• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 09

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
காலையில் எழுந்து வந்தவன் கண்டதோ எங்கோ செல்லத் தயாராகி நிற்கும் மனைவியை.

அவளைப் பார்த்த மாத்திரம் பூத்த ஏதோ ஓர் புத்துணர்ச்சி அவளருகிலிருந்த பெட்டியைப் பார்த்து அப்படியே உதிர்ந்து விட்டது.

அழுத்தமான காலெட்டுடன் அவளிடம் வந்தவன் பேச வர சட்டென முந்திக் கொண்டவள், அன்று எந்தக் காகிதத்தை நீட்டி அவளை உயிருடன் கொன்று புதைத்திருந்தானோ அதே காகிதத்தை இன்று அவன் முன் நீட்டியிருந்தாள்.

அவனோ அவளையும் காகிதத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே வாங்கிப் பார்த்தவனுக்கு வாரித் தூக்கிப் போட்டது. ஆம் அது அவள் கையெழுத்திட்டிருந்த அவர்களின் விவாகரத்துப் பத்திரம்.

அவர்களின் முதல் ராத்திரியன்று அவளிடம் விவாகரத்து கேட்டானே அதற்கு அடுத்த நாளே பத்திரத்தையும் தயார் செய்து கொண்டு வந்து அவளிடம் கொடுத்திருந்தான்.

அவள் ஏதும் சொல்லவில்லை. பேசாமல் வாங்கி வைத்திருந்தாள். அன்று வீம்புக்காக அதில் கையெழுத்திடமாட்டேன் என சொல்லியவளிடம் சைன் பண்ண வைப்பேன் என சவாலிட்டு விட்டுச் சென்றவன் அதில் ஜெயித்தும் போனான்.

தொண்டையடைக்க செறுமியவள் "ஹியர் இஸ் த டிவோர்ஸ் பேப்பர் யூ ஆஸ்க் ஃபோர்.." என அழகாக அத்தனை திருத்தமாக அவளிடமிருந்து வெளிப்பட்டன ஆங்கில வார்த்தைகள்..

அதிர்ந்தான் ஆடவன்..

எதற்காக அவளை மட்டந்தட்டி தன்னிலிருந்து தூரமாக்கி வைத்தானோ அதே நுனிநாக்கில் ஆங்கிலத்துடன் அவனையெதிர் கொண்டாள் பெண்ணவள்.

"நீங்க சொன்ன மாதிரி சவால்ல ஜெயிச்சிட்டிங்க மிஸ்டர்.ரிஷி.. கங்ராட்ஸ்..." என்றாள் அவளையே அசையாமல் பார்த்திருந்தவனிடம்.

அந்த ஆங்கிலம் இரண்டு நாட்களில் கத்துக்கிட்டது போல் தெரியவில்லை. ஏதோ பழக்கப்பட்ட மொழி போல சரளமாக அவளிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.

"என்ட் இது..?" என கேள்வியாய் நிறுத்தியவள் சிறிய பையை தூக்கிக் காட்ட, கண்கொட்டாமல் பார்த்து நின்றிருந்தவனின் கண்களில் என்ன என்ற கேள்வி..

அதனை புரிந்து கொண்டவளாய் உள்ளிருந்த தாலியை எடுத்து அவன் முன்னே ஆட்ட சர்வமும் ஆட்டம் கண்டது ரிஷிக்கு.

"நீங்க கேட்டது போல டிவோர்சே தந்துட்டேன். அப்பறம் இதுக்கு வேலை இருக்காதுனு நினைக்கிறேன்..." எனக் கூறியவளே "இந்தப் பை எதுக்குன்னா..!? இந்த அசிங்கமானவ, பட்டிக்காடு, அப்பறம் யூஸ்லெஸ் ஃபெலோ, ஆங்..உங்களுக்கு கொஞ்சங் கூட தகுதியேயில்லாதவட கழுத்துல இத்தனை நாளும் கிடந்த தாலிய தொடுவீங்களோ என்னவோ..??? இன்ஃபெக்ட் அருவெறுப்பா கூடயிருக்கலாம். அதுக்காக தான் இது.." என பையைத் தூக்கிக் காட்டிவளின் பேச்சில் குற்றவுணர்ச்சியில் அவன் தலை குனிந்தான்.

இன்னொன்னுமிருக்கு என்றவள் மற்றைய பொதியை தூக்க புரியாமல் விழித்தான் ஆடவன்.

"இது இத்தனை நாளும் இங்க கெஸ்டா இருந்ததுக்கு நீங்க தந்த பணம்.." என உதட்டுக்கும் வலிக்காமல் சிரித்தவளின் கண்களில் அத்தனை வலி...!

நெஞ்சமதிர அவளை பார்த்தவனுக்கு இதயத்தில் சுருக்கென்று ஏதோ தைத்தது. என்ன பணமா..? எனதிர்ந்தவனிடம் "எஸ் மிஸ்டர் ரிஷி. திஸ் இஸ் யுவர் ஓன் மணி தட் யூ கேவ் மீ. இதை பத்திரமா இவ்வளவு நாளும் சேமிச்சேன். இனி இத பாதுகாக்குற தொல்லை எனக்கில்லை..." என சிரித்தவள் அவன் முன் பலவீனமானவளாக காட்டிக் கொள்ளக் கூடாதென வெகுவாக அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு அழுத்தமாக நின்றிருந்தாள்.

