Home Love - Family - Romanceமுத்தமழை – 59

முத்தமழை – 59

by Vathani S

முத்தமழை – 59

கர்ணன் சொன்னதைக் கேட்ட சுமிக்கு அதிர்வும் பயமும் வர, “என்ன.. என்ன சொல்றீங்க மாமா?” என தவித்து போய் கேட்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“வெற்றி போன காரை அடிச்சு தூக்க சொல்லி, இவங்க ரெண்டு பேரும் ஆள் செட் பண்ணிருக்காங்க. ஆக்சிடென்ட் ஆன இடத்துல ட்ராஃபிக் போலிஸ் ஜீப்பும் இருந்திருக்கு, அதையும் தூக்கிருக்கான் அந்த டிரைவர், போலிஸ் சேஸ் பண்ணி அந்த டிரைவரைப் பிடிச்சிருக்காங்க. அவனும் பயத்துல இவங்க பேரை சொல்லிட்டான்..” என கர்ணன் தளர்ந்து கூற, ராஜியும் வனிதாவும் பயத்தில் ஆடிப் போயினர்.

“இப்போ இப்போ என்ன செய்ய?” என சுமித்ரா பயத்தில் கேட்க,

“என்ன செய்ய முடியும்..? முதல்ல அவங்களை பார்க்கனும். அர்ஜுன் அங்கதான் இருக்கான். நான் போய் பார்த்துட்டு வரேன்.. வல்லிக்கு தெரிய வேண்டாம்..” என்ற போதே, இவர்களின் பேச்சைக் கேட்டபடியே இறுகிய முகத்துடன் கீழே வந்தாள் வல்லி. கூடவே வெளிறிய முகத்துடன் யாழினியும், பாட்டியும்.

இரண்டு பெண்களையும் இப்படி பார்த்தவனுக்கு, அதிலும் மனைவியின் குற்றம் சாட்டும் பார்வையில் அவளுக்கு என்ன, எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் தவித்துப் போனான் கர்ணன்

பயத்தில் முகம் வெளிறிப் போய் நின்ற தங்கையின் முகத்தைப் பார்த்து “யாழி..” என சுந்தரை உதறிவிட்டு வேகமாக வர,

“போலாம் யாழி..” என யாழினியின் கையைப் பிடித்தபடி வேகமாக வெளியில் நடந்தாள் வல்லபி.

“ஏய் இப்போ என் பொண்ணை எங்க கூட்டிட்டு போற..?” என்ற ராஜலட்சுமியை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் “என் அண்ணனும், தனாவும் நல்லா இருக்கனும்னு வேண்டிக்கோங்க. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தது, உங்க பையனும், மாப்பிள்ளையும் காலம் முழுசும் சுகமா மாமியார் வீட்டுல விருந்து சாப்பிட வேண்டியதுதான். என்னால என்ன செய்ய முடியும்னு யோசிச்சிடாதீங்க. யார் தடுத்தாலும் நான் செய்வேன்..” என்றாள் கர்ணனை நேருக்கு நேர் பார்த்து.

“ஏய் யாரோ ஒருத்தனுக்காக, வாழ வந்த வீட்டுல இருக்குறவங்களை கஷ்டப்படுத்துவியா?” என வனிதா எகிற,

“வாழ வந்த வீடா? இதுவா? ஹான் இந்த நிமிசம் வரைக்கும் என மனசுல அப்படி தோணல.. தோண வைக்கல யாரும்..” என்றாள் இதையும் கணவனைப் பார்த்தே.

பின் வனிதாவைப் பார்த்து “அவன் என் அண்ணன், அவ என்னோட சிஸ்டர்.. அவங்களுக்காக நான் போறேன். போவேன்.. இதை யாரும் கேட்கக்கூடாது” என அழுத்தமாக கூறி, யாழினியோடு வெளியில் செல்ல, இடிந்து போய் விட்டார் ராஜலட்சுமி.

அவரின் பயப் பார்வை கர்ணனின் மேல் விழ, அவனோ மனைவியின் பேச்சில் இறுகிப் போய் நின்றான்.

