• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இலக்கணம் பிழையானதோ ..22

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
58
28
Karur
அத்தியாயம் ..22


அன்றைய விடியல் நிஷாந்தனுக்குப் புத்துணர்ச்சியாக இருந்தது .. தாய்மடி கிடைக்காதவனுக்கு, தன்னருகில் தனக்கென ஒருத்தி படுத்திருப்பதே பேரன்பு நிலையை மனம் கொண்டாட அதுவே திருப்தியாகவும் இருந்தது.


பணம் இருந்தால் எல்லாம் வாங்கிவிடலாம் என்று நினைத்து ஆடுபவர்களின் மத்தியில் அன்பிற்காக ஏங்கும் வளர்ந்த குழந்தையின் உள்ளத்தை அறியாமல் நிச்சிரந்தையாக உறங்கிக் கொண்டிதருந்தவளைக் கொஞ்சம் நேரம் அவளின் மதிமுகத்தைப் பார்த்தபடியே சில பல கணங்கள் கடக்க, அதற்கு மேல் முடியாமல் அவனின் அலைபேசியின் அழைப்பு மணியின் ஒலியில் எங்கே மணையாளின் உறக்கம் கலைந்து விடுமோ என்று வேகமாகப் போனை எடுத்து ஆன் பண்ணிக் கொண்டு பால்கனிக்குப் போன நிஷாந்தனுக்கு அன்றைய நாளுக்குரிய மீட்டிங், மற்ற வேலைகளைப் பற்றிய பட்டியலை ஒப்பித்தவர்வரிடம், ''இதையெல்லாம் இன்று கேன்சல் செய்து விடுங்கள்'', என்று கட்டளையிட,



போனின் அந்தப் பக்கம் இருந்தவரோ ''இன்று புது யூனிட்டாக்கான ஏற்பாடுகளைச் சொன்னவர் எதையும் கேன்சல் செய்ய முடியாத நெருக்கடிகளைக் கூறவும்'', அவனால் இன்றும் ஓட வேண்டி இருப்பதை நினைத்தவனுக்கு மனம் ஆயாசமாக இருந்தது.


வெளிநாட்டுக் காரின் முக்கியமான பார்ட்ஸ் தயாரிக்க இயந்திரத்தின் முதல் படி அன்று தொடங்குவதால் கண்டிப்பாக தான் அங்கே இருந்தாக வேண்டிய சூழ்நிலையை உணர்ந்தவன், இத்தனை நாட்கள் ஓடியது உழைத்தது இந்த நாளுக்காக தானே.. வெளிநாட்டு காருக்கான பார்ட்ஸ் நம் நாட்டிலே தயாரிக்க எடுத்த முயற்சியில் இன்று சகஸஸ் ஆகும் நாளாக இருப்பதால் அங்கே தான் இருக்க வேண்டும் எண்ணத்தில் அவசரமாகக் கிளம்ப,


சுகாசினியின் மனமோ உடம்பின் சோர்வோ பல நாட்கள் உறக்கம் மறந்த விழிகளுக்குத் தனக்கான இடம் வந்து சேர்ந்தாற் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.


நிஷாந்தனோ கிளம்பும் வரை விழிக்காமல் இருப்பவளைக் கண்டு எதுவும் பேசாமல் சொல்லாமல் போனால் புது இடத்தில் திணறுவாளா என்ற எண்ணம் உதயமாக அவளைத் தொட்டு எழுப்ப முயன்றவன், அவள் உறங்கும் நிலையை கண்டு ஏனோ மீண்டும் எழுப்பத் தோன்றாமல் அங்கிருந்த டேபிளில் ஒரு பேப்பரில் கிளம்பும் அவசரத்தையும் தன் நேரமின்மையும் எழுதி வைத்து விட்டு.. கீழே சென்றவன் கண்ணம்மாவை அழைத்துச் சுகாசினியை எழுந்தால் கவனித்துக் கொள்ள சொல்லியவன், காரை எடுக்கப் போக…


அப்போது அங்கே ராஜலட்சுமியின் அருகே அமர்ந்திருந்த மகேந்திரன், ''நிஷாந்த்'', என்று கூப்பிடவும்.. நின்று அவரைப் பார்த்தான்..


''நேற்று அந்தப் பெண்ணை அழைத்து வந்தியாமே'',.. என்று கேட்டவரை உற்று நோக்கியவனோ ''எந்தப் பெண்ணை'',.. என்று அழுத்தமாகக் கேட்க,


அவரோ ''அது தான் கிராமத்திலிருந்து அழைத்து வந்தியாமே… முன்னாலே சொல்லணும் உனக்குத் தோனலயா'', என்று மகேந்திரன் கேட்க.. ''அதைவிட நேற்று முக்கியமான மீட்டிங் விட்டுட்டு அவ்வளவு அவசரமாகக் கூட்டிட்டு வரணும் என்ன கட்டாயம்?'', என்று கேட்டவரை கடினமானப் பார்வையோடு நோக்கிய நிஷாந்தன் ..


''அவள் என் மனைவி, இந்த வீட்டு மருமகள், அவளுக்கென்று ஒரு பெயரும் இருக்கு சுகாசினி'', .. என்று சொன்னவனின் கூர்மையான விழிகள் அவரை சுட்டெரித்தது..


தன் மகனின் அழுத்தமான பேச்சில் 'அவளை முதல நீங்களே கூட்டிட்டு வந்திருக்கணும் என்றும் , அதைவிட்டு கூட்டிட்டு வந்தபின் அதைப் பேசவதற்கு என்ன அருகதை இருக்கிறது'? என்ற கேள்வி நிற்க..


ராஜலட்சுமியோ.. ''ஆமாம் ஆமாம் அவ இந்த வீட்டு மருமகள் தான்… பொண்ணு பார்த்து சீர்சனத்தி பேசி நாளு நட்சத்திரம் பார்த்து ஊரை கூட்டி கல்யாணம் பண்ணினோமல அதனால அவ இந்த வீட்டு மருமக தான்'', நக்கலாகப் பேசியவரை முறைத்த நிஷாந்தன், மகேந்திரனை நோக்கி ''இனி இவர்கள் ஒரு வார்த்தை பேசினாலும் மரியாதை இருக்காது'', என்று கடினக் குரலில் கூறியவன் விருட்டென்று கிளம்பிவிட்டான்.


அவனின் கோபம் அவன் ஓட்டும் காரின் சீறலில் தெரிந்தது .. அவனுள் எப்போவும் அடி மனதில் ஆறாத ரணத்தை உருவாக்கிய ராஜலட்சுமியிடம் எந்தவித பேச்சோ எதிர்ப்பார்ப்போ வைத்துக் கொள்ளாதவனுக்குச் சுகாசினியைப் பற்றி ராஜலட்சுமி பேசியதைக் கண்டு கோபம் கனன்றது ..


தனக்காக என்றுமே பேசாதா தந்தை மேல் கோபம் இருந்தாலும் அதை அவ்வளவு எளிதாக வெளிக்காட்டதவன், இன்று தன் மனைவியை பேசும்போது தன்னிலை மாறாமல் அன்று போல இன்றும் அவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் மகேந்திரன் மேல் கோபமும் பச்சாதாபமும் உண்டாக அதை தான் ஓட்டும் வண்டியில் காட்ட மின்னல் வேகத்தில் கார் அவனின் கம்பெனியின் முன் நின்றது..


அதை நினைத்துக் கொண்டே கம்பெனிக்குள் நுழைந்தவன் அவனுடைய வேலை அதனுள் இழுக்க பசி மறந்து வேலையில் மூழ்கியவன் சுகாசினியும் மறந்தது தான் உண்மை …


அவள் எழுந்தாளா, சாப்பிட்டாளா ,புது இடத்தில் என்ன செய்வாள் என்று யோசிக்க மறந்தது அவனுடைய தவறா இல்லை இயல்பாகவே அவனை எவரும் எதற்கும் தேடி இல்லாத காரணத்தால் அவனுக்கு அது பெரிய விடயமாகத் தெரியவில்லை ..


வீட்டில் கட்டிலில் பஞ்சணையில் படுத்து உறங்கியவளோ சரளத்தின் ஸ்கிரீனை மீறி வெளிச்சம் உள்ளே பரவ சட்டென எழுந்தவள் சுற்றுமுற்றும் நோக்க நிஷாந்தன் இருக்கும் அறிகுறியே இல்லாமல் இருக்க, ஏதோ வெற்றிடமும் வெறுமையும் அவளின் மனதில் தாக்கத்தை உருவாக்கியது.


எழுந்தவளோ காலை வேலைகளை முடித்துவிட்டு அப்படியே அறையுனுள்ளே அமர்ந்துவிட்டாள்.. கீழே போகணும், என்ற எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்தவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ பிசைய காலையிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் இருப்பதை நினைத்து அங்கிருந்து வாட்டர் ஜக்கை பார்க்க அதிலும் தண்ணீர் இல்லை ..


அறையை விட்டு வெளியே வராமல் இருந்தவளுக்கு, முதல் நாள் கூட்டி வந்தவனின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் கரை புரள அவன் வரட்டும் இன்னிக்கு என்று அவனுக்காகக் காத்திருந்தாள்..


இடையே கண்ணம்மா இருமுறை வந்து கதவைத் தட்டுவது கேட்டாலும் எழுந்து போய் திறக்காமல் அமைதியாக இருக்க அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாமல் அவரும் கீழே போய்விட்டார்..


ராஜலட்சுமியிடம் இதைச் சொன்னால் இன்னும் எகிறுவார் என்று அவரிடமும் சொல்ல முடியாமல் தவித்த கண்ணம்மாவும் நிஷாந்தனின் வருகையை எதிர்ப்பார்த்து அவரும் காத்திருந்தார்..


உணவிற்குக் கீழே வரவில்லை இல்லை என்றாலும் அறையின் முன்னால் இருக்கும் இடத்தில் அந்தந்த நேரத்தின் உணவை வைத்தாலும் அதை எடுக்கக் கூடக் கதவைத் திறக்காமல் இருப்பவளைக் கண்டவர்க்கு உள்ளத்தில் பயமும் உண்டாகியது…


ஆனால் அதையெல்லாம் சுகாசினி கவனிக்காமல் தன்னை இந்த வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டுச் சென்றவனிடம் மனம் சென்றது..


நேரமும் கழிய இரவு களைத்துப் போய் வந்தவனிடம் கண்ணம்மா ''மேலே இருந்து கீழே இறங்கி வரல தம்பி பாப்பா, நானும் உணவை அங்கே வைத்துவிட்டு வந்தேன் ஆனால் அதைத் தொடக் கூட இல்லை கதவும் திறக்கல'', என்று சொல்ல,


அதில அதிர்ந்தவனோ தன் தலையில் தட்டிக் கொண்டு ஒரு போன் கூடப் பண்ணாத தன்னுடைய மடத்தனத்தை எண்ணி வருந்தியவன், அப்போது தான் அவளின் போன் நம்பர் கூடத் தனக்குத் தெரியாது நினைத்து நொந்தான்…


இவர்கள் பேசுவதைக் கவனித்தபடி அமர்ந்திருந்த ராஜலட்சுமியோ கண்ணம்மாவிடம் ''பெரிய மகாராணி இறங்கி வந்து சாப்பிட மாட்டாளா.. அவளுக்கு நீ சாப்பிட கொண்டுப் போய் கொடுத்திருக்க, அதுவும் எனக்குத் தெரியாமல்'', என்று கத்தத் கண்ணம்மாவோ என்ன சொல்லுவது என்று தெரியாமல் பரிதாபமாக நிஷாந்தனைப் பார்த்தார்..


நிஷாந்தனோ இறுகக் கண்ணை மூடித் திறந்தவனோ ''கண்ணம்மாவிடம் சாப்பாட்டை எடுத்துத் தருமாறு சொல்லிவிட்டு'', ராஜலட்சுமிடம் திரும்பியவன், ''அவள் உங்களை மாதிரி பிள்ளைக்கு அம்மாவாக பார்த்துக்கிறேன் , கவனிச்சுக்கிறேன் வந்து நாடகமாடல .. நீங்க எப்படி மருமகளாக இந்த வீட்டுக்கு வந்தீங்களோ சுகாசினியும் இந்த வீட்டு மருமகளாக நா தாலிக் கட்டிய மனைவியாக வந்திருக்கா.. இனி அனாவசியமாக அவளைப் பேசுவது தெரிந்தது அதன்பின் நடப்பதற்கு நா பொறுப்பில்லை'',.. வார்த்தைகளை கடித்துத் துப்பியவனின் இருந்த கடுமையை கண்டவளுக்கு, இன்னும் கோபம் தலைகேறி ஏதோ சொல்லப் போகும் நேரத்தில் மகேந்திரன் வரவும்,


'' நிஷாந்த் என்று கூப்பிட்டவர்.. ''இன்று வேலை வெற்றியாமே ரொம்ப சந்தோஷம் '',என்று கம்பெனியைப் பற்றி பேசவும் வாயை மூடியபடி அங்கிருந்து நகர்ந்தார் ராஜலட்சுமி.


நிஷாந்தனோ அவர்க்கு 'ம்', என்ற ஒற்றை எழுத்தில் சொன்னவனிடம் கோபமும் அதீதமாக இங்கே இருந்தால் இனி அதிகமாகும் என்பதை உணர்ந்து கண்ணம்மா கொடுத்த உணவோடு மாடியேற,


கீழே ராஜலட்சுமி தன் கணவனிடம் பாய்ந்தாள்.. ''இத்தனை வருசமா தொழில் செய்யிறீங்க.. இப்ப ஆரம்பிச்ச பொடி பையன் வெளிநாட்டில பிசின்ஸ் செய்கிற அளவுக்கு முன்னேறி இருக்கான்.. நீங்க இந்த இத்துப் போன பிசின்ஸ் கட்டிக்கிட்டே கிடங்க .. நாளைக்கு என் மகனுக்கு அவனை விடக் குறைவான சொத்தும் இந்த இத்துப் போன பிசின்ஸ் தான் மிஞ்சும்'', என்று கணவனை சாடினார் ..


அதற்கு எந்தவிதப் பதிலின்றி மகேந்திரன் அவளைப் பார்த்தவர் இவளிடம் பேசி தன்னுடைய பிபியை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாமல் ஆபீஸ் அறைக்குள் சென்று விட்டார்..


பதில் சொல்லாமல் போகும் கணவனைப் பேசியபடி இருந்த ராஜலட்சுமியின் பேச்சை கவனித்தபடி மேலே ஏறியவன் அறையின் கதவைத் தட்ட, உள்ளே இருந்தவளோ இத்தனை களோபரம் கீழே நடந்தது தெரியாமல் கதவைத் திறக்காமல் அமர்ந்திருக்க, ''சுகாசினி கதவைத் திறக்கப் போறீயா இல்லையா'', அதட்டலோடு கணவனின் குரலில் வேகமாகக் கதவைத் திறந்தவளுக்குத் தன் கணவனின் மனநிலை புரியாமல் போய் சோபாவின் மூலையில் அமர்ந்துவிட்டாள்..


தான் வந்ததும் அலட்சியமாக சுகாசினி நடந்து கொள்வதைக் கண்டு காணாமல் ''காலையிலிருந்து ரூம்க்குள்ளே இருந்தியாமே சாப்பிட கூட வரல கண்ணம்மா சொன்னாங்க, இறங்கிப் போய் சாப்பிடட்டு வந்திருக்கலாமலே சுகாசினி, இந்தா நானே உனக்குச் சாப்பாடு எடுத்து வந்திருக்கேன் சாப்பிடு'', என்று சொல்லி அவள் அருகே வைத்தவன், ரெப்பிரஸ்ஸாக குளிலயறைக்குச் சென்று விட…


அவன் கொண்டு வந்த உணவைக் கூடக் கையில் தொடாமல் போய் படுத்துவிட்டாள்..


வெளியே வந்தவன் தன் கொடுத்த உணவு அப்படியே இருக்கவும் ''சுகாசினி'', என்று அழுத்தமாகக் கூப்பிட, அவளோ எதுவும் பேசாமல் இருக்கவும் ''காலையிலிருந்து சாப்பிடாமல் என்ன அடம் இது சின்னப்பிள்ளை மாதிரி.. எழுந்து சாப்பிட்டு போய் படு'', என்று கூற அதற்கும் அவளிடம் பதிலில்லை..

அவளின் மௌனம் அவனைக் கொன்றது..


அதைக் கண்டு கோபம் வந்தாலும் தானும் காலையிலிருந்து எதுவும் உண்ணாமல் வேலை மட்டுமே குறியாக இருந்தவனுக்குப் பசி இருந்தாலும் சுகாசினின் பிடிவாதத்தைப் பார்த்ததும் 'ச்சே', என ஆனது…


இந்தச் சாப்பாடே கையிலெடுத்து உண்ணத் தெரியாத காலத்திலும் பசி என்று வாய் திறந்து பேசத் சொல்ல முடியாத நாட்களிலே இது அவனுக்குப் பழக்கம் தான்… பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் ஒரு வாய் ஊட்டவோ சாப்பிடு என்று அக்கறையாக அருகே இருந்து கொடுக்க ஆளயில்லாமல் தவித்தவனுக்கு ஒரு சிறு எதிர்ப்பார்ப்பு இருந்தது.


இன்று தனக்கான ஒருத்தி வீட்டிலிருக்கிறாள், தனக்காக எதாவது கேட்பாள்.. செய்வாள் என்று, ஆனால் அது நடக்காது என்று உணர்ந்த அவ்வினாடியே மனம் சுக்கு நூறாக உடைந்தது தன் மணையாளின் செயலில் …


ஆனால் இவளை இப்படியே விடக்கூடாது என்ற எண்ணம் தோன்ற அவளிடம் சென்றவன் வலுக்கட்டாயமாக எழுப்பி, தட்டைக் கையில் கொடுத்தவன் ''சாப்பிட்டு முடிச்சிட்டு போய் படு.. அப்பறம் இன்னொரு விசயம்.. நா இருக்கேன், இங்கு இல்லை என்றாலும் நீயே கீழே போய் சாப்பிடு, இல்லையா அறைக்கு வெளியே கண்ணம்மா கொண்டு வந்து தரச் சொன்னால் கொண்டு வந்து தருவாங்க, எடுத்து நேர நேரத்திற்கு மறக்காமல் சாப்பிடு'',.. என்று இறுக்கமான குரலில் சொல்லியவனோ பால்கனியில் போய் நின்று விட்டான்..


தன் கணவனின் செயலில் கோபம் வந்தாலும் பசி வந்தால் மற்றயெல்லாம் மறந்து போகும் நிலையில் மளமளவென்று சாப்பிட்டவள், அவன் சாப்பிட்டனா என்று கேட்கக் கூட இல்லாமல் போய் படுத்துவிட்டாள்…


அவனிடம் ஏன்? இவ்வளவு கோபமும் உதாசீனம் படுத்துக்கிறோம் என்று அவளுக்குப் புரியவில்லையா.. புரிந்துகொள்ள முயற்சியும் செய்யவில்லை அவள்…


அவளின் குணம் இதுவல்லவே .. உரிமைகள் நிறைந்த இடத்தில் தான் கோபமும் எதிர்ப்பார்ப்புகள், தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யணும் என்ற தோன்றும் போல..


ராஜலட்சுமி பேசியதற்காகத் தனக்கென்று அவன் எதுவும் பேசவில்லை என்ற கோபமும் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போனது, கீழே இறங்கிப் போனால் அந்தம்மா இன்னும் எதும் பேசினால் தானும் பேசிட நேரிடும்… கட்டினவனைப் பற்றிய எதும் தெரியாது.. இதில் மற்றவர்களைப் பற்றி எதை அறிந்துகொள்ள முடியும்..


இதையெல்லாம் இப்பச் சொல்லிச் செல்பவன் காலையில் சொல்லாமல் சென்றது இருக்க இருக்க அவளின் மனநிலையை முற்றிலும் மாற்றியது..


பால்கனிக் கதவை மூடிவிட்டு வந்த நிஷாந்த் தன் மனைவி சாப்பிட்டு ஒருக்களித்துப் படுத்து இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டபடி போய் படுத்துவிட்டான்..


அன்று முழுவதும் அலைச்சலில் அவன் உறக்கம் தழுவினாலும், பசியால் அவனால் முழு உறக்கம் கொள்ள முடியாமல் புரண்டு கொண்டே இருந்தான்…


மறுநாள் எழுந்தவன், அவளையும் எழுப்பி ரெப்பிரஸ்ஸாகி கீழே கட்டயாமாக அழைத்து வந்தவன் டைனிங் டேபிளில் அமர அவனுக்கும் அவளுக்கும் உணவை வைத்த கண்ணம்மாவிடம் ''சுகாசினியை கவனித்துக் கொள்ளுங்கள்:', என்ற ஒற்றை வார்த்தையில் முடித்தவன், பசியில் வேக வேகமாக உண்றான். அவனின் அவசரத்தில் புரையேற ''தம்பி பார்த்து'', என்று சொல்லித் தண்ணீரே தர, சுகாசினியோ அவன் தலையில் தட்டினாள் இயல்பான ஒரு செயலாக…


அவனுக்கு அது புதுவிதமாகவும் அவளின் மௌன கோபத்திலும் அவளின் செயலில் தலையில் தட்டிய கரத்தை எடுத்து அழுத்தியவன், போதும் என்று சைகை செய்து விட்டு தண்ணீரைக் குடிக்க,


அங்கே வந்த ராஜலட்சுமியோ ''இது என்ன நடு ஹாலில் உட்கார்ந்து கணவனின் கையை பிடிச்சுக் கொஞ்சிக்கிட்டு.. இங்கே வயசுபுள்ளக இருக்கிற இடம்.. பார்த்து நடந்துக்கோ'', என்று சுகாசினிடம் சொல்ல, அதுவரை அவனின் கைக்குள் இருந்த கரத்தை உருவியவள் சேரை விட்டு வேகமாக எழ..


அவளின் கையை அழுத்தியவன் அங்கேயே அமரச் செய்துவிட்டு ராஜலட்சுமி பார்த்துப் பேசத் தொடங்கும் போது மின்னல் வேகத்தில் ஒரு பெண் ஓடி வந்தவள் ''அண்ணா, அண்ணியை கூட்டிட்டு வந்துட்டாங்களா'', என்றபடி வந்தவள் சுகாசினிடம் நெருங்கி'' ஐ.. நீங்க எவ்வளவு அழகாக இருக்கீங்க''.. என்று சொன்னவள் அவளின் அடர்த்தியான கூந்தலைக் கண்டு ''அச்சசோ எவ்வளவு நீளமாக இருக்கு உங்க முடி'', என்று தொட்டுப் பார்த்தவள், ''உங்க கல்யாணத்துக்கு என்னாலே வர முடியவில்லை .. அம்மா'',.. என்று இழுத்தவள்,


அங்கே இருந்த ராஜலட்சுமியை கண்டு ஜெர்க்காகி.. ''கல்யாணத்து அன்று எனக்கு எக்ஸாம் டைம் அது தான்'', திணறிப் படிக் கூறியவளை கனிவுடன் வாஞ்சையோடு பார்த்தக் கணவனும், லொட லொட பேசும் பெண்ணையும் பார்த்து எதுவும் பேசாமல் சுகாசினி இருக்க..


''சுகாசினி இது தன்விகா என் தங்கை.... காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற'', என்று அறிமுகப் படுத்தினான்..


அவனுக்கு ''அண்ணு'', என்று கூப்பிட்டுச் சிறு வயதில் தத்தி நடந்த வந்து அவனைத் தொட்டு தூக்குமாறு கைகளை உயர்த்தி அவனிடம் வந்தால் எப்பவும் அவள் மேல் பாசம் உண்டு அதற்கு முட்டுக்கட்டை போடும் தாயை மீறி அண்ணாவிடம் உறவாடும் ஒரே ஜீவன் அந்த வீட்டில் தன்விகா மட்டுமே.

இப்பத் தன் அண்ணியுடன் பார்த்தவுடனே வேகமாகப் பேசியவள் அங்கே தன் தாயைப் பார்த்ததும் கண்டும் காணாமல் சுகாசினின் கைகளை பிடித்துக் கொண்டாள்…


ராஜலட்சுமி இதைக் கண்டு முறைத்தவர் ''முதல கிளம்புடி காலேஜ்க்கு லேட்டாச்சு'',… என்று விரட்டவும் அண்ணாவிடம் சுகாசினிடம் ஜாடை காட்டிச் சொல்லிவிட்டு சிரித்தபடி கிளம்பிவிட்டாள்..


அவள் போவதைப் பார்த்த நிஷாந்த்.. ராஜலட்சுமியை பார்த்து ''இப்படியே அண்ணா என்று வரும் பெண்ணை ஒட்டவிடாமல் பண்ணறீங்க.. ஆனாலும் தன்விகா என் கூடப் பிறக்கல என்றாலும் அவள் என் தங்கை தான்'',என்று அழுத்தமாக உரைத்தவன்,


சுகாசினிடம் திரும்பி ''நீ அறைக்குள் இருக்கணும் அவசியமில்லை கீழே வந்து உனக்கு என்ன தேவையோ அதை சுதந்திரமாக செய்யலாம் பண்ணலாம்.. இதுக்கு அடுத்தவர்களுடை பர்மிஷன் தேவையில்லை உனக்கு'', என்று சொல்லியவன், மௌனமாகவே இருப்பவளிடம் அதன்பின் பேச ஒன்றுமில்லை என்று நினைத்து கம்பெனிக்குக் கிளம்ப ,


போகிற கணவனைப் பார்த்தபடியே நின்றாள் சுகாசினி ….தனக்காக நேற்று ஒரு வார்த்தை ராஜலட்சுமியை பார்த்துக் கேட்காதவன் தங்கை என்று வந்ததும் கேட்பதைக் கண்டு மனம் துணுக்குற்றது ..


காலையில் அவளுக்காக அவன் மகேந்திரனிடமும் ராஜலட்சுமியிடமும் பேசினான்.. ஆனால் அதை அவளிடம் சொல்லவும் இல்லை.. சொன்னால் கேட்கக் கூடிய நிலையில் தானும் இல்லை என்பதை சுகாசினி அறியவில்லை ..


நாட்களோ விரைய அந்த மழை நாள்
வரும்வரை .. அதன்பின் வாழ்க்கை அவளை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டது எதுவோ..அது காலத்தின் சூத்திரதாரியாக இருந்த காலத் தச்சனின் வேலையாக இருக்குமோ..அதனால் விளைந்தது இருவருக்கும் வாழ்க்கையில் கிடைத்தது வரமா, சாபமா...

தொடரும்..

ஹாய் மக்கா கதையின் அடுத்தபகுதி போட்டுவிட்டேன் படித்துப் பாருங்கள் .. 😍 😍
20221216_155104.jpg
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
58
28
Karur
Rajalaxmi naakku naakkaa illa kodukka
அதே டா கொடுக்கு.. சில நாக்குகள் இப்படி தான் வரம்பு மீறி பேசிக் கொண்ட இருக்கும் ..நன்றி மா