முத்தம் - 07
முதல்நாள் கலவரம் நடந்த வீடு போலில்லாமல், அடுத்தநாள் காலையில் மிகவும் அமைதியாக இருந்தது சொக்கலிங்கத்தின் அந்த பெரிய வீடு.
மகனையும், மகளையும் ‘அவன் போற வரைக்கும் கொஞ்ச நாள் சும்மா இருங்க’ என அமைதியாக்கி இருந்தார் ராஜலட்சுமி.
சுமித்ராவுமே கணவனிடம் “நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி சாதாரணமா அவரை என்னால நினைக்க முடியல. அவர்கிட்ட பிரச்சினை செய்யாம அமைதியா இருங்க. உங்க அப்பாவுக்கு ஹெல்த் சரியானா அவரே போயிடுவார். நீங்க இந்த சொத்து பிரச்சினையை ஆரம்பிச்சி அவரை நீங்களே இருக்க வச்சிடாதீங்க..” என இரவெல்லாம் ஓதியிருக்க, அதனால் சுந்தரும் அமைதியாக இருந்தான்.
காலையில் ஆளுக்கு முன்னே அந்த ஐவரும் ஹாஸ்பிடல் கிளம்பி நின்றிருக்க, யாழினியோடு கீழே வந்த கர்னனின் கண்களில் அது விழாமல் இல்லை. ஆனாலும் கண்டுகொள்ளாமல் டைனிங்க் டேபிளில் அமர, யாழினியும் அமர்ந்தாள்.
கர்னனின் இறுக்கமான முகம், அழுத்தமான நடை அவனிடம் நெருங்கவே யோசிக்க வைத்தது. ஆனாலும் தைரியத்தை வர வைத்து “தம்பி நாங்க முன்னாடி போகட்டுமா?” என ராஜலட்சுமி மெல்ல ஆரம்பிக்க,
‘எங்க.?’ என்பது போல் கேள்வியாக பார்த்தான் கர்னன். அந்த பார்வையில் இருந்த கேள்வியே அவர்களை நடுங்க வைத்தது.
“அப்பாவை பார்க்கத்தான் தம்பி.. நீ நைட்டெல்லாம் அங்க இருந்துட்டு காலையிலதான வந்த. நீ இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு வா.. நாங்க போய் பார்க்குறோம்..” என்றார் அதே மெல்லிய குரலில்.
என்ன யோசித்தானோ சட்டென “சரி.. கிளம்புங்க..” என்று மீண்டும் உணவில் கவனமாகிவிட்டான்.
“அவங்க எதுக்கு போறாங்க.. அங்க போயும் அவரோட நிம்மதிய கெடுக்கவா?” என இந்த நாடகத்தைப் பார்த்து யாழினி கத்த,
“ஏய் என்னடி ஓவரா பேசிட்டு இருக்க..?” என வனிதா தன் பொறுமையை விட்டு எகிறிக்கொண்டு வர,
“ம்ச் யாழி அவங்க போய் பார்க்கட்டும்..” என கர்னன் அமைதியாக அதே நேரம் அழுத்தமாக கூற, முன்னால் நின்றவர்களைப் பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் உணவில் கவனமானாள் யாழினி.
“சரி நாங்க கிளம்பறோம் ண்ணா..” என சுந்தர் வலுக்கட்டாயமாக வந்து கர்னனிடம் கூறிவிட்டு செல்ல, எதையும் கண்டுகொள்ளவில்லை கர்னன்.
அவர்களின் மேலிருந்த கோபம் கொஞ்சமும் குறையாமலிருக்க, அவர்களிடம் சாதாரணமாக கூட பேச முடியவில்லை.
இங்கு காரில் ஏறியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.
வனிதா தான் ஏகத்துக்கும் குதித்துக் கொண்டிருந்தாள். ‘உங்களுக்குத்தான் ம்மா அறிவே இல்ல. அவனை எல்லாம் ஏன் படிக்க வச்சீங்க.. அவனை எதுக்கு இப்படி வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பி வச்சீங்க. உங்க கைக்குள்ள வச்சிருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா? என்ன தான் இவர் கூட பொழச்சீங்களோ தெரியல..” என கத்திக் கொண்டே வர,
“ம்ச் வாயை மூடு.. அம்மாக்கிட்ட என்ன பேசனும்னு தெரியாதா?” என சுந்தர் வனிதாவை அதட்ட,
“என்ன.. என்னை எதுக்கு அதட்டுற? அங்க ஒருத்தன் உக்காந்துட்டு எல்லாரையும் ஆட்டி படைக்கிறான் பார், அவன்கிட்ட எகிற வேண்டியதுதான.. எங்கிட்ட ஏன் கத்துற? இதெல்லாம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? என் மாமியாரும் அவங்க ஆளுங்களும் என்னை எதுக்கும் மதிக்கமாட்டாங்க..” என மேலும் கத்த,
“போதும் வாயை மூடு வனி.. இனி அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது. கொஞ்சம் பொறுமையா இரு.. நைட்டெல்லாம் அவர்கூட இருந்துருக்கான். அவர் என்ன எல்லாம் சொல்லிருக்காரோ தெரில, அது தெரியாம வாயைவிட்டு பிரச்சினையை பெருசாக்க நான் தயாரில்ல.. அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்..” என சுந்தர் சொல்ல, சுமித்ராவும் அதேயே சொல்ல, ராஜலட்சுமி மட்டும் அமைதியாகவே வந்தார்.
இதையெல்லாம் பார்த்து எரிச்சலாக இருந்தது வனிதாவிற்கு. அந்த எரிச்சலில் மருத்துவமனைக்கு வந்தாலும் உள்ளே சென்று லிங்காவை பார்க்கவில்லை.
மற்றவர்களும் பேருக்கு சென்று பார்த்ததோடு சரி, உடனே வெளியில் வந்து அமர்ந்துவிட்டார்கள்.
அங்கிருந்த நர்ஸ் அனைவரையும் பார்த்துவிட்டு, மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துவிட்டார்.
நேற்றிலிருந்தே ராஜலட்சுமி அமைதியாகவே இருந்தார். அவர் அமைதியை என்னவென்று எடுத்துக்கொள்ள.
“ம்மா…. நீ இன்னும் என்ன யோசிக்கிற? அவனால நம்மளை ஒன்னும் செய்ய முடியாது. நீ பயந்து எங்களையும் பயப்பட வைக்கிற..” என வனிதா கத்த,
“ம்ச்.. கொஞ்சம் சும்மா இருந்து தொலை வனி. அவன் என்ன யோசிக்கிறான்னு தெரியாம எதையும் செஞ்சி, பேசி வைக்க முடியாது. சுந்தர் சொல்றதுதான் சரி.. அவன் என்ன பண்றான்னு முதல்ல பார்க்கலாம். அதுக்கு பிறகு நாம என்ன செய்றதுனு சொல்றேன்..” என்ற ராஜலட்சுமிக்குமே கர்னனின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற யோசனைதான்.
பிள்ளைகள் சொல்கிறார்கள் என்று அவசரப்பட்டு அவனை பகைத்துக்கொள்ள அவர் என்ன முட்டாளா?
லிங்காவின் பரம்பரை சொத்து ஒரு பக்கம், வராவின் தாய் வீட்டு சொத்து ஒரு பக்கம், அவரின் தந்தை வீட்டு சொத்து ஒருபக்கம். அது இல்லாமல் வராவின் நகைகள், அவர் தாயின் நகைகளில் பாதி, லிங்காவின் சொத்தின் பங்குகள், அவன் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள் என இவை அனைத்தையும் நினைக்கும் போதே ராஜலட்சுமிக்கு நெஞ்சு வெடித்து விடும் போல் இருந்தது.
தன்னுடைய சொத்துக்களும், பரம்பரை சொத்துக்களும் மூன்றாக பங்கு விழ, அவனுக்கு முழுதாக போய் சேரும் என்று நினைத்தாலே அவருக்கு கர்னனை கொன்றிருக்கலாமோ என்று கூட தோன்றியது.
ஆம்! நேற்றிரவு இருந்தே அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார். அவன் தன் கைப்பாவையாக இருந்த போதே யாருக்கும் சந்தேகம் வராமல் கொன்றிருக்கலாமோ. இப்போது இப்படியொரு பிரச்சினை வந்திருக்காதோ என அவர் மூளை சொல்லிக்கொண்டே இருந்தது.
