• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முத்தமழை - 15

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,393
433
113
Tirupur
முத்தமழை - 15

கர்ணனின் இந்த செயலில் அனைவருமே திகைத்துப் போயினர். வல்லபிக்குமே கர்ணன் இப்படி செய்வான் என்று தெரியவில்லை.

‘என்ன இது?’ என்பது போல் தன்னவனை அவள் அதிர்ந்து பார்க்க,

‘ஏன் வேண்டாமா?’ என்பது போல் பதில் பார்வை பார்த்தான் கர்ணன்.

ராஜலட்சுமி நிகழ்வுக்கு வரவே நேரம் பிடித்தது. சுமித்ராவும், வனிதாவும் ராஜலட்சுமியின் இருபக்கமும் நின்று வல்லபியை தீயாக முறைத்துக் கொண்டிருந்தனர்.

“பாரு.. நல்லா பாரு.. உன் பேச்சைத் தட்டமாட்டான்னு சொன்ன உன் செல்ல மகன் செஞ்ச கூத்த பாரு, உனக்கு பிடிக்காத ஒரு குடும்பத்துல இருந்த ஒருத்தி கழுத்துல தாலி கட்டிருக்கான். அவளும் இந்த வீட்டு மூத்த மருமகன்னு நெஞ்ச நிமித்திக்கிட்டு பேசுறா.. இனி உன் நிலமையை யோசிச்சு பாரு..” என வனிதா ஆத்திரமாக கத்த,

“யார்.. யார் வீட்டுக்கு மருமக. இந்த வீட்டுக்கு மருமகளாக ஒரு தகுதி வேனும். அது இந்த குடும்பத்துக்கு இருக்கா என்ன? என் புருசனை ஏமாத்தி பணத்தை எல்லாம் பிடுங்கின மாதிரி என் பையனையும் அவங்க பொண்ணை வச்சு மயக்கியிருக்காங்க. இது என்ன மாதிரியான பொழப்பு. இந்த பொழப்புக்கு..” என ராஜலட்சுமி தன் வயதிற்கு சற்றும் சம்மந்தம் இல்லாமல், வார்த்தைகளை நெருப்பாக கொட்ட, வல்லபிக்கு கோபம் தலைக்கேறியது.

அவள் வேகமாக தன் வீட்டாட்களைப் பார்த்தாள். அவர்கள் கூனிக்குறுகிப் போய் நின்றிருந்தனர். அதிலும் ராமு மகள் முகத்தைப் பார்க்கவே இல்லை. அதுவே அவளை உயிரோடு வதைத்தது.

கர்ணன் ஏதாவது பேசுவான் என்று பார்க்க, அவனோ அவளைத்தான் நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னவளின் கலங்கிய முகமும், அழுத விழிகளும் அவனை பெரிதாக தாக்க, ராமுவிடம் வந்தவன் “அங்கிள் இங்க நடந்த எதையும் மனசுல வச்சிக்காதீங்க. இப்போ நீங்க அப்பாவைப் பார்த்துட்டு கிளம்புங்க. இந்த வீக்ல ஒரு நல்ல நாள் பார்த்து நாங்க அங்க வரோம். எல்லாம் முறைப்படி நடக்கும். வல்லி இந்த வீட்டுக்கு முறைப்படி வருவா.. அவங்களே வந்து கூப்பிடுவாங்க..” என அழுத்தமாக கூற, வல்லிக்கு தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது.

“அது தம்பி.. லிங்காகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டா எங்களுக்கு நிம்மதி..” என சிவகுரு கூற,

“ம்ம் உள்ள போங்க.. போய் பேசுங்க..” என்றதும் பெரியவர்கள் மூவரும் சொக்கலிங்கத்தின் அறைக்குச் செல்ல, யாழினியோ வந்தனாவை “வாடி.. எல்லாருக்கும் காபி போடலாம்..” என கிச்சனுக்குள் இழுத்துக்கொண்டு சென்றாள்.

ராஜலட்சுமியும், அவரின் மகளும் மருமகளும் வல்லபியை இன்னும் முறைக்க, கர்ணனோ அதைக் கண்டுகொள்ளாமல், வல்லபியை தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

அவளும் அவன் இழுப்புக்கு உடன் சென்றாள். அவனின் இந்த நிதானம் அவளுக்கு நிதானத்தை இழக்க வைத்தது.

அறைக்கு வந்தும் அவள் அமைதியாக இருக்க, அவனுக்குத்தான் ‘ஷப்பா’ என்றது.

