• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கருப்பு உளுந்து சாதம் & எள்ளு துவையல்

Pandiselvi

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 30, 2021
Messages
33
கருப்பு உளுந்து சாதம் & எள்ளு துவையல் (ஜீரோ ஆயில் உணவு)


மிகவும் சத்தான பருப்பு உளுந்து. பூப்பெய்தும்போதும், பிரசவத்தின்போதும் பெண்களுக்கு உளுந்து அதிகமாகக் கொடுப்பார்கள். கர்ப்பப்பைக்குத் தேவையான புரதச்சத்து உளுந்தில் அதிகமாக இருப்பதே காரணமாகும். இதை ஒன் பாட்டில்(one pot food) எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:

1. கருப்பு உளுந்து - 1 கப்
2. அரிசி - 1 கப்
3. சீரகம் - 1 ஸ்பூன்
4. பூண்டு - 20 பல்
5. உப்பு - தேவையான அளவு
6. எள்ளு - 50 கிராம்
7. வரமிளகாய் - 8
8. புளி - தேவையான அளவு
9. தேங்காய் துருவல் - 1 கப்
10. பச்சை மிளகாய் - 4
11. வெந்தயம் - 1 ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் கருப்பு உளுந்தை வாணலியில் போட்டு சிவந்து மணம் வரும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு குக்கரில் உளுந்தையும் அரிசியையும் சேர்த்து நன்கு இரண்டு முறை கழுவிய பின் அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், வெந்தயம், பாதி துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டுக்கு(1 கப் அரிசி+1 கப் உளுந்து) நான்கு என்ற முறையில் தண்ணீர் விட்டு கொதிக்க பின், குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு எடுத்தால் கருப்பு உளுந்து சாதம் ரெடி. மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

3. வாணலியை சூடு செய்து அதில் எள் மற்றும் வரமிளகாய் சேர்த்து, அது பொரிந்து மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.

4. பின் மிக்ஸியில் வறுத்த எள், மீதமுள்ள தேங்காய் துருவல், வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்தால் எள்ளு துவையல் ரெடி. இதே முறையில் கடுகு துவையலும் செய்யலாம்.

இந்த சாதம் செய்வதற்கு எண்ணெய் தேவையே இல்லை. விருப்பப்பட்டால் சாதத்திற்கு சாப்பிடும் போது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
 

Attachments

  • கருப்பு உளுந்து சாதம்&எள்ளு துவையல்.jpg
    கருப்பு உளுந்து சாதம்&எள்ளு துவையல்.jpg
    205.8 KB · Views: 31
Top