• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

28. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
செல்வத்தை அனுப்பிவிட்டு,
மீட்டிங்க் ஒன்றில் பங்கேற்றவன், மீட்டிங்க் முடிந்து வெளியே வர மதியம் இரண்டாகியது,.


பசியினால் விதவிதமாக டோனில் வயிறும் வண்டியோட்ட, சாப்பாட்டுகமகு வீட்டிற்கு செல்வோம் என நினைத்தவனுக்கு, கறடவே
காலையிலும் மைலியை காணாதது நினைவில் வர,


'சரி சாப்பிட்டுற சாக்கில அவளையும் பார்த்துவிட்டு வரலாம்.' என நினைத்தவன் காரை வீட்டுப்பக்கம் விட்டான்.

இரண்டு மணியை தாண்டி வந்ததனால், தெய்வானையை தவிர வேறு எவரும் அவன் கண்ணில் படவில்லை.

"வாங்க தம்பி..! சாப்பாட்ட எடுத்து வைக்கவா?" என்றவாறு டைனிங் டேபிள் அருகே சென்று தட்டினை தெய்வானை ஒழுங்கு செய்ய,
ஸ்ரீயும் மறுப்பு சொல்லாமல் கையை கழுவிட்டு அமர்ந்தவன் விழிகள் தேடியது என்னமோ னமலியைத்தான்.

"ஏன்க்கா எல்லாருமே சாப்பிட்டாச்சா? எங்கே யாரையுமே காணல்ல." என்று அவளை காணாது உண்மையை அறிய பேச்சினை கொடுததான்.


"ஆமா தம்பி.....! எல்லாருமே உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணாங்க. அப்புறம் நேரத்துக்கு அம்மாவுக்கு மருந்து கொடுக்கணும்.. உன்களை வேற காணல்ல. ஏதாவது வேலையா இருக்கும். அதனால தான் வரமுடியல்லையோனு நினைச்சு... அரைமணி நேரத்துக்கு முன்னாடி தான் எல்லாரும் சாப்டோம்."

இப்போ தான் அம்மா தூங்க போனாங்க" என விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்த ரங்கசாமி.



"என்ன ஸ்ரீ.... இன்னைக்கு ஒரு புது வெளிநாட்டு கம்பனியோடு மீட்டிங்காமே! டீல் நல்லபடியாவே முடிஞ்சுதா?" என்றவாறு அவன் அருகில் இருந்த இருக்கையில் அர்ந்து கொள்ள.



"ஆமா தாத்தா.... அவங்க எதிர்பார்க்குற தரத்துக்கு ஏற்றது போல இருந்தா சரினாங்க.. மூனு மணிநேரம் மீட்டிங்க். அது தான் லேட்..

ஆமா.... நீங்க இந்த நேரம் எங்க போய் வரீங்க"


"மைலிய அழைச்சிட்டு போய் விட்டுட்டு வந்தேன்" என்றவர், பேச்சு வாக்கில் மேசைில் தாளம் போட,
ரங்கசாமியை குழப்பமாக பார்த்தவன்,



"ஏன் என்னாச்சு..? எங்க விட்டுட்டு வரீங்க?" என்று ரங்கசாமி தெளிவாக சொல்லாததனால்,
'உண்மை யார் மூலமாவது தெரிய வந்து, தன் ஊருக்கே போய் விட்டாளோ..' என நினைத்துக் கேட்க.

"ஏன்டா பதர்ற...? நேற்று விஜயா தான் தெளிவா சொன்னாளே.. மைலிய கம்ப்பியூட்டர் கிளாஸ் சேத்து விடணும்னு...
அங்கே தான் கூட்டிட்டு போய் சேத்து விட்டு வந்தேன்.

தினமும் ரெண்டு மணியில் இருந்து நாலு மணிவரை வகுப்பாம்.. இது கூட நல்லது தான்.
எப்பிடியும் மைலிக்கு இந்த நேரம் வீட்டில வேலையிருக்க போறதில்ல. சும்மா தூங்கி எழுந்துக்குறதுக்கு.... பிரியோசனமா இதையாவது படிக்கட்டுமேன்.

நாளைக்கு இது சின்ன உதவியாவாவது இருக்கும்." என்றவரது பேச்சில்,
போன உயிர் மீண்டதைப்போல் அடிவயிற்றில் இருந்து இருவரும் அறியாது மூச்சினை எடுத்து விட்டவன். அமைதியாக உண்ணத்தொடங்க.

"சரிடா...! நீ சாப்பிட்டு கிளம்பு... எனக்கு உண்ட மயக்கம். நானும் கொஞ்சம் தூங்கணும்." என்றவர் எழுந்து சென்று விட்டார்.


ஸ்ரீக்குத்தான் காலையில் இருந்து அவள் தரிசனம் கிடைக்காதது ஏமாற்றமாகிப்போனது.

கடமைக்கென தெய்வானை போட்டவற்றை உண்டுவிட்டு எழுந்தான்.


அவனுக்கு நன்கு தெரியுமே... தன்னை தவிர்ப்பதற்கான வழி எதுவோ, அவற்றை கண்டுபிடித்து அதன் படியே தான் செய்கிறாள் என்பது.

'அப்படி அவள் தன்னை தவிர்க்க வேண்டிய அவசியம் தான் என்ன? என்னை தவிர்க்கும் அவளவிற்கு என்னையும் ஒரு முக்கிய நபராக பார்கிறாளா?

எவ்வகையில் நான் பாதிப்பை ஏற்படுத்தினேன்.? ஒருவேளை அவள் மனதில் ஏற்பட்ட தடுமாற்றத்தினை மறைப்பதற்குத்தான் என்னை தவிர்க்க நினைக்கிறாளோ?

அப்படி இல்லை என்றால் சாதாரணமாகவே மற்றவர்களோடு நடந்து கொள்வது போல், நடந்து கொள்ளலாமே!

எதற்கு இந்த கண்ணாம் பூச்சியாட்டாம். நான் அவளிடம் தடுமாறியதைப்போல், அவளும் என் எதிரில் தடுமாறுகிறாளோ? அப்படி என்றால் என் நினைவுகள் அவள் உள்ளும் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது என்று தானே அர்த்தம்.' என அவள் மனதை சரியாகக் கணித்தவன்,

'அப்படி என்றால் இந்த காதலை என்னிடம் உணர்த்திருக்கிறாள்.' என நினைத்தவன்.


'அதெப்படி இது காதலாகும்? இரு எதிர் பாலருக்கிடையில் வரும் ஈர்ப்புக்கு பெயர் தான் காதலா?

நானும் தான் பலரிடம் இந்த மாதிரியாக உணர்ந்து, அவர்களுடன் கூடியும் இருக்கிறேன். அதன்பின் அந்த ஈர்ப்பு காணமல் போயும் இருக்கிறது. நிச்சயம் இதற்கு பெயர் காதல் இல்லை. ஏன் காதல் என்ற ஒன்றே இல்லை.


வெறும் இனக்கவர்சியை காதல் என்ற பெயர் சூட்டி, தங்கள் மேகங்களை தீர்த்துக்கொள்கிறார்கள்.
ஒரு முறை அவர்களுடன் கூடிவிட்டால் அந்த ஈர்ப்பு தானாகவே விலகிவிடும்.

அவ்வளவு ஏன்..? இப்போது என்னிடம் தடுமாறும் தாரை கூட அவள் அத்தானை விரும்புகிறாள் தானே!

அப்படி அவன் மேல் உண்மையான காதல் இருக்கும் போது, என்னிடம் எப்படி தடுமாற முடியும்.?


அவன் மேல் உள்ளது பொய்யான காதலா..? இல்லை என்மேல் உண்டான தடுமாற்றம் தான் பொய்யா?

இல்லையே....! நிச்சயம் பொய்யா இருக்காது.

அன்று ஒருவரை ஒருவர் மெய்மறந்த நின்றதும், பின் அவளது தடுமாற்றமும், அதை மறைக்க அருகே இருந்த அறை புகுந்ததும் எதுவுமே பொய் இல்லை.' என தன் அலுவலக அறையில் இருந்து, மைலி தன்னை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடியவனுக்கு கிடைத்த பதில் என்னமோ!

இரு பாலினருக்கிடையே உள்ள இனக்கவர்சியினால் உண்டான ஈர்ப்பு. என்பதே,
பாவம் இதற்குமேல் அவனால் காதல் என்ற பிரிவிற்குள் வரவே முடியவில்லை.


காதல் மேலோ, வாழ்க்கை மேலோ நம்பிக்கை இருந்தால் தானே அதை அவனால் உணரமுடியும்.

நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்து இரண்டு மாதங்கள் ஓடியே போய்விட்டன.


பார்வை பரிமாற்றங்களைத் தவிர, வார்த்தை பரிமாற்றங்கள் இருவருட்குள்ளும் நிகழ்ந்ததே இல்லை.


மைலியும் முடிந்தளவு அவனை தவிர்ப்பதற்கான என்ன வழியோ அதை எல்லாம் செய்து பார்த்து விட்டாள்.


முதலில் அவளுக்கு கம்ப்பியூட்டர் கிளாஸ் போவதற்கு சற்றும் விருப்பமில்லை.
விஜயா இதைபற்றி கூறும்போது பார்க்கலாம்... என்று அலட்ச்சியமாக விட்டுவிட்டாள்.


அவளுக்கு நன்கு தெரியும். இந்தப்படிப்பு அவளுக்கு ஒரு போதும் உதவ போவதில்ல என்று.
ஏனென்றால் தான் வளர்ந்த சூழல் கிராமம் என்றதனால், நிச்சயம் தனியார் வேலைக்கு அனுப்பமாட்டார்கள்.. அதுவும் அவள் அத்தை கண்டிப்பானவர், வீட்டில் இருந்தே தையல், அலங்கார வேலை என்றால் கொஞ்சம் ஒத்துக்கொள்வாள்.


இந்த கை பையினை அக்கிளுக்கு வைத்துச்செல்லும் பெண்களை கண்டாளே எரிந்து விழும் அத்தையின் குணம் நன்கு அறிந்தவள்.

அந்த படிப்பிற்கும் ஆசை கொள்ளவில்லை.
அடுத்து அவள் மனதில் ஓடியது, வேலை செய்ய வந்த இடத்தினில், தன்னால் அவர்களுக்கு தொந்தரவு இருக்க கூடாது. தான் படிப்பென்று சென்று விட்டால், சிரமம் அவர்களுக்குத்தானே! என்று நினைத்து முதலில் அந்த எண்ணமே இல்லாமல் இருந்தவள்,

பின் ஸ்ரீ மதியம் சாப்பாட்டிற்கு வர ஆரம்பித்ததும், தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.

அவனை மதியவேளையில் தவிர்பதற்காகவே அதற்கு சம்மதித்தாள்.

இப்போதெல்லாம் மாதத்தில் தவிர்க்க முடியாத அந்த ஐந்து நாட்களை தவிர, தினமும் காலையில் அதாவது ஸ்ரீ சரியாக வீட்டை விட்டு கிளம்பும் நேரம் அவன் கண்ணில் சிக்காமல், சிவன் கோவிலிற்கு விஜயாவினை அழைத்து சென்று விடுவாள்.



சில சமயங்களில் விஜயா தன்னால் முடியவில்லை நாளை பார்போம் என்று சொன்னால், தான் மாத்திரம் போய் வருகிறேன். எனக்கூறி தனியாகவே கிளம்பி விடுவாள்.

இவளே இப்படி சிந்திக்கும் போது,. ஸ்ரீ எந்தளவிற்கு சிந்திப்பான்..?


அவள் வகுப்பு இரண்டு மணியென்றால் அதற்கு முன்னரே தன் வேலைகளை கிடப்பில் போட்டு விட்டு வந்து விடுபவன், அவளை தன் பார்வையாலேயே திணறடிப்பான்.



காலையில் இவள் கோவில் என்று தன்னிடம் சிக்காமல் ஓடுவதை முறியடிப்பதற்காகவே, தானும் வேளையோடு எழுந்து தயாராகுபவன்,

"நானும் அந்த வழிய தான் போறேன். கோவில்ல நானே இறக்கிட்டு போறேன்." என்று விஜயாவை அழைப்பான்.

"பக்கம் தானே சார்...! உங்களுக்கு ஏன் சிரமம்." என்பாள் விஜயாவை முந்திக்கொண்டு.

பதட்டமாக கூறுபவள் தயக்கம் புரியத்தான் செய்தது. அதற்கு தலையசைத்தாள் அவன் திட்டம் என்னாவது.

"நீ நடப்ப.. அம்மாவால நடக்க முடியுமா...?"


"அம்மாக்குத்தான் வீல் சேர் இருக்கே.. இத்தனை நாள், இதில தானே அழைச்சிட்டு போனேன். இன்னைக்கு என்ன?" என்பாள் அவனுடன் வர ஒத்துழைக்காது.

" என்ன பேசுற நீ? அம்மா என்ன சாமியா? இப்படி வீல்சேரில் ஊர்வலம் கூட்டிட்டு போக.

பார்க்கிரவங்க என்ன நினைப்பாங்க? பேரன் பிஸினஸ் பண்றான். ஒன்னுக்கு இத்தனை காரு வீட்டில இருக்கிறப்போ, பொறுப்பில்லாமல் முடியாதவங்களை இந்த மாதிரி அனுப்பிறேன்னு என்னை தப்பா பேசமாட்டாங்க." என்று கோபமாக கேட்டவன்.


"நீ வேணும்னா நடந்து போ! நான் அம்மாவை கார்ல கூட்டிட்டு வறேன்." என்று ஸ்ரீ எடுத்தெறிந்து மைலியை பேசுவான்.
அதில் மைலி முகம் வாடிப்போக,


"என்ன ஸ்ரீ இது? இப்பிடித்தான் சின்னப்பொண்ணை எடுத்தெறிஞ்சு பேசுவியா?" என்று அவள் முதுகினை வருடி ஆறுதல் படுத்தியவர்,



"அவளை நடத்தி விட்டுட்டு நான் மாத்திரம் காரில் வரணுமா? வாம்மா நாம கார்ல போய்க்கலாம்." என்று அவளை கையை பற்றி காரில் அழைத்து சொன்றார்.




விருப்பமே இல்லை என்றாலும், விஜயாவுக்காக ஏறிக்கொண்டாள்.


அவனுக்குத்தான் தெரியுமே!
எங்கு தட்டினால் என்ன ஆகும் என்று. அதனால் தான் இந்த வீண் வாதம்.


இப்படியே நாட்களும் கழிய, மைலி எங்கு சென்றாலும் அவளை வட்டமிட்டது ஸ்ரீயின் பார்வை.


அவள் என்ன செய்தாலும் அதனை ரசனை மிகுந்த பார்வையால் தீண்டிக்கொண்டே இருப்பான்.
ஆனால் தனக்குள் எழுந்த உணர்வுக்கு காதல் என்ற பெயர் சூட்ட மட்டும் அவனுக்கு இஷ்டமில்லை.


காதலே இல்லை என்பவனிடம் எதை கூறி நம்ப வைத்திட முடியும்.
அப்படி நம்பினால் தான் அவன் சுயம் என்னாவது?


ஆனால் முன்னர் தான் எப்படி இருந்தேன். இப்போது எப்படி இப்படி மாறினேன்.
யாருக்காகவும் மாறாதவன், இன்று இப்படி நாலுபேர் நம்பிக்கையோடு பார்க்கும் பார்வைக்கு யார் காரணம்?


இது வரை பெண்கள் பித்துப்பிடித்து அலைந்தவன். இன்று ஏன் மைலியை தவிர வேறு ஒரு பெண்ணை தன்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. என்று சற்று ஆழமாக சிந்தித்திருந்தால், அதற்கான அர்த்தம் புரிந்து,

பின் நாளில் தனக்கும் அவளுக்கும் ஏற்படவிருக்கும் பிரிவினை தடுத்திருக்கலாமோ என்னவோ!.

ஆனால் இவர்களின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தினை இரு ஜோடிக்கண்கள் எப்போதுமே ஆராய்ந்தவாறே இருந்தது.

தினமும் உணவுண்ணும் சமயம், சாப்பாட்டை முழுங்காமல், மைலியையே முழுங்குவது போல் ஸ்ரீ பார்ப்பதும், அவனது பார்வையில் தடுமாறி, மைலி திணறுவதும், முன்னர் இருந்த ஸ்ரீக்கும், மைலி வந்த பின் இருக்கும் ஸ்ரீக்கும் ஆயிரம் வேற்றுமைகள்.



அவன் தான் இவன் என்று சத்தியம் செய்து சொன்னால் நம்ப முடியாது இருந்தான்
இப்போது இருக்கும் ஸ்ரீ. அந்தளவிற்கு மாறியிருந்தான்.


அதற்கு காரணம் யார் என்பது இப்போது அவர்களுக்கு புரிந்தது.


ஆனால் அவர்களும் இவற்றை கண்டு கொள்ளாது, இது எதுவரை போகிறது என்று விட்டு விட்டார்கள்.


அன்று இரவு வேளைப்பழு அதிகமானதால், தாமதமாகத்தான் வீட்டிற்கு வந்தான்.

அதுவும் தன்னால் வேளையோடு வரமுடியவில்லை. என்று வீட்டிற்கு தகவல் கூறியதன் பின்னர் தான், தன் வேலையையே கவனித்தான்.

அனைவருமே தூங்கியாயிற்று, மைலிக்குத்தான் தூக்கம் உன்னை நான் தழுவிக்கொள்வேனா? என மல்லுக்கட்டியது.



எப்படியும் தூக்கம் வரப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்தவள்,

'வெளியே போய் காற்று வாங்கலாமா?' என நினைத்தவளுக்கு, முதல் நாள் நினைவில் வர,


'வேண்டாம்.... அதக்கு இங்கேயே இருந்திடலாம்' என்று அறையினுள்ளே நடை பழகியவள்,
தோட்டத்தில் நின்றால் தானே ஸ்ரீ கண்ணில் படவேண்டியது வரும்..


'மொட்டை மாடிக்கு போவோம். இந்த நேரத்தில அவன் ஏன் அங்க வரப்போறான்..?' என இன்றைய தேயாத நிலவை பார்க்கும் சந்தோஷத்தை நினைத்து சிலிர்த்தவள்,

பின்புறமிருந்த படிகளால் வேகமாக ஏறி மொட்டை மாடியை அடைந்தாள்.



தாவும்......
 
Top