‘என்னடி..’ என அவள் கையைப் பிடித்து இழுத்து தன் மேல் வழுவாக மோத வைக்க,

“ம்ச்.. இப்போ என்ன உங்களுக்கு? அதுதான் நீங்க நினைச்சது நடந்திடுச்சு ல்ல.. நானே உங்ககிட்ட வருவேன் சொன்னீங்க. வந்துட்டேன்.. இன்னும் என்ன?” என தீயாக பொறிய,

“ஷப்பா… உன்னோட முடியலடி.. என்கிட்ட வந்ததுல ஒன்னும் சந்தோசம் இல்ல போலையே..” என அவளின் கூந்தலைப் பிடிக்க,

“ம்ச் என் முடியைப் பிடிக்காதீங்க.. அது எனக்குப் பிடிக்காது..” என பட்டென சொல்ல,

“அப்போ அதுதான் எனக்குப் பிடிக்கும்..” என அவளின் நீண்ட பின்னலை எடுத்து தன் கழுத்தை சுற்றிப் போட்டுக் கொண்டவன், அவள் கூந்தலில் இருந்த பூவை ஆழ்ந்து சுவாசித்தான்.

“என்ன பண்றீங்க..” என்றவளுக்கு அவனின் செயலில் உடலே நடுங்கி விட்டது.

“ம்ம் தெரியலையா? உன்னை ஸ்மெல் பண்றேன்.” என்றான் மீண்டும் ஆழ்ந்து சுவாசித்து..

“ம்ச்..” என சலித்தவள், அவனைத் தள்ளிவிட்டு அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

அவள் தன் இயல்பையும் மீறி இவனுக்காக இங்கு வந்து நிற்க, இவனோ கொஞ்சமும் அதைப் பற்றி கவலைப்படாமல் நிதானமாக இருப்பது, அவளுக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.

அதை உணர்ந்ததைப் போல, வல்லபியின் காலுக்கடியின் மண்டியிட்டு அமர்ந்தவன் “என்ன கோபம்.?” என்றான் முகத்தை நிமிர்த்தி.

அவன் முகத்தை நிமிர்த்தியதும் அனைக்கட்டிய விழிநீர் வழிய, பதறிப் போனவன் “இது உனக்கு அவ்ளோ கஷ்டமா இருந்தா வேண்டாம்..” என அவள் கழுத்தில் இருந்த தாலியில் கை வைக்க, தன் கோபம், ஆத்திரம் அனைத்தையும் தன் ஒற்றை அறையில் காட்டியிருந்தாள் வல்லபி..

ஆம்.. கர்ணனை ஓங்கி அறைந்திருந்தாள் வல்லபி..

“என்ன இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா போச்சா.. நினைச்சா கழுத்துல போட, நினைச்சா கழட்ட..” என கத்த,

“ஊப்ஸ்..” என தன் கன்னத்தை தேய்த்து விட்டவன், அடுத்தநொடி அவள் வாயை மூடியிருந்தான். அதில் பெண்ணவள் திகைத்து அவனைத் தள்ளிவிட பார்க்க, அவள் கைகளைத் தன் முதுகுக்குப் பின் போட்டு, அதை மற்றொரு கையால் இறுக்கமாக பிடித்து, அவளை தன் நிதானமான பார்வையால் அளந்தான்.

அப்போதும் அவள் கண்களை மூடி மூடி திறந்து அவனை மிரட்ட, ஆனால் அவனோ வழக்கம்போல அதை கண்டுகொள்ளவில்லை.

நிதானமாக அவள் இதழோடு விளையாட ஆரம்பித்தான். ஆம் அவன் வல்லபியின் வாயை மூடியது. தன் வாய்க்கொண்டு..

ஒரு கட்டத்தில் அவளும் மயங்கி அவனுக்கு பதில் கொடுக்க, முதல் முத்தம் இருவருக்குமே ஒரு பரவசத்தைக் கொடுத்தது தான்.

“வல்லி.. வல்லி..” என வந்தனாவின் சத்தத்தில் தான் இருவருமே நிதானத்துக்கு வந்திருந்தனர்.

வல்லபி அவனை நிமிர்ந்து பார்க்க, உச்சியில் அழுத்தமாக முத்தமிட்டவன் “ஃப்ரெஷாகிட்டு வா.. உங்கிட்ட நிறைய பேசனும்..” என்றான் ஆழ்ந்த குரலில்.

அந்த குரலை பெண்ணவளால் மறுக்க முடியவில்லை.

“ம்ம்..” என அவனை விட்டு பிரிந்து ரெஸ்ட் ரூம் செல்ல, கர்ணனோ ஒரு பெருமூச்சோடு கதவைத் திறந்து வெளியில் வந்தான்.

அங்கே காஃபி ட்ரேயுடன் நின்றிருந்தாள் வந்தனா. கர்ணனைப் பார்த்ததுமே அவன் சிவந்த கன்னத்தில் அடித்த கைத்தடம் அப்படியே தெரிய “அவ்வ அவ்வா… இந்த கங்கா எப்போ சந்திரமுகியா மாறினா.. ஒரே நாள்ள எப்படி அடிச்சி வச்சிருக்கா. இப்படி பட்டவ உங்களுக்குத் தேவையா சொல்லுங்க.. இப்பவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பிருக்கு மாமா யோசிச்சு சொல்லுங்க..” என படபடவென பேச,

கர்ணனோ “இந்த கொசுத்தொல்ல வேற..” என புலம்பியபடியே உள்ளே எட்டிப் பார்க்க,

“என்னடி..?” என வந்து நின்றாள் வல்லபி.

“என்ன நொன்னடி.. எதுக்குடி மாமாவை இப்படி அடிச்சி வச்சிருக்க.. கேட்க ஆள் இல்லன்னு தைரியமா? நான் கேட்பேன்..” என தலையை சிலுப்பிக் கொண்டு வர,

“சரி கேளு..” என இன்னும் முன்னே வந்து நிற்க,

“ஹான் என்ன கேட்க?” என்றவள் “என்ன மாமா கேட்கனும்..?” என கர்ணனிடமே கேட்க, கர்ணன் அவளை முறைத்துப் பார்க்க, வல்லபிக்கோ சிரிப்பு வந்துவிட்டது.

“காபியைக் கொடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணு, வந்துட்டா கேட்குறேன்னு..” என கர்ணன் முறைக்க,

“உங்களுக்கு சப்போர்ட் பண்ணேன் பாருங்க, என்னை சொல்லனும். வல்லிக்கண்ணு இன்னும் நாலு போடு..” என கத்திக் கொண்டே கீழிறங்க, இருவர் முகத்தில் இதமான புன்னகை.

“அவ போய் எல்லாருக்கிட்டயும் சொல்ல போறா?” என வல்லபி முணுமுணுக்க,

“சொன்னா சொல்லிட்டுப் போகட்டும்.. அப்போதான் ஆளானப்பட்ட கர்ணனையே அடிச்சிட்டான்னு இங்க எல்லாருக்கும் என் வல்லி மேல பயம் வரும்..” என சிரிக்க,

“அடிச்சதுக்கு சாரி எல்லாம் கேட்கமாட்டேன்.. நீங்க செஞ்சது தப்பு. இன்னைக்குத்தான் என் கழுத்துல போட்டீங்க.. இன்னைக்கே அதை கழட்டலாம் சொல்றீங்க..” என்று முடிக்கும் முன்னே கண்ணில் நீர் சேர்ந்து விட்டது..

“ம்ச் வல்லி சாரி. அது ஒரு வேகத்துல சொல்லிட்டேன்.. ரியல்லி சாரி…” என்று அவளை சமாதானம் செய்து, காபியைக் குடிக்க வைத்தான்.

“இங்க நிறைய பிரச்சினை போய்க்கிட்டு இருக்கு.. என்னால அவங்களை சமாளிக்க முடியுமா தெரியல.. அவங்க யாருக்குமே நான் தேவையில்ல.. அப்பா மட்டும் இல்லன்னா நான் இங்க வந்துருக்கவே மாட்டேன்..” என்றான் வருத்தமாக.

“அப்போ மூனு வருசமா மண்டைக்குள்ள ஓடிட்டுருக்குனு சொன்னது?” என மீண்டும் முறைக்க,

“ம்ச் அது உண்மை.. ஆனா நான் உனக்கு செட் ஆவேனான்னு ஒரு டவுட். அதுதான் உன்னை அதிகம் யோசிக்கல. அதோட உன்னோட படிப்பும் என்னை எதுவும் பேச விடல..” என்றான் பெருமூச்சோடு.

“மாமா என்ன சொன்னார்..? அவங்க அவ்ளோ பேசுறாங்க, நீங்க அமைதியாவே இருக்கீங்க.. அதுவும் அநாதைன்னு எல்லாம்..” என சொல்லும் போதே வல்லிக்கு கேவல் வந்துவிட,

“ம்ச் வல்லி போதும் அழுதது. ஏன் இப்படி அழற.. அவங்க சொன்னா உண்மையாகிடுமா? நீ சொல்லு நான் அநாதையா? அப்பா இருக்கார், யாழி இருக்கா, நீ இருக்க, உன் குடும்பம் இருக்கு.. அப்போ நான் அநாதையா?” என்றான் நிதானமாக.

அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டவள் “இல்ல.. இல்ல.. அப்படி இனி சொல்லவேக்கூடாது. அந்த வார்த்தை உங்க வாயில இருந்து வரவேக்கூடாது.” என பேய் போல கத்தியவள், “அவங்களும் இனி அப்படி பேசக்கூடாது, பேசினா நான் பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்..” என்றாள் சத்தமாக.

