Home Antiheroபரிதி – 07

பனித்துளி – 7

“இப்போ என்ன சொன்னீங்க..” என்ற தசிராவின் குரல் இறுகிப்போய் வந்தது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“ம்ச்.. கிளம்பு டி..” என்றான் இன்னுமே கோபம் குறையாத குரலில்.

“இப்போ என்ன சொன்னீங்க..” என்றாள் வெகு நிதானமாக. இப்போது தான் பெண்ணவளின் நிதானம் அவனையும் நிதானப்படுத்தியிருக்க, ‘ஓ மை காட்’ என தலையில் தட்டிக்கொண்டு, அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் “கிளம்பு டி” என்றான் பல்லைக்கடித்து.

“உங்க மனசுல என்னைப்பத்தின அபிப்ராயம் இதுதானா.?” என்றாள் இடத்தைவிட்டு நகராமல்.

அவளின் வீம்பு எரிச்சலை கொடுக்க, “அம்மு.. வீட்டுக்கு போய் பேசலாம். உன் ப்ரண்ட்ஸ் எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க..” என்றான் சுற்று முற்றும் பார்த்தபடி.

“ஓ…” என்றவள், தானும் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் கையை அவனிடமிருந்து சட்டென்று உருவிக்கொண்டு நண்பர்களை நோக்கி வேகமாக நடந்தாள்.

“ஹே.. ஹே.. அம்மு..” என நித்திலன் அவளைப் பிடிக்கும் முன்னே அவர்களிடம் சென்றிருந்தாள்.

நண்பர்களின் கூட்டத்தில் ஒரு பெண்ணின் கையில் இருந்த மது பாட்டிலை பிடுங்கியவள், மற்றவர்கள் சுதாரிக்கும் முன்னே தன் வாயில் மொத்தமாக சரித்திருந்தாள் தசிரா.

அதை நித்திலன் முதற்கொண்டு மற்ற யாருமே எதிர்பார்க்கவில்லை. அது அவர்களின் அதிர்ந்த தோற்றத்திலேயே புரிந்தது. அதோடு இதுதான் முதல்முறையும் கூட. 

“சிரா.. சிரா வாட்ஸ் ஹேப்பெனிங்க்.” என அவளிடமிருந்த பாட்டிலை பிடுங்கிகொண்ட ஜோன்ஸ் நித்திலனை முறைக்க, அதற்குள் அருகில் வந்திருந்த நித்திலனும் தசிராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்திருந்தான்.

அவளோ அவன் கையைத் தட்டி விட்டு முறைக்க, அதை கண்டுகொள்ளாமல் அவளை கைகளில் தூக்கியவன், “சாரி கைஸ்.. ப்ளீஸ் யூ கேரியான்..?” என்று முறைத்துக் கொண்டிருந்த ஜோன்ஸை பார்த்து சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்துவிட்டான்.

“வாட் ஹேப்பன்ட் ஜோ..” என மற்ற நண்பர்கள் ஜோன்ஸிடம் கேட்க, 

“நத்திங்க். சீ இஸ் நாட் சோபர், சோ நித்திலன் இஸ் டேக்கிங் ஹெர் அவே..” என்றான் கோபமாக.

“ஓக்கே, பட் வை ஆர் யு பாதர் அபவுட் தட்? சிரா பாய்ஃப்ரண்ட் நித்திலன். யூ ஆர் நாட்.?” என நண்பனுக்கு புரிய வைக்க முயல,

“எஸ் ஐ நோ தட். பட் ஹீ இஸ் நாட் த ரைட் பெர்சன் ஃபார் மை சிரா..” என்றான் கோபமும் எரிச்சலுமாக.

“ஜோன்ஸ்… வாட்ஸ் திஸ்… சிரா டோல்ட் யூ எவ்ரிதிங்க். யூ டோன்ட் இன்டர்ஃபியர் இன் தேர் பெர்சனல் ஸ்பேஸ். சிரா டஸ்னாட் லைக் தட் எய்தர்.. இட் மேபி நார்மல் ஃபார் தெம். சீயிங்க் இட் ஃபார் த ஃபர்ஸ்ட் டைம், வீ கேன் பீ ராங்க். யூ தாட் ராங்க் அண்ட் டிட் நாட் மேக் ஹெர் டென்சன்.” என்றதும்,

“ஐ கேன் அண்டர்ஸ்டேன்ட்..” என்ற ஜோன்ஸ் அங்கிருந்து நகர்ந்துவிட, மற்ற நண்பர்கள் அவனை யோசனையாக பார்த்தனர். 

