அத்தியாயம் 21
இந்த கேசவன் ஒரு கொடூரமான கொலைகாரன் மேம். அவன தனியா சந்திக்கிறது, அவ்ளோ சேஃப் இல்ல. மிஸ்டர் செம்பன் பர்சனலா ரிக்யூஸ்ட் பண்ணி கேட்டதால தான் அலோ முடியல. பட், நீங்க அவங்கிட்ட தனியா முடியாது”, ஜெயிலர் சொன்னதும், கேள்வியாக பார்த்தாள் சுவாதி.
இந்த கான்ஸ்டபிள் மட்டும் ஒங்க கூட இருப்பாரு”, ஜெயிலர் சொல்ல, சுவாதி மறுக்கவில்லை.
அந்த தனி அறையில், சாரதி கேமராவுடன் நின்றிருக்க, அருகில் நின்றிருந்தாள் சுவாதி. உடன் ஜெயிலரும் நின்றிருந்தார்.
கான்ஸ்டபிள் கேசவனை அழைத்து வந்தார்.
உக்காருயா”, ஜெயிலர் சொல்ல கேசவன் இருக்கையில் அமர்ந்தான்.
சுவாதி எதிர் இருக்கையில் அமர்ந்தாள். சாரதி சரியான இடத்தில், சரியான திசையில் கேமராவை நிற்க வைத்தான்.
இந்த பேட்டி டிவியில வருமா? இல்ல, ஒடிடில வருமா மேடம்?”, கேசவன் மிக இயல்பாக கேட்டான்.
யூ டியூப்ல வரும். மூடிட்டு, கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுயா”, ஜெயிலர் கண்டித்தார்.
இல்லீங்க் சார், நாம்பேசுறது டிவியில வந்தா, என் மாமனார் வீட்லயும் பாப்பாகல்ல!! ஒண்ணுக்கத்த பையன்னு சொன்ன வாயெல்லாம் மூடிக்குமல்ல. அதுக்குத்தே”, கேசவன் சொன்னான்.
ஒனக்கு ஆஸ்கார் குடுக்குறாங்க பாரு!! ஒடப்பொறந்தான் புள்ளைக்க தலியறுத்துபோட்டு இதுல பெருமை வேற!!“, சொன்ன ஜெயிலர்,
இவன் வுட்டா பேசிட்டே இருப்பான் . நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்”, என்று சுவாதியிடம் சொன்னார்.
மிஸ்டர் கேசவன்,…. நீங்கதா மணிகண்டனை கொன்னதா, கோர்ட்ல ஸ்டேட்மென்ட் குடுத்துருக்கீங்க. ஏன் செஞ்சீங்க?”, சுவாதி கேட்டாள்.
இதென்னங்க கேள்வி? எங்குடும்பத்து கொலசாமிய தூக்கிட்டு போன தெருப் பொறுக்கி நாய அடிச்சு கொல்லாம, ஆராத்தி எடுப்பாகளாக்கு?”, கேசவன் குரலில் ஆவேசம் தெரிந்தது.
ஏலே!! கேக்குற கேள்விக்கு ஒழுங்கு மருவாதியான பதில் வரணும். இல்லன்னா, முட்டிய பேத்துப்புடுவேனாமா”, ஜெயிலர் சொன்னார்.
சார், ப்ளீஸ், நீங்க கொஞ்சம் வெளிய இருங்க”, சுவாதி ஜெயிலரிடம் சொன்னாள்.
இல்லீங்க் மேடம், ஒங்க பாதுகாப்புக்குத்தே……”, அவர் சொல்ல,
அதுக்குத்தா கான்ஸ்டபிள் இருக்குறாரல்ல!! எதாவதுன்னா கூப்புடுறேன் சார்”, சுவாதி சொன்னாள்.
ஜெயிலர் வெளியே செல்ல வேண்டியதாயிற்று.
கேசவன், ப்ளீஸ் உணர்ச்சிவசப்படாம ஒங்க ஸ்டேட்டஸ்ஸ தெளிவா சொல்லுங்க. அப்போதா ஒங்க நியாயம் பாக்குறவங்களுக்கு புரியும்”, சுவாதி சொல்ல,
சரிங்க மேடம்”, கேசவன் சொன்னான்.
வெளியே சென்ற ஜெயிலர் தன் அலைபேசியை எடுத்து டயல் செய்தார். அங்காள அம்மன் கோயிலில், மதிவாணனின் அலைபேசியின் திரை “மதுரை ஜெயிலர் காலிங்க்” என்று காட்டிய படி, ஒலித்தது.
சொல்லுயா? நா தவமிருந்து பெத்த பொண்ணு என்ன பண்ணிட்டுருக்குறா?”, மதிவாணன் கேட்டார். திரும்பி பார்த்த கௌசல்யா பயந்தாள்.
சொல்லுங்க, எதுக்கு கொலை பண்ணீங்க?”, சுவாதி கேசவனிடம் கேட்டாள்.
எங்களுக்குன்னு ஒரு குலப்பெருமை இருக்குதுங்க. அதிய நாங்க விட்டு குடுக்க முடியாதுங்க. எங்க பெருமையே எங்கூட்டு பொண்ணுங்கதே. எங்க பொண்ணுங்கள நாங்க குலசாமியா கும்புட்டுட்டுருக்றோம். அப்டியிருக்கையில அவள ஒருத்தன் தூக்கிட்டு போனா விட்டுருவோமுங்களா? நாஞ்செஞ்சது கொலை இல்லீங்க. எங்குல பெருமைய காப்பாத்த எங்க கொலசாமி செஞ்ச வதம். அது என் ரூபத்துல வதம் செஞ்சதுல எனக்கு பெருமைதானுங்க”, நிதானமாக சொன்னார் கேசவன்.
இந்த கொலைய செஞ்சதுல ஒங்களுக்கு கொஞ்சங்கூட குற்றவுணர்ச்சியே இல்லியா?”,
தப்பு செஞ்சாதானுங்கள குத்த உணர்ச்சி வரோணும். நாஞ்செஞ்சது தர்மமுங்க, தர்மம்”, கேசவன் சொல்ல, சுவாதி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
மணிகண்டனோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ட கோர்ட்ல படிச்சத கேட்டுருப்பீங்கன்னு நெனைக்கிறேன். கேக்குற ஒவ்வொருத்தரும் நடுங்குற மாதிரியான ரிப்போர்ட் அது. குறிப்பா, இறந்து போன மணிகண்டன் வாய்ல, பற்களே இல்ல. முகத்துல இடது கண்ணு இல்ல, வலது கை முழுசா துண்டிக்கப்பட்டிருந்தது. கால்கள் ஒடைக்கப்பட்டிருந்தது. இன்னும் பேசவும் கேக்கவும் கொலநடுங்குற மாதிரியான ஒரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அது. அவ்வளவு கொடூரமா ஒரு உயிர சித்திரவதை செய்து கொலை செய்றதுதா ஒங்க தர்மமா?”, சுவாதி இயல்பான குரலில் கேட்டாள்.
அரக்கன கொல்றது தான மேடம் தர்மம்? அதத்தா நானும் செஞ்சேன். இன்னைக்கு எங்க மனுசங்க முன்னால பெருமையோட தல நிமிந்து நிக்குறேன். அது போதும் எனக்கு”, கேசவன் சொல்லில் கோபம் இருந்தது.
ஒங்க ஸ்டேட்மென்ட் படி மணிகண்டன் காயத்ரிய தூக்கிட்டு போகல. காயத்ரி அவங்க விருப்பத்தோடதா மணிய சட்டப்படி மேரேஜ் பண்ணிருக்காங்க. அப்படின்னா நீங்க சொல்ற நியாயம் தப்பாயிருது இல்லீங்களா?”, சுவாதி கேட்டாள்.
என்னங்க மேடம் பேசுறீங்க. வெவரந்தெரியாத புள்ளைய காதல்ங்குற பேர சொல்லி கூட்டிட்டு போறது எதுக்குன்னு நெனைச்சீக? எங்க சொத்துக்காகத்தே. இவனுங்களுக்கு ஒழைச்சு வாழ நோவு மேடம். அதனாலதே எங்க எனத்து புள்ளைகள கூட்டிட்டு போயி வாழ்க்கையில செட்டிலாக திட்டம் போடுறானுக, பொறுக்க்கி பையலுக!!", பற்களை கடித்து வார்த்தைகளில் அழுத்தம் கூட்டினான் கேசவன்.
சுவாதி கேட்டுக் கொண்டிருந்தாள்.
இவனுக ஏய்ச்சி பொழைக்க, எங்க சாதிய கறையாக்குவானுக. நாங்க பாத்துட்டு ஒரசாம இருக்கோணுமா?”, சற்றே குரல் உயர்த்தினான் கேசவன்.
சுவாதி எதிர்பார்த்தது தான். அசையவில்லை.
லேய், என்ன கொரல் ஒயருது? தொண்டைக்குழிக்குள்ள லட்டிய வுட்டு ஆட்டிப்புடுவேன்”, கான்ஸ்டபிள் சொன்னார்.
கேசவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
சாரிங்க் மேடம், நீங்களே சொல்லுங்க, இந்த ஈனசாதி பையலுக எவனுக்காது, அவனுங்கள விட கொறஞ்ச சாதி புள்ளைக மேல காதல் வருதா? அவனுங்கள விட ஒசந்த எடத்து புள்ளைக மேலதா காதல் வருது. இதுலருந்தே தெரீல, இதெல்லாம் நாடக காதல் மேடம்”, இயல்பாக சொன்னவனை காணொளியில் பதிவு செய்து கொண்டிருந்த சாரதி, தனக்குள் வந்த கோபத்தை அடக்கினான்.
சுவாதி சிரித்தாள்.
பொட்டப்புள்ளைக மனச கெடுத்து, அதுக வாழ்க்கைய நாசமாக்குற பையலுகள அத அறுத்து கொல்லணும் மேடம்”, கேசவன் சொல்ல,
சோ, காயத்ரி மணிகண்டன லவ் பண்ணது ஒங்க பிரச்சின இல்ல. மணிகண்டன் ஒங்க சாதி இல்லங்குறது தா ஒங்க பிரச்சினை, இல்லியா?”,
ஆமா…….”, சத்தமாக சொன்னான் கேசவன். கதவை திறந்து கொண்டு ஜெயிலர் ஓடி வந்தார்.
எங்க ரத்தத்துல அடுத்த ரத்தம் கலக்குறது எங்களுக்கு அசிங்கம். அதனால தா அந்த அரிப்பெடுத்த ஓடுகாலி நாயையும், அவள இழுத்துட்டு ஓடுன பண்ணியையும் கொல்லணும்னு முடிவு பண்ணினேன். போனேன், வெட்டுனேன். ஆனா, அந்த நாற மொவா தப்பிச்சிட்டா. என்னைக்கு இருந்தாலும் அவளுக்கு எங்கையாலதே சாவு”, கேசவன் ஆவேசமாக சொன்னான்.
அடிங்க!! யார் முன்னால திமிரெடுத்து பேசுற? இவுக யாருன்னு தெரியும்ல. மதிவாணன் அய்யா மக”, ஜெயிலர் சொல்ல,
சார், ப்ளீஸ்”, என்று சத்தமாக சொன்னாள் சுவாதி. வியப்பாக பார்த்தான் கேசவன்.
சட்டென்று அமைதி நிறைந்தது.
நீங்க மதிவாணனய்யா மொவளா?”, கேசவன் கேட்டான்.
ஆம் என்று தலையசைத்தாள் சுவாதி. கேசவன் சிரித்தான்.
புரிஞ்சி போச்சிங்க, நீங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு புரிஞ்சி போச்சு. நீங்க கேளுங்க நா பதில் சொல்றேன்”, உற்சாகமாக சொல்லி கேசவன் சிரித்தான்.
ஆனா எனக்கு புரீல, நீங்க என்ன சொல்றீங்க?”,
கேசவன் சிரிப்புக்குள் பொதிந்து கிடக்கும் அர்த்தம் சுவாதிக்கு விளங்கவில்லை. சாரதி சுதாரித்தான்.
சுவாதி,… நமக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷந்தா இருக்கு”, சாரதி சொல்ல,
ஒகே, கேசவன், ரிலாக்ஸ், ஒங்க ஃபேமிலிய பத்தி சொல்லுங்க!!”, சுவாதி கேட்டாள்.
ஊருக்குள்ள பேர் வாங்கி வாழ்ந்த ஜமீன் பரம்பரை மேடம் எங்க குடும்பம். மன்னராட்சி நடந்துட்டுருக்கும் போது, எங்க குடும்பத்தை சேந்த பெரியவக, மன்னராவே இருந்துருக்காக. யுத்தத்துல நெஞ்சுல விழுப்புண் பட்ட வீர பரம்பரை மேடம். ", கேசவன் சொல்ல,
ஷப்பா", சலித்துக் கொண்டான் சாரதி.
எங்க ஐயனை பெத்த அப்பாறுக்க அப்பாறுக்க அப்பாறு(அப்பா வழி தாத்தா=அப்பாறு) அந்த காலத்துல ஆனை கட்டி போரடிச்சாக. நாங்கலாம் ஆண்ட பரம்பரை மேடம்", கேசவன் கம்பீர குரலில் சொல்ல,
ப்பூஊஊஊ", சொல்லி சத்தமாக சிரித்தான் சாரதி. அவனை திரும்பி முறைத்தாள் சுவாதி.
சாரி, சா,... சாரி சுவாதி. முடில", சிரிப்பினூடே சொன்ன சாரதி, சிரிப்பை அடக்க முயன்று, கேசவனை பார்க்க, மீண்டும் சிரிப்பு பீறிட்டு வெடித்தது.
சத்தமாக சிரித்தான் சாரதி. சுவாதியுடன் கேசவனும் முறைக்க,
சாரி, சாரி", என்றபடி சிரிப்பை அடக்கி முடிவுக்கு கொண்டு வந்தான் சாரதி.
கேசவன் சார் பிளீஸ், ஒங்க குடும்பம் பத்தின்னா, ஒங்க அப்பாரு அப்பாருக்க அப்பாரு பத்தியில்ல. ஒங்க ஒயிஃப் ஒங்க பையன், அண்ட் ஒங்க அண்ணன் ஃபேமிலி பத்தி சொல்லுங்க", சுவாதி கேட்டாள்.
என் பொஞ்சாதி பேரு ரத்தினம் மேடம். எனக்கு ரெண்டு பையனுங்க. ஜமீன் பரம்பரையாச்சே!! அறிவு சொல்லி குடுத்து தா வரோணுமா?! ரெண்டு பேரும் படிக்காமலேயே ஃபர்ஸ்ட் ராங்க் எடுப்பானுக",
ஒங்க பசங்க ரெண்டு பேரும் எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க?", பதிலை தெரிந்து கொண்டே கேள்வியை கேட்டாள் சுவாதி.
பள்ளிக்கூடம் இல்லீங்க, காலேஜ்ல படிக்கிறானுக. அதுவும் அமெரிக்கா காலேஜ்ல",
ஓ, வாவ், சூப்பர், பட்,.... நீங்க ஒரு புண்ணாக்கு வியாபாரின்னு சொன்னாங்க. பசங்கள அமெரிக்காவுல படிக்க வைக்கிறதுக்கு ஃபினான்ஷியலா எப்டி சமாளிக்கிறீங்க?",
சுவாதி கேட்டாள்.
புண்ணாக்கு யாவாரந்தானுங்க. ஆனா, எங்க அப்பாறு(தந்தை வழி தாத்தா) ஜமீனுங்க. அதனால் சொத்து பத்துக்கொண்ணும் கொறைவில்லீங்க", கேசவன் சொல்ல, சுவாதி தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
நீங்க இந்து சகோதர சகோதரிகள் இயக்கத்துல மெம்பரா இருக்கீங்கல்ல!!",
ஆமாங்க, நாமெல்லா இந்துன்னு சொல்லிக்க பெருமை படோணுங்க. நா மட்டுமில்லீங்க!! எங்க ஐயனும், அப்பாறும் இந்த இயக்கத்தில் மெம்பரா இருந்தாங்கோ. அம்புட்டு ஏனுங்க? எங்க அண்ணங்கூட இயக்கத்தில் இருக்கிறாருங்க", கேசவன் சொன்னான்.
சோ, இந்து சகோதர சகோதரிகள் இயக்கத்தில் நடக்குற எல்லா கூட்டமும் அட்டென்ட் பண்ணிடுவீங்கல்ல",
கண்டிப்பா, அத விட முக்கியமான சொல்லி வேறென்னங்க இருக்கு?",
சோ,... இந்த இயக்கம் அமெரிக்காவுல நடத்துற கூட்டங்கள்ல கூட கலந்துட்டுருக்கீங்க, இல்லீங்களா?
அட, இதெப்படிங்க ஒங்களுக்கு தெரியும்? இந்த ஒலகத்தின் பூர்வ குடிகள் இந்துக்கள் தாங்க. ஒலகம் பூரா இந்துக்கள் இருக்கிறாங்கல்ல!! எங்கெங்க கூட்டம் நடக்குதோ, அங்கெல்லாம் போயிருக்கேனுங்க", பெருமை பொங்க சொன்னார் கேசவன்.
ம்ம், இந்த வீடியோ கூட, அந்த மாதிரி கூட்டத்துல நீங்க கலந்துகிட்ட வீடியோ தான் இல்ல?!", சுவாதி கேட்டாள்.
கேசவன் கண்கள் சுருக்கினான். வழக்கை சரியான திசைக்கு திருப்பிய யூ ட்யூப் வீடியோவை, தன் அலைபேசியில் இயக்கினாள் சுவாதி.
அட, இதுவா? பையலுகள காலேஜ்ல சேத்துபோட்டு நேரா, அமெரிக்கால நடந்த எங்க இயக்க கூட்டத்துக்குதே போனேன். நம்ம எனத்துக்காக போராடுற போராளியா வாழுறது தான நமக்கு பெருமை", சொல்லி தன் மீசையை முறுக்கி கொண்டான் கேசவன்.
ம்ம், கண்டிப்பாங்க!!", சுவாதி சொன்னாள். சாரதி தனக்குள் சிரித்து கொண்டான்.
எங்க ஃபியூச்சர் சேனல் பார்வையாளர்களுக்காக ஒங்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!", சுவாதி சொல்ல, கேசவன் கை கூப்பினான்.
கான்ஸ்டபிள் ஜெயிலரை அழைத்து வந்தார். கேசவனை அறையை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.
அறைக்குள், கேமரா ஒயர்களை சுற்றிக் கொண்டிருந்த சாரதியின் காதுக்குள்,
கேமராவ ஆஃப் பண்ணாத", என்று சொன்ன சுவாதியும், ஜெயிலருக்கு பின்னால் அறையிலிருந்து வெளியே சென்றாள்.
புரியாமல் பார்த்த சாரதியும் கேமராவுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.
அறைக்கு வெளியே,
என் பேட்டி எப்போ வருங்க மேடம்?", கேசவன் சுவாதியிடம் கேட்கும் போது, திடீரென்று இளவயது வாலிபன் ஒருவன் ஓடி வந்து கேசவனை மிதித்து தள்ளினான்.
கேசவன் தடுமாறி சுவற்றில் மோதி கீழே விழுந்தான்.
சில சிறைக் கைதிகள் கூடினர்.
அப்டித்தா வாயிலேயே போடு முருகா", கூட்டத்துக்குள் ஒருவன் சத்தமாக சொன்னான்.
யோவ், கான்சு, அவன புடிய்யா", ஜெயிலர் சொல்ல, கான்ஸ்டபிள் மிரண்டு பின் வாங்கினார்.
சாரதி அதிர்ந்து நின்றான்.
டேய், என்னடா வாய பொளந்துட்டு நிக்கிற? நடக்கிறத ஷூட் பண்ணு", சுவாதி சாரதி காதுக்குள் சொல்ல, அதிர்ச்சியோடு கேமராவை இயக்கினான் சாரதி.
கீழே விழுந்து கிடந்த கேசவனை தூக்கி நிறுத்தி, அவனது அடி வயிற்றில் ஓங்கி குத்தினான் அந்த இளவயது வாலிபன்.
யோவ், போயி புடிய்யா", ஜெயிலர் கான்ஸ்டபிளை ஏவினார்.
சார், முருகன் பொல்லாதவன் சார். குறுக்க போனா வெறியாட்டம் ஆடிருவான்", என்றார் கான்ஸ்டபிள்.
சுவாதி சிரித்தாள்.
போயா", என்ற ஜெயிலர் தன் அலைபேசியை எடுத்து டயல் செய்தார். அதற்குள் ஓடி வந்த சில காவலர்களும் முருகனை பார்த்து அதிர்ந்து நின்றனர். எச்சில் விழுங்கினர்.
முருகன் கேசவனை தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்க, கேசவனின் மூக்கிலும், புருவத்திலும் இரத்தம் கசிந்தது.
போடு முருகா, விடாத!!", கைதிகள் கூட்டம் கத்தியது.
சார் காப்பாத்துங்க சார், பிளீஸ், காப்பாத்", சொன்ன கேசவனின் வாயில் குத்தினான் முருகன். வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.
ஆண்ட பரம்பரையோட வீரம் அலறுது பாரு", சுவாதி சாரதியின் காதுக்குள் சொன்னாள். அதிர்ந்து திரும்பி பார்த்தான் சாரதி.
டேய், அங்க பாத்து ஷூட் பண்றா", சுவாதி சாரதியின் தலையில் தட்டி சொல்ல, கேமரா சரியான திசையில் இயங்கியது.
சில நொடிகளில் காவலர்கள் பலரும் ஓடி வர, அங்கு நின்று கொண்டிருந்த காவலர்களும் சேர்ந்து முருகனை பிடித்து இழுத்து, கேசவனிடம் இருந்து பிரித்தனர்.
கண்களில் வழிந்த நீர், கன்னங்களில் கலந்த ரத்தத்தோடு கலந்து ஓட, அங்கங்கு காயங்களுடன், வாயும் உடலும் கோணலாக நின்றிருந்த கேசவனை காவலர்கள் இருவர் பிடித்திருந்தனர்.
பல காவலர்களால் பிடிக்கப்பட்டிருந்த முருகன் சுவாதியை பார்த்து சிரித்து கண்ணடிக்க, சுவாதி அவனை பார்த்து மௌனமாக சிரித்தாள். இவர்களின் சம்பாஷனைகளை கேமரா வழியாக பார்த்த சாரதி அதிர்ச்சி கொண்டாலும், அதிர்ச்சி விலகாமல் தன் கடமையை தொடர்ந்தான்.
ஒரு சில நொடிகளுக்குள் சூறாவளி, சுழன்று விட்டு விடைபெற்ற முருகனை, காவலர்கள் சிறைக்கு இழுத்து செல்ல, கேசவன் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
சாரி மேம், ஒங்களுக்கு ஒண்ணும் ஆகலியே", ஜெயிலர் சுவாதி யிடம் கேட்டார்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல சார்",
இது ஜெயிலுக்குள்ள அப்பப்ப நடக்குற மோதல் தா. நீங்க கெளம்புங்க", ஜெயிலர் சொல்ல, சுவாதியும் சாரதியும் வெளியேறினர்.
சிறைச்சாலை வாசலில்,
என்ன சுவாதி நடக்குது இங்க? அந்த முருகன் ஒன்னைய பாத்து சிரிச்சத நா பாத்தேன்", சாரதி சொல்ல,
முருகன் ஒரு கஞ்சா கடத்தி விக்குறவன்னு போலீஸ் அறிக்கை சொல்லுது. கேசவன் சாதி வெறி புடிச்சு மணிகண்டனை கொடூரமாக கொலை செஞ்சவன்னு அதே போலீஸ் ரெக்கார்டு தா சொல்லுது. ஆஃப்டிரால் வயித்து பொழப்புக்கு கஞ்சா விக்கிறவன் கேசவனை அடிக்கிறான். கேசவன் பயந்து நடுங்குறான். அந்த சீன் நம்ம கேமரால ரெக்கார்டாயிருக்கு. இப்போ புரியுதா? என்ன நடந்துச்சுன்னு!!", சுவாதி கேட்க, கண்கள் தட்ட மறந்து உறைந்து நின்றான் சாரதி.
தென்னங்கீற்றுகளுக்கு நடுவே, சாயங்கால நேரத்து சூரியன் சிதறிக் கொண்டிருந்தது. தேனியின் ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்தாள் சந்தியா. அவள் முன்னே வேகமாக வந்து நின்றது செழியனின் பைக்.
ஆஃபீஸ் போகலியா?", செழியன் கேட்டான்.
இல்லை என்பதாக தலையசைத்தாள்.
பெருமூச்சு விட்டு கொண்டான் செழியன்.
வீட்ல என்ன சொல்லிட்டு வந்த?",
ஃப்ரெண்ட் மேரேஜ்ன்னு சொல்லிட்டு வந்துருக்கேன். ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு போகணும்", சந்தியா சொன்னாள்.
ம்ம், ஏறு", அவன் சொன்னான்.
என்கிட்ட ஸ்கூட்டி இருக்கு", என்றவள் தன் ஸ்கூட்டியில் ஏறிக் கொண்டாள்.
செழியன் சிரித்தான்.
துரையரசனின் வீட்டு வாசலில் பைக்கும் ஸ்கூட்டியும் நின்றது.
வாங்க, வாங்க!", அவர்களுக்காகவே காத்திருந்தவன் போல் ஓடி வந்தான் துரை.
துரையை கண்ட சந்தியா தயங்கி, செழியன் அருகில் நெருங்கி நின்றாள்.
இவுக!!", சந்தியாவை காட்டி கேட்டான் துரை.
இது சந்தியா, என்", செழியன் முடிக்கும் முன்,
ஃப்ரெண்ட்", முந்திக் கொண்டு சொன்னாள் சந்தியா.
அவளை பார்த்து சிரித்த செழியனை உதடு சுழித்து முறைத்தாள் சந்தியா.
வாங்க", துரையின் அழைப்பு இருவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றது.
வீட்டிற்குள் நுழைந்த சந்தியா ஆச்சரியமாக வீட்டின் வரவேற்பறையை சுற்றி பார்த்தாள். பிரம்மாண்டமான அந்த வரவேற்பறைக்கு வலப்புறம் இருந்த சமையலறையை பார்த்து வாய் பிளந்து நின்றாள் சந்தியா.
ஏ, வாய மூடுறி லூசு", அவளது காதுக்குள் செழியன் சொன்னான்.
இந்த அடுக்களைல பாதி கூட எங்க வீடு இருக்காது செழியா", சந்தியாவும் மிக மெல்லிய குரலில் சொன்னாள். செழியன் சிரித்தான்.
ஓர் அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் புவனேஸ்வரி.
ம்மா, நாஞ்சொன்னேனே இது செழியன், இவுக சந்தியா", தன் தாய் புவனாவுக்கு இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான் துரை.
வாங்கய்யா!! ஒக்காருங்க, இந்தாடி, ஏ,... செவ்வந்தி, காஃபி கொண்டா", புவனா சற்றே சத்தமாக சொன்னாள்.
நால்வரும் சோஃபாவில் அமர்ந்தனர்.
கொடி எங்க காணோம்?", சந்தியா கேட்டாள்.
என்னத்தன்னு சொல்றதும்மா? இந்த வூட்ல பதினேழு வேலைக்காரவுக இருக்காக. வூட்டு வேலையெல்லா அவுக பாத்துக்குவாக. நீ இந்த வூட்டு மருமகப்பொண்ணு. அவுகள வேல ஏவுற வேலைய மட்டும் நீ செஞ்சா போதும்னு எம்புட்டோ சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்குறா. அம்புட்டு வேலையும் இழுத்து போட்டு செய்றா. இப்பொ கூட காஞ்ச துணிய எடுத்துட்டு வாரேன்னு, மொட்டை மாடிக்கு போயிருக்றா”, புவனா பெருமூச்சு விட்டாள்.
வீட்டில் வேலை செய்யும், செவ்வந்தி தேனீர் கொண்டு வந்து தந்தாள். சந்த்யாவும் செழியனும் எடுத்து கொண்டனர்.
இன்னைக்கு கூட அவுக பேரென்ன?,.......”, புவனா யோசிக்க,
மதிவாணன்”, சொன்னான் துரையரசன்.
ஆமாமா, மதிவாணன் அவுக வூட்ல எதோ ஹோமம் வளக்குறாகன்னு கூப்ட்டாக. எம்புட்டோ சொல்லி பாத்தேன், ஒம்புருசன கூட்டிட்டு போட்டு வாண்டு.. ம்ஹூம், அசைஞ்சு குடுக்கலியே”, புவனா சொல்ல,
பொறந்த ஊருக்கு கூட வர மாட்டேன்னு சொல்ற அளவுக்கு அவளுக்கு அப்டி என்ன வெறுப்புன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது மச்சான்”, துரை சொல்ல,
வெறுப்பென்ன வெறுப்பு? இதெல்லா கொழுப்பு செய்ற வேலையாக்கு. செல சமயத்துல இவ அடம்பிடிக்கிறத பாத்தா எனக்கு கடுத்த கோவம் வந்துருது ஆமா. இந்தா,.. இந்த பையலாலதே அவள அதட்டி பேச முடியாம இருக்றேன்”, புவனா சொன்னாள்.
இல்லீங்ம்மா, கொடி அம்புட்டு புடிவாதக்காரியெல்லா இல்ல. அங்க, அவுக வீட்ல, புறக்கணிப்பையும், கொடுமையையும் மட்டுமே அனுபவிச்சு வளந்தவ. அதேன், அந்த கசப்ப ஞாவகத்துக்கு கொண்டு வராம இங்ஙனயே கெடந்துரலாம்னு நெனைச்சிருப்பா”, சந்தியா சொன்னாள்.
அதுக்காக குடும்பம், கூட பொறந்ததுக, படிச்சதுகன்னு எல்லாரையும் தல முழுகிற முடியுமா? அவளுக்கு ஆத்தா இருந்திருந்தா, இதையெல்லா ஒங்கிட்ட பேச வேண்டியதில்ல தாயி. அவகிட்ட பேசி கொஞ்ச சரிகட்டி வுட பாரு. அவ கலகலன்னு இருந்தால்ல என் வம்சம் செழிக்கும்”, புவனா சொன்னாள்.
ம்ம், நா பேசுறேம்மா”, சந்தியா சொல்லும் போது,
சந்தியாக்கா”, உற்சாகம் நிறைந்த கொடியின் குரல் கேட்டு நால்வரும் திரும்பினர்.
மாடிப்படியில் வலது கையிலும் இடது கையிலும் துணிகள் தொங்கி கொண்டிருக்க, இன்ப அதிர்ச்சியில், ஆழ்ந்து நின்று கொண்டிருந்தாள் கொடி.
கொடி”, சந்தியாவின் இதழ்கள் மௌனமாய் அழைக்க, மாடிப்படிகளில் வேகமாக ஓடி இறங்கிய கொடியை நோக்கி, எழுந்து சோஃபாவை சுற்றி சென்றாள் சந்தியா. வேகமாக ஓடி வந்த கொடி, சந்தியாவை கட்டிக் கொள்ள, சந்தியா கொடியை அணைத்து கொள்ள, கொடியின் கைகளில் விழுதுகளாக தொங்கி கொண்டிருந்த துணிகள், தரையில் விரிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த தரை விரிப்பானின் மீது விழுந்தது.
எழுந்து சிரித்த செழியன் கண்களில் ஈரம் தாங்கினான். கொடியை பார்த்த துரை அவளது விழிகள் சிந்தும் நீரின் பாரம் தாங்கினான்.
பாலைவனக் குயிலொன்று
பாசத்தின் ஈரம் கண்டது
பாரம் குறையாதோ?
பந்தம் தாங்கியவன் விழிகள்
ஏக்கம் கொண்டது...
தொடரும்........
சக்தி மீனா,......