• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அச்சம் தவிர் அனிச்ச மலரே 🌷19

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
அத்தியாயம் 19

ஒரு நொடி மட்டுமே நின்ற சந்தியா, திரும்பி கூட பார்க்காமல், வேகமாக நடந்தாள்.

ஓய்,... நில்றி", என்றபடி பைக்கை மிதமான வேகத்தில் இயக்கி, சந்தியாவை நோக்கி வந்தான் செழியன்.

சரக்கடிக்குறத கூட வுட்டுடுறேன், என்னைய கட்டிக்கிறியா?", அவளருகில் வந்து கேட்டான். அவள் நேராக பார்த்து, நிற்காமல் நடந்தாள்.

கேள்வி கேட்டா பதில் சொல்றி",

பேசாமல் நடந்து கொண்டிருந்தாள்.

ஒங்க வீட்ல வந்து பொண்ணு கேக்கட்டுமா?", கேட்டான். அதிர்ந்து நின்று திரும்பி பார்த்து முறைத்தாள்.

புருவம் உயர்த்தி சிரித்தான் செழியன்.

ஒனக்கு சுஹாசினிய எப்படி தெரியும்?", சந்தியா கேட்டாள்.

எந்த சுஹாசினி?", ஒன்றுமறியாதவன் போல் சிந்தனை செய்து, திருட்டு முழி முழித்தான்.

ம்ம்,.... வீட்ல வேவு பாக்க கல்யாணியக்கா, ஆஃபிஸ்ல வேவு பாக்க சுஹாசினியா?. ஏண்டா ஒனக்கு இந்த ஈன புத்தி?", கேட்டாள்.

திரு திருவென முழித்து சிரித்தான்.

வெக்கமா இல்ல?",

இல்லையே", செழியன் சொன்னான்.

இப்போவே என்னை ஆள் வச்சி வேவு பாக்குற!! தப்பி தவறி ஒன்னைய கட்டிக்கிட்டா,.... வெளங்கிரும்", அவள் முடிப்பதற்குள்,

அப்போ யாரும் தேவையில்ல, நீதான் எங்கூடவே இருப்பியே", சொல்லி சிரித்தான்.

முறைத்து விட்டு மீண்டும் வேகமாக நடந்தாள். அவனும் பைக்கும் அவளுடன் நடந்தது.

வீட்டுக்கு வந்து பொண்ணு கேக்கட்டுமா?", மீண்டும் கேட்டான்.

ஏன்?!, மிஸ்டர் பாண்டியன் கையால நா வெட்டு பட்டு சாகணுமா? எங்க ஐயனையும் ஆத்தாளையும் அனாதையாக்க முடிவு பண்ணிட்டியாட்டுருக்கு?", பட படவென்று அவள் சொல்ல, அவனும் பைக்கும் பட்டென்று நின்றது. வேகமாக நடந்து கொண்டிருந்தவள், சற்று தொலைவு நடந்த பின், நின்று திரும்பி பார்த்தாள்.

அப்போது தான் அவள் சொன்ன வார்த்தையின் ஆழம் அவளுக்கு விளங்கியது.

ச்சே", சொல்லி மீண்டும் திரும்பி வந்தாள்.

சாரி, ஒன்னை காயப்படுத்தணும்னு நெனைக்கல. நீ புரிஞ்சிக்கணும்னு தா சொன்னேன்", சந்தியா சொல்ல,

பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் கண்கள் பதித்திருந்தான் செழியன்.

இங்க பாரு செழியா, நா ஒனக்கு ஏத்தவ இல்ல. சாதியிலயும், அந்தஸ்துலயும், கல்யாண வாழ்க்கைக்கு தகுதியுள்ள ஒரு பொண்ணாவும் கூட நா ஒனக்கு ஏத்தவ இல்ல. புரிஞ்சிக்க, நடக்காத ஒண்ணுக்கு ஆசைப்படாத",

ஒனக்கு என்னைய புடிக்குமா புடிக்காதா?", அவன் நிமிர்ந்து கேட்டான்.

அறிவு கெட்ட பையல, நா சொல்லது புரியலயால ஒனக்கு? ", அவள் சற்று கோபமாகவே கேட்டாள்.

ஒனக்கு தாண்டி புரியல!! சாதி, அந்தஸ்து, ஒனக்கும் எனக்கும் புள்ளை பெத்துக்க தகுதி இருக்கு இல்ல, இதெல்லாம் கேக்கல!! ஓ மனசுல எனக்கு எடம் இருக்கா இல்லியான்னு கேக்குறேன். டைரக்டா பதில் சொல்லு", செழியன் சொன்னான்.

அவள் பதில் சொல்லாமல் நடக்க எத்தனித்தாள். வலது கையால் பைக்கை பிடித்த படி இடது கையால் அவளது கையை எட்டி பிடித்தான்.

விடு", உதற முயன்றாள். முடியவில்லை.

நீ முடியவே முடியாதுன்னு உறுதியா இருந்த ஒடனே, நீ நினைக்கிற மாதிரி, நா கெடைக்கிறவளை எல்லாம் கட்டிட்டு போயிர மாட்டேன்", அவன் சொல்ல, அவள் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் முட்டியது. கையை விட்ட பிறகும் அவள் நகரவில்லை.

ஒங்க வீட்ல ஒருத்தன பாத்தோ, இல்ல, ஒனக்கா ஒருத்தன புடிச்சோ, நீ ஒருத்தன கட்டிக்கிட்டு போயிட்டா கூட, சட்டுனு வேற எவளையும் கட்டிக்க என்னால முடியாது ", செழியன் சொல்ல, சந்தியாவின் கண்கள் தாண்டி கொட்டியது கண்ணீர்.

ஆனா, நீ யாரை கட்டிக்கிட்டாலும் சரி, அது மேட்ரு இல்ல. நீ சந்தோஷமா இருந்தா நா நிறைவா இருப்பேன். என் காதலுக்கு அது தா லட்சியம். என் காதல் சாட்டிஸ்ஃபையாக, ஓ சந்தோஷம் மட்டுந்தான் தேவை!!", செழியனின் சொல்லில் உறைந்து நின்றவளின் கண்களில் நீர் மட்டும் உருகி கொண்டிருந்தது.

பைக்கில் ஏறி, பைக்கின் கிக்கரை உதைத்தான்.

பின்னால ஏறு", என்றான்.

கண்ணீர் நிரம்பிய கண்களுடன் கேள்வியாக பார்த்தாள்.

எம்புட்டு தூரம் நடப்ப!! ஏறு, ஊர் பஸ் ஸ்டாப்ல விட்போட்டு போறேன்", என்றான்.

ஏறிக் கொண்டாள். பைக் கிளம்பியது.

முல்லை ஆற்று நீரின் ஆழத்துக்குள் இருந்து வெளி வந்த இரு விழிகள் அவர்கள் சென்ற பைக்கை பார்த்து சுருங்கியது.

மலைக்குள் விழுந்த சூரியனை தன் வீட்டு பால்கனியில் நின்று பார்த்து கொண்டிருந்தான் தனசேகர்.

தனா", தன் தந்தையின் அழைப்பில் திரும்பினான்.

ஆஃபிஸ்ல என்ன பிரச்சினை?", கேட்டார் தனசேகரின் தந்தை வெள்ளையன்.

அந்த கோபால்,... அவன் ஒரு இடியட், ராஸ்கல், சந்தியாவை போய்,....",

ம்ம், நானும் கேள்விப்பட்டேன்", அவர் சொல்ல,

ப்பா, சந்தியா அப்படிப்பட்ட பொண்ணில்லப்பா", தந்தையின் கையை பிடித்துக் கொண்டு சொன்னான் தனசேகர்.

அவர் சிரித்தார்.

அந்த பொறுக்கி சில பேர்கிட்ட என்னையும் சந்தியாவையும் பத்தி தப்பா சொல்லிருக்குறான். இன்னும் கொஞ்சம் பேர் கிட்ட அவனையும் சந்தியாவையும் சேத்தி வச்சி தப்பா சொல்லிருக்குறான். அவன் ஒரு அல்பம், ஃப்ராடு,.. அவனுக்கு சந்தியா பேரை கெடுக்கணும். பியூரா சொல்லணும்னா இது ஒரு ஹாராஸ்மெண்ட். அவ மேல ஆக்ஷன் எடுக்கணும்", சொன்னான் தனசேகர்.

ம்ம், தெரியும், கோபால் கொஞ்சம் சரியில்லைன்னு தெரியும். ஆனா,...",

ஆனா என்னப்பா? அவன் ஒயிஃப் ஒங்க ரிலேட்டிவ். அதான!! சந்தியா அப்பா கூட ஒங்க சின்ன வயசு ஃப்ரெண்ட் தா. அதிய மறந்துராதீக!!", உணர்ச்சி பெருக்கில் வட்டார மொழி கலந்து விட்ட, தனசேகர் பேச்சில் கோபம் தெரிந்தது.

அவ என் ஃப்ரெண்ட் பொண்ணு மட்டுமில்ல. எம்பையன் கல்யாணம் கட்டிக்க ஆசைப்படுற பொண்ணு. அதுவும் தெரியுமுய்யா", வெள்ளையன் சொல்ல,

தனா அமைதியானான்.

சந்தியா நல்ல பொண்ணு. கோபால் சரியில்ல, எனக்கு தெரியும். அவன் குடிப்பான்னு தெரியும், மக வயசுல இருக்கிற பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்குற அளவுக்கு கேவலமானவன்னு எனக்கு தெரியாது. அதே கொஞ்சம் அசால்ட்டா இருந்துபோட்டேன்", தனாவின் தந்தை வெள்ளையன் சொன்னார்.

இப்போ தெரிஞ்சு போச்சல்ல!! அவன டிஸ்மிஸ் பண்ணிரலாம். அவனால நமக்கு பிரச்சினை தா. இன்னைக்கு நடந்த விஷயம் கேஸ்ஸானா, நம்ம கம்பனி பேர் தா கெட்டு போகும்",

ம்ம், சரி தா, ஆனா?",

இன்னமும் என்னப்பா?", தனா எரிச்சலோடு கேட்டான்.

இல்லய்யா!! கோபால் பொஞ்சாதி..., பாவம்,.. அவளுக்கு ரெண்டு பொட்ட புள்ளைக, ஒரு பையன். மூத்த பொண்ணு இப்போதே காலேஜ் படிச்சிட்டுருக்குறா . அவ தலையெடுத்துட்டா, இந்த கோபால் பைய வால ஒட்டர நறுக்கிபோடலாமுன்னுதே இம்புட்டு நாளா அவன் அட்டகாசத்தை கண்டும் காணாம இருந்தேன் ", வெள்ளையன் சொல்ல,

தனா சிந்தித்தான்.

ஏனுங்க் காப்பி ஆறி போயிட்டுருக்குதுங்க,..”, சொல்லிக் கொண்டே வந்தாள் சில முடிகளில் மட்டுமே நரை கூடிய பெண்ணொருத்தி.

வாரோம்டி, வேலை விசயமா பேசிட்டுருக்குறோமல்ல”, என்றார் வெள்ளையன்.

வேலை விசயத்த காப்பிய குடிச்சிபோட்டு பேசுறது", என்றவள் இருவர் முகத்தையும் பார்த்தாள்.

எதோ பிரச்சனைன்னு தெரியுது. என்னன்னு சொன்னா, எனக்கு தெரிஞ்ச ஐடியாவ சொல்லுவேனல்ல”, என்றாள் அவள்.

