• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷17

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
IMG_20230302_224312.jpg

அத்தியாயம் 17

தேவையான உணவு பலகாரங்களை பதிவு செய்து, பணம் கொடுத்து, ரசீது பெற்ற பின்னரே, அந்த உணவு விடுதியில், சாப்பாட்டை பெற முடியும். கஃபே முறை போல், உணவை வாங்கி வந்து மேசையில் வைத்து தான் உண்ண முடியும்.

சுவாதி மூவருக்கும் தேநீர் மற்றும் பலகாரங்கள் ஆர்டர் செய்ய வரிசையில் நின்றிருந்தாள்.
அந்த உயர்தர ரெஸ்டாரன்ட்டின் ஒரு மேசையில் எதிரெதிராக அமர்ந்திருந்தனர் செழியன் மற்றும் சாரதி.

சுவாதிக்கு விஷயம் தெரிய வேண்டாம்ன்னு தா அப்படி சொன்னேன். ஒன்னைய மன்னிச்சிட்டேன்னு நெனைக்காத", என்றான் சாரதி.

மன்னிக்கிற அளவுக்கு நா என்னல தப்பு செஞ்சேன்?", செழியன் கேட்டான்.

" வேணாம், கோவத்த கெளப்பாத!! ஓ யோக்கியதை என்னன்னு எனக்கு தெரியும்",

என்னல யோக்கியதைய கண்டுட்டா?", சற்றே கோபம் மேலிட, சுவாதியை ஒரு முறை பார்த்து விட்டு கேட்டான் செழியன்.

கூடவே ஒண்ணுமண்ணா வளந்த புள்ளைய ரேப் பண்றதுதானல ஓ கேடு கெட்ட யோக்கியதை?! இதோட நெறுத்திக்க!! இல்ல நாறிரும்", கை விரல் நீட்டி சொன்னான் சாரதி.

ரேப்பா? ஏலே, நா அதுக்கெல்லா வொர்த் இல்ல", அதிர்ச்சியாக சொன்னான் செழியன்.

தீயாக முறைத்தான் சாரதி.

என்னை பாத்தா றேப் பண்றவன் மாதிரியால இருக்கு. இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா",

சும்மா, கம்பி கட்டாத, நானே என் கண்ணால பார்த்தேன். உன் கூட பழகின பாவத்துக்கும், சந்தியா பேரு கெட்டு போயிற கூடாதுன்னும் சும்மா இருக்கேன். இல்ல, ஊர் பஞ்சாயத்துல, ஃப்ராது எழுதி வச்சிருவேம்பாத்துக்க", மிரட்டினான் சாரதி.

போல, பைத்தியக்கார பையல", செழியன் சொல்லும் போது,

டேய், புடிங்கடா", சொல்லிக் கொண்டே வந்த சுவாதியின் கையில், மூன்று தட்டுகள் நிறைய உணவு பதார்த்தங்கள் இருந்தன.

சாரதியை முறைத்து விட்டு, எழுந்து சென்று சுவாதி கையில் இருந்த தட்டுகளை வாங்கி உதவி செய்தான் செழியன்.

மூவரும் சாப்பிட்டு முடித்தனர்.

இனிமே எப்பவாது ரெண்டு பேரும் மொறைக்கிறத பாத்தேன், பிச்சிப்புடுவேன்", சொன்னாள் சுவாதி.

இருவரும் சிரித்தனர்.

வழியாதீங்கடா",

மீண்டும் சிரித்தனர்.

சுவாதி காஃபியை பருகினாள்.

சுவாதி", செழியன் கூப்பிட்டான்.

ம்ம்"

எனக்கு ஒரு கார வடை வாங்கிட்டு வாயேன்", செழியன் சொன்னான்.

சுவாதி முறைத்தாள்.

பிளீஸ்", என்றான் செழியன்.

ஒழிஞ்சி போ, வாங்கிட்டு வர்றேன்", சொல்லி விட்டு சென்றாள்.

இங்க பாரு சாரதி, நா ஒன்னைய கூப்பிட்டது, சந்தியா பத்தி பேச இல்ல. சுவாதி பத்தி பேச",

ஏன், அவளையும் சீரழிக்கணுமா?",

அடிச்சேன்னு வையி, பல்லெல்லாம் தெறிச்சிரும். அவ என் ஃப்ரண்டுல. முட்டா பையல", என்றான் செழியன்.

