Home Love - Family - Romanceமுத்தமழை – 62

முத்தமழை – 62

by Vathani S

முத்தமழை – 62

வனிதா போனை வைத்ததுமே வல்லிக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. இப்போது அவள் முன் மட்டும் வனிதா இருந்திருந்தால் நிச்சயம் ஓங்கி ஒரு அறை விட்டிருப்பாள்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

ஆனால் இப்போது அது நடக்காதே. அதோடு இப்போது அவளுக்கு காரியம் தான் பெருசு.

என்னதான் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடந்திருந்தாலும், முறைப்படியும், சட்டப்படியும் நடக்கவில்லையே.

அதை காரணம் காட்டித்தானே வனிதா இப்படி ஒரு பிரச்சினையை ஆரம்பிக்கப் பார்க்கிறாள். அவள் ஆரம்பிக்கும் முன்னமே முடித்துவிட்டால்?

முதலில் கணவனிடம் தான் சொல்ல வேண்டும் என நினைத்து, அவனுக்கு அழைத்து வனிதா பேசியதை கூற, நிச்சயம் அத்தனை கோபம் வந்தது கர்ணனுக்கு.

“இவ ஏன் இப்படி இருக்கான்னே தெரில அம்மு.. அவங்க வீட்டுல, பிரச்சினை முடிஞ்ச பிறகு அனுப்பி வைங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. மாப்பிள்ளையும் அதையே சொல்லிட்டு போறார். அவ வாழ்க்கையே இங்க மோசமா போயிட்டு இருக்கு, அப்பவும் அடங்கி இருக்காளா பாரு..” என எரிச்சலாக பேசியவன்,

சட்டென ஏதோ தோன்ற “நீ என்ன யோசிச்சுட்டு இருக்க.?” என மனைவியிடம் கேட்டான்.

அப்படி கேட்பான் என்று அவள் யோசிக்கவே இல்லையே.. “நான்…. நான் என்ன யோசிச்சேன்..” என திணறும் போதே, கணவனுக்கு புரிந்து போனது. ஏதோ திட்டம் வைத்திருக்கிறாள் என்று.

ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் “நாளைக்கு வெற்றியையும், யாழியையும் அழைச்சிட்டு போய் ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துடலாம்..” என பொதுவாக சொல்வது போல் சொல்ல,

“நிஜமாவா… நிஜமாவா பாவா..?” என மீண்டும் மீண்டும் கேட்க,

“ஏன் என்னாச்சு..? எதுக்கு இவ்ளோ ஆச்சரியமா கேட்குற.?” என்றவனுக்கு மூளையில் மணியடித்தது.

“இல்ல..” என ஆரம்பித்து தன் திட்டத்தை கூற,

“ஹ்ம்.. வேற..? வெற்றிக்கிட்ட சொல்லிட்டியா?” என்றான். இப்போது குரலில் மாற்றம்.

“இன்னும் யாருக்கும் சொல்லல.. அண்ணாவுக்கு ஒன் வீக்ல லீவ் முடியுது. குஜராத் போறாராம். யாழியும் கூடவே போனா நல்லா இருக்கும். ரெண்டு பேருக்கும் நடந்த பிரச்சினையில, ஏகப்பட்ட ப்ரசர். ஸ்ட்ரெஸ்… தனியா போனா ப்ரைவேசி கிடைக்கும். இந்த பிரச்சினையில இருந்து தள்ளி இருந்தா ஒரு ரிலீஃப் கிடைக்கும்ல..” என்றாள் ஒரு முடிவெடுத்த குரலில்.

“ஹ்ம்ம்.. இதெல்லாம் யாரோட முடிவு.? வெற்றியோ, யாழியோ உங்கிட்ட சொன்னாங்களா? இல்ல அத்தை மாமா யாராவது சொன்னாங்களா?” என்றான் கடினமாக,

“அவங்க யாரும் சொல்லல. எனக்கே தோணினது தான்..” என்றதும்,

“போதும் வல்லி..” என்ற கர்ணனின் குரலில் இருந்த மாற்றத்தை அப்போதுதான்  வல்லி உணர்கிறாள்.

“பாவா..” என்றவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தது.

“நீயே எல்லாம் முடிவு பண்ணி செய்றதுக்கு, நான் எதுக்கு இருக்கனும்.. எங்கிட்ட ஏன் சொல்லனும்..?” என்றான் கோபமாக.

“அப்போ வனி அண்ணி பேசினது தப்பில்லையா?” என்றாள் வல்லியும் கோபமாக.

“நான் சரின்னு சொல்லல.. ஆனா அதுக்காக நீ எடுத்த முடிவும் சரி கிடையாது. இல்ல எனக்கு புரியல.. ரெண்டு வீட்டுக்குமே இது பிரச்சினைதான்.  வீட்டுல பெரியவங்க இருக்காங்க. அவங்க என்ன யோசிச்சிருக்காங்க, அவங்க என்ன முடிவு எடுக்குறாங்கன்னு எதப்பத்தியும் யோசிக்காம நீயா ஒரு முடிவு எடுப்பியா? என்ன பழக்கம் இது.?” என்றான் கோபம் குறையாமல்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“நீங்க இப்படித்தான்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு உங்க வீட்டு ஆட்கள் தான் முக்கியம்.. நான்.. நான் இல்ல..” என்றவளின் குரல் உடைய..

“நிறுத்து வல்லி.. என்ன பேச்சு இதெல்லாம்.? தனியா வளர்ந்த எனக்குத்தான் குடும்பத்தோட அருமை தெரியும். என் பிள்ளையும் அப்படி வளர்ந்திடக்கூடாதுனு நினைக்கிறேன். அதே நேரம் அவங்க யாரோ இல்ல, என்னோட சிஸ்டர்ஸ் அவங்களை எப்படி நான் தள்ளி வைக்க முடியும். இதெல்லாம் அப்பாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவார்னு உனக்குத் தெரியும். தெரிஞ்சும் நீ பேசினா, நான் என்ன சொல்ல..” என்றவனுக்கு குரலில் சலிப்பு..

ஒவ்வொன்றையும் இவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமா? என்ற ஆற்றாமையும், இயலாமையும் வேறு..

“சரி.. நான் வைக்கிறேன்..” என்றவளுக்கு அடுத்து என்ன பேச என தெரியவில்லை.

அவனுக்காக அவள் தன்னுடைய அனைத்தையும் விட்டு வர, அவனோ அவர்கள் தான் முக்கியம் என்கிறான். அப்படியென்றால் நான் இவனுக்கு இரண்டாம் பட்சம்தானா என மனம் நொடியில் யோசனையை கொடுக்க, அடுத்து அவனிடம் பேச பிடிக்கவில்லை.

“வல்லி.. நான் சொல்றதை கவனமா கேளு.. உன்னை வச்சு இனியும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. வனி பேசுவா.. பேசிட்டு போகட்டும். ஆனா அவ பேசுற மாதிரி எதுவும் நடக்காது.. நடக்கவும் விடமாட்டேன். யாழினி லைஃப்ல அவ விருப்பமில்லாம எதுவும் நடக்காது. என்னை தயவுசெய்து நம்பு. கண்டதையும் போட்டு மனசை குழப்பிக்காம, யோசிக்காம ரெஸ்ட் எடு.. நான் நாளைக்கு வரேன்..” என அவனும் வைத்துவிட, சில நிமிடங்கள் போனையே வெறித்துப் பார்த்தவள், அடுத்து போய் நின்றது வந்தனாவின் அறையில்தான்.

வந்தனாவின் யோசனையான முகம் வல்லிக்கு பயத்தைக் கொடுக்க, “வந்து ஆர் யூ ஆல்ரைட்.. வசந்த் இங்க இருந்து போனது உனக்கு வருத்தமா?” என இதை எப்படி கேட்க என தெரியாமல் பேச்சை ஆரம்பிக்க,

“ம்ச் வல்லி.. வசந்த் என்னோட நல்ல ஃப்ரன்ட். எனக்கு ப்ரபோஸ் பண்ணார், நான் செட்டாகுதுனு சில ரீசன்ஸ் சொன்னேன், அவரும் புரிஞ்சிக்கிட்டார். யூ நோ ஜோன்ஸ் மாதிரி அவரும் எனக்கு நல்ல ஃப்ரண்ட்..” என சற்றே எரிச்சலாக பேச, அப்போதுதான் வல்லிக்கு மூச்சே வந்தது.

“சரிடி.. அப்புறம் ஏன் நீ அமைதியா இருக்க? என்னாச்சு? இன்னும் அந்த பயத்துல இருந்து வெளிய வரலையா?” என்றாள் ஆறுதல் கூறும் குரலில்.

“ம்ம்ம்.. அதுவும் தான்..” என பெருமூச்சு விட்டு, “நீ சொல்லு, என்னாச்சு?” என்றாள் பேச்சை மாற்றி..

“அது..” என ஆரம்பித்து வனிதா பேசியதையும், கர்ணன் பேசியதையும் கூற,

“நீ என்ன ப்ளான் பண்ணிருக்க?” என அவளைப்பற்றித் தெரிந்தவளாக வந்தனா கேட்கவும், தன் திட்டத்தை வல்லபி கூற, 

“மாமா சொல்ற மாதிரி வெய்ட் பண்ணா என்ன வல்லி? ஒருவேளை பெரியவங்க வேற ப்ளான்ல இருக்கலாம்ல..” என வந்தனா தன் மனதில் தோன்றியதை சொல்ல,

“வந்து.. இதை நான் யோசிக்க மாட்டேனா? நாம வெய்ட் பண்ற டைமை அவங்க யூஸ் பண்ணிக்கிட்டா என்ன செய்ய? அந்த மாதிரி நடந்துட்டா யாழி என்ன முடிவு எடுப்பாளோன்னு யோசிக்கவே பயமா இருக்கு.. வீட்டுல அவங்க என்னமோ ப்ளான் பண்ணட்டும் வந்து, நாம இதை முடிச்சிடலாம். அப்போதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..” என்றபடியே தன் பெரிய வயிற்றைத் தடவ,

“ம்ச் நடந்த பிரச்சினையில நாங்க யாருமே குட்டியை யோசிக்கவே இல்ல வல்லி.. சாரி.. சாரி வல்லி. ரொம்ப கஷ்டமா இருந்துச்சா.? மாமாவும் உன்கூட இல்ல. எல்லாம் இந்த வெற்றியால..” என சட்டென வல்லபியின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவளுக்கு, குரல் உடைந்து அழுகை வந்துவிட்டது.

வல்லிக்கும் மனம் ஒருநிலையில் இல்லை. அழுகை வந்தது, அடக்கிக்கொண்டாள். கணவனின் அருகாமை இப்போதே வேண்டும் போல் ஒரு வெறிகூட வந்துவிட்டது. முயன்று அடக்கினாள்.

நடந்து, கடந்து போன பிரச்சினைகளில் தன் கணவனைப் போல இந்த குழந்தையும் எந்த ஒரு மகிழ்வையும் பார்க்காதோ என பலநாள் ஏங்கித் தவித்துப் போயிருக்கிறாள்.

அவர்களுக்கான நேரத்தில் கூட, பிரச்சினைகளைப்பற்றி பேசி அதற்கு ஒரு சண்டை எனத்தான் ஓடியிருக்கிறது. அனைத்திற்கும் ஆரம்பப்புள்ளி அவளிடமிருந்துதான் ஆரம்பிக்கும். அவன் அமைதியாகத்தான் இருப்பான்.  

வெளிநாட்டில் தனியாக இருந்த போது கூட நிம்மதியாக இருந்திருப்பானோ?

இப்போது நானும் இல்லாமல், குழந்தையையும் உணராமல் தனியாக எவ்வளவு கஷ்டப்படுகிறானோ, வருத்தப்படுவானோ.. என எங்கெங்கோ மனம் பயணப்பட்டு

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

போனது அவளையும் மீறி. 

“ம்ச் வந்து.. அதெல்லாம் பாவா பேசாம இருப்பாரா? சண்டை அது வேர டிபார்ட்மென்ட், ரொமான்ஸ் அது வேற டிபார்ட்மென்ட்..” என முயன்று கிண்டலாக பேசி சூழ்நிலையை மாற்ற,

“அதானே.. நீங்கதான் ஆல்ரெடி ஹாஜி கபிள்ஸாச்சே, சைட் கேப்பில சவர்மா சாப்பிடுற ஆளாச்சே.. உங்ககிட்ட ஃபீல் பண்ணி பேசினது என் தப்புதான்..” என சிரித்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். 

அதன் பிறகே வெற்றியிடமும், யாழினியிடமும் மிகவும் பொறுமையாக விசயத்தைச் சொன்னாள் வல்லபி. 

வெற்றி கூட ‘மாமாக்கிட்ட சொல்லலாம் வல்லி..’ என்றதற்கு இப்போ வேண்டாம் என்று வல்லி உறுதியாக சொல்லிவிட, வெற்றியால் மறுக்க முடியவில்லை.

இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து கீழிறங்கியவர்கள், இனியும் மோசமாக திட்டம் தீட்டவும் வாய்ப்பிருப்பது யாழினிக்கும் புரிய, அவளும் சரியென்று விட, இரண்டாம் நாள் மூவரும் ரிஜிஸ்டர் ஆஃபிஸ் முன் நின்றிருந்தனர்.

இங்கு வனிதாவை ராஜலட்சுமியால் சமாளிக்கவே முடியவில்லை. 

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்பதாக இல்லை. கணவனை, இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்ற கவலையோ, வருத்தமோ அவளிடம் தென்படவில்லை.

யாழினியை இப்படி இங்கே கொண்டு வருவது என்பது மட்டும் தான் அவளது எண்ணமாக இருந்தது.

“ம்மா.. என்னோட ஃப்ரண்ட் தாரணி தெரியுமில்ல. அவளோட அண்ணனுக்கு இப்போ பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. உனக்கே தெரியும் நம்மள விட வசதியானவங்கனு. யாழியை அவங்களுக்கு பேசலாம். நான் நடந்த எல்லா பிரச்சினையும் சொல்லிட்டேன். அவங்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையாம். மேரேஜ் முடிஞ்சதும் அவங்க லண்டன் போயிடுவாங்களாம். அப்போ நமக்கும் பிரச்சினை இல்லை. யாழியும் அவனை மறந்துடுவா..” என்று பேசிக்கொண்டே போக, ராஜலட்சுமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“போதும் வனி.. அவ உன்னோட தங்கச்சி. அது உனக்கு நியாபகம் இருக்கா இல்லையா? யாரோ ஒரு பாவப்பட்ட பொண்ணுக்கு கூட அந்த மாதிரி ஒரு தறுதலையைக் கட்டி வைக்க யோசிப்போம். ஆனா நீ நம்ம யாழிக்கு பண்ணலாம்னு சொல்ற, என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம் யோசிக்கிற? நீ யாரை பழிவாங்க நினைக்கிற? கர்ணனையா, இல்ல யாழினியையா?” என ஆத்திரமாக கேட்க,

“ம்மா உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. நான் அப்படியெல்லாம் யோசிப்பேனா? இப்போ அவர் திருந்திட்டாராம். நல்ல பொண்ணா பார்த்துட்டு இருக்காங்க.. சொத்து வெளியில போய்டக்கூடாதுனு தாரணி நினைக்கிறா? நமக்கும் யாழினி ஒரு நல்ல இடத்துல இருக்குறது சந்தோசம் தானே.. உனக்கே தெரியும், தாரணி அவங்க குடும்பம் எல்லாம் நல்ல மாதிரினு..” என்றதும் ராஜலட்சுமிக்கும் மெல்ல மனம் இளகத் தொடங்கியது.

“திருந்திட்டா நல்லது தான் வனி, ஆனா வயசு அதிகமாச்சே. பத்து வயசு வித்தியாசம் வரும்.. அதெப்படி சரியா இருக்கும். அதோட உங்க அப்பாவை, கர்ணனை எல்லாம் சமாளிக்கனும். அப்புறம் யாழினி இங்க இருக்கணும், நாம சொல்றதுக்கு ஒத்துக்கனும்…” என தன் மனமாற்றத்தைக் கூற,

“ம்மா அதுக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன். என்னதான் யாழி கல்யாணம் ஆனாலும், அது முறைப்படியோ, சட்டப்படியோ நடக்கல. முக்கியமா வெளிய தெரியாது. யாழியை எப்படியாவது இங்க வர வச்சிட்டா, அப்புறம் மத்ததெல்லாம் நாம ஈசியா முடிச்சிடலாம்..” என்று கூற அவர்களின் பேச்சை வேதனையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி பாட்டி.

ஆனால் அவர்களிடம் பேசி வீணான ஒரு வாதத்தை ஏற்படுத்த அவர் விரும்பவில்லை. சொக்கலிங்கத்தின் அறையில் போய் அடைந்து கொண்டார்.

அவரைப் போலவே பாண்டியனும் கேட்டுக் கொண்டிருந்தார், கேட்டது மட்டுமில்லாமல் கர்ணனிடமும் சொல்லிவிட்டார்.

இனி கர்ணன் என்ன முடிவெடுப்பானோ? என அவருக்கும் யாழினி வாழ்க்கை குறித்து பயம் உண்டானது.

இத்தனை பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய கர்ணனோ, அர்ஜூன் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போயிருந்தான்.

You may also like

1 comment

M. Sarathi rio September 23, 2026 - 3:02 pm

அர்ஜுன் அப்படி என்ன சொல்லியிருப்பான்…?

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured