• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 01

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அந்தக் பனிப் பெய்யும் அதிகாலைப் பொழுதிலும் சோர்வை நீக்கி எழுந்தவளாக வீட்டு வேலைகளை அள்ளிப் போட்டு செய்து கொண்டிருந்தாள்.
அவள் மதிநிலா.

கைகள் அதன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம் என்னவோ கடந்து வந்த நாட்களை மீட்டிக் கொண்டிருந்தது.

...

ஐயரின் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற சத்தத்தில் இவ்வளவு நேரமும் கைமுஷ்டி மடக்கி தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தவனின் கை, ஓர் கணம் தளர்ந்து மீண்டும் இறுகியது. அவன் மனமோ உலையாக கொதித்துக் கொண்டிருக்க, எண்ணங்களோ தரிகெட்டு பலதையும் சிந்தித்துக் கொண்டிருந்தது. முன்னே ஆசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அந்தத் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை முறைக்கவும் முடியாமல் பற்களை நறநறுத்துக் கொண்டிருந்தான் ரிஷி. அவன், ராஜேந்திரன் என்ற அந்த ஊர்த் தலைவரின் ஒற்றை வாரிசு. அவரே அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பவர். ராஜேந்திரனோ மெய்யாகவே ராஜா என்ற தோரணையில் இருப்பவர். முகத்தில் பெரிய மீசையும் சிரிப்பை மறந்த உதடுமாக இருக்கும் ஆறடி சிலை. ஊரில் அனைவருக்கும் ராஜேந்திரன் என்றால் மரியாதைக்கும் மேலாக ஓர் பயம் இருக்கும். அது ரிஷியின் மனதிலும் வேரூன்றி இருந்தது தான் விந்தை. மகன், மனைவியையும் ஊரார் போல நடத்தியதன் விளைவு இதோ ஒருத்தியின் வாழ்க்கையை அழிக்க தயாராகி விட்டது. சிறு வயதில் இருந்தே தந்தை போட்ட கோட்டை தாண்டியிராதவன் வளர வளர அவர் மேல் கோபத்தையும் வளர்த்துக் கொண்டான். ஆனால் இன்றுவரை அவரை எதிர்த்து ஓர் வார்த்தை பேசியதில்லை. அப்படிப்பட்டவன் தன் கோபத்தையெல்லாம் கொட்டும் இடம் தாய் நளினியிடம் தான். அவரே கணவனுக்கு பயந்திருக்க மகனை பொருட்படுத்துவாரா என்ன..? இருந்தும் அனைத்தையும் தாங்கிக் கொள்பவர். இதோ இன்று விதியோ அந்தக் கோபத்தை கொட்டுமிடமாக மதிநிலா என்ற பூவை இவன் கையில் தாரை வார்த்திருந்தது. ஆம் இன்று ரிஷி மற்றும் மதிநிலாவின் திருமண நாள்.

திருமணம் யாருக்காக நடாத்தப்படுகிறதோ அவர்களோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் அமர்ந்திருக்க ஐயரின் சத்தத்தில் முதலில் கலைந்தது ரிஷி தான். அவர் தாலியை கையில் தர எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவனின் முன் ஐயர் மீண்டும் தாலியை நீட்ட கோபத்துடன் அவரை திரும்பி முறைத்தவனை புரியாமல் பார்த்தார் அந்த அப்பாவி மனுஷன்.

கீழே இருந்த ராஜேந்திரன் குரலை செறுமவும் எரிச்சலுற்றவன் தாலியை வெடுக்கெனப் பறிக்க தந்தையின் முகத்திலோ ஓர் கர்வப் புன்னகை தோன்றி மறைந்தது. அதில் மீசையை நீவி விட்டவர் ம்ம் என ரிஷிக்கு கண் காட்ட அவன் கண்களோ ரௌத்திரத்தில் அத்தனை சிவந்திருந்தது. அவர் பேச்சுக்கு தன்னை ஆட்டி வைப்பவரின் மேல் கொலை வெறி ஆத்திரம் வந்தது. இருந்ததும் தந்தையான காரணத்தினால் பொறுத்திருந்தான். ஆனால் இனியும் பொறுத்திருக்க முடியாத நிலை அவனது. அனைத்தையும் பேசி முடித்து விட்டு இவள் தான் உன் மனைவியாகப் போகிறவள் நாளை உனக்கு திருமணமென்ற தகவலை மட்டும் தந்தால் அவனும் என்ன தான் செய்வான்..?
அது அப்படி இருக்க, அடுத்து அவளது புகைப்படத்தைப் பார்த்தவனுக்கு இதயத்தில் இரத்தம் வராத குறை. தான் என்ற திமிருடனும் கர்வத்துடனும் வளம் வருபவனுக்கு அவனை விட நிறத்தில் மங்கியிருந்தவளை ஏனோ முதல் பார்வையிலே பிடிக்காமல் போய் விட்டது. அப்படியே அவர்களது ஸ்டேஸ்டஸ் மற்றும் அவளது படிப்பை பற்றி கேட்டறிந்து கொண்டவனின் கையிலிருந்த அவளது புகைப்படம் சுக்கு நூறாக கிழிந்து அந்த அறையில் வீசப்பட்டது. தனக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவளுடன் தான் வாழ்வதா என்றே அன்று முழுக்க திருமணத்தை நிறுத்த போராடினான். ஆனால் பலன் என்னவோ பூச்சியம் தான். வீட்டில் வைத்து உணர்வுகளையும் வெளிக்காட்ட முடியாமல் போகவே, காரை யாருமற்ற சாலையில் சீற விட்டவன் தன் சீற்றத்தை அந்த ஸ்டியரிங் வீலில் காட்டிக் கொண்டிருந்தான். க்ரீச் என்று டயர் தேய்ந்து கொண்டு அந்தப் பாதையில் சறுக்கி நிற்க, அவசரமாக வெளியே வந்தவன் ஆஆஆஆஆஆஆஆ என்று அந்த ஒற்றைப் பாதையே அதிர கத்தியிருந்தான். அந்த சத்தத்தில் அர்த்த ராத்திரியில் உறங்கிக் கொண்டிருந்த பட்சிகளோ கூட்டை விட்டு பறந்து கலைந்து அந்த நேரத்திலும் ஒலியெழுப்பி கூச்சலிட்டன.
அத்தனை ஆற்றாமை அவனுள்...

யூ..யூ... என யாரை திட்டுவதென தெரியாமல் அதனையும் வாய்க்குள்ளே விழுங்கி விட்டான். ஆனால் எத்தனை நாட்களுக்குத் தான் கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்க முடியும். ஓர் நாள் மொத்தமாக அந்தக் கோபம் வெளிப்படும் போது சேதாரம் அதிகமாக இருக்கும். அப்படி இந்த சிங்கத்திடம் சிக்கிக் கொள்ளப் போவதோ மதிநிலா என்ற பேதை...!

..

ரிஷி ஆறடிக்கும் சற்று குறைந்த உயரம். பாதாம் நிறம், கறுகறுவென்ற கேசம், கலையான முகம் என அத்தனை வசீகரமாக இருப்பவன். எம்.எஸ்.சி க்ரெசுவேட், இருந்தும் சென்னையில் ஓர் கம்பனியில் தனக்குப் பிடித்த வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறான். வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழத் துடிக்கும் இளம் ரத்தம் அவனது. நெருங்கிய நண்பர்கள் மித்ரன் மற்றும் பவித்ரா என்ற இருவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து விட்டனர். இதோ ஓர் அப்பாட்மெண்டில் தங்கள் இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ரிஷியும் அதே அப்பாட்மெண்டில் கீழ் தளத்தில் தான் தங்கி வேலைக்கு சென்று வருகிறான். இதற்குள் மூவரும் ஒரே கம்பனியில் தான் வேலையும் செய்கின்றர்.

...

மாலையை கழற்றி எறிந்துவிட்டு இப்படியே எழுந்து சென்று விடுவோமா என்று கூட கணப் பொழுதில் சிந்தித்திருந்தான் ரிஷி. மகனது மனதை படித்தவர் போல நளினியோ கலங்கிய கண்களுடம் அவனைப் பார்த்து இடம் வலம் தலையை ஆட்டி மறுத்தவர் சுற்றுப் புறத்தை ஜாடை காட்ட அவனும் அப்போது தான் கவனித்தான். அனைவரும் தங்களுக்குள் குசுகுசுப்பதும் இவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருப்பதையும் பார்த்தவன் என்ன நினைத்தானோ திரும்பி மதியின் தாய் தந்தையைப் பார்க்க, அவர்களோ ராஜேந்திரனுக்கு அருகில் கைகட்டி நின்று கொண்டிருக்க வெறுப்பானது அவனுக்கு.

யாரும் எதிர்பாராத நேரம் தாலியை எடுத்து அவள் கழுத்தில் மூன்று முடிச்சையும் இட்டிருந்தான். அனைவரினதும் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தாலும் குடும்பத்தவர்களுக்கு சிறு நிம்மதியும் இருக்கத்தான் செய்தது.

மதிநிலா...
அவளைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. ஏன் தாலி கட்டியவன் கூட கிஞ்சித்தும் கணக்கில் எடுக்கவில்லை. அவளை தன் சுவாசம் கூட தீண்டக் கூடாது என்று நினைத்ததாலோ என்னவோ ஓரடி தள்ளி அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் எத்தனையோ அவமானங்களையும் திட்டுகளைம் சகித்து வந்தவளுக்கு அருகில் இருப்பவனின் நிலை புரியாமல் இருக்குமா..!? இருந்தும் விரக்திப் புன்னகை மட்டுமே அவளது முகத்தில். எவ்வளவு தான் வாழ்க்கை, வலிக்க வலிக்க அடித்திருந்தாலும் தலை குனியாமல் நிமிர்வுடன் வாழும் அழகியே அவள்... ஆம் அவள் அழகி தான். ஆனால் மற்றவர்களுக்கு தான் அவளை ரசிக்கத் தெரியவில்லை.

தன் நெஞ்சில் விழுந்த ஈரத் தாலியின் ஸ்பரிசத்தில் மீண்டவள் அதனை கையில் எடுத்து தடவிப் பார்க்க உடல் ஓர் முறை சிலிர்த்தடங்கியது பாவைக்கு. நிமிர்ந்து பெற்றவர்களையும் தாண்டி தன் சகோதரர்களை பார்த்தாள். அவர்களது புன்னகையில் அவளது இதழும் மில்லி மீட்டர் அளவில் விரிந்தது. அதுவும் அடுத்த நிமிடமே கருகி விட்டது.

வேலை முடிந்தது என சட்டென மேடையை விட்டு எழுந்த ரிஷி, மித்ரன் தடுப்பதையும் மீறி மண்டபத்தை விட்டு வெளியேறி விட்டான். ராஜேந்திரனுக்கு அவனது செயலில் கோபம் வந்தாலும் அவன் இந்தளவுக்கு ஒத்துக்கிட்டதே போதுமென மற்றவர்களை கவனிக்கத் தொடங்கி விட்டார். அவருக்கு பயத்தில் வந்திருந்தவர்களும் ரிஷியின் நடத்தையில் எதுவும் கேட்கவில்லை. முகம் சுருங்கி நின்றிருந்தது என்னவோ மதியின் தாய், தந்தை தான். இப்போது இவர்களை எண்ணி சிரித்தது என்னவோ மதி தான். எத்தனை தடவை சொல்லிப் பார்த்து விட்டாள். கேட்டார்களா இவர்கள்..!? படட்டும் என விட்டு விடவும் மனமில்லாமல் எழுந்தவள் ராஜேந்திரனிடம் வந்து "அது தான் உங்க பிள்ளையே போய்டாருல்ல மாமா.. நாங்களும் போகவா..?" என்றாளே பார்க்க மதியின் தாய் தந்தை அவர்களை சங்கடமாக பார்க்க, ராஜேந்திரனோ வாய் விட்டே சிரித்து விட்டார். தன் கணவனை ஏதோ உலக அதிசயத்தைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தது நளினி தான்..

"ஹா..ஹா.. இந்த தைரியத்துக்காக தான் உன்னை என் மருமகளாக்க ஆசைப்பட்டேன்... வாம்மா..." என்றவர் முன்னே நடக்க அவரது வார்த்தை அவளுக்கு என்னவோ உவப்பாய் இல்லை போலும். அப்படியே அவர்களுடன் இணைந்து நடந்தாள்.

தொடரும்...

தீரா.
 
திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
447

சூப்பரா இருக்குடா 👍👍👍
 
Top