• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அசோக் குமார் - வைராக்கியம்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
“வைராக்கியம்"

"ஏன்டா, செரைக்கிற நாயீ... ஒனக்கு அம்புட்டு கொழுப்பா?... ஒங்கல எல்லாம் வைக்கிற எடத்துல வைக்காம விட்டது எங்க தப்புதாண்டா... இனிமே நீ எப்படி இந்த ஊருக்குள்ள கட போடுறேனு பாக்கிறேன்டி" என்ற சத்தம் இடியாய் காதில் விழுந்து கொண்டேயிருக்க தூங்காமல் கிடந்தான் கோபாலு.

"கிட்டத்தட்ட பதினஞ்சு வருசமா தொழில் நடத்துறோம். இப்பதான் கொஞ்ச கொஞ்சமா நாலு காசு பாத்து அளவா வூடுகட்டி குடியிருக்கோம்... அதுகூட பொறுக்கலையா இந்த சாமிக்கு" என்று அழுத ஆத்தாளின் ஒப்பாரியும் இடையிடையே கேட்டு அவனை என்னமோ செய்து கொண்டு தான் இருந்தது.

எதிர்காலம் சூன்யமாக கண்முன் விரிந்தாட நிகழ்கால கோபத்தையும் ஆற்றாமையையும் மறக்க முயற்சித்து பார்த்தான் கோபாலு. நிகழ்கால சங்கதிகள் பாம்புகளாக சுருள சுருள கடந்த கால நினைவுகள் பின்னோக்கி நகர வாலைப் பிடித்துபடியே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தான்.

பரம்பரை பரம்பரையாக சவரத் தொழில் செய்து வந்த குடும்பத்தில் பிறந்தவன் தான் கோபாலு. வராத படிப்ப வா வா னு கூப்பிட்டுப் பார்த்த மட்டும் வந்துவிடவா போகுது. வாத்தியார் அடிக்கு பயந்தே நாலாம் வகுப்போட நின்னவன் தான்.

இப்பவும் கூட அப்பப்ப 'அந்த வாத்தியாரு மட்டும் அடித்து வெளுக்காம இருந்திருந்தால் நானுங்கூட கொஞ்ச படித்து வேற வேலவெட்டிக்கு போய் தொலச்சிருப்பேன்" என்று தான் புலம்பிட்டு திரிவான்.

அப்பன் வெற்றிக்கொடி கூர ஷாப் போட்டு சவரம் செய்த கடையிலே கொஞ்ச நாள் ஒத்தாசையாக இருந்து பார்த்தான். எந்த புண்ணியவானோ குஜராத் பக்கம் அப்பளம் போட அழைப்பதாக அப்பன் சொல்லவும் அவன் ஆத்தா அழுது புலம்பியதையும் பொருட்படுத்தாமல் " இந்த மயிர வழிக்கிற பொழப்ப விட எதுவுமே மேல்" என்று கிளம்பி போனான்.

"என்ன தான் உருண்டு பொராண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒடம்புல ஒட்டும்" என்று பெருசுங்க சொல்வது போல... அப்பளம் பொரிக்க போனவன் தண்ணியோ, காத்தோ , மண்ணோ சேராம அப்பளமா நொறுங்கி போய் வந்து சேர்ந்தான் கோபாலு.

அவன் ஆத்தா முத்தி வேண்டாத சாமி பாக்கியில்ல... பாக்காத வைத்தியமுமில்ல... கையில துட்டுக்கும் வழியில்ல... சின்ன வயசிலேயே கட்டிக் கொடுத்த மக ஊரான ஆண்டிபட்டியில இருக்கிற பெரியாஸ்பத்திரில சேர்த்து கொஞ்ச நாள் வைத்தியம் பார்த்தாள் முத்தி.

இங்க ஊருல இருக்குற புருசனுக்கும் இன்னும் ரெண்டு பசங்களுக்கும் அவ ஆத்தா கருப்பாயி தான் சோறு பொங்கி போட்டுக்கிட்டு இருந்தாள். ரெட்டையா பிறந்தாலும் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு தினுசில தான் இருந்தானுங்க... சின்னவன் சந்திரனுக்கு படிப்பு வராம அப்பன் வெற்றிக்கொடிக்கு ஒத்தாசையாக கடையில் நிற்க ஆரம்பித்தான்.

"எத்தன நாளைக்குத் தான் மக வூட்டிலேயே கிடப்பது" என்று நினைத்த முத்தி மகன் கோபாலை மட்டும் மகள் வீட்டிலேயே விட்டு கவனிக்கச் சொல்லிட்டு ஊருக்கு வந்துவிட்டாள்.

கொஞ்ச உடம்பு தேறிய கோபால் பொழுது போகாமல் தன் அக்கா வீட்டுக்காரரான மாமன் சலூன் கடையில் போய் உட்கார ஆரம்பித்தான். ஊருல அப்பன் செரைக்கிற குடிசைக்கும் மாமன் கட்டிங் செய்கிற சலூனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்து விக்கித்து நின்றான் கோபால்.

சாய்ந்து உட்காருகிற நாற்காலி முதல் சவரக்கத்தி, பல்கோணங்களில் உருவத்தைக் காட்டும் கண்ணாடி, சவரம் முடித்த பின் தேய்க்கும் படிகாரத்திற்கு பதிலாக தடவும் சாராய வாடை ஸ்பிரிட், கமகம என மணக்கும் ரோஸ் பவுடர் , முகத்தில் ஒட்டியெடுக்கும் டிஸ்யூ பேப்பர் என பார்க்கிற ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வியந்து போனான்.

ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு பார்த்து பரவசமடையத் தொடங்கினான். ஊருக்குத் திரும்பி போக யோசனை வந்த போதெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தவன் மாமன் தொழில் செய்யும் நேர்த்தியைக் கண்டு பூரித்துப் போனான்.

"தன் அப்பன போல் தன் மாமன் எழவு வீட்டுக்குப் போய் பிண வேலையையும் பார்ப்பதில்லை... சுடுகாட்டு வேலையோ குழிமாட்டு பண்டுதமோ பாக்காமல் தானுண்டு தன் கடை சோலியுண்டுனு மாமன் மைனர் கணக்கா சிரைக்கிறத பார்த்து" ஒரு வித மயக்கத்தில் மிதக்கத் தொடங்கினான்.

இதெல்லாம்விட அவனுக்கு "ரொம்ப பெரிசா தெரிஞ்சது என்னவென்றால், அவன் அப்பன போல் மாமன் தினமும் ராத்திரி பட்டைய போட்டுது வந்து சலம்புறதும் இல்ல" என்பது தான்.

பொண்ணக் கட்டிக் கொடுத்த வீட்டுல காலமெல்லாம் உக்காந்து திங்கிறது மானங்கெட்ட பொழப்புனு மண்டைல உரச்சலாலும் ஏனோ ஊருக்குத் திரும்ப துணியவில்லை கோபாலு.

தினமும் கடைக்குப் போய் தண்ணீர் பிடித்து வைப்பது, பிளேடு வாங்கிக் கொடுப்பது, வெட்டி கீழே விழுந்த மயிரைக் கூட்டித் தள்ளுவது என சின்னச்சின்ன வேலைகளைச் செய்து மாமன் கூடவே இருக்கத் தொடங்கினான்.

ஒருநாள் மாமன் சாப்பிட வீட்டுக்குப் போன நேரம், கடைக்கு ஒரு ஆள் வந்தார். கடையில் வேலை பார்க்கும் இன்னொரு ஆள் "ஒன்னுக்குப் போயிட்டு வரேனு" சொல்லிட்டு போயிருந்தான். வந்தவர் ரொம்ப பரபரப்பா இருந்தார். ஏதோ அவசரமென்று என்று உணர்ந்தவனாக கோபாலு மெதுவாக, " அண்ணே... செத்த நேரம் பொறுங்க... இந்தா வந்துருவாங்கண்ணே" என்று சொல்லி உட்கார வைத்தான்.

"ஒன்னுக்குப் போறேனு சொல்லிட்டு போனவன் வர லேட்டாகுமுனு" கோபாலுக்கு நல்லாவே தெரியும். ஏன்னா.. "எப்பவெல்லாம் மாமன் சாப்பிட போகிறாரோ அப்பெல்லாம் இந்த வெண்ண இவன மட்டும் விட்டுவிட்டு ஒன்னுக்குப் போறேனு சொல்லிட்டு போய்விடுவான். மாமன் வருவது எப்படித் தான் தெரியுமோ... அதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி ஓடி வந்துருவான்..."

வந்தவர் சுற்று முற்றும் பார்த்தார். கண்ணாடி மேல் தொங்கிய கடிகாரத்தையும் பார்த்தார். எழுந்து போகலாம் என்று முடிவெடுத்தாரோ என்னவோ சட்டென்று இவன பார்த்து, "எலே... நீ வழிப்பியாடா? " என்று கேட்க, ஏதோ சொல்ல வாய் எடுத்தவன் , "நல்லா சேவ் பண்ணுவேன்னே" என்று சொல்லி எழுந்து நின்றான்.

"அப்புறம் ஏன்டா கம்முனு இருந்த..அப்பவே கேட்டு செரச்சிருக்கலாமில" என்று திட்டிக் கொண்டே சேரில் ஏறி அமர்ந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் குஜராத்திற்கு போவதற்கு முன்னால் ஊரில் வழிந்த ஞாபகம் வர அதனை பிளேடால் நுரையை வழிப்பது போல் ஒட்ட வழிந்தெறிந்து விட்டு துண்டை உதறி அவரின் அடர்ந்த மார்பின் மீது போட்டு வழிக்கத் தயாரானான் கோபாலு...

அன்று பிடித்த கத்தியை இன்று வரை விடாமல் செய்தொழில் நேர்த்தியாக செய்து வந்த வாழ்வில் இன்று விழுந்த அடி பேரிடியாகவேத் தோன்றியது அவனுக்கு. ஆசையாக ஆசையாக வைத்த கடையை அடித்து நொறுக்கிய காட்சி அவன் கண்முன்னே வந்து வந்து கலக்கமுற செய்வதாகவே இருக்கிறது.

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் தொழிலைக் கற்று அங்கே சீட்டு போட்டு பணம் சேர்த்து சேமித்த பத்தாயிரம் ரூபாயில் ஒரு கடையை மூவாயிரம் ரூபாய் அட்வான்ஸூக்கு மாதம் முந்நூறு ரூபாய் வாடகைக்குப் பிடித்தான்.

பரம்பரை பரம்பரையாக தொழில் செய்து வந்த இடத்தை விட்டு வர அவன் அப்பா வெற்றிக்கொடிக்கு துளியும் மனமில்லை. "நாலு காசு சம்பாரிஞ்சுட்டானு மிதப்புல திரியாதடா... காசக் கரியாக்கிப்புடாத... அழகா செரச்சா போதும்டா... செரைக்கிற எடம் அழகா இருக்கணுமினு எவன்டா சொன்னது" என்று முதலில் முட்டுக்கட்டை தான் போட்டார் வெற்றிக்கொடி.

"ஓங்கடைய விட்டுட்டு அந்த ஆறுமுகம் கடையில ஏன் கூட்டம் அள்ளுதுனு ஒமக்கு எங்க தெரியப் போகுது... செரைக்க, குடிக்க, படுக்க என்று திரிகிற ஒமக்கு ஏ வேதன எங்கிட்டு புரியப் போகுது" என்று அதட்டி பதினெட்டு வயதில் இந்த சலூன் கடையைத் தொடங்கினான் கோபாலு.

இரண்டு பக்கமும் ஐந்துக்கு நாலுனு நான்கு கண்ணாடி வைத்து இரண்டு சுழல் நாற்காலிகள் போட்டு, கட்டிங், சேவிங் பண்ணுவது வெளியே தெரியாமல் மறைக்க கண்ணாடித் தடுப்பு வைத்து மறைத்து அமர்க்களப்படுத்தினான் கோபால்.

தான் வெட்டும் கத்திரி போல் ரொம்ப துடிதுடிப்பான பேச்சும் முடிக்குள் லாவகமாக வளைந்து கொடுத்து பயணிக்கும் சீப்பு போல் எல்லாருக்கும் வளைந்து கொடுத்து பேசும் நெளிவு சுளிவு அணுகுமுறையும் தொழில் நேர்த்தியுமாக சேர்ந்து அவனது தொழிலை அமோகமாக வளரச் செய்தது.

ஆரம்பத்தில் இவனிடம் முட்டிக்கிட்டு கிடந்த இவனது அப்பா முதலில் தன்னுடன் இருந்த இரண்டாவது மகன் சந்திரனை இவனுடன் அனுப்பினார். பஸ் நிறுத்தத்திற்கு அருகிலிருந்த தனது கூரைக் கடையிலேயே தனக்கென்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முடித்திருத்தம் செய்து கொண்டு ஈமக் காரியங்களுக்கும் சென்று வந்து குடியும் கும்மாளமுமாக வாழ்ந்து வந்தார் வெற்றிக்கொடி.

பள்ளிக்கூட பசங்களுக்கு விடுமுறை விடும் மே மாதங்களில் வெற்றிக்கொடியை கையில் பிடிக்கவே முடியாத அளவிற்கு பிஸியாக இருப்பார். உள்ளூர் அலோபதி மருத்துவருடன் இணைந்து ஆம்பள பசங்களுக்கு மார்க்கல்யாணம் (சுன்னத்) செய்துவிடுவதில் வெற்றிக்கொடி செம பிரபலம்.

அந்த சுற்று வட்டார பட்டித் தொட்டிகளிலெல்லாம் வெற்றிக்கொடி வருகைக்காக காத்திருந்த காலமெல்லாம் உண்டு.

பட்ட சாராயத்தை அளவா குடித்துவிட்டு வெற்றிலையை வாயில் குதப்பி சிவப்பு நிற எச்சிலை உதட்டோரம் ஒழுக விட்டுக் கொண்டு ஆறடி உயரத்தில் ஒட்டிப் போன வயிற்றைக் காட்டிக் கொண்டு வேட்டியை தொடை தெரிய ஏத்திக் கட்டி தலையில் சும்மாடு கட்டி சவரக்கத்தியை எடுத்து தயார் நிலையில் நிற்கும் வெற்றிக் கொடியின் காட்சியை ஓவியமாகத் தீட்டலாம்.

குந்த வைத்து உட்கார்ந்து கொண்டு அவன் அடிக்கும் அரட்டைக் கச்சேரியைக் கேட்பதற்கே ஒரு கூட்டம் அலைமோதும். குனிந்தே வாழப் பழகிய (பழக்கப்படுத்திய) சமூகத்தில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் பிறந்ததற்காக வருத்தப்பட்ட ஒரு ஜீவன் வெற்றிக்கொடியாகத் தான் இருக்கும்.

"ஊர் பெருசுகள பார்த்து பார்த்து குனிந்து நின்றே கூனல் விழுந்துவிட்டதா" என்று பிறர் எண்ணுமளவிற்கே அவரது உடல்மொழியும் இருக்கும். அவன் அப்பன் வெற்றிக்கொடி இருந்த வரை கோபாலு ராஜாவாட்டம் தெனாவட்டாத் தான் இருந்து கொண்டு இருந்தான்.

ஊரில் எழவு விழுந்தா வெற்றிக்கொடி தான் ஈமக்கிரியை செய்கிற ஆளா ஊருக்குள்ள இருந்தான். நாவிதருனு ஊருக்குள இருந்தது நாலு குடும்பம்தான். அதுல ஒருத்தன் அற்ப ஆயுசுலேயே போய்விட்டான். இன்னொருத்தர் இருந்தாரு... அவரையும் அவரோட மகன்கள் ரெண்டு பேரும் மிலிட்டரி வேலைக்குப் போனதால் முடி வெட்டுகிற வேலையே செய்யக்கூடாதுனு நிறுத்திப்புட்டாங்க..

அப்புறம் ஊருக்குள்ள ஒரு வழக்கமும் இருக்கிறது.. எவன் செரைக்கிறானோ அவன்தான் குழிமாட்டு வேலை பார்க்கணும் என்பது தான் அது. வண்ணான் வேலையும் அப்படித்தானே...

இன்னைக்கு இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரம் வருவதற்குக் காரணமே இந்த வழக்கம்தானே... வெற்றிக்கொடி குடித்து குடித்தே குடல் எல்லாம் வெந்து போய் செத்து போனான். அதன்பிறகு தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதையும் கோபாலு லாவகமாக கையாண்டு வெற்றி பெற்றான் என்று தான் சொல்ல வேண்டும்... அதை நினைத்துப் பார்த்து பெருமிதமும் அடைந்தான்.

"நீங்க எம்புட்டு பண கொடுத்தாலும் நான் குழிமாட்டு வேலைக்கு வரமாட்டேன் " என்று உறுதியாக கூறிவிட்டான். "இவனப் போய் ஏன் தாங்கணும்?" என்று ஊரிலுள்ளவர்களும் சொல்லிவிட்டு மற்றொரு நாவிதனான காந்தியையே ஊரின் ஆஸ்தான குடிமகனாக்கி சுடுகாட்டு வேலைக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

கோபாலு தனது ரெண்டு தம்பிகளுடன் இணைந்து கடையை நன்கு விரிவுபடுத்தினான் என்று தான் சொல்ல வேண்டும். இளமையின் வேகமும் கடையில் ஒரே நேரத்தில் பெரும்பாலும் மூன்று பேரும் இருந்தாலோ என்னமோ இவன் கடையையே அனைவரும் விரும்பினர்...

ஊரில் மூன்று கடைகள் இருந்தாலும் சகஜமான பேச்சு, தொழில் நேர்த்தி என்று தொழில் நன்றாகவே நடந்தது. அண்ணன் தம்பி மூன்று பேரும் பொறுப்பாக கடையை நடத்தி ஓடை ஓரமாக இருந்த மண்சுவர் வீட்டை இடித்து உயரமாக கட்டி தகரம் போட்டு குடியிருந்து வருகின்றனர்.

"எவ கண்ணுபட்டுதோ இந்த ஊர விட்டு போக வச்சுடுச்சே" என்று புலம்பிய ஆத்தா முத்தியை சந்திரன் அதட்டுவதைக் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்டான் கோபாலு..

மூன்று பேரும் திருமண முடித்து ஒரே வீட்டில் ஒன்றாகத் தான் வசித்து வருகின்றனர்... "நாளைக்கு காலையில கடையைத் திறக்க முடியாது... திறக்கவும் கூடாது... வேறென்ன செய்யலாம்" என்ற யோசனையிலேயே கோபாலு படுத்திருந்தான்...

"கடையத் தான் திறக்க முடியாதுனு நெனச்சுக்கிட்டு இருந்தா, ஆத்தா புதுசா ஒரு குண்டத் தூக்கிப் போடுதே... வீட்டையும் காலி பண்ணி ஊர விட்டு போகச் சொல்லிடுவாங்கேலோ" என்று யோசிக்க ஆரம்பித்தான் கோபாலு.

"ஒன்னுக்கு ரெண்டு எழவு ஒன்னாவா விழுந்து தொலைக்கணும்.... இல்ல... இந்த நேரம் பாத்தா மாமன் காந்திக்கு முடியாம போகணும்... அவன் தம்பி நேருவும் ஊருக்கு போய் தொலையணும்... எல்லாம் நம்ம கெட்ட நேரம்தான்" என்று அரற்றிக் கொண்டிருந்தான் கோபாலு.

மூன்று நாளுக்கு முன் அதிகாலையிலே ஒலித்த செல்போன் எடுத்து பார்த்தால் மாயாண்டி எண்ணிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

"ஹலோ.. மாயி அண்ணே சொல்லுங்கண்ணே..."
ஹலோ... டேய் கோபாலு... என் பாட்டி மண்டைய போட்டுச்சுடா.... வந்து ஆகுற வேலையை பாக்கணுமிடா..."
"அண்ணே... என்னண்ணே என்னைய கூப்பிடுறீங்க.... நான்தான் இந்த சோலிக்கெல்லாம் வர மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்தானேன்னே..."

"அதெல்லாம் தெரியும்டா...இப்ப ஒம் மாமனுங்க ரெண்டு பேர்ல ஒருத்தன் முடியாம படுத்துக் கிடக்கானாம்... இன்னொருத்தன் ஊருக்குப் போயிட்டானாம்..."
"ம்ம்ம்.."
"என்னடா.. நானென்ன கதையா சொல்றேன்... சீக்கிரம் கிளம்பி வாடா.."
"இல்லண்ணே... நானெல்லாம் இதுக்கு வரதுலண்ணே..."

"சரிடா.. நீ வர வேணாம்.. ஒன் தம்பியாவது அனுப்பி வை"
"அது வந்துண்ணே... அவிங்களுக்கு ஒண்ணும் தெரியாதுண்ணே..."

"இந்த கதையெல்லாம் விடாதா.. வந்து சேரு..."

போன் துண்டிக்கும் சப்தம் கேட்டு இவனது சப்தநொடி அடங்குவது மாதிரி இருந்தது. உடனே யோசித்த கோபாலு, மாமன் காந்திக்கு போன் செய்து கெஞ்சிக் கூத்தாடி அவனை எழவு வீட்டிற்கு அனுப்பி வைத்து மாயாண்டிக்கும் போன் பண்ணி சொல்லி வந்த இக்கட்டத்திலிருந்து ஒருவழியாக தப்பித்திருந்தான்.

அடுத்த நாளே ஜக்கம்மா கிழவி இறக்கவும் அவன் மகன் முருகன் கூப்பிட்டு வரச் சொன்னதாக விருமாண்டி கடைக்கு வந்து அழைத்தான். கோபாலு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான். இந்திரன் ஏதோ முனகியதை கவனித்தவாறே விருமாண்டி வெளியேறிச் சென்றான். அதன்பிறகு அதைப் பற்றி அவன் கண்டு கொள்ளவே இல்லை.

இன்று மாலை கோபாலும் இந்திரனும் கடையில் இருந்த போது தீடீரென்று பத்து இருபது பேர் கடை வாசலில் வந்து நின்றனர். என்ன ஏது? என்று திரும்பி பார்ப்பதற்குள் ஒரு கல் பறந்து வந்து தடுப்புக் கண்ணாடியை பதம் பார்த்தது.

சேவிங் செய்து கொண்டிருந்த இருவரும் துள்ளியெழுந்து ஓடினர். பிடித்திருந்த கத்தியை நழுவ விட்டான் இந்திரன். பேச வாய் எடுப்பதற்குள் விருமாண்டியின் கை இந்திரனின் முகத்தில் அறைய நீண்டது. இந்திரன் கையை மடக்கிப் பிடிக்க முயல தள்ளுமுள்ளு நடந்தது.

துள்ளியெழுந்த கோபாலை ரெண்டு பேர் மடக்கி நிறுத்தினர். எழுந்த கலவரத்தில் ஊரே கூடிவிட்டது... "செரைக்கிற நாயீ.. ஒங்களுக்கு அம்புட்டு கொழுப்பாடா.... ஊருக்கு ஒதுக்குப்புறத்துல கடைய போட விடாம நடுரோட்டுல கடைய போடவிட்டது எங்க தப்புடா" என்று முருகன் ஆவேசமாக கத்தினான்.

"மேய்க்கிறது பன்னி, வாய் கொப்பளிக்க பன்னீரு கேக்குதாடா ஒங்களுக்கு" என்றான் கோட்டை.

"செரைக்க மட்டும் இவன் கடைக்கு வருவாங்களாம்.. தெரை இவரு சுடுகாட்டு வேலைக்கு வரமாட்டாராம்" என்று எக்களித்தான் மாயாண்டி.

எதுவுமே பேசாமல் அமைதியாக நின்று கொண்டே இருந்தனர் இருவரும்.

"பேண்ட இடத்த விட்டுட்டு திங்குற எடத்த கழுவுன மாதிரி இவனுங்க கிட்ட செரச்சுட்டு குழிமாட்டுக்கு மட்டும் அடுத்தவன்கிட்ட போகணுமாமில..." என்று பொருமினான் செல்வம்.

"உள்ளூருக்காரைங்ககிட்ட போனாவது பரவாயில்ல... வேற ஊருகாரன கூப்பிட்டு வரச் சொன்னா நம்ம மாமன் மச்சினைங்க நம்மள கொவுட்டுல குத்துற மாதிரில பேசுறாங்கே..." என்றான் முருகன்.

"எல்லாம் இந்த நாதாரிகளால் வந்தது... செரைக்க கையில வாங்குற காசு மட்டும் மணக்குதா?? சுடுகாட்டு காசு மட்டும் கசக்குதுதாடா வெண்ணெய்களா?" என்று திட்டிக் கொண்டே அவிங்கள அடிக்க பாய்ந்தார் தொத்தன்.

பக்கத்தில் நின்றிருந்த காளிமுத்து தடுக்காவிட்டால் கோபாலு பல்லு தெறித்து இருக்கலாம்.

"சும்மா ஆளாளுக்கு இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி?? சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வாங்கடா?" என்று பரமசிவம் சொல்லவும் எல்லோரும் அமைதியானர்கள்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு முத்தி தலைவிரிக்கோலமாக கடைக்கு ஓடி வந்தாள்.

"ஏ..முத்தம்மா... ஒம் புருசனும் நீயும் இருந்த இருப்பு தெரியாதா??? சின்னப் பசங்க புரியாம இருந்தா நீ இதெல்லாம் எடுத்துச் சொல்லமாட்டியா?" என்று பாலன் சப்தமிட ஓவென ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் முத்தி.

ஊர்த்தலைவர் முத்துச்சாமி தலைமையில் அப்பொழுதே கூட்டம் கூட்டப்பட்டது.

"இங்க பாருங்கடா.... என்ன தான் நாலு காசு சம்பாதித்தாலும் அவனவன் பொறப்புனு ஒன்னு இருக்குல... அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும்டா... நீங்க இப்ப இந்த செரைக்கிற வேலையைச் செய்யாமல் வேற வேலைக்குப் போயிருந்தால் ஒங்கள எவனும் வந்து கூப்பிடப் போறதில்ல... வழிக்கிறது தான் பொழப்பு... அத கடையில செஞ்சா என்னா மயானத்துல செஞ்சா என்னடா??? இதுல ஒரு கௌரவமாடா ஒங்களுக்கு?" என்று கேட்டு நிறுத்தினார் முத்துச்சாமி.

"புத்திமதி எல்லாம் சொல்லாதீங்க... ரெண்டுல ஒண்ணு சொல்லச் சொல்லுங்க... இந்த ஊருல கடைய போட்டால் சுடுகாட்டுக்கு இவனுங்க தான் வரணுமினு அடிச்சுப் போசுங்க" என்று கணகணத்தார் பரமசிவம்...

"மாப்ள... பொறு மாப்ளா... வயசு பசங்க.. இளந்தாரி முறுக்கு இருக்குமில... நாலு காசு வேற கையில புழங்குது... கொஞ்சம் பக்குவமா சொல்லி பாப்போம்" என்று கூறிக் கொண்டே கூட்டத்தைப் பார்த்தார்.

கூட்டமும் ஆமோதிப்பது போல் தலையாட்டினர்.

"என்னடா சொல்றீங்க??? ஈமச்சடங்கு செய்ய இடுகாட்டுக்கு வரதா இருந்தா இங்க நீங்க தொழில் செய்யலாம்... இல்லாவிட்டால் இங்க நீங்க கடை போடக்கூடாது. போட முடியாது. எவனும் ஒங்ககிட்ட கட்டிங், சேவிங்கினு வரவும் மாட்டானுங்க.. பாத்துக்கோங்க..பா.." என்ற முத்துச்சாமி அப்படியே விருமாண்டி கோஷ்டி பக்கம் திரும்பி, "இனிமே அவிங்கள அடிக்கவோ கடைய நொறுக்கவோ எவனும் போகக்கூடாது பார்த்துக்கோங்க" என்று அதட்டினார்.

கூட்டம் கலைந்தது. எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். சந்திரன் மட்டும் ரொம்ப கோபமாகவே இருந்தான். "இவனுங்க யாரு நம்மள கடை போடாதேனு சொல்றதுக்கு... கட்டப் பஞ்சாயத்தா பண்ணுறானுங்க.... போலீசில் போய் கம்ப்ளைண்ட் பண்ணினால் என்ன?" என்று சந்திரன் கேட்டான்.

"அடேய்..செத்த சும்மாயிருடா... நீ போலீசுக்கு போனாலும் எல்லாம் அவிங்க ஆளுக தான். எவனும் ஒனக்கு சப்போர்ட் பண்ணமாட்டான். அத புரிஞ்சுக்க... நம்மள மேலேறவே விடமாட்டாணுங்க... " என்றான் கோபாலுவின் அக்கா வீட்டுக்காரன்.

விபரமறிந்து ஆண்டிபட்டியிலிருந்து பைக்கில் அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்தான் அவன்.

"இவ்வளவு நாளா ஒங்கள ஊர்க்காரைங்க நோண்டாமல் இருந்தததே அந்த கருப்பசாமி புண்ணியம்தான். ஒண்ணு அவுங்க சொல்றது போல இடுகாட்டுக்கு போற வழிய பாருங்க... இல்ல என்ன போல பொறந்த ஊர விட்டுவிட்டு வெளியூர்ல கொஞ்சம் பெரிய ஊரா பார்த்து கடைய போட்டு பொழைக்கிற வழியப் பாருங்கடா" என்று கூறினான்.

"படிக்கிற காலத்துல ஒழுங்கா படிங்கடானு சொன்னா எவன்டா கேட்டீங்க" என்று அழுது தீர்த்தாள் அக்கா.

பனிரெண்டாவது முடித்து கேட்ரிங் படிக்கப் போய் திரும்பி வந்ததை நினைத்துக் கொண்டே படுக்கப் போனான் சந்திரன். "போலீஸ் வேலைக்கு போகவும் ஒடம்பு பத்தல" என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் சந்திரன்.

இரவெல்லாம் விழித்திருக்கும் நிலவு போல மொத்த குடும்பமுமே விழித்திருக்க மனசோ கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டே எதிர்காலத்தை எதிர்பார்த்தபடியே நீண்டு கொண்டே இருந்தது.

"இனி இந்த ஊரில் பொழைக்க முடியாது..பொழைக்கவும் கூடாது" என்று திடமாய் நம்பினான் கோபாலு.. "அதற்காக ஊர விட்டும் ஓடிப் போகக்கூடாது... கஷ்டப்பட்டு காத்தால ஆரம்பித்து ராத்திரி வரைக்கும் நின்னுக்கிட்டே தொழில் பாத்து சம்பாதித்த வீடு, வாசல், கொஞ்சூண்டு காடு கரையெல்லாம் விட்டுட்டு ஓடிவிடக் கூடாது" என்று உறுதியானான்.

"எடுத்த முடிவு எடுத்ததுதான். மனுசனின் மயிர வழிப்பது மட்டும் தொழிலாக இருப்பது போல் பிணத்திற்கு சேவகம் செய்வதும் தொழிலாக மாறட்டுமே... நாங்க மட்டுமே செய்யணும் என்பது என்ன தலையெழுத்தா??? மனசுக்குப் பிடிச்சா எதையும் செய்யலாம். எனக்குப் பிடிக்கல... எங்களுக்கு பிடிக்கல.. பிடிக்கவும் பிடிக்காது" என்று முணங்கினான்.

சப்தம்கேட்டு விழித்த தனது மகனை வாஞ்சையாகத் தடவிக் கொண்டே கூறினான் : "இந்த உலகம் ரொம்ப பெருசுடா மகனே... வாழ்வோம்டா" என்று கூறிக் கொண்டே "புதிய ப்யூட்டி பார்லரை எந்த ஊரில் திறக்கலாம்" என்று சிந்திக்க ஆரம்பித்தான் கோபாலு....

***
நன்றி.
 
Sriraj

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
13

வணக்கம்.

அசோக் குமாரின் வைராக்கியம்

அருமையான கருத்துள்ள அருமையான கதை. வலியோர்கள் எளியோர்களை என்று தான் விட்டு வைத்து இருக்கிறார்கள் இன்று விட்டு வைப்பதற்கு. வலியோர்கள் வலியோர்களாகவே இருக்க எளியோர்கள் எளியோர்களாகவே இருக்க வேண்டும் என்கிற கருத்தை உடைக்கும் விதமாய் அமைந்துள்ளது இச்சிறுகதை.

மனதிற்கு பிடித்ததை நல்விதமாக செய்வது தான் என்றும் நல்லது. என்ற கருத்தை அழகாய் முன்னிருத்தி கூறும் சிறுகதை.

அருமையான கதை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அன்புடன்
ஸ்ரீராஜ்
 
Jemba

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 8, 2021
Messages
5
அதிகம் யாரும் தொட்டுப் பார்க்காத கதைக் களம்.நேர்த்தியான நடை.
 
ASHOKKUMAR PAPANASAM

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
10

மிக்க நன்றி
 
VELMURUGAN

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 9, 2021
Messages
1
அருமையான எளிய மொழிநடை.. கிராம பேச்சு வழக்கிலேயே எழுத்துநடையாக இருப்பது இன்னும் சிறப்பு. "வாழ்த்துகள்". இனியும் உங்கள் படைப்பு தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இன்றும் எங்கள் தேனி மாவட்ட கிராமப் புறங்களில் காணும் காட்சிகள் தங்களின் கதை போக்கில் காண முடிகிறது.. சமூகத்தில் இந்நிலை மாற வேண்டும்.. ஏற்றத்தாழ்வற்ற சமூகநீதி காணும் நாளை நோக்கி...

🖍️மணீஸ்.
 
PriyaAshok

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
1
அருமை. வட்டார வழக்கில் எழுதியதால் கதையோடு இயல்பாக ஒன்ற முடிகிறது. வாழ்த்துக்கள்.
 
POORANI

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
1
சிறப்பான கதை. தெளிந்த நீரோடை போன்ற மொழிநடை. அடித்தட்டு மக்களின் வாழ்வியல் மற்றும் தொழிலை மிக இயல்பாக கூறிய விதம் சிறப்பு. வாழ்த்துக்கள்
 
Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
Nice story...

கிராம மொழி வழக்கில் இயல்பான கதை... இன்னும் இப்படி எல்லாம் பல இடங்களிலl நடக்க தான் செய்யுது...

எளியோர் எப்போதும் எளியோராக, வளியோர்களின் கீழ் இருந்தால் பிரச்சனை பண்ணாமல் இருப்பாங்க.. இல்லனா இப்படி தான்..

அடுத்தவன் முன்னேறினால் பிடிக்காத ஆட்கள்...

எதுவும் மனதுக்கு பிடித்தால் செய்ய முடியும் என்ற கருத்தை கடைசி வரை கோபால் மாற்றி கொள்ளாதது சூப்பர்...

வெற்றி பெற வாழ்த்துகள்
 
Top