‘இவன் இன்னும் தசிராவை நினைத்துக் கொண்டிருக்கிறானா.?’ என்ற கேள்விதான் அனைவர் மனதிலும்.

ஏன் ஜோன்ஸ் மனதிலும் அதே கேள்விதான்.

தசிரா இங்கு வந்த புதிதில் நண்பனாக அறிமுகமானவன் தான் ஜோன்ஸ். மிகவும் நல்லவன். அவன் மூலமாகத்தான் மற்றவர்கள் நண்பர்களானர்கள் தசிராவிற்கு.

ஆரம்பத்தில் பெரிதாக அவள் மீது எந்த எண்ணமும் இல்லை. ஆனால் காலப்போக்கில் தசிரா மீது ஒரு ஈர்ப்பு வந்திருந்தது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

அதை மறைக்க முயலாமல் அவளிடம் கூறிவிட, அவளோ அவளும் குழம்பாமல், அவனையும் குழப்பாமல் வெகு நிதானமாக ஜோன்ஸுக்கு புரிய வைத்து, அந்த நட்பை தொடர்ந்தாள்.

ஆனால் அந்த செயலே அவனுக்கு தசிரா மீது மேலும் ஈர்ப்பைக் கொடுத்திருந்தது. அதை வெளிப்படுத்த ஜோன்ஸ் தயாராக இல்லை. 

பிடிக்காத பெண்ணை கொலை செய்யவும், ஆசிட் ஊற்றவும் அது நம் நாடு இல்லையே. 

தன் விருப்பத்தை மறைத்து பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொண்டான். அடுத்து வந்த நாட்களில் அதை துளியும் வெளிக்காட்டவுமில்லை. நல்ல நண்பனாகவே இருந்தான். ஆனால் இன்று நடந்ததை பார்க்கும் போது அவனுக்கு தன்மீதே சந்தேகம் வந்துவிட்டது.

சிராவை நான் விரும்புகிறேனா.? ஈர்ப்பிற்கும் மேலாக வேறெதுவும் இல்லை என்று ஒதுங்கியது தவறா.? அவளிடம் மீண்டும் பேசியிருக்க வேண்டுமா.? என் எண்ணத்தை சிராவிடம் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்க வேண்டுமா.? ஒருவேளை அவள் மனம் மாறியிருப்பாளா? கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டேனா? இல்லை.. சிரா மனம் மாறுபவள் இல்லை, ஆனால் நான்? என பல கேள்விகள், பல குழப்பங்கள்.

அதைப்பற்றி யோசிக்க அவனுக்கு தனிமை மிகவும் அவசியமாக இருந்தது. இதே மனநிலையில் அவளை அனுகவும் பிடிக்கவில்லை.

அதனால் நண்பர்களிடம் விடைபெற்று கிளம்பியவன், தன் தந்தைக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, அருகிலிருக்கும் ஷார்க் எனும் ஒரு  தீவை நோக்கி பயணித்தான்.

தனிமை அவனை தெளிவாக்கும் என்று நினைத்து சென்றான். ஆனால்?!

இங்கு காரில் ஏறியதும் “பைத்தியமாடி நீ என்ன காரியம் செஞ்சு வெச்சிருக்க” என பொங்கிய கோபத்தில் காட்டு கத்தல் கத்தினான் நித்திலன்.

 “ஆமா நான் பைத்தியம்தான், பைத்தியம்தான் இப்படியெல்லாம் பண்ணும்” என அவன் என்னவென்று யோசிக்கும் முன்னே தன் வலது கையை ஓங்கி கார்க்கண்ணாடியில்  அடித்திருந்தாள்.

