சந்தானமூர்த்தி தொடர்ந்தார்.... 'எங்கள அதிகம் காத்திருக்க வைக்காமல் முதல் பத்திரிகையிலேயே அந்த விஷயம் இருந்தது..... அதைப்பார்த்ததும் உங்கப்பாவுக்கு வேர்த்து விறுவிறுக்கத் தொடங்கிற்று.... நா தழுதழுக்க..... 'மூர்த்தி இதைப் பாருடா.... நான் அன்னைக்கு சொன்னன்ல அந்தப் பொண்ணும் அந்தக் குழந்தையும்.... அது இவங்க தான்.... அப்போ எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு தோணிச்சு..... ஆனா இப்போ தெளிவாத் தெரியுது.... இவங்கள உனக்கு நினைவிருக்காடா? காவியன்பட்டுல அநியாயமா செத்துப் போன இரண்டு உயிர்.... அவங்க விஷயம் செவி வழியாக் கேட்டிட்டே.... "இனம் தெரியாதோரால் கொலை" அப்பிடினு போட்டிட்டு விட்டுட்டாங்க.... எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? ஒரு அபலைப் பெண்ணோட வாழ்க்கையைப் பறிச்சவன, ஒண்ணுமறியாத பிஞ்சைச் சிதைச்சவனை கண்டுபிடிக்கணும் தண்டனை வாங்கிக் குடுக்கணும்னு.... என்னை விடவேயில்ல.... அந்தப் பொண்ணு என் முன்னாடி வந்து நின்னு கூட எனக்கு நினைவுவரல இது அந்தக் கேஸ்னு.... எனக்கே மறந்திடிச்சின்னா.... அந்தப் பொண்ண வேற யாரு ஞாபகம் வச்சிருக்கப் போறாங்க? ஆனா அவங்க குடும்பத்தில யாருமே இதை இஸ்யூ ஆக்கலயா? எல்லாருமா சேர்ந்து எப்பிடி வாயடைச்சிட்டாங்க பாத்தியா? ஆனா அவங்க ஏன்டா என் பின்னால வாறாங்க? என்கிட்ட இருந்து என்ன காரியம் ஆகணும் அவங்களுக்கு?' அவன் புலம்பப் புலம்ப எனக்கு என்ன பண்றதுனே தெரியல.... அவனை நம்பவும் முடியல.... நம்பாம இருக்கவும் முடியல.... அதே நேரம் ஹோட்டல்ல நடந்த விஷயத்துக்கும் இதுக்கும் தான் தொடர்புனு எப்பிடி சொல்லலாம்? அவனைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி அந்தக் கேஸை நாம றீச்செக் பண்ணுவோம்டா.... இப்போ இதைப் பாப்பம்னு வெளிக்கிட்டா அடுத்த பக்கத்தில இன்னொரு நியூஸ்..... முதலாம் ஆண்டு நினைவஞ்சலினு ஒரு பொண்ணோட ஃபோட்டோவோட.... அந்த ஹோட்டல்ல இருந்து விழுந்து செத்துப்போன ஒரு பொண்ணு..... அதைப் பார்த்ததும் தான் ஒண்ணு புரிஞ்சுக்கிட்டோம்..... நாம பாத்தது அந்த வருஷம், அந்த மாசம் பதினொன்னாம் திகதில இருந்து பதினைந்தாம் வரையான பேப்பர்ஸ்.... அவசரக்காரனுக்குப் புத்தி மட்டுனு சொல்லுவாங்களே.... நாங்களும் ரென்ஷன்ல இருந்ததால அந்த மாசப் பத்திரிகைகளை மட்டுமே பார்த்தோம்.... உண்மையாவே எந்தப் பத்திரிகையைப் பாத்திருக்கணுமோ தெரில.... ஆனா நாம அந்தப் பத்திரிகைகளைப் பாத்தப்பவே அந்தக் காவியன்பட்டுக் கேஸ் கொஞ்சம் பழசு.... ஒரு மூன்று வருஷம் முன்னால நடந்த சம்பவம்.... அப்புறம் எப்பிடி இந்தப் பேப்பர்ல அவங்க ஃபோட்டோ வந்திச்சுனு திருப்பிப் பார்த்தோம்.... மீண்டும் எங்களுக்கு அதிர்ச்சி.... முதல்ல நாம பார்த்த பொண்ணையும் குழந்தையையும் இப்போ அதில காணோம்.... சர்வ நிச்சயமா எங்களுக்குப் புரிஞ்சுது.... அவங்க ஆத்மா இன்னும் சாந்தி அடையல... அவங்க எதையோ எதிர்பார்த்து அலைஞ்சுக்கிட்டிருக்காங்கனு.... உங்கப்பா அழவே ஆரம்பிச்சிட்டார்..... கையெடுத்துக் கும்பிட்டார்.... 'உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.... தயவு செய்து விட்டிடுங்க... உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்றன்.... ஆனா என் குடும்பத்தை விட்டிடுங்க.... ஆதிரான்னா எனக்கு உயிர்..... உங்க ராகெட் (target) என் பொண்ணா? எதுக்கு அவளோட படம் உங்ககிட்ட இருக்கு?'
