• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -27

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
111
87
28
Chennai
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -27


அந்த பெண்களில் ஒருவளான சுபா “ஹேய் அசிஸ்டென்ட் பொண்ணு கொஞ்சம் இங்கே வா” என்று அழைத்தாள்.


உடனே சிற்பி எழுந்துக் கொள்ளப் போகும் அவளைப் பிடித்து உட்கார வைத்தான் நிரஞ்சன். சுப்ரியா விடாமல் “இப்போ நீ இங்கே வரப் போறியா இல்லையா?” என்று மிரட்டவும் பார்த்தி எழுந்து “ஹலோ மேம் சிற்பி எங்களுக்குத் தான் அசிஸ்டன்ட் உங்களுக்கு இல்லை அப்படி எதாவது வேலை இருந்தால் உங்க பக்கத்துல சும்மா இருக்கிற அல்லக்கை கிட்டே சொல்லுங்க” என்று மற்ற மூவரையும் பார்த்து சொன்னான்.


அதைக்கேட்டு கோபமான தீப்தி “ஹலோ மிஸ்டர் உங்களுக்கு மரியாதைன்னா என்னன்னு தெரியாதா?ஒரு அசிஸ்டன்ட்காக ரொம்ப ஓவரா பேசுறீங்க” என்று சொல்லவும்


நால்வரும் முன்னால் வந்து நிற்கவும் சஹா “சிற்பி அசிஸ்டன்ட் என்பது இந்த கம்பெனிக்கு மட்டும் தான் எங்களுக்கு இல்லை அவள் என்றைக்கும் எங்களுடைய அன்புத்தோழி அதனால இந்த மாதிரி நடந்துக்காதீங்க” என்று நால்வரும் அவளையும் தங்களோடு இழுத்துக் கொண்டுச் சென்றனர்.


சஹா நிரஞ்சனையும் சிற்பியையும் மாறி மாறி பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்த நிரஞ்சன் “நான் என்னவோ பெரிய குற்றம் பண்ண மாதிரி ஏன்டா முறைச்சுகிட்டே இருக்கே?’’ என்று நிரஞ்சன் கேட்டவும்


சஹாவோ “சின்னதா ஒரு பொறாமைடா”


“எதுக்கு?”


“சிற்பியை லவ் பண்ணுறேல்ல அதான்” என்றான் கவலையாக…


அதைக் கேட்டு நிரஞ்சன் புரியாமல் “அவ இன்னும் கிரீன் சிக்னல் கொடுக்கலைடா ஓகே ஆன பிறகு பொறாமை பட்டுக்கோ” என்றதும்


“ம்ம்… எல்லாம் ஓகே ஆகும் உன்னைப் போய் வேண்டாம்னு சொல்லுவாங்களா? என்ன கொஞ்சம் முன்னாடி இதைப் பத்தி நான் யோசிச்சு இருந்திருந்தால் சிற்பி” என்று அவன் பேசி முடிக்கும் முன்னே நிரஞ்சன் அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி போட்டான்.


அவன் போட்ட அடியில்
வலிக்கவும் “ஹய்யோ காதல் வந்தால் கண்ணு தெரியாதுன்னு சொல்லுவாங்களே! அது உண்மையாகிடுச்சு ஆஆஆ… முடியலை” என்று பொய்யாக முதுகை தடவிக் கொள்ள முயற்சித்து இருந்தான்.


பார்த்தியோ “நிரஞ்சா அன்னைக்கு இவன்கிட்டே சிக்குனே பத்தியா அதான் நிலைமை ரொம்ப பரிதாபம்” என்றதும் நிரஞ்சனோ “ஆமாம்” என்பது போல் தலையசைத்தான்.


அன்றைய நாள் சிற்பியுடன் காலணியை வாங்கியவன் அதை சிற்பியின் வீட்டில் அவளை விடும் போது அதை கொடுக்காமல் விட்டு விட்டான்.அதனால் அந்த பொருளை தன் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தவன் எடுத்து வந்து தன் அறையில் வைத்திருந்தான்.



மறுநாள் காலையில் நிரஞ்சனின் அறைக்கு வந்த சஹா அங்கே ஓரமாக இருந்த ஒரு பொருள் இருக்கவும் அதை திறந்து பார்க்க அதில் இரண்டு காலணிகளும் ஒரு சின்னதாக ஒன்று இருக்க அதையும் திறந்துப் பார்க்கும் பொழுது அதன் மேல் “என்றும் அன்புடன் நிரஞ்சன்” என்று எழுதி இருந்தது.உள்ளே அழகான சிவப்பு கல்லால் ஆன ஹேர்கிளிப் இருந்தது.


அதைப் பார்த்தவன் மனதினுள் ‘'எங்களுக்கு தெரியாமல் லவ்ஸ் நடக்குதா? இரு வரேன்’ என்று மெதுவாக தூங்கிக் கொண்டிருந்த நிரஞ்சன் அருகில் வந்தவன் காதோரமாய் மெதுவாக “இந்த கிப்ட் நீங்க தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை” என்றான் சஹா.


உடனே நிரஞ்சன் தூக்கத்தில் சிரித்துக் கொண்டே “உனக்கு பிடிச்சிருக்கா சிற்பி” என்று அவன் சொல்லவும் அதைக் கேட்டு அதிர்ச்சியான சஹா “ஹய்யோ இங்கே என்ன நடக்குதுன்னு தெரியலை டேய் பார்த்தி சீக்கிரம் வாடா பகவானே இவன் என்னவெல்லாமோ சொல்றானே எனக்கு தலையே சுத்துதே!” என்று கத்தவும் நிரஞ்சன் எழுந்து உட்காந்து கொள்ள காந்தனும் பார்த்தியும் வந்தார்கள்.


காந்தன் “ஏன்டா கத்துறே? அவன் தான் தூங்கிட்டு இருக்கான்ல” என்று கோபப்பட்டான்.


சஹா “நான் சொல்ற விஷயத்தை நீ கேட்டால் உன்னுடைய மொத்த கோபமும் இவன் மேல வந்திடும்”

பார்த்தி “ஹய்யோ என்ன விஷயம்னு சொல்லு?” என்று கேட்டான்.


சஹா தன் கையில் வைத்திருந்த பையை எடுத்து இருவரிடமும் காட்டினான்.நிரஞ்சன் தூக்க கலக்கத்தில் இருந்து சரியானவன் சஹா கொடுத்த பையைப் பார்த்து “ஹேய் இப்போ எதுக்கு என் பையை எடுத்து பார்க்கிறே?” என்று நிரஞ்சன் எழுந்துக் கொள்ள காந்தன் காலணி இருந்த பையையும் பார்த்தி அந்த ஹேர்கிளிப்பையும் பார்த்தான்.


காந்தனுக்கு எல்லாம் தெரியும் என்பதால் பார்த்தி “என்ன லேடீஸ் பொருளா இருக்கு? யாருக்கு வாங்கினே?”


நிரஞ்சன் விழித்தவாறு “அ…து அது” என்று திணற சஹாவோ காந்தன் எந்தவொரு உணர்ச்சியும் காட்டததால் அவனைப் பார்த்து “ஹோ விஷயம் அப்படி போகுதா? காந்தா நிரஞ்சன் சிற்பியை விரும்புறது தெரியும் தானே” என்று கேட்க பார்த்தியோ மூவரையும் பார்த்து அதிர்ச்சியில் நிற்க சஹாவோ “நீங்க ரெண்டுபேரும் எங்களை இன்னும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்ஸா நினைக்கலைடா அதான் மறைச்சுடீங்க” என்று கோபப்பட்டுக் கொண்டான்.


பிறகு நிரஞ்சனும் காந்தனும் சேர்ந்து சஹாவை சமாதானம் செய்து இதோ இப்போ அவர்கள் செய்யும் கிண்டல் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருக்கிறான் நிரஞ்சன்.


நாளை மறுநாள் இவர்களின் நிகழ்ச்சி கச்சேரி இருந்தது.சுபா மேலிடத்தில் பேசி சிற்பியை நிரஞ்சனின் குழுவோடு இருக்கும் வரை தங்களுக்கும் சேர்த்து உதவியாளராக இருக்க பேசினாள்.அவள் பெண் என்பதால் அவர்கள் சாம்பவிக்கு அடுத்து உள்ள பொறுப்புதாரர்களிடம் பேசி சிற்பியைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.


அதனால் சிற்பியை உட்கார விடாமல் பெண்கள் குழு நால்வரும் அவளைப் போட்டு படுத்திக் கொண்டிருந்தனர்.
இது நிரஞ்சன் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு தெரியாது.அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நேராக சென்று இருந்தார்கள்.



இங்கே நால்வரும் சிற்பியை தொல்லைச் செய்ததில் இரவு நேரம் பன்னிரெண்டு ஆகி இருந்தது.எல்லோரும் அறைக்குச் சென்று இருந்தார்கள்.

சிற்பி அந்த பெண்கள் குழுவிற்கு தேவையான பொருட்களை சரியாக எடுத்து வந்தவள் அவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்தவள் உடல் சோர்வினால் பொருட்களை ஓரமாக வைத்து விட்டு அப்படியே வாசலில் கொஞ்சம் தள்ளி இருந்த சிறிய சிமெண்ட் இருக்கையில் உட்கார்ந்தாள்.


அப்பொழுது அங்கே ஏதேச்சையாக வந்த நிரஞ்சன் சிற்பி இருப்பதைப் பார்த்து “ஹேய் ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கே” என்று யோசனையோடு அவள் அருகில் வந்து உட்காரவும் சோர்வினால் அப்படியே தூங்கி சரியவும் அவளைத் தன் தோளில் சாய்த்து வைத்தான்.


அவளது கையைப் பிடித்து பார்க்க அது சிவந்து போய் இருந்தது.தன் சட்டைப் பையில் எப்போதும் சின்னதாக ஒரு மருந்து வைத்திருப்பான் நிரஞ்சன்.அவன் கிடார் வாசிப்பதால் விரல்களுக்கு சில நேரம் ஆறுதலுக்கு தடவுவதற்காக வைத்திருப்பான்.


அதை எடுத்து மெதுவாக அவளது பஞ்சுப் போன்ற விரல்களில் தடவிக் கொடுக்கவும் வலியினால் அவள் கைகள் துடித்தது.


அதைப் பார்த்து இதமாக ஊதி விட்டவன் “ஏன் இவ்வளவு நேரமா வேலை பார்க்கிறே? என்கிட்ட சொல்லி இருந்தால் நானும் ஹெல்ப் பண்ணுவேன்ல” என்று தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.


சிற்பியின் விரல்களை அவன் பிடிக்கவும் சிற்பிக்கு விழிப்பு வந்திருந்தது.இருந்தாலும் கண்களை திறக்காமல் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளின் விரல்களை தடவிக் கொண்டிருந்தவன் “சிற்பி உன்கிட்ட இன்னும் நிறைய பேசணும் ஆனால் அதுக்கு நீ பொறுமையா கேட்கனுமே” என்று அவளை திரும்பிப் பார்க்கும் போது இமைகளை முழுவதும் திறந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவளை அப்படி பார்த்ததும் முகத்தில் புன்னகையை முழுவதுமாய் நிரப்பிக் கொண்டவன் அவளையே ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அவளது சின்ன நாடியை தன் கரங்களால் பிடித்தவன் கண்களை மூடியபடி அவள் நெற்றியில் ஆழ்ந்த அழுத்தங்களால் தன் முத்திரையைப் பதித்தான்.


அந்த அழகான லேசான சில்லென்ற முத்தத்தை அவளும் விழிகளை மூடி உடல் சிலிர்க்க ஏற்றுக் கொண்டவளைப் பார்க்கும் பொழுது சொல்லாமல் தன் காதலை ஏற்றுக் கொண்ட பெண்ணவளின் அன்பிலே திகைக்க மனம் கோலாகலமானது.


இதுவரை எங்கிருந்தாய்

இதயமும் உன்னை கேட்கிறதே…

பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்

என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்…

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்

உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்

உன்னை உனக்கே தெரியலையா?

இன்னும் என்னை புரியலையா?


இருவருரிடமும் ஒரு அமைதி நிறைந்து இருந்தது.
அப்பொழுது படபடவென்று மழை பெய்ய ஆரம்பித்தது.அவனும் அவளும் எழுந்துக் கொள்ள ஓரமாக வைத்திருந்த அந்த பொருட்களை எல்லாம் நிரஞ்சன் எடுத்துக் கொண்டான்.


உடனே சிற்பி “கொடுங்க நிரஞ்சன்” என்றதும் “சீக்கிரமா போகலாம் மழையில் நனைஞ்சிட போற” என்றதும் அவளை முன்னே போகச் சொல்லி இவன் பின்னாலேயே வந்தான்.


இருவருமாக விடுதிக்குள் வரவும் சிற்பி அதை வாங்கிக் கொள்ள போகவும் நிரஞ்சன் “எங்கே வைக்கனும்னு சொல்லு நான் எடுத்துட்டு வரேன்” என்றான்.


பெண்கள் குழுவிற்கான ஒப்பனை அறையைக் காட்டவும் அங்கே வைத்தான்.


சிற்பி “சாப்டியா?”

“இல்லை வேலையே சரியா இருந்துச்சு”

“வா வெளியே போகலாம்” என்று அவன் அழைக்க சிற்பியோ “ரொம்ப லேட்டாயிடுச்சு நிரஞ்சன் வேண்டாம் நாளைக்கு பார்க்கலாம்” என்று அவள் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.அவனால் மறுப்பு சொல்ல முடியவில்லை.


அவள் சென்ற இருபது நிமிடங்கள் கழித்து சிற்பியின் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு சிற்பி பயந்தவாறு கதவின் அருகில் வரவும் நிரஞ்சன் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.


“உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன் சாப்பிட்டுட்டு தூங்கு” என்று அனுப்பி இருந்தான்.


இவள் லேசாக கதவை திறக்கவும் அங்கே யாரும் இல்லை.கதவு ஓரமாக சாப்பாடு இருந்தது.அதை எடுத்தவள் முகர்ந்துப் பார்த்தாள்.வாசனையாக இருந்தது.


முகம் முழுக்க புன்னகையோடு அதை எடுத்தவள் தன் அறையில் வந்து அதை பிரித்துப் பார்த்தாள்.வித்தியாசமாக இருந்தது.


உடனே அவனை கைப்பேசியில் அழைத்தவள் “ஹலோ”

“ம்ம்… சொல்லு சிற்பி”

“இது என்ன சாப்பாடு வெறும் உப்புமாவா இருக்கு இதையா இந்நேரம் ஆர்டர் செய்து கொடுத்தீங்க?” என்று கவலையாகக் கேட்டாள்.


அவனோ சிரித்துக் கொண்டே “சாப்பிட்டியா இல்லையா?”

அவளோ “எனக்கு உப்புமா பிடிக்காது நீங்களே சாப்பிடுங்க” என்று கவலையாகச் சொன்னாள்.


அவனோ பெரிதாக சிரித்தவன் “இது உப்புமா இல்லை கோவா ஸ்பெஷல் உணவு ரா ப்ரையில் ரவை மற்றும் ரொம்ப மிருதுவான மீனால் செய்யப்பட்டது.நல்லா இருக்கும் சாப்பிட்டு பாரு எனக்காக” என்று அவன் சொன்னதும் ஒரு கவளம் சாப்பிட்டவள் அவனிடம் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.


அவனோ சிரித்தப்படி “பிடிச்சிருக்கா?”


“ம்ம்…” என்று மட்டும் பதில் தந்தாள்.


“ம்ம்… சரி சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு” என்று கைப்பேசியை வைத்தான்.


நிரஞ்சன் அவள் மீதான அன்பும் அக்கறையுமாகக் கொண்ட அவனது காதலை எண்ணி மனமும் வயிறும் நிரம்ப அப்படியே தூங்கிப் போனாள்.


இங்கே அன்பு என்பது எதிர்பாராமல் வருவது தான்.
அதை ஆயிரத்தில் கொட்டித் தீர்க்கும் பரிசுகளை விட சின்னச் சின்ன தேவையான தேவைகளில் நம் அன்பை நிரப்புவதில் இந்தக் காதல் கொட்டிக் கிடக்குது.
 
  • Love
Reactions: shasri