“ஏய் என்னடி பண்ற, ஏன் இப்படி நான்சென்ஸ் பிஹேவ் பண்ற அம்மு” என்றவன் அவள் கையைப் பிடித்து, அடி எதுவும் பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து, அது இல்லை என்றதும்தான் அவனுக்கு மூச்சே சீரானது.

“அம்மு நடந்தது சாதாரண விஷயம் இதுக்கு நீ இவ்ளோ ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.” என்றவன் காரில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அவள் கையை நன்றாக துடைத்துவிட்டான்.

 அவன் பிடித்ததில், கையை அழுத்தியதில் நன்றாக வலி எடுத்தது பெண்ணுக்கு.

 அதை கவனித்தவன் இன்னும் “சின்ன பிள்ளையா நீ எல்லாத்துக்கும் ஏன் சைல்டிஷா ரியாக்ட் பண்ணிட்டு இருக்க” என்று மேலும் மேலும் அவளைத் திட்டிக் கொண்டேதான் இருந்தான்.

 தான் செய்வது தவறு என்று அவன் உணரவே இல்லை.  

 அதில் ஆயாசமானவள் “உங்கள நான் சரியா புரிஞ்சிக்கல போல, என்னை தெரிஞ்சும் ஏன் அப்படி பேசுனீங்க. அப்போ உங்க மனசுல என்னை தப்பா யோசிச்சு வச்சிருக்கீங்களா, அதுக்கு பேர் என்ன?   என் மேல இருக்குற லவ்ன்னு மட்டும் சொல்லிடாதீங்க. இதுக்கு பேர் லவ் எல்லாம் இல்ல.” என கோபமாக கத்த,

“ஷட்டப் அம்மு.. இதுக்கு மேல ஒருவார்த்தை பேசக்கூடாது. இது லவ் இல்லன்னா வேற  எது லவ். சொல்லு வேற எதுடி லவ். எனக்கு உன்மேல உயிர்டி, அது உனக்கு புரியவே இல்ல.. ஷிட்” என கையை ஓங்கி ஸ்டியரிங்கில் குத்தினான். அவனுக்கு ஆறவே இல்லை. என் காதல் பொய்யா.? அங்கேயே நின்றான்.

“சரி இது லவ்ன்னு வச்சுப்போம், நீங்களும் தான் ரெண்டு வருஷம் கனடாவில் போய் படிச்சீங்க அப்போ நான் உங்களை தப்பா நினைச்சிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க, ஆனா நான் அப்படி உங்களை நினைச்சதே இல்ல, உங்களுக்கு ஏன் அப்படி தோனுச்சு. அந்த நம்பிக்கை உங்களுக்கு என் மேல ஏன் வரல, சொல்லுங்க ஏன் வரல.” என ஆதங்கமாக கேட்டவள் அவன் புறம் திரும்பவே இல்லை.

 “அம்மு நீ தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்க, நான் உன்னை தப்பா நினைச்சு எல்லாம் சொல்லல, நான் பேசினதை நீ தப்பா புரிஞ்சுகிட்ட, முதல்ல அமைதியா நான் சொன்னத யோசி, அதுக்கு பிறகு பேசு. நீயா ஒன்னு நினைச்சு பேசுறதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியாது.” என நித்திலனும் இருந்த கோபத்தில் எரிச்சலாக கத்த,  அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள்தான் அதன் பிறகு அவனை பார்க்கவும் இல்லை. அவனிடம் பேசவும் இல்லை. வீடு வந்து சேரும் வரைக்கும் இதே நிலைதான் இருவரிடமும்.

 அன்றிரவு மிகவும் அமைதியாகக் கழிந்தது இருவருக்கும். காலையில் ஆரம்பித்த சந்தோசமான மனநிலை இப்போது இருவரிடமும் இல்லை.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

புதிதாக எடுத்துக்கொண்ட மது வேறு அவளை பாடாய்படுத்தியது. தலை வெடித்துவிடும் போல வலியெடுத்தது.

ஆனாலும் அவனிடம் போய் நிற்கவே இல்லை. நித்திலன்தான் அவளின் அறைக் கதவோரம் சோபவை போட்டு உறங்காமல் தவித்துக் கொண்டிருந்தான்.

இடையில் இரண்டு முறை வாந்தியெடுக்கும் சத்தம் கேட்டு, நித்திலன் பயத்தில் கெஞ்ச, அப்போதும் கூட அவள் கதவைத் திறக்கவே இல்லை.

இப்படியாக இரவு முடிந்து அதிகாலையில் அவள் சரியாகிவிட்டாள் என்று உணர்ந்த பிறகே தன்னறைக்கு வந்தான். 

அவளாக வந்து பேசுவாள் என்று அவன் காத்திருக்க, அவன் வந்து பேசினாலும் பேசக்கூடாது என்ற முடிவில் இருந்தாள் தசிரா. 

அன்று மாலை அவன் கிளம்ப வேண்டும். ஆனால் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், கல்லூரிக்கு கிளம்பி இருந்தாள் தசிரா.

 நித்திலனுக்கோ  தனியாக சிந்திக்கும் போதுதான் தன் தவறு புரிந்தது.

 தேவையில்லாமல் அவளை கோபப்படுத்தி விட்டோம் என்று நினைத்தான்.

 தன் மீது உள்ள கோபத்தில் தான் உடம்பு சரியில்லாத இந்த நேரத்திலும், கல்லூரிக்கு சென்றிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

எப்படி அவளை சமாதானம் செய்வது என்று அவனுக்கு புரியவே இல்லை.

தசிராவின் இயல்பான குணமே, தன் கோபத்தை குறைத்து வீம்பை விடுத்து எளிதில் சமாதானம்  ஆக மாட்டாள் என்பதுதான். அது நித்திலனுக்கும் தெரியும். கிட்டத்தட்ட விக்ரமின் குணம் அவளுக்கு அப்படியே இருக்கும்.

இப்போதும் அவள் மீது கோபம்தான், தான் இந்தியா செல்ல இருப்பது தெரிந்தும், கல்லூரிக்கு சென்று விட்டாள் என்று கோபம்தான். ஆனால் அதை காட்டி மேலும் பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை நித்திலன்.

வழக்கம்போல தானே கோபத்தைவிட்டு  அவளிடம் பேசுவதாக முடிவெடுத்தான்.

 அதன்படி இந்தியா செல்லும் தன் பயணத்தை இரண்டு நாட்கள் தள்ளி வைத்தான்.

 விக்ரமிற்கு அழைத்து “மாமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, ரெண்டு நாள் ஆகும் போல நான் டூ டேஸ் கழிச்சு வரேன், உங்களுக்கு அங்க மேனேஜ் பண்ணிக்க முடியுமா, இல்ல நான் வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணட்டுமா” என்றான்.

“நோ நோ கண்ணா இங்க ஒரு பிரச்சனை இல்ல. ஆல் செட் பர்ஃபெக்டா எல்லாம் நடந்துட்டு இருக்கு நீ டென்ஷன் ஆகாமல் உன் வேலையை முடிச்சுட்டு வந்து சேரு” என்ற மாமனிடம் மேலும் சில வேலையை பற்றி பேசிவிட்டு வைத்தான்.

 இப்போது அவனுக்கு பெரிய வேலை காத்துக் கொண்டு இருக்கிறது. தன் மாமன் மகளை எப்படி சமாதானம் செய்வது என்று மூளையை குடைந்து கொண்டிருந்தான்.

 கல்லூரி விடும் நேரம் பார்த்து காரை எடுத்துக்கொண்டு தன் அம்முவை அழைத்து வர சென்றான்.

நித்திலனைப் பார்த்ததும்தான் அவளுக்கு இதயமே சரியாக வேலை செய்தது.

‘ஷப்பா.. மாமா எங்கிட்ட சொல்லாம போகல’ என மனதுக்குள் குதுகலித்துக்கொண்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

அதுவரை கோபத்தில் தன்னிடம் சொல்லாமல் சென்றுவிட்டானோ என்று பயந்து கொண்டிருந்தவள், அவன் செல்லவில்லை என்றதும் தான் சீராக துடித்த இதயத்தை யாரும் அறியாமல் தடவி ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்.

நித்திலன் கிளம்பாமல் இருந்தது சந்தோசமாக இருந்தாலும் அவன் பேசிய பேச்சை மறக்கவும் முடியவில்லை பெண்ணால்.

 அதோடு தன் பயணத்தையே ஒதுக்கி அவனாக இறங்கி வந்த பிறகு, அவளுக்கும் கோபத்தை இழுத்து பிடிக்க மனமில்லை.

 ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாகவே நின்றிருந்தாள் அவனைப் பார்த்து.

தசிராவின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் அவள் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்த நித்திலன், ‘முருகா எப்படியாவது இவளை மலை இறக்கி விட்டுடு, பழனிக்கு நடந்தே வந்து எங்க அப்பாவுக்கு மொட்டை போட்டுடுறேன்’ என அவசரமாக ஒரு வேண்டுதலை வைத்தவன் அவள் கையைப் பிடித்து காருக்கு அழைத்து வந்தான்.

 “அம்மு அம்மு சாரி அம்மு, ப்ளீஸ் அம்மு என்னை மன்னிச்சிடு நான் தெரியாம.. எனக்கு எப்படி சொல்றது தெரில, நான் ரொம்ப கோபப்பட்டுட்டேன் இப்படி பண்ணக்கூடாது எனக்கு தெரியும், சாரி அம்மு. நான்.. என் கூட பேசாம இப்படி அமைதியா இருக்காத, என்கூட பேசு அம்மு..” என காரில் ஏறியதில் இருந்து வழி நெடுக, விதவிதமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்தான் நித்திலன். அவன் இயல்புக்கு மாறீ.

 அது ஒரு வகையில் தசிராவிற்கு இன்பமாக இருக்க, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள். ஆனால் அது எதையும் முகத்தில் காட்டாமல் எதிரே தெரிந்த தார் சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் தசிரா.

 அவளின் அமைதியான தோற்றம் நித்திலனை மேலும் பயம் கொள்ள வைத்தது.

 தேவையில்லாமல் அவளிடம் கோபப்பட்டு விட்டோம் என்பது காலம் கடந்த சிந்தனையாகி போனது அவனுக்கு.

 ‘டேய் நித்திலா உனக்கு வர வர அறிவே இல்லடா, ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை. அவளைப் பற்றி உனக்கு தெரியாதா.?  இப்போ எப்படி அவளை சமாதானம் செய்வ, உன் கோபத்தை எல்லாம் இப்பதான் காமிக்கணுமா, அவளைப் பார்த்தாலும் உடனே சமாதானம் ஆகுற மாதிரி தெரியல, என்ன செய்யப் போற சீக்கிரம் ஏதாவது செஞ்சு அவளை சமாதானம் செய்யற வழிய பாரு’ என மனதுக்குள் தனக்குத்தானே திட்டிக் கொண்டு புலம்பிக்கொண்டே வந்தான் நித்திலன்.

அவர்களது பார்க்கிங்கில் காரை நிறுத்தியதும், நித்திலனை கண்டுகொள்ளாமல் தசிரா வேகமாக சென்று விட,

 ‘முருகா நான் தான் உனக்கு வேண்டுதல் வச்சேனே இன்னும் ஏன் என்னை வச்சு செய்ற, ப்ளீஸ் அவளை எப்படியாவது என்கிட்ட பேச வை’ என முனுமுனுத்தப்படியே காரை நிறுத்திவிட்டு செல்ல, அங்கே லிப்டிற்காக காத்திருந்தாள் தசிரா.

 இவன் வந்த நேரம் சரியாக லிப்ட்டும் வந்துவிட, அதில் இவர்கள் இருவர் மட்டுமே.

உள்ளே நுழைந்து அவர்கள் தளத்திற்கான பட்டனை பிரஸ் செய்ய,  அது மட்டுமே நித்திலனுக்கு தெரிந்தது.

அடுத்து அவன் சுய உணர்வுக்கு வரும்போது, அவனது அம்மு   அவனை கழுத்தோடு அனைத்து இதழில் இளைப்பாரிக் கொண்டிருந்தாள். 

You may also like

1 comment

M. Sarathi Rio August 30, 2026 - 10:18 pm

போச்சு போ, வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகிட்டாளோ ?

😃😃😃
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured