முத்தமழை - 16
‘அய்யோ என்னாச்சு.?’ என இருவரும் ஓடிவர,
‘என்ன நடந்தது?’ என இருவராலும் சொல்ல முடியவில்லை. அதிலும் கர்ணன் இருக்கும் போது எப்படி பொய் சொல்ல, அதனால் அமைதியாக இருக்க, அதை உணர்ந்த கர்ணன் “ரூமுக்கு கூப்பிட்டு போய் பொறுமையா கேளுங்க. அப்போதான் உண்மையை உண்மையா சொல்லுவாங்க..” என்றவன் தந்தையின் அறைக்குச் சென்றுவிட்டான்.
“ஆன்டி.. இங்கேயே டின்னர் முடிச்சிட்டு போலாம். ப்ரிபேர் பண்ண சொல்லிட்டேன். இல்லைன்னா அப்பா வருத்தப்படுவார்..” என்ற யாழினியிடம்,
“அதெல்லாம் வேண்டாம் யாழிமா.. அண்ணாக்கிட்ட நான் பேசிக்கிறேன். இப்போ இங்க எதுவும் வேண்டாம். சூழல் சரியில்ல. இன்னொரு நாள் பார்க்கலாம்..” என சீதா இதமாகவே மறுத்துவிட, யாழினிக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
“யாழி இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத. வல்லி இங்க வந்த பிறகு தினமும் இங்கேயே சாப்பிடுறென். உனக்குத் தான் தெரியுமே வல்லி சூப்பரா சமைப்பான்னு..” என்ற வந்தனாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ராஜலட்சுமி.
‘கிழவி லுக்கே சரியில்லயே, வல்லியை ரொம்ப கொடுமை பண்ணுமோ?’ என வந்தனா மனதுக்குள் நினைத்தாள்.
கர்ணனை பார்த்ததுமே “தம்பி..” என சொக்கலிங்கம் அழைக்க, வேகமாக சென்று அவர் கையைப் பிடித்துக் கொண்டான் மகன்.
“எனக்கு ரொம்ப சந்தோசம் ப்பா..” என்றார் குளறலாக.
“சீக்கிரமா கல்யாணம் வச்சுக்கலாம் ப்பா.. ரொம்ப தள்ளி போட வேண்டாம். அம்மா இந்த கல்யாணத்தை நிறுத்த ப்ளான் பண்ணுவாங்க..” தந்தைக்கும் அதே எண்ணம்தான்.
“ம்ம்.. அதெல்லாம் பார்த்துக்கலாம். இப்போ இவங்களை பத்திரமா அனுப்பி விடு. நாளைக்கு போய் நம்ம குலதெய்வ கோவில்ல நாள் குறிச்சிட்டு வந்துடு. நம்ம பங்காளீ வீட்டு தாத்தா இருக்கர். அவரை கூப்பிட்டுக்கோ. சிவாவும், சீதாவும் வருவாங்க. வேற யாரும் வேண்டாம்..”
“சரி ப்பா.. ஆனா அம்மா.. அவங்களை எப்படி விட..”
“விட்டுத்தான் ஆகனும்.. நீ அவளை யோசிக்காத..”
“ம்ம் சரி ப்பா.. தூக்கம் வந்தா தூங்குங்க. நான் இவங்களை அனுப்பிட்டு வரேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..”
“சரி தம்பி.. நீ போய்ட்டு வா..” என்று லிங்கம் மகனை அனுப்ப, மற்றவர்களும் லிங்கத்திடம் சொல்லிக்கொண்டு கிளம்ப, வல்லியும் அவரிடம் வந்தாள்.
மருமகளின் கையைப் பிடித்துக் கொண்ட சொக்க லிங்கம் “இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு பாப்பா. இனி எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் கட்டை நிம்மதியா போகும். அவனைத் தனியா விட்டுட்டோமே, அவனுக்கு யார் இருக்கானு நான் வருந்தாத நாளே இல்லை. இன்னைக்கு அந்த வருத்தம், கஷ்டம்னு எதுவும் இல்லை. ரொம்ப நிம்மதியா இருக்கேன் பாப்பா. எல்லாம் உன்னால மட்டும்தான். என் கர்ணாவை நீ நல்லா பார்த்துக்கோ பாப்பா. அவன் உன்னை உயிரா பார்த்துப்பான்..” என்ற சொக்கலிங்கத்திற்கு கண்ணீர் குறையவே இல்லை.
“மாமா.. நீங்க சீக்கிரம் சரியாகி வந்துடுவீங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீங்க கவலைப்படாதீங்க. அப்புறம் உங்க மகன் தான் நம்ம எல்லாரையும் பார்க்கனும். இத்தனை வருசம் நம்மளை விட்டு இருந்தார் இல்லை. இனி அவர் தான் பார்க்கனும். அவர் பார்த்துப்பார்.. நீங்க கவலைப்படாதீங்க..” என அவரையும் தேற்ற, அனைவர் முகத்திலும் புன்னகை.
ஒருவழியாக அனைவரும் விடைபெற்று கிளம்ப, வீடே நிசப்தமானது.
யாழினியும் கர்ணனும் டைனிங்க் ஹாலில் அமர்ந்திருக்க, “வல்லியை பத்தி அம்மா பேசினதுல உங்களுக்கு கோபம் இல்லையா ண்ணா..?” என்றாள் யாழினி.
“ம்ம்.. கோபப்படனும்னா எல்லாத்துக்கும் கோபப்படனும். அப்படி கோபப்பட்டா வீட்டுல நிம்மதி இருக்காது. என்னேரமும் சண்டையும் சச்சரவுமா போகும். எனக்கு அதுல உடன்பாடில்ல யாழி. எப்படியும் இதோட நிறுத்தமாட்டாங்க. போக போக பார்ப்போம்..” என்றவன் சாப்பிட ஆரம்பிக்க, அங்கு வேகமாக வந்த வனிதா யாழினி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி விசிறி எறிந்து ஆங்காரமாக இருவரையும் பார்க்க,
“ஏய்..” என யாழினி கத்த,
அதற்கு “அங்க ரெண்டு ஆம்பளைங்களும் அடிப்பட்டு வந்து கிடக்கிறாங்க. அதை என்னனு கூட பார்க்காம, இங்க உக்காந்து கொட்டிக்கிட்டு இருக்க..” என வனிதாவும் கத்த, யாழினியால் பதில் பேச முடியவில்லை.
“உனக்கெல்லாம் மனசாட்சினு ஒன்னு இருக்கா இல்லையாடி. என் புருசன விடு. அவன் உனக்கு அண்ணன். அவனைக்கூட நீ பார்க்கலன்னா, நீயெல்லாம் என்ன தங்கச்சி..” என யாழினியின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி விடுவது போலவே பேச, கர்ணனுக்கு கோபம் தலைக்கேறியது.
சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்தவன், கீழே சிதறிக் கிடந்த உணவையும், வனிதாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு “இப்போ இதை க்ளீன் பண்ணிட்டுத்தான் இங்க இருந்து போகனும். மீறி ஏதாவது சீன் கிரியேட் பண்ணிட்டு இருந்த, உன் புருசன் பக்கத்துல உனக்கும் ஒரு பெட் ரெடி பண்ண சொல்லிடுவேன் பார்த்துக்க..” என நிதானமாகவும் அழுத்தமாகவும் கூற, வனிதாவிற்கு உடலெல்லாம் நடுங்கியது.
“நான்.. நானா? நான் பண்ணமாட்டேன். அதுக்குத்தான் வேலைக்காரங்க இருக்காங்கல்ல..” என மென்று விழுங்கி பேச,
“நீ திமிரெடுத்து கொட்டுவ, அதை அவங்க வந்து க்ளீன் பண்ணுவாங்களா? உன்னோட பேச்சுக்கும் செயலுக்கும் உனக்கு தனியா ஃபனிஷ்மென்ட் வச்சிருக்கேன். இதெல்லாம் ஜஸ்ட் சேம்பிள் தான். சீக்கிரம் முடிச்சிட்டு ஹாலுக்கு வா.. ஒரு பஞ்சாயத்து இருக்கு..” என்றவன், யாழினியை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.
பாண்டியனிடம் “பாண்டியன் அப்பாவை ஹாலுக்கு கொண்டு வாங்க..” என்றவன், தங்கையிடம் “யாழி எல்லாரையும் ஹாலுக்கு வரச் சொல்லு..” என்றான்.
அவளும் பதிலேதும் பேசாமல் “சரி ண்ணா..” என்றவள் அனைவரையும் ஹாலுக்கு வர வைத்தாள்.
ராஜலட்சுமி கர்ணனையும், அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த கணவரையும் முறைத்துக் கொண்டிருந்தார்.
“என்ன தம்பி..?” என சொக்கலிங்கம் கேட்க,
கர்ணனோ சுந்தரையும் ரமேஷையும் அழுத்தமாக பார்த்தான். அதுவே அவர்களுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது.
“ப்பா.. நீங்க கூப்பிட்டீங்கன்னு தான் வந்தேன். இது என்னோட வீடு.. இவங்க எல்லாம் என்னோட உறவுன்னு நினைச்சு வந்தேன். ஆனா அப்படி இல்ல போல..” என நிறுத்த,
“என்ன தம்பி என்னென்னமோ பேசுற.. நாங்க அப்படி நினைப்போமோ.. அதுங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, அதுதான் அப்படியெல்லாம் பேசுறாங்க. இனி அப்படி பேசமாட்டாங்க தம்பி. நீயும் இப்படி வருத்தப்பட்டு பேசாத. மனசுக்கு கஷ்டமா இருக்கு..:” என ராஜலட்சுமி அழ, அதை வேடிக்கைதான் பார்த்தானே தவிர சமாதானம் செய்யவில்லை கர்ணன். அதுவே சொன்னது அவன் அவரை நம்பவில்லை என்று..
“ப்பா.. இனி பிசினஸ் நான் பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்..” என்றதும், ரமேஷும் சுந்தரும் அரண்டுதான் போயினர். ஆனால் வாயைத் திறக்கவில்லை.
“அதெப்படி.. இத்தனை நாள் அவங்கதான பார்த்துட்டு இருந்தாங்க..” என வனிதா வர,
“எனக்கொன்னும் பிரச்சினை இல்ல. அவங்க ரெண்டு பேருமே பார்க்கட்டும். சீக்கிரம் எல்லாத்தையும் தொலைச்சிட்டு தெருவுல நிக்கனும் பரவாயில்லையா?” எனவும் வனிதா முறைக்க,
“புருசன் எங்க போறான், என்ன செய்றான்னு முதல்ல பாரு.. அவன் எதாவது வாங்கி கொடுத்தா எப்படி வந்தது, காசு எப்படி கிடைச்சதுனு கேளு.. அதை விட்டுட்டு சொத்து சொத்துனு அலையாத..” என்று வனிதாவைப் பார்த்துக் கத்தியவன் “ரெண்டு பேரும் மேட்ச் ஃபிக்சிங்க்ல பல லட்சத்தை போட்டு ஏமாந்துருக்காங்க.. இப்போ லட்சம் தான் போயிருக்கு. அடுத்து கோடில போகும்.. இன்னைக்கு எங்கிட்ட சிக்கினதால இந்த அடியோட வந்துருக்காங்க.. இனியும் பார்த்தா உடம்புல உயிர் இருக்காது.” என கர்ஜிக்க, அனைவருக்குமே இது அதிர்ச்சி தான்.
இராஜலட்சுமி மகனையும், மருமகனையும் திகைத்துப் போஈ பார்த்தார். ‘சூதாட்டமா?’ அந்த வார்த்தையே அவரை திகைக்க வைக்க போடுமாக இருந்தது.
“அவங்க பார்க்கிற பிசினஸ் அவங்களே பார்க்கட்டும்.. பட் என் கன்ட்ரோல்ல தான் இனி எல்லாம் நடக்கும்.. இல்லை முடியாதுன்னு சொன்னா சொத்தை பிரிச்சிடலாம்..” மிகவும் சாதாரணமாக கூற, ராஜலட்சுமிக்கு மண்டைக்குள் மணியடித்தது.