“ம்ம் ம்ம்..” என அவளை அனைத்து சமாதானம் செய்தவன், “அவங்க இனி பேசமாட்டாங்க.” என்றவனின் முகம் சட்டென யோசனையானது.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “மாமா அவங்களை ஒன்னும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டாரா?” என்றாள் தயங்கி..

“ச்சே ச்சே இல்லப்பா.. அதெல்லாம் இல்ல.. இவங்களை எப்படி என் வழிக்கு கொண்டு வரதுனு யோசிச்சேன் அவ்ளோதான். நீ இதெல்லாம் யோசிக்காத. சீக்கிரமா கல்யானத்தை வச்சிடலாம். நீ எங்கிட்ட வந்தா போதும்..” என்றான் உண்மையாக.

“ம்ம்..” என்றவள் “நாளைக்கு ஆஃபிஸ்ல ஜாயின் பண்ணனும்..” எனவும் முறைக்க ஆரம்பித்துவிட்டான்.

“வந்து ரொம்ப நேரமாச்சு. எல்லாரும் என்ன நினைப்பாங்க.. கீழ போகலாம்..” என அவன் வருகிறானா என்று கூட பார்க்காமல் வேகமாக கீழே வந்துவிட்டாள் வல்லபி.

இங்கு கீழ வந்த வந்தனா, வல்லபி சொன்னது போல ‘கர்ணனை அடித்திருக்கிறாள்’ என அப்படியே ஒலிபரப்பி விட, அனைவருக்கும் அதிர்ச்சி.

“என் பையனையே கை நீட்டிருக்காளா? உங்க பொண்ணை நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க..?” என ராஜலட்சுமி கிடைக்கும் கேப்பில் எல்லாம் வல்லபியை பேசிக் கொண்டே இருந்தார்.

“வல்லி சும்மா எல்லாம் செஞ்சிருக்க மாட்டா. அண்ணா ஏதோ பேசியிருப்பார். அதுக்குத்தான் வல்லி அடிச்சிருப்பா.. அடிக்கிற அளவுக்கு அவளுக்கு கோபம் வந்துருக்கு. அப்போ அண்ணா என்ன பேசியிருப்பார்னு யோசிங்க..” என யாழினி தாய்க்கு பதில் கொடுக்க,

“அப்படி சொல்லுடி தங்கக்கட்டி.. எங்க வல்லிக்கு என்ன பைத்தியமா? சும்மா இருக்கிற உங்க பையனை அடிக்க..” என வந்தனா ராஜலட்சுமியிடம் எகிறிக் கொண்டு வர,

“ஓங்கி ஒன்னு கொடுத்தா வெளியே போய் விழுவ.. எங்க வீட்டுல வந்து சத்தம் கொடுத்துட்டு இருக்கியா?” என வனிதா வந்தனாவிற்கு வந்து நிற்க,

“வல்லி சொன்னது கேட்கலையா? இந்த வீட்டுக்கு அவ தான் மூத்த மருமக. வல்லி எங்க வீட்டு பொண்ணு. நாங்க அவ வீட்டுக்கு வந்துருக்கோம். சோ நீங்க கொஞ்சம்..” என நிறுத்த, “வந்து..” என வழக்கம்போல வல்லபியின் அதட்டல் சத்தம் கேட்க,

‘வந்துட்டா சந்திர முகி உங்களுக்கு இருக்கு’ என வனிதாவைப் பார்த்து முறைத்தபடியே போய் தாய் அருகில் நின்று கொண்டாள்.

கீழ வந்த வல்லபி அமைதியாக சீதாவின் அருகில் நின்றுகொண்டாள். சீதாவோ மகளையே பார்க்க, இதுவரை அவரிடம் எதையும் மறைத்திறாதவள், அடித்ததையும் மறைக்கவில்லை. அவன் என்ன செய்தான், அவள் எதற்கு அடித்தாள் என்பதை மெல்லிய குரலில் கூற,

“அவர் செஞ்சது தப்புதான். அதே நேரம் நீ செஞ்சதும் தப்புதான். ஆம்பளைய கை நீட்டி அடிக்கிற அளவுக்கு உனக்கு கோபம் வருதா?” என மகளைத் திட்டிக் கொண்டிருக்க, சுந்தரும் ரமேஷும் உடலில் சின்ன சின்ன காயங்களுடன் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தனர்.

அய்யோ என்னாச்சு” என அவர்களின் மனைவிகள் இருவரும் ஓட,

“ரொம்ப நல்ல ராசி தான்.. வந்த அன்னைக்கே வீட்டுல ரொம்ப நல்லது நடக்குது..” என ராஜலட்சுமி எகத்தாளமாக பேச, அதைக் கேட்டுக் கொண்டே கீழ்றங்கி கொண்டிருந்தான் கர்ணன்.