விசயத்தை விளக்கி கூறினான் தனா.

அவளும் சிந்தித்தாள்.

எனக்கு ஒரு யோசனை தோணுது", என்றாள்.

என்ன ரோசன?", கேட்டார் வெள்ளையன்.

பேசாம, கோபால் ஒயிஃப்க்கு ஒரு ஜாப் போட்டு குடுத்துட்டு, இந்த கோபாலை வேலைய வுட்டு எடுத்துருவோம். இனி அவன் நம்ம ஆஃபீஸ்ல வொர்க் பண்ணா, நம்ம வொர்க்கர்ஸ்க்கே நம்ம மேல நம்பிக்கை இல்லாம போயிரும். அதுலயும் ஃபீமேல் வொர்க்கர்ஸ், இன் செக்கியூரா ஃபீல் பண்ணுவாங்க", அவள் சொல்ல வெள்ளையன் சற்று நேரம் சிந்தித்தார்.

ம்ம், அம்மா சொல்றதுதேஞ்சரி!! அந்த கோவால் பையல வேலைய வுட்டு தூக்கிரு தனா. அவம்பொஞ்சாதிக்கு ஏத்தா மாதிரி ஒரு வேலைய போட்டு குடு. இன்னைக்கே,..,.. ம்ம், நேரத்த கடத்த வேணாம் இப்போவே, கோவால் பொஞ்சாதிய கூப்பிட்டு பேசிரு. அவ போலீஸ்க்கு போயிர போறா. விசயம் பெருசாயிரும்", வெள்ளையன் எச்சரிக்கை செய்ய தனா தன் அலைபேசியை எடுத்து டயல் செய்தான்.

தனாவின் தாய் செல்லி சிரித்தாள்.

விடியலின் செங்கதிர்கள் பாகுபாடின்றி புவியின் எல்லா பகுதியையும் தழுவியது. செங்கதிர் ஒளி பார்த்து சேவல் ஆடவன் சத்தமாய் கூவினான்.

மதிவாணன் வீட்டின் கடிகாரத்தின் சின்ன முள் ஐந்தை கடந்தது.

ஏல, சரியா புடில", பாண்டியன் சொல்ல, மதிவாணனுடைய தொழுவத்தில் நின்ற பசு மாட்டின் முக்கணாங்கயிற்றை இழுத்து பிடித்தான் சரவணன்.

மாட்டின் வாலை பிடித்திருந்தார் பாண்டியன்.

என்னல இது? எம்புட்டு நேரமா நின்னுட்டுருக்குறோம், பேயவே மாட்டேங்குது", பாண்டியன் சொல்ல,

எனக்கு என்னங்கணா தெரியும்? அதுக்கு எப்போ வருமோ என்னவோ?", சரவணன் சொன்னான்.

சில நிமிடங்களில் மாடு சிறுநீர் கழிக்க துவங்கியது. சட்டென்று கையில் இருந்த பெரிய செம்பு ஒன்றில் அதை பிடித்தார் பாண்டியன்.

ஆத்தீ, என்னங்ணா, நீங்க போயி மாட்டு மூத்திரத்த புடிச்சிட்டுருக்கீங்கோ. அதிய என்கிட்ட குடுங்கோ", நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடி வந்து கேட்டார்.

விடுல, ஆருக்காக செய்றேன்? என் மச்சானுக்காகத்தான!! எம்மருமொவா சுவாதி நல்லாருக்கணும்னு நடக்க போற பூசைக்கு, நா வேலை செய்யாம ஆரு செய்வாக?", சொல்லி முடிக்கும் போது செம்பு நிறைந்திருந்தது.

மாடு விடுதலை பெற்றது.

ஏலே, இத பத்திரமா பூசை சாமான் கூட வச்சிரு", சொல்லி சரவணன் கையில் கொடுத்தார் பாண்டியன்.

