முத்தமழை – 68
அந்த இடமே ஒரு மகாலட்சுமியின் வரவைக் கொண்டாடிக் கொண்டிருக்க, வந்தனாவின் முகம் மட்டும் பேயறைந்தது போல் இருந்தது.
அதை அர்ஜூன் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை. அவளை நிகழ்வுக்கு கொண்டு வரும் பொருட்டு “வந்தனா வாங்க நாம போய் டீ, காபி வாங்கிட்டு வரலாம்..” என அழைக்க, அவனை முறைத்துப் பார்த்தவள், அவனை கண்டுகொள்ளாமல் யாழினியோடு நிற்க, அர்ஜூனுக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.
“சாரி..” என்றவன் நகர்ந்து கர்ணனுக்கு அருகில் நிற்க,
“என்னடா?” என்றான் கர்ணன் புன்னகையாக. கர்ணனின் முகமெல்லாம் மலர்ந்து கிடந்தது. இத்தனை நாளில் கர்ணனிடம் இத்தனை மகிழ்ச்சியை அர்ஜூன் மட்டுமல்ல யாருமே பார்த்ததில்லை.
“அண்ணா.. உங்களை பார்க்கும் போது எவ்ளோ ஹேப்பியா இருக்கு தெரியுமா? இனி எப்பவும் இப்படியே இருங்க.. உங்களை இப்படி பார்த்தா, அண்ணியும் ரொம்ப சந்தோசப்படுவாங்க..” என்றான் புன்னகை முகமாகவே.
“அதெல்லாம் இருக்கட்டும்.. உனக்கென்னாச்சு.? ஏன் சடனா டல்லாகிட்ட?” என்றபடியே வந்தனாவைப் பார்க்க, அவளோ உர்ரென்று தான் யாழினி அருகில் அம்ர்ந்திருந்தாள்.
இன்னும் வல்லியைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. அறைக்கு மாற்றிய பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மருத்துவர் கூற, குடும்பமே அவளுக்காக காத்திருந்தது.
“இல்ல ண்ணா.. அவங்க என்னை தப்பா நினைச்சிட்டாங்க போல. நான் நார்மலாதான் பேசினேன்.. முகத்தை திருப்பிட்டு போயிட்டாங்க..” என்றான் அர்ஜூன் வருத்தமாக.
“இதுக்கேவாடா.. அவ கூடத்தான் உன்னோட லைஃப்ன்னு முடிவான பிறகு, இதெல்லாம் சமாளிக்க பழக வேண்டாமா? யாருக்கும் டவுட் வராம வசந்தை உன் லைஃப்ல இருந்து கிளியர் பண்ண தெரிஞ்சவனுக்கு, இது கஷ்டமா?” என சிரிக்க,
“அண்ணா.. அது சிம்பிள் வொர்க்.. ஆனா இது வேற இல்லையா? ஜஸ்ட் மிஸ்ஸானாலும் தப்பா போயிடுமோன்னு பயமா இருக்கு..” என்றதும், கர்ணன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
“சரி விடு.. நீ அவளைக் கண்டுக்காம இரு.. அவளே உன்னைத் தேடி வந்து வெளுப்பா.. அப்போ இதுதான் சான்ஸ்னு பிடிச்சிக்கோ. சிம்பிள் ஐடியா.. தேவைப்படும் யூஸ் பண்ணிக்கோ..” என்றான் கர்ணன் கிண்டலாக..
“உங்களுக்கு நடந்ததுக்கு காரணம் அண்ணி உங்களை லவ் பண்ணாங்க. ஆனா இங்க அப்படியா? லவ்ன்னு சொன்னாலே நாலு கிலோ மீட்டர் ஓடுற ஆளாச்சே. பட் உங்களுக்கே வொர்க் ஆகும் போது எனக்கு ஆகாதா? ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே..” என்றவனின் பார்வை இப்போது வந்தனாவின் மீது முறைப்பக சென்று விழுந்தது.
‘இந்த குரங்கு இப்போ எதுக்கு என்னைப் பார்த்து முறைக்குது? இவன் செஞ்ச வேலைக்கு நான் தான முறைக்கனும்..’ என குழம்பியபடியே மீண்டும் பார்க்க, இப்போது அவன் பார்வை இவள் பக்கமே இல்லை.
‘அடப்பாவி..’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் அத்தோடு அவனை பார்ப்பதையே விட்டுவிட்டாள்.
பாவம் நம் வந்தனா பற்றி இன்னும் அர்ஜூனுக்குத் தெரியவில்லை.
அப்போது வல்லியை அறைக்கு மாற்றிவிட்டோம் என நர்ஸ் கூற, குழந்தையோடு முதலில் உள்ளே சென்றான் கர்ணன்.
அவனைப் பார்த்ததுமே மையலாக புருவம் உயர்த்த, கணவனோ விழிகள் கலங்க அவளை அனைத்து நெற்றியில் முத்தம் வைத்தான்.
“என்னாச்சு..?” என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளின் உலர்ந்த இதழில், மீண்டும் முத்தம் வைத்தான்.
கணவனின் கண்ணீர் பெண்ணவளின் கன்னம் நனைக்க “என்ன பாவா?” என்றாள் பதறிப்போய்,
“ஹேய்.. ஒன்னுமில்ல அம்மு.. ஹேப்பியா இருக்கேன். இந்த ஹேப்பிய எப்படி எக்ஸ்போஸ் பண்ணனும்னு தெரியல..” என்றான் நெற்றியோடு நெற்றி முட்டி.
“ம்ச்… பாவா.. பாப்பா எப்படி இருக்கா? என்கிட்ட காட்டுங்க.. நான் இன்னும் சரியாவே பார்க்கல..” என அவனின் மனநிலையை மாற்றினாள்.
“ஹான்… இரு.. இரு..” என மகளை அவளின் மார்பில் கிடத்தி “பார்த்தியா என் ராஜாத்தியை.. அப்படியே என் அம்மாதான்.. ரோஜாப்பூ மாதிரி அழகு.. கண்ணு ரெண்டும் அப்படியே என்னை மாதிரி.. ஹ்ம்ம்.” என ரசனையாக மகளை ரசித்துக் கூற,
“அப்போ என்னை மாதிரி இல்லையா என்ன?” என சோகம் போல கூற,
“ம்ச்.. என் ராஜாத்தி என்னை மாதிரி தாண்டி இருப்பாங்க. பொதுவா பொண்ணுங்களுக்கு அவங்க அப்பாவோட ஜீன்தான் அதிகம் இருக்கும்னு படிச்சிருக்கேன். சோ என் பொண்ணு என்னைபோல இருக்கா.. அதுக்கு இப்போ என்னடி..?” என பெருமையாக கூறி மனைவியை வம்பிழுக்க,
“அப்போ என்னை மாதிரி ஒரு பையன் பெத்துக்கலாம்..” என்றதும், கர்ணன் அதிர்ந்து பின் சட்டென சிரித்துவிட, கணவனை முறைத்துப் பார்த்தாள் பெண்.
“இப்போ எதுக்கு இந்த இளிப்பு..” என எரிச்சலாக கேட்க,
“இல்ல… கார்ல வரும் போது நீ பேசினது எல்லாம் ரிவைண்ட் ஆகிடுச்சு. அதான்..” எனச் சிரிக்க, வல்லியின் முகத்தில் அசடு வழிந்தது.
“ஸாரி.. அது வலியில..” என மேலும் அசடு வழியக்கூற
“ஹாஹா.. எனக்கொன்னுமில்லடி.. ஆனா உன் அப்பாதான் பாவம். நம்ம பொண்ணா இப்படி பேசுறதுனு ஷாக் ஆகிட்டார்..” என மேலும் சிரிக்க,
“போங்க நீங்க.” என அவன் கையைப் பிடித்துக் கிள்ளிவிட்டாள்.
அடுத்தடுத்து அனைவரும் வந்து வல்லியைப் பார்த்து செல்ல, ராமசாமி மகளின் கைப்பிடித்து வெகுநேரம் அமர்ந்திருந்தார்.
“ப்பா.. நான் நல்லா இருக்கேன்..” என வல்லபியே அவரை பேசி சமாதானம் செய்திருந்தாள்.
அனைவரும் பார்த்து சென்ற பிறகு மீண்டும் கணவனும் மனைவியும் மட்டும் அந்த அறைக்குள்.
கர்ணனின் முகத்தில் இப்போது சில மாற்றம் தென்பட, “என்னாச்சு பாவா? மாமாக்கிட்ட, அங்க வீட்டுல சொல்லிட்டீங்களா?” என்றாள் யோசனையாக.
“ஹ்ம்ம்.. உனக்கு இங்க மேனேஜ் பண்ணிக்க முடியுமா? நான் போய்ட்டு அப்பாக்கு சொல்லிட்டு முடிஞ்சா கூப்பிட்டு வரேன்..” என்றான்.
“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. நான் இருந்துப்பேன். நீங்க போய்ட்டு வாங்க. நானும் உங்க ராஜாத்தியும் உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்போம்..” என்றாள் புன்னகையோடு.
சட்டென அவளை இறுக்கமாக அனைத்தவன் “தேங்க்ஸ் எல்லாத்துக்கும்..” என்றான் கரகரப்பாக.
“ஹ்ம்ம்.. ஓக்கே.. ஆனா இவ்ளோ இறுக்கமா இப்போ கட்டிக்கக்கூடாது. எனக்கு வலிக்கும்..” என்றாள் அதே புன்னகையுடன்.
அதில் மெல்ல தன் இறுக்கத்தைக் குறைத்து “சாரி..” என்றான் மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு.
“சரி.. நீங்க போய்ட்டு வாங்க. யாழியும் கூப்பிட்டு போங்க. மறுபடியும் அவளை வச்சு ஒரு பிரச்சினை வேண்டாம். இப்போதான் ஸ்ட்ரெஸ்ல இருந்து கொஞ்சமா ரிலீவாகிருக்கா.” என்றாள் கணவனின் கேசம் கோதி..
“ஹ்ம்ம் இன்னும் டூ வீக்ஸ்ல அவ ஆஸ்ட்ரேலியா போய்டுவா.. அவ கூட அப்பாவையும் அனுப்பலாம்னு இருக்கேன். அங்க அவரோட ட்ரீட்மென்ட்க்கு ஆளிஸ் அப்பய்ன்மென்ட் வாங்கிருக்கா.. அப்பாவைப் பார்த்துக்க ஜோண்ஸை கூட அனுப்பனும். அவனுக்கு ஒரு ஃபியூச்சர் வேனுமில்ல.. ஹ்ம்..” என்றான் மனைவி கைப்பிடித்து.
“எல்லாம் ஓக்கே தான்.. ஆனா ஜோன்ஸ் ஏன்? இங்க வந்தனா கூட பிசினஸ் பண்றானே..?” என்றாள் மனைவி யோசனையாக.
“ம்ச் லூசி.. அந்த பைத்தியம் மாதிரி நீயும் யோசிக்காத. அவனுக்கு இருக்குற டேலன்ட்க்கு அவன் படிச்சிருந்தா கண்டிப்பா அவனுக்கு பெரிய ஆப்பர்சுனிடி கிடைச்சிருக்கும், லைக் மைக்ரோ சாஃப்ட், கூகிள் போல கம்பெனிஸ்ல கூட கேம்பஸ் கிடைச்சிருக்கும். அவனை இங்க உட்கார வச்சு பிரியானி போட சொல்றியா? அவன் ஃபியுச்சர், அவனோட ஃபேமிலி பார்க்க வேண்டாமா? அவனோட பேரண்ட்ஸ் அவனைத் தேடி வரனும், வல்லி. நம்மளால அவனோட எதிர்கால கேள்விக்குறியாகிடிச்சு. அதை சரி செய்ய வேண்டியதும் நம்ம பொறுப்பு.. உனக்கு பிராமிஸ் பண்ணிருக்கேன், அவனுக்கு நல்ல ஒரு கேரியர் கொடுப்பேனு..” என்றதும் வல்லியின் முகத்தில் கணவனை நினைத்து அத்தனை பெருமை.
“லவ் யூ பாவா..” என்றாள் கணவனின் சட்டையைப் பிடித்திழுத்து கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டு.
“ஹ்ம்ம்.. ஓக்கே ரெண்டு பேரும் சமத்தா இருங்க.. நான் போய்ட்டு வரேன்..” என இருவருக்கும் முத்தம் வைத்து வெளியில் வர, வெற்றி வந்திருந்தான்.
“டேய் அதுக்குள்ள எப்படிடா வந்த..” என சிரித்தபடியே கேட்க,
“அப்பா சொன்னதுமே ஃப்லைட்ல டிக்கெட்ஸ் செக் பண்ணேன். கிடைச்சது. உடனே கிளம்பிட்டேன்.” என்றவன் யாழினிக்கு அருகில் அமர்ந்துவிட்டான்.
“வெற்றி போய் வல்லியைப் பார்த்துட்டு வா.. உன்னையும் தனாவையும் வீட்டுல விட்டுட்டு நாங்க கரூர் போறோம். அங்க இன்னும் யாருக்கும் தெரியாது. நான் மார்னிங்க் அப்பாவை அழைச்சிட்டு வரேன்..” என்றதும் வெற்றியின் முகம் சுணக்கத்தைக் காட்ட,
“சரி.. நான் அர்ஜூன் கூட கிளம்பறேன். நீ யாழியைக் கொண்டு வந்து விட்டுடு. என்னோட கார் இங்கேயே இருக்கட்டும்.. ஆனா யாழியை சீக்கிரம் கொண்டு வந்து விடனும்..” என அழுத்திச் சொல்லி செல்ல,
“மாம்ஸ். அவங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே, அப்புறமும் ஏன் இந்த நாரதர் வேலை உங்களுக்கு?” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல,
“ம்ச்.. அவ ஆஸ்ட்ரேலியா போறா.. அங்க போய் அவ படிக்க வேண்டாமா?” என சிரித்தபடியே சொல்லிவிட்டு முன்னே செல்ல,
“அதுக்கும் இதுக்கும் என்னாங்கடா சம்மந்தம்?” என தலையில் தட்டிக்கொண்டே, வாய்விட்டு புலம்பியவளின் அருகில் வந்த அர்ஜூன் “ஹ்ம்ம் பேபி எதும் ஃபார்ம் ஆகிடுச்சுன்னா உன் அண்ணன் வேலையெல்லாம் விட்டுட்டு அங்க போய் கூட இருப்பாரா? இல்ல யாழியாலத்தான் நிம்மதியா படிக்க முடியுமா?” என சொல்லிவிட்டு கர்ணன் பின்னே நடக்க, ‘ஹான்..’ என அதிர்ச்சியானவள் ‘பக்கி பரதேசி என்ன சொல்லிட்டு போறான் பாரு, ப்ராடு’ என புலம்பிக்கொண்டே வல்லியின் அருகில் போய் அமர்ந்துகொண்டாள்.
இங்கு வெற்றியின் அருகில் அமர்ந்திருந்த யாழியோ, அவனிடம் தன்னுடைய பயணம் பற்றி கூற, “ஹ்ம்ம் மாமா ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிட்டார் யாழி.. உனக்கு அங்க ஓக்கே தான. உன்னை கட்டாயப்படுத்தி அனுப்பல இல்ல..” என்றான் மென்மையாக.
“ம்ம் அப்படியெல்லாம் எதுவும் இல்ல வெற்றி. அண்ணா ஏதோ யோசிக்கிறாங்க. நானும் அப்பாவும் இங்க இருக்கக்கூடாதுனும் நினைக்கிறாங்க. அங்க நம்ம வீட்டுக்கு நான் வந்து இருந்தாலும் அம்மாவும், வனியும் ஏதாவது பிரச்சினை செய்வாங்களோன்னு பயப்படுறார். அப்புறம் கண்டிப்பா என்னோட ஷேர்ஸ், அப்பாவோட அந்த கார்மென்ட்ஸ் எல்லாமே நான்தான் மேனேஜ் பண்ணனும்னு அண்ணா நினைக்கிறார். அவருக்காகன்னு முதல்ல நினைச்சாலும், அப்புறம் அவர் நம்ம எதிர்காலத்துக்காகவும் தான் இந்த முடிவை எடுத்திருக்கார்ன்னு எனக்குப் புரியுது. அதனால நானும் சரின்னு சொல்லிட்டேன். உங்களுக்கு விருப்பமில்லையா?” என்றாள் யாழினி.
“எனக்கு இவ்ளோ எக்ஸ்ப்ளைன் பண்ண வேண்டிய அவசியமே இல்லடா.. உனக்கு விருப்பமிருந்தா எனக்கும் ஓக்கே தான். நானும் குஜராத் போயிட்டா, இங்க அடிக்கடி வரமுடியாது. சோ இந்த கேப் நமக்கு இருக்கட்டும்..” என அவளைத் தன்னோடு இறுக்க, பெண்ணவளும் கணவனின் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.
1 comment
ஆக மொத்தம், கர்ணன் அவனையும் வல்லியைத் தவிர
மத்த எல்லாரையும் பிரிச்சு வைச்சு கும்மி கொட்றானோன்னுத் தோணுது.
😌😌😌
CRVS (or) CRVS 2797