அவனோட அழுகைக்கு ரெஸ்பொன்ஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல... ஆனா இருந்திச்சு.... அந்தப் பொண்ணையும் குழந்தையையும் நானே என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.... அவங்க வந்தாங்க.... அந்தப் பொண்ணு எதுவும் பேசல..... குழந்தை தான் பேசிச்சு... 'எங்களக் கொன்னவங்களக் கண்டுபிடிங்க அங்கிள்.... தண்டனை வாங்கிக் குடுங்க.... இல்லனா அந்தக் ஹோட்டல் கொலை மாதிரி நிறையத் தொடரும்.... அப்புறம் உங்க குடும்பத்தில யாரயும் கொல்லுறது எங்க ராகெட் இல்ல.... அவங்களக் கொல்றதா மனசளவில கூட யோசிக்க முடியாது... அதோட உங்க பொண்ணு தான் என் பென்டன்ல இருக்கிற உருவப்படம் மாதிரி இருக்கா.... அவங்களைக் கொல்லணும்னு குறி வச்சு எதுவும் பண்ணல... நேரம் வரும் போது எல்லாம் புரியும்.... உங்களுக்கு இல்லனாலும் உங்க குடும்பத்துக்கு எல்லாமே புரியும்...' அந்தச் சின்னக் குழந்தை அப்பிடிக் கதைச்சதை நம்பவே முடியல..... அது குழந்தையோட கதை மாதிரியும் இல்ல..... கடைசிவரை அந்தப் பெரிய பொண்ணு கதைக்கவேயில்லை.... ஆனா எப்பிடினு தெரியல இனியன்.... அவ பார்க்க அச்ச அசல் இப்போ எங்க ஆதிரா மாதிரியே இருப்பா.... அது தான் எப்பிடினு தெரியல..... அப்போ ஆதிரா சின்னக்குழந்தை இல்லையா? அவ வளர்ந்தா அந்தப் பொண்ணு மாதிரித்தான் இருப்பானு எங்க ரெண்டு பேருக்குமே தெரியல....
தான் கண்டிப்பா கண்டுபிடிக்க முயற்சி செய்றதா சொன்னாரு உங்கப்பா.... அதோட அவங்க போய்ட்டாங்க.... ஹோட்டல்ல சூசைட் பண்ணின பொண்ணா இல்ல வேற ஏதாவது தான் அவனைக் கொலை பண்ணி இருக்குமா என்ட எங்களோட சந்தேகம் தீர்ந்தது... அவங்களே சொல்றாங்களே அதே மாதிரிக் கொலை நடக்கும்னு..... அதுவுமில்லாம அந்தக் காவியன்பட்டு கொலை நடந்ததும் ஒரு பதினோராம் திகதி தான்.... ஹோட்டல்ல சூசைட் பண்ண பொண்ணுக்கும் செத்தவனுக்கும் ஒரு தொடர்பும் இல்ல.... அது தற்செயலான ஒரு கோ-இன்சிடென்ஸ் (co-incidence) முக்கியமா அந்த வீடியோ றீச்செக் பண்ணப்போ அதில காட்டின தேதி பதினொன்னு தான்... அதே நேரம் ஆண்டு, மாசம் எல்லாமே மாறியிருந்தது..... இவனோட கொலை நடந்தது 2007.01.17 அன்னைக்கு..... ஹோட்டல்ல மற்றப் பொண்ணு சூசைட் பண்ணது 2006.01.11. ஆனா காவியன்பட்டு கொலை நடந்தது 2004.01.11. வீடியோல காட்டின ஆண்டு மாதம் திகதி இது தான்.... சரி கொஞ்சம் றீபிரஸ் ஆகிட்டு நிதானமா யோசிப்பம்னு முடிவெடுத்தம்.... ரெண்டு நாள் வேலைக்குப் போகல.... அவனோட கொலை பற்றி உண்மையைத் தெளிவா எழுதி தகவல் வெளிவிட்டம்..... அமானுஷ்யம்னு சொன்னம் ஆனா காவியன்பட்டு மேட்டர சொல்லல.... மூணாவது நாள் வேலைக்குப் போனம்.... அன்னைக்கு தலைமைஅலுவலர் வேலைக்கு வரல.... வழக்கமாக நாங்க செய்ற வேலைகளைச் செய்திட்டு கன்டீன்ல மீட் பண்ணம்....
