Home Love - Family - Romanceமுத்தமழை – 60

முத்தமழை – 60

by Vathani S

முத்தமழை – 60

வெற்றியின் பதட்டத்தில் கர்ணனுக்கும் பயம் வர, “அவங்க சிஸ்டர்க்கு என்னாச்சோன்னு பயந்துட்டார் ண்ணா..” என அர்ஜூன் சொன்ன பிறகே, கர்ணனுக்கு மூச்சு சற்று சீரானது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

இப்போது அவனுக்கு மிகப்பெரிய வேலை ஒன்று காத்திருக்கிறது.. வெற்றியின் வீட்டாட்களை சமாளிக்க வேண்டும், அதை விட முக்கியமாக மனைவி மற்றும் தங்கையை சமாளிக்க வேண்டும்.. 

அர்ஜூனை வெற்றியிடம் நிறுத்திவிட்டு, அவர்களைத் தேடி வர மனைவியின் முகம் இறுக்கமாக இருக்க, யாழினியோ அவளின் தோளில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தாள்.

மனைவியின் இறுக்கம் அவளிடம் பேசவிடாமல தடுக்க, “யாழி..” என தங்கையிடம் ஒரு அதட்டல் போட்டான் அண்ணன்காரன்.

அதில் பதறி எழுந்தவளிடம், “அங்க அர்ஜுன் வெற்றி கூட இருக்கான், நீ போய் வெற்றியை பாரு. தனா விழிச்சதும் நான் கால் பண்றேன்..” எனவும், வல்லியை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள் யாழினி.

வெற்றியின் அறைக்குள் நுழையும் வரை அமைதியாக இருந்த கர்ணன், “அம்மு… என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உன் அண்ணன்தான் என்னை நம்பாம கல்யாணம் வரைக்கும் போயிட்டான். நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி எந்த வில்லங்கமும் செஞ்சிடாத ப்ளீஸ். அப்படி நடந்தா நம்ம உறவுகளுக்குள் இருக்குற விரிசலை சரி செய்யவே முடியாது..” என்றான் கெஞ்சலாக.

“ம்ச்..” என்றவளின் சலிப்பும் எரிச்சலும் கர்ணனுக்கு கோபம் வர வைக்க,

“வல்லி நான் உன்கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன்…” என அதட்ட,

“இப்போ என்ன செய்யனும்? வழக்கம்போல நீங்க பார்த்துப்பீங்கன்னு நான் நம்பி ஏமாறனும் அப்படித்தான..” மனைவியிடமிருந்து காரமாக வந்தது வார்த்தைகள்.

“அம்மு..” என்று சற்று சத்தமாக அதட்டியவன், “உங்களை மாதிரி எடுத்தோம், கவுத்தோம்ன்னு எந்த பிரச்சினையையும் ஹேண்டில் பண்ண முடியாது. கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் இருக்க முடியாதா? உங்க அவசரம் இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பார்த்தீங்களா? இப்போ நான் யாருக்குன்னு பார்ப்பேன்?” என்றவனை நேருக்கு நேர் பார்த்தாள் மனைவி. அந்த பார்வையே தன் பேச்சைக் கேட்க மாட்டாள் என்று புரிய வைத்தது.

“அம்மு.. எனக்குத் தெரியாம எந்த வில்லங்கமும் நீ செய்யக்கூடாது. முக்கியமா யாழி விசயத்துல உன்னோட தலையீடு இருக்கவேக்கூடாது..” என்றான் இரும்பான குரலில். வல்லிக்கு அந்தக் குரலில் உள்ளுக்குள் பயம் பிடித்தாலும், வெளியில் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதே நேரம் பதட்டமும், அழுகையுமாக வெற்றியின் பெற்றோர் வேகமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் வல்லிக்கு குற்றவுணர்வும் அழுகையும் வர, அவர்கள் முகத்தைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்தபடியே விசும்பினாள்.

