவில்லை. மேஸ்ஹில்ஸ் எனும் மலைப்பகுதியில் தான் கடம்பனின் வாசஸ்தலம். வைகாசி குன்று என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது மேஸ்ஹில்ஸ் மலைப்பகுதி.

முருகனின் முன் இருவரும் மனமுருக வேண்டி நின்றனர். வீட்டில் இருந்த மனநிலை காரில் வரும்போதே மாறியிருக்க, இப்போது முருகனை மட்டும் முதலாக எண்ணி வேண்டிக் கொண்டிருந்தனர் இருவரும். 

பூஜை முடிந்து வெளியில் வந்தவர்கள் ஒரு இடம் பார்த்து அமர, அதற்காகவே காத்திருந்ததை போல “மாமா கோபம் போச்சா.?” என்றாள் அவசரமாக.

“ம்ம் போகலன்னா என்ன செய்ய போற..” என்றான் நித்திலன் சிரித்துக்கொண்டே.

“சாரி மாமா. உங்களை ஹர்ட் பண்ண எல்லாம் இல்ல. அப்பா வாய்ஸ் கேட்கவும் தானாவே அழுகை வந்துடுச்சு, நான் என்ன செய்யட்டும். அது உங்களை கஷ்டப்படுத்தும்னு நான் நினைக்கல மாமா..” என்றாள் உண்மையாக வருந்தும் குரலில்.

“நானும் சாரி அம்மு.. உனக்கும் மாமாவுக்கும் இருக்குற பாண்டிங்க் தெரிஞ்சும் உன்மேல கோபப்பட்டு கத்தியிருக்கக்கூடாது. நீ மாமாக்கிட்ட பேச ஆரம்பிச்சதும் எனக்கு ஜெலஸ் ஆகுதுடி. அவரை விட நான் உன்னை நல்லா பார்த்துக்கலையான்னு கோபம் வருது. நான் என்ன செய்யட்டும்.?” என்றான் அவளை போலவே.

“மாமா இதெல்லாம் வேண்டாம். அப்பா மாதிரி எல்லாம் நீங்க வேண்டாம். நீங்க நீங்களாவே வேணும் எனக்கு. அப்பா மாதிரி அவர் மட்டும்தான். உங்களை மாதிரி நீங்க மட்டும்தான். தேவையில்லாம டென்சன் ஆகாதீங்க..” என அவன் சுருங்கிய முகத்தைப் பார்த்து சிரித்தபடியே தசிரா கூற,

அவள் கூறுவதில் உண்மை இருந்தாலும் ஏனோ ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறியது. அதோடு அவள் சொல்வது போல விக்ரம் போல நான் மாறினால் என்னோட குணநலனே மாறி போய்விடும். அது வேண்டாம். நான் நானாகவே இருந்து கொள்கிறேன் என முடிவெடுத்து சட்டென்று எழுந்து கொண்டான்.

அவன் எழுந்து சிரித்தபடியே அவளுக்கு கை கொடுக்க “மாமா கோபம் போச்சா..” என்றாள் மீண்டும். முகம் மலர்ந்து, விழிகள் விரிந்து அவனையே ஆர்வமாக பார்த்தபடி கையை நீட்டினாள் அவனிடம்.

அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பற்றி மேலேத் தூக்கியவன் சட்டென்று தனக்கு முன்னே அனைப்பது போல் கொண்டு வந்து நிறுத்தி “ரொம்ப ரொம்ப அழகா இருக்கடி அம்மு.. ஐ கான்ட் கன்ட்ரோல், இப்ப என்ன பண்ணட்டும்..” என தன்னுணர்வுகளை அவளுக்குள் கடத்தும் பொருட்டு, அவள் கழுத்து வளைவில் முகத்தை வைத்துக்கொண்டு ஹஸ்கி வாய்சில் கேட்க,

அவன் அனைத்திருந்தால் கூட இவ்வளவு அவஸ்தை ஆகியிருக்காது பெண்ணவளுக்கு. நித்திலனின் நெருக்கமும், அவனின் சூடான மூச்சுக்காற்றும் மங்கையை நிலை தடுமாற வைக்க, “மாமா இது கோவில்.” என அவளும் முணுமுணுக்க,

“இப்போ எனக்கு கோபம் போயிடுச்சா இன்னும் இருக்கா நீயே சொல்லு..” என்றான் அவள் மூக்கை உரசி.

“உங்களுக்கு கோபம் போகமலே இருந்துருக்கலாம் மாமா..” என்றாள் சினுங்கியபடி.