“தம்பி..” என்ற ராஜியின் பயக் குரலில் தன்னை மீட்டவன் “நான் பார்த்துட்டு கால் பண்றேன். அதுக்குள்ள இவங்களை எங்கேயும் ஒழிச்சு வைக்கனும்னு எந்த லூசுத்தனமும் பண்ணிடாதீங்க. அப்போதான் இன்னும் சந்தேகம் அதிகமாகும். இவங்களை வெளியே கொண்டு வரதும் கஷ்டம்..” என்றவன் வெளியில் வர, டிரைவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் மனைவி.

அவளிடம் விரைந்தவன் டிரைவரிடம் சாவியை வாங்கி,  கண்ணசைத்து அவனை அனுப்பிவிட்டு, டிரைவர் சீட்டில் அமர, கணவனே என்றாலும் இப்போது அவனோடு செல்லும் எண்ணம் துளியும் இல்லை அவளுக்கு, அதோடு அவனோடு வாக்குவாதம் செய்யும் மனநிலையும் இல்லை பெண்ணுக்கு. 

அமைதியாக யாழினியோடு காரின் பின்னிருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

அடுத்த நொடி கார் அர்ஜூன் கூறிய மருத்துவமனைக்கு விரைந்தது.

இங்கு “ம்மா..” என்ற வனிதாவை விடுத்து சுந்தரிடம் வந்த ராஜலட்சுமி அவன் என்ன எனும் உணரும் முன்னே அவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தார்.

“எவ்ளோ திமிர்டா உனக்கு? எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்க மனசு வந்தது. நான்தான் பொறுமையா இருங்க, பார்த்துக்கலாம்னு சொன்னேன்ல.. ஏண்டா இப்படி பண்ண?” என கேட்டுக்கொண்டே அவனை மேலும் அடிக்க,

“போதும் அத்த. இதுக்கு அப்புறம் நீங்க என் புருசன் மேல கை வச்சா நான் பொல்லாதவளாகிடுவேன் பார்த்துக்கோங்க.. என்னமோ எல்லா தப்பும் அவர் தான் செஞ்ச மாதிரி பேசிட்டு இருக்கீங்க. இது எல்லாத்துக்கும் மூல காரணமே நீங்களும் உங்க பொண்ணும் தான். நீங்க ஆரம்பிச்சு வச்சத அவர் செஞ்சார், நீங்கதானே அவர் ஒன்னுமே செய்யலன்னு சொல்லி மட்டம் தட்டுனீங்க. உங்களுக்காக செஞ்சார். அதை யோசிக்காம இப்போ மாத்தி, எல்லாமே அவர்தான் செஞ்ச மாதிரி பேசுறீங்க…” என ஆத்திரத்தில் கத்த, அங்கிருந்த அத்தனை பேரும் சுமித்ராவின் இந்த பேச்சில் அதிர்ந்து தான் போயினர்.

அதிலும் வனிதா ‘சுமிக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா?’ என அரண்டே போனாள்.

“அண்ணி… அம்மா அப்படி சொல்ல வரல..?” என்ற வனிதாவிடம்,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“இது எங்க வீட்டுப் பிரச்சினை, நாங்க பார்த்துக்கிறோம். உங்களை யாராச்சும் பஞ்சாயத்து பண்ணா கூப்பிட்டாங்களா?” என்றாள் கோபமாக.

“ஏய் என்ன பேசுற நீ? அவ உன்னோட அண்ணி..” என்ற ராஜியிடம், 

“ஆமா அண்ணிதான், இப்போ யார் இல்லன்னு சொன்னா? அவங்க வீட்டுல போய் நான் நாட்டாமை பண்றேனா? இல்லைதானே. என் இடம் எதுன்னு எனக்குத் தெரிஞ்ச மாதிரி அவங்களுக்கு ஏன் தெரியல? தெரியலயா? இல்ல தெரிஞ்சும் நான் இப்படித்தான்னு இருக்காங்களா? இல்ல இதெல்லாம் எங்க அம்மா மாதிரி நீங்க சொல்லிக் கொடுத்து அனுப்பலயா?” என்றாள் நேருக்கு நேர் பார்த்து.

“சுமி பார்த்து பேசு.. நீ என்னோட மனைவியை மட்டம் தட்டி பேசுற?” என்ற தன் அண்ணனையும் விட்டு வைக்கவில்லை.

“என்ன? என்ன உன்னோட மனைவியை மட்டம் தட்டினேன். உனக்காக நான் அவங்களை எந்தளவுக்கு அட்ஜஸ்ட் பண்ணி போனேன்னு தெரியுமா? ஆனா அதுக்கெல்லாம் வொர்த் இல்லாதவங்க இவங்க.. இனி நான் அப்படி இருக்கனும்னு எந்த அவசியமும் இல்ல.. நீ உனக்காகவும், உன் மனைவிக்காகவும் யோசிக்கும் போது, நான் எங்களுக்காக யோசிச்சிக்கிறேன்..” என்றவள் தன் தாய்க்கு அழைத்து நடந்ததை கூறி,

“எப்படியும் அவரை அரெஸ்ட் பண்ணிடுவாங்க ம்மா.. அதுக்குப்பிறகு என்னால இங்க இருக்க முடியாது. நான் அங்க நம்ம வீட்டுக்கு வரட்டுமா? இல்ல வேற எங்கையாவது போகட்டுமா?” என கேட்க, இதைக் கேட்ட வீட்டினர் அனைவருமே திகைத்து தான் போயினர்.

சுமி இப்படி பேசுவாள் என்பதே அவர்களுக்கு அதிர்ச்சி என்றால், அடுத்து அவள் எடுத்த முடிவு பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால் மிகையில்லை.

“இங்க உனக்கு இடம் இல்லைன்னு யார் சொன்னது சுமி. இது உன் வீடு.. இன்னும் உன் அப்பாவும், நானும் உயிரோடதான் இருக்கோம். உன் அண்ணனை நம்பி உன்னைத் தனியா விடமாட்டோம் சுமி. நீ எப்போ வேணும்னாலும் இங்க வரலாம்..” என்ற சுமியின் தாய் பேச்சு ராஜிக்கு செருப்பால் அடித்த உணர்வு.

தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த கணவனைக் கைத்தாங்கலாக எழுப்பியவள் “யாழினியோட வாழ்க்கையில இதுக்கு மேல யாரும் விளையாட மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இவ்வளவுக்குப் பிறகும் வல்லி அமைதியா போக யாழியோட லைப் மட்டும் தான் காரணம். அதுல மறுபடியும் நீங்க எந்த பிரச்சினையும் ஆரம்பிக்காம இருக்குறது உங்களுக்கு நல்லது..” என்று அவர்களை எச்சரித்தபடியே நகரும் நேரம், ஒரு மருத்துவரும், அவரது உதவியாளரும் உள்ளே வந்தனர்.

“கர்ணன் சார் கால் பண்ணார். இங்க யாருக்கோ ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணனும்னு சொன்னார்..” என்றார் சுந்தரைப் பார்த்தபடியே.

“இவருக்குத்தான் டாக்டர். ஃபைவ் மினிட்ஸ் நான் ரூம்ல விடுறேன்..” என்று ரூமுக்குள் அழைத்து சென்று கட்டிலில் விட்டாள்.

தன் கண் முன்னே நடக்கும் ஒவ்வொன்றையும் ஏற்க முடியாமல் மிகவும் திணறிப் போனார் ராஜலட்சுமி.

தன் கைக்குள்ளே இருப்பாள் மருமகள் என்ற எண்ணத்தை இப்போது தூள்தூளாக்கியிருந்தாள் சுமித்ரா.

அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல், மகனா? மகளா? என்ற தவித்த நிலையில் நின்றிருந்தார் ராஜலட்சுமி.

யாழினி தன் கையைவிட்டு சென்றுவிட்டாள் என்று அவரது மூளைக்குப் புரிந்தது. சுமி சொன்னது போல அவளை அப்படியே விட்டுவிட வேண்டியதுதான் என மூளை சொன்னாலும், அதை அவர் மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் முரண்டு பிடித்தது. 

வீட்டில் அனைவரும் ஒவ்வொரு வகை அதிர்வில் இருக்க, மருத்துவமனைக்கு வந்த மூவருக்குமே இதயம் தாறுமாறாக துடித்தது.

என்னதான் தன் பயத்தை வெளிக்காட்டாமல் இருந்தாலும், கர்ணனுக்கும் நெஞ்சை முட்டும் அளவுக்கு பயம் இருந்தது உண்மை.

ஐசியூ வாசலில் நின்ற அர்ஜூனைப் பார்த்ததுமே யாழினியின் கால்கள் துவளத் தொடங்கியது.

“யாழி.. பயப்பட ஒன்னும் இல்ல..” எனக் கூறியபடியே அர்ஜூன் அவளைப் பிடித்துக்கொள்ள,

“வெற்றிக்கு ஒன்னுமில்ல, அவருக்கு ஸ்கேன் எடுத்துட்டு இருக்காங்க. அவங்க சிஸ்டரை தான் டூ அவர்ஸ் அப்சர்வேஷன்ல இருக்கனும் சொல்லிருக்காங்க.” என்றதும் வல்லியின் உடல் நடுங்கத் தொடங்கியது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“தனா தனாக்கு என்ன.?” என்றதும், 

“அண்ணி.. அவங்களுக்கும் பெரிய அடி எல்லாம் இல்ல.. பயத்துல மயங்கிட்டாங்க..” என்று சமாதானம் செய்தான் அர்ஜூன்.

“என்ன அர்ஜூன்? எப்படி ஆச்சு..?” என இருவரையும் ஐசியு அறையின் வெளியில் அமர வைத்துவிட்டு, அர்ஜுனுடன் வெற்றியைப் பார்க்க சென்றான் கர்ணன்.

“வல்லி எனக்கு ரொம்ப பயமா இருக்கு..?” என்ற யாழியை சமாதானம் செய்த வல்லிக்கும் அதே பயம் தான். ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தோழியை சமாதானம் செய்தாள்.

“அண்ணா.. அந்த ட்ராஃபிக் போலிசே கேஸ் ஃபைல் பண்ணிட்டார். நாம எதுவும் பண்ண முடியாது. முன் ஜாமின் மட்டும் தான் வாங்க முடியும்..” என்றான் அர்ஜூன் தகவலாக.

“ம்ம்.. வல்லி என்ன சொல்றாளோ, அதுதான் முடிவு..” என்ற போது, வெற்றியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு வந்தனர்.

கர்ணன் வேகமாக அவனை ஆராய்ந்தான். அடி என்று பெரிதாக எதுவுமில்லை. ஆனால் கசங்கிய சட்டையும், கலைந்து போன கேசமும் அவனது வலியைக் கூற, வெற்றியின் கையைப் பிடித்து “ஸாரி வெற்றி… சுந்தர் இந்தளவுக்கு இறங்குவான்னு யோசிக்கல.. ரியலி வெரி சாரி..” என்றான் வருத்தமாக.

“வல்லி.. யாழி எங்க? தனாவுக்கு என்னாச்சுனு தெரியனும்.? வீட்டுல வந்துட்டாங்களா?” என்றான் பதட்டமாக.

“தனாவுக்கு ஒன்னும் இல்ல.. அவ பயத்துல மயங்கிட்டா.. வல்லியும், யாழியும் அங்க இருக்காங்க. அத்தையும், மாமாவும் வந்துட்டு இருக்காங்க. நீ இவ்ளோ டென்சன் ஆகாத..” என்ற கர்ணனுக்கும் பதட்டம் வந்தது.

பார்த்த வரையில் பெரிதாக எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வெற்றி நடந்து கொள்ளும் முறை பயத்தைக் கொடுக்க, சற்றே அரண்டுதான் போனான் கர்ணன்.

You may also like

1 comment

M. Sarathi Rio September 6, 2026 - 9:42 pm

அய்யயோ ..! எங்களுக்கும் பயமாத்தான் இருக்குது.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured