• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
மழையில் ஒரு குத்தாட்டம் போட்டவள், தங்கை வயசுக்கு வந்து விட்டாள் என நினைத்து, அடித்துப் பிடித்துக்கொண்டு வீடுநோக்கி ஓடினாள்.


அந்த குடிசை வீட்டின் முன் பலர் திரண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு, அங்கு நடப்பது பெரிய மனுசியானதற்கான சடங்கு இல்லை என்பது புரிந்தது.


கூட்டத்தின அருகில் சென்றவள் காதினில்,


"என்னடி இப்படியாகிப்போச்சு? வட்டிக்கு விட்டவன் இந்த கத்து கத்தினதுக்கா இந்தாள் இப்பிடி போயிட்டாரு..!

ரெண்டும் பொட்ட புள்ளைங்களாச்சே..

இதுங்களை இந்திரா எப்பிடி கரை சேர்க்க போறாளோன்னு தெரியலையே!
அந்த மனுஷன் இருந்தாலாவது.. ஏதோ கூலி வேலை செய்தாவது குடும்பத்தை பாத்திருப்பான்.

ம்..ஹீம்... எங்களால வருத்தப்படத்தான்டி முடியும்...
எங்க புளைப்பே.. களை புடிங்கினாத்தான் கஞ்சினு ஆகிக்கிடக்கு." என்று அங்கு நின்ற பெண்கள் ஒன்று கூடி பேசுவதை கேட்டவளுக்கு, ஏதோ விபரீதம் என்று புரிந்தாலும், என்ன என்பது தெரியாமல், அந்த குடிசைக்குள் கூட்டத்தை விலக்கி முன்னேறினாள்.



"எங்கம்மா போயிட்டு வார? வீட்டில இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு... நீ என்னடான ஆடிப்பாடி மழையில நனைஞ்சு வந்திருக்க," என கேட்ட பெரியவரிடம்.




"கோவில் போனேன்... இடையில மழை வந்திடிச்சு..." என தயங்கியவாறு சொன்னவள் குரல் கேட்டு, உள்ளிருந்து அழுதவாறு ஓடி வந்து கட்டிக்கொண்டாள் அவள் தங்கை ஜனனி.


தங்கை அழுகிறாள் என்பது அவளுக்கு நன்றாக தெரிகிறது. ஆனால் எதற்கு அழுகிறாள் என புரியாமல்,




"ஜனா என்னாச்சு? எதுக்கு காலையிலேயே வீட்டு முன்னாடி இத்தனை பேர் கூடி நிக்கிறாங்க?" என்றவளை நிமிர்ந்து பார்த்த அவளது தங்கை.



"உள்ள வந்து பாருக்கா!" என்று உள்ளே அழைக்க,

வாசல் கதவு தலையில் அடிபடாமல் தலை குனிந்து உள்ளே சென்றவள் கண்களில்,
வெள்ளை வேட்டி சட்டையோடு, மாலை அணிவித்து, மேல் புறத்தினில் ஊதுபத்தியோடு விளக்கும் ஏற்றப்பட்டு, பெஞ்ச்சின் மேல் வெள்ளை துணி விரித்து படுக்க வைக்கப்பட்டிருந்த தந்தையை கண்டதும்,


நடப்பவை அணைத்தும் உண்மை தானா? இல்லை தான் ஏதாவது கெட்ட கனவு கண்கிறேனா? என தெரியாமல் சிலைபோல் ஆகிவிட்டாள்.




காலையில் அவளை எழுப்பி விட்டவரே அவர் தான் எனும்போது, இதை அவளால் எப்படி நம்பிட முடியும்?
உயர்தர பரீட்சை எழுதி விட்டு, மூன்று மாதங்கள் பாடசாலையில்லாமல் காலை எட்டுமணி வரை, இழுத்துப்போர்த்தி தூங்குவாள் மைலி.



நேற்றைய தினம் தூங்கும்போது, வேளையோடு வயலுக்கு செல்லும் தந்தையிடம்,


"நீங்க எழுந்திருக்கும் போது என்னையும் காலையில எழுப்பி விடுங்கப்பா.. தேனு கோவிலுக்கு போகலாம்னு கேட்டாள். நானும் நாளாச்சு போயி." என்றதும்.


"சரிம்மா" என்று கூறியவர், அதிகாலை ஐந்து மணிக்கே எழுப்பி விட்டவரை,



"எதுக்கு இத்தனை காலையில எழுப்பி விட்டீங்க?" என சண்டை போட்டவாறு தான் கோவிலுக்கு அவள் தயாரானதே!


காலையில் நன்றாக இருந்தவர், இப்போது இந்த நிலையில் கிடந்தால் யாரால் நம்ப முடியும்?


அவரது அத்தகைய நிலையினை பார்த்து அதிர்ந்து சிலைபோல் நின்றவளை, கட்டிக்கொண்டு அழுத ஜனனி.



"அக்கா.....! அப்பா நம்மள விட்டு போயிட்டாருடி! இனி நமக்குன்னு யாருமில்லை.. அம்மாவை பாருக்கா! அப்பாக்கு இப்பிடியானதில இருந்து எதுவும் பேசாம அப்பாவையே பாத்துட்டு இருக்காங்கடி! எனக்கு ரொம்ப பயமா இருக்கு." என்றவள் பேச்சை கேட்டு தாயிடம் திரும்பினாள் மைலி.



கணவனை கிடத்திய வாங்கோடு ஒட்டியிருந்தவாறே, கையில் இருந்த வேம்பிலையால் ஈயினை விரட்டியவாறு இருந்தவர் கண்கள், கணவன் முகத்திலிருந்து இம்மியும் அசையவில்லை.


பேச்சுக்கு கூட துளி கண்ணீர் வெளிவரவில்லை.

அவளையே பார்த்திருந்த அத்தனை கூட்டத்தினருக்கும் ஆர்ச்சர்யம் தான்.



உயிரில்லாத உடலாக நடு வீட்டில் கணவன் கிடக்கின்றான். மனைவியோ பெயருக்கும் கண்ணீர் சிந்தாமல் கணவனையே பார்த்திருப்பது.



இத்தனைக்கும் இருவரும் மனமொத்த தம்பதிகள்.
இருவருக்குள்ளும் பெரிதாக பிரச்சினை வந்தது இல்லை.

கணவன் ஒரு விடையம் பிடிக்கவில்லை என்றானே ஆனால், அது அன்றிலிருந்து இந்திராவிற்கும் பிடிக்காது.
மைலியினால் தான் வீட்டில் இடையிடை இருவருட்குள்ளும் சண்டை என்பதே வரும்.


மைலி அப்பா செல்லம்.
வீட்டில் மூத்தவள் என்ற பொறுப்பில்லாமல் நடக்கும் மகளை இந்திரா கண்டித்தால் போதும்.


உடனேயே அவளுக்காக வக்காளத்து வாங்கிக்கொண்டு வந்துவிடுவார் ராமசாமி.
அவரது இந்த மாதிரியான நடத்தைகள் பிடிக்காமல்,



"ஆமா...! வாங்க... எங்கடா அவளை திட்டினதும் குடை பிடிச்சிட்டு வறவரை காணலயேன்னு நினைச்சேன்..
இப்பிடி செல்லம் குடுத்தே கெடுத்து விடுங்க..
நாளைக்கு வாழப்போற வீட்டில, என்னை தான் குத்தம் சொல்லட்டும்.



ஏற்கனவே உங்க தங்கை, எங்ககிட்ல எதுவும் இல்லன்னு மதிக்கிறது கிடையாது.


இதில இவ எதுவும் தெரியாம, அவங்க வீட்டுக்கு வாக்கப்பட்டு போயிட்டான்னா, என்னைத்தான் திட்டியே தீத்துடுவாங்க" என்றவும்.



"என் பொண்ணு உன்னை போலவா? அவ புத்தி சாலிடி! போற இடத்தில புளைச்சுப்பா... இல்லையாடாம்மா!" என அவளது தலையினை வருடினால்.



"ஆ.. ஊனா அப்பனும், பொண்ணும் என்னை விசரியாக்கிட வேண்டியது..
என்னமோ பண்ணுங்க.. நாளைக்கு கஷ்டபடப்போறவ அவதானே! எனக்கென்ன வந்திச்சு." என்று போய் விடுவாள் இந்திரா.




அந்தளவு கணவன்மேல் மரியாதையும் பாசமுள்ளவள்.. சிறுதுளி கண்ணீரும் சிந்தாமல் இருப்பதை கண்டவள்,


தன்மேல் விழுந்து அழும் தங்கையை விலக்கி விட்டு,
தாயருகில் சென்றமர்ந்தவள், அவர் தாடையினை தன்புறம் திருப்பி,


"அம்மா...". என அழைத்ததும் தான் மூத்தவளை கண்டவர்,



"பாருடி உன் அப்பாவ... எங்களை எல்லாம் இந்த மாதிரி அனாதையா விட்டுட்டு போயிட்டாரே....
எப்பவும் உன்னை நான் திட்டும்போது, உனக்காக பரிஞ்சு பேசி என்கிட்ட சண்டைக்கு வாற மனுஷன பாருடி!" என அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை,
மகளை கண்டதும் மொத்தமாக கொட்டித் தீர்த்தார்.


ஏற்கனவே தந்தையின் நிலையில் கலங்கிப்போயிருந்தவள், அன்னையின் அழுகையும் சேர்ந்து அவளை கதறவைத்தது.



தாயும் இரு மகள்களும் சேர்ந்து அழும் காட்சி சுற்ற நின்றவர்கள் மனங்களை கரைத்தது.


ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லாமல், அவர்களும் கண் கசிந்தனர்.
அழுது ஒரு கட்டத்தின் மேல் முடியாமல் ஓய்ந்தவள்.


"என்னம்மா ஆச்சு அப்பாவுக்கு? நான் கோவில் போறப்போ நல்லா தானே இருந்தாரு.. இப்பிடி சுத்த நின்னு நாங்க கதறுறது கூட கேக்காம இந்த மாதிரி கிடக்கிராரேம்மா!" என்று மீண்டும் கதறியவளின் அருகில் வந்த, பக்கத்து வீட்டு பெண் ஒருத்தி.


"அம்மாடி...! இப்போ ஆகவேண்டிய காரியத்தை பார்ப்போம்டா! பிறகு என்ன ஏதுன்னு விசாரிச்சுக்கோ! உங்களுக்கும் ஆண் துணைன்னு யாருமே இல்ல..

பிணத்தை நடு வீட்டில வைச்சுகிட்டு கதை பேசுறதும் அழகில்லம்மா.. நடக்க வேண்டிய காரியங்களை முதல்ல பாப்போம்." என்றார்.


தந்தை இறந்ததன் காரணம் தேரியாமல் எப்படி? என்று மனம் அடம்பிடித்தாலும். அவர் சொல்வதும் நியாயமாகப்பட்டது.



"சரி அக்கா.." என்றவாறு எழுந்தவள்,
தாயையும் தங்கையுடனும் ஓரமாக அமர்ந்து அழ..


ஈமக்கிரிகைகள் செய்யும் ஐயரும் வந்து, அதன் கிரிகைகளையும் முடித்தவர், சடலத்தை வீட்டிலிருந்து தூக்கியதும், கதறத்தொடங்கினார்கள்.


இந்திரா மயக்கமடித்தே விழுந்து விட்டாள்.

பலரது கதறலுக்கு மத்தியில் ராமசாமியின் உடல், அந்த குடிசை வீட்டிலிருந்து சுடுகாடு நோக்கி பயணமானது.
அவருடனே சேர்ந்து அங்கு பாதி கூட்டமும் சென்று விட,



ராமசாமியின் இறப்பு செய்தியறிந்து, கிரிகை நேரத்திற்கு தகுந்தாட்போல் வந்த அவர் தங்கை ஹேமாவதி, ராமசாமியின் உடல் வீட்டை விட்டு சென்ற மறுநொடியே அவரும் சென்று விட்டார்.

பெண்கள் மூவருக்கும் ஆறுதல் கூறக்கூட அவருக்கு தோன்றவில்லை.



ராமசாமியின் உடலை தகனம் செய்த செய்தி வந்து, இரண்டு மணி நேரமாக அழுது புலம்பியவர்கள், இதற்கு மேல் அழ முடியாமல், மண் சுவற்றோடு சாய்ந்து அமந்திருந்த மைலி, இந்திராவின் தோளில் சோர்ந்து சாய்ந்திருக்க, ஜனனி தமக்கை கால்களில் விம்மியவாறு படுத்திருந்தாள்.


மூவருக்கும் ஆறுதல் கூறக்கூட நாதியற்று, தனிமையில் அழுவதை கண்ட அயல் வீட்டு பெண்னொருத்தி.
வீட்டிலிருந்து எடுத்து வந்த, செம்பு நீரினை...



"அக்கா இதை குடியுங்கக்கா! காலையில இருந்து எதுவும் சாப்பிடவும் இல்ர... தண்ணியும் குடிக்கல.. அழுதழுதே தொண்டை காஞ்சிருக்கும்." என்று இந்திரா முன் நீட்டினாள்.



சின்னவள் அதை வாங்கி, தன் காய்ந்த தொண்டையினை நனைத்து விட்டு,
"இந்தாக்கா நீயும் குடி!", என தமக்கையிடம் தந்தாள்.
அதை வாங்க மறுத்த மைலி..
முன் நின்ற பெண்ணை பாவமாக பாய்த்தவாறு,



"அக்கா.... இப்போவாவது அப்பாக்கு என்னாச்சுன்னு சொல்லுங்களன்." என்றவளது நின்ற கண்ணீர் மீண்டும் அவள் கன்னங்களை நனைக்க ஆரம்பித்தது.


அவள் முன் நின்றிருந்தவளுக்கு மைலியை பார்க்க பாவமாக போய் விட்டது.



ஏற்கனவே ஒரு உயிர் போய் கவலையில் இருப்பவளுக்கு, நடந்ததை கூறி இன்னும் அவளை வேதனை படுத்த விரும்பாமல்,



"இப்போ எதுக்கும்மா? அது தான் உன்னோட அப்பா உங்களை விட்டு போயிட்டாரே விடு!" என ஒதுங்கியவள் கையினை இறுக பற்றியவள்,




"அக்கா பிளீஸ்க்கா... போனது என்னோட அப்பா உயிர்க்கா! அது எப்படிப் போச்சுன்னு எனக்கு தெரியக்கூடாதா? எதுக்கு எல்லாரும் அப்பா பேச்சை எடுத்ததும், உண்மைய எனக்கு சொல்லாமல் மறைக்கிறீங்க? அப்பிடி என்னதான் அப்பாவுக்கு திடீர்ன்னு ஆச்சு?" என கதறினாள் மைலி.


இருக்காத பின்னே!
முத்தவள் மேல் உயிரை வைத்திருந்த தந்தையை சுடுகாட்டில் கொண்டுபோய் அவர் உடலை தீக்கு இரையாக்கியாக்கி சாம்பலும் ஆகியிருப்பார்.



ஆனால் அவர் செல்ல மகளுக்கு தந்தை இறந்ததன் காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த கொடுமை எங்கே நடக்கும்?
அந்த இயலாமையில் மைலி மீண்டும் கதறத்தொடங்க.



"அக்கா..." என அவளை கட்டிக்கொண்ட ஜனனி.



"நான் சொல்லுறேன்க்கா! நீ இந்த தண்ணியை குடி!" என்று செம்பினை அவளிடம் நீட்ட.
இம்முறை மறுக்காமல் வாங்கி, ஒரு சொட்டு நீரினை மிச்சம் வைக்காமல் குடித்தவள்,



"சொல்லு ஜனா அப்பாவுக்கு எப்பிடி தீடீர்ன்னு இப்படியாச்சு?" என்றாள்.
"அப்பாவுக்கு,.......". என இரண்டு தடவைகள் விம்மியவள்.



"காலையில உன்னை கோவிலுக்கு அனுப்பின கையோட, அப்பா தோட்டத்துக்கு போனாருல்லக்க" என ஆரம்பித்தாள்.


மைலியை ஐந்து மணிக்கே எழுப்பிய ராமசாமி.




"அம்மாடி..! நீ கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு தூங்கிட்டிருக்க. எழும்பும்மா.. அந்த பொண்ணு எழுந்து வெளிக்கிட்டிருக்க போற.... நீ தூங்கிட்டிருக்க" என அவளை எழுப்ப,




"அதுக்குள்ள விடிஞ்சிட்டுதாப்பா!" என மழை குளிருக்கு தலைவரை போர்த்திபடுத்திருந்தவள், கழுத்துவரை போர்வையை விலக்கி, கண்களை மெதுவாக திறந்து பார்த்தவள் கண்களுக்கு,
வீடு முழுவதும் கடும் இருட்டாக இருக்க,


அவளை எழுப்பிய ராமசாமியின் முகம் மட்டும் அவர் பிடித்திருந்த சிமிலி விளக்கு வெளிச்சத்தில் தெரிய,


தூக்கம் கலைந்து கண்களை இருமுறை கசக்கினாள்.




"என்னப்பா இருட்டா இருக்கு? சரியா தெரியுமா? விடிஞ்சதுக்கப்புறமா தான் எழுப்புறீங்களா?" என சந்தேகத்தோடு கேட்டவளை பார்த்து சிரித்தவர்,




"விடிஞ்சிட்டுது தான்டா.. மழை காலமில்லையா... அது தான் இப்பிடி இருட்டா இருக்கு. நீ எழும்பி குளிச்சு.. தயாராக பொழுதும் விடிஞ்சிடும்" என்ற தந்தையின் பேச்சை நம்பி, நேரத்தை கேட்க்காமல் குளித்து உடைமாற்றி வந்து பார்த்தால், இன்னும் விடியாயல் இருக்க,




"என்ன இது இன்னுமா விடியல? உன்மையில என்னை எழுப்பினது அப்பா தானா? இல்லை பேய் ஏதாவது?" என நேரத்தை பார்க்க, அது ஐந்து நாட்பத்தைந்து என காட்டியது.

"ஐயோ...! இப்போ தான் ஐந்து நாப்பத்தைஞ்சா? அப்போ என்னை இந்த அப்பா என்ன நேரத்துக்கு எழுப்பினாரு?
பைத்தியக்காரி ஆட்டாம் காலையிலேயே எழுப்பி குளிருக்க குளிக்க வைச்சிட்டாரே!"
என மனதுக்குள் புலம்பியவள்.
ஜனனியும், தாயும் தூங்கிக்கொண்டிருப்பதை சற்றும் யோசிக்காமல்,




"அப்பா.. அப்பா....
என அந்த விடியற்காலையிலேயே பத்து வீடு கேட்கும் அளவிற்க்கு கோபமாக கத்த,


வீட்டின் கோடிப்பக்கம் நின்ற ராமசாமி. மைலியின் கத்தலில்,




"மைலி.... அப்பா பின்னாடி தான்டா நிக்கிறேன்.. காலையிலேயே சத்தம் போடாத.. நான் வந்திடுறேன்." என குரல் கொடுத்தார்.
இவளின் கத்தலில் கண்விழித்த இந்திரா,





"எதுக்குடி காலையிலேயே கத்த தொலையிறா... உனக்கு பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கமா நடக்க தெரியாதா..? அப்புறம் என்ன பிள்ளை வளத்திருக்காங்ன்னு ஊர் என்னை காரி துப்ப போகுது." என்றார் ஊரிச்சலாய்.






"எங்களை நல்ல பொண்ணா வளர்க்கிறது இருக்கட்டும்.. நீ உன் புருஷன சரியா வளத்திருக்கியா?" என மைலி தாயுடன் மல்லுக்கட்வ ஆரம்பிக்கும் போதே வந்துவிட்டார் ராமசாமி.


"என்னடா...? எதுக்கு அப்பாவை கூப்பிட்டா?."




"ஏன்ப்பா இப்பிடி பண்ணிங்க? நீங்க தான் சாமப்பேய் மாதிரி, அஞ்சு மணிக்கே எழும்பி.. வீட்டில ஆராச்சி பண்ணுவீங்கனா... என்னை எதுக்குப்பா இந்த நேரம் எழுப்பினீங்க? ஏதோ நான் தான் சாமிக்கு பூசை செய்ய போறவ மாதிரி அஞ்சு மணிக்கே எழுப்பியிருக்கிறீங்க..

கோவில்ல ஐயர் கூட வந்திருக்க மாட்டார்." என தந்தையோடு சண்டையிடுவது போல் பேச.




"நீ தனேடி அவரை காலையில எழுப்பி விட சொன்னா? நீ சொன்னதை அந்த மனுஷன் செய்தாரு... அதுக்கு ஊரை எழுப்புற அளவுக்கா சத்தம் போடுவ?" என கணவனை பதில் சொல்ல விடாது முந்திக்கொண்டு இந்திரா மைலியை படுத்திருந்த வாறே திட்டினார்.




"இங்க பாரும்மா... நீ பெரிய யோக்கியன் மாதிரி பேசாதா.. பாவம் கட்டின புருஷன் வேளையோட எழும்பி வயலுக்கு போராரே... அந்த மனுஷனுக்கு ஒரு தேத்தண்ணி வைச்சு குடுக்க தோணிச்சா உனக்கு? நீ பாட்டுக்கு இழுத்து போத்திட்டு படுத்து கிடக்கிற.. இதுதான் கட்டின புருஷனுக்கு நீ கொடுக்கிற மரியாதையா?" என மைலி வாயாட,
அவளை முறைத்து இந்திரா,




"யார்கிட்ட பேசுறோம் என்கினது தெரியாத அளவுக்கு வாய் கூடிப்போச்சுடி உனக்கு?" என தலைமாட்டில், செம்பு நீரிரை மூடிகிடந்த ரம்ளரை எடுத்து அவள் மேல் இந்திரா எறிய போவதை உணர்ந்த மைலி,



"யம்மாடி...! எதுக்கும்மா இதை எல்லாம் கையில எடுக்கிற? காலையிலயே கொலை கேஸ்ல உள்ள போக போறியா? என்னால நீ ஜெயில்க்கு போகாதா..நான் கோவிலுக்கே போறேன்." என்றவாறு வேகமாக வெளியில் ஓடியவள்,
ஜனா காலை கவனிக்காமல் அவள் காலில் மிதித்து விட,




"அம்மா.." என வலியில் கத்திக்கொண்டு எழுந்தவளிடம்,



"எருமை...! நீ எதுக்குடி உயிர் போறவ மாதிரி கத்துறா? எனக்கு வந்திருக்குங்க பாரு... பெயருக்குத்தான் பொட்டச்சிங்க... எல்லாம் ஊரை விழுங்கிங்க." என்றவள் பேச்சில்,


"எதுக்கு இந்தி புள்ளைங்கள திட்டுற? சின்ன பிள்ளங்கடி.... விடு நம்ம கூட இருக்குற வரை மாத்திரம் தானே சின்ன பிள்ளை தனமா இருக்க முடியும்.


இதே புகுந்த வீடுக்கு போயிட்டாங்கனா.. புருஷன் பிள்ளைங்கன்னு பொறுப்பு வந்துடும்.




அப்புறம் பிறந்த வீட்டில நடந்த சின்ன சின்ன குறும்பு... சந்தோஷங்களை மட்டும் நினைச்சு பார்க்கத்தான் முடியும்.
இங்கேயாவது நிம்மதியா இருக்கட்டும்... இங்கேயும் அப்பிடி செய்..! இப்பிடி செய் எண்டு தொல்லை பண்ணாத" என்றார்.




"அவ என்ன பேசிட்டு போறா கேட்டிங்களா? இரவு ரொம்ப தலை வலி... அதால விடிஞ்சது தெரியாம, நித்திரையா போனேன். அதுக்கு என்னை குத்தம் சொல்ருறா...." என மகள் மேல் குறை சாடினாள்.


"அவ என்ன வேணும்னா சொன்ன? விளையாட்டுக்கு உன்னை வம்பிழுத்திருக்கா.." என்றார் மகளுக்கு பரிந்து பேசுபவராய்.



"நீங்க அவகிட்ட என்னை விட்டு குடுப்பீங்களே தவிர... அவளை என்கிட்ட விட்டு குடுத்திடாதிங்கோ!" என தன் உரிமையினை, மகள் தட்டிச்சென்று விட்டாள் சிறு பொறாமை இந்திராவிடம் எட்டிப்பார்க்க,


அவளைப்பார்த்து சிரித்த ராமசாமி,



"ஏன் இந்தி... உனக்கு உன் பொண்ணுமேல பொறாமை ஏதாவது இருக்கா என்ன?" என ஓரக்கண்ணால் பார்த்தவாறு கேட்டார்.



கணவன் தன்னை கண்டு விட்டான் என்றதும்,
எழுத்து அமர்ந்துவள்... அவிழ்ந்திருந்த கொண்டையினை முடிந்த வாக்கில்,


"எனக்கென்ன அவள் மேல் பொறாமை!" என்றவாறு எழுந்து தான் படுக்கை பாயினை சுற்றியவர்,


"பல்லு விளக்கி முகம் கழுவீட்டிங்கன்னா.. தேத்தண்ணி போடுறேன்.. குடிச்சிட்டே போங்க. "
எனக்கூறி எழுந்து கொண்டாள்.



தாவும்.....
 
Top