அப்படி கிடைத்த பல சந்தர்ப்பங்களை தவறவிட்ட தன்னையே நொந்துகொண்டார்.
இனி அவனை எப்படி இந்த வாழ்க்கையில் இருந்து, அவர்களிடமிருந்து தள்ளி வைப்பது என யோசித்துக்கொண்டே வந்தார்.
இப்படியாக அனைவரும் ஆளுக்கொரு சிந்தனையில் இருக்கும் போது கர்னனும் யாழினியும் மருத்துவமனைக்கு வந்தனர்.
வெளியில் அமர்ந்திருந்தவர்களை கர்னன் கேள்வியாக பார்க்க, “நர்ஸ்தான் தம்பி வெளிய இருக்க சொன்னாங்க..?” என ராஜி பதில் கூற, அதை கேட்டபடியே உள்ளே சென்றனர் இருவரும்.
“எதுக்கு அவங்களை வெளிய அனுப்புனீங்க..” என கர்னன் கேட்க, பயந்தே போனாள் அந்த செவிலி பெண்.
“சார்.. நான் இல்ல சார்..” என திணறிய நர்சின் பதிலில் அவள் அப்படி எதுவும் சொல்லவில்லை என புரிய, “நத்திங்க்..” என்றவன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டான்.
மறுபக்கம் யாழினி அமர்ந்தாள்.
அவன் அரவம் உணர்ந்து கண் திறந்தவர் “சாப்டியா..?” என்றார் உளறலாக.
“ம்ம் ப்பா.. நீங்க எங்களை ரொம்பவே பயமுறுத்திட்டீங்க. இப்போ நல்லாத்தான் இருக்கீங்க. பிசியோதெரபி கொடுத்தாலே போதும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அந்த எக்ஷ்போர்ட் ஆர்டர் பத்தி யோசிக்காதீங்க. அங்கிள் ரெண்டு பேரும் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்காங்க. யூனியன்லயும் பேசியாச்சு. நான் பார்த்துக்கிறேன்..” என கர்னன் ஆறுதலாக பேச,
“ம்ம்.. ராமு பாவம். ரொம்ப பயந்துருப்பான்..” என்றார் மீண்டும்.
“அப்பா.. அதை விடுங்க. அதுதான் அண்ணா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டார்ல்ல.. நீங்க இப்போ ஒகே தானே.. மெடிசின் கொடுத்தாங்களா? வேற எதுவும் அன்கம்ஃபார்டபிளா ஃபீலாகுதா?” என யாழினி அழுதுகொண்டே கேட்க,
“இல்லடா… நேத்து பயந்துட்டியா.?” என மகளின் கைப்பிடித்து கேட்க,
“ம்ம்.. ரொம்ப பயந்துட்டேன்.. இப்போ ஓக்கேதான. நான் இனி எங்கேயும் போகமாட்டேன். உங்க கூடத்தான் இருப்பேன்..” என மேலும் அழ,
“ஒன்னும் இல்லடா..” என மகளின் கையைப் பிடித்தபடியே இருந்தவர், “சுந்தர், வனி யாரும் வரலையா?” என்றார் யோசனையாக.
“அப்பவே வந்துட்டாங்க ப்பா.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க.. அதுதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு வெளியில் இருக்காங்க..” என யாழினி பதில் சொல்லும் முன்னே கர்னன் கூற,
“ம்ம் சரிப்பா..” என்றவர் ‘சிவாவும், ராமுவும் வந்தா கொஞ்சம் பார்த்துக்கோப்பா.. உன் அம்மா வாய் சரியில்ல. எதாவது பேசிடுவா..” என்றார் லிங்கா.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் ப்பா.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..” என்றவன் வெளியில் வர, சுந்தரும் ராஜலட்சுமி மட்டுமே இருந்தனர்.
“பசங்க ஸ்கூல்ல இருந்து எமர்ஜென்சின்னு போன் வந்தது ப்பா.. அவசரம்னு ரெண்டு பேரும் போயிருக்காங்க..” என ராஜலட்சுமி கூற, பதிலேதும் சொல்லாமல் அங்கருந்த சேரில் அமர்ந்தான் கர்னன்.
“அண்ணா.. நானும் போகனும். சுமி வேற ஸ்கூல்ல இருந்து கால் பண்ணிட்டே இருக்கா..” என சுந்தர் கூற, ‘கிளம்பு’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தான் கர்னன்.
“ம்மா.. நீங்க வரீங்களா? இல்ல இங்க இருக்கீங்களா?” என்ற சுந்தரிடம் “கூட்டிட்டு போ..” என்றான் கர்னன் அமைதியாக.
“இல்ல தம்பி நான் இருக்கேன்..” என ராஜி அவசரமாக கூற,
“இங்க இருந்தாலும் வெளியதான் இருக்கனும். அதுக்கு வீட்டுல போய் ரெஸ்டாவது எடுக்கலாம். நீங்க கிளம்புங்க. நானும் இப்போ யாழினியை வீட்டுல கொண்டு வந்து விட்டுடுவேன். இங்கதான் நர்ஸ் இருக்காங்களே..” என ராஜியை பார்க்க,
அவருமே மீண்டும் இருக்கிறேன் என சொல்லவில்லை. “நீ சொன்னா சரிதான் தம்பி. நான் போய் மதியத்துக்கு சமைக்க சொல்றேன். நீயும் யாழியும் வந்துடுங்க..” என நடக்க, சுந்தரும் அவருக்கு பின்னே செல்ல, தன்னை தாண்டி சென்ற இருவரையும் வெறித்துப் பார்த்தான் கர்னன்.
போகும் போது கூட அவரிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என இருவருமே யோசிக்கவில்லையே!
அவன் மூளைக்குள் ஏதேதோ எண்ண ஓட்டங்கள். இத்தனை நாட்கள் இவர்கள் மத்தியில் தந்தையை தனியே விட்டு விட்டோம் என்று அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி வேறு.
இப்படியே யோசனைகளோடு அமர்ந்திருந்தவனின் போன் அடிக்க, நிதானித்து அதை எடுத்து பார்க்க வெற்றியின் நம்பர் வண்தது.
‘ஓ வந்துட்டாங்க போல..’ என்று நினைத்து, அட்டெண்ட் செய்து “உள்ள வந்துடுங்க..” என்றான்.
தன் இரு நண்பர்களை பார்த்ததும் சொக்கலிங்கத்திற்கு, தன் உடலில் புது தெம்பு வந்ததைப் போல் உணர்ந்தார்.
சொக்கலிங்கத்தை சுற்றி அனைவரும் வருத்தத்தோடு நின்றிருக்க, நண்பர்கள் இருவரும் அவரின் வலம் இடம் என இருபக்கமும் கையைப் பிடித்தபடி மிகவும் வேதனையில் நின்றிருந்தனர்.
வல்லபியை ஒட்டியே வெற்றி நிற்க, அதை ஒரு கிண்டல் புன்னகையுடன் பார்த்தபடி அவர்களுக்கு எதிரில் நின்றான் கர்னன்.
கர்னனை ஒட்டி நின்ற யாழினியைப் பார்த்து வெற்றிக்கு மனம் வலித்தாலும், அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் கூற வேண்டும் என மனம் அடித்துக் கொண்டாலும், கர்னன் அவளோடு நிற்பதில் சற்று சுனங்கிப் போனான்.
யாழினியும் கர்னன் இருப்பதால் வெற்றியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. இப்போது இருக்கிற பிரச்சினையில் தன்னால் ஒன்று புதிதாக சேர்ந்து கொள்ள வேண்டாம் என நினைத்து அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.
அதோடு வெற்றிக்கு வல்லபியை பார்க்க வேண்டும். அவளை யாரும் எதுவும் சொல்லி விடக்கூடாது என கவனமாக இருக்க, யாழினியிடம் பேசுவதை சற்று ஒதுக்கி வைத்தான்.
வந்தனா தான் “என்ன மாமா எல்லாரும் இவ்ளோ அமைதியா இருக்காங்க..?” என கர்னனின் காதைக் கடிக்க,
“போரா இருக்கா.?” என்றான் மெல்ல சிரித்து..
“அப்கோர்ஸ்.. எனக்கெல்லாம் ரெண்டு நிமிசம் அமைதியா இருந்தாலே, அந்த இடமே மியூசியம் ஃபீல் வரும். ஆனா இங்க வந்து பத்து நிமிசம் ஆச்சு யாரும் பேசக் காணோம்..” என மீண்டும் முணுமுணுக்க, அதில் கர்னனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவன் உதடு மெல்ல விரிய, அதை கவனித்த வல்லபி, வந்தனாவைப் பார்த்து விழிகளை உருட்டி முறைத்துப் பார்த்தாள்.
“காண்டாகிட்டா கண்ணாத்தா.. இவளோட..” என சலித்த வந்தனா, சட்டென அட்டென்சன் பொசிசனில் நிற்க, இருவரையும் பார்த்த கர்னனுக்கு சுவாரஸ்யம் கூடிப் போனது.
அதனால் வல்லபியை கடுப்பாக்கும் பொருட்டு, “உனக்கு போரடிச்சா வா.. இங்க கேன்டின் இருக்கு போலாம்..” என்ற கர்னனிடம்,
“எதுக்கு எங்க போனாலும் தின்னுட்டே இருப்பியான்னு குடும்பமே சேர்ந்து என்னை கும்மாங்குத்து குத்தவா.. நான் வரலப்பா. ஒரு ஐஸ்க்ரீம் க்கு ஆசைப்பட்டு அல்பாயுசுல போற ஐடியா எனக்கில்ல..” என்றாள் சோகமாக.
அவள் அமைதியாக பேசினாலும், கேட்டுக் கொண்டிருந்த கர்னனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆனால் இருக்கும் இடம் உணர்ந்து அமைதியாக நிற்க முற்பட, அதற்குள் வல்லபி சொக்கலிங்கத்தின் கையைப் பிடித்தபடி “எப்படி இருக்கீங்க மாமா?” என மிகவும் வருத்தமாக கேட்க,
அதுவரை நண்பர்களிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் இருந்த சொக்கலிங்கம், வல்லபியின் அக்கறையில் மனம் நிறைந்து போனார்.
“நான் நல்லா இருக்கேன் பாப்பா. கர்னா வந்துட்டான்.. நீ வந்துட்ட.. நான் நல்லாதான் இருப்பேன். நீ நல்லா இருக்கியா பாப்பா..? எப்போ வந்த..?” என திக்கி திணறி உளறலாக பேச, வல்லபிக்கு பாதி புரிந்தும் பாதி புரியாத நிலைதான்.
ஆனால் அனைத்திற்கும் பொறுமையாக தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
“அப்பா நீங்க எல்லாரும் பேசுங்க.. நாங்க வெளிய இருக்கோம்..” என வெற்றி அவர்களுக்கு தனிமை கொடுத்து கூற,
பெரியவர்களுக்கும் சொக்கலிங்கத்திடம் பேச வேண்டிய கட்டாயம் இருக்க, அவர்களை சரி என்று அனுப்பி வைக்க, கர்னன் அங்கு இருந்தாக வேண்டும் என்பதால் அவன் மட்டும் உள்ளேயே இருந்து கொண்டான்.
வல்லபி வந்தனாவை இழுத்துக்கொண்டு முன்னே நடக்க, யாழினியின் கையைப் பிடித்தபடி அமைதியாக வந்தான் வெற்றி.
“உன்கிட்ட மாமா என்ன சொன்னார்..?” என்றான் வெற்றி கேள்வியாக.
“நிறைய சொன்னார்..? நீங்க எதை கேட்குறீங்க?” என்றாள் யாழினி யோசனையாக.
“வல்லி பத்திதான்.. உன்கிட்ட என்ன சொன்னார்..?” என மீண்டும் அழுத்தி கேட்க,
“வல்லியை கர்னா அண்ணாவுக்கு மேரேஜ் பண்ணலாம்னு ராமு மாமாக்கிட்ட கேட்டுருக்கேன்னு சொன்னார்.. ஏன் என்னாச்சு..?” என்ற யாழினியிடம்,
“வல்லியோட விருப்பம் முக்கியம் இல்லையா? அவளுக்கு இதுல விருப்பம் இல்லன்னு நினைக்கிறேன்.. நான் கேட்டதுக்கு முதல்ல யோசிச்சா, அப்புறம் வேண்டாம்னு சொல்லிட்டா..?” என நிறுத்த, யாழினி தன் நடையை நிறுத்தி வெற்றியை அதிர்வாக பார்க்க, உள்ளே கர்னனும் அதை கேட்டு கொதித்து போய் நின்றான்.