சற்றே காரம் குறைந்து அமைதியானான் சாரதி.

சுவாதி மணிகண்டன் கேஸ்ஸ விசாரிக்க கூடாது. அத எப்படியாவது தடுக்கணும்", செழியன் சொன்னான்.

ஏன், ஒங்கப்பன் தூக்குக்கு போயிருவான்னு பயமாருக்கா?", சாரதி கேட்டான்.

போடாங்க,... வாயில எதாது வந்துற போவுது?! மாட்டுனா, எங்கப்பன் மட்டும் மாட்டுவான். சுவாதியோட அப்பனுந்தான மாட்டுவான்?! சுவாதியால அதை தாங்கிக்க முடியுமா?", பில் செக்ஷனில் வரிசையில் நிற்கும் சுவாதியை ஒருமுறை பார்த்து விட்டு, திரும்பினான் செழியன்.

சில நொடிகள் சிந்தித்தான் சாரதி.

அதுக்காக,.... எத்தனை நாள் இதை மறைக்க முடியும்? என்னைக்காவது ஒரு நாள் அவளுக்கு தெரிஞ்சு தான ஆகணும்?!", சாரதி கேட்டான்.

தெரியும் போது தெரியட்டும். ஆனா, இந்த விஷயமெல்லாம் தெரியும் போது, சுவாதிக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கணும்", செழியன் சொல்ல,

புரியிற மாதிரி பேசுல, ஒரு எழவும் புரியல",

ஒனக்கு புரியாது சாரதி, எங்கப்பன் ஒரு கொலைகாரன்னு தெரிஞ்சதும், அம்புட்டு வலி. முடிலல, நெதம் அந்தாளு முகத்துல முழிச்சிட்டு அவுக கூட ஒரே வீட்ல வாழ்றது பெரிய வலி. நா ஆம்பள பையன், ராவுல எங்கியாது, சுத்திட்டு, பதினொரு மணிக்கு மேல அந்தாளு ஒறங்குன பொறவு வீட்டுக்கு போறேன். சுவாதிய நெனைச்சு பாரு. அவ எங்க போவா?! எங்க அம்மா நெதம் அழுவுறாங்க. இந்த கஷ்டம் சுவாதிக்கு வேணாம்ல”, செழியன் சொன்னான்.

சரி, கல்யாணத்துக்கு பொறவு தெரிஞ்சா மட்டும் வலியில்லியா?”,

இருக்கும், கூடவே ஆறுதல் சொல்ல தொணையும் இருக்கும். அவுக அப்பங்கூட ஒரே வீட்லருந்து மல்லுக்கட்ட வேண்டிய தேவை இருக்காது”, செழியன் சொன்னான்.

ம்ம், ஆனா, அவள நாம எப்படி தடுக்க முடியும்?. அவ இன்வெஸ்டிகேஷனை மேக்ஸிமம் முடிச்சிட்டா”, சாரதி சொல்ல,

ஆனா குற்றவாளிய நெருங்கல. அதோட அவ இன்வெஸ்டிகேஷன் பண்ணி, அவனுங்கள ஆதாரத்தோட புடிச்சாலும், மேக்சிமம் மூணு மாசத்துக்கு மேல ஜெயில வைக்க முடியாது. அதுக்கு ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கணும்?!”, செழியன் சொன்னான்.

நீ சொல்றதும் சரிதா. அவ என்னடா, மாஞ்சி மாஞ்சி, அவனுகள புடிச்சாலும், அவனுக சட்டத்துக்கு அடங்க போறதில்ல. ஆனா,.... அதுக்காக அவனுங்களுக்கு தண்டனையே வேண்டாங்குறியா?",

அவனுங்களுக்கு தண்டனை குடுக்குறேன்னு நம்ம வாழ்க்கைய எழக்க வேணாம்னு சொல்றேன்", செழியன் சொன்னான்.

சரி, நா என்ன பண்ணணும்? சொல்லு?”, சாரதி கேட்டான்.

செழியன் சிரித்தான்.

சுவாதி எங்க இன்வெஸ்டிகேஷனுக்கு போனாலும் எப்போவும் அவ கூடவே இரு. அவ எங்க போறா, வர்றான்னு எனக்கு இன்ஃபார்ம் பண்ணு. மத்தத நாம்பாத்துக்குறேன்”,

ம்ம்ம், சரி, ஆனா,..... அதுக்காக ஒன்னைய மன்னிச்சிட்டேன்னு நெனைக்காத. நீ சந்தியாவ ஈவ்டீசிங் பண்றத நா மன்னிக்கவே மாட்டேன்”, சொன்னான் சாரதி.