இந்த பேச்சு வரக்கூடாது என்று தானே அத்தனை பாடுபட்டார். இன்று கர்ணன் வாயில் இருந்தே அந்த வார்த்தைகள் வர, ஆத்திரம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டமல் தம்பி அதுதான் நீ சொல்லுட்டியே.. இனி நான் பார்த்துக்கிறேன். இனி இவங்க உன் கன்ட்ரோல்ல தான் இருப்பாங்க.. பார்த்துக்கலாம்..” என என்ன பேசுவது என தெர்யாமலே பேசிக் கொண்டிருந்தார்.
“தம்பி அதை விடு.. கல்யாண வேலை நிறைய இருக்கு. நீ என்ன நினைக்கிற, உன்னோட ப்ளான் என்ன.?” என சொக்கலிங்கம் கேட்க,
“நாளைக்கு சொல்றேன் ப்பா.. இப்போ போய் படுங்க..” என்றவன் பாண்டியனுக்கு கண் காட்ட, அவனும் சொக்கலிங்கத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிட, மற்றவர்களை கூர்மையாக பார்த்துக் கொண்டே வந்து வனிதாவிடம் நிறுத்தியவன் “இன்னொரு டைம் நீ யாழிக்கிட்ட திமிறா நடக்கிறதை பார்த்தேன். அப்புறம் நீ வேற கர்ணனைத்தான் பார்ப்ப..” என அதட்டிவிட்டு தங்கையிடம், “நீ போடா.. போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு ஆஃபிஸ் ஃபஸ்ட் டே இல்ல. நான் கொண்டு போய் விடுறேன்..” என அனுப்பி வைத்துவிட்டு தன்னறைக்கு வந்துவிட்டான்.
யாழினிக்கு ஃபஸ்ட் டே என்றதும், வல்லபி ‘நாளைக்கு ஆபிஸ் போகனும்’ என்று சொன்னது ஞாபகம் வர, ‘படுத்தி எடுக்கிறாயா மனுசன’ என புலம்பிக்கொண்டே அவளுக்கு அழைத்தான்.
இரண்டாம் ரிங்கிலே எடுக்க, “வல்லிக்கண்ணு என்ன பண்ணுது?” என்றான் உர்ரென.
தூங்க போகுது..”
கொடுமைக்காரி டி நீ.. உனக்கு மட்டும் எப்படி தூக்கம் வருது..”
“எப்படி தூக்கம் வருதுனா? இது என்ன கேள்வி? சரக்கடிச்சா தூக்கம் தானா வரப்போகுது..”
“என்ன சரக்கடிப்பியா? குடிகாரியா டி நீ..?”
“ஏன் நீங்க குடிக்கும் போது, நான் குடிக்கமாட்டேனா? அதெல்லாம் குடிப்பேன். எல்லா பிராண்டும் ட்ரை பண்ணிருக்கேன்..”
“அவ்வா அவ்வா எப்படி ஏமாந்துருக்கேன் நான். உன்னை பச்ச மண்ணுனு நினைச்சேன் டீ..”
“நீங்க நினைக்கிறதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியுமா பாஸ்..? இனி நீங்க தனியா, நான் தனியா எல்லாம் உக்காந்து சரக்கடிக்க வேண்டாம். ரெண்டு பேரும் ஒன்னா உக்காந்து, ஒருத்தருக்கொருத்தர் கம்பெனி கொடுத்து சரக்கடிப்போம்..”
“குடும்ப பொம்பளையா டி நீ..? எத்தனை தடவை உன் வாயில இருந்து சரக்கு சரக்குனு வருது..”
“ம்ச்.. சரக்க சரக்குனு சொல்லாம வேறெப்படி சொல்ல..” என்று முடிக்கும் போதே கலகலவென சிரித்துவிட்டாள் வல்லபி.
“ம்ச் பைத்தியக்காரி..” என்ற கர்ணனும் சிரித்துவிட,
“என்ன டென்சன் ஆகிட்டீங்களா?” என சிரித்தபடியே கேட்க,
“அப்படியும் சொல்ல முடியாது.. பட் லைட்டா..?” என்றவன் “அங்க என்னாச்சு..?” என்று கேட்டான்.
“கார்ல வரும் போது அப்பா பேசவே இல்ல. இங்க வந்தும் எங்க ரெண்டு பேரையும் துரத்தி விட்டுட்டு அவங்க மூனு பேரும் ஏதோ பேசிட்டு இருக்காங்க. எப்படியும் வெற்றி ண்ணாக்கிட்ட பேசித்தான் என்கிட்ட பேசுவாங்க. இல்ல வெற்றி ண்ணாவே பேசுவாங்க.. அப்போதான் தெரியும்..” என்றாள் சற்று வருத்தமாக.
“மாமா உன்னை புரிஞ்சிப்பாங்க வல்லி.. எப்படியும் வெற்றி சமாதானம் செஞ்சிடுவான்.. அப்புறம் இன்னைக்கு போட்ட ட்ரெஸ் உனக்கு நல்லா இருந்தது. உனக்கு நல்ல ஷேப்..” எனவும்,
“அவ்வ்வ்.. பச்ச புள்ள ஒருத்தி இங்கதான் இருக்கேன்..” என வந்தனாவின் சத்தம் கேட்க,
“அச்சோ மானம் போச்சு..” என வல்லபி பெட்சீட்டால் முகத்தை மூட, இந்த கொசுவ பக்கத்துல வச்சிட்டுத்தான் இவ்ளோ பேச்சு பேசினாலா? என கர்ணன் புலம்பிக் கொண்டிருந்தான்.
“வல்லி.. நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ ஹாஜியா பேசுவீங்களா டி.. அய்யோ அய்யோ என் வல்லி மனசை இப்படி கெடுத்து வச்சிருக்காங்களே, எப்படி அம்பி மாதிரி இருந்த என் வல்லியை ஹாஜி ரெமோ மாதிரி மாத்தி வச்சிருக்காங்களே. இப்போ இவளை நான் எப்படி திருத்துவேன்..” என புலம்ப, வல்லிக்கும், கர்ணனுக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“பைத்தியம் என்னடி பேச்சு இது?” என வல்லி சிரித்துக் கொண்டே பேச,
“எம்மா சீதாம்மா.. சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம்னு சொன்னியே, அது சொக்குப்பொடியோட சுத்துறத பார்த்தியா..?” என புலம்பிக் கொண்டே வெளியில் செல்ல,
“அய்யோ அவ சீதாம்மாக்கிட்ட சொல்லப் போறா?” என வல்லி பதற,
“அங்க போய் அடிதான் வாங்கிட்டு வருவா.. அப்புறம் ஆன்டியும் இனி உன் ரூமுக்கு அவளை அனுப்ப மாட்டாங்க..” என கர்ணன் சிரிக்க, வல்லபிக்கும் சிரிப்பு வந்தது.
“சரி சொல்லு.. உனக்கு மேரேஜ் எப்படி வேணும்..” என சிரிப்பை விட்டு நிதானமாக கேட்க,
“எனக்கு எப்படின்னாலும் ஓக்கே தான். ஆனா..” என இழுக்க,
“என்ன சொல்லனுமோ சொல்லு.. இந்த இழுக்கிற வேலையே வேண்டாம்.” என்றான் கரணன்.
“ம்ம் எனக்கு சிம்பிளா பண்ணாலும் ஓக்கேதான். ஆனா உங்க அம்மா முன்னாடி அப்படி சிம்பிளா பண்ண எனக்கு விருப்பம் இல்லை. என் மாமியாருக்கும் ஒரு கனவு இருக்குமில்ல. என் பையனுக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணனும்னு. அந்த கனவையும் அவர் ஆசையையும் நிறைவேத்தி வைக்கலாம்னு தோனுது. என் மாமியாரோட கவலையெல்லாம் இதைப் பார்த்த பிறகு குறையும்னு நினைக்கிறேன்.. எப்படியும் அவங்க ஆன்மா உங்களை சுத்திதான் இருக்கும். உங்களை கல்யாண கோலத்துல பார்த்தாதான் அந்த ஆன்மா நிம்மதியாகும். எனக்கும் அதுதான் வேணும்..” என மெல்ல என்றாலும் அழுத்தமாக சொல்ல, அவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான் கர்ணன். அதன் பிறகு பலமுறை வல்லபி அழைத்தும் கூட போனை எடுக்கவில்லை அவன்.