அதில் பக்கென்று சிரித்தவன் “பார்டிக்கு போகனுமா என்ன.?” என்றான் மோகன குரலில்.

“ம்ம் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க..” என்றாள் சிறுபிள்ளை போல்.

அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவன், பின் திரும்பி தலையை கோதி பெரிய பெரிய மூச்சுக்களாக வெளியிட்டு தன் உணர்வுகளை அடக்க போராடி பின் ஒருவழியாக தன்னை நிதானப்படுத்தி “போலாம்..” என அவளுக்கு முன்னே வேகமாக நடந்தான்.

நித்திலனின் செயல்களை குழப்பமாக பார்த்தவள், பார்ட்டி என்றதும் மீண்டும் கோபம் வந்துவிட்டதோ என்று நினைத்தாள், அவன் வேகமாக நடக்கவும் “மாமா என்ன மாமா..” என்றவாரே அவளும் அவன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியாமல், அவனுக்கு பின்னே கிட்டத்தட்ட ஓடினாள் தசிரா.. 

காரில் ஏறியவன் கண்ணை இறுக மூடி, ஸ்டியரிங்கை அழுந்த பிடித்தபடி அமர்ந்து தன்னவளால் எழுந்த உணர்வுகளை அடக்கத் தெரியாமல் தவித்து கொண்டிருக்க, அவனுக்கு பின்னே வந்தவளோ மீண்டும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது போல என்று பாவமாக செய்வதறியாது கைகளை பிசைந்தபடி அவனுக்கு அருகில் அமர்ந்தாள். 

நொடிகள் நிமிடங்களாக கடந்தும் அவன் விழிக்கவில்லை என்றதும், ‘மாமா’ என அவன் தோள் தொட, அது மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.

எப்போது அவனது இறுகிய அனைப்பிற்குள் சென்றாள், எப்போது இதழ்கள் இரண்டும் இணைந்தது என்றே தெரியவில்லை தசிராவிற்கு.

தன்னுடைய திடீர் அனைப்பில் பெண்ணவளின் உடல் நடுங்குவதை உணர்ந்தும் அவளிடமிருந்து அவனால் பிரிய முடியவில்லை. 

இதழ்களை மொத்தமாக தனக்குள் எடுத்துக் கொண்டவன், அவளது கைகளையும் எடுத்து தன்னைச்சுற்றி போட்டுக் கொண்டான்.

சில நொடிகளில் நடந்த இந்த நிகழ்வில், முதலில் பயந்து, பின் பதறி அவனிடமிருந்து விலக போராடி என அவள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய, அவன் கைகள் தன்னவளின் வெற்றிடையை வருட ஆரம்பிக்க, அதில் தசிரா நெளிய, அதுவே நித்திலனுக்கு இசைவாகி போனது.

மேலும் தன்னோடு இறுக்கமாக இறுக்கிக்கொண்ட பிறகே இதழ்களை விடுவித்தான். அவள் மூச்சுக்கு ஏங்கியபடியே நித்திலனின் முடியைப் பிடித்து ஆட்ட, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீண்டும் அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக்கொண்டு “ஏண்டீ ஒரு மசாஜ் கூட ஒழுங்கா பண்ண தெரியாதா.?” என அவளை சீண்ட,

அதில் கடுப்பானவள் அவன் முடியைப் பிடித்து தூக்கி, கன்னத்தில் பல் படிய ஆழமாக கடித்து வைத்துவிட்டாள். அதை எதிர்பார்க்காதவன் “ராட்சசியா டீ நீ..” என கடித்த இடத்தை தடவியபடியே முறைக்க, 

“ஆமா நீங்க ராட்சசனா மாறினதுனால தான் நான் ராட்சடியா மாறிட்டேன்.. நானாவது உங்க கன்னத்தை தான் கடிச்சேன். நீங்க?” என பல்லைக் கடித்து அவனை முறைத்தவள், தன் இதழை பிதுக்கி “இங்க பாருங்க” எனக் காட்ட,

பெண்ணவளின் மென்னிதழ்களில், அவன் பல்பட்டு ஆங்காங்கே ரத்தம் கசிந்திருந்தது. அதை பார்த்து அவனுக்கே ஒருமாதிரி ஆகிவிட, 

“ஓ காட். இப்படியா காஞ்சமாடு பாஞ்ச மாதிரி பாஞ்சிருக்கேன். அய்யோ இவ என்ன நினைச்சாளோ தெரிலையே. டேய் நித்தி இப்படியா கன்ட்ரோல் இல்லாம இருப்ப.. என்ன சொல்லி சமாளிக்கிறது. அய்யோ” என வாய்விட்டே புலம்பினான்.