அப்போ ரேப், இப்போ ஈவ்டீசிங்க? ரொம்ப சந்தோசம்ல”, செழியன் சொல்ல,

எதுக்குல அந்த புள்ளைய போட்டு இம்சை பண்ணிக்கிருக்க? வுட்டு தொலையேன். அதுக்கு தா ஒன்னைய புடிக்கலல்ல”,

செழியன் சிரித்தான்.

சாரதி முறைத்தான்.

செழியன் எழுந்தான்.

என்னல, எந்திச்சுட்ட?",

ஒரு முக்கியமான வேலையிருக்கு", செழியன் சொன்னான்.

அப்போ கார வடை",

அத நீயும் அவளும் சாப்டுங்க", சொல்லி விட்டு சுவாதி கண்ணில் படாமல் சென்று விட்டான் செழியன்.

இனி இங்க இருந்தோம். நம்ம உயிருக்கு உத்திரவாதமில்ல", தனக்குள் புலம்பிய சாரதி வேகமாக அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியே வந்தான்.






சந்தியா தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள். ஸ்கூட்டியில் சாவியை திருகி, வண்டியில் ஏற எத்தனிக்கும் போது சுஹாசினி சொன்னாள்,

“சந்தியா, அங்க பாரு, ஃப்ரான்ட் டையர் பஞ்சர்””

ச்சே, இது வேற நேரங்காலந்தெரியாம'', சந்தியா தனக்குள் புலம்பினாள்.

சரிடி, டென்ஷன் ஆகாத. போற வழியில, மெக்கனிக் ஷாப்ல பாத்துட்டு போலாம்”, சுஹாசினி சொல்லும் போது,

டயர் பஞ்சராயிருச்சா, நா வேண்ணா ட்ராப் பண்ணட்டுமா?”, கேட்டு சிரித்தபடி வந்து நின்றான் கோபால். அவன் ஒரு ஆணியை காட்டினான். அதை கொண்டு சிரித்தபடியே தலையை சொறிந்து கொண்டான்.

சுஹாசினியும் சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

நீ என்ன அவளுக்கு தொடுப்பா? எந்த நேரமும் கூடவே சுத்திட்டுருக்ற?”, சுஹாசினியிடம் கேட்டான் கோபால்.

அத கேக்க நீ யார்றா? பொறுக்கி பையல”, சுஹாசினி சொல்ல,

நா யாருன்னு தெரியாது......, உன் பக்கத்துல நிக்குறவள கேளு, நா யாருன்னு சொல்லுவா. ஒனக்கும் ஒம்புசனுக்கும் என்ன ஒறவோ, அதே ஒறவுதா எனக்கும் அவளுக்கும்”, கோபால் சொன்னதும், சட்டென்று சந்தியாவின் கண்களில் நீர் கொட்டியது.

ஏண்டா இப்புடி அநியாயம் பண்ணிட்டுருக்ற? ஆஃபீஸ்லருக்குற அம்புட்டு பேர்கிட்டயும் ஒனக்கும் இவளுக்கும் தொடுப்பு இருக்குறதா கதையளந்துட்ருக்ற. ஒனக்கும் ஒரு பொண்ணு இருக்குதல்ல. அத பத்தி யாராச்சும் இப்புடி பேசுனா ஒனக்கெப்டி இருக்கும்?”, சுஹாசினி ஆவேசமாக கேட்டாள்.

எம்பொண்ணென்ன இவள மாதிரியா ஊர் மேஞ்சிட்டு திரிறா?”, சட்டென கேட்டான்.

சந்தியா வாய் மூடி அழும் போது அலுவலகத்தின் வாசலில் நின்ற தன் காரருகே வந்தான் தனசேகர்.

நாக்க அடக்கி பேசு. இல்ல, நாறி போயிருவ நீயி”, சுஹாசினி சொன்னாள். அலுவலகம் நீங்கி செல்பவர்களில் சிலரின் கவனம் இந்த பக்கமாக திரும்பியது.

தூரத்தில் சந்தியா அழுவதை கண்ட தனசேகர், வேகமாக சந்தியா நிற்கும் இடம் நோக்கி நடந்தான்.

சும்மா கத்தாத, இவளுக்கு எங்க மச்சமிருக்குதுன்னு சொல்றேன். அப்போ நம்புவியா?”, அருவருக்கும் படியாக கோபால் கேட்க, சந்தியாவின் அழுகை அதிகமானது.

வாட்ஸ் ஹேப்பனிங்க் ஹியர்?”, கேட்டபடி தனசேகர் சற்றே சற்று தொலைவில் நடந்து வரும் போது, செழியன் தன் பைக்கை அசுர வேகத்தில் கொண்டு வந்து கோபால் முன் நிறுத்தினான்.

அதிர்ந்து பின்னோக்கி விலகினான் கோபால்.

அழுது கொண்டிருந்த சந்தியாவை பார்த்த செழியன்,

ஏய் எதுக்குடி அழுதுட்ருக்குற?”, கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை.

செழியன்...., நா சொன்னேன்ல்ல,.... கோபால்ன்னு, அது இந்த நாயிதா”, கோபாலை கை காட்டி சுஹாசினி சொன்னது தான் தாமதம், பைக்கில் அமர்ந்திருந்த படியே, கோபாலை ஏட்டி ஒரு உதைத்தான் செழியன்.

தடுமாறி பின்னோக்கி விழுந்தான் கோபால்.

சந்தியா சுஹாசினியை ஆச்சரியமாக பார்த்தாள்.

பைக்கை நிறுத்தி பைக்கிலிருந்து இறங்கினான் செழியன். சிகரெட் ஒன்றை எடுத்து, வாயில் வைத்து, அதன் முனையில் நெருப்பை வைத்தான். சிகரெட்டின் முனை புகைந்தது.

கூட்டம் கூடியது. தனசேகரும் கூட்டத்துக்கு நடுவில் வந்தான்.

வேகமாக வந்து, தரையிலிருந்து எழும்ப முயன்ற கோபாலை, மிதித்து தள்ளினான் செழியன். கீழே விழுந்த கோபாலின் சட்டைக்காளரை பற்றி தூக்கினான். அவனது முகத்தில் சில குத்துக்களை விட்டான். கோபாலுடைய மூக்கின் மீள் எலும்பில் உடைப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

டேய், என்னை எதுக்குடா அடிக்கிற?”, கோபால் கேட்டான்.

செழியன் கோபாலின் அடி வயிற்றில் ஓங்கி மிதித்தான். கோபால் சுருண்டு விழுந்தான்,.

செக்கியூரிட்டீஸ்ஸ கூப்டுங்க”, தனசேகர் சொல்ல, சிலர் வளாகத்தின் வாசலுக்கு ஓடினர்.

கீழே விழுந்து எழ முடியாமல் கிடந்த கோபாலை தொடர்ந்து மிதித்து கொண்டே இருந்தான் செழியன். வாயில் புகைந்து கொண்டே இருந்தது சிகரட்.


காவலாளி(வாட்ச் மேன்) சீருடை அணிந்த இருவர் ஓடி வந்து, செழியனைப் பிடித்து இழுத்தனர். இருவரையும், உதறி தள்ளி விட்டு,

வாயிருக்குதுன்னு என்ன வேண்ணா பேசுவியாடா நீயி?”, என்று கேட்டுக்கொண்டே, ஒரு கையால் கோபாலின் கன்னங்களை பற்றி, அழுத்தி, அவனது வாயை பிளந்த செழியன், மறு கையால் தன் வாயில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எடுத்தான். காவலாளிகள் செழியன் கைகளை ஆளுக்கொன்றாய் பிடித்த பின்பும், ஆவேசம் குறையாதவனாக, கோபாலின் வாயை விடுவிக்காமல் நின்ற செழியன், தன் மறுகையில் இருந்த சிகரெட்டின், புகையும் முனையையும், கோபாலின் நாவில் வைத்து அழுத்தினான்.

ஆ ஆ ஆ”, என்று அலறியவனை மிதித்து தள்ளி விடுவித்த செழியன், வாட்ச் மேன் இருவரையும் இழுத்து கீழே தள்ள, தனசேகர் செழியனின் கைகளை பிடித்தான்.

செழியா, வேணாம்”, என்றபடி ஓடி வந்தாள் சந்தியா.

தனசேகரை ஒரு கையால் பிடித்தபடி, மறு கையை அடிப்பதற்காக ஓங்கிய செழியனின், ஓங்கிய கையை பிடித்தாள் சந்தியா. திரும்பி அவளை பார்த்தவனின் முகத்தில் கொட்டி கிடந்த ஆவேசத்தை கண்டவள் அதிர்ந்து நின்றாள். அவள் கண்களில் நீரின் ஓட்டம் நிற்கவில்லை.

அவரு எங்க பாஸ், அவர விட்டுரு, வேணாம்”, என்றாள். விட்டு விட்டான்.

கோபால் இன்னும் அலறிக் கொண்டிருந்தான். கூடி நின்ற கூட்டமும், தனசேகரும் புயல் கடந்து மிஞ்சிய மரங்களை போல் நின்றனர்.

தன் சட்டையை உதறி கொண்ட செழியன்,

எம்பேரு செழியன், இது என் நம்பர் அண்ட் அட்ரஸ். தனியாத்தா வரணும்னு அவசியமில்ல. போலிஸ கூட்டிட்டே வரலாம். எங்கேயும் ஓடிற மாட்டேன்”, சொல்லி விசிட்டிங்க் கார்டை தனசேகர் முன் நீட்டினான். தனசேகர் வாங்கி கொண்டான்.

செழியன் பைக்கில் ஏறினான்.

பின்னால ஏறு”, சந்தியாவிடம் சொன்னான்.

இல்ல, ஸ்கூட்டிய சரி பண்ணி”,

இப்போ ஏறுறியா? இல்ல இவனுகளையும் ரெண்டு காட்டு காட்டுவா?”, கீழே விழுந்து இடுப்பில் கை வைத்தபடி நெளிந்து கொண்டிருந்த காவல்காரர்களைப் பார்த்து கேட்டான்.

இல்லல்ல, வேணாம்”, என்றவள் பைக்கில் ஏறிக் கொண்டாள்.

பைக், கூட்டத்தை கிழித்துக் கொண்டு, அலுவலகத்தின் வாசலை கடந்து சென்றது.

சுஹாசினி சிரித்தாள்.

கோபால், நாவை சுழற்றி புலம்ப முடியாதவனாக, அலறிக் கொண்டே இருந்தான்.




ரம்மியமான சுருளி ஆற்றங்கரையில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆள் நடமாட்டம் சற்றே குறைவாக இருக்கும் பகுதியில் காரை நிறுத்தினான் துரை.

துரையின் அருகில் அமர்ந்திருந்த படி வெளியே சுற்றும் முற்றும் பார்த்தாள் கொடி. உண்மையான வாக்கியமாக சொல்ல வேண்டுமானால் அதிசயமாக பார்த்தாள் எனலாம்.

இறங்கி வந்து காரின் கதவை திறந்து,

இறங்கு", என்றான்.

இறங்கினாள். சுற்றி பார்த்தவளின் முகத்தில் இயல்பாக புன்னகை பூத்தது.

இது எந்த எடம். இவ்ளோ அழகான எடத்தை நா பார்த்ததேயில்ல", தன்னை மறந்து பேசினாள்.

அவன் கண்கள் சுருக்கினான்.

நீ இதுக்கு முன்னாடி இங்க வந்ததே இல்லையா?", கேட்டான்.

இல்ல, இது எந்த எடம்?", மீண்டும் கேட்டாள்.

இது சுருளி அருவி. எப்பவாவது மனசுக்கு குழப்பமோ, கஷ்டமோ இருந்தா இங்க வருவேன்", அவன் சொல்ல, அவள் அவனை பார்த்தாள்.

ஒங்களுக்கு என்ன கஷ்டம்?,... ம்ம்,... என்னாலயா?", கேட்டாள்.

சிரித்தான். இல்லை என்பதாக தலையசைத்தான்.

சாரி", அவள் சொன்னாள்.

எதுக்கு?", அவன் கேட்டான்.

என்னவோ சொல்லணும்னு தோணிச்சு",

உத்தம பாளையத்துல பொறந்துட்டு சுருளி ஆத்துக்கு வந்ததே இல்லன்னு சொன்னா, பச்ச புள்ளை கூட சிரிக்கும்",

அவள் சோகமாக தலை குனிந்தாள். அவன் சிரித்தான்.

என்கிட்ட பொய் சொல்லலியே",

எங்கப்பன் என்னைய வெளிய எங்கேயும் விட மாட்டாக. ஸ்கூல்ல டூர் கூட போனதில்ல. நா பொய் சொல்லல",

அவன் சிரித்தான்.

நாம போலாமா?", கேட்டான்.

நிமிர்ந்து பார்த்தாள்.

ஹனிமூன்", சொல்லி புருவம் உயர்த்தினான்.

மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

சரி, ஹனிமூன் அப்றம் போலாம். இப்போ விட்ட எடத்துலருந்து கதைய சொல்லு", என்றவன் அவளை தாண்டி முன்னே நடந்தான்.

கதையா?", கண்கள் சுருக்கினாள். வேகமாக அவனின் பின்னால் நடந்தாள்.

ம்ம்ம், ஒங்க கணக்கு வாத்தியாரு ஒங்ககூட படிச்ச அர்ஜுனை வாஷ் ரூம் கிளீன் பண்ண சொன்னாரு. அவன் அதை தினேஷ்கிட்ட சொன்னான். தினேஷ் அதை செழியன் மச்சாங்கிட்ட சொன்னான். அப்புறம் என்னாச்சு?", கேள்வி கேட்டவன் அந்த பாறை மீது அமர்ந்தான்.

அவள் அவனருகில் நின்றாள்.

உட்கார்ந்து கதைய சொல்லு, கேப்போம். எனக்கு கதை கேக்க ரொம்ப புடிக்கும்", துரை சொல்ல அவனருகில் அமர்ந்தாள் கொடி.




என்னாச்சு பாண்டியா?! வர வர வேலையில பழைய வேகமில்லியே. அந்த சகாயம் பைய கதைய முடிக்க சொல்லி மாசம் ஒண்ணாச்சு", தென்னந்தோப்புக்கு நடுவில் நின்ற காருக்கு அருகில் நின்ற மதிவாணன் சொன்னார்.

இல்ல மச்சான், அவன்", பாண்டியன் முடிக்கும் முன்,

இல்லையா?! என்னலே சோக்கடிக்கிறியா? அந்த பைய உசுரோட இருந்தா வார எலக்சன்ல நாம மண்ணா திங்க வேண்டியதா. தலைவரு காலணாக்கு கூட மதிக்க மாட்டாரு", மதிவாணன் கோபமாக பேசினான்.

அதில்லீங்க் மச்சான், அவனுக்கு ரெண்டு போட்ட புள்ளைக. பாவம், இவன் செத்தா அதுக பொழப்பு,.....", பாண்டியன் வாக்கியத்தை இழுத்தார்.

அடுத்தவன் பொழப்ப பத்தி கரிசனப்பட்டா அரசியல் பண்ண முடியாது. இப்போலாம் நீ ஆளே சரியில்ல", மதிவாணன் சொன்னார்.

அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க,... சகாயம் தேர்தல்ல நிக்க கூடாது. அம்புட்டுத்தன!! அதுக்கு எதுக்குங்க, உசுரெடுத்துக்கிட்டு. அதேன்,.... மிரட்டி வாப்பஸ் வாங்க வச்சிபோடலாம்னு யோசனை போட்டேனுங்க. அதுக்கான வேலைய கூட ஆரம்பிச்சாச்சுங்க்", பாண்டியன் பவ்யமாக பேசினார்.

வேலையன்னா!! என்ன வேலை?",

அவம்பொண்ண தூக்கியாச்சுங்க்",

மதிவாணன் சிரித்தார்.

பொண்ண தூக்கி வச்சிட்டு, மெரட்டுனா வாப்பஸ் வாங்கிருவானா? அவம்போட்டி போடுறது பணத்துக்கு இல்லையல்ல. பதவிக்கு", மதிவாணன் சந்தேகமாக கேட்டார்.

கண்டிப்பா வாப்பஸ் வாங்க வச்சிரலாமுங்க்.!!. நீங்க வெசனப்படாம வூட்டுக்கு போங்க் மச்சான். நாம்பத்துக்குறேனுங்க்", பாண்டியன் சொல்ல,

ஏதோ பாத்து செய். சரி பட்டு வர்லன்னு வையி. யோசனை பண்ணிட்டுருக்காம அறுத்து போட்டுரு. பின்னால வாரத நாம்பாத்துக்குறேன்",

சரிங்க் மச்சான்",

அங்க என்னல பராக் பாத்துட்டு நிக்குற, வண்டிய எதுல", ஓட்டுனரை பார்த்து மதிவாணன் சொல்ல ஓட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்து காரின் சாவியை திருகினார்.

மதிவாணன் ஏறி அமர, கார் கிளம்பியது.


மாமா, அந்த சகாயம் பையல, கண்ண மூடிட்டு கழுத்தறுத்து போடுறத வுட்டுபோட்டு, பொண்ண கடத்தி வச்சு பஞ்சாங்கம் பாக்குறது என்னத்துக்குங்க?", பாண்டியனின் அருகில் நின்ற சரவணன் கேட்டான்.

செழியன், என்னைய கண் காணிச்சிட்டே இருக்கான். இப்போ, கொலையெல்லா வேணாம்", பாண்டியன்.

கண்காணிக்கிறான்னா, புரியலங்களே", சரவணன் சொல்ல, சுற்றி பார்த்தார் பாண்டியன்.

தென்னந்தோப்பு முழுவதிலும் தேங்காய் வெட்டும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பணியாட்கள் பலரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.

இங்கிட்டுருக்ற எவனோ ஒருத்தன், செழியனுக்கு தகவல் சொல்றான்", பாண்டியன் சொன்னார்.

எவனோன்னா, யாரு?!", கேட்ட சரவணன் சுற்றி பார்த்தான்.

தெரில", என்ற பாண்டியன் தன் பைக்கில் ஏறினார்.

தெரியாம எப்புடி மாமோ சொல்றீக?", சொல்லி விட்டு பைக்கின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தான் சரவணன்.

சிரித்தார் பாண்டியன்.

நெதம் பகல்ல நா செய்ற எல்லாத்தையும் ராத்திரியில வந்து, அவன் ஆத்தாகிட்ட லிஸ்டு போடுறமுல எம்மொவன். அப்போ, ஆள் வச்சு வேவு பாக்கான்னு தான அர்த்தம்?", சொல்லிக் கொண்டே பைக் சாவியை திருகினார் பாண்டியன்.




இயற்கை எழில் தாண்டவமாடும் முல்லை பெரியாற்றின் கரையின் ஓர் பகுதியில் பைக் சாவியை திருகி, அதன் இயக்கத்தை நிறுத்தினான் செழியன்.

இங்க எதுக்குல கூட்டிட்டு வந்த? என்னைய வீட்ல கொண்டு போயி வுடு", பைக்கிலிருந்து இறங்கிய சந்தியா கட்டளையாகச் சொன்னாள்.

செழியனின் அலைபேசி ஒலித்தது.

ஒரு நிமிஷம் இர்றி, வர்றேன்", என்றவன் அழைப்பை ஏற்றான்.

ஒங்கப்பனும் மதிவாணனும் இன்னைக்கு, மதிவாணனுக்கு சொந்தமான தென்னந்தோப்புல பாத்து பேசிக்கிட்டாங்க செழியா", எதிர்முனை சொன்னது.

என்ன பேசிகிட்டாங்கன்னு தெரியுமா?", செழியன் கேட்டான்.

இல்ல, அத தெரிஞ்சிக்க முடியல. இனியும் ஏதாவது தகவல் தெரிஞ்சா கூப்பிடுறேன்", எதிர்முனை சொன்னது.

சரில, பாப்போம்", சொல்லி அழைப்பை துண்டித்து கொண்ட செழியன்,

நீ என்ன சொன்ன?", சந்தியாவிடம் கேட்டான்.

ஓ மூஞ்சி", சொல்லி விட்டு திரும்பி நடந்தாள் சந்தியா.

ஏ நில்றி", என்றவன் பைக்கை நிலை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி சென்று அவளது கையை பிடித்தான்.

நில்லுன்னு சொல்றேன்ல. நா ஒங்கிட்ட பேசணும்",

அவள் தன் கையை அவனது கைக்குள் இருந்து உருவிக் கொள்ள திண்டாடினாள். உணர்ந்து கொண்டவன் சட்டென விடுவித்து,

சாரி", என்றான்.

நா போறேன். நீ பேசுனதையே பேசி சாவடிப்ப", சொல்லி விட்டு திரும்பி நடந்தாள்.

அதில்லடி, கொடிய பத்தி பேசணும்", என்றான்.

நின்று திரும்பினாள். அவனது கண்கள் அவளின் கண்களை ஊடுருவி காதல் பேசியது.



கண்ணும் கண்ணும்
கொள்ளையடித்தால்
காதலா? கலவரமா?

தொடரும்.......


சக்தி மீனா....
 
Last edited:
Top