• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தென்றல்-6

Indhu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 10, 2021
8
6
3
Coimbatore
மேடையேறிய மதுவையும் சக்தியையும் கண்டு ஆரம்பித்த கைதட்டல் ஒலி வெகுநேரம் நீடிக்க...ஒரு புன்னகையுடன் அதை பார்த்து நின்றிருந்தனர் அம்மாவும் மகனும்...

உள்ளே வந்ததும் தேஜூ அஷ்வத்தை போனில் அழைக்க...எடுத்தவன்.... "தேஜூமா பங்ஷன்ல அம்மாக்கு சர்ப்ரைஸ் பண்ண என்னை கால்ல கனெக்ட் பண்ணிருக்காங்க...சோ நீ வை...நா பார்த்துட்டுதான் இருப்பேன் பங்ஷன...சரியா...பைடா..."

சொன்னவன் அவசரமாய் வைத்துவிட... அவனுக்கு ஒரு பழிப்பை குடுத்தவள் நிகழ்ச்சியை கவனிக்க தொடங்கினாள்...

அவர்கள் ஏறியதும் வழக்கம்போல் இவர்களை பற்றிய பொதுவான குறும்படமும்...சக்தி மற்றும் மதுராவின் சாதனைகளை பற்றிய தனி தனி விளக்க படமும் காட்டப்பட....எல்லோருமே மதுவையும் சக்தியையும் சற்று பிரமிப்பாய்தான் பார்த்தனர்...

சக்தியின் கண்டுபிடிப்பு இன்றைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் சவாலான மைக்ரோ காமிராவினை பற்றியது...இவனது சிறு அளவிலான சிப் போன்ற வஸ்துவை பெண்கள் அதிக நடமாட்டமான...கடைகளில் துணி மாற்றும் அறைகள்...பள்ளி கல்லூரி மற்றும் ஹாஸ்பிடல் போன்றவற்றில் பெண்களுக்கான தனிபட்ட இடங்களில் பொருத்தி விட்டால்....அது போன்ற காமிராக்கள் எதுவும் இருந்தால் அதை காட்டி தருவதோடு செயலிழக்கவும் செய்யும்...இவனது கண்டுபிடிப்பை பெரும் முயற்சிக்கு பின் அரசும் அங்கீகரிக்க...அதன் பொருட்டே இந்த விருதும்...

குறும்படம் முடிந்து திரை அணைந்த பின்பு தொகுப்பாளர் வந்து விருது வழங்க சில பிரபலங்களை அழைக்க...வந்தவர்கள் இவர்களை வாழ்த்தி விருதையும் அளித்து போக...இறுதியில் சில வார்த்தைகள் பேசச் சொல்லி மைக் மதுவிடம் வந்தது.. போன் காலில் இருந்த அஷ்வத்திற்கு அப்போதே அல்லு விட்டது உள்ளுக்குள்..."வேண்டாமே" என மனதோடு அலறியவன் தடுக்க வழியின்றி நடப்பதை கவனிக்க தொடங்கினான்...

"சொல்லுங்க மதுரா மேடம்... சக்தி மாதிரி ஒரு சவாலான பையன வச்சுட்டு இது போன்ற சாதனைகள் எப்படி சாத்தியம்...உங்களோட கருத்துக்களை தயங்காம எங்ககூட பகிர்ந்துக்கலாம்... இந்த மேடை இப்ப உங்களோடது..."

அனைவரும் மதுராவை கவனிக்க...சிலநொடிகள் மவுனம் காத்தவள்...ஒரு முடிவாய் பேச தொடங்கினாள்...

"அனைவருக்கும் இனிய வணக்கம் மற்றும் நன்றிகள் எங்கள இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்ததுக்கு... "

மதுராவின் பணிவான பேச்சில் அஷ்வத் பயந்து போனான்...அவனுக்கு தெரியுமே அவன் அம்மாவை பற்றி...கண்டிப்பாக இன்று சரவெடிதான் என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டான்...

"சார் இப்ப என்னை ஒரு கேள்வி கேட்டார்...எப்படி சாத்தியம்னு... அதேதான் நானும் உங்ககிட்ட கேக்கறேன்...அதான எப்படி இதெல்லாம் சாத்தியமாகும்... சொல்லுங்க பார்க்கலாம்.."

கூட்டம் அமைதியாய் இருக்க...அஷ்வத்திற்கு தெரிந்து போனது...மதுவை இனி தடுக்க முடியாதென...

"ஆட்டிசம்....இது ஒரு நரம்பியல் குறைபாடு...சொல்லப்போனா இதுவும் ஒருவகை ஊனம்தான்...எப்படி சில குழந்தைகளுக்கு காது கேட்காது...பேச முடியாது...நடக்க முடியாது...அதெல்லாம் வெளியில தெரியற மாதிரி ஊனம்னா..இது உள்ளுக்குள்ள மனவகைல இருக்கற கண்ணுக்கு தெரியாத ஒரு ஊனம்....இத ஒரு ஆட்டிசம் பையனோட அம்மாவா நா ஒத்துக்கறேன்.. ஏத்துக்கறேன்...ஆனா இந்த சமூகம் இத எப்படி எடுத்துக்குது... ஏதோ தீண்ட தகாதவங்க மாதிரி.... சொல்லப்போனா இந்த சமூகத்துல வாழவே தகுதியில்லாதவங்க மாதிரி எங்கள ஒதுக்குது...இப்படி ஒரு சமூகத்துல....சூழ்நிலைல இதெல்லாம் எப்படி சார் சாத்தியமாகும்..."

அவரின் கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்....வார்த்தையின்றி அனைவரும் மதுராவை கவனித்தனர்...

"தெருவுல நாலு பசங்க விளையாடும் போது...அவங்கள பார்த்து ஆசைல என் பையன் போய் விளையாட நின்னா... அந்த நாலு பசங்களையும் கொஞ்ச நேரத்துல அவங்கங்க வீட்ல வந்து கூட்டிட்டு போய்டுவாங்க...சிலநேரம் அப்படி விளையாண்டாலும் என் பையன் உங்க பையன் மாதிரியே ஒரு டைப்பா கையாட்டி சிரிக்கிறான்...எனக்கு பயமாயிருக்குங்க..அப்படின்னு நம்ம மூஞ்சுக்கு நேராவே சொல்வாங்க...இந்த ஆட்டிசம் பசங்களோட முக்கிய பிரச்சனையே என்ன தெரியுங்களா சார்.... சமூக விலகல்...அதாவது அவங்க எல்லோர்கூடவும் சோசியல் இன்ட்ராக்ஷ்னா இருக்க மாட்டாங்க.... தனிமையா தனியாத்தான் இருப்பாங்க.... அதயும் மீறி சில குழந்தைங்க ஒரு ஆர்வத்துல இந்த சமூகத்த நெருங்குனா....பழக வந்தா... இந்த சமூகம் இவங்கள தள்ளி வைக்கும்.... நல்லா இருக்குல்ல சார் கேக்குறதுக்கு.... இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் சுத்தி இருக்கற இடத்துல இதுல்லாம் எப்படி சாத்தியமாகும்..."

அரங்கமே நிசப்தமாய் இருந்தது மதுவின் பேச்சை கேட்டபடி...

"ஆரம்பத்துல டாக்டர்ஸ்லாம் சக்திக்கு டெவலப்மெண்டு டிலேன்னு சொன்னாங்க...அப்புறம் இல்லைங்க உங்க பையனுக்கு ஹைப்பர் ஆக்டிவ் டிஸீஸ்னாங்க...லாஸ்ட்ல கண்டுபுடிச்சுட்டோம்...உங்க பையனுக்கு ஆட்டிசம்னாங்க... சொந்தகாரங்க எல்லாம் சாமி குத்தம்னாங்க...ஏதோ முன்னோர்கள் சாபம்னாங்க...ஆக மொத்தத்துல இது ஒரு குறைபாடுன்னு கூட தெரியாத இது பத்தின எந்தவொரு அடிப்படை அறிவுகூட இல்லாத இந்த சமூகத்துல இதுமாதிரி ஒரு பையன் எப்படி சாதிக்கலாம்...எப்படி முடியும்...சொல்லுங்க பார்க்கலாம்...."

"இதெல்லாம் விட ஒரு கூத்து.... வளைகாப்பு வீட்டுக்கு கூப்டாங்களேன்னு போனா....அங்க நா சந்தனம் பூசிவிட்டா அவங்க குழந்தையும் குறையோட பொறக்கும்னு என்னை ஒதுக்குவாங்க... மீறி கலந்துகிட்டா... இவங்க பேச்சுல்லாம் எனக்குள்ளயே உண்டாக்குற தாழ்வு மனப்பான்மைல அய்யோ அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோ...அந்த குழந்தை நல்லபடியா பொறக்கணுமே ஆண்டவான்னு கண்டதையும் நினைச்சு நினைச்சே நா உடம்பு முடியாம படுத்துடுவேன்....இந்த மாதிரி ஆளுங்க சுத்தி இருக்கப்ப இதுல்லாம் சாத்தியமாகுமா என்ன..."

இப்போது கல்பனாவிற்கு புரிந்தது அன்று ஏன் அஷ்வத் ஜானகி ஆன்ட்டியின் விஷேசத்திற்கு போக வேண்டாமென சொன்னானென....அர்த்தமாய் காயத்ரியை பார்க்க...அவரும் ஆமாமென்றார்...

"வெளிலதான் புரியாம பண்றாங்கன்னு என்னை பெத்தவங்ககிட்ட ஆறுதலுக்காக போனா...இங்க வந்தா உம்பையன் எதையாவது உடைச்சிட்டே இருக்கான்....ஓடிட்டே இருக்கான்...பேசாம இவன கால கட்டி வை...இல்லைன்னா இனி சின்னவன இங்க கூட்டிட்டு வராதன்னு தயவு தாட்சண்யமே இல்லாம என் மனச ஒடிச்சு அனுப்புவாங்க... அவங்கள எல்லாம் ஒதுக்கி தள்ளிட்டு இப்ப நா இங்க வந்திருக்கேன்னா.... எப்படி முடிஞ்சது இதெல்லாம்...."

மதுவின் வார்த்தையில் அவள் குடும்பம் குற்ற உணர்ச்சியில் தலைகுனிய... இப்போது தேஜூ தள்ளியிருந்த அவர்களை எட்டி பார்த்தாள்...காதுக்குள் அஷ்வத்தின் "அவங்க வரக்கூடாதும்மா" என்ற கோபக்குரல் கேட்க....இங்கு இவளுக்குமே இப்போது மனதுள் அந்த வார்த்தையைத்தான் சொல்லத் தோணியது..

"சக்திய ரொம்ப கஷ்டப்பட்டுதான் ஸ்கூல்ல சேர்த்தினேன்...அட்மிஷனுக்கே அவ்ளோ கண்டீசன்ஸ்....இவனும் இஷ்டபட்டுதான் படிச்சான்...ஆனா இவனுக்கு எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவா வேணுமே... சோ ட்யூஷன்கு போய் சில டீச்சருங்கள கேட்டேன்...பணம் அதிகமாவே குடுக்கறேன் எம்பையனுக்கு படிப்ப சொல்லி குடுங்கன்னு கிட்டதட்ட கெஞ்சி கூட கேட்டேன்...ஆனா அவங்கள்ள சிலபேரு உங்க பையனுக்கு சொல்லி குடுக்கற நேரத்துல இன்னும் நாலு பசங்களுக்கு சொல்லி குடுப்போம்..சோ ஸாரின்னு சங்கடமே படாம ரிஜெக்ட் பண்ணாங்க...அவங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் நடுவுல சக்தில்லாம் சாதிக்க முடியுமா என்ன...."

சாட்டையடியாய் வந்து கொண்டிருந்தன கேள்விகள்...ஆனால் எவர் மனதிலும் இதற்கான பதில்தான் இல்லை...

"இவ்ளோ ஏன்...இவன் பண்ண இந்த ப்ராஜெக்ட கூட இவன் பண்ணாங்கற ஒரே ரீசன்காக என்னன்னு கூட பார்க்காம ரிஜெக்ட் பண்ணாங்க... போராடித்தான் இதுக்கு அப்ரூவலே வாங்குனோம்...இது போல அரைகுறையான அரசாங்க நடைமுறைகளுக்கு நடுவுல இதெப்படி சாத்தியமாச்சு..."

"எல்லாம் முடிஞ்சு அப்பாடா சக்திய நல்லபடியா கொண்டு வந்துட்டோம்னு சந்தோஷப்படும் போது...புதுசா ஒரு அம்பு வருது எங்களை குத்தி கிழிக்க...சக்தி இப்படின்னா....அப்ப ஜீன் மூலமா அவன் குடும்பத்துல இருக்கறவங்களுக்கும் இவனப்போலவே குழந்தைங்க வருமா... அப்படி வந்துட்டா...நாளைக்கு அவங்க பரம்பரைல குழந்தைங்க எல்லாம் இப்படித்தான் பொறப்பாங்களா?? .. இப்டில்லாம் யோசிச்சு எங்களோட பல வருஷ நட்புக்களே எங்கள தள்ளி வைக்கற நிலமைல எப்படி இத நாங்க சாத்தியமாக்குனோம்... எப்படி முடியும்...சொல்லுங்க..."

அவரின் கடைசி வார்த்தையில் காயத்ரியின் விழிகளை நீர் நிறைக்க...அவசரமாய் அதை ஒரு கரம் துடைத்தது....கலங்கிய விழிகளை கசக்கிவிட்டு பார்க்க....மன்னிப்பை வேண்டியபடி அருகில் ஜோசப்...மதுவின் வார்த்தைக்கு பதிலாய் அழுத்தமாய் ஜோசப்பின் கரங்கள் அவர் மனைவியின் கரங்களை அழுத்தி கொடுத்தது... மனைவியின் மன்னிப்பை வேண்டியபடி...மகளின் திருமணத்திற்கான சம்மதத்துடன்....

அரங்கமே இப்போது நிசப்தமாய் இருக்க...மதுவும் சற்று உணர்ச்சி வசப்பட்டவராய் மவுனிக்கவும்...சக்தி மதுவை ஆறுதலாய் அணைத்து கொள்ள...அந்த காட்சியே கவிதையாய் இருந்தது...அவன் தோளில் சாய்ந்தபடியே அவர் தொடர்ந்தார்...

"இது எல்லாமே சாத்தியமாச்சு... சாத்தியமாக்குனான் ஒருத்தன்... எந்த சமூகத்துல போராடி போராடி ஓய்ஞ்சு போய் வேண்டாமே இந்த வாழ்க்கைன்னு நா துவண்டு விழுந்தப்ப...பரவால்லமா... ஜெயிக்கறோமோ தோக்கறோமோ... முதல்ல வா வாழ்ந்து பார்க்கலாம்னு நம்பிக்கையா என் கை புடிச்சு என்னை எழுப்பி விட்டான்...அப்ப அவனுக்கு வயசு பதினஞ்சு...இப்ப அதே பையனுக்கு வயசு இருபத்தெட்டு...இப்ப வரை அந்த கைய... அந்த நம்பிக்கைய அவன் விட்டுடவே இல்ல...அவன்...அவன்தான் என் பையன் அஷ்வத்...."

மதுவின் வார்த்தையில் அரங்கம் இப்போது கரகோஷத்தில் அதிர....லைனில் இருந்த அஷ்வத்திற்கு தொண்டை அடைத்தது..."டோண்ட் க்ரை...டோண்ட் க்ரைடா இடியட்..." என தன்னை தானே திட்டியவன் முயன்று கட்டுக்குள் வந்தான்...

"தம்பி தனியா இருக்கான்...யாரும் விளையாட சேர்த்துக்கலடான்னேன்...நா இருக்கேம்மான்னு ஒருநாள் வந்து நின்னான்...அப்பா விட்டுட்டு போய்ட்டாரு...நாமளும் செத்து போய்டலாம்னேன்...அப்பவும் வேண்டாம்மா நா இருக்கேன்னான்... அந்த நா இருக்கேம்மாங்கற வார்த்தை சும்மா ஏதோ பார்மாலிட்டிக்குன்னு முதல்ல நினைச்சேன்..ஆனா இன்னைக்கு வரைக்கும் அவன்தான் இருக்கான் இவன்கூட.... எங்ககூட...எங்களுக்கு எல்லாமா இருக்கான்...உண்மைய சொன்னா...நா எல்லாம் அவனோட கம்பேர் பண்றப்ப ஒன்னுமேயில்ல..."

அம்மாவின் நெகிழ்ச்சியான குரலில் கொஞ்சம் கொஞ்சமாய் அஷ்வத் தன் நிதானத்தை இழந்து கொண்டிருக்க... அங்கு அவர் தொடர்ந்தார்...

"இவன்கூடவே இருந்து அவனுக்கு எல்லாம் சொல்லி கொடுத்தான்...ஒரு அப்பாவா அம்மாவா...அண்ணனா எல்லாமா இருந்து இவன் நிக்க நடக்க..பழக..பேச படிக்கன்னு எல்லாமே அவன்தான் சொல்லி குடுத்தான்... வெறும் மண்ணா இருந்தவன் இன்னைக்கு இப்படி ஒரு சிலையா மாறியிருக்கான்னா அதுக்கு காரணம் அவன்தான்...சக்திய பார்த்து பார்த்து அழுதுட்டு இருந்த என்னை அவன் பண்ற சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்க வச்சு...புரிய வச்சு அவன கொண்டாட வச்சதும் அவன்தான்...நீங்களே சொல்லுங்க...நம்ம பொறந்ததும் நமக்கு இப்படி ஒவ்வொன்னா சொல்லி குடுக்கறது நம்மள பெத்தவங்கதான.... அப்படி பார்த்தா....இவனுக்கு மட்டுமில்ல... எனக்குமே அவன்தான் என்னை பெத்தவன்...."

"ம்ம்மா...ஏம்மா இப்படி...." அஷ்வத் தனக்குள் கேட்டுகொண்டான்...யாராவது போய் தன் அம்மாவிடமிருந்து மைக்கை பிடுங்கி கொள்ள மாட்டார்களா என்றிருந்தது அவனுக்கு...

"சக்திய கிண்டல் பண்ண அவன் பிரண்ட்ஸ விட்டான்...சக்திக்கு கூடவே இருக்கனும்னு எக்ஸ்ட்ராவா அவனுக்கு புடிச்ச ஸ்போர்ட்ஸ விட்டான்...சக்தியோட படிப்புக்கு...அப்புறம் இவன பிஸியாவே வச்சிருக்கணும்னு சேர்த்துவிட்ட எக்ஸ்ட்ரா கிளாஸஸ்காக பார்ட் டைம் வொர்க் போனான்... அவனுக்கு இன்ஜினியரிங்கறது அப்படி ஒரு கனவு...ஆனா அதுக்கு காசு அதிகம் செலவாகும்னு ஆர்ட்ஸ் முடிச்சுட்டு முட்டி மோதி நல்ல வேலைய புடிச்சான்... போதும்டா சாமி இந்த போராட்டம் இனியாவது உன் வாழ்க்கைய வாழுடான்னு நா சொன்னப்ப... இல்லம்மா... நம்ம சக்திக்கு ஓகே நா இருக்கேன்...ஆனா சக்தி மாதிரி இருக்கற மத்த பசங்களுக்காக நம்மனால முடிஞ்சது ஏதாவது பண்ணலாம்மான்னு சொல்லி...அப்ராட்ல போய் உட்கார்ந்துட்டான்...நா அங்க சம்பாதிக்கறேன்... நீ இங்க இந்த பசங்களுக்கு உன் உழைப்ப கொடும்மான்னு என்னை இன்னும் வேற விதமா புதுப்பிச்சுருக்கான்...அவனால வந்ததுதான் இந்த உதயம் பவுண்டேஷன் மத்த எல்லாமே....இப்ப சொல்றேன்.... இப்படி ஒரு பையன் இருந்தா இது மட்டுமில்ல... இதவிட இன்னும் பெரிய பெரிய சாதனைகளும்கூட நமக்கு சாத்தியம்தான்..."

தன் கையில் வந்து விழுந்த கண்ணீரை கண்டதும்தான் அஷ்வத்திற்கு உரைத்தது தன் அழுகை... கண்ணை தொட்டு பார்த்தவன் .. அவசரமாய் துடைத்து கொண்டான்...

தேஜூவால் அங்கு இருக்கவே முடியவில்லை....நிச்சயம் அவன் அழுதுகொண்டிருப்பான் என அவனை நன்றாய் உணர்ந்தவளால்...உள்ளமும் உடலும் பரபரத்தது...அழுபவனை அணைத்து "அழாதடா லூசே....இனி உன் எல்லா போராட்டத்திலும் உனக்கு பக்கபலமா நா கூடவே இருப்பேன்னு" ஆறுதல் சொல்ல துடிப்பாக இருந்தது.. முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு இருந்தாள்....

தேஜூ அங்கு அப்படி நினைக்க...கல்பனாவோ வேறு நினைத்தாள்..போதும் நம்முடைய இந்த சிறுபிள்ளைத்தனமான ஆட்டமும் பாட்டமும்....ஓழுங்காய் படிப்பை முடித்து பின் தானும் உதயத்தில் இணைந்து முழுமனதாய் பணியாற்ற வேண்டும் என அப்போதே உறுதி எடுத்து கொண்டாள் சிறியவள்...

அரங்கை இப்போது கைதட்டல் நிறைக்க....தொகுப்பாளருக்கே சற்று நேரம் பேச முடியவில்லை... தொண்டையை செருமியவர்..." உங்க வலியும் கடந்து வந்த கஷ்டங்களும் புரியுது...இப்ப இந்த ஸ்டேஜ்ல நீங்க மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா..."

"ஹ...சார் இங்க நா எந்த கருத்து சொல்லவும் வரல...ஏன் இப்படின்னு யாரையும் கேள்வி கேட்டும் வரல...ஆனா இந்த ஸ்டேஜ்ல என்னை மாதிரி அம்மாங்க நாளைக்கு வந்து நிக்கணும்னு ஆசப்படுறேன்...அதுனால அவங்களுக்கு வேணா சில விஷயங்கள நா சொல்லிக்கறேன்..."

சொன்னவர் அங்கிருந்த நீரை பருகி தன்னை ஆசுவாசப்படுத்தியபடி தொடர்ந்தார்...

"ஆட்டிசம்ங்கறது ஒரு நரம்பியல் குறைபாடு...மருந்து மூலமா கண்டிப்பா அத சரி பண்ண முடியாது...ஆனா தெரபிஸ் அதாவது பயிற்சிகள் மூலமா இத ஓரளவுக்கு சரி செஞ்சு கொண்டு வரலாம்...அது நிச்சயம் சாத்தியம்தான்.. இத முதல்ல யாரு நம்பறாங்களோ இல்லையோ...இந்த மாதிரி பசங்களோட அம்மாங்க முதல்ல நாம்ம நம்பணும்... ஊரு என்ன சொல்லும்...விசேச வீட்டுக்கு போனா சொந்தக்காரங்க என்ன சொல்வாங்க....ஸ்கூல்ல மத்த பசங்களோட பேரண்ட்ஸ் என்ன சொல்வாங்கன்னு மூனாவது மனுசங்கள பத்தியே யோசிச்சு காலத்த கடத்தாம... மேக்ஸிமம் அஞ்சு வயசுக்குள்ள இந்த பசங்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி... ஸ்பீச் தெரபின்னு குடுத்து முடிஞ்ச வரை நல்லா கொண்டு வாங்க...ஒருவேளை அதுக்கு அதிகமான வயசாவே இருந்தாலும்...தொடர்ந்து பயிற்சி குடுங்க...கண்டிப்பா ஒருநாள் சரியாவாங்க...எம்பெரியவன் ஆறு வயசுல பண்ண விஷயங்கள சக்தி மூனு நாலு வயசுல பண்ணான்...சோ இவங்க வயசுக்கும் செயலுக்கும்தான் இடைவெளி இருக்குமே தவிர.... இவங்களும் நார்மலா எல்லா குழந்தைகளும் பண்றத ஒருநாள் பண்ணுவாங்க...இவங்கள மியூஸியம் பீஸ் மாதிரி மத்தவங்க பார்க்கட்டும்...ஆனா பெத்தவங்க நாம அப்படி பார்க்க வேணாம்....இவங்களுக்கு அடிச்சா திருப்பி அடிக்கணும்ன்னு சொல்லி குடுங்க....நியாயமான விஷயத்துக்கு கோவப்பட சொல்லி குடுங்க....வயசு பொண்ணுங்களோட மென்சஸ் பத்தி சொல்லி குடுங்க.... யாராவது கஷ்டபட்டா யோசிக்காம முடிஞ்ச ஹெல்ப் பண்ணுன்னு சொல்லி குடுங்க... எம்பையனுக்கு குட் டச் பேட் டச் எல்லாமே சொல்லி குடுத்துருக்கேன்... தப்புன்னு தெரிஞ்சா அடிச்சுட்டு வா..ஆனத பார்த்துக்கலாம்னு பழக்கியிருக்கேன்... அவன் எல்லாமே புரிஞ்சு பண்றான்... உங்க பசங்களும் பண்ணுவாங்க.... விடாம முயற்சி பண்ணுங்க போதும்...நிச்சயம் பலன் இருக்கும்.....மத்தவங்க சொல்றதுபோல இவங்கள்ளாம் ஒன்னும் நம்மளோட தெய்வ குத்தமும் இல்ல...பரம்பரை சாபமும் இல்ல...நம்மள மாதிரி இருக்கற சூப்பர் விமன்ஸ்கு ஆண்டவனா அனுப்பிருக்கற கிப்டட் சைல்ட்ஸ்தான் இவங்க எல்லோரும்...அத சங்கடமா இல்லாம சந்தோஷமா ஏத்துக்கங்க.... நம்ம லைப்பும் கண்டிப்பா நல்லா இருக்கும்...தோ என் சக்தி மாதிரி உங்க பசங்களும் இதவிட சூப்பரா சாதிப்பாங்க..."

சக்தி அம்மாவை அணைத்தபடி இருந்தவன் இப்போது..."ஆமாம் கண்டிப்பா சாதிப்பாங்க ...எங்கள என்கரேஜ் பண்ணுங்க....." என்க... அங்கிருந்த சிலபேரின் கண்களை நீர் நிறைத்தது...

"இவ்ளோ பெரிய ஸ்பீச்...இதுல கொஞ்சம்கூட இந்த சமூகத்து மேல உங்களுக்கு கோவமே வரலயா மேடம்..."

தொகுப்பாளரின் கேள்விக்கு..." இல்ல சார் நிஜமாவே கோவம் வரலை ..எதுக்கு கோவப்படணும்...இதான் நம்ம சமூகம்.... இதுதான் நம்ம வாழ்க்கைமுறை...ஆயிரம் விளக்கம் இவங்கள உட்கார வச்சு நா சொன்னாலுமே இப்பகூட எம்பையன் முன்னாடி போனா...பின்னாடி இவன் ஒருமாதிரிடான்னு பேசறவங்கதான் அதிகம்...அவங்கள மாதிரி இருக்கறவங்கள பார்த்து கோவப்பட்டுட்டு இருந்தா என் லைப் புல்லா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செகண்டும் நா கோவப்பட்டுட்டே இருக்க வேண்டியதுதான்...வேற உருப்படியா எதுவுமே பண்ண முடியாது..."

தொகுப்பாளர் ஆமாமென தலையாட்ட....அவர் தொடர்ந்தார்...

"ஆனா ஒன்னு மட்டும் இங்க இருக்கறவங்களுக்கு சொல்லிக்கறேன்... ஆட்டிசம்ங்கறது ஒன்னும் பரம்பரை வியாதில்ல சார்..சக்திக்கு இருந்தா அது கண்டிப்பா அவன் குடும்பத்துல இருக்கறவங்க...அவங்க சந்ததிக்கும் இருக்கணும்னு அவசியம் இல்ல... குறையே இல்லாத பெற்றோர்களுக்கு கூட ஆட்டிசம் குழந்தைங்க பொறக்கறது இப்பல்லாம் சாதாரணமா போச்சு...ஏன் கணக்கெடுப்புனு பார்த்தா ஆட்டிசம் குழந்தைங்களோட விகிதம் இப்ப முன்னைவிட பலமடங்கு அதிகம்...அப்ப எங்க இருந்து சார் வந்தாங்க அந்த அப்பா அம்மாங்க எல்லாம்...மேக்ஸிமம் எல்லோருமே நார்மல் பேரண்ட்ஸ்தான்... ஆனா குழந்தைங்க இப்படி... இதுக்கெல்லாம் காரணம் என்ன... நம்ம சாப்பாட்டு முறை... பழக்கவழக்கங்கள்... சமூக மாற்றம்... நல்லதுன்னு நாம சாப்பிடற மருந்துகளோட பக்க விளைவுகள்... இதெல்லாமே மனுசங்கள விட முக்கிய காரணங்கள்..."

"சோ உங்ககிட்ட கேட்டுக்கறதெல்லமாம் ஒன்னுதான்...உங்க பேமிலி இல்ல பிரண்ட்ஸ் வீட்ல ஏதாவது பசங்க இப்படி இருந்தா அவங்கள கிண்டல் பண்ணி ஒதுக்காதீங்க...அய்யோ பாவமேன்னு பரிதாபப் படாதீங்க...ஏன் இப்படி ஆச்சுன்னு நீயா நானா விவாதமெல்லாம் பண்ணாதீங்க..ஏன்னா இந்த பசங்களுக்கும் எங்கள மாதிரி அம்மாங்களுக்கும் உங்களோட கருணையோ... அனுதாபமோ... பச்சாதாபமோ எதுவுமே தேவையில்ல... எங்களுக்கு தேவையெல்லாம் நா எப்பவும் எந்த சூழ்நிலைலயும் இருப்பேங்கற ஒரு நட்புகரம்தான்...விடு பார்த்துக்கலாங்கற ஒரு நம்பிக்கை வார்த்தை.... கடைசிக்கு தோத்தே போனாலும் ஆறுதலா சாஞ்சு அழ ஒரு தோள்...இது போதும்....நாங்க முன்னுக்கு வந்துருவோம்..எனக்கு இதெல்லாமா என் பையன் அஷ்வத் இருந்தான் இருக்கான் இனியும் இருப்பான்...என்னைப்போல நீங்களும் உங்களுக்கான நம்பிக்கைய தேடுங்க...நிச்சயமா கிடைக்கும்..."

மதுராவின் நீண்ட ஒரு உரைக்கு பின்னே அரங்கமே அமைதியாய் இருந்தது...அவர் வார்த்தையிலிருந்த உண்மையின் தாக்கத்திலிருந்து வெளிவர முடியமல் இருந்தனர் சிலபேர்...

"உண்மையிலேயே உங்க இரண்டு பசங்களுமே காட் கிப்டட் சைல்ட்தான் மேடம்....ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இவங்கள பத்தி கேக்கறதுக்கு..."

தொகுப்பாளர் பேசிக்கொண்டிருக்க... சக்தி தன் அம்மாவின் காதில் ஏதோ சொன்னான்...குனிந்து கேட்டவள் ஒரு புன்னகையோடு நிமிர்ந்தாள்..

"சக்தி அவங்க அண்ணாக்காக ஒரு இன்ஸ்ரூமெண்ட் ரெடி பண்ணிருக்கான்... அத இந்த ஸ்டேஜ்ல காட்டனும்னு ஆசப்படுறான்...வித் யுவர் பர்மிஷன்..."

"யா யா ஷ்யூர்... ப்ளீஸ் மேம்..." என்றவர் அதற்கான ஏற்பாட்டை செய்ய...அந்த பொருள் மேடையேறியது...

பார்க்க ஏதோ பேன் போன்றிருந்த அந்த அமைப்பு நவீனமாய் வித்தியாசமாய் இருக்க...எல்லோரும் என்னவென பார்த்தனர்...

மது சக்தியை பார்த்து.. "சொல்லுடா சக்திமா" ....என்க..

"அஷ்வத்" ....சக்தியின் சற்று தெளிவில்லாத அழைப்பில் அது "அஷ்லத்" என்று கேட்க...அரங்கமே இப்போது அமைதியானது...

"ஐ நோ...நீ நா பேசறத கேப்பேன்னு..."

தன் தம்பியின் நம்பிக்கையில் வியந்தவன் மூச்சை இழுத்து பிடித்தபடி பார்த்திருந்தான்...

"நீ நிறைய ஆசைங்கள எனக்காக விட்டு குடுத்தேன்னு அம்மா சொல்லும்...ஆனா ஐ நோ...நீ எத ரொம்ப ஆசப்படுவேன்னு..."

சக்தி பேசுவதையே ஆசையாய் பார்த்திருந்தவனுக்கு அவன் பேச்செல்லாம் கருத்திலேயே இல்லை...சக்தியையே திரையில் பார்த்திருந்தான்...

"நீ...நீ...என் சின்ன வயசுல அம்மாகிட்ட ஆசைப்பட்டு காட்டன் கேண்டி கேப்ப...என் மைண்ட்ல அதுல்லாம் நல்லா ரிஜிஸ்டர் ஆகியிருக்கு...ஆனா அம்மா அது வாங்குனா நா அத வச்சு டிரஸ்லாம் டர்ட்டி பண்ணுவேன்னு உனக்கு வாங்கியே தராது..ஐ நோ...மம்மி பேட் மம்மி இல்ல..."

தம்பியின் கேள்விக்கு இங்கு அஷ்வத்தின் தலை இல்லையென்றது...

"ம்ம்ம்..ஆமா....பேட் மம்மிதான்...பட் இப்ப அதே அம்மாதான் உனக்காக என்னை இத பண்ண சொன்னாங்க....இது என்னன்னு சொல்லு..."

அங்கிருந்த எல்லோருமே அது என்னவென ஆவலாய் பார்க்க...

"சர்ப்பிரைஸ்" ....என்றபடி ஸ்விட்ச்சை போட்டு அதன்முன் ஒரு குச்சியை வைத்து காட்ட..அழகாய் காட்டன் கேண்டி ஒன்று உருவனது அஷ்வத்தின் உருவத்தை தாங்கியபடி...

"இதுல ஆட்டோ சொன்சார் மூலமா இமேஜஸ் அப்டேட் பண்ணேன்...சோ இனி நீ இங்க வந்தா நானே உனக்கு புடிச்ச காட்டன் கேண்டி செஞ்சு தர்றேன் சரியா..நீ டிரஸ்லாம் டர்ட்டி ஆக்குனாலும் பரவால்ல...நீ எனக்கு பண்ணுவல்ல... அப்படி நா உனக்கு தொடைச்சு விடுறேன்...சரியா... ஓகே..டன்...."

"சக்ஸஸ்" என்று கைகாட்டிய சக்தியின் பின்னாலிருந்த திரை சட்டென ஒளிர...அதில் அஷ்வத்தின் பிம்பம் அழகாய் தெரிந்தது....அவன் இருகைகளும் கண்ணை மறைத்திருக்க... குலுங்கி குலுங்கி அழுதபடி இருந்தவனின் காட்சி தெரிய மற்றவர்களுமே நெகிழ்ந்துதான் போயினர் அவன் அழுகையில்...

"ம்மா....நீ எனக்கு இப்படி செஞ்சிருக்கவே கூடாதும்மா...லாஸ்ட்ல என்னையவே அழ வச்சுட்டமா நீ....ஹேட் யூ மா....ஐ ஹேட் யூ...ஹேட் யூ...ஹேட் யூ"

இது...இதுதான் நடக்குமென தெரிந்ததால்தான் ஆரம்பத்திலிருந்தே அஷ்வத் மதுவை ஸ்டேஜில் பேசக்கூடாதென ஆயிரம் முறை சொல்லி வைத்திருந்தான்..ஆனால் வழக்கம்போல் அவன் அம்மா அதையும் எப்போதும்போல் மீறியிருந்தார்...ஆனால் மகனுக்குதான் எப்போதும் வரும் கோவம் இன்று பாவம் கண்ணீராய் வந்தது...

அழுதபடி கேட்ட அண்ணனின் வார்த்தையில் சக்தி மதுவை பார்க்க...அவர் சம்மதமாய் தலையாட்ட இதுவரை அவன் அம்மாவிடம்கூட சொல்லாதது இன்று சக்தி சொன்னான்....

"லவ் யூ அஷ்ழத்...."

அரங்கமே அமைதியாகிவிட....சட்டென அஷ்வத்திற்கு இப்போது அழுகையோடு ஓவென கத்த வேண்டும் போல் இருந்தது...தன் தம்பி...தான் பார்த்து வளர்த்தவன்....ஒரு வார்த்தை பேச மாட்டானா என ஒரு காலத்தில் ஏங்கியவன்...இன்று அவன் வாய் மொழியில் கேட்ட அந்த மூன்றெழுத்தில் ஆனந்த கண்ணீரோடு மகிழ்ச்சியில் சிரிப்பும் சேர்ந்து வந்தது...

அஷ்வத்தின் சிரிப்பை கண்டு தேஜூவும் கல்பனாவும் பார்வையாளர்கள் புறமிருந்து ஒன்ஸ்மோர் என கத்த......

"லவ் யூ...அஷ்ழத்...லவ் யூடா.."

"லவ் யூ டூ மை பேபி....லவ் யூ எ லாட் டா" ...அஷ்வத்தும் இப்போது சிரிப்பும் கண்ணீருமாய் மறுமொழி சொன்னான்...

அங்கு நடந்த பாசப்போராட்டத்தின்
சாட்சிகளாய் இருந்தவர்களின் கரவொலி சிறிதாய் ஆரம்பித்து பெரிதாய் தொடர்ந்து பின் அடங்க வெகுநேரமானது...

தென்றல் இனிதாய் தாலாட்டும் என்றும்..

சுபம்...
 

Murugesanlaxmi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
6
5
3
Pondicherry
என் எழுத்தாளர் சகோதரிகளிடம் பேசும் போது, "ஒவ்வொரு அத்தியாயமும் எழுதும் கதைக்கு மிக முக்கியம். பக்கங்களின் கணக்குக்கு எழுதாமல், பற்றிய கருத்துக்கு எழுதவேண்டும். ஒரு அத்தியாயம் கூட, கதையின் வண்ணத்தையே மாற்றிவிடும்." என பல முறை பேசியது உண்டு.



அதற்கு உதாரணம் சகோதரி இந்துவின் "ரோஜாவை தாலாட்டும் தென்றல்" என்ற குறுநாவல். வெறும் 6 அத்தியாயம் தான். ஆனால் அதற்குள் பல உணர்வுகளை சேர்த்துள்ளார். 5 அத்தியாயம் வரை நகைச்சுவையாக நகர்கிற கதையை படிக்கும் போது காமெடி கதை என்று தோன்றிய கதை, இறுதி அத்தியாயத்தை படிக்கும் போது இதயத்தில் ஆழ பதித்துவிடுகிறது.



சமுதாயத்தின் மீது உள்ள கோபத்தை நாகரிகமாகவும், நாசுக்காகவும், நகைச்சுவையாகவும் சொன்ன விதம் அருமை. சில நாவல்கள் படிக்கும் போது பிடிக்கும். சில நாவல்கள் படித்த பின் பிடிக்கும். சில நாவல்கள் படிக்க படிக்க ( ஒவ்வொரு முறையும்) பிடிக்கும். இந்த நாவலை வேறொரு தளத்தில் படித்தேன். மீண்டும் இப்போது வைகை தளத்தில் படிக்கின்ற போது அதே நெகிழ்கின்ற உணர்வு வருகிறது. அதுவே இந்த எழுத்துக்கு கிடைத்த வெற்றி. உணர்வுகளை தூண்டுகின்ற ஒவ்வொரு எழுத்துகளுமே சிறந்தவையே.