நானே ஆரம்பிச்சன்.... 'இவங்களுக்குத் தேவை தங்களைக் கொண்ணவங்களை வெளிக்கொண்டு வரணும்... அதை நாம எப்பாடுபட்டாவது செய்யணும்... ஆனா அவங்க செத்து மூணு வருஷம் ஆனதுக்கப்புறம் ஏன் வரணும்? இவ்ளோ நாள் ஏன் வரல? இப்பிடி நிறையக் கேள்விகள் இருந்திச்சு.... ஆனா அதுக்குப் பதில் தேடுற நிலைமைல நாம இருக்கல.... சோ காவியன்பட்டு கேஸை திரும்ப எடுத்து விசாரிப்பம்னு யோசிச்சம்..... ஆனா அது தலைமை அலுவர்க்கு தெரியாமப் பாத்துக்கணும். ஏன்னா அவர் கண்டிப்பா இந்தக் கேஸை விசாரிக்க விட மாட்டார்.... கேஸ் ஃபைல் உம் இல்ல..... சோ எப்பிடியோ 2004 தை மாச பேப்பர்ஸை எடுத்து காவியன்பட்டு கொலை தொடர்பான விஷயத்தை மட்டும் கட் பண்ணி எடுத்துக்கிட்டோம்..... வெளியூர்ல கொஞ்ச வேலை இருக்குனும், திரும்பி வரக் கொஞ்சக் காலம் எடுக்கும்னும் தலைமை அலுவலரோட அசிஸ்டன்ட தகவல் சொல்லிட்டு இரவோட இரவா காவியன்பட்டுக்கு வெளிக்கிட்டம்.... அங்க போய் அலைஞ்சு திரிஞ்சு விசாரிச்சம்.... கொஞ்சம் உருப்படியான தகவல் கிடைச்சுது.... அவங்க சொந்த ஊர் காவியன்பட்டு இல்லையாம்.... அந்தப் பொண்ணுக்கும் அவளோட புருஷனுக்கும் உறவுனு சொல்லிக்க வேற யாரும் இல்லையாம்.... அதனால தான் அவங்களைப் பற்றிக் கேக்க யாருமே வரலனு புரிஞ்சுது... ஆனா அந்தப் பொண்ணோட புருஷன்.... அவனுக்கு என்னாச்சுனு கேக்க.... அவனும் ஒரு அக்ஸிடண்ட்ல இறந்திட்டானாம்... அவங்க ரெண்டு பேரும் லவ் மரேஜ்.... வீட்ட ஒத்துக்கிட்டுத் தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க.... கல்யாணமாகினதில இருந்து ஒவ்வொரு மாசமும் ஆண், பெண் இரண்டு தரப்பில இருந்தும் ஒவ்வொருத்தரா சாக ஆரம்பிச்சுட்டாங்களாம்.... பொண்ணோட அப்பா, அம்மா, தங்கைச்சி.... பையனோட அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி எல்லாருமே செத்திட்டாங்க.... இவங்க ரெண்டு பேரோட சேர்க்கை தான் இவ்வளவு பெரிய இழப்புக்கு காரணம்னு.... பையனோட அக்காபுருஷன், அண்ணி எல்லாருமே இவங்கள ஒதுக்கி வைச்சிட்டாங்க.... அவங்க பிள்ளைகளையும் இவங்களோட சேர விடல.... அப்புறம் தான் இவங்க அவங்களோட குட்டிப் பாப்பாவோட காவியன்பட்டுக்கு வந்திருக்காங்க.... வந்த இடத்திலயும் சொந்தம்னு யாரும் இருக்கல.... உறவு வச்சுக்க அவங்க விருப்பப்படவும் இல்ல.... அதனால தான் இப்போ பனங்காடா இருக்கிற தனி இடத்தில அவங்கட வசதிக்கேற்ற மாதிரி சின்ன வீடு கட்டி வாழ்ந்திருக்காங்க..... இதெல்லாம் அங்க இருந்த பாட்டி ஒண்ணு சொல்லித்தான் தெரியும்.... ஏன்னா அவங்களுக்கு முக்கியமான தருணங்கள்ல உதவினது அந்தப் பாட்டி தானாம்.... அவங்களும் தங்களோட தோட்டத்தில காய்பிஞ்சு வரும்போது பாட்டிக்கு குடுப்பாங்களாம்..... ஆக அவங்க பரஸ்பரம் ஒற்றுமையாப் பழகினது அந்தப் பாட்டி கூடத்தான்.... அப்புறம் அந்தப் பாட்டி ஊர்ல இருக்கிற தன்னோட பொண்ணு, பேரக்குழந்தைகளோட இருக்கப்போறன்னு போய் இருக்கு.... போய்ட்டு இடையில ஒரு தடவை திரும்பி வந்தப்போ அந்தப்பொண்ணு பூ பொட்டில்லாம இருந்திருக்கு.... விசாரிச்சப்போ புருஷன் அக்ஸிடெண்ட்ல செத்திட்டதாவும், தான் தன்னோட குழந்தைக்காக மட்டும் தான் இருக்கிறதாவும் சொல்லி அழுது இருக்கு.... பாட்டியும் தன்னால முடிஞ்ச அளவு சமாதானப்படுத்தி ஒத்தாசையா இருந்திருக்கு.... தன்னோட பொண்ணையும் குழந்தையையும் பாத்துக்கிற மாதிரி இவங்களைப் பாத்திருக்கு..... அப்புறம் ஒரு ரெண்டு மாசம் கழிச்சு.... பாட்டியோட பொண்ணு உண்டாகி இருக்கிறதா ஊர்ல இருந்து தகவல் வந்திருக்கு.... பாட்டியும் இவங்க கிட்ட சொல்லிட்டு அங்க போயிருக்கு..... அங்க போன பாட்டி வருஷக்கணக்காத் தங்க வேண்டியதாப்போச்சு..... ஆனா அப்பவும் அவங்க தொலைபேசி அழைப்புகள்ல இருந்து தான் இருக்காங்க.... அப்புறம் போன் இவங்களுக்கு றீச் ஆகல.... பாட்டி ஃபோன் ஏதும் பிரச்சினையா இருக்கும்னு நினைச்சு விட்டிருக்கு..... அதுக்கப்புறம் ஒரு மூணு வருஷம் ஒரு தொடர்புமில்லாம விட்டுப்போச்சு.... பாட்டியும் இங்க வரல... தொடர்ந்து ஒண்ணும் பேசாம இருக்கமேனு கடுதாசி போட்டிருக்குப் பாட்டி.... அப்பிடி ஒரு வீடே இல்லனு லெட்டர் திரும்பி வந்திருக்கு.... என்னவோ ஏதோனு பயந்து பாட்டி இங்க வந்து பாத்திருக்கு..... அவங்களோட வீடு சின்னாபின்னமாகிக் கிடந்திருக்கு..... பதறிப்போன பாட்டி போலீஸுக்கு தகவல் குடுத்திருக்கு..... அவங்க வந்து பாத்திருக்காங்க.... அவங்க ரெண்டு பேரையும் யாரோ கொலை செய்திட்டதாவும் அவங்களைக்கூடிய சீக்கிரம் கண்டுபிடிப்போம்னும் வாக்கு குடுத்திட்டுப் போய் இருக்காங்க..... இன்னைக்கு வரைக்கும் ஒண்ணையும் கண்டுபிடிக்கல.... நாங்களும் அவங்க இருந்த இடத்தைப் போய்ப் பார்த்தோம்... ஒரே பனைமரமும், தூர்ந்து போன கட்டிடமும், பாழடைஞ்ச கிணறும்.... ஆனா அந்த மாமரம்... அது தான் எப்பிடி அவ்வளவு செழிப்பா இருக்குதுனு தெரியல' என்று பெரு மூச்சு விட்டார் சந்தானம்.... அவர் கடைசியாச் சொன்னதைக் கேட்டதும் இனியனின் இதயம் ஒரு முறை அதிர்ச்சியில் துடித்து அடங்கியது.... ஏன்னா ஆதிராவோட கனவுல வாற அதே இடத்தைத் தான் இவர் சொல்றார்னு புரிந்துகொள்ள அவ்வளவு புத்திசாலித்தனம் தேவையில்லை.... ஆக அவன் 'அதனிடம்' இருந்து தப்பிக்க 'அதனிடத்தே' விழுந்த மாதிரி.... ஏன்னா அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடவும் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றவும் தான் இனியன் இவ்விடம் வந்ததே.... மொத்தத்திலே ரெண்டும் வேற வேற இல்ல.... இதைக் கண்டுபிடிச்சாலே பாதி விஷயம் ஓகே ஆகிடும்.... அவரே தொடரட்டும்னு பேசாமலே இருந்தான் இனியன்.... சிறு நேர இடைவெளியின் பின் தொடர்ந்தார் சந்தானம்....
'அதுக்கப்புறம் என்ன பண்றதுனு தெரியல.... யாருமே இல்லனு அநாதரவா நின்ன பொண்ணையும் குழந்தையையும் கொல்ல என்ன மோட்டீவ் இருக்கும்? கொள்ளை தொடர்பானதா இருக்க வாய்ப்பில்லை..... ஏன்னா சம்பந்தப்பட்டவங்க பெரிய தலைகள்.... அவங்களட்ட வேண்டப்பட்ட ஏதாவது இவங்களட்ட இருந்திச்சா? இல்லனா அவங்க பற்றிய ரகசியம் ஏதும் இவங்களுக்குத் தெரிஞ்சுதா? இல்ல வேற ஏதும் மோட்டீவா ஒண்ணுமே புரியல.... சரினு அந்தப் பாட்டிகிட்டக் கேட்டு அவங்க சொந்த ஊருக்குப்போனம்..... அது உங்க அம்மா கலைவாணிக்கும் சொந்த ஊர்.... சோ உங்கப்பாவுக்குத் தெரிஞ்ச நிறையப்பேர் இருந்தாங்க.... விசாரிக்கவும் வசதியா இருந்திச்சு.... ஆனாப் புரொப்லம் (problem) என்னனா அவங்க யாருக்குமே அந்தப் பொண்ணைப் பத்தி ஒண்ணுமே தெரியல..... அப்போ தான் ஒரு விஷயம் தெரிய வந்திச்சு..... அவங்க ஊர்ல ரெண்டு விதமான ஆக்கள் இருக்காங்க..... ரெண்டு பேருமே ஒரே மதமா இருந்தாலும் அவங்கவங்களோட வழிபாட்டு முறை வித்தியாசம்...... உணவுமுறை வித்தியாசம்.... சாதி ஏற்றத்தாழ்வுனு இல்ல.... ஆனா அவங்க பழக்கவழக்க வித்தியாசத்தால இரு குழுவாப் பிரிஞ்சிருந்தாங்க.... இரு குழுவும் பரஸ்பரம் ஒற்றுமையாப் பழகிக்கிறதும் இல்ல.... சண்டை போட்டுக்கிறதும் இல்ல... அதோட ஒருத்தங்களப் பார்த்தா நோமலா சிரிச்சு தலையாட்டிட்டுப் போவாங்க..... உறவுனு வச்சுக்கிறதில்ல..... அவங்களுக்குள்ள வரியர் (barrier) போட்டு வாழ்ந்து வந்தாங்க.... உங்கப்பா அதிக காலம் அங்க இருக்காததால அவருக்கு இதைப்பத்தி ஒண்ணும் தெரியல.... உங்கம்மா உறவுக்காரங்களோட கதைச்சு அந்தப் பொண்ணு நம்ம சைட் இல்லனு தெரிஞ்சுக்கிட்டோம்.... அப்போ மற்ற சைட் விசாரிக்கணும்.... ஆனா எப்பிடி? நாங்க தான் இந்த சைட் ஆச்சே..... இதைக் கேட்டப்போ..... 'அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்ல..... நாம உறவுனு வச்சுக்கிறதில்லயே தவிர வந்தாரை உபசரிக்கிறதில ரெண்டு சைட்டுமே பெஸ்ட் தான்..... சோ நீங்க தாராளமாப் போய் வரலாம்னு துணைக்கு எங்க கூட நம்மாளு ஒராளையும் அனுப்பி வச்சாங்க.... நாம அங்க போனது பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திச்சு.... அங்க போனதும் எங்கள ரொம்ப நல்லாவே வரவேற்று உபசரிச்சாங்க.... வேற்று ஆள் மாதிரி பாக்கல.... நாங்களும் சுத்தி வளைக்காம நேரடியாவே கேட்டம்..... அந்தப் பொண்ணப் பத்தி..... அதுக்கு அவர் 'அந்தப் பொண்ண எனக்குத் தெரியும்பா.... ஆனா முழுவிபரம் தெரியணும்னா அவங்களக் கேளுங்கனு ஒரு வீட்டைக் கைகாட்டினார்.... நாங்களும் அங்க போனம்.... அங்க ஒரு பொண்ணு தன்னோட ரெண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டிருந்திச்சு.... அது செத்த பொண்ணோட அண்ணியாம்... அவங்களுக்கு அவ இறந்த விபரமே தெரியல.... ரெண்டு குழந்தைங்களக் கரை சேர்க்கிறதுக்கே படுற பாடில்ல.... நாட்டு நடப்ப எங்க பாக்கனு உதாசீனமாக் கைய விரிச்சா..... என்ன உலகம்டானு நொந்திட்டு... இறந்த பொண்ணோட கணவன்ட அக்காபுருஷன்ட போனம்.... எதிர்பாத்ததுக்கு மாறா அங்க கொஞ்சம் கவலை தெரிஞ்சுது.... பாசத்தில இல்லனாலும் மனிதாபிமானமான ஒரு கவலை..... அதைத்தவிர விபரம்னு அவங்களுக்கும் தெரியல... என்னடா இதுனு தலைல கையை வச்சிட்டு வெளில வந்தோம்.... அப்போ தான் அவங்களப் பார்த்தோம்.... இறந்த பொண்ணோட வயசுமட்டத்தில இருக்கக்கூடிய நாலு பொண்ணுங்க..... அவங்களட்டப் போய் விசாரிச்சோம்.... அவங்க சொன்னது இது தான்.... ' அவ ரொம்ப நல்ல பொண்ணு அங்கிள்... எல்லார்கூடவும் ரொம்ப நல்லாப் பழகுவா..... நல்லாப்பாடுவா..... ஸ்டேட் ஃபர்ஸ்ட்லாம் வந்திருக்கா.... நல்ல ஹெல்ப்பிங் மைண்ட்.... பாக்கவும் ரொம்ப அழகா இருப்பா..... அவளுக்கு இப்பிடி ஒரு முடிவு வந்திருக்க வேணாம்... சம்ரைம்ஸ் (sometimes) ரொம்ப டிப்ரஸ்ட்டா (depressed) இருப்பா.... ஏன்டீனு கேட்டா.... 'தப்புத் தப்பாக் கனவுலாம் வருதுடி..... யாரோ சொல்றாங்க.... அவங்க பொண்ணு எப்பிடி அணுஅணுவாத் துடிச்சுச் செத்தாளோ.... அதைவிட நான் அனுபவிச்சு சாவனாம்..... மனசறிஞ்சு யாருக்கும் நான் தப்புப் பண்ணதில்லடி..... தொடர்ந்து இந்தக் கனவு.... ரொம்ப வலிக்குது' என்டு சொல்லுவா..... கடைசியா எப்பிடி இறந்தாளோ தெரியல.... இன்னைக்கு அவ இல்ல.... எங்கள விடக் குளோசா (close) அவளுக்கு ஒரு பிரண்ட் இருக்கா.... அவங்க பெயர் தெரியல..... ஆனா அவங்க உங்க ஆளுங்க தான்.... எப்பிடி அவ கூடப் பழக்கமாச்சுனு தெரியல.... ஆனா அவங்கனா இவளுக்கு உயிர்... அவங்க இப்போ இங்க இல்லப் போல.... கல்யாணம் பண்ணிக் கஸ்பன்டோட அவங்க ஊருக்குப் போய்ட்டா என்டாங்க..... மறுபடியும் இன்னொரு ஊரானு ஏக்கமா அவங்களப் பாத்தோம்.... ஆனா அவங்க அந்தக் கஷ்டத்தை எங்களுக்குத் தரல.... ஏன்னா அவ எந்த ஊருக்குப் போனானு அவங்களுக்குத் தெரியல..... மறுபடியும் முட்டி மோதி முட்டுச்சந்தில நின்னோம்....
சரி... முடிஞ்சளவு விசாரிச்சாச்சு.... அவங்களுக்கு எதிரிங்கனு யாரும் இருந்ததா இல்ல..... சோ திரும்பக் காவியன்பட்டுக்கே போய் விசாரிப்போம்னு வெளிக்கிட்டோம்..... இதுக்கிடேல விசாரணைக்காக ஒவ்வொருமுறை போகும்போதும் எங்க சைட்ல இருந்து வேற வேற ஆக்களயும் கூட்டிப் போய் அவங்க சைட் ஆக்களோட கதைக்க விட்டோம்..... அங்க இருந்த பத்து நாளைக்குள்ள ரெண்டு சைட்டா இருந்தவங்க ஒட்டுமொத்தமா ஒண்ணாகிட்டாங்க..... ஏதோ நம்மளால முடிஞ்ச மிகப் பெரிய மாற்றம்..... அந்தத் திருப்தியோடவே காவியன்பட்டுக்குத் திரும்பினோம்..... வழி வழியாப் புலம்பிட்டே வந்தாரு உங்கப்பா.... ரொம்ப நல்ல பொண்ணுனு தோணுதுடா..... அநியாயமாக் கொன்னுட்டாங்கனு.... அப்பிடிக் கதைச்சிட்டே போகும் போது 'டமார்'னு பெரிய சத்தம்.... நாங்க போய்ட்டிருந்த வாகனம் பெரிய கன்டரோட மோதிட்டு..... டிரைவர் ஸ்பாட் அவுட்... எனக்குக் கால்ல நல்ல அடி..... உங்கப்பாவுக்குத் தலையில.... சுத்திமுத்தி நல்ல ஆஸ்பத்திரி இல்லனு வேற வாகனம் பிடிச்சு பேசாம சொந்த ஊருக்கே கொண்டுவந்தம்.... அவனுக்கு இப்பிடி ஒரு முடிவு வரும்னு நினைக்கவே இல்ல' என்று கண்கலங்கினார் சந்தானம்....
இனியனுக்கும் தந்தை பற்றிய துக்கம் தொண்டையை அடைத்தது..... ஆனால் கலங்கி நிற்கும் நேரமல்ல அது.... அதனால் சந்தானத்திடம் சில குறிப்புகளைப் பெற்றுக் கொண்டு நன்றி கூறிப் புறப்பட்டான்.... போகும் போது தங்களுடைய குடும்பப் பிரச்சினையும் சொல்லித்தான் சென்றான்.... அந்தப் பிரச்சினை கிருஷ்ணமூர்த்தியின் (இனியனின் அப்பா) இறப்போடு முடிந்ததாக எண்ணியிருந்த சந்தான மூர்த்திக்குத் தூக்கிவாரி் போட்டது... அது இன்னும் தொடர்ந்திட்டே இருக்குனு அப்போதுதான் புரிந்து கொண்டார்....
இனியன் போகும் வழியெல்லாம் இந்த நினைவுகளுடனே சென்றான்.... தனது அப்பாவைக் கொண்டு சாதிக்க முடியாததை தங்களைக் கொண்டு சாதிக்க நினைக்கிறது 'அது'... தன்னைக் கொன்றவர்களைக் கொல்லாமல் ஏன் வெளிப்படுத்தக் கேட்கிறது.... தங்களுக்கிழைத்த அநீதி வெளிவர வேண்டுமென்றா? 'அது' ஒன்றா இல்லனா அம்மாவும் பிள்ளையுமா இரண்டா? சந்தானமூர்த்தி அங்கிள் சொல்வதைப்பார்த்தால் இரண்டு போலத்தான் உள்ளது.... ஆதிராவின் கனவுகளும் அப்படித்தான்.... அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையவில்லை எனில் அதன் மறுபிறப்பாக ஆதிரா இருக்க முடியாது.... ஆதிரா மறுபிறப்பெனின் அந்தப்பெண்ணின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.... அவர்கள் இரண்டுபேருமாக இருப்பதால் இரண்டு ஆத்மாவுமே சாந்தி அடையவில்லையா?
அவர்கள் ஏன் நம்மிடம் வந்திருக்கிறார்கள்? அப்பா பத்திரிகையாளர் என்பதாலா? இல்லையே அப்படியானால் அப்பாவின் இறப்பின் பின் நம்மை அணுக மாட்டார்கள்.... அது மட்டுமல்லாது முன்னொரு காலத்தில்.... 'உங்களுக்கோ அல்லாவிடினும் உங்க குடும்பத்தினருக்கு உண்மை தெரிய வரும்' என்று அப்பாவிடம் கூறியிருக்கிறார்கள்..... இதன் பொருள் என்ன? அவனது குடும்பத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதைக் கூறியிருக்கிறார்கள். அந்த உண்மை தெரிய வரும்போது அப்பா இருக்க மாட்டார் என்பதையும் கூறியிருக்கிறார்கள்....இனியனுக்குக் கண்கள் பனித்தது.... அப்பா இன்று அவர்களிடம் இல்லை..... அவன் குடும்பத்திற்காக நாயாய் அலைந்து கொண்டிருக்கிறான்..... அப்பா பார்த்துப் பார்த்து வளர்த்த அவரின் செல்ல மகன்.... முக்கியமாக ஆதிராவின் கல்யாணத்தை நிறுத்துவதில் அவர்களுக்கு என்ன இலாபம்? அகரன் சிறிதும் களங்கமற்றவன் என்பது திண்ணமே..... வீட்டில் எல்லோரையும் தம் கட்டுக்குள் வைக்க நினைக்கின்றனவா? ஆனால் அம்மா இந்த மாதிரி கனவுகள் பற்றி எதையும் அவர்களிடம் சொன்னதில்லை.... கலைவாணிக்குப் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் குறைவு தான்.... அதனால் இந்த கொலை பற்றித் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை..... அவர் பொதுவாக ஏதும் கனவு வந்தால் அதைப் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கமுள்ளவர்.... அப்படி ஏதும் சொல்லாததால் அவருக்கு அது பற்றிய கனவுகள் தோன்றவில்லையா? இல்லையெனில் பயம் காரணமாக மறைத்திருப்பாரோ? இல்லையென்றால் அம்மாவைத் தவிர நம் மூவருக்கும் மட்டும் தான் அவர்களுடன் தொடர்புள்ளதா? அம்மாவுக்கில்லையா? அம்மாவை அது பற்றிக் கேட்க வேண்டும்.... அது மட்டுமல்லாது இதைத் தீர்ப்பதற்கு ஒரே வழி காவியன்பட்டுக்கு சென்று முதலில் தீர விசாரிப்பது தான்.... அதுவும் அவர்கள் வாழ்ந்த இடத்தையும் நன்றாகப் பார்க்க வேண்டும்..... இன்றிரவே காவியன்பட்டுக்குச் செல்ல வேண்டுமென்றும், இதற்கொரு முடிவு கட்டுவதென்றும் கங்கணம் கட்டிக் கொட்டான் இனியன்.... அவனது யோசனையைக் குழப்பியது ஃபோன் கோல்..... அழைப்பை ஏற்றவன் காதில் கணீரென ஒலித்தது அபிநயாவின் குரல்.... பொது விஷயமாக வெளியூர் சென்றிருந்த சாமியார் வந்துவிட்டதாகவும் ஆதிரா, அம்மா கலைவாணி, அகரன் மற்றும் குடும்பத்தினர், அபிநயா குடும்பம் எல்லாரையும் அன்றிரவே அவரது இடத்திற்கு வருமாறு கூறியதாகவும் கூறினாள்.... அதனால் காவியன்பட்டு பயணத்தைத் தற்காலிகமாகத் தள்ளி்ப் போட்டுவிட்டு சாமியாரைச் சந்திக்க உரிய ஆயத்தங்களைச் செய்யுமாறு கூற வீட்டுக்கு விரைந்தான் இனியன்.
(அனைத்து வாசகர்களின் அனைத்து விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன
)