• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அடியே - கடல்

Dharani

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
1
மணிரத்னம் அவர்கள் இயக்கிய கடல் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 'அடியே'.கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியிருப்பார். அதுவரைக்கும் தமிழ் சினிமா பாடல்களில் நாம் கேட்டு பழக்கப்பட்டிராத இசைக்கோர்ப்பு. மிகவும் புத்துணர்வுடன் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு ஆண் லீட் மற்றும் கோரஸ், கிட்டாரும் விட்டு விட்டு ஒலிக்கும் ட்ரம்ஸும் என மினிமலிஸ்டிக்காக உருவாக்கியிருப்பார் ஏஆர் ரஹ்மான் அவர்கள். பாடலின் கரு தேடல், பயணம்.
"அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற, பல்லாங்குழி பாதை புரியல உன்னை நம்பி வாரனே, இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே"
தான் பண்ணிய, பண்ணிக்கொண்டிருக்கும் பாவங்களிலிருந்து தப்பிக்க வேண்டுகிற காதலனின் கைப்பிடித்து காதலி வழிநடத்திச் செல்கிறாள்.
" மீன தூக்கி றெக்க வரைஞ்ச, வானம் மேல நீ தூக்கி எறிஞ்ச, பறக்கப்பழக்குறியே ... எங்கிருந்து வந்தாயோ நீ? " இதுதான் இப்பாடலின் முத்தாய்ப்பான வரிகள். சுதந்திரமான வாழ்வை வாழ அழைக்கிறாள்! பறத்தலின் சுதந்திரம் யாவருக்குமானது தானே?!
வானவில்லில் பூமிக்கும் சொர்க்கத்துக்கும் பாதையமைத்து , மலையே கயிறாகத்திரித்து இட்டு போகும் காதலியிடம் கடைசியாக இவ்வாறு வினவுகிறான் காதலன்,
" சொர்க்கம் விட்டு பூமி வந்தா, மீண்டும் கிழக்கில் சூர்யன்தான், நான் விழிச்சு பார்க்கையில கலைஞ்சு போவாயோ நீ?.... அடியே"
இப்பாடலின் நடன அமைப்பும் கூட பிரத்யேகமானதாக அமைத்திருப்பார் நடன இயக்குனர் பிருந்தா அவர்கள். இப்படியாக இதன் அத்தனை அம்சங்களும் பாரட்டப்பட வேண்டியவையே! முக்கியமாக காஸ்ட்யூம். பழங்குடியினர் மரபினை எடுத்துக்காட்டும் விதமாக நாயகன் மற்றும் நாயகியின் உடைகள் அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கும். பாடகர் சித் ஸ்ரீராமின் முதல் தமிழ் பாடல் இது. இப்படி எதை ரசிப்பது எதை விடுவது என்று இருந்தாலும் இசையும் வரிகளும் நம் மனதில் ஆழப்பதிந்து ரீங்காரமிடுகின்றன!
 

Attachments

  • images (11).jpeg
    images (11).jpeg
    23.8 KB · Views: 22
Top