• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 20

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 20

"நம்பிக்கை துரோகி! வெட்கமா இல்ல உனக்கு? உன்னை போய் இவ்வளவு நாள் நம்பினோம் இல்ல.. எங்களை சொல்லணும்" பிரேம் கூற, அருகில் கண்களில் கணலுடன் நின்றிருந்தான் கவின் கூடவே ஸ்ரீ மதியும்.

"லுக் பிரேம்! அவங்கவங்க உழைப்புக்கு அவங்கவங்களுக்கு பலன் கிடைக்க போகுது.. இதுல நான் எப்படி நம்பிக்கை துரோகி ஆக முடியும்?" நிரஞ்சன் கேட்க,

"அப்ப நீ பண்ணினது தப்பே இல்லைன்ற இல்ல?" என்றான் கவின்.

"இதுல தப்பென்ன டா இருக்கு? எங்கப்பா தான் ஆசையா வாங்கிக் குடுத்தாங்க.. அதை எப்படி என்னால மறுக்க முடியும்?" நிரஞ்சன் கூறியதைக் கேட்டப்படியே அங்கே வந்திருந்தான் செழியன்.

செழியன் ரெஸ்டாரண்ட் உள்ளே அவர்கள் அலுவலக அறையில் தான் நின்று பேசிக் கொண்டு நின்றிருந்தனர் நால்வரும்.

"செழியா! அவன் புத்திய காட்டிட்டான் டா.. ஆப்போசிட்ல பெரிய ஹோட்டல் ஒன்னு வார போகுதுன்னு சொன்னாங்களே அது இவனோடது தானாம்" பிரேம் செழியனிடம் கூற,

"இப்ப தான் செழியனுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னேன் டா" என பிரேமிடம் கவின் கூறினான்.

"உனக்கு கால் பண்ணி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. ஏன் டா இவ்வளவு லேட்? இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது டா" கவின் கூற,

"சரி விடு! ஏன் டென்ஷன் ஆகுற?" கவினைக் கூறிய செழியன்,

"நீ கிளம்பு நிரஞ்சன்.. நாளைக்கே டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணி அனுப்புறேன்.. சைன் பண்ணி கொடு" என்றவன் அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர, புரியாமல் அனைவரும் பார்க்க, அவனிடம் அதிர்ச்சி இல்லை என்பதைத் தொடர்ந்து அவன் கூறியதில் இன்னும் அதிர்ந்தான் நிரஞ்சன்.

"என்ன டா சொல்ற? நீயும் அவங்க சொல்றதை நம்புறியா?" நிரஞ்சன் கேட்க,

"இல்லைனு சொல்ல போறியா என்ன?" என நக்கலாய் கேட்டான் செழியன்.

"என் அப்பா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல டா.. அவரோட பிளான் தான் அங்க ஹோட்டல் கட்டணும்ன்றது.. அதுக்காக இங்க பார்ட்னர்ஷிப்ல இருந்து நான் ஏன் விலகணும்?" புரியாதது போலவும் தெரியாதது போலவும் அழகாய் நிரஞ்சன் நடித்தாலும், அவனுக்கு முன் இருப்பது செழியன்..

அப்பாவின் உழைப்பை விடுத்து சொந்தக்காலில் வேருண்ற முயன்று ஒரு கால் வைத்து, அதில் தடம் பதிக்க சில வருடங்கள் எடுத்து என கொஞ்சம் கொஞ்சமாய் முன்னுக்கு வந்தது தான் செழியனின் இந்த இடம்.

"ஓஹ்! ஒரு வருஷம் முன்னாடி இந்த இடத்தை உன் பேர்ல வாங்க ரிஜிஸ்டர் ஆபீஸ் போகும் போதும் கூட இந்த இடத்தை தான் வாங்க போறீங்கனு உனக்கு தெரியாது இல்ல நிரஞ்சன்?" என்ற செழியனின் செய்தியில் ஒரு வருடம் முன்பேவா? என நண்பர்கள் அதிர்ச்சி அடைய, இவனுக்கு எப்படி தெரியும் என தடுமாறினான் நிரஞ்சன்.

"ஹோட்டல் ஒர்க் முடியுற ஸ்டேஜ் வரை வந்திடுச்சு.. இப்ப தான் உன் அப்பா உன்கிட்ட சொன்னாங்களா? சர்ப்ரைஸ்ஸா?" என்று கேட்க பதில் கூற முடியவில்லை நிரஞ்சனால்.

"நம்ம மாஸ்டர் செல்வம் அங்கிள் இருக்காரு இல்ல? அவருகிட்ட நான் சொல்ற இடத்துக்கு வேலைக்கு வர்றிங்களா சம்பளம் கூட தர்றேன் வர்றிங்களானு கேட்ருக்கான்.. அங்கிள் என்கிட்ட இதை சொல்லி ஒரு ரெண்டு மாசம் இருக்கும்.. நான் கூட வேற எங்கேயோ அவருக்கு வேலை பார்த்து வச்சு அவர் குடும்பத்துக்காக பன்றானோனு நினச்சேன்" என்றவன் குரலில் இன்னும் நக்கலும் கிண்டலும் மட்டுமே!.

"அது.. அது வந்து.. செல்வம் நல்லா சமைப்பாரு... அதான் நான்.." அவன் தடுமாற,

"ஓஹ்! அதான் அங்கிளை அப்பவே புக் பண்ணி இருக்கான்.. ஆனா அப்ப கூட எங்ககிட்ட சொல்லணும்னு தோணல இல்ல?" என்று கவின் கேட்க,

"நீ சொன்னதும் இதை கொஞ்சம் டீடெயிலா விசாரிச்சேன் டா.. அதான் வர லேட் ஆகிடுச்சு.." என்றான் செழியன்.

"அங்க ஹோட்டல் வர்றதை நீ முதல்லயே சொல்லி இருந்தா உன்னை கைக்குடுத்து வாழ்த்துறது முதல்ல இவங்களா தான் இருக்கும்.. ஆனா உன் மனசு சுத்தம் இல்ல நிரஞ்சன்.. நீ இங்கே உன் அப்பா காசுல எவ்வளவு பெரிய ஹோட்டல் வேணா கட்டிக்கலாம்.. அதனால இங்க லாஸ் ஆகும்னு நினைச்சன்னா யூ ஆர் தி ஃபூல்" என்றான் பிரேம்.

"பிரேம்! எதுக்கு ஆர்க்யூ பண்ணிட்டு? விடு! நீ கிளம்பு நிரஞ்சன்.. முதல்லேயே எங்களுக்கு ஒரு டவுட் உன் மேல இருந்துச்சு.. உனக்கு எங்களோட பார்ட்னர்ஷிப் வச்சுக்க ஆசை எல்லாம் இல்ல.. தெரிஞ்சும் நாங்க சேர்த்தது ஒருவேளை உனக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இருக்குமோன்னு தான்.. ஆனா உனக்கு ஃபுல் அண்ட் ஃபுல் ஜிலஸ் அண்ட் ஈகோ தான்.. ஓகே உனக்கு வழில நீ போ.. ஆனா எங்களுக்கு நீ தேவை இல்ல.. நீ எப்ப என்ன செய்வியோன்னு உன் பின்னாடி அலைய முடியாது.. உன்னோட டாலேண்ட் வச்சு எவ்வளவு முன்னேற முடியுமோ.. யூவர் விஷ்.. பட் அடுத்தவனுக்காக எதையும் பண்ணாத.. இது கூட பிரண்ட்லி அட்வைஸ் தான்.. நோட்டீஸ் வரும்.. பை" என்றவன் நண்பர்கள் புறமாய் திரும்பிவிட,

நிரஞ்சன் மூவரையும் ஒரு பார்வை பார்த்தவன் ஸ்ரீயைப் பார்க்க, முகம் சுழித்தவள் திரும்பிக் கொண்டாள். வேகமாய் அங்கிருந்து அவமானப்பட்டு நடந்து சென்றுவிட்டான் செழியன்.

"என்ன டா இவ்ளோ சீப்பா இருக்கான்?" பிரேம் கேட்க,

"அவனை விடு.. லைஃப்னா என்னனு அவனுக்கு இன்னும் தெரில.. தெரியும் போது எல்லாம் புரியும்" என்றான் செழியன்.

"மலர் என்ன பண்றா செழியா?" ஸ்ரீ கேட்க,

"அவளை வீட்ல விட்டுட்டு தான் டா வந்தேன்.." என்றவன் அப்போது தான் ஹனிமூன் சென்று திரும்பி இருந்தான்.

"லீவ் எப்படி போச்சு டா?" பிரேம் கேட்க,

"லீவா? அப்ப அது ஹனிமூன் இல்லையா?" என்று கவின் கிண்டல் செய்தான்.
"டேய்!" என்றவன் முகம் சிவந்து இருந்தது நண்பர்கள் நகைப்பில்.

"உன்கிட்ட இப்ப இதை சொல்லி டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் டா நினைச்சோம்.. ஆனா வேற வழி தெரியல" கவின் கூற,

"இதுல என்ன இருக்கு கவின்.. நான் சென்னைக்குள்ள வந்ததும் தான் நீ போன் பண்ணினதே! மலர் கார்லயே தூங்கிட்டு இருந்தா அதனால அவகிட்ட சொல்லல.." என்றான் செழியனும்.

"சசிக்கா வந்துட்டாங்க இல்ல? நீ ஊருக்கு கிளம்பல?" என ப்ரேமை செழியன் கேட்க,

"ஈவ்னிங் போனும் டா.. நிரஞ்சன் இங்க வரவும் கவின் கால் பண்ணினான்.. அதான் அப்படியே இங்கே வந்துட்டோம்.." என்ற பிரேம்,

"அம்மா, அக்காகிட்ட பேசி ஸ்ரீ வீட்ல பேச சொல்லலாம்னு இருக்கேன் டா" என்று கூற,

"வா டா என் நல்லவனே! அடுத்த வாரம் யூஎஸ் போறேன்னு சொல்லிட்டு இப்ப கல்யாணத்துக்கு வேற ரெடியாகுறியா? அப்படியே அமெரிக்காக்கு இவளை பேக்கப் பண்ண பாக்குற இல்ல?" என்று கவின் கிண்டல் செய்ய,

"அதெல்லாம் இல்ல.. இவன் எங்க போனாலும் நான் இங்கேருந்து எங்கேயும் போறதா இல்லை" என்றாள் ஸ்ரீ.

"பார்த்தல்ல? இவளை வச்சுட்டு நான் பிளான் பண்ணிட்டாலும்" என்றான் பிரேம்.

"நெக்ஸ்ட் நான் எப்ப வருவேன்னு தெரியாது.. அதான் பேசி வச்சுட்டா பின்னாடி ப்ரோப்லேம் இருக்காது இல்ல?" என்று பிரேம் கூற, நண்பர்களுக்கு புரிந்தது.

"பேசாம இங்கேயே இருந்துடேன் பிரேம்!" கவின் கூற,

"அவனோட ஆசையை ஏன் டா விட சொல்ற?" என்ற செழியன்,

"நீ போய்ட்டு வா டா.. உனக்கு தோணுறதை செய்.. பட் உனக்குன்னு இங்கே யாரெல்லாம் இருக்கோம்ன்றதை எப்பவும் மறந்துடாத" என்றான்.

"தேங்க்ஸ் டா!" என்று அணைத்துக் கொண்ட பிரேம் அவர்களிடம் கூறிக் கொண்டு ஸ்ரீயுடன் கிளம்பினான்.

"சரி டா நீயும். போய் ரெஸ்ட் எடு.. இங்கே நான் பார்த்துக்குறேன்" கவின் கூற,

"ஹ்ம்! போனும் டா!" என்று நெட்டி முறித்த செழியன்,

"ஆமா! நீ மட்டும் ஏன் அப்ப சிங்கிளா இருக்கனும்? லட்சுமி அம்மாகிட்ட போனதும் பேசுறேன்" செழியன் கூற,

"நான் நல்லா இருக்குறது உனக்கு புடிக்கல இல்ல?" என்றான் கவின்.

"ஏன் மலர் கூட என் லைஃப் நல்லா தானே போகுது?" செழியன் கேட்க,

"அதுக்கு நான் செழியன் இல்ல.. என் மலரையும் நான் இன்னும் பார்க்கல.. வீணா போன மூளைய வச்சுட்டு மலரை போய் கவனி போ" கவின் கூற,

உனக்கு ஒரு நல்லது பண்ணலாம்னு நினைச்சது தப்பா?" என்று செழியன் வர,

"நீ நினைச்சதே தப்பு தான் டா!" என்றான் கவினும் விடாமல்.

"எத்தனை நாள்னு பாக்குறேன் டா" என்றபடி கிளம்பி இருந்தான் செழியன்.

"இவனுங்க கூட இருந்து உசுர காப்பாத்துறதே பெரிய வேலையா இருக்கு.. இதுல கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய வேற காப்பாத்தணுமாம்" வாய்க்குள் பேசியபடி வேலையை தொடர்ந்தான் கவின்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மலர். அருகில் அமர்ந்து சில நிமிடங்கள் இமைக்காது பார்த்த செழியன் பின் அவளருகே படுத்துக் கொண்டவன் இடையோடு சேர்த்து தன்னருகில் இழுத்து அணைக்க,

"வந்துட்டீங்களா?" என்றாள் உறக்கத்திலேயே.

"இந்நேரம் பதறி எழுந்துருக்க வேண்டாம்? தூக்கத்துல உளறுற?" கண்ணத்தோடு இழைந்து செழியன் கேட்க,

"ப்ச்! தூங்க விடுங்க.. கண்ணை திறக்கவே முடியல" என்றாள் கைகளை தட்டிவிட்டு.

"சரியான அன்ரொமான்டிக் டி நீ!" செழியன் கூற,

"ஹ்ம் ஆமா ஆமா சார் பிஹைச்டி முடிச்சிட்டாரு அதுல!" என்றவள் பரிகாசம் புரிந்து அவன் முருவலிக்க,

"சாப்பிட்டீங்களா?" என்றாள்.

"அதை கண்ணை திறந்து தான் கேளேன்" அவன் கூற,

"ம்ம்ஹும்ம் திறந்தா தூக்கம் போய்டும்.. அத்தை வேற எழுப்பி சாப்பாடு வச்சுட்டு போயிருக்காங்க" என்று கூறவும், அவன் சுற்றிப் பார்க்க, அங்கே ஸ்டூலில் சாப்பாடு அப்படியே இருந்தது.

"ஹேய்! நீ இன்னும் சாப்பிடலையா? அம்மாகிட்ட சொல்லிட்டு தானே போனேன்?" அவள் தோள்களைப் பற்றி அவன் கேட்க,

"உங்க வேலை தானா?" என்றாள் அப்பவும் கண்களை திறக்காமலே!.

"ப்ச்! என்ன நீ?" என்றவன் ஏதோ நினைவு கூர்ந்தவனாய் அவள் காதருகே குனிந்து,

"மலர்... விழி!" என்று வாய்க்குள் அடக்கிய புன்னகையுடன் அழைக்க, சட்டென கண்களை திறந்தவள் உறக்கம் சென்று கோபம் சூழ்ந்திருந்தது.

"உங்களை!" என்று அவனை மொத்தி எடுக்க,

"வெரி குட்! தூக்கம் போச்சா? இனி சாப்பிட்டு ரெண்டு பேரும் தூங்கலாம்.. ரொமான்டிக்கா.." என்று கூற,

"ஆளைப் பாரு.. ஹனிமூன்னு காட்டை சுத்தி காட்டிட்டு வந்துட்டு பேச்சு மட்டும்..." என்று கூறியவள் சிவந்த முகம் அது மட்டும் நடக்கவில்லை என்பதைக் கூற,

"அங்கே காட்டை மட்டுமா பார்த்தோம்னு சாப்பிட்டு முடிச்சதும் நான் நியாபகப்படுத்துறேன்.. இப்ப வா" என்றவனும் சேர்ந்து அவளுடன் உணவினை எடுத்துக் கொண்டான்.

தொடரும்..
 
  • Love
Reactions: Vimala Ashokan

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
ஹாஹா... டேய் கவினு..
உன்ன எதிலயோ மாட்டி வைக்க ப்ளான் பன்றான்டா இந்த செழியன்
பார்த்துக்கப்பாஅ
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
ஹாஹா... டேய் கவினு..
உன்ன எதிலயோ மாட்டி வைக்க ப்ளான் பன்றான்டா இந்த செழியன்
பார்த்துக்கப்பாஅ
🤣🤣🤣