பாஸ்… உங்க தம்பி ஏதோ பண்றார்..?” என்றான் டேனியல்.
‘என்ன பண்றான்?’ என்பது போல் கர்ணன் பார்வையை கொடுக்க,
“எனக்கு சரியா தெரியல பாஸ்.. பட் சம்திங்க் ராங்க். இங்க ஆஃபிஸ்ல தேவின்னு ஒரு எச்.ஆர் இருக்காங்க. அவங்ககூட அடிக்கடி வெளியே போறார். முதல்ல எனக்கு சந்தேகம் வரல.. அவங்க ரெண்டு பேரும் கிளம்பவும் ஸ்டாஃப்ஸ் எல்லாம் நக்கலா சிரிச்சாங்க. சோ சம்திங்க் ராங்க்னு புரிஞ்சது..” என்றான் தன் தலையைத் தட்டி,
“ஓ..” என்றவன் “அந்த பொண்ணு பேர் மாலதி. நம்ம ஆளு தான். பயமெல்லாம் இல்ல. நல்ல பொண்ணு தான். எனக்காக கொஞ்சம் வேலை பார்த்துட்டு இருக்கா..” என்றான் கர்ணன் மிகவும் கூலாக.
“எதே.. மாலதியா? உங்க ஆளா..? உங்களுக்கு வேலை பார்க்குறாளா? அப்போ வல்லி.?” என ஷாக்கானவன் கர்ணனின் முறைப்பில் அமைதியாக..
“டேய் நிஜமாவே நீ இஞ்சினிய்ரிங்க் ஸ்டூடன்டா? எனக்கு நம்பிக்கையே இல்ல. உன்ன வச்சு சத்தியமா முடியலடா?” என்றவன் “அந்த வந்தனா கூட சேராதன்னு எத்தன தடவை சொல்றேன்..” என எரிச்சலாகி “மாலதி தேவி அவங்க பேர்.. சுந்தரும், ரமேஷும் ஏகப்பட்ட கணக்கு குளறுபடி செஞ்சி வச்சிருக்காங்க. அது எதுக்கும் எவிடென்ஸ் இல்ல. பக்காவா கணக்கு எழுதி வச்சிருக்காங்க. சோ அதை கண்டுபிடிக்கத்தான் மாலதி இங்க வந்துருக்காங்க..” என்றான் கடுப்பாகவே
“ஓ..” என்றவன் “அய்யோ..” என தலையில் தட்டிக்கொள்ள
“இப்போ என்னடா?” என சலிப்பானான் கர்ணன்.
“அது பாஸ்.. உங்ககிட்ட பேச முன்னாடி வந்தனா பேசினாளா, அவக்கிட்டயும் இதை சொல்லிட்டேன்..” என்றதும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் கர்ணன்.
‘எத்தன தொல்லையத்தான் மனுசன் சமாளிக்கிறது..’ என பரிதாபமாக டேனியைப் பார்க்க, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் வசந்த்.
இருவரையும் கவனித்த வசந்திற்கு ஏதோ புரிய, “பாஸ்..” என இழுக்க, சட்டென தன்னை மீட்டுக் கொண்டான் கர்ணன்.
“வசந்த்.. மாலதிக்கு செகியூரிடி அரேஞ்ச் பண்ணிட்ட இல்ல. அவங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடந்திடக்கூடாது. இன்னைக்கு சுந்தர் சும்மா இருக்கமாட்டான்..” என்று விட,
“ஆல் செட் பாஸ்.. நான் பார்த்துக்கிறேன்..” என்று கதவைத் திறக்க, ‘இவனையும் இழுத்துட்டு போடா..” என்றான் கடுப்பாக.
“பாஸ்… வந்தனாக்கிட்ட என்ன சொல்ல?” என பாவமாக மீண்டும் டேனி கேட்க,
‘இவன் ஏன் சோத்து மூட்டையை பத்தி கேட்குறான்..’ என வசந்த் கேள்வியாக பார்க்க,
“நீ புடுங்கின ஆணி வரைக்கும் போதும்.. இனி நான் புடுங்கிக்கிறேன்.. கிளம்பு..” என பல்லைக் கடிக்க,
“போங்க பாஸ்..” என்று வசந்துடன் கிளம்பிவிட்டான் டேனி.