“கல்யாணம் ஆகிட்டா பெரியாளாகிட்டதா அர்த்தமா பாப்பா? எப்போ இருந்து வீட்டுக்குத் தெரியாம இந்த மாதிரியான செயல்களை செய்ய ஆரம்பிச்சீங்க..? இப்படித்தான் உங்க மூனு பேரையும் வளர்த்தோமா?” என ராமசாமி மகளை அதட்ட, சீதாவும் சிவகுருவும்  ஓய்ந்து போய் ஒருபக்கமாய் அமர்ந்துவிட்டனர்.

“ப்பா.. ப்பா..” என்ற வல்லிக்கு பேச வார்த்தைகளே வரவில்லை.

“மாமா.. நடந்ததுல யார் மேல தப்போ.. இனி அதைப்பத்தி பேச வேண்டாம். இனி என்ன நடக்குமோ அதைப்பத்தி மட்டும் பேசலாம். நானும் வல்லியை ரொம்ப பேசிட்டேன், நீங்களும் அவளை பேச வேண்டாம். இப்போ போய் வெற்றியைப் பார்க்கலாம்..” என கர்ணன் மாமனாரை சமாதாணம் செய்ய, சீதா உடைந்து அழ ஆரம்பித்தார்.

“யாழியை நாங்க வேண்டாம்னு சொல்லவே இல்லையே மாப்பிள்ளை. அப்புறம் ஏன் இப்படியொரு முடிவெடுத்தான்..” என சிவகுரு வருத்தமாக கேட்க,

“மாமா எங்க வீட்டாட்களைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே.. எல்லாரையும் சமாளிச்சு ஒருவழியா உங்ககிட்ட பேச வரலாம்னு இருக்கும் போது வெற்றி இப்படியொரு முடிவெடுப்பான்னு நான் நினைக்கவே இல்ல..” என நிறுத்த, வல்லபி கணவனை பட்டனெ நிமிர்ந்து முறைத்தாள்.

“ம்ச் வல்லி..” என கர்ணன் மனைவியை அதட்ட,

“வெற்றிண்ணா இப்படியொரு முடிவெடுக்க நீங்களும், உங்க வீட்டு ஆளுங்களும் தான் காரணம்..” என்றுக் கத்தியவளை,

“போதும் பாப்பா…” என்ற ராமசாமியின் அதட்டல் குரல் தடுத்து நிறுத்தியது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“மாமா, ரெண்டு பேரும் இப்போ நல்லா இருக்காங்க. அதிர்ச்சியில மயங்கிட்டாங்கன்னு தான் டாக்டர் சொன்னார். ஃபுல் செக்கப் பண்ணியாச்சு. வெற்றி முழிச்சிட்டான். தனா தான் இன்னும் மயக்கத்துல இருக்கா, ரெண்டு பேரையும் இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்க.. வெற்றியை எதுவும் சொல்லவேண்டாம். இனி நான் பார்த்துக்கிறேன்..” என கர்ணன் சிவகுருவிடம் சொல்லிக் கொண்டிருக்க, 

“நீங்க பார்த்துக்குறேன்னு சொன்னதுனால தான் நாங்க அமைதியா இருந்தோம்.. ஆனா..?” என சீதா பட்டென்று சொல்ல, கர்ணனின் முகம் சட்டென வாடி பின் இறுகிப் போனது.

“ம்மா..” என வல்லி பதட்டமாக நிமிர்ந்து கணவனைப் பார்க்க, 

“சீதா.. நம்ம பிள்ளைங்க செஞ்ச தப்புக்கு மாப்பிள்ளை என்ன செய்வார்..” என சிவகுரு மனைவியை சத்தம் போட, 

“பெத்தவளோட வேதனை உங்களுக்குப் புரியாதுங்க..” என்றவர், மீண்டும் அமைதியாக அமர்ந்துகொண்டார்.

மனைவியை ஒரு பார்வைப் பார்த்த கர்ணனும் அங்கிருந்து சென்றுவிட, வல்லிக்குதான் மிகுந்த வருத்தமாகிப் போனது. அதோடு என்ன செய்வானோ என்ற பயமும்..

பிறகு  வல்லி மெல்ல நடந்த அனைத்தையும் அவர்களுக்கு சொல்ல, தன் பிள்ளைகளின் செயலை நினைத்து கோபம் தான் வந்தது, 

“போலிஸ் கேஸ் எல்லாம் வேண்டாம்னு சொல்லு பாப்பா.. உங்க மாமியார் அதுக்கும் ஏதாவது பிரச்சினை செய்யப் போறாங்க..” என்ற இயலாமையுடன் சீதா கூற,

“அதுக்காக அவங்களை அப்படியே விட சொல்றீங்களா? இவங்களுக்கு பெருசா எந்த காயமும் இல்லன்றதுனால இப்படி சொல்றீங்க. இதே நாம பயந்த மாதிரி நடந்திருந்தா? விடுங்க சீதாம்மா, பாவா என்ன செய்யனுமோ செய்யட்டும்.. கண்டிப்பா அவங்களுக்கு பயம் வரனும். அதுக்காகவாவது ஸ்டேசன் வரைக்கும் போயிட்டு வரட்டும்..” என வல்லி கோபமாக கூற, 

அவள் சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. ஆனால் ராஜலட்சுமியை நினைத்தால் சற்று பயமாக இருந்தது. முன்பென்றால் வல்லி மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தாள். இப்போது வெற்றியும் சேர்ந்து விட்டான். இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையும் அவர்களுக்கு முக்கியமாகப்பட, மீண்டும் வல்லியிடம் இதைப்பற்றி பேசினார்கள்.

“ப்பா.. பாவா சொல்றது தான். நான் சொல்றதை அவர் கேட்குற நிலைமைல இல்ல. அதோட கேஸ் பாவா கொடுக்கல. அந்த ட்ராஃபிக் போலிஸே கேஸ் ஃபைல் பண்ணிட்டார். நாம என்ன சொன்னாலும், அங்க எடுபடாது..” என எரிச்சலாக சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு பணியாளோடு அங்கு வந்தான் கர்ணன்.

அவரிடம் ஒரு ட்ரெயில் டீ கப்புகள் இருக்க, “குடிங்க மாமா…” என்றவன் மனைவிக்கு மட்டும் ஹார்லிக்ஸ் இருந்த கப்பை எடுத்துக் கொடுத்தான்.

“உங்களுக்கு..?” என்றவளிடம்,

“நான் குடிச்சிட்டுத்தான் வாங்கிட்டு வந்தேன்..” என்றான் பட்டும் படமாலும்,

“ஹ்ம்ம்.” என்றவளுக்கு கணவனின் ஒதுக்கம் புரிந்தது. ஆனாலும் இங்கு வைத்து மீண்டும் ஒரு வாக்குவாதம் வேண்டாம் என்ற முடிவில் அமைதியாக குடிக்க ஆரம்பித்தாள்.

சீதா மீண்டும் கேஸ் எதும் வேண்டாம் என்று ஆரம்பிக்க, “நம்ம கைல ஒன்னுமில்ல அத்த.. எஃப்ஐஆர் போட்டுட்டாங்க..” என்றான் பெருமூச்சுடன்.

‘ஏதோ நடந்திருக்கிறது..’ என்றளவில் வல்லிக்குப் புரிந்தது. அப்போது அர்ஜூன் அங்கு வேகமாக வர, அவன் வருவதற்கு முன்பே கர்ணன் அவனிடம் அதே வேகத்தோடு சென்றான்.

“ண்ணா.. சுந்தர் அண்ணாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க போல. வழக்கம் போல வனிக்கா ஏதோ லூசு மாதிரி பண்ணி, மாமாவை ஒழிச்சு வச்சிட்டு, போலிஸ்கிட்ட திமிரா பேசியிருக்காங்க.. இப்போ உன் புருசன் வந்தா உன்னை விடறோம்னு அக்காவை கூப்பிட்டு போயிட்டாங்களாம்..” என பதட்டமாக கூற, கர்ணனுக்கு ‘அவ்வளவு சொல்லியும்’ என கோபத்தில் உடலே இறுகிப்போனது.

தன் கோபத்தை யாரிடமும் காட்டாமல், மனைவியிடம் திரும்பியவன் “நீ இப்போ வீட்டுக்கு போகவேண்டாம் வல்லி. இங்க ஒரு ரூம் அலார்ட் பண்ண சொல்லிருக்கேன். அங்கேயே நீயும், யாழியும், அத்தையும் இருங்க. நான் ஸ்டேஷன் போயிட்டு வந்துடுறேன்..” என ஒட்டாத குரலில் கூறிவிட்டு, யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து வேகமாக கிளம்பிவிட்டான்.

‘பாவா அவ்ளோ தூரம் சொல்லிட்டு வந்தும் இந்த வனிதா அண்ணி ஏன் இப்படி பண்றாங்களோ..?’ என மனதுக்குள் நினைத்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக சீதாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

இங்கு வெற்றியின் அறைக்குள் நுழைந்த யாழினியின் விழிகளில் இருந்து அருவியாய் நீர் வழிந்து கொண்டே இருந்தது..

பெண்ணவளின் அழுகை சத்தத்தில் கண் திறந்தவன், அவளின் கேவல்களில் கரைந்து போனான். அதோடு ஒரு வித குற்றவுணர்ச்சியும் உண்டாகிப் போனது.

“யாழி ம்மா..” என்றவனின் குரல் அவளைச் சென்று சேர்ந்ததாகவே தெரியவில்லை. பல முறை அழைத்தாலும், அவள் நிமிரவே இல்லை, அழுதுகொண்டே இருந்தாள் பெண். 

“யாழி..” என சற்றே அதட்டலாக அழைக்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவளின் அழுகை மட்டுப்பட்டு கோபம் ஏறத் தொடங்கியது.

இரண்டே எட்டில் அவனிடம் நெருங்கியவள் “நான் தான் இப்போ வேண்டாம், கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னேன்ல.. ஏன் கேட்கல? எப்பவும் ஊங்க இஷ்டம் தான்..?” என அவன் மார்பில் அடித்தபடியே அழுதவளை அப்படியே இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான் வெற்றி.

“சுந்தர் அண்ணா இப்படியெல்லாம் பண்ணுவாங்கன்னு நான் நினைச்சதே இல்ல வெற்றி.. எப்படி கொலை பண்ற அளவுக்கு தைரியம் வந்தது? எப்படி இனி நான் அத்தை மாமா முகத்துல முழிப்பேன்? எப்படி இனி வல்லி, தனு கூட சாதாரணமா பேச முடியும்.? எப்படி உங்ககூட என்னால பயம் இல்லாம வாழ முடியும்?” என தன் போக்கில் புலம்பி கதறியவளின் புலம்பலைத் தடுக்கும் வழி தெரியாமல், அவளின் இதழோடு இதழ் இணைத்து, மனைவியின் புலம்பல்களையும், அழுகையையும் தனக்குள் வாங்கிக் கொண்டான் கணவன்.

“ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..” என்று திமிறியவளும் ஒரு கட்டத்தில் அவனோடு இசைந்து கொண்டாள். அவளின் வலிக்கும் அவனின் இந்த முத்தம் ஒரு வலி நிவாரணியாக அமைந்து போனது தான் நிஜம். 

இங்கு ஸ்டேஷனில் “என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க? அதுதான் கர்ணன் தம்பி எந்த கிறுக்குத்தனமும் பண்ணாதீங்கனு சொல்லிட்டுத்தானே போனார். எதுக்கு தேவையில்லாத வேலை. எல்லாம் எனக்குத்தான் தெரியும்னு திமிர்த்தனம். நீ என்ன சொல்றது, நான் என்ன கேட்குறதுனு தெனாவெட்டு.. இப்போ கஷ்டப்படுறது என் பையன்தானே..” என சுமித்ராவின் அம்மா, வனிதாவைத் திட்டிக் கொண்டிருக்க, மகளை முறைத்தபடியே பல்லைக் கடித்தபடி அமர்ந்திருந்தார் ராஜலட்சுமி.

You may also like

1 comment

M. Sarathi Rio September 19, 2026 - 10:39 pm

இல்லாட்டி மட்டும் வனிதா அப்படியே மாமியாருக்கும் மத்தவங்களுக்கும் அப்படியே பயந்து நடுங்கிற மாதிரி தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured