Home Love - Family - Romanceமுத்தமழை – 61

முத்தமழை – 61

by Vathani S

முத்தமழை – 61

கர்ணனைப் பார்த்ததுமே அந்த இன்ஸ்பெக்டர் “ஸார் உங்களுக்காக மட்டும் தான், இவங்களை மரியாதையா விசாரனை பண்ணிட்டு இருக்கேன். இதே இந்த இடத்துல வேற ஆள் இருந்திருந்தா என்னோட விசாரனையே வேறமாதிரி இருந்துருக்கும்…” என கடுமையான குரலில் கூற, கர்ணனுக்கு மிகவும் தலை இறக்கமாகிப் போனது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

யாரிடமும் எதுவும் பேசாமல், முன் ஜாமீன் வாங்கியதை காண்பித்து இருவரையும் வெளியில் அழைத்து வந்தான்.

“தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க, உங்க தங்கச்சியை கொஞ்ச நாள் உங்க வீட்டுல வச்சிருங்க.. இந்த பிரச்சினை எல்லாம் முடியட்டும். அப்புறம் எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க..” என தயவு தாட்சன்யமே இல்லாமல் சுமியின் அம்மா கூற, 

“என்ன பேசுறீங்க சம்மந்தி, அப்போ உங்க பொண்ணை நான் உங்க வீட்டுக்கு அனுப்பவா..?” என ராஜலட்சுமியும் கடுப்புடன் கேட்க,

அதற்குள் கர்ணனை இன்ஸ்பெக்டர் அழைக்கிறார் என அர்ஜூன் கூறியதுமே “ம்மா கொஞ்சம் பார்த்து பேசுங்க..” என தாயை எச்சரித்தே உள்ளே சென்றான்.

“தாராளமா அனுப்புங்க.. இப்ப மட்டும் அனுப்புனாலும் சரி, இல்ல மொத்தமாவே அனுப்புனாலும் சரி. எங்க பொண்ணு உங்க வீட்டுல பொழைச்ச பொழப்பு போதும். இனி எங்க வீட்டுல எங்க பொண்ணா இருக்கட்டும். இன்னும் நானும் என் புருசனும் உயிரோடத்தான் இருக்கோம். எங்க பொண்ணை அப்படியே விட்டுட மாட்டோம், முக்கியமா உங்க பொண்ணை நம்பி விட்டுட்டு போயிடமாட்டோம்..” என பேச, ராஜலட்சுமிக்கு சம்மந்தியின் பேச்சைக் கேட்டு பயமே வந்துவிட்டது.

“அண்ணி என்ன பேச்சு இது?” என பயந்து போய் கேட்க,

“நீங்களும் உங்க பொண்ணும் நடந்துக்கறதை பார்க்கும் போது எனக்கு இப்படித்தான் பேச வருது..”  என முகத்தில் அடித்தார் போல பேசி விட, இது எதிலும் தலையிடவில்லை சுமித்ரா.

ஏன் இப்படி பேசுறீங்க? என்று தன் தாயை அடக்கவும் இல்லை, அமைதியாக சுந்தரை அழைத்துக்கொண்டு நகர்ந்துவிட, மருமகளின் செயலில் கோபம் தலைக்கேறியது ராஜலட்சுமிக்கு.

ஆனாலும் பல்லைக் கடித்து பொறுமையாக மகளையும், மருமகனையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

அதற்குள் சம்மந்தி வீட்டாட்கள் கிளம்பிவிட்டனர்.

“என்ன மாப்பிள்ளை இது? உங்க அம்மா இப்படி பேசிட்டு போறாங்க..?” என ராஜி பொறுக்கமாட்டாமல் மருமகனிடம் கேட்க, 

“அம்மா சொன்னது உங்களுக்கு புரியலையா அத்த..? கொஞ்ச நாள் உங்க பொண்ணு உங்க வீட்டுல இருக்கட்டும்..” என்று பட்டென சொன்னவன், தன்னைப் பிடித்திருந்த மனைவியின் கையை எடுத்துவிட்டு நடந்துவிட்டான் ரமேஷ்.

“மாப்பிள்ளை.. மாப்பிள்ளை..” என ராஜி அவர் பின்னே போக,

“போகட்டும் விடுங்க ம்மா.. கொஞ்ச நாளைக்கு நான் இல்லாம இருந்தாதான் என் அருமை புரியும்..” என வனிதா எரிச்சலாக பேச, 

“போதும் வாயை மூடு..” என மகளை அதட்டியிருந்தார் ராஜி.

“ம்மா..” என்ற அதிர்ந்த மகளிடம், “இன்னும் உன் பின்னாடியே நான் அலைஞ்சிட்டு இருக்க முடியுமா? என்ன செய்வியோ எனக்குத் தெரியாது.. உன் புருசன் கூட போய் பொழைக்கிற வழிய பாரு..” என கடுமையாக கூற,

“ம்மா..” என ஏதோ சொல்ல வந்தவள், உள்ளிருந்து அர்ஜுனுடன் வெளியில் வந்த கர்ணனைப் பார்த்து அமைதியாகிவிட்டாள்.

“மத்தவங்க எல்லாம் எங்க?” என வனிதாவிடம் கேட்க, அவளோ பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்ப

மகளின் செயலில் எரிச்சல் வந்தாலும், அதை வெளியில் காட்டாமல் “கிளம்பிட்டாங்க தம்பி..” என்றார் ராஜலட்சுமி ஓய்ந்து போய்.

உண்மையில் அவரால் வனிதாவை சமாளிக்க முடியவில்லை. ஒருத்திக்காக அனைவரையும் பகைத்தது போல் ஆகிவிட்டது அவர் நிலை.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“என்ன சொல்றீங்க? தெளிவா சொல்லுங்க.” என சற்றே சத்தமாக கர்ணன் பேச,

நடந்த அனைத்தையும் கூறிய ராஜி, “சம்மந்தி பேச்சே சரியில்ல தம்பி, அதுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளையும் பேசிட்டு போறார். சுந்தரும், சுமியும் ஒரு வார்த்தை பேசாம கிளம்பிட்டாங்க..” என்றார் வேதனையாக.

“ம்மா.. விடுங்க பார்த்துக்கலாம். வனி நம்ம வீட்டுல இருக்கட்டும். நான் மாப்பிள்ளை வீட்டுல பேசுறேன். இப்போ கோபத்துல இருப்பாங்க. நாம என்ன பேசினாலும், அதை புரிஞ்சிக்க மாட்டாங்க..” என்றவன் தாயை கூர்ந்து பார்த்தான்.

அந்த பார்வையின் பொருள் அவருக்கு புரியவில்லை. “என்ன தம்பி..?” என குழப்பமாக கேட்க,

“ம்மா.. அங்க ஹாஸ்பிடல்ல ரெண்டு பேர் இருக்காங்க. அதுக்கு காரணம் நம்ம வீட்டாளுங்க. அவங்க எப்படி இருக்காங்க? என்னாச்சுன்னு கேட்கல. அவங்களை போய் பார்க்கணும்னு கூட தோணலயா?” என்றவனின் குரலில் இருந்த கோபம் ராஜலட்சுமிக்கு பயத்தைக் கொடுத்தது.

“தம்பி.. இப்போ அங்கதான் போலாம்னு உங்கிட்ட சொல்ல வந்தேன் ப்பா.. அதுக்குள்ள இவ இப்படியொரு பஞ்சாயத்தை இழுத்து வச்சிருக்கா? நான் எந்த மூஞ்சை வச்சிட்டு வந்து அங்க பேச.. அவங்க என்ன நினைப்பாங்க.?” என்றார் கவலையாக.

“தப்பு நம்ம மேல இருக்கும் போது, அதுக்கான தண்டனையையும் நாமதான் சுமக்கனும், பாதிக்கப்பட்டவங்க அவங்க. என்ன பேசினாலும் கேட்டுத்தான் ஆகனும். இந்த ஆக்சிடென்ட்ல விபரீதமா ஏதாவது நடந்திருந்தா, சுந்தரையும் ரமேஷையும் வெளிய கொண்டு வந்துருக்கவே முடியாது..” என்றான் இரும்பான குரலில்.

“தம்பி..” என தவிப்பாக கேட்க,

“அதுக்குப்பிறகு யாழினி முகத்துல எப்படி முழிப்பீங்க.. அவ என்ன முடிவு எடுத்துருப்பா? ஒரு வேளை தற்கொலை வரைக்கும் போயிருந்தான்னா என்ன செஞ்சிருப்பீங்க..” என்றான் பாவமே பார்க்காமல்.

“என்ன தம்பி? என்னென்னவோ பேசுற.?” என கலக்கமாக கேட்க,

“யாழினி இதெல்லாம் எப்படி கடந்து வருவான்னே எனக்குத் தெரியல ம்மா.. அவளையும் கொஞ்சம் கவனிங்க. உங்களுக்கு அவளும் மகதான்..” என எரிச்சலாக சொல்லிவிட்டு முன்னே செல்ல, 

பதில் சொல்லும் நிலையில் இல்லை ராஜலட்சுமி. மகளை ஒரு கையில் பிடித்து இழுத்தபடியே கர்ணனின் பின்னே நடந்தார்.

இது எதிலும் அர்ஜூன் வாயைத் திறக்கவில்லை. அவனுக்கு ராஜலட்சுமியை நன்கு தெரியும். அடுத்த வீட்டில் ஆயிரம் பஞ்சாயத்துக்கு செல்வார், பேசுவார். அதே அடுத்தவர்களை தன் வீட்டில் பேச விடமாட்டார். முகத்தில் அடித்தாற் போல ‘உன் வேலையைப் பார்’ என்பார். அவரின் குணம் புரிந்து அமைதியாகவே அனைத்திற்கும் பார்வையாளன் ஆகிவிட்டான்.

அதோடு அவனுக்கு இப்போது மனதில் வேறு ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

அது சரியா? தவறா? என்று பிரித்தறிய நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது அந்த எண்ணங்களை ஒதுக்கி, கர்ணனுக்கு முன் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

“ஏன் அர்ஜூன் அப்செட்டா இருக்க.?” என அத்தனை பிரச்சினையிலும், அவனை கவனித்து கர்ணன் கேட்க, 

சட்டென அர்ஜூன் முகம் மலர்ந்துவிட “நத்திங்க் ண்ணா.. வேற யோசனை..” என்றவன் காரை எடுத்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் எப்படி போனதென்றே தெரியவில்லை. அடுத்த நாளே இருவரையும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான் கர்ணன். அர்ஜூன் கர்ணனை விட்டு நகரவில்லை. 

இந்த விபத்திற்கு பிறகு வந்தனா யாரிடமும் பேசவில்லை. மிகவும் அமைதியாக இருந்தாள். மிகவும் பயந்து விட்டாள் என்று அனைவருக்கும் புரிந்தது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

வல்லி எப்போதும் அவளுடனே இருந்தாள். 

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மன்னவன் கைபிடித்து வலக்காலை எடுத்து அந்த வீட்டுக்குள் வர வேண்டியவள், மிகுந்த வேதனையில் வெற்றியின் கைப்பிடித்து உள்ளே வந்தாள் யாழினி.

அவளின் மனநிலை புரிந்து யாரும் எந்த பேச்சையும் எடுக்கவில்லை. அதோடு அவள் தன் பிறந்த வீட்டாரிடம் பேசுவதையே முற்றிலும் நிறுத்தியிருந்தாள்.

மருத்துவமனையில் வைத்து ராஜலட்சுமி பேசிய எதையும் காதில் வாங்கவில்லை யாழினி.

அதே நேரம் இப்படி வந்து இங்கு இருப்பதும் அவளுக்கு வேதனையாக இருக்க, மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டாள்.

இதை அனைத்தையும் மௌனமாகவே கவனித்தாள் வல்லி. யாரிடமும் சத்தம் போட்டு பேசவில்லை. அன்றைக்கு பிறகு கணவனிடம் பெரிதாக பேச்சும் இல்லை. அவனுக்கு இருக்கும் பிரச்சினை புரிய, தன் பிரச்சினையை கொஞ்சம் தள்ளி வைத்தாள்.

அன்று இரவு யாழினியின் போன் அடித்துக்கொண்டே இருக்க, அப்போதுதான் வல்லியின் அறையில் போனை வைத்துவிட்டு சென்றிருந்தாள் யாழினி.

யாரென்று வல்லி எடுத்துப் பார்க்க வனிதா எண் அது.. இப்போ ஏன் கூப்பிடுறாங்க? மாமாவுக்கு எதுவும் பிரச்சினையோ என்றுதான் எடுத்து காதில் வைத்தாள் வல்லி.

“ஏண்டி திமிரெடுத்த கழுதை.. எங்க எல்லார் வாழ்க்கையையும் நாசம் பண்ணிட்டு நீ மட்டும் நல்லா இருக்கணும்னு நினச்சிடாத. உன்னை அவன் கூட சந்தோசமா வாழ விட்டுடமாட்டேன். கோவில்ல வச்சு ஒரு மஞ்சக்கயிறை கட்டிட்டா, அவன் உனக்கு புருசனா? ஹான் சட்டப்படி நீ இன்னும் அவன் பொண்டாட்டி ஆகல. இந்த நிமிசம் நாங்க என்ன வேணும்னாலும் செய்யலாம் தெரியுமா? கொஞ்சம் கூட உனக்கு வெட்கமே இல்லையாடி.. போயும் போயும் ஒரு போலிஸ்காரன்தான் கிடைச்சானா? ஹான் கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் கூட ரூம் போட்டவதான.. நீ எப்படி அவனைவிட்டு வருவ.. ச்சீ என்ன பொம்பளையோ? அவனால உன்னை எப்படி நல்லா பார்த்துக்க முடியும்..? அவன் உன்னை நடுத்தெருவுல தாண்டி நிறுத்துவான். அப்போதான் நாங்க சொன்ன எல்லாம் உனக்குப் புரியும். அப்போ கூட எங்களைத் தேடி வந்திடாத..” என விடாமல் பேசிக்கொண்டே போக, வல்லியின் முகம் கோபத்திலும், ஆத்திரத்திலும் சிவந்து போனது.

‘இதை இப்படியே விட முடியாது.. என்ன பேச்சு இது? இதை மட்டும் யாழினி கேட்டிருந்தால்? அய்யோ என்ன முடிவு எடுத்திருப்பாளோ? இவங்களை இப்படியே பேச விடக்கூடாது. சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..’ என யோசித்தவளுக்கு அப்போது யோசனையில் வந்தவன் ஜோன்ஸ் தான்.

அவனுக்கு சில விசயங்களைப் பேசி, “காரியம் முடியுற வரைக்கும் யாருக்கும் மேட்டர் லீக்காகக்கூடாது. அண்ணாவையும், யாழியையும் நான் கூப்பிட்டு வந்துடுவேன். மத்த வேலையெல்லாம் நீ பார்த்துக்கோ. அப்புறம் அந்த வசந்தை உன் கூட வச்சிக்காத. அவன் பாவாவுக்கு உடனே சொல்லிடுவான்..” எனவும்,

“ஹேய் உனக்குத் தெரியாதா? அவர் ஜாப் ரிசைன் பண்ணிட்டார்.. வசந்த்க்கு வேற ப்ராஜெக்ட் கிடைச்சிடுச்சு.. ஐ திங்க் கோவா பக்கம்னு நினைக்கிறேன்..”

“ஓ அப்படியா? அதான் வந்து டல்லா இருக்காளா? வந்துவுக்கு தெரியுமா?” 

“அவளுக்குத் தெரியுமே, அவக்கிட்ட சொல்லிட்டுத்தான் போனார். அன்ட் நீ நினைக்கிற மாதிரி ரெண்டு பேரும் கமிட்டெட் கிடையாது. ஜஸ்ட் ப்ரண்ட்ஸ். அவர் ப்ரபோஸ் பண்ணார், வந்துவுக்கு விருப்பமில்ல. அவரும் ஃபோர்சும் பண்ணல.. வெரி ஜெனியூன் ப்பா.. நீட்டா ஃப்ரண்ட்ஸ்னு சொல்லிட்டு போனார்..”

“ஹ்ம்ம் நான் வேற மாதிரி நினைச்சேன். வந்துவும் ரொம்பவே டல்லா இருந்தாளா? அதான் கேட்டேன். இட்ஸ் ஓக்கே.. அவ சரியாகிட்டா போதும்..” என பெருமூச்சு விட,

“அதெல்லாம் பார்த்துக்கலாம் வல்லி.. நீ கவலைப்படாதே..” என்றவனுக்கும், அப்போதுதான் வந்தனாவின் அமைதி புதிதாக புரியத் தொடங்கியது.

You may also like

1 comment

M. Sarathi Rio September 21, 2026 - 1:58 pm

இந்த வனிதா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டான் போல.
வல்லி இப்ப என்ன செய்யுறாள் ? ஒருவேளை, வெற்றி யாழினி திருமணத்தை ரிஜீஸ்ட்டர் பண்ணப் போறானோ ?

😴😴😴
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured