• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷15

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
IMG_20230316_231618.jpg

அத்தியாயம் 15

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, பூனே மாகாணத்தின் பிம்ப்ரி சிஞ்சுவர்டு நகரம் தொழிற்சாலைகளும், நோய் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும், கணினித்துறை நிறுவனங்களும் பரவலாக உள்ள பகுதி.

பிம்ப்ரி சிஞ்சுவர்டின் புறநகர் பகுதியில், மருந்து தொழிற்சாலையில் அடுக்கி வைத்த மருந்து பெட்டிகள் போல, வீடுகள், மிக நெருக்கமாக அமைந்திருக்கும், குறுகலான தெரு ஒன்றில் நடந்து கொண்டிருந்த தினேஷுடன் நடந்து வந்து கொண்டிருந்த காயத்ரியின் கையில் பெண் குழந்தை ஒன்று, ரோஜாப்பூவை போல் சிரித்துக் கொண்டிருந்தது.

ஏன் தினேஷ் இந்த மாதிரி எடத்துல இருக்க?! நீ நினைச்சா சிட்டியில ஒரு நல்ல அபார்ட்மெண்ட்லயே இருக்கலாமே!!", காயத்ரி கேட்டாள்.

தினேஷ் சிரித்தான்.

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?!",

மீண்டும் சிரித்தான்.

ஹலோ, கேள்வி கேட்டா பதில் சொல்லணும்",

இங்க இருக்கிற மனுஷங்களுக்கும் எனக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. அதான் இங்க இருக்கேன்",

என்ன அது?! தமிழ் பேசுறதா?",

மீண்டும் சிரித்தான்.

கடுப்ப கெளப்பாதீங்க தினேஷ்",

இந்த இடத்துக்கு பேரு ஜோபடாபட். தமிழ்ல சேரி. ஸ்கூல், கோயில், மால் மாதிரியான பொதுவிடங்கள்ல, இங்க இருக்கிற ஜனங்களுக்கு மட்டும், தண்ணி குடிக்கிறதுக்கு ஸ்பெஷலா தனி பானை இருக்கும். அதான் இவங்களுக்கும் எனக்குமான ஒத்துமை", என்றவன் காயத்ரியின் கையில் இருந்த குழந்தையை நோக்கி கை நீட்டினான். குழந்தை அவனது கைக்கு தாவியது. காயத்ரி திகைப்புடன் பார்த்தாள்.

இந்த சாக்கடை கொஞ்சம் பெருசு. பார்த்து தாண்டணும்", காயத்ரியிடம் சொல்லி விட்டு, சாக்கடையை தாண்டிய தினேஷை வியப்பாக பார்த்து, பின் நிதானமாக சிறு மடை போன்ற, சற்றே அகலமான சாக்கடையை தாண்டி அவனுடன் நடந்தாள் காயத்ரி.

யாரு தினேஷ்? ஃப்ரெண்ட்டா?", வழியில் வந்த ஒருவன் கேட்டான்.

ஆமா ப்ரோ, நா வேலை செய்ற ஆஃபீஸ்ல வேலை செய்றாங்க ", என்றபடி அவனை கடந்து நடந்தான் தினேஷ்.

வந்து ஒரு மாசத்துல ப்ரண்டு புடிச்சிட்டியே!! சூப்பர் தினேஷ்", காயத்ரி சொன்னாள்.

வந்து ஒரே மாசத்துல காயத்ரியோட ஃப்ரெண்ட்ஷிப்பே கிடைச்சிருக்கு. இவனுங்க ஃப்ரெண்ட்ஷிப் என்ன பிரமாதம்?!", சொல்லி சிரித்தான். அவனை முறைத்தாள் காயத்ரி.

சிரிப்பு வந்தா சிரிச்சுடு காயத்ரி", என்றான்.

சிரிக்கிறதா? நா மொறைக்கிறேன்", என்றாள்.

சிரிப்பை அடக்குனா தா மொறைக்க முடியும். அதான் அடக்காதங்குறேன்", சொல்லி விட்டு முன்னால் நடந்தவனை, வியப்பாக பார்த்தவள் முகத்தில் தன்னிச்சையாக சிரிப்பு பூத்தது.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீடுகளின் அடுக்கில், மேல் மாடி முதல் தளத்துக்கு, படியேறினான் தினேஷ். உடன் காயத்ரியும் ஏறினாள்.

யம்மோ, அண்ணே வந்துட்டான்", தினேஷை வீட்டு வாசலில் பார்த்தவுடன் குரல் கொடுத்த இளம்பெண் ஒருத்தி, அவனுடன் வந்த காயத்ரியை பார்த்து திகைத்து, பின் சம்பிரதாய சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

தினேஷ் கையில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தவள் கண்கள் சுருக்கினாள்.

அதிர்ந்து நின்றாள்.

உள்ள வா காயத்ரி", அழைத்த படி வீட்டுக்குள் வந்தான் தினேஷ்.

கையில் தேநீர் கோப்பையுடன், சமையலறையில் இருந்து வந்த மூப்படைந்த தினேஷின் தாய் லட்சுமி, இவர்களை பார்த்ததும் வாயடைத்து நின்றாள்.

அம்மா, இவங்க காயத்ரி, எங்க ஆஃபீஸ்ல வேலை செய்றாங்க", காயத்ரியை அறிமுகம் செய்து வைத்தான் தினேஷ்.

வாம்மா, உக்காரு", என்றவள்,

ஏ, அந்த சேரெடுத்து போட்றி", என்று தன் மகளை ஏவினாள்.

உடனே பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை எடுத்து போட்டாள் அந்த இளம்பெண்.

இது கமலி, என் சிஸ்டர்", தினேஷ் அந்த இளம்பெண்ணை காயத்ரியிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

இரு பெண்களும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர்.

நீ கேட்ட எல்லா காயும் வாங்கிட்டு வந்துட்டேன். சரியா இருக்கான்னு பாரு. இந்த பாச தெரியாத ஊர்ல ஒவ்வொரு பொருளையும் தேடி தேடி வாங்கிட்டு வர்றதுக்குள்ள, மண்ட காஞ்சு போகுது புள்ள", சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்த தினேஷின் தந்தை, தேவேந்திரன் காயத்ரியை பார்த்து திகைத்து பின் சிரித்தார்.

அப்பா, இவ காயத்ரி, இவளும் நம்மூர்தே. என்கூட ஆஃபீஸ்ல ஒண்ணா வேலை செய்றா. இது அவளோட கொழந்த. பேரு மோனிகா", என்று காயத்ரியையும் அவளது குழந்தையையும் அறிமுகம் செய்து வைத்தான் தினேஷ்.

அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கொழந்த", லட்சுமி கேள்வியாக பார்த்தாள்.

மணி சாகும் போது நா த்ரீ மந்த்ஸ் பிறக்னண்டா இருந்தேன்", காயத்ரி சொன்னாள்.

உக்காரும்மா", என்றார் தேவேந்திரன்.

காயத்ரி உட்கார்ந்தாள்.

ஏ, என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்கிறவ, புள்ளைக்கு காப்பி தண்ணி குடு", மனைவியிடம் சொன்னார் தேவேந்திரன்.

லட்சுமி மகனுக்காக கொண்டு வந்த தேநீரை காயத்ரி கையில் கொடுத்தாள்.

ஐவரும் குடித்து முடித்த தேநீர் டம்ளர்களை தரையில் வைத்தனர்.

லட்சுமி குழந்தை மோனிகாவுக்கு பால் ஊட்டினாள்.

ச்சீ, என்ன மனுச சென்மங்களோ, பெத்த புள்ள தாலியறுத்தாலும் பரவால்ல, தான் மட்டும் பெரிய புடுங்கின்னு நிரூபிக்கணும். இவங்கள எல்லாம் கழுவுல ஏத்தணும்", கமலி கோபமாக சொல்ல,

ஏ, வாய வெச்சுட்டு இருக்க மாட்ட?", லட்சுமி அதட்டினாள்.

அவ சரியாதனம்மா பேசுறா? நா தப்பா எடுத்துக்கல", காயத்ரி சொன்னாள்.

குழந்தையை தரையில் உட்கார வைத்தாள் லட்சுமி. அருகில் அமர்ந்து குழந்தையை கொஞ்சி விளையாட்டு காட்டினாள் கமலி.

செத்தா நீயும் பொணந்தே. நானும் பொணந்தே. அது இங்க எவனுக்கு தாயி புரியுது?! ", அங்கலாய்த்து கொண்டார் இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்த தேவேந்திரன்.

அந்த பொணத்தை கூட அவங்க அவங்க சுடுகாட்டுலதா ப்போ பொதைக்கிறாக. மனுசன் சாவுல கூட, அவுக குடி கௌரவத்தை சாவ வுடாம பாத்துக்குறாக", என்றாள் கமலி.

இந்த ஊர்ல அந்த மாதிரி வித்தியாசமெல்லா இல்ல ஆத்தா. மனுசங்கள மனுசனா பாக்குறாக", தேவேந்திரன் சொல்ல,

அப்படின்னு யார் சொன்னாக?", கமலி கேட்டாள்.

காயத்ரி தினேஷை பார்த்து கண்கள் சுருக்கினாள்.

அப்பா இங்க, மார்க்கெட்க்கு மட்டுந்தே போயிட்டு வருவாக. அவுகளுக்கு பெருசா வெவரம் தெரியாது. அதான் இப்புடி பேசுறாக", என்றான் தினேஷ்.

இங்க மட்டுமில்லீங்கய்யா!! எல்லா ஊர்லயும், எல்லா நாட்லயும், ஒலகம் பூராவும் மனுசனுக்கு மனுசன் வித்தியாசம் பாக்குறவங்க இருக்காங்க. இன வெறி, சாதி வெறி, மத வெறி, நிற வெறி, குல வெறி, குடி வெறி, குடிகாரன் வெறின்னு எல்லா வெறியும் ஒலகம் பூராவும் இருக்கு", என்றாள் காயத்ரி.

இல்லாத்தா, இந்த ஊர் ஆளுங்ககிட்ட அப்படி ஏதும் தெரீல", வெள்ளந்தி தனமாக சொன்னார் தேவேந்திரன்.

ஆமா, காமாலைக்காரனுக்கு வெளுத்ததெல்லாம் பாலாம்", என்றாள் லட்சுமி.

என்னடி பழமொழிய மாத்தி சொல்ற?", இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்த தேவேந்திரன் சொல்ல,

எல்லாஞ்சரியாத்தே சொல்றேன். ஒனக்கு அந்த கொலைகாரப்பைய பாண்டியனே சிநேகிதன். அப்படின்னா ஒனக்கு காமாலை இல்லாம வேற என்னய்யா?", லட்சுமி கண்டிப்பான குரலில் தேவேந்திரனிடம் சொன்னாள்.

எந்த பாண்டியன்?", காயத்ரி சந்தேகத்துடன் கேட்டாள்.

அதே பாண்டியன் தா", தினேஷ் சொல்லி அழுத்தமாக பார்த்தான்.

காயத்ரியின் கண்கள் கோபக்கனலை ஏந்திக் கொண்டன.

அந்த கொலைகாரப் பையலால எம்புட்டு குடும்பம் நாசமாவிருக்கு தெரியுமா?! எம்புட்டு பொம்பள புள்ளைக தாலியறுத்துருக்கு. எம்புட்டு சனம் சொந்த ஊர்ல வாழ முடியாம அகதியா ஊர் ஊரா சுத்திட்டு இருக்காக?! அவனையெல்லாம் உசுரோட தீ வச்சு கொளுத்தணும்", கமலி சொன்னாள்.

இல்ல கமலி, அவனை கொன்னுட்டா, ஒரே நிமிசத்துல நிம்மதியா செத்துருவான். இல்ல, அப்படி ஒரு அவனுக்கு நிம்மதி கிடைக்கக்கூடாது. அவன் வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அவன் நரகமா கழிக்கணும். அப்படி ஒரு தண்டனைய நா அவனுக்கு குடுப்பேன்", ஆக்ரோஷத்தோடும் நிதானத்தோடும் சொன்ன காயத்ரியை எல்லோரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

காயத்ரி பிளீஸ், எமோஷன் ஆகாத", தினேஷ் சொன்னான்.

தன்னை சுதாரித்து கொண்ட காயத்ரி,

நா எதுக்கு இங்க வந்தேன்னா", என்று பேச்சை ஆரம்பிக்க,

நா சொல்றேன்", என்றான் தினேஷ்.

என்னல விசயம்?", லட்சுமி கேட்டாள்.

காயத்ரி ஆஃபீஸ் போகும் போது, மோனிகாவ பாத்துக்க யாருமில்ல. ஏதோ ஒரு மராத்தி சைல்டு கேர் சென்டர்ல விட்டுட்டு, ஆஃபீஸ் வந்து, குழந்தைய நினைச்சு பயந்துட்டே இருக்கா. அதான், எங்க வீட்ல அம்மா, அப்பா இருக்காங்க. கொழந்தைய பாத்துக்குவாகன்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்", தினேஷ் சொல்ல,

அப்பா அம்மா மட்டுந்தானா? நா இல்லியாக்கும்?", கேட்டு குழந்தை மோனிகாவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் கமலி.

காயத்ரி சிரித்தாள்.

நீ என்ன படிச்சிருக்க?", கமலியிடம் கேட்டாள்.

ம்ம், நா M.B.A முடிச்சிருக்கேன்", கமலி சொன்னாள்.

காயத்ரி வியந்தாள்.

கொடிய என்னால புரிஞ்சிக்கவே முடியல. அப்பாவ பாக்க போகலாம்னு சொன்னா, கொழந்த மாதிரி வேணாம்னு அடம்பிடிக்கிறா. அந்த லேடி பேரென்ன? ஹான்,.. ஆண்டாள்,.. அவங்க பேர சொன்னா, பயத்துல அவ கை கால்லாம் நடுங்குது. உங்களை பத்தி பேசும் போது, ஷி இஸ் எக்ஸைட்டட். சோ, அவ லைஃப்ல நீங்க இம்பார்ட்டன்ட்டான ஆள்ன்னு புரிஞ்சிகிட்டேன். அதான் ஒங்ககிட்ட பேசி பாக்கலாமுன்னு,...... ", பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத உயர் ரக ரெஸ்டாரன்ட்டில் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த, செழியனிடம் தன் உள்ளக்கிடக்கையை ஒளிக்காமல் சொன்னான் துரை.

பருந்திடம் இருந்து குஞ்சுகளை பாதுகாக்க துடிக்கும் கோழியை போல், பட படத்தது செழியனின் இதயம்.

டேய், நம்மூரு பையலுவ ரொம்ப மோசமானவனுக. கொடி புருஷன்கிட்ட அவனுங்க பேசாம பாத்துக்க. தப்பி தவறி பேசுனா கொடி வாழ்க்கையே பாழா போயிரும். சாக்கிரதை", அடிக்கடி தினேஷ் அலைபேசியில் பேசும் வசனம் நினைவை தீண்டி சென்றது.

அமைதியாக அமர்ந்திருந்தான்.

என்னங்க மச்சான் பேசாமலே இருக்குறீக?", சட்டென்று துரை கேட்க, திகைத்து நிமிர்ந்தான் செழியன்.

மச்சான்னு கூப்டலாமுல்ல",

கண்டிப்பா, நா ஒங்களுக்கு மச்சாந்தான!!?",

எனக்கு டவுட் இல்ல", என்றான் துரை.

அசடு வழிந்து திகைத்தான் செழியன்.

எங்க மேரேஜ் பேச்சு ஆரம்பிச்சதுலருந்தே ஏதோ ஒரு நெருடல் இருந்துட்டேருக்கு. இப்போ அது ஜாஸ்தியாகுது", துரை தன் பேச்சை முடிக்கவில்லை.

என்னங் மாப்ள நெருடல்? சீர் செஞ்சதுல ஏதாச்சும்?!......", துரையின் உள்ளம் புரிந்ததால், பேச்சை மடை மாற்றுவதற்காக கேட்டான் செழியன்.

ச்சே, ச்சே, அதெல்லாம் இல்லீங் மச்சான், நாந்தா சொல்றேனே, நம்ம கொடியோட பிஹேவியர்,.....",

அவ சின்ன புள்ளையிலருந்தே அப்படித்தான்,... ரொம்ப சென்சிடிவ். ஆண்டாள்,.... அவ சித்தி தான!! சித்தியா தா நடந்துக்குவா. அதான் அவள கொடிக்கு பிடிக்கல",

அதுக்காக, அப்பாவ கூடவா பிடிக்காம போயிரும்?", துரை அதிசய குரலில் கேட்டான்.

பெத்தா மட்டும் அப்பனாயிட முடியாதல்ல", செழியன் சொல்ல பார்த்தான் துரை.

பெத்த புள்ளைக்கு பாசத்த குடுத்து வளக்கணும். ராஜவேலு சித்தப்பா கொடிக்கு பாசத்தை குடுக்கல. பயத்ததே குடுத்தாக. குடி, கூடவே கூத்தியா, போரடிச்சா அரசியல் கூட்டம், வம்பு சண்ட. அவுக ஒலகமே அம்புட்டுத்தே. வீட்டுக்கு வந்தா ஆண்டாள் சிண்டு முடியிறத நம்பி, கொடிய போட்டு அடிப்பாக. எம்புட்டோ நாள், சித்தப்பன் கொடிய அடிக்கும் போது, நா கொடிய எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்.
இம்புட்டு வருசமா பாசத்துக்காக ஏங்கிட்டு கெடந்த புள்ள. கொஞ்சம் சின்னப்புள்ள மாதிரி நடந்துகிட்டா பொறுத்துகிடுங்க. சரியாயிருவா",

எல்லாஞ்சரிதே மச்சான், ஆனா, பொறந்த வீட்டுக்கு விருந்துக்கு கூட போக மாட்டேன்னு சொல்றதுதே, ரொம்ப கொழப்பமா,...", துரை பேசி முடிக்கும் முன்,

நா வந்து கொடிய பாக்குறேன். அவளை விருந்துக்கு வர சம்மதிக்க வைக்கிறேன்", என்றான் செழியன்.

அதில்ல,... தப்பா நெனைச்சுக்காதீக மச்சான். என்னால கொடிய புரிஞ்சிக்க முடியும். ஆனா, ஒறவுக்காரவகளால முடியாதல்ல. ஒவ்வொருத்தர் ஒவ்வொண்ணு பேசுறாக. அதே.....", தயக்கத்தோடு சொல்லை இழுத்தான் துரை.

எனக்கு புரியுது. இந்த விசயத்த பெருசு பண்ணி, கொடி மனச காயப்படுத்தாம என்னை கூப்ட்டு பேசுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்", செழியன் தன் பதிலை முடிக்கும் முன்,

கொடி ஒங்களுக்கு தங்கச்சின்னா எனக்கு பொஞ்சாதி மச்சான்", என்றான் துரை.

பக்குவமான சிரிப்பொன்றை சிந்தினான் செழியன்.

துரையும் சிரித்தான்.

சுயமரியாதை பேசும் அரசியல் கட்சியின் கொடி பறந்து கொண்டிருந்த, உத்தம பாளையம் நகராட்சியின் கட்சி அலுவலகத்துக்குள்,

சுவாதி டீ ட்டைல்ஸ் கேக்குறது அந்த மணி கண்டன் கேஸ் தான்னு தெரிஞ்சதும் எனக்கு ஒரு நொடி உசுரே நின்னு போச்சு", எதிர் இருக்கையில் காவல் உடையில் அமர்ந்திருந்த நவீன் சொன்னான்.

மேஜை மீதிருந்த கோப்புகளில் கண்கள் நிலைக்குத்தி நின்றபடி, அமைதியாக அமர்ந்திருந்தார் மதிவாணன்.

கேள்வி மேல கேள்வி கேட்டு தொளைச்சி எடுத்துட்டா. சுவாதிய சமாளிக்குறதுக்குள்ள எனக்கு மண்ட காஞ்சு போச்சு மாமா",

அமைதியாக இருந்தார்.

சொன்னா கோச்சிக்காதீக மாமா. நீங்க இருக்குற கட்சியோட கொள்கையே, சாதி மத வேற்றுமையை அழிக்கிறதுதே. அப்படியொரு கட்சியில இருந்துட்டு, இந்த மாதிரி கௌரவ கொலையெல்லா,.....", நவீன் பேசிக் கொண்டிருக்கும் போதே,

வாய மூடுல", என்று சத்தமாக சொன்ன படி, மேஜை மீது கோபமாக தட்டினார் மதிவாணன்.

அதிர்ந்து எழுந்து நின்றான் நவீன்.

வாசலில் கட்சி தொண்டர்கள் என்ற பிம்பத்தில் நின்று கொண்டிருந்த ஊழியக்காரர்களும், அடியாட்களும் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

கை நீட்டி வாங்குற காசுக்கு வாலாட்டிட்டியல்ல!! ஓ வேலை முடிஞ்சி போச்சல்ல. கெளம்புல", மதிவாணன் சொன்னார்.

சாரிங் மாமா", மெல்லிய குரலில் சொல்லி விட்டு சென்றான் நவீன்.

ஏலே மருதப்பா", மதிவாணன் அழைக்க ஓடி வந்தான் மருதப்பன்.

நம்மூரு கோயில் பூசாரியை, நாஞ்சொன்னேன்னு வர சொல்லு", மதிவாணனின் கட்டளை கேட்டு,

சரிங்கய்யா", பவ்யமாக சொல்லி விட்டு சென்றான் மருதப்பன்.

செய்த பாவ வினைகளின்
பாவம் தீர்க்க
செய்வினை செய்வானோ?!!
நகைச்சுவை தான்!!

தொடரும்.......

சக்தி மீனா......
 
Last edited:

vinodha mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 29, 2023
29
20
3
Plano , tx
View attachment 948

அத்தியாயம் 15

மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, பூனே மாகாணத்தின் பிம்ப்ரி சிஞ்சுவர்டு நகரம் தொழிற்சாலைகளும், நோய் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களும், கணினித்துறை நிறுவனங்களும் பரவலாக உள்ள பகுதி.

பிம்ப்ரி சிஞ்சுவர்டின் புறநகர் பகுதியில், மருந்து தொழிற்சாலையில் அடுக்கி வைத்த மருந்து பெட்டிகள் போல, வீடுகள், மிக நெருக்கமாக அமைந்திருக்கும், குறுகலான தெரு ஒன்றில் நடந்து கொண்டிருந்த தினேஷுடன் நடந்து வந்து கொண்டிருந்த காயத்ரியின் கையில் பெண் குழந்தை ஒன்று, ரோஜாப்பூவை போல் சிரித்துக் கொண்டிருந்தது.

ஏன் தினேஷ் இந்த மாதிரி எடத்துல இருக்க?! நீ நினைச்சா சிட்டியில ஒரு நல்ல அபார்ட்மெண்ட்லயே இருக்கலாமே!!", காயத்ரி கேட்டாள்.

தினேஷ் சிரித்தான்.

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?!",

மீண்டும் சிரித்தான்.

ஹலோ, கேள்வி கேட்டா பதில் சொல்லணும்",

இங்க இருக்கிற மனுஷங்களுக்கும் எனக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. அதான் இங்க இருக்கேன்",

என்ன அது?! தமிழ் பேசுறதா?",

மீண்டும் சிரித்தான்.

கடுப்ப கெளப்பாதீங்க தினேஷ்",

இந்த இடத்துக்கு பேரு ஜோபடாபட். தமிழ்ல சேரி. ஸ்கூல், கோயில், மால் மாதிரியான பொதுவிடங்கள்ல, இங்க இருக்கிற ஜனங்களுக்கு மட்டும், தண்ணி குடிக்கிறதுக்கு ஸ்பெஷலா தனி பானை இருக்கும். அதான் இவங்களுக்கும் எனக்குமான ஒத்துமை", என்றவன் காயத்ரியின் கையில் இருந்த குழந்தையை நோக்கி கை நீட்டினான். குழந்தை அவனது கைக்கு தாவியது. காயத்ரி திகைப்புடன் பார்த்தாள்.

இந்த சாக்கடை கொஞ்சம் பெருசு. பார்த்து தாண்டணும்", காயத்ரியிடம் சொல்லி விட்டு, சாக்கடையை தாண்டிய தினேஷை வியப்பாக பார்த்து, பின் நிதானமாக சிறு மடை போன்ற, சற்றே அகலமான சாக்கடையை தாண்டி அவனுடன் நடந்தாள் காயத்ரி.

யாரு தினேஷ்? ஃப்ரெண்ட்டா?", வழியில் வந்த ஒருவன் கேட்டான்.

ஆமா ப்ரோ, நா வேலை செய்ற ஆஃபீஸ்ல வேலை செய்றாங்க ", என்றபடி அவனை கடந்து நடந்தான் தினேஷ்.

வந்து ஒரு மாசத்துல ப்ரண்டு புடிச்சிட்டியே!! சூப்பர் தினேஷ்", காயத்ரி சொன்னாள்.

வந்து ஒரே மாசத்துல காயத்ரியோட ஃப்ரெண்ட்ஷிப்பே கிடைச்சிருக்கு. இவனுங்க ஃப்ரெண்ட்ஷிப் என்ன பிரமாதம்?!", சொல்லி சிரித்தான். அவனை முறைத்தாள் காயத்ரி.

சிரிப்பு வந்தா சிரிச்சுடு காயத்ரி", என்றான்.

சிரிக்கிறதா? நா மொறைக்கிறேன்", என்றாள்.

சிரிப்பை அடக்குனா தா மொறைக்க முடியும். அதான் அடக்காதங்குறேன்", சொல்லி விட்டு முன்னால் நடந்தவனை, வியப்பாக பார்த்தவள் முகத்தில் தன்னிச்சையாக சிரிப்பு பூத்தது.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வீடுகளின் அடுக்கில், மேல் மாடி முதல் தளத்துக்கு, படியேறினான் தினேஷ். உடன் காயத்ரியும் ஏறினாள்.

யம்மோ, அண்ணே வந்துட்டான்", தினேஷை வீட்டு வாசலில் பார்த்தவுடன் குரல் கொடுத்த இளம்பெண் ஒருத்தி, அவனுடன் வந்த காயத்ரியை பார்த்து திகைத்து, பின் சம்பிரதாய சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

தினேஷ் கையில் சிரித்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தவள் கண்கள் சுருக்கினாள்.

அதிர்ந்து நின்றாள்.

உள்ள வா காயத்ரி", அழைத்த படி வீட்டுக்குள் வந்தான் தினேஷ்.

கையில் தேநீர் கோப்பையுடன், சமையலறையில் இருந்து வந்த மூப்படைந்த தினேஷின் தாய் லட்சுமி, இவர்களை பார்த்ததும் வாயடைத்து நின்றாள்.

அம்மா, இவங்க காயத்ரி, எங்க ஆஃபீஸ்ல வேலை செய்றாங்க", காயத்ரியை அறிமுகம் செய்து வைத்தான் தினேஷ்.

வாம்மா, உக்காரு", என்றவள்,

ஏ, அந்த சேரெடுத்து போட்றி", என்று தன் மகளை ஏவினாள்.

உடனே பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றை எடுத்து போட்டாள் அந்த இளம்பெண்.

இது திலகா, என் சிஸ்டர்", தினேஷ் அந்த இளம்பெண்ணை காயத்ரியிடம் அறிமுகம் செய்து வைத்தான்.

இரு பெண்களும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர்.

நீ கேட்ட எல்லா காயும் வாங்கிட்டு வந்துட்டேன். சரியா இருக்கான்னு பாரு. இந்த பாச தெரியாத ஊர்ல ஒவ்வொரு பொருளையும் தேடி தேடி வாங்கிட்டு வர்றதுக்குள்ள, மண்ட காஞ்சு போகுது புள்ள", சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் வந்த தினேஷின் தந்தை, தேவேந்திரன் காயத்ரியை பார்த்து திகைத்து பின் சிரித்தார்.

அப்பா, இவ காயத்ரி, இவளும் நம்மூர்தே. என்கூட ஆஃபீஸ்ல ஒண்ணா வேலை செய்றா. இது அவளோட கொழந்த. பேரு மோனிகா", என்று காயத்ரியையும் அவளது குழந்தையையும் அறிமுகம் செய்து வைத்தான் தினேஷ்.

அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கொழந்த", லட்சுமி கேள்வியாக பார்த்தாள்.

மணி சாகும் போது நா த்ரீ மந்த்ஸ் பிறக்னண்டா இருந்தேன்", காயத்ரி சொன்னாள்.

உக்காரும்மா", என்றார் தேவேந்திரன்.

காயத்ரி உட்கார்ந்தாள்.

ஏ, என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்கிறவ, புள்ளைக்கு காப்பி தண்ணி குடு", மனைவியிடம் சொன்னார் தேவேந்திரன்.

லட்சுமி மகனுக்காக கொண்டு வந்த தேநீரை காயத்ரி கையில் கொடுத்தாள்.

ஐவரும் குடித்து முடித்த தேநீர் டம்ளர்களை தரையில் வைத்தனர்.

லட்சுமி குழந்தை மோனிகாவுக்கு பால் ஊட்டினாள்.

ச்சீ, என்ன மனுச சென்மங்களோ, பெத்த புள்ள தாலியறுத்தாலும் பரவால்ல, தான் மட்டும் பெரிய புடுங்கின்னு நிரூபிக்கணும். இவங்கள எல்லாம் கழுவுல ஏத்தணும்", திலகா கோபமாக சொல்ல,

ஏ, வாய வெச்சுட்டு இருக்க மாட்ட?", லட்சுமி அதட்டினாள்.

அவ சரியாதனம்மா பேசுறா? நா தப்பா எடுத்துக்கல", காயத்ரி சொன்னாள்.

குழந்தையை தரையில் உட்கார வைத்தாள் லட்சுமி. அருகில் அமர்ந்து குழந்தையை கொஞ்சி விளையாட்டு காட்டினாள் கமலி.

செத்தா நீயும் பொணந்தே. நானும் பொணந்தே. அது இங்க எவனுக்கு தாயி புரியுது?! ", அங்கலாய்த்து கொண்டார் இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்த தேவேந்திரன்.

அந்த பொணத்தை கூட அவங்க அவங்க சுடுகாட்டுலதா ப்போ பொதைக்கிறாக. மனுசன் சாவுல கூட, அவுக குடி கௌரவத்தை சாவ வுடாம பாத்துக்குறாக", என்றாள் கமலி.

இந்த ஊர்ல அந்த மாதிரி வித்தியாசமெல்லா இல்ல ஆத்தா. மனுசங்கள மனுசனா பாக்குறாக", தேவேந்திரன் சொல்ல,

அப்படின்னு யார் சொன்னாக?", கமலி கேட்டாள்.

காயத்ரி தினேஷை பார்த்து கண்கள் சுருக்கினாள்.

அப்பா இங்க, மார்க்கெட்க்கு மட்டுந்தே போயிட்டு வருவாக. அவுகளுக்கு பெருசா வெவரம் தெரியாது. அதான் இப்புடி பேசுறாக", என்றான் தினேஷ்.

இங்க மட்டுமில்லீங்கய்யா!! எல்லா ஊர்லயும், எல்லா நாட்லயும், ஒலகம் பூராவும் மனுசனுக்கு மனுசன் வித்தியாசம் பாக்குறவங்க இருக்காங்க. இன வெறி, சாதி வெறி, மத வெறி, நிற வெறி, குல வெறி, குடி வெறி, குடிகாரன் வெறின்னு எல்லா வெறியும் ஒலகம் பூராவும் இருக்கு", என்றாள் காயத்ரி.

இல்லாத்தா, இந்த ஊர் ஆளுங்ககிட்ட அப்படி ஏதும் தெரீல", வெள்ளந்தி தனமாக சொன்னார் தேவேந்திரன்.

ஆமா, காமாலைக்காரனுக்கு வெளுத்ததெல்லாம் பாலாம்", என்றாள் லட்சுமி.

என்னடி பழமொழிய மாத்தி சொல்ற?", இரும்புக் கட்டிலில் உட்கார்ந்திருந்த தேவேந்திரன் சொல்ல,

எல்லாஞ்சரியாத்தே சொல்றேன். ஒனக்கு அந்த கொலைகாரப்பைய பாண்டியனே சிநேகிதன். அப்படின்னா ஒனக்கு காமாலை இல்லாம வேற என்னய்யா?", லட்சுமி கண்டிப்பான குரலில் தேவேந்திரனிடம் சொன்னாள்.

எந்த பாண்டியன்?", காயத்ரி சந்தேகத்துடன் கேட்டாள்.

அதே பாண்டியன் தா", தினேஷ் சொல்லி அழுத்தமாக பார்த்தான்.

காயத்ரியின் கண்கள் கோபக்கனலை ஏந்திக் கொண்டன.

அந்த கொலைகாரப் பையலால எம்புட்டு குடும்பம் நாசமாவிருக்கு தெரியுமா?! எம்புட்டு பொம்பள புள்ளைக தாலியறுத்துருக்கு. எம்புட்டு சனம் சொந்த ஊர்ல வாழ முடியாம அகதியா ஊர் ஊரா சுத்திட்டு இருக்காக?! அவனையெல்லாம் உசுரோட தீ வச்சு கொளுத்தணும்", கமலி சொன்னாள்.

இல்ல கமலி, அவனை கொன்னுட்டா, ஒரே நிமிசத்துல நிம்மதியா செத்துருவான். இல்ல, அப்படி ஒரு அவனுக்கு நிம்மதி கிடைக்கக்கூடாது. அவன் வாழ்க்கையோட ஒவ்வொரு நிமிஷத்தையும் அவன் நரகமா கழிக்கணும். அப்படி ஒரு தண்டனைய நா அவனுக்கு குடுப்பேன்", ஆக்ரோஷத்தோடும் நிதானத்தோடும் சொன்ன காயத்ரியை எல்லோரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

காயத்ரி பிளீஸ், எமோஷன் ஆகாத", தினேஷ் சொன்னான்.

தன்னை சுதாரித்து கொண்ட காயத்ரி,

நா எதுக்கு இங்க வந்தேன்னா", என்று பேச்சை ஆரம்பிக்க,

நா சொல்றேன்", என்றான் தினேஷ்.

என்னல விசயம்?", லட்சுமி கேட்டாள்.

காயத்ரி ஆஃபீஸ் போகும் போது, மோனிகாவ பாத்துக்க யாருமில்ல. ஏதோ ஒரு மராத்தி சைல்டு கேர் சென்டர்ல விட்டுட்டு, ஆஃபீஸ் வந்து, குழந்தைய நினைச்சு பயந்துட்டே இருக்கா. அதான், எங்க வீட்ல அம்மா, அப்பா இருக்காங்க. கொழந்தைய பாத்துக்குவாகன்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்", தினேஷ் சொல்ல,

அப்பா அம்மா மட்டுந்தானா? நா இல்லியாக்கும்?", கேட்டு குழந்தை மோனிகாவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள் கமலி.

காயத்ரி சிரித்தாள்.

நீ என்ன படிச்சிருக்க?", கமலியிடம் கேட்டாள்.

ம்ம், நா M.B.A முடிச்சிருக்கேன்", திலகா சொன்னாள்.

காயத்ரி வியந்தாள்.

கொடிய என்னால புரிஞ்சிக்கவே முடியல. அப்பாவ பாக்க போகலாம்னு சொன்னா, கொழந்த மாதிரி வேணாம்னு அடம்பிடிக்கிறா. அந்த லேடி பேரென்ன? ஹான்,.. ஆண்டாள்,.. அவங்க பேர சொன்னா, பயத்துல அவ கை கால்லாம் நடுங்குது. உங்களை பத்தி பேசும் போது, ஷி இஸ் எக்ஸைட்டட். சோ, அவ லைஃப்ல நீங்க இம்பார்ட்டன்ட்டான ஆள்ன்னு புரிஞ்சிகிட்டேன். அதான் ஒங்ககிட்ட பேசி பாக்கலாமுன்னு,...... ", பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத உயர் ரக ரெஸ்டாரன்ட்டில் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த, செழியனிடம் தன் உள்ளக்கிடக்கையை ஒளிக்காமல் சொன்னான் துரை.

பருந்திடம் இருந்து குஞ்சுகளை பாதுகாக்க துடிக்கும் கோழியை போல், பட படத்தது செழியனின் இதயம்.

டேய், நம்மூரு பையலுவ ரொம்ப மோசமானவனுக. கொடி புருஷன்கிட்ட அவனுங்க பேசாம பாத்துக்க. தப்பி தவறி பேசுனா கொடி வாழ்க்கையே பாழா போயிரும். சாக்கிரதை", அடிக்கடி தினேஷ் அலைபேசியில் பேசும் வசனம் நினைவை தீண்டி சென்றது.

அமைதியாக அமர்ந்திருந்தான்.

என்னங்க மச்சான் பேசாமலே இருக்குறீக?", சட்டென்று துரை கேட்க, திகைத்து நிமிர்ந்தான் செழியன்.

மச்சான்னு கூப்டலாமுல்ல",

கண்டிப்பா, நா ஒங்களுக்கு மச்சாந்தான!!?",

எனக்கு டவுட் இல்ல", என்றான் துரை.

அசடு வழிந்து திகைத்தான் செழியன்.

எங்க மேரேஜ் பேச்சு ஆரம்பிச்சதுலருந்தே ஏதோ ஒரு நெருடல் இருந்துட்டேருக்கு. இப்போ அது ஜாஸ்தியாகுது", துரை தன் பேச்சை முடிக்கவில்லை.

என்னங் மாப்ள நெருடல்? சீர் செஞ்சதுல ஏதாச்சும்?!......", துரையின் உள்ளம் புரிந்ததால், பேச்சை மடை மாற்றுவதற்காக கேட்டான் செழியன்.

ச்சே, ச்சே, அதெல்லாம் இல்லீங் மச்சான், நாந்தா சொல்றேனே, நம்ம கொடியோட பிஹேவியர்,.....",

அவ சின்ன புள்ளையிலருந்தே அப்படித்தான்,... ரொம்ப சென்சிடிவ். ஆண்டாள்,.... அவ சித்தி தான!! சித்தியா தா நடந்துக்குவா. அதான் அவள கொடிக்கு பிடிக்கல",

அதுக்காக, அப்பாவ கூடவா பிடிக்காம போயிரும்?", துரை அதிசய குரலில் கேட்டான்.

பெத்தா மட்டும் அப்பனாயிட முடியாதல்ல", செழியன் சொல்ல பார்த்தான் துரை.

பெத்த புள்ளைக்கு பாசத்த குடுத்து வளக்கணும். ராஜவேலு சித்தப்பா கொடிக்கு பாசத்தை குடுக்கல. பயத்ததே குடுத்தாக. குடி, கூடவே கூத்தியா, போரடிச்சா அரசியல் கூட்டம், வம்பு சண்ட. அவுக ஒலகமே அம்புட்டுத்தே. வீட்டுக்கு வந்தா ஆண்டாள் சிண்டு முடியிறத நம்பி, கொடிய போட்டு அடிப்பாக. எம்புட்டோ நாள், சித்தப்பன் கொடிய அடிக்கும் போது, நா கொடிய எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்.
இம்புட்டு வருசமா பாசத்துக்காக ஏங்கிட்டு கெடந்த புள்ள. கொஞ்சம் சின்னப்புள்ள மாதிரி நடந்துகிட்டா பொறுத்துகிடுங்க. சரியாயிருவா",

எல்லாஞ்சரிதே மச்சான், ஆனா, பொறந்த வீட்டுக்கு விருந்துக்கு கூட போக மாட்டேன்னு சொல்றதுதே, ரொம்ப கொழப்பமா,...", துரை பேசி முடிக்கும் முன்,

நா வந்து கொடிய பாக்குறேன். அவளை விருந்துக்கு வர சம்மதிக்க வைக்கிறேன்", என்றான் செழியன்.

அதில்ல,... தப்பா நெனைச்சுக்காதீக மச்சான். என்னால கொடிய புரிஞ்சிக்க முடியும். ஆனா, ஒறவுக்காரவகளால முடியாதல்ல. ஒவ்வொருத்தர் ஒவ்வொண்ணு பேசுறாக. அதே.....", தயக்கத்தோடு சொல்லை இழுத்தான் துரை.

எனக்கு புரியுது. இந்த விசயத்த பெருசு பண்ணி, கொடி மனச காயப்படுத்தாம என்னை கூப்ட்டு பேசுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்", செழியன் தன் பதிலை முடிக்கும் முன்,

கொடி ஒங்களுக்கு தங்கச்சின்னா எனக்கு பொஞ்சாதி மச்சான்", என்றான் துரை.

பக்குவமான சிரிப்பொன்றை சிந்தினான் செழியன்.

துரையும் சிரித்தான்.

சுயமரியாதை பேசும் அரசியல் கட்சியின் கொடி பறந்து கொண்டிருந்த, உத்தம பாளையம் நகராட்சியின் கட்சி அலுவலகத்துக்குள்,

சுவாதி டீ ட்டைல்ஸ் கேக்குறது அந்த மணி கண்டன் கேஸ் தான்னு தெரிஞ்சதும் எனக்கு ஒரு நொடி உசுரே நின்னு போச்சு", எதிர் இருக்கையில் காவல் உடையில் அமர்ந்திருந்த நவீன் சொன்னான்.

மேஜை மீதிருந்த கோப்புகளில் கண்கள் நிலைக்குத்தி நின்றபடி, அமைதியாக அமர்ந்திருந்தார் மதிவாணன்.

கேள்வி மேல கேள்வி கேட்டு தொளைச்சி எடுத்துட்டா. சுவாதிய சமாளிக்குறதுக்குள்ள எனக்கு மண்ட காஞ்சு போச்சு மாமா",

அமைதியாக இருந்தார்.

சொன்னா கோச்சிக்காதீக மாமா. நீங்க இருக்குற கட்சியோட கொள்கையே, சாதி மத வேற்றுமையை அழிக்கிறதுதே. அப்படியொரு கட்சியில இருந்துட்டு, இந்த மாதிரி கௌரவ கொலையெல்லா,.....", நவீன் பேசிக் கொண்டிருக்கும் போதே,

வாய மூடுல", என்று சத்தமாக சொன்ன படி, மேஜை மீது கோபமாக தட்டினார் மதிவாணன்.

அதிர்ந்து எழுந்து நின்றான் நவீன்.

வாசலில் கட்சி தொண்டர்கள் என்ற பிம்பத்தில் நின்று கொண்டிருந்த ஊழியக்காரர்களும், அடியாட்களும் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

கை நீட்டி வாங்குற காசுக்கு வாலாட்டிட்டியல்ல!! ஓ வேலை முடிஞ்சி போச்சல்ல. கெளம்புல", மதிவாணன் சொன்னார்.

சாரிங் மாமா", மெல்லிய குரலில் சொல்லி விட்டு சென்றான் நவீன்.

ஏலே மருதப்பா", மதிவாணன் அழைக்க ஓடி வந்தான் மருதப்பன்.

நம்மூரு கோயில் பூசாரியை, நாஞ்சொன்னேன்னு வர சொல்லு", மதிவாணனின் கட்டளை கேட்டு,

சரிங்கய்யா", பவ்யமாக சொல்லி விட்டு சென்றான் மருதப்பன்.

செய்த பாவ வினைகளின்
பாவம் தீர்க்க
செய்வினை செய்வானோ?!!
நகைச்சுவை தான்!!

தொடரும்.......

சக்தி மீனா......
சுடுகாட்டில கூட சாதி மதத்தை வச்சுத்தான் புதைக்கிறானுக...
👏👏👏👏
இது பாயின்ட்...

நம்ம ஊரோ, வெளியூரோ.
வெளிநாடோ!!!
எல்லா இடத்திலும் இனவெறி உண்டு....
சத்தியமான உண்மை மீனா......
இனமும் மதமும் அற்ற நாட்டில் கூட
நிற வெறி தாண்டவமாடுகிறது...
ஒரு வித அசௌகரியத்தில் வாழும் பலர் இந்த நாடுகளில் உண்டு....

சரியா சொன்னீங்க மீனா!!!!!
உங்கள் பார்வை கோணம் வியக்க வைத்தது‌.....👏👏👏
 
சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
சுடுகாட்டில கூட சாதி மதத்தை வச்சுத்தான் புதைக்கிறானுக...
👏👏👏👏
இது பாயின்ட்...

நம்ம ஊரோ, வெளியூரோ.
வெளிநாடோ!!!
எல்லா இடத்திலும் இனவெறி உண்டு....
சத்தியமான உண்மை மீனா......
இனமும் மதமும் அற்ற நாட்டில் கூட
நிற வெறி தாண்டவமாடுகிறது...
ஒரு வித அசௌகரியத்தில் வாழும் பலர் இந்த நாடுகளில் உண்டு....

சரியா சொன்னீங்க மீனா!!!!!
உங்கள் பார்வை கோணம் வியக்க வைத்தது‌.....👏👏👏
என்ன திடீர்னு "ங்க" போடுற. அதெல்லாம் தேவையில்ல. எப்போவும் கூப்டுற மாதிரி கூப்டு.. thanks vino 🤝🏻❤️