முத்தமழை - 21
வல்லபியின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தான் கர்ணன்.
ஆம்! கரூரே திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. திரும்பி பார்க்கும் அளவிற்கு திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தான் கர்ணன்.
வல்லபியின் ஆசைதான் என்றாலும், அது தன் தாயின் ஆசையாக கூட இருக்கலாம் என்று அவள் கூறிய நொடியில் இருந்து இதை நடத்தியே ஆக வேண்டும் என்ற வெறி கர்ணனுக்கு.
அதற்கான ஏற்பாடுகளுக்கு வசந்தும் பாண்டியனும் துணையிருக்க, வனிதாவின் கணவனும் மெல்ல வந்து இணைந்து கொள்ள, வேறு வழியே இல்லாமல் சுந்தரு சேர்ந்து கொண்டான்.
இருவரும் வேண்டா வெறுப்பாக செய்தாலும், வேலை செய்தனர். அதுவே கர்ணனுக்கு போதுமானதாக இருந்தது.
இதோ மாப்பிள்ளை அழைப்பு முடிந்து தன்னுடைய அறைக்கே வந்துவிட்டான். ஆனாலும் அவன் முகம் மிக மிக இறுக்கமாக இருந்தது.
தன் கையிலிருக்கும் போனில் அவளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறான். எடுக்கவில்லை பெண்..
‘பழி வாங்குறா?’ என எரிச்சலாகி மீண்டும் அழைத்தான். அங்கு பெண்ணவளின் நிலை தெரியாமல்.
இதோ இப்போது பெண்ணழைப்பு முடிந்து அறைக்குள் வந்த நிமிடத்தில் இருந்து கர்ணனிடமிருந்து வல்லபிக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, வல்லபியால் அதை எடுத்து பேச முடியவில்லை.
அவளைச் சுற்றிலும் அத்தனைக் கூட்டம். அவள் தாய் வழி உறவுகளில் அத்தனை பேரும் அவளைச் சுற்றித்தான் இருந்தனர்.
சிறு வயதில் விடுமுறைக்கென அங்கு செல்வாள். பின் சென்னை சென்ற பிறகு அவளது போக்குவரத்தே குறைந்து போயிருந்தது.
இப்போது அவளின் திருமணம் என்று தெரிந்த பிறகு அவர்கள் தான் அனைத்தும் செய்கிறார்கள்.
சிவகுருவும், சீதாவும் கூட ஒதுங்கித்தான் போனார்கள். இது அவர்களுக்கான நேரம், அவர்களின் ஆசையும் கூட. அவர்கள் செய்வது தான் முறையும் கூட. அதனால் அவர்களுக்கான இடத்தைக் கொடுத்து மற்ற வேலைகளைப் பார்த்தனர்.
வல்லபிக்கும் அவர்களை பார்த்து அவ்வளவு சந்தோசம். தன் தாய் இல்லை. தாய் வீட்டு உறவுகள் இருப்பது எத்தனை பலம். அதை அப்போது உணர்ந்தாள் வல்லபி.
“வல்லி.. மாமா போன் எடுக்க சொல்றாங்க..” என்று வந்த வந்தனாவிடம்,
“நான் பேசுறேன்..” என்று சுற்றி இருப்பவர்களை கண் காட்டி சொன்னவள், அதன் பிறகும் எடுக்கவில்லை.
போனை எடுத்தால் எப்படியெல்லாம் கடித்து குதறுவான் என்று அவளுக்குத் தெரியாதா? அவன் கோபத்தையும் தப்பு சொல்ல முடியாதே..
“வல்லி தம்பியோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்துருக்காங்களாம். உன்னை அழைச்சிட்டு வர சொன்னார்..” என்று வந்த சிவகுருவிடமிருந்து தப்பிக்க முடியாமல் ‘வரேன் ப்பா’ என அமைதியாக அவருடன் சென்றாள்.
‘அய்யோ அவனை எப்படி சமாளிக்க?’ என மனதுக்குள் புலம்பியவளுக்கு அன்றைய நாள் மனதில் வந்து போனது.
டேனியின் பிரச்சினை முடிந்த நாள் இரவு, ஏனென்று தெரியாமலே மனது மிகவும் கலக்கமாக இருந்தது வல்லபிக்கு.
வந்தனாவும் அந்த அறையில் இல்லாது போக, தனிமை அவளை முதல்முறையாக பயமுறுத்தியது. இப்படியான நேரத்தில் தாயின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருப்பாள்.
இப்போதும் அதையே செய்தவளுக்கு, அவளது மனம் இலகுவாக, உறக்கம் கண்னை சுழட்டியது.
தன்னை மீறி உறங்கியவளின் மனக் கண்ணில் அவளும் கர்ணனும் மணக் கோலத்தில் வந்து தன் தாயின் புகைப்படத்தின் முன் நின்றனர்.
அந்த உறக்கத்திலும் வல்லபியின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.
ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் அவள் இதழ்கள் இறுக்கமாகி, விழிகளும் கண்ணீரை சரமாய் பொழிய தொடங்கியது.
ஆம் திருமண முடிந்த அன்றிரவே கர்ணன் அவளை மிகவும் வன்மையாக கையாண்டான்.
ஏன் எதற்கென்று பேசவே விடவில்லை. அடுத்த நாள் அதிலும் மோசமாக அவளை எடுத்துக் கொண்டான்.
தன் வீட்டினரோடு தொடர்பிலேயே இருக்கவிடவில்லை. யாழினியை கூட அவளிடம் பேச விடவில்லை.
அது நிஜத்தில் நடப்பது போல, உறக்கத்திலும் வல்லபியின் உடல் நடுங்கியது.
அந்த வீட்டிற்கு அவள் வந்து இன்றோடு மூன்றாவது நாள். நள்ளிரவைத் தாண்டிய நேரம், அந்த வீட்டிலேயே அவளுக்கு மிகவும் பிடித்த மகிழம் பூ மரத்தின் கீழிருந்த திண்டில், உடலைக் குறுக்கி, கால்களை மடக்கி, முட்டியில் முகத்தைப் பதிந்திருந்த வல்லபியின் கண்கள் தூரத்தில் தெரிந்த இருண்ட வானை வெறித்திருந்தது.
அந்த இருண்ட வானத்தைப் போலத்தான், தன் வாழ்க்கையும் இருளடைந்து போய்விட்டது என்பதை அவளால் நம்பக்கூட முடியவில்லை.
‘அப்பா.. அப்பா..’ என உள்மனம் தன் தந்தையைக் காண, அவரின் ஒரு அனைப்பிற்காக ஏங்கியது.
போய்விட வேண்டும்.. இங்கிருந்து போய்விட வேண்டும்’ என மனம் கூப்பாடு போட்டு கதறியது. இனியும் இந்த வீட்டிலிருந்து ஒரு வாய் நீர் கூட அருந்த முடியும் எனத் தோன்றவில்லை.
தன் உடலெல்லாம் புழு ஊர்வது போல அருவருப்பாக இருந்தது.. அந்த சவரில் எத்தனை நேரம் நின்றாளோ, உடல் நடுங்கவும்தான் வெளியவே வந்தாள். அப்போதும் அங்கிருப்பவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவசரமாக துணியை மாற்றிவிட்டு, வேகமாக அந்த அறையிலிந்து இங்கு வந்து அமர்ந்துவிட்டாள்.
கணவன் என்றவன் பேசிய பேச்சில் உள்ளம் உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது. அவன் தொட்ட இந்த உடலை அவளுக்கே பிடிக்கவில்லை.
அழுது அழுது மனமும் உடலும் சோர்வு கண்டது. எப்போது விடியும்.. எப்போது இங்கிருந்து போகலாம் என ஆதவனின் அலைக் கரங்களின் அனைப்பிற்காக காத்திருந்தாள் வல்லபி.
‘ஹேய்.. எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கல. இனி என் கண் முன்னாடி வந்த தொலைச்சிடுவேன்..’
‘த்தூ.. ஒரு காஃபி கூட போட சொல்லிக் கொடுக்கலையா உன் அப்பன்.?’
‘யாரைப் பார்க்க இந்த அலங்காரம். யாரை வர சொன்ன? எனக்காகன்னு பொய் சொன்ன? கொன்னு புதைச்சிடுவேண்டி..’
‘என்னடி அப்பனும் மகளுமா சேர்ந்து எங்க அப்பாவை ஏமாத்தி சொத்தெல்லாம் பிடிங்கிட்டு, இப்போ நல்லவங்க மாதிரி வேஷம் போடுறீங்களா.? நான் என்ன எங்க அப்பா மாதிரி முட்டாளா?’
‘இதோ பார்.. உனக்கு தாலி கட்டிருக்கேன். அதுக்கு என்ன செய்யனுமோ, அதை சரியா செய்யனும். உனக்கு தாலி கட்டிட்டு நான் விரதம் இருக்கனுமா? ஹான் அப்படியிருக்க நான் என்ன அம்மாஞ்சியா?’
‘என்னோட பையாலஜிகல் பார்ட்னர் இவதான். பேர் ஆலிஸ்.. ஆஸ்ட்ரேலியால இருக்கும் போது இவகூட த்ரீ யேர்ஸ் லிவிங்க்ல இருந்துருக்கேன். அவளோட கம்பேர் பண்ணும் போது நீ ஆவேரேஜுக்கும் கீழதான். ஒரு அட்ஜஸ்மென்ட் இல்ல, எனக்கு ஈக்குவலா கம்பெனி கொடுக்க தெரில. எப்படிடி எந்த ஃபீலிங்க்சும் இல்லாம ஜடம் மாதிரி இருக்க.. இல்ல ஃபீலிங்க்ஸ் இல்லாத மாதிரி நடிக்கிறியா?’
‘ஆலிஸ் கூட இருக்கும் போது நான் என்னையே மறந்துடுவேன். ப்பா… என்னமா கம்பெனி கொடுப்பா தெரியுமா? உனக்கு ஒரு மண்ணும் தெரில.. ச்சை.. இப்படி ஒரு ஜடத்தைக் கட்டி என் லைஃபே வேஸ்டா போச்சு..’ என கர்ணன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கும் அமிலத்தில் முக்கி நெஞ்சில் சொருகியதைப் போல் அத்தனை எரிந்தது.
இத்தனை பேச்சுக்கள் வாங்க அவள் என்ன தப்பு செய்தாள் என்று இப்போது வரை அவளுக்குத் தெரியவில்லை.
கல்லூரியின் கடைசி ஆண்டிலேயே மிகப்பெரிய MNC கம்பெனியில் ப்ளேஸ்மென்ட் ஆகியிருந்தாள். இரண்டு நாட்களில் வேலைக்கு போக வேண்டும் என்றிருக்கும் போது, ராமசாமி உடனே கிளம்பி வரச் சொன்னார் என்று வந்தாள். அடுத்தநாள் காலையில் அவளுக்கும், கர்ணனுக்கும் திருமணம் நடந்திருந்தது.
தன்னிடம் கேட்காமல் அப்பா எப்படி இந்த முடிவை எடுத்தார் என்று இப்போது வரைக்குமே அவளுக்குத் தெரியவில்லை.
ஆனால் இனி இங்கிருக்க முடியாது என்று மட்டும் அவளுக்கு உறுதியாக தெரிந்தது.
‘இப்படி ஒருவனுடன் என்னால வாழமுடியாதுப்பா. ப்ளீஸ் என்னை உங்ககூட கூப்பிட்டுகோங்க. என்னை இங்க விடாதீங்கப்பா’ என தன் தந்தையிடம் மனதுக்குள்ளே கதறினாள் வல்லபி.
அதே நேரம் தன் அறையின் பால்கனியில் இருந்து, சிகரெட்டைப் பிடித்தபடியே அவளையே பார்த்திருந்தவனின் இதழ்களில் திருப்தியாக ஒரு புன்னகை அமர்ந்திருந்தது.
கர்ணனின் அந்த குரூர புன்னகை முகம் அவளைப் பட்டென விழிக்க வைத்தது. உடலோ வியர்த்து ஈரத்தில் குளித்திருந்தது.
இன்னமும் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இது கனவு என்று அவளால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. அனைத்தும் நேரில் நடந்தது போலவே இருக்க, ஒருவேளை கர்ணன் தன்னை பழி வாங்க இப்படி செய்கிறானா? அல்லது ஏமாற்றுகிறானா? இவ்வளவு தூரம் வந்த பிறகு இதை எப்படி சமாளிக்க என மிகப்பெரும் குழப்பத்திற்கு சென்று விட்டாள் வல்லபி. இன்னுமே அவள் உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.
கனவில் நடந்ததற்கே இப்படியென்றால், நிஜத்தில் நடந்தால் நிச்சயம் தாங்கமாட்டள் என்று மூளைக்கு புரிந்தது.
இப்போது என்ன செய்வது? இதை யாரிடம் சொல்லி விளக்குவது என தெரியாமல் தவித்துப் போனவளுக்கு தூக்கம் தூரமாகிப் போனது.
அன்றிரவு தூங்காமல் நேரத்தைக் கடத்தியவள் விடிந்ததும் தன் தந்தையை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றவள், பார்வதியின் புகைப்படத்திற்கு விளக்கேற்றிவிட்டு வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
ராமசாமிக்கு மகள் தங்களை விட்டு பிரிந்து செல்வதால் இப்படி பயப்படுகிறாள், வருத்தப்படுகிறாள் என்று மட்டுமே நினைத்தார்.
மகளின் மனதில் இருக்கும் பயத்தை அவர் வேறாக நினைத்துக் கொண்டார்.
ஒருவழியாக மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர, இவர்களை புன்னகையுடன் வரவேற்றான் கர்ணன்.
கர்ணனின் அந்த புன்னகை அவளுக்கு ஆறுதலாக இருந்தாலும், இரவெல்லாம் அவளைப் படுத்திய கனவின் நிஜங்கள் அதை ஏற்க விடவில்லை.
நொடியில் அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டு கொண்டவன் “மாமா நானும் வல்லியும் கோணியம்மன் கோவில் போயிட்டு வரோம்..” என எழுந்து கொள்ள,
ராமசாமிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மகளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவர் ‘சரியென்று’ தலையசைத்து விட்டார்.
வல்லியும் மாட்டேன், முடியாது என்றெல்லாம் சொல்லாமல் அப்படியே கர்ணனோடு கிளம்பியிருந்தாள்.
கோவில் சென்று, தரிசனம் முடிந்து வெளியில் வந்த பிறகும் கூட வல்லி பேசவே இல்லை.
கர்ணனுக்கு அவள் எதையோ நினைத்து பயப்படுகிறாள் என்றுவரை புரிகிறது. ஆனால் எதென்றுதான் அனுமானிக்க முடியவில்லை.
கர்ணனுக்கு ஆளிஸ் என்ற பெண்ணின் பிம்பம் கூட நினைவில் இல்லை. பின் எப்படி அதுதான் காரணமாக இருக்கும் என நினைப்பான்.
அதெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் முன்னாடி நடந்தது என்றுதான் மூளையில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். அதனால் அதுதான் காரணமாக இருக்கும் என அவன் புத்திக்கு உரைக்கவே இல்லை.
பிரகாரத்தில் அமர்ந்த பின்னும் கூட வல்லபி பேசாமல் போக, கர்ணனுக்கு கோபம் வர ஆரம்பித்தது.
கோவிலில் வைத்து எந்த வாக்குவாதமும் வேண்டாம் என்று நினைத்தவன் எழுந்து கொள்ள, வல்லபியும் அமைதியாக அவன் பின்னே சென்றாள்.
அன்றைக்கு போலவே அண்ணப்பூர்னாவில் உணவை முடித்தவர்களின் கார் இப்போது பவானியை நோக்கி சென்றது.
கோவையைத் தாண்டி அவுட்டர் வந்த பிறகு, ஓரிடத்தில் காரை நிறுத்தி அவள் புறமாக திரும்பியவன் “என் பொறுமையோட அளவு உனக்கேத் தெரியும்.” என்றான் இறுகிய குரலில்.
அந்த குரலின் அழுத்தத்தில் பட்டென விழிகள் நிறைந்து போனது வல்லபிக்கு.
“ஏய்.. என்னடி.. என்னடி நீ? இப்போ என்னாச்சு? என்ன பிரச்சினை? எதுக்கு நீ இப்படி இருக்க? என்னனு சொல்லு வல்லி? அம்மா ஞாபகமா? என்னனு சொன்னாத்தானே தெரியும்? சொல்லு வல்லி..?” என ப துடித்தவனை கண்ணில் பொங்கிய நீருடன் பார்த்துக் கொண்டிருந்தவள் என்ன நினைத்தாளோ, அல்லது இதை அவனிடமே சொல்லி விடலாம் என்று நினைத்தாளோ அனைத்தையும் அவனிடம் சொல்லிக் கதறிவிட்டாள்.
நிச்சயம் வல்லபியின் அழுகைக்கு பின் இப்படியொரு காரணம் இருக்கும் என்று கர்ணன் எதிர்பார்க்கவே இல்லை.
வல்லபி கூறியதைக் கேட்டு திகைத்து தான் போனான்.
“வல்லி.. என்ன நீ?” என்றவனுக்கு என்ன பேச என்று கூட புரியவில்லை.
வல்லியின் விசும்பல் சத்தம் மட்டுமே அந்த காருக்குள் கேட்க, அவளையே விழியகலாது பார்த்தவன், நொடியில் தன்னை மீட்டு, ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்து “நீ என்ன நினைக்கிற? அது கனவு தானே?” என்றான் பொறுமையாக.
“ஹான்.. அது.. அது கனவுதான்.. ஆனா அதுல அந்த ஆளிஸ் அது உண்மைதானே.. அதுக்குப் பிறகு நீங்க..? என்றவளுக்கு பேசவே பயமாக இருந்தது.
“ம்ம் நான்..?” என அவனே எடுத்து கொடுக்க
“நீங்க.. நீங்க அந்த மாதிரி என்னை.. என்னை பழிவாங்கத்தான்?” என்றவள் அவனின் முகம் இறுகிக் கொண்டே செல்வதில் நிறுத்தியிருக்க,
“போலாம்..” என்று அழுத்தமான குரலில் கூறியவன், காரை வீட்டை நோக்கி திரும்பியிருந்தான்.
வல்லபிக்கும் அவனிடம் பேசவே பயமாக இருந்தது. அதனால் பேசாமல் அமைதியாகவே இருக்க, வீட்டின் முன் காரை நிறுத்தியவன் “ஒரு காலத்துல ஆளிஸ் என் வாழ்க்கையில் இருந்தா.. இப்போ இல்ல. இனி எப்பவும் இல்ல. இதுதான் நிதர்சனம். இனி வர காலம் ஃபுல்லா இப்படி உனக்கு காரணம் சொல்லிக்கிட்டே இருக்க முடியாது. அது நம்ம வாழ்க்கைக்கு நல்லதும் கிடையாது. இந்த கல்யாணம் வேணுமா வேண்டாம்னு நீதான் முடிவு பண்ணனும். நான் உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணமாட்டேன். உனக்கு ஓக்கேன்னா உங்க அப்பாக்கிட்ட சொல்லி, கல்யாண வேலையை பார்க்கச் சொல்லு. இல்லைன்னா எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லிடு..” என்றவன் அப்படியே அவளை இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டான்.
அதன்பிறகு தான் வல்லபிக்கு கர்ணனின் கோபமே புரிந்தது..
அதுவரை அவளுக்கு இருந்த குழப்பமெல்லாம் போய்விட, கர்ணனை எப்படி சமாதானம் செய்ய என தெரியாமல் வீட்டுக்குள் வர,
பதட்டமாக வந்த ராமசாமி “என்னாச்சு பாப்பா.. தம்பி போன் பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு சொல்றார்.. என்ன பாப்பா? என்ன பிரச்சினை?” என கேட்க
“ப்ப.. ப்பா..” என்றவள் அவர் தோளில் சாய்ந்து மீண்டும் கதற ஆரம்பித்தாள்..