அதுவரை அவன் மீது மயக்கமும் கொஞ்சமே கொஞ்சம் கோபமுமாக இருந்தவள், நித்திலனின் புலம்பலை கேட்டு வாய்விட்டு சிரித்தாள்.

“மாமா திஸ் இஸ் நாட் ஃபேர். வீட்டுல எல்லாரும் உங்களை ரொம்ப்ப்ப நல்லவன்னு சொல்லிட்டு இருக்காங்க. நீங்க இவ்ளோ கலீஜு பையனா இருக்கீங்க.. ரேனும்மாவுக்கு மட்டும் இதெல்லாம் தெரியனும் அப்போ இருக்கு. ” என மேலும் சிரிக்க.

“ஹேய் வேண்டாம். என்னை வெறியேத்தாம இருக்குறதுதான் உனக்கு நல்லது. அப்புறம் சேதாரம் ஆச்சுன்னா நீதான் வருத்தப்படுவ..” என தசிராவின் இதழ்களைப் பார்த்தபடியே பேச, நித்திலனின் பார்வை போன இடத்தை உணர்ந்தவள் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவனை பாவமாக பார்க்க, “அந்த பயம் இருக்கனும்” என செல்லமாக மிரட்டி, மீண்டும் ஒருமுறை இறுக்கமாக அனைத்து விடுவித்தான்.

‘என்னமோ ஆகிடுச்சு இவருக்கு’ என வாய்க்குள்ளே முனங்கியவள், கசங்கிய தன் புடவையை சரிசெய்தபடி, முன்னால் இருந்த கண்ணாடியில் தன் இதழைப் பிதுக்கி பார்க்க, இப்போது அவளுக்கு வெட்கம் வந்துவிட, சட்டென்று ஜன்னல் புறமாக முகத்தை திருப்பிக்கொண்டாள். 

அவள் கன்னங்கள் சூடாகி சிவப்பது அவளுக்கே தெரிந்தது. அது அவஸ்தையாகவும் இருந்தது, நித்திலனும் தன் அம்முவின் செய்கைகளைத்தான் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தான். பெண்னவளின் வெட்கம் அவன் உணர்வுகளை வெடிக்க வைக்க போதுமானதாக இருந்தது. ‘ஓ காட் ஓ காட்’ என்றபடியே அவன் தலையை கோத, அதை உணர்ந்து நெளிந்தபடியே “மாமா ப்ளீஸ்” என முனங்க, வெடித்து சிரித்தான் நித்திலன்.

“அம்மு இப்படியே உன்னை எங்கையாவது தூக்கிட்டு போய்டனும் போல இருக்குடி. நீ இல்லாம எப்படி இருக்க போறேனோ தெரியல. சரியான மயக்கிடி நீ. அப்படி என்னதான் செஞ்சு என்னை மயக்கின..” என போதையேறிய குரலில் புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

“மாமா என்ன செஞ்சிட்டு இருக்கீங்க நீங்க?” என நித்திலனின் இந்த புது அவதாரத்தில் நிஜமாகவே அரண்டு போய் கேட்க, அதில் நிகழ்வுக்கு வந்தவன், தசிராவின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் “சரி பொழச்சுப்போ” என்றான் சிரித்துக்கொண்டே. 

அதன்பிறகுதான் அவளுக்கே மூச்சே சீரானது. அடுத்து இருவரும் பார்ட்டி ஹாலுக்கு செல்ல, அங்கு ஏற்கனவே அவளின் நண்பர்களும் வந்திருந்தனர்.

நித்திலனை அங்கு அனைவருக்கும் முறையாக அறிமுகப்படுத்தி வைத்தவள் அவனுக்கும் தன் நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

நித்திலன் பயந்தது போல இல்லாமல், வந்த எட்டு பேரில் ஐந்து பேர் பெண்கள். மீதி மூன்றில் ஒருவன் மட்டுமே அந்த நாட்டைச் சேர்ந்தவன். அவனும் பார்க்க நல்ல மாதிரியாகத்தான் தெரிந்தான்.  

அதனால் தசிரா அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சைவிட்டு, தன் கவலைகளை எல்லாம் மறந்து அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டான்.

அனைத்தும் சரியாகத்தான் போனது டிஜே ஆரம்பிக்கும்வரை. டிஜே இசையை அலறவிட, அந்த பார்டி ஹாலில் விளக்குகளும் அனைக்கப்பட்டுவிட, நித்திலனுக்கு பக்கென்றானது.

எட்டு பேர் மட்டுமே இருந்த இடத்தில் எப்படி இத்தனை பேர் என நினைக்கும் அளவிற்கு ஒரு கும்பல் திடீரென்று உள்ளே நுழைந்து ஆட ஆரம்பித்துவிட்டது.

நித்திலனுக்கு இது புதிதெல்லாம் இல்லை. அவனுமே தொழில் ரீதியாகவும், நண்பர்களோடும் என சென்றிருக்கிறான்தான். ஆனால் இப்போது அவன் பயப்படுவது அவனது அம்முவிற்காக. அவள் யாருடனும் சென்று ஆடிவிடுவாளோ என பதட்டத்துடன் பார்க்க, அவளோ அவனைவிட்டு அசையாது அங்கு ஆடுபவர்களை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஷப்பா ஒரு நாளைக்கு எத்தனை தடவை என்னை டென்சன் பண்றா..’ என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டே ‘அம்மு கிளம்பலாம்’ என சொல்வதற்காக “அம்மு” என அழைக்க, 

“மாமா நாமளும் ஆடலாம் ப்ளீஸ். எவ்ளோ நாளாச்சு நாம டான்ஸ் பண்ணி, ப்ளீஸ்..” என ஆர்வமும் ஆசையும் போட்டிப் போட கேட்க,

தசிரா கேட்ட விதத்தில் நித்திலனால் மறுக்க முடியவில்லை. சரியென தலை தானாக ஆடியது. பெண்ணவளின் இடையைப்பற்றி தன்னோடு இறுக்கிக்கொண்டவன் மெதுவாக ஆட்டத்தை ஆரம்பிக்க, அடுத்து இசைக்கேற்ப இருவரின் ஆட்டமும் களைகட்டியது.

ஒருகட்டத்தில் தசிராவின் புடவை தடுக்க, அவளால் மேற்கொண்டு ஆடமுடியாமல் போனது. அவள் தடுமாறுவதை உணர்ந்து என்ன என புருவத்தை உயர்த்த, அவளோ தன் உடையை கண்ணால் காட்ட, அதுவோ அலங்கோலமாக கிடக்க, வேகமாக தன்னோடு இறுக்கியவன் சுற்றும் முற்றும் பார்க்க எல்லோர் பார்வையும் அவர்கள் மீதுதான்.

“ஷிட்” என காலை உதைத்தவன், “என்ன ட்ரெஸ் வியர் பண்ணிருக்கோம், அது கம்ஃபர்டபிளா இருக்குமா இருக்காதா எல்லாம் யோசிக்கமாட்டியா.? இப்படியே எவ்வளவு நேரம் ஆடினோமோ.? யாரெல்லாம் எப்படியெல்லாம் பார்த்தாங்களோ..?” என கடுகடுவென பொறிந்தவன், தன் அனைப்பிற்குள் வைத்தபடியே ஓரமாக கொண்டு வந்திருந்தான்.

நித்திலனின் பேச்சைக் கேட்ட தசிராவிற்கு கோபமும் எரிச்சலும் வர, “இங்க யாரும் அப்படியெல்லாம் பார்க்கமாட்டாங்க. மத்தவங்கள விட என்னோட ட்ரெஸ் ஒன்னும் மோசமா கலைஞ்சி போயிடல. அதோட இந்த புடவையைக் கட்ட சொன்னதே நீங்கதான்..” என வர்த்தைகளை கடித்து துப்பியவள், அவனை விட்டு விலக முயற்சிக்க, அதே நேரம் அவளது அந்த வெளிநாட்டு நண்பன் ஜோன்ஸ் வந்து “வாட் ஹேப்பன்ட் சிரா” என்று கேட்டுவிட, நித்திலனுக்கு கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

“நத்திங்க் ப்ரோ.. வீ ஆர் மூவ். ப்ளீஸ் டேக் கேர் ஆஃப் திஸ்..” என்றுவிட்டு, அவளை பதில்கூட பேசவிடாமல் வெளியில் அழைத்து வந்துவிட்டான்.

“விடுங்க.. என்ன பன்றீங்க..” என தசிரா திமிற,

“ஏன் ஏன் விடனும்.. இப்படியே அவங்க முன்னாடி போய் நிக்கனுமா உனக்கு.. அதுதான் உன்னோட ஆசையா?” என கத்த, நித்திலனின் இந்த பேச்சை எதிர்பார்க்காத தசிரா அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள். 

You may also like

1 comment

M. Sarathi Rio August 22, 2026 - 9:49 pm

அடேயப்பா.. ரொம்ப நல்லவன் மாதிரியே நடிக்கிறான் பாருங்களேன் இந்த சித்திலன்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured