Home Love - Family - Romanceமுத்தமழை – 67

முத்தமழை – 67

by Vathani S

முத்தமழை – 67

வந்தனா அழைத்து யாழினிக்கு விவரம் சொன்னதுடன் “உங்க வீட்டுல இப்போ யாருக்கும் சொல்ல வேண்டாம் யாழி, பெரிய மாமாவுக்கும் தான். அப்புறம் பயந்துட்டே இருப்பார். நீயும் கூட மார்னிங் வந்தா போதும், நாங்க மேனேஜ் பண்ணிப்போம்..” என்றதும், 

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - Diwali special, up to 90% off, Sivakasi factory direct Shop Now →

“நோ.. நோ தனா, நான் பாண்டியன் சார் கூட வரேன்..” என வைத்து விட்டாள் யாழினி.

விசயத்தை அவள் பாண்டியனிடம் கூற, அவர் உடனே கர்ணனிடம் கேட்க, கர்ணனும் “அப்பாவை தனியா விட்டுட்டு நீங்க வரவேண்டாம் பாண்டியன். அர்ஜுனை வர சொல்றேன், அவன் கூட யாழியை அனுப்பி விடுங்க..” என்று விட்டான்.

அதே நேரம் யாழினி கிளம்பி வர, அவரிடம் விவரம் சொன்னார் பாண்டியன்.

அவளும் “ஆமாம் சார்.. நான் அர்ஜூன் அண்ணாகூட போய்க்கிறேன்.. வெற்றியும் கிளம்பிட்டேன்னு சொன்னார்.. யேர்லி மார்னிங்க் வந்துடுவேன்னு சொன்னார்..” என தந்தையின் அறையிலிருந்து வெளியில் வந்தபடியே கூற,

யாழினியின் தோற்றம் பார்த்து “இந்த நேரத்துல எங்கடி போற..” என வழக்கம்போல வனிதா தொண்டையை திறக்க 

“உன்கிட்ட சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. என் விஷயத்துல தலையிடுற ரைட்ஸ் உனக்கு கிடையாது ரைட். இந்த வீட்டில உனக்கு என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை எனக்கும் இருக்கு. பெரிய ராணி மாதிரி இங்க உட்கார்ந்துட்டு எல்லாரையும் அதட்டி உருட்டி ராஜ்ஜியம் பண்ணனும்னு நினைக்காத. என்கிட்ட அது நடக்காது.. என் புருஷன் போலீஸ் தெரியுமில்ல..” என நக்கலாக பேசியபடியே நடக்க, அப்போதுதான் சுந்தரும், சுமித்ராவும் பிள்ளைகளுடன் வீட்டிற்குள் வந்தனர்.

அவர்களைப் பார்த்தாலும், பார்க்காதது போல யாழினி வெளியில் செல்ல, வனிதா அதற்கும் “திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர் பிடிச்சு அலையுறா” எனக் கத்திக் கொண்டிருந்தாள்.

ஹாலில் அமர்ந்த சுந்தரிடம் “என்னாச்சு சுந்தர்.?” என அதே குரலில் வனிதா கேட்க 

“என் வீட்டுக்கு வந்துருக்கேன், அதுக்கு உன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமா?” என அவனும் சட்டென கேட்க, இந்த சத்தத்தில் வெளியில் வந்தார் ராஜலட்சுமி.

“ஏன் சுந்தர் இப்படியெல்லாம் நடந்துக்கிற? அவ இப்ப என்ன கேட்டுட்டா..? உங்களுக்காகத்தானே நான் இவ்வளவு கஷ்டப்படுறேன். நீங்களும் ஒன்னா இல்லாம அடிச்சிக்கிட்டே கிடந்தா எப்படி கண்ணு.? நீங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருந்தாதான் அவனையும், அந்த குடும்பத்தையும் ஓட ஓட விரட்ட முடியும்..” என ராஜலட்சுமி கண்ணீர் வடிக்க, 

“எனக்கும் இப்போ அப்படித்தான் தோணுது அத்த. நமக்குள்ளேயே சண்டை போட்டுக்கிட்டா எப்படி? நாங்க முடிவு பண்ணிட்டோம் அத்தை, இனி நீங்க என்ன சொல்றீங்களோ, அப்படியே கேட்கிறோம்..” என்ற சுமித்ராவை தாயும் மகளும் வித்தியாசமாகப் பார்த்தனர்.

“என்ன திடீர்னு..?” என வழக்கம்போல வனிதா வாயை விட, 

“ஹ்ம்ம்.. உங்க வாழ்க்கை மட்டும் சீரழிஞ்சா பரவால்லன்னு போய்டுவேன்.. உங்களோட சேர்ந்து என் வாழ்க்கையும், என் அண்ணன் வாழ்க்கையும் இல்ல பாழா போகுது.. அதான் திரும்பி வந்துட்டேன்..” என சுமித்ரா வெடுக்கென பேச,

“வாயை மூடிட்டு இரு வனி..” என ராஜலட்சுமி மகளை அதட்டி, “நான் என்ன செஞ்சாலும் அது உங்க மூனு பேருக்காக மட்டும் தான் சுந்தர். அதை மனசுல வச்சிட்டு ரெண்டு பேரும் சண்டை போடுங்க..” என்ற ராஜி,

“போ சுந்தர்.. போய் அப்பாவை பாரு. உன்னை பார்த்தாதான் அவருக்கு நிம்மதியே. என்னமோ இன்னைக்கு மட்டும் உன்னையே கேட்டுட்டு இருந்தார்.” என ராஜி கூற, 

‘உண்மையா? நிஜமாவா?’ எனும் பார்வையில் சுந்தர் தாயைப் பார்க்க,

“நிஜமாதாண்டா.. நீ போய் பார்த்துட்டு வா.. இல்ல வா நானும் வரேன்..” என மகனை அழைத்துக்கொண்டு கணவனிடம் சென்றார்.

உண்மையில் சுந்தரைப் பார்த்த பிறகுதான் சொக்கலிங்கத்திற்கு மனமே நிலையானது.

நடந்த பிரச்சினைகளில் மகன் மேல் அத்தனை கோபம் இருக்கிறது, அதிலும் கொலை செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறான் என்ற போது அவன் மீதிருந்த நல்லெண்ணமே சுத்தமாக வடிந்து போயிருந்தது.

ஆனால் ‘போலிஸ் ஸ்டேஷனில் இருந்தான், அடித்தார்கள்’ என்பதையெல்லாம் கேட்ட பிறகு அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

மகனாயிற்றே! அப்படியே விட்டு விட முடியவில்லை. அதனால் தான் பாண்டியனின் மூலமாக மனைவியிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

இப்போது அவனைப் பார்த்ததும் “சுந்தர்..” என தேங்கிய 

விழிகளோடு உளறலாக அழைக்க, சுந்தரும் வேகமாக வந்து பெற்றவரின் கையைப் பிடித்துக்கொண்டான்.

‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று எந்த பேச்சும் இல்லை அவரிடம். சில நிமிடங்கள் அமைதியாக கழிய “அண்ணன் கூட சண்டை போடாத தம்பி.. அவன் உங்களை எல்லாம் ரொம்ப நல்லா பார்த்துப்பான். அவனுக்கு உங்களை விட்டா யார் இருக்கா?” என கலங்கியக் குரலில் கூற,

“இனி அப்படி பண்ணமாட்டேன் ப்பா.. ஏதோ புத்திக்கெட்டு அப்படி நடந்துக்கிட்டேன். இனி எப்பவும் அந்த மாதிரி ஒரு ஈன செயலை செய்யமாட்டேன்..” என்றதும் பெற்றவருக்கு மனம் குளிர்ந்து போனது..

“சரி ப்பா.. சரி ப்பா..” என்ற சொக்கலிங்கம் தூங்கும் வரைக்கும் மகனிடம் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்.

சுந்தரும் தொழில் பற்றி, அதில் கர்ணன் செய்த மாற்றங்களைப்பற்றி என பேசிக் கொண்டுதான் இருந்தான்.

அப்போது மணி பதினொன்றுக்கும் மேல் இருக்கும். அந்த நேரம் ராஜியின் அலைபேசியில் அழைப்பு வந்து கொண்டேயிருக்க, எடுக்காமல் அத்தனை அலட்சியம் காட்டினார்.

“யாரு ம்மா.?” என வனிதா போனை வாங்கிப் பார்க்க ராமசாமியின் தவறிய அழைப்புகள்.

“என்னனு கேளுங்க ம்மா..” என அவருக்கு மட்டும் கேட்கும்படி கூறி, தந்தை கவனிக்கா வண்ணம் சைகையில் ‘வெளியில் வா’ என அழைத்து வந்துவிட்டாள்.

மகளின் பேச்சைக் கேட்டு மீண்டும் அழைப்பு வரவும் எடுத்து “என்ன வேணும் உங்களுக்கு? நாங்கதான் உங்க சங்காத்தாமே வேண்டாம்னு ஒதுங்கி இருக்கோம்ல.. பிறகு எதுக்கு இத்தனை தடவை கூப்பிடுறீங்க..?” என எரிச்சலாக கேட்க,

“அதுங்க சம்மந்தி.. பாப்பாவுக்கு வலி வந்து ஆஸ்பத்திரில சேத்திருக்குங்க.. உங்ககிட்ட சொல்லனுமில்லங்க, அதுக்குதான் கூப்பிட்டேனுங்க..” என தயங்கி தயங்கி கூற,

“உங்க பொண்ணு பிள்ளை பெத்துக்க, எங்களுக்கு எதுக்கு சொல்லனும்.. எனக்கும் சரி, என் பையனுக்கும் சரி இனி கூப்பிடாதீங்க. அவனெல்லாம் வரமாட்டான். அவன்தான் உங்க பொண்ணே வேண்டாம்னு துரத்தி விட்டுட்டானே, பிள்ளையைக் காரணம் காட்டி, மறுபடியும் ஒட்டிக்கலாம்னு நினைக்காதீங்க.. வெட்டினது வெட்டினதுதான், திரும்ப ஒட்டாது..” என நக்கலாக பேச, 

“அது.. அதுவந்துங்க சம்மந்திம்மா.. மாப்பிள்ளை..” என ஏதோ சொல்வதற்குள் ராஜலட்சுமி போனை வைத்துவிட, இங்கு ராமசாமியின் அருகில் இருந்த கர்ணனின் உடல் இரும்பென இறுகிப் போயிருந்தது.

“ம்மா.. அப்போ இந்த யாழி அங்கதான் போயிருக்கா போல.. எவ்ளோ திமிர் பார்த்தியா அவளுக்கு..” என பேசும் போதே

“ம்ச்.. சும்மா இரு வனி, கத்தி உங்க அப்பாவுக்கு காட்டிக் கொடுத்துடாதே, நம்ம மூலமா அவருக்குத் தெரிய வேண்டாம். இப்போதான் உங்கப்பா உன் அண்ணன் கூட கொஞ்சம் ஒட்டி வரார். இதைக்கேட்டா மறூபடியும் அப்படியே கர்ணன் பைத்தியம் பிடிச்சிக்கும். அந்த யாழினி பைத்தியக்காரியே வந்து சொல்லட்டும்.” என்றவர் சுமித்ராவிடமும், சுந்தரிடமும் அப்போதே விசயத்தைச் சொல்லியிருந்தார்.

இங்கு மருத்துவமனையில் ராஜலட்சுமியின் பேச்சைக் கேட்ட கர்ணனுக்கு சில நொடி மட்டுமே அந்த வருத்தம் இருந்தது.

பின் சட்டென தன் இயல்பிற்கு வந்துவிட்டான்.

மனைவி உள்ளே வலியில் துடிக்க, இங்கு கணவனின் இதயம் தாறுமாறாக துடித்தது.

அவளுக்கு அதிகம் வலியைக் கொடுக்காமல் தன் மகள் இப்பூவிலகிற்கு வந்து விட வேண்டும் என கடவுளிடம் வேண்டுதல் வைத்தான்.

🪔 Exclusive Diwali Offer for Vaigai Tamil Novels Readers
AVS Crackers - up to 90% off, factory direct from Sivakasi Shop Now →

இன்றைக்கு மருத்துவத்துறை எத்தனையோ அறிவியல் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், இந்த குழந்தை பிறப்பு மட்டும் அதிசயம் தான்.

இதோ தனக்காக, தன்னுடைய ஆசைக்காக, அவளின் அத்தனை ஆசைகளையும் துறந்து, தனக்காக மட்டுமே குழந்தையை சுமந்து, உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் தன்னவளின் மீது காதல் பெருநதி வெள்ளமென பாய்ந்து ஓடியது..

பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, கர்ணனும் வந்தனாவும் மட்டும் நடந்து கொண்டே இருந்தனர்.

“ஏய் லூசு இப்போ நீ எதுக்கு இவ்ளோ பதட்டத்தோட புலம்பிட்டே நடக்குற..?” என கர்ணன் வந்தனாவைத் திட்ட,

“ம்ச் மாமா.. நான் ஸ்லோகம் சொல்லிட்டு இருக்கேன், டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என அவனை முறைத்துக்கொண்டே மீண்டும் முணுமுணுத்தபடி நடக்க ஆரம்பித்தாள்.

அதில் கர்ணனுக்கு சிரிப்பு வர அதே நேரம் உள்ளிருந்து அவனின் பெண்ணரசியின்  அழுகை குரல் சங்கீதமாய் ஒலிக்க, அப்படியே இருவரும் நடையை நிறுத்தி ஆவலாக அந்த அறைக் கதவிடம் ஓடினர்.

“ஹேய்.. மாமா பாப்பா வந்தாச்சு..” என கத்தி, குதித்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்த, கர்ணனின் முகம் மின்ன, கண்கள் கண்ணீரில் பளபளத்தது.

கதவைத் திறந்து அந்த செவிலிப்பெண் வெளியில் வந்து “மகாலட்சுமி சார்.. வரமகாலட்சுமின்னு உங்க வைஃப் சொல்லச் சொன்னாங்க..” என சிரித்தபடியே சொல்லிச் செல்ல, கர்ணனின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் வலிந்து கன்னங்களை நனைத்தது.

“மாமா இவளே என் பேபி கேர்ளுக்கு பேர் வச்சிட்டா.. நான் நிறைய கூகிள் பண்ணி தேடி வச்சிருக்கேன்.. அதுல ஒன்னுதான் வைக்கனும்..” என வழக்கம்போல வந்தனா சண்டைக்கு கிளம்ப, அதை காதில் வாங்கத்தான் அங்கு யாரும் இல்லை.

அனைவரும் மாறி மாறி வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டிருந்த நேரம், குழந்தையைத் துடைத்து, ஒரு அழகான ரோஜா வண்ண துணியில் எடுத்து வந்து, கர்ணனிடம் கொடுத்தார் அந்த செவிலிப்பெண்.

“எனக்கு.. எனக்கு எப்படி பிடிக்கனும் தெரியாது..” என குழந்தையைப் பிடிக்கும் வாகில் கையை நீட்ட,

“உங்க பொண்ணை நீங்க தான் முதல்ல தூக்கனுமாம்.. இதுவும் உங்க வைஃப் சொன்னாங்க..” என சிரித்தபடியே சொல்லிச் செல்ல, மனைவியின் காதல் அவனை மலைக்க வைத்தது.. வியக்க வைத்தது.

‘என்ன செஞ்சிட்டேன் இவளுக்காக? என்னை மட்டுமே யோசிக்கிறா, எனக்காக மட்டுமே எல்லாரையும் சகிச்சிக்கிறா, இத்தனை பிரச்சினையிலும் என்னை மட்டுமே தேடுறா.. அப்படிப்பட்டவளுக்கு இனி எந்த பிரச்சினையும் நெருங்காமல் நிம்மதியா, சந்தோசமா இந்த வாழ்க்கையை வாழ விடனும்..’ என மனதுக்குள் உறுதியே எடுத்துக் கொண்டான்.

அதற்கு முதற்கட்டமான யோசனைகளை மூளை யோசிக்கப் போக, கையிலிருந்த மகள் ‘முதலில் என்னைப் பார்’ என்பது போல் காலை ஆட்ட, அதில் தன்னுணர்வு வந்தான் மகளைப் பெற்ற மகராசன்.

தன் இளவரசியை கையில் வாங்கிய நொடி, கர்ணனின் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது.

ஆனந்தத்தில் விழிகள் கலங்கி வழியத் தொடங்கியது. அருகில் இருந்த வந்தனாவிற்கும் அதே நிலைதான். மெல்ல அந்த பிஞ்சின் கன்னங்களைத் தன் விரலால் வருட, அந்த பஞ்சு போன்ற கன்னங்கல் ஆப்பிளாய் சிவந்து போனது.

“அச்சோ பேபி கேர்ள்..” என வியந்து கூறியவளின் முகமெல்லாம் அத்தனை பெரிய புன்னகை.

“ஹேய் வாவ்… பேபி வந்தாச்சா?” என ஆனந்த அதிர்ச்சியோடு ஓடி வந்த யாழினிக்குப் பின்னே நடந்து வந்த அர்ஜுனைக் கண்டதும், வந்தனாவின் மலர்ந்த முகம், பியூஸ் போனது போல் இருண்டு போனது.

You may also like

1 comment

M. Sarathi Rio October 1, 2026 - 9:28 pm

ம்க்கூம்…இப்ப வரைக்கும் திருந்தலை, திருத்தவும் முடியலை..
இனிமே மட்டும் என்ன செஞ்சு அவங்க வீட்டு ஆளுங்களை திருத்தப்போறான்…? இனிமே தனிக்குடித்தனம் தான் சரி வரும்.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured