"எதுக்காக என்னை விட்டு போன
கண்ணிமைக்குற நொடியில இந்த
உலகத்த விட்டு போய்டியே டி...
உயிர ஓ மேல வச்சு இப்போ நடைபிணமா திரியுரேடி...எதுக்கு அம்மு போன"அவ் அழகுப் பதுமையின் புகைப்படத்தை அவள் வாழும் நெஞ்சோடு அணைத்தபடி கடலை வெறிக்க பார்த்தான் ராம்.
கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது.
இதுவரை அவனவளை எண்ணி வடித்த கண்ணீர் மகா சமுத்திரத்தையும் மிஞ்சி இருக்கும்.
பௌர்ணமி இரவில் அவன் வாழ்க்கை மட்டும் அமாவாசையாய் போனது ஏனோ??
காதல் எனும் சாபம் தானோ??
காதல் வழி கொடிது.
காதலியை கண்முன்னே இழப்பது கொடிதிலும் கொடிது.
இதோ இன்று அழுது வடிகிறானே இதே கடற்கரை மணலில் தான் கால் புதைய நடந்தார்கள்.கை ரேகை தேயகைகோர்த்து கதை பேசினார்கள்.
"ராம் எனக்கொறு ஆச தெரியுமா
நானும் நீயும் நூறு வருஷம் சேர்ந்து வாழனும்....
நா சாகுற அந்த நொடி என்னோட கண் உன்ன மட்டுமே தா பாக்கணும்
கண்மூடும் அந்த நேரம் கண்மணியில உன்னோட பிம்பம் தா இருக்கணும்"
ராமின் தோளில் சாய்ந்து கொண்டாள் அவனவள் தூரிகை எனும் காரிகை.
"நம்ம இன்னும் சேர்ந்து வாழ கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள ஏன் டி சாகுறத பத்தி பேசுற உண்மையான காதல்வாழும் கண்ணம்மா அதுக்கு சாவே கெடையாது..."
என்றபடி தூரிகையை தன் கட்டுக்கடங்காத புஜங்களுக்குள் அடக்கி தலை கோதினான்.அவளும்புலிக்குட்டிக்குள் மான் குட்டி போல அவனுக்குள் அடங்கிப்போனாள்.
அவள் ஸ்பரிசம் இவனை ஏதோ செய்யும். அந்த உணர்வு ஏதேதோ சொல்ல வரும். அவை நீயில்லாமல் நானில்லை என்பதுவாக இருக்கலாம்;
எந்தன் ஆதி அந்தமும் நீ தான டி என்பதுவாகக் கூட இருக்கலாம்.
இப்படி அவளை காணும் போது,அவளை முத்தமிடும் போது என அவனுக்குள் எழும் உணர்வுகளில் சிலிர்த்து அடங்கிப்போவான்.
பளார் என்ற அறையில் சுயநினைவிற்கு வந்தவன் முன்பே கண்கள் சிவக்க நின்றிருந்தான் விஷ்வா.
"லூசா டா நீ...
இன்னும் எத்தன நாளைக்கு இந்த பீச்லயே பிச்சக்காரன் மாதிரி திரிய போற...
வீட்டுக்கு வாடா
அம்மா உன்ன பாக்காம கலங்கி இருக்காங்க செத்து போனவளுக்காக உன்னோட வாழ்க்கைய நீயே அழிச்சுக்குற ராம்....."
"அப்டி சொல்லாத மச்சா என்னோட
தூரிகை செத்து போகல
நா மொதல் மொதலா அவள பாத்த இதே பீச்சுல தா அவ இருக்கா
இந்த கடல் அலைகளுக்குள்ள நுரையா வந்து என்னை அடிக்கடி பாத்துட்டு போறா
சாப்டியா ராம்ன்னு கேக்குறா மச்சி..."
தொண்டை வரை கமறிக் கொண்டு வந்த அழுகையை அடக்கத் தான் வழியற்று போனான்.
"ரியாலிட்டிக்குள்ள வா ராம் உன்னோட கண்ணுக்கு முன்னாடி அவ பொணமா கெடந்ததமறந்துட்டியா"என்றவனை எறிக்கும் பார்வை பார்த்தவன்,
"அவள பொணம்னு சொல்லாத நா கொலகாரன் ஆகிருவ அவ சாகல டா..."என்றான்.
"என்னை அடிச்சு கொல்லப்போறியா கொல்லுடா நீ பண்றதெல்லாம்
பைத்தியக்காரத்தனமா இருக்கு டா
அவ செத்து போய்ட்டா
செத்து போய்ட்டா
செத்து போய்ட்டா இது தா நெஜம் ..."
"என்னால அவள மறக்க முடியல மச்சா என்னோட நாடி,நரம்புல
அவ எறங்கிட்டா டா....
ஏன் டா என்ன விட்டு போகணும்
என்னையும் அவ கூட கூட்டிட்டு போய் இருக்கலாம்ல...
நா பாவி டா எனக்கெல்லாம் மன்னிப்பே கெடையாது....
அவ எறந்து போற அந்த நாள்
அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி
கால்ல விழுந்து கதறி அழுதா மச்சா
என்னோட ஈகோனால நா கல்யாணம் பண்ணிக்கல....
இப்போ மஞ்சக்கையிர பேண்ட் பாக்கெட்ல வச்சுட்டு தெரு தெருவா அவள தேடி அலையுற அவ மட்டும் கெடைக்கல டா...."
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்….
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா…
இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா….
விஷ்வா சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழுபவனை மௌனமாக பார்த்தபடி நின்றான்.அவன் அறைந்த வேகத்தில் பழைய ராமாக இருந்திருந்தால் அடித்து கால்,கையை உடைத்திருப்பான்.
ஒரு வருடமாக சவரம் செய்யப்படாத தாடி,போன வருடம் தீபாவளிக்கு கண்டிப்பின் பேரில் அணிந்த சட்டை என ஆளே மாறிப்போயிருந்தான் ராம்.
நான்கு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்.எத்தனையோ முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறான்.
பைத்தியக்காரன்,குடிகாரனென வாங்கிய பெயர்களும் ஏராளாம்.
"வீட்டுக்கு போகலாம் வா டா ப்ளீஸ் எங்களால உன்ன இப்டி பாக்க முடியல டா.....
குடிச்சி குடிச்சி உடம்ப கெடுத்துக்காதடா....
அம்மா பாவம் உன்ன நெனச்சி ரொம்ப அழுறாங்க அத பாக்க முடியாம தா நா இங்க வந்த..."
"முடியாது நா இங்க தா
இருப்ப என்னோட அம்முவோட எடம் இது...
அவ என்னை ஒரு நாள் பாக்க வருவா
அப்போ நா இல்லன்னா தவிச்சு போய்டுவா தூரிகை பாவம்ல மச்சா நா இங்கேயே இருக்கேன் டா....."
இனியும் பேசிப்பயனில்லை என்றதும் தன் மொத்த பலத்தையும் காட்டி மறு அறை ஒன்று வைத்தான்.பல நாள்சாப்பிடாத உடம்பாகையால் தெம்பற்று விஷ்வாவின் மீதே ராம் மயங்கி சரிந்தான்.
மயக்கம் தெளிந்தவனின் தலையை வருடியபடி ராமின் அம்மா அவனருகிலேயே இருக்க அவரை அறிமுகபார்வைபார்த்தவன்,
"விஷ்வா அப்பா எங்கடா??"
என்க அவ்வளவு தான் இருவரும் அந்தாண்டிக்கா சென்று வந்தவர்களை போல் உறைந்து நின்றிவிட்டனர்.
"அப்பா போன மாசமே
எறந்துட்டாரு....
நாங்க எவ்ளோ கெஞ்சியும் நீ வீட்டுக்கு வர மாட்டேன்னு அடம் பிடிச்ச
நெனவு இருக்காடா??"என்க கேட்டுக்கொண்டுருந்தவனின் முகத்தில் எந்த உணர்ச்சி நரம்புகளும் ஆடவில்லை.
"ஆஹ்ஹா எறந்துட்டாறா.."வாய் குவித்து சாதாரணமாக கேட்டவனை மர்மமாக பார்த்து வைத்தனர் இருவரும்.
ராமுக்கு அப்பா என்றால் கொள்ளை பிரியம் அப்படிப்பட்டவர் இருந்தது கூட அவன் நினைவில் இல்லைஎன்றளவுக்கு தூரிகை அவன் மனதில் ஆழ இறங்கி இருந்தாள்.கிட்டத்தட்ட காதல் பித்தனாகமாறிக்கொண்டிருந்தான் மன்னவன்.
"ஹலோ டாக்டர் நெலம ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு....
என்னென்னமோ உளறிட்டு இருக்கா
பயமா இருக்கு அம்மாவ கூட அடையாள தெரியாத ஆள் மாதிரி பாக்குறா நீங்க கொஞ்சம் வர்ரீங்களா..."
வீட்டிற்கு வந்த வைத்தியர் அவனை பரிசோதித்து விட்டு பெருமூச்சொன்றை விட்டெறிந்தார்.
"அம்மு அம்மு வா வா....
இந்த விஷ்வா இல்ல விஷ்வா....
உன்ன பொணம்ன்னு சொல்லிட்டு இருக்கா
நீ தேவதல்ல வா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்...."
"பயப்படாதிங்க தூக்க மாத்திர
குடுத்து இருக்க.....
இவருக்கு இப்போ தேவ தூக்கம் மட்டும் தான்...கனவுல அந்த பொண்ணு கூட தா பேசிட்டு இருக்காரு...
அந்த பொண்ணு இவரோட நினைவுகள்ள இருந்து போகணும் ஆனா அதுக்கு ரொம்ப நாள் ஆகும் யாரு அந்தபொண்ணு?
அவளுக்கு என்னாச்சு விஷ்வா?"
"அவ பேரு தூரிகை புலி மாதிரி இருக்குற ராம்க்கு பூ மாதிரி கெடச்சவதா அவ
யாருக்கிட்டயும் அடங்காத ராம் தூரிகை கிட்ட மட்டும் தான் அடங்கிப்போவான்....
தூரிகைக்கு இவன் தா உலகமே அந்தப் பொண்ணுக்கு அப்பா அம்மா கெடையாது
அவளுக்கு எல்லாமே இந்த ராம் தான்
ரொம்ப அழகா போயிட்டு இருந்த காதல்ல...."
அன்று....
தூரிகை ஒரு அனாதைப்பெண் தாய்மாமனின் அடைக்கலத்திலேயே வாழ்ந்து வந்தாள்.அவனோ ஒருபணத்தாசை பிடித்த பேய்.
தூரிகையின் அழகில் மயங்கி கோடிஸ்வர கிழவன், தூரிகையை தான் மணந்தாள் அவளது தாய் மாமனைதங்கத்தால் குளிப்பாட்டுவதாக ஆசைக் காட்டி வைத்திருந்தான்.
கிழவனை மணந்தாகவே வேண்டும் இல்லையேல் உன்னை கொன்றுவிடுவேன் என தாய்மாமன் மிரட்டினான்.
இவளோ மணந்தாள் ராமை தான் மணப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்க அவளை கொல்லுவதற்கு ஆட்களைஅணுப்பியிருந்தான்.
பதற்றமும் பயமுமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்தாள் தூரிகை.
"ராம்... ரா..ம்ம்ம்.....
என்னை இப்போவே கல்யாணம் பண்ணிக்கோ அவங்க என்னை கொல்ல வர்ராங்க நா உன்னோடபொண்டாட்டியா
எறந்து போயிட்ற
கழுத்துல ஒரு மஞ்சக் கயிற கட்டு ராம்"
"அம்மு என்னை மீறி எவனாலயும் உன்ன ஒன்னும் பண்ணமுடியாது அவனுங்கள அடிச்சு போட்டுட்டு ஓ கழுத்துலதாலி கட்ற"
"அவனுங்க பெரிய படையா இருக்காங்க டா அந்த கெழவனோட கை ஆளூங்கலும் இருக்காங்க என்னை நீகாப்பாத்தவே முடியாது ப்ளீஸ்......
தாலிய கட்டு ராம் ஓ கால்ல
வேணும்னாலும் விழுற...."
"நானா இல்ல அவனான்னு பாக்காம
விட மாட்ட..."
"அந்தப் பொண்ணு கால்ல விழுந்து கெஞ்சியும் இவ கேக்கவே இல்ல....
அட்லீஸ்ட் சுமங்கலியாவாவது செத்து இருப்பா டாக்டர்...
அவங்க பெரிய ரவுடிங்க இவனால தாக்கு பிடிக்க முடியல"
அடியாட்கள் ராமை அடித்துப் போட்டு அவனோடு தூரிகையையும் இழுத்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேர மயக்கத்தின் பின்னே அவன் கண் விழித்து பார்த்தது,
மணக்கோலத்தில் அவனை பார்த்தபடியே அழுது கொண்டுருந்த அவனவளைத் தான்.
அருகில் அந்த கிழவனும் அதே மணக்கோலத்தில் இருந்தான்.ராம் கை,கால் கட்டப்பட்ட நிலையில் அந்தோபரிதாபம்.
"வேணாம்....
வேணாம்...
அம்மு அத மட்டும் பண்ணிடாத நா உன்ன எப்படியாவது காப்பாத்திருவேமா ப்ளீஸ் டி
நம்ம காதல் தோத்துப்போகாது"
"உன்னோட உயிர காப்பாத்த எனக்கு
வேற வழி தெரியலாடா...
நா மட்டும் இப்போ இந்த
கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா
இவங்க உன்ன கொன்னுடுவாங்கடா..
உன்ன பொணமா பாக்குறதுக்காகவா நா உருகி உருகி காதலிச்ச..."
"இதுக்கு நீயே என்னை ஓ கையால கொன்னு இருக்கலாம் டி...
அம்மு என்னை நம்பு நா உன்ன காப்பாத்திடுவ
ஏய் என்னை விடுங்க டா பொட்ட
பசங்களா ஆம்பளயா இருந்தா கட்ட அவுத்து விட்டு சண்டைக்கு வாங்கடா..."
என்றதுமே தூரிகையின் தாய் மாமன் அவனை கண்டபடி அடிக்க துடிதுடித்து போனவள்,
கண்மூடி சிலாகிப்பதற்குள் கையோடு மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை அருந்திவிட்டாள்.
"உங்களால ராமும் நானும் சேர்ந்து வாழுறத வேணும்னா தடுக்கலாம்
ஆனா நா...நா சாகுற தடுக்க முடியாதுல்ல
அவ இல்லாம நா உயிரோட இருப்பன்னு நீங்க நெனச்சது முட்டாள் தனம்..."
"ஐயோ ஏன் டி இப்படி பண்ண அவள ஹாஸ்பிடல் கொண்டு போங்க டா அம்மு என்னை விட்டு போய்டாதம்மா...
கட்ட அவுத்து விடுங்கடா நா அவள காப்பாத்தனும் அம்மு அம்மு நீ இல்லாம நா எப்டி மா இருப்ப உயிரு டி நீ...."
"டேய் இவளுக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா இப்டி பண்ணி இருப்பா
இவள காப்பாத்தக்கூடாது..
இவ கண்ணு முன்னாடியே துடி துடிச்சு சாகணும் செத்ததுக்கப்புறம் காட்டுல போய் பொணத்த வீசிடு...."
"அந்தப் பொண்ணு இவ முன்னாடியே துடி துடிச்சு எறந்து போச்சு...
இவனும் அன்னிக்கே மனசளவு எறந்து போய்ட்டா...
பாவிங்க அவளோட பொணத்த கூட இவன தொடவிடல....
சாகும் போது அவ கண்ணு ரெண்டும் இவனயே பாத்துட்டு இருந்துச்சுன்னு
அடிக்கடி அழுவா.....
இருட்ட பாத்து கத்துவா...
தூரிகை மாதிரி எந்தப் பொண்ண பாத்தாழும் அவ தான்னு நெனச்சி பின்னாடியே போயிட்றா டாக்டர்
வெளீல தல காட்ட முடியல.....
ரொம்ப பாவமா இருக்கு..."
"ரொம்ப கொடூரமா இருக்கு பா அந்தப் பொண்ணு திரும்பி வந்தா தா இவன பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியும்...."
"அவ தா வர மாட்டாளே டாக்டர்...."
"எல்லாம் கடவுளோட கைல தா இருக்கு அந்த பொண்ணு தா இவனுக்கு மெடிசின் அந்த பொண்ணு தா இவனுக்கு பாய்சன்...."
வைத்தியரை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தவன் அதிர்ந்து போனான் ராம் மீண்டும் வீட்டை விட்டு ஓடிவிட்டிருந்தான்.
கடற்கரையில் கால் புதைய மண்டியிட்டு அழுதான்.கண்ணிர் கடல் பெருக்கெடுத்தது.அவளை மறக்க நினைத்து மறுபடி மறுபடி தோற்றுப்போனான்.
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்....!!!
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்...!!!
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா...
"காதல் அழகான போத அம்மு
கொஞ்சம் நாள் அந்த போதைல
என்னை மெதக்க வச்ச...
ஆனா அந்த போதயே என்னை
இன்னிக்கி அணு அணுவா
கொன்னுட்டு இருக்கு....
நீ இல்லாம என்னை எல்லாரும் பைத்தியக்காரன்னு சொல்றாங்க....
நா பைத்தியம் தான் டி ஓ மேல பைத்தியம்...
மறு பிறவி எடுத்து வா அம்மு என்னால நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு... "கண்ணீர் ரேகைகளோடு மீண்டும் அதே கடலை வெறித்தான்.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தூரிகை அன்று பார்த்த அதே மணக்கோலத்தில் கலாபம் போல் வந்துகொண்டிருந்தாள் .ராம் கண்ணை விரித்து விரித்து பார்த்தான். அவளை கண்டதும் சிலிர்த்து அடங்கும் அதே உணர்வு அவனுள் இன்று.
இது உண்மை தான் கனவல்லவே.அவள் வித்துத்து விழிகளால் இவன் இதயத்தில் மீண்டும் காதல் அசனி.
காதல் ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை தொடங்கி விட்டிருந்தன…
"அம்மு டேய் வந்துட்டியா"பறந்து சென்று அவளை கட்டிக்கொண்டான்.அவளை பார்த்த உணர்வை அவன்எப்படி சொல்வான்.
வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு.
"ராம் நான் தான் உன்னோட தூரிகை உன்னத்தேடி வந்துட்ட நா சாகல டா..."அவன் முகம் எங்கும் மாறி மாறி முத்தம் பொழிந்தாள்.
" என்னோட கண்ணு முன்னாடி நீ செத்துப்போய்டேன்னு நெனச்சி அணு அணுவா செத்துட்டு இருந்த டி...."
"அன்னிக்கு உன்ன விட்டு வாழ முடியாம நா வெஷம் குடிச்சது என்னவோ உண்ம தான்....
ஆனா நா அன்னிக்கி மயங்கி தான் போயிருந்த.....
அவங்க நா செத்துட்டதா நெனச்சி காட்டுக்குள்ள வீசிட்டாங்க
உம் மேல வச்சுருந்த காதல் என்னை சாகல விடல போன உசுற தொண்டக்குழி வர பிடிச்சு வச்சுக்க வச்சுது....
அந்தப் பக்கமா வந்த மலைவாழ் மக்கள் தா என்ன காப்பாத்துனாங்க
மாமாவோட அடியாளுங்க உயரத்துல இருந்து கீழ வீசுனதால கை,கால்.உடஞ்சு போச்சு அத குணமாக ரொம்ப நாள் எடுத்துகுச்சு இல்லன்னா அப்போவே உன்ன தேடி வந்துருப்ப....."
"இனி என்னை விட்டு எங்கேயும் உன்ன போக விட மாட்ட... அந்த கெழவனும் மாமனும் வரட்டும் வெட்டிபோட்றுவ...."
"அதுக்கெல்லாம் வேலயே இல்ல....
கெழவ எறந்து போயிட்டா மாமா இப்போ கம்பி எண்ணிட்டு இருக்காரு..."
ராம் அவளை எப்படி என்பதாய் பார்க்க,
"எனக்கு உதவி பண்ண அதே மலைவாழ் மக்கள் தான் என்னை தற்கொலைக்கு தூண்டுனதுக்காக கம்ப்ளைண்ட் குடுத்து இருக்காங்க...."புன்னகையுடன் கூறி முடித்தாள்.
"நீ இப்போ ஏ முன்னாடி இருக்குறத நம்பவே முடியல.....
இந்த வாட்டி என்னை விட்டு போயிடமாட்டல்ல..."
தூரிகையின் பதிலுக்காக அவள் கைகளை பற்றி நின்றான்.அது பள்ளி செல்லும் குழந்தை அடம்பிடித்து தாயின் கையை விடாது பிடிப்பது போல் இருந்தது அவளுக்கு.
"போக மாட்ட...
போகவே மாட்ட...
நீ சொல்லியிருக்கல்ல ராம் உண்மையான காதலுக்கு சாவே கெடையாதுன்னு..."
அவன் காற்சட்டை பையில் அவளுக்காகவே காத்திருந்த மஞ்சற்கயிறை எடுத்தவன், ஐம்பூதங்களைசாட்சியாகக் கொண்டு அவள் நுதழிள் கட்டினான்.
காதல் பறவைகள் இனிதே இணைந்தன.
உண்மைக்காதலுக்கு அழிவேது.
-முற்றும்-
பி.கு
வித்துத்து - மின்னல்
அசனி - இடி