தங்கத்தை கூட தோண்டி எடுத்துபோடலாம் போலருக்கு. இதிய புடிக்கதுக்கு, தவமிருக்க வேண்டியதாட்டுருக்குதுல", பாண்டியன் சொல்ல சிரித்துக் கொண்டே சென்றான் சரவணன். புதிதாக வந்தவனும் சிரித்தான்.

என்னல, தோப்பு பக்கம் வேலை இல்லியாக்கு?! இங்குட்டு சுத்திட்டுருக்குற?", பாண்டியன் அந்த புதிய ஆடவனிடம் கேட்டார்.

அண்ணே! ஒரு ரகசிய சேதிங்க!! அதிய ஒங்க காதுல போட்டுபோட்டு போலாம்னு வந்தேனுங்க", என்றான் அவன்.

என்னல சேதி?",

அவன் பாண்டியனின் காதுக்குள் ஏதோ சொன்னான். சட்டென அவனின் சட்டைக் காளரை பற்றி அழுத்தி பிடித்தார் பாண்டியன்.

என்னல சொல்லிட்டுருக்ற? கனா கினா எதும் கண்டுட்டு வந்து ஒளர்றியா நீயி?", கேட்ட பாண்டியனின் கண்கள் கோபத்தில் சிவந்தது.

சாப்பாடு வேலையெல்லா முடிஞ்சு போச்சுங்க அண்ணி. இனி பொறப்பட வேண்டியதே”,

வேள்விக்கு வருவோருக்கு சாப்பாடு சமைக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமையல் காரர், அவருடைய வேலையை முடித்து விட்டதை கௌசல்யாவிடம் அபிராமி தெரிவித்தாள்.

கௌசல்யா சொரணையின்றி அந்த அறையில், ஒரு கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

என்னங்கண்ணி இது? இன்னும் செத்த நேரத்துல பூசையில, யாகத்துக்கு முன்னால இருக்கணும். இப்புடி மூஞ்சிய தூக்கி வச்சிட்டுருக்கீக?”, அபிராமி அழுத்தமாக கேட்டாள்.

ஆமா, பூசையாமா, பூசை, அந்தாளு என்னத்துக்கு பூசை பண்றாகன்னு தெரியும்ல. இதுல என்னத்த சந்தோசப்பட?!”,

அந்தாளா?”, அபிராமி விழி விரித்தாள்.

வேறென்ன அபிராமி, பெத்த புள்ள மனச மாத்த வேலைப்பாடு செய்றவன என்னான்னு சொல்லட்டும்?”, கோபமும் அழுகையும் முட்டியது கௌசல்யாவுக்கு.

வேலைப்பாடா? என்ன பேசுறீக? எந்த ஒலகத்துலயாது, பெத்த அப்பன், மகளுக்கு வேலைப்பாடு செய்வாகளாக்கு?”, அபிராமி குரலில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் நிறைந்திருந்தது.

ஏன் செய்ய மாட்டாக? பாண்டியண்ணே செழியன அவுக வசத்துலயே வச்சுக்க இன்னைக்கும் நடிச்சுட்டுருக்காகல்ல! அப்டித்தே எங்க வூட்டுக்காரவுக, எம்புள்ளைய வசத்துல வச்சுக்க, இந்த அக்கிரமத்த பண்ணிக்கிருக்காக”, கௌசல்யா சொல்ல, அபிராமியும் கௌசல்யா அருகில் முகம் சுருக்கி அமர்ந்தாள்.

அட, என்னாச்சு அபிராமி? சட்னு மொகம் சுருங்கி போயிருச்சு. நா ஏதோ ஆத்தாமையில் சொல்லிபோட்டேண்டி!!”, கௌசல்யா சொன்னாள்.

விரக்தியாக சிரித்தாள் அபிராமி. கௌசல்யா அபிராமியின் கை தொட, அபிராமியின் கண்களில் இருந்து சாடியது நீர்.

ஆத்தீ, என்னாச்சுடி?”, கௌசி கேட்டாள்.

முடிலண்ணி, நெத நெதம் செத்து செத்து பொழைக்கிறேன். இவைங்க என்னத்த வசப்படுத்தி என்ன பண்ண? புள்ளைக உறுதிக்கு முன்னால இவுக வசியமெல்லா காத்துல கரைஞ்சி போற கற்பூரந்தே”,

இந்தா, புரியிற மாதிரி சொல்லுடி. ஒரு எழவும் புரியல”, கௌசல்யாவின் குரலில் பரிதவிப்பு தெரிந்தது.

கொடி கல்யாணம் முடிஞ்சதும் அந்த தினேஷ் பைய ஊர விட்டு போனான்ல",

ஆமா",

போனவன் சும்மா போகல, என் பொழப்புல கொள்ளிய வச்சுபோட்டு போயிட்டான். எடுபட்ட பைய, இவுகள பத்தி எல்லாத்தையும் நம்ம செழியங்கிட்ட சொல்லிபோட்டு போயிட்யான். இப்போ என் வூடு சுடுகாடு மாதிரியிருக்குது. நெதம் ஐயனுக்கு மொவனுக்கு தர்க்கந்தே. ரெண்டு பேருக்கும் நடுவுல கெடந்து நாந்தே அல்லாடுறேன்”, சொல்ல சொல்ல கண்கள் கண்ணீரை சுரந்து கொண்டிருந்தது.

அப்டின்னா, சுவாதிக்கும் இவுக செய்ற அக்ரமமெல்லாந்தெரியுமா?”, கௌசல்யா தன்னை மறந்து சொல்லும் போது,

ம்மா, ம்ம்மா”, என்று சுவாதி அழைக்கும் சத்தம் கேட்டது.

அபிராமி வேக வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

ம்மா, டைமாச்சு வாம்மா, டிஃபன் குடு, எனக்கு பசிக்குது”, சுவாதியின் குரலில் இருந்த தெளிவு அபிராமிக்கு நிம்மதியை தந்தது.

டைமாச்சா? ஏண்டி ஒன்னய இன்னிக்கு லீவு போட சொன்னாகல்ல! பூசையே ஒனக்காகத்தாண்டி செய்றாக”, கௌசல்யா சொல்ல,

ப்ளீஸ்மா, நீ வேற கடுப்ப கெளப்பாத. தேர்தல்ல ஜெயிக்க பூசையாம். அப்பா இருக்குற கட்சி கொள்கைக்கும், அவுக செய்ற வேலைக்கும் கொஞ்சமாச்சும் சம்மந்தமிருக்குதா? அப்பாவ இப்டி நா நெனைக்கவே இல்ல. அவுக என்னவோ பண்ணிட்டு போவட்டும். நா இந்த கருமத்துலயெல்லாம் கலந்துக்க மாட்டேன். அப்பா பாக்குறதுக்குள்ள நா வெளிய போணும், சீக்ரம் ரெண்டு இட்லிய குடு
இல்ல, வெளிய எங்கியாது சாப்டுக்குறேன்”, சொல்லி விட்டு திரும்பினாள் சுவாதி.

ஏ, இர்றி ரொம்பத்தே முறுக்கிக்குற? வா ”, சொல்லி அழைத்து சென்றாள் கௌசல்யா.

கௌசல்யா தட்டை எடுத்து வைத்தாள். அபிராமி இட்லிகளை வைத்தாள். கௌசல்யா சாம்பாரை ஊற்றினாள். சுவாதி சாப்பிட்டு முடித்து கை கழுவினாள்.

வேக வேகமாக ஹாலுக்கு வந்த சுவாதி, சோஃபாவில் அமர்ந்திருந்த மதிவாணனை பார்த்து, ஒரு நொடி நின்று, பிறகு, வாசலை நோக்கி நடந்தாள்.

தினத்தந்தி பேப்பரால் தன்னை மறைத்துக் கொண்டிருந்த மதிவாணனுக்கு மகளின் காலடி ஒசை கேட்காமல் இல்லை.

சுவாதி”, அழைத்தார்.

நின்று திரும்பினாள். பேப்பரை தாழ்த்தினார் மதிவாணன்.

பச்சை நிறத்தில் கழுத்து கூட தெரியாமல் அவள் அணிந்திருந்த காட்டன் சுடிதாரும், அவளது கையிலிருந்த காகித கோப்புகளும், அவளை படிப்பாளியாக அல்ல, சிறந்த சிந்தனையாளினியாக காட்டியது. கொள்கை பேசும் பத்திரிகையாளர்களை மதி வாணனுக்கு பிடிப்பதில்லை. இப்போது தன் மகளின் தோற்றம், அதே கொள்கை பிடிப்பின் பிம்பத்தை காட்டுவது, அவருக்கு கலக்கத்தை தந்தது.

இன்னைக்கு வீட்ல விசேசமிருக்குன்னு சொன்னேனல்ல! இப்டி எனக்கென்ன போச்சுன்னு நீ பாட்டுக்கு போயிட்டுருந்தா எனக்கென்ன மரியாதையாக்கு?”, கனமான குரலில் மதிவாணன் சொல்ல, கௌசல்யா எச்சில் விழுங்கினாள். பாண்டியன் புழக்கடையில் இருந்து வீட்டுக்குள் வந்தார்.

இல்லியேப்பா, நேத்தே எனக்கு இதுலல்லாம் இன்டெரெஸ்ட் இல்லன்னு சொல்லிட்டேனே!”, சுவாதி சொல்ல, நற நறவென பற்களை கடித்த மதிவாணன், தன் கை விரல்களை மடக்கி கோபத்தை அடக்கினார்.

நீ இன்னைக்கு வெளிய போகக்கூடாது”, கட்டளையிடும் தோரணையில் தகப்பன் சொல்ல,

அதிய முடிவு பண்ண வேண்டியது நா. நா போவேன்”, மகளும் அதே தோரணையில் சொன்னாள்.

இந்தா, இதென்ன பழக்கம்? அப்பாவ எதுத்து பேசுற பழக்கம்! அறைஞ்சிபுடுவேனாமா”, பாண்டியன் சுவாதியை அதட்டினார்.

நீங்க வேற ஏன் மாமா? நா நேத்தே சொல்லிபோட்டே, எனக்கு முக்கியமான வேலை இருக்குதுன்னு. பொறவும் இப்டி பூஜை புண்ணாக்குன்னு லீவு போட சொன்னா என்ன அர்த்தம்?”, சுவாதி பாண்டியனிடம் கேட்டாள்.

என்னாத்தா இது? அப்பா ஊர கூட்டி நடத்துற பூசையில நீயில்லாட்டி நல்லாருக்குமா சொல்லு?”, அபிராமி கனிவாக கேட்டாள்.

அய்யோ, அத்த,... நீங்களும் இவுக கூட சேந்துட்டீங்களா?! இப்போ என்ன? பூசை நடக்கும் போது நா கோயில்ல இருக்கணும், அம்புட்டுதான!! எனக்கு ஒரு முக்கியமான இன்வெஸ்டிகேஷன் இருக்குது. ஒரு கொலை கேஸ் விசயமா ஒருத்தர மீட் பண்ண அப்பாயின்மென்ட் வாங்கிருக்குறேன். அவர பாத்துட்டு நேரா கோயிலுக்கு வந்துர்றேன், போதுமா?”, சுவாதி பாண்டியனிடம் சொல்ல பாண்டியன் மதிவாணனை பார்த்தார்.

போதுமா?”, சுவாதி மதிவாணனை பார்த்து, கேட்டு, புருவம் உயர்த்தி சிரித்தாள்.

மதிவாணன் அருகில் வந்து அவரது தோளில் கை போட்டு கேட்டாள்,

போதுமா பிரசிடென்ட் சார்?”,

என்ன இன்வெஸ்டிகேஷன்? எந்த கொலை கேஸ்?", மதி வாணன் கேட்டார்.

அவரது தோளை அலங்கரித்த மகள்ன் கைகள் கீழிறங்கியது. சிரித்தாள்.

யார பாக்க போற?”,மீண்டும் மதிவாணன் கேட்டார்.

அது கான்ஃபிடென்ஷியல், வெளிய சொல்லக்கூடாது”, சுவாதி சொன்னாள்.

அப்பாகிட்ட கூடவா?”,

அப்பாவ அடையாளம் காட்டுன அம்மாகிட்ட கூட சொல்லக்கூடாது. ஏன்னா,... அது தா என் தொழில் அறம்”, சுவாதி சொன்னாள்.

அறமா? தொழில் தர்மமுன்னுல்ல சொல்வாக”, பாண்டியன் கேட்டார்.

அர்ஜுனன் ஜெயிச்சு கூட்டிட்டு வந்த பாஞ்சாலிய அண்ணந்தம்பிங்க அஞ்சு பேருக்கும் பொண்டாட்டியாக்குனது மகாபாரத தர்மம். ராமனுக்கு தர்ம பத்தினியா வந்த சீதையை தீக்குளிக்க சொன்னதும், காதல் சொன்ன சூர்ப்பனகை மூக்கை அறுத்து அவமானப்படுத்தினதும் ராமாயணத்து தர்மம், கண்ணகி, மாதவின்னு ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையையும் நாசமாக்குன கோவலனை நாயகனாக்கி அழகு பாத்தது சிலப்பதிகாரத்து தர்மம். மனிதத்தை கொலை பண்ணிட்டு, நடந்த அயோக்கியத்தனத்தை மறைக்க சொல்ற பாலிஷான வார்த்தையாத்தே இங்க தர்மம் பயன்படுது. எனக்கு தர்மம்ங்குற வார்த்தையில நம்பிக்கை இல்ல மாமா. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு வாதாடுன, நம்ம ஆதி பொதுவுடைமை சமூகம் சொல்லித்தந்த அறத்த தா நா நம்புறேன். அது ஜெயிக்கும், குற்றவாளிகளை குற்றவாளிகளாவே சமூகத்துக்கு அடையாளம் காட்டும்”, சுவாதி சொல்ல, பாண்டியன் மதிவாணன் உட்பட எல்லோரும் அதிர்ந்து நிற்க, வாசலில் கை தட்டும் ஓசை கேட்டது. எல்லோரும் திரும்பி பார்க்க, செழியன் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்.

அதிர்ந்து உறைந்தார் பாண்டியன்.

சிரித்தாள் சுவாதி.

குற்றம் குற்றமே!

அறம் வெல்லும்!

தொடரும்…….

சக்தி மீனா,……
 
Last edited:

vinodha mohan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 29, 2023
Messages
29

அறத்திற்கும் தர்மத்துக்குமான வேறுபாடு ... 😍😍😍
வியப்புடன் நான்...

எத்தனை காதல்கள் இங்கே!!!
அத்தனையும் கனவுகளாய் மறையுமோ!!!
எதிர்காலமாய் மாறுமோ!!!

அறத்தின் வழி செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் ...
அத்தனை தீமைகளையும்
உள்ளடக்கியவர்கள்...
இந்த கோணங்கள் வித்தியாசமானவை...

சூப்பர் மீனா😍😍😍😍
Waiting for nxt move .. loved today's epi...
 
Thanks vino🤝🏻
 
சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
இந்த ஜாதி இன்னும் என்ன என்ன பண்ணுமோ
ஏற்கனவே நிறைய பண்ணிருச்சு sis🤝🏻 thank you 😊
 
Top