Home Antiheroமுத்தமழை – 66

முத்தமழை – 66

வல்லி பிறந்தகம் வந்து இன்றோடு நான்கு நாட்களாகியிருந்தது. நாளை அவளுக்கு மாதாந்திர செக்கப்பிற்கான நாள், ஆனால் எப்போது வேண்டுமானாலும் வலி வரலாம் என மருத்துவர் கூறியிருக்க, இன்று காலையில் இருந்தே ஒரு அசௌகரியம் வல்லபியிடம்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

வல்லியின் நிலை கண்டு பெரியவர்கள் மூவரும் வீட்டிலேயேதான் இருந்தனர். பாட்டியும் சீதாவும் வல்லியை விட்டு அசையவில்லை.

ஆனாலும் அவள் முகம் மிகவும் சோர்ந்து போயிருந்தது. பெண்ணவளின் மனமும் உடலும் கணவனின் அருகாமையை வெகுவாகத் தேடியது.

அன்று ஊரிலிருந்து வந்த பிறகு கணவனிடமிருந்து அழைப்பென்று எதுவும் வரவில்லை. அவள் அழைத்தாலும் எடுப்பதில்லை. 

யாழியிடம் கேட்டாலும், அவளுக்கும் அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

இப்போது போய் பார்க்கலாமா? என்று கூட ஒரு மனம் அறைகூவல் விடுத்தது, உடனே மூளை அடுத்து நடக்கும் விபரீதத்தை உணர்ந்து சட்டென்று தட்டி அதை அடக்கி வைத்தது.

அன்றைக்கு தொடர்ந்து பயணம் செய்தது வேறு கால் நன்றாக வீங்கிப் போயிருக்க, அடுத்த இரண்டு நாட்கள் எழ முடியாத அளவிற்கு சோர்வும் வந்திருக்க, அதற்கே பெரியவர்களிடம் பெரிதாக பாட்டு வாங்கியிருந்தாள். 

இப்போது அங்கு போக வேண்டும் என்றால், தன்னை உண்டில்லை என்றாக்கி விடுவார்கள் என்பது ஒருபக்கம்.

‘இங்கு இருந்து போ’ என்று சொன்ன பிறகு, அவன் அழைக்காமல் அங்கு போவதா என்பது ஒருபக்கம்.

இப்படி கண்டதையும் யோசித்து மனதை வெகுவாக குழப்பி, மனச்சோர்வையும், உடற்சோர்வையும் இழுத்துக்கொண்டாள் இந்த நாட்களில்.

இப்படி யோசனையிலேயே இருந்தவள், கட்டிலில் இருந்து காலை எடுத்து கீழே வைக்கும் நேரம் அடிவயிற்றில் சுளீரென்று ஒரு வலி.

சில நிமிடங்களே ஆனது அந்த வலி மறைய, அதன் பிறகு எதையும் யோசிக்க முடியவில்லை.

நேரத்தைப் பார்த்தால் இரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் இரவு உணவு தயாரிக்க சீதா அடுப்படிக்குச் சென்றிருந்தார்.

குழந்தை இந்த உலகத்தைப் பார்க்கும் நொடியிலிருந்து அவன் கைக்கு வரும் வரை எத்தனை எத்தனை ஆசைகளை அவளிடம் கூறியிருப்பான். அவனின் கற்பனையும், ஆசையும் நிறைவேறாமல் போய்விடுமோ என்று பயம். 

அதெல்லாம் தங்களின் முட்டாள்தனமான கோபத்தினால் இழப்பதா? என்று தோன்ற உடனே அழைத்துவிட்டாள் கணவனுக்கு. 

கர்ணனும் அப்போதுதான் கரூரிலிருந்து கோவை வந்து கொண்டிருந்தான். ஏனோ இனியும் மனைவியைத் தண்டிக்கவோ, அவளை பார்க்காமலோ அவனால் இருக்க முடியாது என புரிய, யாரிடமும் சொல்லாமல் கிளம்பியிருந்தான்.

மனைவியின் அழைப்பைப் பார்த்ததும், இறுகி இருந்த முகம் இளகி புன்னகையை சுமக்க, எடுக்கலாமா? இல்லை நேரில் சென்று அதிர்ச்சி கொடுக்கலாமா? என யோசித்த நேரம் அழைப்பு முடிந்தருந்தது.

திருப்பி அழைக்கலாம் என யோசிக்கும் போதே, மீண்டும் அழைப்பு வர, இப்போது கணவனுக்கு பதற்றம் வந்துவிட்டது.

முதல் ரிங்கிலே எடுத்து “அம்மு..” என்பதற்கும், அவள் “பாவா..” என திணறியக் குரலில் அழைப்பதற்கும் சரியாக இருந்தது..

மனைவியின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவன் “அம்மு.. அம்மு என்னடா..? என்ன செய்யுது..?” என பதட்டமாக கேட்க,

“வ.. வலிக்குது பாவா… ரொம்ப வலிக்குது.. வரீங்களா ப்ளீஸ்..” என வலியைப் பொறுத்துக் கொண்டே திக்கித் திணறி கூற, கர்ணனுக்கு நெஞ்சமெல்லம் வலித்தது.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

“அம்மு.. இங்க பாருடா கண்ணா.. நான் அங்கதான் வந்துட்டு இருக்கேன். இன்னும் ஆஃப்னவர்ல அங்க ரீச் ஆகிடுவேன்.. நீ பயப்படாம, தைரியாம இருக்கனும்.. நான் இப்போ மாமாவுக்கு, கூப்பிடுறேன். நீ கட்டிலை விட்டு இறங்காத கண்ணம்மா. ப்ளீஸ்.” என்று பதறியபடியே, தன்னுடைய மற்றொரு போனில் இருந்து ராமசாமிக்கு அழைத்தான். 

அவர் அப்போது தான் தங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி, மனைவியின் படத்தைப் பார்த்து தன் மனதில் இருந்த பயத்தையெல்லாம் அவரிடம் கொட்டி, இனி நீதான் மகளுக்கு துணையாக இருக்க வேண்டும் என் வேண்டிக்கொண்டு, மகளிடம் வந்து கொண்டிருந்தார்.

மருமகனின் மூலம் விசயம் கேட்டு அவரும் பதறி வர, அதன்பிறகே வீட்டில் இருந்தவர்களுக்கு விபரம் தெரிய, சட்டென அந்த சூழலே மாறியது.

பெண்கள் இருவரும் வல்லபியிடம் வந்துவிட்டனர். பாட்டி அவளி அடிவயிற்றை வருடி “ஆஸ்பத்திரிக்கு போயிடலாம் சீதா.. வயிறு இறங்கிடுச்சு..” என்றதும் வல்லபியின் உடலில் ஒரு நடுக்கம்.

“ஒன்னுமில்ல கண்ணு.. இப்படி பயப்படக்கூடாது..” என்ற சீதாவுக்குமே பயம் தான்.

பாட்டிதான் “சீதா சீரகத் தண்ணி வச்சு வெண்ணையை உருக்கி ஊத்தி குடிக்கிற சூடுல எடுத்துட்டு வா..” என அவரை அனுப்பி,

“ராமு.. பாத்ரூம்ல ஹீட்டர் போட்டு விடு.. பாப்பாவோட சாமானெல்லாம் சீதா ரெடியாதான் வச்சிருக்கா. அதெல்லாம் எடுத்து கார்ல வை..” என அவருக்கு வேலை கொடுத்து அனுப்பி,

“சிவா.. பிள்ளைங்களுக்கு மட்டும் சொல்லு.. மாப்பிள்ளைக்கு இப்போ சொல்ல வேண்டாம். பதட்டத்திலேயே இருப்பார். குழந்தை பிறந்த பிறகு சொல்லிக்கலாம். வல்லி அம்மா வீட்டுக்கும் சொல்லிருப்பா.. அப்புறம் வருத்தப்பட போறாங்க..” என ஆளுக்கொரு வேலை கொடுத்து, அடுத்து செய்ய வேண்டியதை சொல்லி, சூழலைத் தன் கையில் எடுத்தார்..

அதற்குள் வல்லிக்கு வலி அதிகமாக ஆரம்பித்தது. சீதா கசாயம் கொண்டு வர, அதை ஒருவழியாக குடிக்க விட்டு, சுடு தண்ணியில் குளிக்க வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி அவளுக்கு விபூதி இட்டு வெளியில் வரும் நேரம், கர்ணனும் வந்துவிட்டான்.

மனைவியின் வலி தாங்கிய முகம் அவனை கொல்லாமல் கொல்ல, “அம்மு..” என வேகமாக அவளை வந்து தாங்கிக் கொண்டான்.

அத்தனை வலியிலும் அதுவரை ‘வலிக்குது’ என ஒரு வார்த்தை வெளியில் சொல்லாதவள், கணவனைப் பார்த்ததுமே “வலிக்குது பாவா..” என சிறுபிள்ளையாய் உதடு பிதுக்க, உருகித்தான் போனான் கணவன்.

“ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல டா கண்ணா.. இதோ போயிடலாம். என் பேபி, அவ அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்தாம சமத்தா என்கிட்ட வந்துடுவா.. அழக்கூடாது என் தங்கம்ல்ல..” என பேசிப்பேசியே அவளை மெதுவாக நடத்தி காருக்கு அழைத்து வந்திருந்தான்.

பாட்டியும் சீதாவும் சிவகுருவோடு வேறு காரில் முன்னே செல்ல, ராமசாமி காரை எடுக்க மனைவியோடு பின்னிருக்கையில் கர்ணன் அமர்ந்து கொண்டான் கர்ணன்.

கணவன் வரும் வரை  “பாவா.. பாவா..” என்றிருந்தவள், அவன் வந்ததுமே “ப்பா.. ப்பா..” என ராமசாமியைப் பார்த்து “ரொம்ப வலிக்குது ப்பா.. நானும் அம்மா மாதிரி உங்களை விட்டுட்டு போயிடுவேனோன்னு பயமா இருக்குப்பா..” என பயத்தில் அழ ஆரம்பித்தாள்.

“பாப்பா.. என்ன கண்ணு நீ.. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது.. தைரியமா இருக்கனும் கண்ணு.. நீயும் மாப்பிள்ளையும் இன்னும் நாலு பிள்ளைங்க பெத்துக்கனும் கண்ணு. வெறிச்சுனு இருக்குற நம்ம வீடு உன் குழந்தைங்களால கலகலன்னு இருக்கனும் பாப்பா. இப்படியெல்லாம் பேசி என்னையும், மாப்பிள்ளையையும் வீக்காக்கக் கூடாது..” என கண்டிப்பாக கூற, மேலும் அழுதாள்.

இதற்கிடையில் வலியும் அதிகமாக, அவளால் அமரவே முடியவில்லை.

அது கொடுத்த கோபத்தில் “உன்னை யார் என்னை மேரேஜ் பண்ண சொன்னது. ஊர் உலகத்துல உனக்கு பொண்ணே கிடைக்கலயா? இந்த சின்ன வயசுல என்னை எவ்ளோ கொடுமைப்படுத்தி வைக்கிற.. உனக்கெல்லாம் எஸ் சொல்லிருக்கவேக்கூடாது, உனக்கு பாவம் பார்த்தது  என் தப்பு.. இப்போ எனக்குத்தான் எல்லா வலியும்..” என கணவனைக் கடுப்பில் கத்த,

“பாப்பா..” என ராமசாமி அதிர்ச்சியாகி மகளை அதட்ட,

“விடுங்க மாமா.. அவ பயத்துல பேசிட்டு இருக்கா..” என்ற கர்ணனும், மனைவியின் வலித்த இடையை வருடிக் கொண்டே வந்தான்.

“ஏன்.. ஏன் அதட்டுறீங்க..? அவரைத் திட்டிருக்கக்கூடாது.. உங்களைத்தான் திட்டிருக்கனும். பொண்ணு கேட்டா நீங்க உடனே தூக்கிக் கொடுத்துடுவீங்களா? என் பொண்ணுக்கு வயசு கம்மி, உங்க வயசு அதிகம்னு சொல்லி தட்டிக்கழிக்காம.. ம்மா.. வலிக்குது பாவா..” என அழ,

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

ஆண்கள் இருவராலும் அவளை சமாளிக்கவே முடியவில்லை.

“பாப்பா.. இதோ வந்துட்டோம்..” என்ற ராமசாமிக்கு மகளின் வலி, அவருக்கு வலித்தது.

“கண்ணம்மா அப்பா பேசுறது உங்களுக்கு கேட்குதா? நல்லா கவனிங்க குட்டிம்மா. நீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல என்கிட்ட வரப்போறீங்க. அப்பாவோட ஏஞ்சல் என் கைக்கு வரப்போறாங்க.. உங்களை ஒரு ராணி மாதிரி அப்பா வெல்கம் பண்ணப் போறேன்.” என்றதும் தந்தையின் பேச்சில் குழந்தை குதுகலமாகி, தன் பிஞ்சு பாதத்தால் உதைத்து தன் குசியை வெளிப்படுத்த, அதில் மீண்டும் ஒரு பெரிய வலி வர, கர்ணனின் கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் ஒரு அறை விழுந்தது மனைவியாள்.

‘ஏண்டி..’ என பாவமாக முகத்தை வைத்து, மனைவியைப் பார்க்க,

“உன் பொண்ணை இப்பதான் கொஞ்சனுமா? நான் எவ்வளவு வலில வர்ரேன்.. நீ ஜாலியா அவக்கூட வாயடிச்சிட்டு வர.. வாயை மூடிட்டு ஒழுங்கா வா..” என கத்த,

“பாப்பா என்ன இது? ஏன் இப்படி நடந்துக்குற?” என ராமசாமி மகளைக் கடிய முடியாமல், அவரும் பாவமாகா கேட்க,

“மாமா அவளால வலியை டாலரேட் பண்ண முடியல.. அதை எப்படி காட்டன்னு தெரியாம, கோபப்படுறா.. விடுங்க.. நீங்க பார்த்து ஓட்டுங்க..” என்றவன், மனைவியின் இடுப்பை வருடுவதை நிறுத்தவில்லை.

“இப்பவே சொல்லிட்டேன்.. இன்னொரு பிள்ளையெல்லாம் நான் பெத்துக்கமாட்டேன். வேணும்னா நீ பெத்துக்கோ..” என்றதும்,

“சரி சரிடா கண்ணம்மா.. இந்த ஒரு பாப்பாவே போதும். நீ இப்படி அழாத.. நான் இனி பேபி வேணும்னு கேட்கவேமாட்டேன்..” என மனைவிக்கு உடனே பதில் கூற,

“இப்பத்தானே எங்கப்பா நாலு பிள்ளைங்க பெத்துக்கனும் சொன்னார்.. நீ ஒன்னு போதும் சொல்ற.. அப்போ நீயும் உன் அம்மா மாதிரி என் அப்பாவை மதிக்க மாட்டியா?” என அதற்கும் சண்டையிட, கர்ணன் அதற்கு பதில் சொல்லும் முன்னே ஹாஸ்பிடல் வந்துவிட, வந்தனா ஸ்ட்ரெக்சரோடு வாயிலிலேயே காத்திருந்தாள்.

இனி பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று புரிய, இரு ஆண்களும் ‘ஷப்பா..’ என ஆசுவாசமினர்.

கர்ணன் மெதுவாக மனைவியை கைப்பிடித்து இறக்க, அருகில் வந்துவிட்டாள் வந்தனா. அவளையும் அந்த ஸ்ட்ரெச்சரையும் பார்த்த வல்லி “என்ன டீ இதெல்லாம். நான் எப்படி ஸ்ட்ரெச்சர்ல ஏறிப்படுக்க முடியும். ஒரு வீல்சேர் கொண்டு வரச் சொல்லு..” என்று அவளையும் கடுப்பாக்கி “இது கூடத் தெரியாம, எப்படி பிசினஸ் பண்றாளோ தெரியல..” என்று முணுமுணுக்க வந்தனா ஏதோ பேயைப் பார்த்தது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாயை மூடித் தொலை. ஏற்கனவே சவுண்ட் சரோஜா மாதிரி வாயை மூடாம எங்களை வறுத்துட்டு வந்தா, இப்போ உன்னை பொளக்குறா, நீ இப்படியே நின்னா அதுக்கும் ஏதாவது சொல்லப் போறா..” என மனைவிக்கு கேட்காத குரலில் வந்தனாவிற்கு ஹின்ட் கொடுத்தான் கர்ணன்.

அதற்குள் வீல் சேர் வந்துவிட “அப்படி என்னதான் ரெண்டு பேரும் பேசுவீங்களோ.. வாங்க வந்து என்னை உட்கார வைங்க..” என இருவரையும் முறைத்தபடி கூற, 

“மாமா இவ உடம்புக்குள்ள கண்டிப்பா சந்திரமுகி எண்ட்ரி ஆகிருக்கு.. இல்லைன்னா என் வல்லிக்கண்ணு இப்படி பேசுற ஆளே இல்ல..” என அவனிடம் புலம்பியபடியே வல்லியை அமர வைத்தாள் வந்தனா..

மருத்துவமனை முறைகளைக்கூட முடிக்கவில்லை. வல்லபிக்கு இளவரசி பிறந்துவிட்டாள்.

கர்ணன் கூறியதைப் போலவே தன் தாயை அதிக நேரம் வலியில் தவிக்க விடாமல் விரைவாகவே தன் தகப்பனின் கையில் வந்து சேர்ந்தாள் அவனின்  பொக்கிசம்.. தந்தையெனும் பதவி கொடுத்த பூஞ்சிட்டு மகளரசி..

அன்பான மகள் வந்தால், 

அம்பானி நான் ஆகிறேன்..

You may also like

1 comment

M. Sarathi Rio October 1, 2026 - 9:47 am

அட.. இதெல்லாம் பிரசவ நேரத்து சத்தியம்ப்பா, இப்படித்தான் குண்டக்க மண்டக்க இருக்கும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured