• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -28

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
111
87
28
Chennai
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -28

மறுநாள் காலையில் எல்லோரும் பயிற்சிக்காக வந்து இருந்தார்கள்.ஆனால் சிற்பி வந்து இருக்கவில்லை.

பெண்கள் குழுவில் உள்ளவள் சிற்பியின் கைப்பேசி எண்ணிற்கு அழைக்க அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதில் வந்தது.


இங்கே நண்பர்களுக்குள் சஹா “இன்னும் சிற்பியைக் காணுமே என்னன்னு போய் பார்க்கலாமா?” என்று கேட்டதற்கு நிரஞ்சன் வேண்டாம் என்பது போல் தலையசைத்தான்.



பெண்கள் குழுவில் உள்ள சுபா இவர்களைப் பார்த்து “உங்க அசிஸ்டன்ட் எங்கே? ஆளைக் காணோம்” என்று கேட்டாள்.


அதற்கு சஹா “தெரியலை நாங்களும் அவங்களைத் தான் தேடிட்டு இருக்கோம்” என்றான்.


இங்கே பயிற்சி எப்போதும் போல் நடந்துக் கொண்டிருந்தது.அவர்களுக்கு தேவையானவை எல்லாம் சிற்பி எல்லாம் ஏற்கனவே சொல்லி இருந்ததால் சரியான நேரத்தில் வந்து இருந்தன.அதனால் எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.


நேரம் நண்பகலைத் தாண்டி இருந்தது.
காந்தன் மெதுவாக நிரஞ்சனிடம் “சிற்பி எங்கே போய் இருக்கான்னு தெரியுமா?”


“தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன் நேத்து அவ தூங்கப் போகும் போது எப்படியும் இரண்டு மணி ஆகி இருக்கும் தொல்லை பண்ண வேண்டாமேன்னு தான் உங்களை அமைதியா இருக்கச் சொல்லிட்டேன்” என்றான்.


இதை கேட்ட பார்த்தி “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.நிரஞ்சன் அவர்களுக்குள் நடந்த விஷயத்தை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் சொன்னான்.


அதைக் கேட்டு சஹா “பாவம் சிற்பி நமக்காக ரெண்டு குரூப்பையும் பார்க்க வேண்டியதாக போச்சு” என்று நண்பர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது சிற்பி உள்ளே நுழைந்தாள்.


அவளைப் பார்க்கவே அழகாக இருந்தாள்.எப்போதும் தலையில் எண்ணெய் வைத்து தலைமுடியை பின்னலிட்டு வைத்திருப்பவள் தனக்கு ஏற்ற மாதிரி உடை அணியாமல் ஏதோ பெரிதாக சுடிதார் உடை ஒன்று அணிந்து இருப்பாள்.


ஆனால் இன்று குளித்து தலைமுடியை விரித்து விட்டு கச்சிதமான உடையில் பாதி சுடிதாரின் மேல் உடையும் அதற்கு மாற்றாக கீழே பாவாடை அணிந்து கழுத்தில் தாவணியை சுற்றிக் கொண்டு வந்து நிற்பவளைப் பார்க்கவும் நிரஞ்சனும் ஒருநொடி அப்படியே அசந்து போனான்.


அவளைப் பார்த்து நிறையவே ஆத்திரமும் கோபமும் கொண்ட பெண்கள் குழுவில் ஒருத்தி அவளருகில் வந்து “ஹேய் என்ன இவ்வளவு லேட்டா வர்றே? நீ நல்லா தூங்கி உன் இஷ்டத்துக்கு ரெடியாகி வர்ற வரைக்கும் நாங்க உனக்காக வெயிட் பண்ணனுமா?” என்று கேட்டாள் ரேவதி.


அவள் அப்படிக் கேட்கவும் “நீங்க சிற்பியை கேள்விக் கேட்க எந்த உரிமையும் இல்லை” என்று ஒரு சத்தம் கேட்டது.அப்பொழுது எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே வந்தாள் சாம்பவி.


அவளைப் பார்த்ததும் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.ஆண்கள் குழுவில் உள்ள எல்லோரும் அருகில் வரவும் சாம்பவி சிரித்துக் கொண்டே பெண்கள் குழுவினரைப் பார்த்து “சிற்பி என்னோட கம்பெனில தான் வொர்க் பண்றாளே தவிர உங்களுக்காக இல்லை அதனால அவளை தேவையில்லாமல் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை அதனால முதல்ல அவகிட்ட சாரி கேளுங்க”


சுப்ரியா “எதுக்கு?”


“நேத்து சிற்பியை உங்க தனிப்பட்ட தேவைக்காக அதுவும் தெரியாத ஊர்ல மிட்நைட் வரைக்கும் உங்களுக்கு தேவையான பொருளை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கீங்க இதெல்லாம் சரியில்லை நீங்க சிற்பிக்கிட்டே மன்னிப்பு கேட்கலைன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்கு தெரியும் அதனால உங்க நிலைமை என்னாகும்னு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை” என்றாள்.


உடனே சுபா மற்ற மூவரிடமும் “காம்படிஷன் போயிட்டு இருக்கிற இந்த நேரத்தில் நாம தேவையில்லாத பிரச்சினைக்கு போக வேண்டாம்னு நினைக்கிறேன் அதனால சாரி சொல்லி இதோட இந்த பிரச்சினையை முடிச்சுக்கலாம் ஏன்னா நம்ம கம்பெனிக்கு தெரிஞ்சாலும் ப்ராளம் தான் ” என்று அவர்கள் எல்லோரையும் கொஞ்சம் தள்ளி அழைத்து பேசினாள்.


அவர்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளவும் நால்வரும் சிற்பியிடம் மன்னிப்பு கேட்டுச் சென்றார்கள்.இதைப் பார்த்து ஆண்கள் நால்வருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.


சாம்பவியைப் பார்த்து பார்த்தி “செம என்ட்ரி மேம் இவங்களுக்கு இது தேவை தான் சூப்பரா இருந்துச்சு” என்ற போது அங்கே புன்னகை நிரம்பி இருந்தது.


சஹா சிற்பியைப் பார்த்து “புது கெட்டப்பா இருக்கு”


“ம்ம்… நல்லா இருக்கா? சாம்பவி மேம் தான் டிரெஸ் வாங்கி கொடுத்தாங்க” என்று சிறு பிள்ளையைப் போல் பாவாடையைப் பிடித்து ஒரு சுற்றிக் காட்டினாள்.


நிரஞ்சனைப் பார்த்து பார்த்தியும் சஹாவும் சிரிக்க அவனோ முறைத்தான்.
சாம்பவி சிற்பியைப் பார்த்து “ப்ச்… இவங்களை கண்டால் கொஞ்சம் கூட பயமே இல்லை ஏதோ வீட்டில இருக்கிறவங்ககிட்டே போல பேசி சிரிச்சு ரியாக்ஷன் காட்டுறே உன்னை புரிஞ்சுக்கவே முடியலை சிற்பி இன்னைக்கு சபரி அங்கிள் வந்துடுவாங்க” என்றாள்.


சிற்பியோ திருதிருவென்று விழித்தாள்.அவளைப் பார்த்து சிரித்த சாம்பவி “நாளைக்கு ப்ரோகிராம் முடியும் வரை ரொம்ப கவனமா இருக்கனும் ஏன்னா எல்லாம் நம்ம பொறுப்புல தான் இருக்கு” என்றாள்.சிற்பி சரியென்பது போல் தலையசைத்தாள்.


ஆண்கள் குழுவைப் பார்த்து சாம்பவி “நிரஞ்சன் பெஸ்ட்டா உங்க ப்ராமன்ஸ் இருக்கும் இருந்தாலும் அதுக்கு மேல இருக்கனும் அப்போத் தான் நமக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும் அதனால நல்ல திறமையை முழுசா காட்டுங்க இந்த முடிவு மூலமாக ஓரளவு இறுதி தேர்வு முடிவாகிடும் ” என்றாள்.


அதற்கு நிரஞ்சனும் அவனுடைய நண்பர்களும் "கண்டிப்பா நீங்க எதிர்பார்க்கிற மாதிரி தான் எங்க பாட்டும் இருக்கும்" என்றார்கள்.

சிற்பி சாம்பவியுடன் சென்று இருந்தாள்.
பயிற்சி இன்னும் மும்மூரமாகச் சென்றுக் கொண்டிருந்தது.கொஞ்ச நேர இடைவேளை நேரத்தில் சிற்பி தன் அம்மாவை வீடியோ அழைப்பில் அழைத்தாள்.


தாமரையும் ஆவலாய் அவளது அழைப்பினை எடுத்தார்.சிற்பி தன் அம்மாவிடம் “அம்மா நான் பார்க்க எப்புடி இருக்கேன்? அழகா இருக்கேனா?” என்று தான் அணிந்திருந்த புது ஆடையை காட்டுவதற்காக தன்னை மேலும் கீழுமாகக் காட்டினாள்.

அதைப் பார்த்து தாமரை “சிற்பி என்னது இது? டிரெஸ் ஏன் இவ்வளவு இறுக்கமா போட்டு இருக்கே? நல்லாவே இல்லை முடியை ஒழுங்கா பின்னல் போடு ஏன் இப்படி விரிச்சு போட்டு இருக்கே?” என்று சிற்பியைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்.


சிற்பியோ தன் அம்மாவின் பதிலில் திணறிப் போனவள் கொஞ்சம் வருத்தமும் கவலையுமாக “அம்மா இங்கே எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு பாருங்க” என்று அங்கே சுற்றி வேலையில் இருந்த சில பெண்களையும் போட்டியில் கலந்துக் கொள்ளும் பெண்கள் குழுவையும் அவர்களோடு மற்ற போட்டியாளர்கள் குழுவையும் காட்டினாள்.


எல்லோரும் விதவிதமான நவீன உடையில் வித்தியாசமாக இருந்தார்கள்.அவர்களை காட்டி விட்டு சிற்பி “அம்மா பார்த்தீங்களா? எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு இதுல நான் ஊர்ல நம்ம வீட்ல போடுற டிரெஸ்ஸை போட்டால் எல்லோரும் என்னை வித்தியாசமா பார்க்கிறாங்க அதோட அவங்களுக்குள்ளே கிண்டல் பண்ணுறாங்கன்னு விஷயத்தை தெரிஞ்சு தான் எம்.டி மேம் எனக்காக இந்த மாதிரி டிரெஸ் உடலை முழுதாக மறைக்கிற மாதிரி அதே போல கொஞ்சம் மாடலா வாங்கிக் கொடுத்து போடச் சொன்னாங்க அதை உங்ககிட்ட காட்டலாமேன்னு தான் போன் போட்டேன் நீங்க என்னன்னா நான் பார்க்க அழகா இல்லைன்னு சொல்லுறீங்க ” என்று முகம் முழுவதும் வருத்தத்தோடு ஆதங்கமாக கேட்டாள்.


சிற்பி சொன்னதைக் கேட்டு தாமரையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அவளது அம்மா பேச வருவதற்குள் சாம்பவி சிற்பியை அழைத்தாள்.அதனால் இதைப் பற்றி பிறகு பேசலாம் என் எண்ணியவள் தாமரையிடம் “அம்மா மேம் கூப்பிடுறாங்க நான் இனிமேல் நாளைக்கு மறுநாள் தான் பேசுவேன் எதாவது அவசரம்னா வாய்ஸ் மெஸேஜ் அனுப்புங்க” என்று அவசரமாக பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.


சிற்பி முதலில் ஆர்வத்தில் இரண்டு புகைப்படம் ஏற்கனவே எடுத்து அனுப்பி இருந்தாள்.அவள் அழைப்பை துண்டிக்கவும் அந்த புகைப்படத்தை யோசனையோடு பார்த்தவர் சோகமாக அமர்ந்து இருந்தார்.
அவரின் முகமாற்றத்தைக் கண்டு அப்பொழுது தாமரை பக்கத்தில் வந்த அருள்மணி “என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்டார்.



உடனே தாமரை “இங்கே பாருங்க” என்று சிற்பி அனுப்பிய புகைப்படத்தைக் காட்டினார்.அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த அருள்மணி “இது நம்ம சிற்பியா? அடையாளமே தெரியலை? சிட்டிப் பொண்ணு மாதிரில்ல இருக்கா” என்று மகளைப் பார்த்து அதிசயித்துச் சொன்னார்.


தாமரையோ “என்னங்க நானே இப்படி மாறி இருக்காளேன்னு கவலையா சொன்னா? நீங்க என்னன்னா அவளை பார்த்து பெருமைப்படுறீங்க?” என்று கோபமாகக் கேட்டார்.


அருள்மணியோ அவரைப் பார்த்து சிரித்தப்படி “தாமரை சிற்பி எங்கே இருக்காளோ? அதுக்கு ஏத்தமாதிரி தானே இருந்தாகனும் அதுல நாம கோபப்பட ஒன்னும் இல்லை.அவ டிரெஸ் மாடலா போட்டாலும் கண்ணியமாகத் தானே இருக்கு உனக்கே தெரியும் வெளியூருக்கு படிக்க போறேன்னு நம்ம ஊரு பொண்ணுங்களே எப்படி எல்லாம் விருப்பமா போடுறாங்க அதுல சிற்பி ஏதோ தப்பு பண்ற மாதிரி கவலைப்டுறே இந்த மாதிரி சாதாரண உரிமையை நம்ம சிற்பிக்கு கொடுக்கனும் அது தப்பில்லை” என்றார்.


தாமரை யோசனையில் அமர்ந்து இருக்கவும் அவரின் தோள்களில் ஆதரவாக தட்டிக் கொடுத்தவர் “சிற்பிக்கு பாட்டுப் பாட ரொம்ப பிடிக்கும் அது சம்பந்தமான அவள் போகனும்னு ஆசைப்பட்ட போது நம்ம குடும்பத்துக்கு இது சரியா வராதுன்னு நீ தானே என்கிட்ட சொன்னேன்னு அதை மறைச்சு சிற்பிக்கிட்டே எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேன்.அந்த ஒரு காரணத்துக்காக அவள் தனக்கு பிடிச்ச பாட்டு பாடுவதை விட்டுட்டு அது சம்பந்தமாக படிக்காமல் நமக்காக சாதாரண ஒரு டிகிரி படிப்பதற்காக கல்லூரிக்கு போனாள்.ஆனால் உனக்கு பாட்டு பாடுவது பிடிக்காதுன்னு சிற்பி கண்டுபிடிச்சும் அவளுக்கு தெரிந்தே இருந்தும் நீ கவலைப்படுவேன்னு அதை வெளிக்காட்டலை.


இப்போ விதியோ அவள் விரும்பிய சங்கீதத்தின் பக்கமா சிற்பியை அழைச்சுட்டு போகும் போது நாம தடுக்க என்ன இருக்கு” என்று கேட்டார்.


அவர் சொன்னதைக் கேட்டதும் கோபமடைந்த தாமரை “என்னப் பேசுறீங்க அவ பொம்பளை பிள்ளை அவளுக்கு பிடிக்கும் என்ற ஒரு காரணத்துக்காக அப்படியே அவளுடைய இஷ்டத்துக்கு விட்டால் அது தப்பாகி விடும்” என்றார்.

அருள்மணி பொறுமையாக “நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை தாமரை” என்றார்.


தாமரை “பின்னே நீங்க சொன்ன பதில் அந்த மாதிரி தான் இருக்கு” என்றார் தாமரை.


அருள்மணி சிரித்தப்படி “நாம இப்போ நிம்மதியா எந்த கடன் தொல்லையும் இல்லாமல் இருக்கிறதுக்கு காரணமே சிற்பி தான்.நம்மளுடைய நலனைத் தான் அவள் எப்பவும் பெரிசா நினைக்கும் பிள்ளைக்கு அவளுக்கு பிடிச்ச விஷயத்தை செய்வதற்கு சரின்னு சொல்லுறதுக்கு நமக்கும் கடமை இருக்கு அப்போதும் நம்ம பிடிவாதத்தை பிடிச்சிட்டு இருக்கிறது சரியில்லை தாமரை நம்ம தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது தவறு.அதோட சிற்பிக்கு திறமை இருந்தால் அதன் மூலமாக பெரிய ஆளாக வரட்டுமே” என்று தன் மகளின் நலனுக்காக பேசினார் அருள்மணி.


தன் கணவனிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
தாமரை யோசனையாக “அப்போ எப்போ அவளுக்கு நாம கல்யாணத்தை முடிக்கிறது? சிற்பியையும் ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா தான் நாம நிம்மதியாக இருக்கும் முடியும்” என்று தாமரை தன் எண்ணத்தையே பெரிதாகச் சொன்னார்.


அப்பொழுது அவருடைய மகள் கனிகா தாமரையின் கைப்பேசியில் அழைத்தாள்.


தாமரை “ஹலோ” என்றதும் கனிகா புன்னகையான பேச்சோடு “அம்மா நல்லா இருக்கீங்களா?” என்றதற்கு “இருக்கேன்” என்று ஒற்றை வரியில் பதில் வந்தது.


கனிகா “அம்மா என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி பதில் சொல்லுறீங்க?” என்று அக்கறையாகக் கேட்டாள்.


அதைக் கேட்ட தாமரை “எல்லாம் உன் தங்கச்சியாலத் தான்”


“என்னாச்சு?” என்று கனிகா கேட்கவும் தாமரை நடந்த விவரங்களைச் சொன்னவர் “அங்குள்ள பிள்ளைகள் எல்லாம் டிரெஸ் போட்ட மாதிரித் தான் போடுவேன்னு என்கிட்டயே பிடிவாதம் பண்ண மாதிரி பேசுறா அவ என்ன இப்படி பேசுறாள்? குடும்பத்தைப் பற்றிய பயம் போயிடுச்சு” என்றார்.


கனிகாவோ சிரித்துக் கொண்டு “அம்மா அவ சின்னப் பொண்ணு இல்லை ஏன் இவ்வளவு கவலைப்படுறீங்க? எனக்கும் போட்டோ அனுப்பினாள்.
அழகா இருக்கால்ல அவளாவது நம்ம குடும்பத்தை விட்டு வெளியே போய் சாதிக்கட்டுமே! நானும் இன்னும் ஒருவாரத்துல பெங்களூர் போறேன் அங்கே சிற்பியை நேர்ல பார்த்து பேசுறேன்” என்றாள்.


அருள்மணியும் கனிகாவும் பேசியும் அவருடைய மனம் சரியானதாக இல்லை.இந்த வேலை முடிந்தவுடன் சிற்பியை திரும்ப வீட்டுக்கு அழைத்து விடலாமா? என்பது வரை யோசித்தார்.


இங்கே நேரம் வேகமாகச் சென்றது.மறுநாள் மாலையில் நேரலையில் நிகழ்ச்சி என்பதால் அங்கே பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் நிறைய வேலைகள் இருந்தது.இந்த போட்டியின் முடிவில் தான் இறுதி சுற்றுக்கான குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள்.


எல்லோரும் ஒப்பனை அறையில் தயாராகிக் கொண்டிருக்க அவர்களுக்கு தேவையானது ஒருபுறம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் வேலை என்று சிற்பி கால்களில் ரெக்கை கட்டியது போல் சுற்றிக் கொண்டிருந்தாள்.


சபரியும் உடனிருந்து அவரும் உதவிக் கொண்டிருந்தார்.
சிற்பி ஆண்களுக்கான ஒப்பனை அறைக்கு வரும் பொழுது நிரஞ்சன் “சிற்பி இங்கே வா” என்று அழைத்தான்.


இவளும் சிரித்துக் கொண்டே "என்ன நிரஞ்சன்" என்று அவன் அருகில் செல்லவும் அவளது கையில் ஒரு பாட்டிலைக் கொடுத்து “இதை குடி சிற்பி ஹெல்த் டிரிங்ஸ் தான் அங்கேயும் இங்கேயுமா சுத்திட்டே இருக்கே டயர்டா இருக்கும்” என்று கொடுத்தான்.


இதை எல்லாம் சபரியும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் கவனிப்பதைக் கண்ட காந்தன் நிரஞ்சனைப் பார்த்து “நிரஞ்சன் இங்கே வா” என்று சொல்லவும் நிரஞ்சன் அவனைப் பார்க்க காந்தன் கண்ணசைவினால் சபரியைப் பார்த்தான்.


அதைப் பார்த்து புரிந்துக் கொண்ட நிரஞ்சன் அமைதியாகி விடவும் சிற்பியோ “ரொம்ப தாங்ஸ்” என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

காந்தன் மெதுவாக நிரஞ்சனிடம் “கொஞ்சம் கவனமா இரு நிரஞ்சா அவங்க மாமாவும் இருக்காங்கல்ல” என்றதற்கு சரியென்பது போல் தலையசைத்தான்.


எல்லா வேலைகளும் முடித்தாகி விட்டது.இப்போது சிற்பியும் உடையை மாற்றிக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது.


அவள் இதற்காக எந்த உடையையும் புதுசாக எடுக்கவில்லை.ஏனென்றால் இதைப் பற்றிய சரியான விவரங்கள் தெரியாததால் என்னச்செய்வதென்று தெரியாமல் விடுதிக்குள் நுழையவும் வரவேற்பறையில் இருந்த பெண்ணொருத்தி சிற்பியின் அருகில் வந்து தன் கையில் ஒரு பெட்டியை வைத்து ஆங்கிலத்தில் அவளின் அறை எண்ணைச் சொன்னவள் “நீங்க தானே சிற்பி”

“ஆமாம்”

“மேம் உங்களுக்கு இந்த பார்சல் வந்து இருக்கு” என்று அதை கையில் கொடுக்க வரவும்


சிற்பியோ “நான் எதுவும் ஆர்டர் பண்ணலை” என்ற போது அவளுடைய கைப்பேசி அழைத்தது.


நிரஞ்சன் தான் பேசினான்.”சிற்பி உனக்காக ஒரு சின்ன கிப்ட் வேண்டாம்னு சொல்லாதே! வாங்கிக்கோ நாங்க கொடுத்த பரிசை தான் யூஸ் பண்ணனும் சரியா? அப்புறமா பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.


இவளும் அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டு தன் அறையில் போய் திறந்து பார்த்தாள்.அதில் நீலநிறத்தில் முழுநீளமாக ஒரு மேக்ஸி இருந்தது.அதற்கு மேல் ஒரு சிறிய துண்டு காகிதத்தில் “இன்னைக்கு இந்த டிரெஸ் போட்டுட்டு வா சிற்பி நிகழ்ச்சி முடிந்ததும் சின்னதா ஒரு பார்ட்டி இருக்கு கண்டிப்பா வரனும் இது எங்க எல்லோருடைய சார்பாக” என்று எழுதி இருக்கவும் அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


முகம் முழுவதும் புன்னகையோடு விழிகளில்
கண்ணீர் நிரப்பிக் கொண்டது சிற்பிக்கு.அவளுக்கு இதுவரை எந்தவொரு பொருளும் வாய் திறந்து கேட்டாலே சட்டென்று கிடைத்து விடாது.அதுவும் அவள் விரும்பிய பொருட்கள் கேட்டாலும் கிடைக்காது சந்தேகம் தான்.ஏனென்றால் பெண்பிள்ளைகளுக்கு எல்லாம் கேட்டவுடன் கிடைத்தால் அவர்கள் பெரியவர்களின் சொல் பேச்சு கேட்க மாட்டார்கள் என்பது அவளின் அம்மாவின் எண்ணம்.


காரணம் அவர் வாழ்ந்த முறை அப்படியாக இருக்கையில் தாமரையும் அப்படியே தன் பிள்ளையையும் வளர்த்தார்.இதெல்லாம் ஒருநிமிடம் நினைவில் வந்து போனது சிற்பிக்கு.ஆனால் அவள் பெங்களூர் வந்து இவர்கள் நால்வரையும் சந்தித்து அவர்கள் இவளை தோழியாக ஏற்றுக் கொண்டார்கள். அன்றிலிருந்து பெண் தானே என்று ஒதுக்கி வைக்காமல் அவளையும் தங்களில் ஒருவராக நினைத்து அவளுக்கான எல்லா மதிப்பையும் கொடுத்தது பிடித்த ஒவ்வொன்றையும் செய்து தருகிறாகள்.அதுதான் சிற்பிக்கு அவர்களிடம் பிடித்த பண்பான விஷயம்.


அந்த உடையை தன் மேல் வைத்துக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள்.சரியாக இருந்தது.குளித்து முடித்து அவர்கள் கொடுத்த உடையை போட்டு பார்த்தாள்.சரியாக அவளுடைய கணுக்காலுக்கு மேல் இருந்தது.


அவள் வேகமாக நடப்பதற்கு வசதியாகவும் அதற்கு ஏற்றவாறும் உடை இருந்தது.அது அவளை இன்னும் அழகாகக் காட்டியது.
கடிகாரத்தைப் பார்க்க நேரமாகவும் தலைமுடியை சரி செய்ய நேரமில்லாததால் தற்சமயம் ஒரு பேண்ட்டால் கட்டி விட்டு தன்னை ஒரு புகைப்படம் எடுத்து அதை தன் அம்மா,அக்கா மற்றும் அத்தைக்கு அனுப்பி விட்டு சாம்பவியின் அறைக்கு ஓடினாள்.


அங்கே சாம்பவி தயாராகிக் கொண்டிருந்தாள்.சிற்பியைப் பார்த்தவள் “உன்னைத் தான் நினைச்சுட்டு இருந்தேன் நீயே வந்துட்டே எல்லாம் ஏற்பாடும் சரியாகத் தானே நடந்துட்டு இருக்கு” என்று கண்ணாடியில் தன் ஒப்பனையாளர் செய்வதைப் பார்த்துக் கொண்டே பேசியவள் சிற்பியை திரும்பிப் பார்க்கும் அவளது உடையைப் பார்த்து “ஹோ வாவ் சூப்பரா இருக்கே சிற்பி எவ்வளவு அழகு" என்று அவளுடைய தலையைப் பார்த்தவள் "நீ ஏன் ஹேர்ஸ்டைல் பண்ணலையா?”


“தாங்க்யூ மேம் நேரம் இல்லை அதோடு இப்போ இருக்கிற வேலைக்கு இது தான் நல்லா இருக்கு அதோடு அடுத்த ஏற்பாட்டை பார்க்க போகனுமே” என்றாள்.


உடனே தன் ஒப்பனையாளரிடம் “சிற்பிக்கு இந்த போனிடேயில் மாதிரியே வித்தியாசமான ஹேர் ஸ்டைல்ல செய்து விடுங்க சின்னதா ஒரு டச்அப்” என்றாள்.

சிற்பியோ “அதெல்லாம் வேண்டாம் மேம் நேரம் ஆகுது” என்றாள்.


சாம்பவியோ விடாப்பிடியாக பிடித்து அவளை சொன்னது போலவே சிறிது நேரத்தில் சிற்பியை கொஞ்சம் முகத்திற்கு ஒப்பனை போட்டு ஆளையே மாற்றி விட்டு அவளை அனுப்பி வைத்தாள்.


இங்கே வந்திருக்கும் சில பங்குதாரர்களை கவனிக்க வேண்டியது இருந்ததால் சிற்பி நிரஞ்சன் மற்றும் அவனது குழுப் பக்கம் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டியது இல்லை.அதனால் அவளோ ஒவ்வொரு விருந்தினர்களை வரவேற்கும் பக்கத்தில் நிற்க இதெல்லாம் நேரலையில் படமாக்கிக் கொண்டிருந்தார்க.


நடப்பவை எல்லாம் முதலில் பூர்ணா தொலைக்காட்சியில் பார்த்தவர் பின்னர் தாமரையை கைப்பேசியில் அழைத்து நிகழ்ச்சியைப் பற்றி விவரங்களைச் சொன்னார்.


சிற்பியின் பெற்றோரும் சகோதரியும் அவள் வீட்டிலுள்ளவர்ககள் சொந்தங்கள் என்று எல்லோரும் பார்த்தார்கள்.அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அவர்கள் யாரும் நினைத்தே பார்க்க முடியாத பெரும் பணக்காரர்கள் அருகினில் சாம்பவியோடு அவள் நின்றுக் கொண்டிருந்தாள்.


நிரஞ்சன் மற்றும் அவர்களின் நண்பர்களின் குழு மேடைக்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் தான் சிற்பி எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்க சென்றாள்.


அவளைப் பார்த்த நால்வரும் அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்கே சிற்பி” என்று ஒவ்வொருவராகச் சொல்ல எல்லோரிடமும் சிற்பி நன்றி சொன்னாள்.


சிற்பி அவர்களைப் பார்த்து "உங்க எல்லோருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று மனதார வாழ்த்தினாள்.அடுத்து அவர்களும் அந்த பெண்களின் குழுவும் ஒன்றாக மேடையில் தோன்றி பாட்டு பாடினார்கள்.இதை எல்லாம் ஒருவித ஏக்கத்தோடு சிற்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.
தங்களின் கச்சேரிக்கு
இடையினில் நிரஞ்சனும் அவனது நண்பர்களும் சிற்பியைப் பார்த்து கையசைத்தனர்.


இவை எல்லாம் தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளத்திலும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு இருந்தது.சிற்பியின் உறவினர்கள் தாமரையின் கைப்பேசியில் அழைத்து “தாமரை அது உன் பொண்ணு சிற்பிகா தானே ஆளே அடையாளம் தெரியலை எவ்வளவு பெரிய ஆட்களோடு இருக்கா? என்ன வேலை பார்க்கிறாள்? எப்படி அவளுக்கு இந்த வேலை கிடைச்சது? எங்க பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி ஒரு வேலை கிடைக்குமா? இல்லைன்னா சங்கீத மேளாவில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கச் சொல்லு” என்று பலவகையில் விதவிதமான விசாரிப்பும் பொறாமை கலந்த பேச்சும் என்று சிற்பியைப் பற்றிக் கேட்ட எல்லா கேள்விக்கும் தாமரைத் தான் பதில் சொல்லியே சோர்வாக இருந்தார்.


அருள்மணிக்கு இதை எல்லாம் பார்க்க தன் மகளை நினைத்து பெருமிதமாக இருந்தது.அவரோ எதுவும் பேசாமல் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


இங்கே போட்டியில் ஒன்றாக பாடியவர்கள் அடுத்து தங்களது பாடலை தனியாக பாடினார்கள்.மக்களின் கரகோஷத்தில் நிகழ்ச்சி முடிந்து இறுதியில் இறுதி போட்டிக்கு தகுதிப் பெறும் அணியைப் பற்றி சொன்னார்கள்.


எல்லோரும் ஒருவித பதற்றத்தில் நிற்கும் போது முதலில் பெண்கள் குழுவும் அடுத்து இன்னொரு குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.இங்கே நிரஞ்சனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தங்களின் குழு தேர்ந்தெடுக்க படவில்லையோ? என்று நினைத்து கவலையில் இருக்க கடைசியில் மக்களின் அதிக ஆதரவோடும் நடுவர்களின் முடிவோடு சேர்த்து அதிக மதிப்பெண்ணில் நிரஞ்சனின் குழு தேர்ச்சி பெற்றது.இவர்களின் மூவரின் குழு வெளிநாட்டிற்கு சென்று அங்கே பாட்டு கச்சேரி நடத்தி மக்கள் மற்றும் நடுவர்களின் யாருக்கு ஆதரவு திரும்பவும் யாருக்கு கிடைக்கிறது என்று போட்டியிட வேண்டும் என்பது முடிவானது.


நிரஞ்சனுக்கும் மற்ற மூவருக்கும் அவர்களால் நம்ப முடியவில்லை.அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்திற்கு தேர்வானார்கள்.
சாம்பவிக்கு பெருமையாக இருந்தது.அவள் தன்னுடைய நிறுவனத்தின் குழு தேர்வாகும் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் இப்படி முதல் இடத்திற்கு வந்ததே அவளுக்கு பெரிய வெற்றி தான்.


இந்த வெற்றியினால் சங்கீத மேளாவில் இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் அவளிடம் வருவார்கள்.
முதல் இடத்திற்கு வந்தவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று ஓரளவுக்கு முடிவானது தான்.


அங்கே கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்தாயிற்று.இனி பத்து நாட்கள் கழித்து நடக்கப் போகும் இறுதி சுற்றுக்கான தேதியும் இடமும் அதற்கான அறிவிப்பையும் கொடுத்தார்கள்.


பெண்கள் குழுவிற்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. தங்களுக்கு
இரண்டாவது இல்லாமல் கடைசி இடம் கிடைத்து இருந்ததை நினைத்து கவலைப்பட்டனர்.
ஏனென்றால் சென்ற முறை அவர்கள் முதல் இடத்தைப் பெற்று இருந்தார்கள்.ஆனால் இப்போது எல்லாம் முடிவான பிறகு எதுவும் செய்ய முடியாது அமைதியாக நின்றனர்.


சிற்பிக்கு நிறைய வேலைகள் இருந்தன.
எல்லாம் முடித்து விட்டு நிரஞ்சன் சொன்ன இடத்திற்கு வந்தாள் அவள்.
 
Last edited:
  • Love
Reactions: shasri

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
135
63
Tamilnadu
nice epi dear ❤ vaagiya amaipula innum konjom kavanam theyvaiyo sis. silla idangalil purinjuka kastama iruku and also antha feel konjo miss aagurathu pola iruku
 
  • Wow
Reactions: shaliha ali

shaliha ali

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 24, 2024
111
87
28
Chennai
nice epi dear ❤ vaagiya amaipula innum konjom kavanam theyvaiyo sis. silla idangalil purinjuka kastama iruku and also antha feel konjo miss aagurathu pola iruku
Oh ok sis naan thirumba oru murai correction pannividurean thank you sis mistake sonnal thaan naanum athai sari panna mudiyum 😍
 
  • Love
Reactions: shasri