அவளது முகமே அவள் அழுகையை கட்டுப்படுத்த போராடுவதை பறைசாற்ற முதன் முறை அவளைப் பார்த்து அவனது கண்கள் கலங்கின.

பணத்தை நீட்டியவள் "இத்தனை நாளும் வீம்புக்காக உங்க கூட சண்டை போட்டிருக்கேன். அதுக்காக முடிஞ்சா மன்னிச்சுருங்க. அப்பறம் என் தகுதியென்னனு கன்னத்துல அறைஞ்சு புரிய வச்சிட்டீங்க. அதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இனி என் தொல்லை உங்களுக்கு எப்பவுமே இருக்காது. உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி, அழகான, வாயைத் திறந்தா இங்கிலீஷ் பேசுற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... அதுக்கப்பறம் உங்க ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி அவங்கள இன்ரடியூஸ் பண்ணி வைக்க அவமானமா இருக்காதில்லையா..?" என்றவளுக்கு எவ்வளவு தடுத்தும் தன்னை மீறி விம்மல் வெடித்திருந்தது.

இரு கைகளாலும் முகத்தை அழுந்த துடைத்தவள் பணத்தை சுட்டிக் காட்டி "நீங்க தந்த பணத்துலயிருந்து ஒரு பைசா கூட நான் எடுக்கல.. வேண்ணா செக்ப் பண்ணிப் பாருங்கள்.." என்றவளின் பேச்சு செருப்பால் அடித்து போலிருந்தது அவனுக்கு.

தொடர்ந்தவளாக "இங்க வந்த பிறகு எனக்கும் ரோஷம் வந்துச்சோ என்னவோ.. என் தகுதியை நானே கொஞ்சோ கொஞ்சம் உயர்த்திக்கிட்டேன். அதை நீங்க அன்னைக்கு என்னைத் தூக்கி எறிஞ்சது போல தூக்கிப் போட்ட புத்தகத்துல பார்க்கலாம்..." என்றாளே பார்க்க அவன் கண்களில் ஓர் தேடல். அவள் கூறி "..நானே.." என்பதில் ஓர் அழுத்தம்...!!

அதைப் பார்த்து உதட்டை வளைத்தவள் "எ..என் டாட்.." என்று ஏதோ சொல்ல வந்தவள் அப்படியே அதனை விழுங்கி விட்டு "என்னைப் பெத்தவங்க எப்போதும் மத்தவங்க கிட்ட கை நீட்டி நிற்குற அளவுக்கு என்னை வைச்சதில்லை.. இனியும் வைக்க மாட்டாங்க.." என்றாள். இதனைச் சொல்லும் போது மட்டும் அவளது குரல் கம்பீரமாய் ஒலித்தது. அந்தக் கண்களிலிலும் ஓர் திமிர்..!!

ரிஷி சட்டென அவளை நிமிர்ந்து பார்க்க அதற்குள் தன் முகத்தை மாற்றிக் கொண்டவளின் பேச்சு ரிஷிக்கு நாட்டை ஆளும் இளவரசியின் தொனி போல் இருந்தது.

பின் அவளே "இன்னைலிருந்து உங்களுக்கு விடுதலை தான். யு கேன் எஞ்சோய் யுவர் லய்ஃப். வரட்டா..சாரி சாரி.. போகட்டா..." என்றவள் அந்த வீட்டை விட்டும் ரிஷி என்றவனின் வாழ்க்கையை விட்டும் நிரந்தரமாக நீங்கிச் சென்றாள்.

..


மித்ரன் வந்து தோளில் கை வைக்க திரும்பியவனின் கண்களிலிருந்து இவ்வளவு நேரமும் தேக்கி வைத்திருந்த விழிநீர் வடிந்தது. பதறிய மித்ரன் "டேய் ரிஷி என்னாச்சுடா..?" என்றான்.

அசைவில்லாமல் நின்றிருத்தவனை உலுக்க திடுக்கிட்டு கலைந்தவன் மித்ரனைப் பார்த்து இயலாமையுடன் உதட்டை பிதுக்கினான்.

"டேய் ஏன்டா கண் கலங்குற..??" என தவிப்பாய் வினவிய நண்பனிடம் அவள் விட்டுச் சென்றவற்றைக் காட்ட அதிலிருந்த காதிதத்தை எடுத்துப் பார்த்த மித்ரனின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள்..

நண்பனை வெறியுடன் திரும்பிப் பார்த்தவனுக்கு அவனை திட்டவும் மனம் வரவில்லை. இருந்தும் "எல்லாம் நீ ஆசைப்பட்டது தானே.. இப்போ சந்தோஷமா இருக்கு வேண்டிய நீ ஏன் அழுற..? ஓஓ ஒருவேளை ஆனந்தக் கண்ணீரோ..?" என்றவனின் நக்கலில் உடைந்து தொப்பென கதிரையில் அமர்ந்தவன் "வலிக்குதுடா..." என நெஞ்சை நீவி விட மித்ரனுக்கும் தொண்டையடைத்தது.

அவனருகில் அமர்ந்தவன் "நீ மதிய லவ் பண்ணுறியா..?" எனக் கேட்க குழந்தை போல விழித்தான்.

"த்..த்தெரிலடா.. ஆ..ஆனா ஆனா இன்னைக்கு அவள் மனசொடஞ்சு பேசும் போது வலிச்சுதுடா.. இதோ இங்கே .." என இதயத்தை சுட்டிக் காட்டினான்.

மித்ரனுக்கு என்ன பேசுவதென புரியவில்லை.

"ஆரம்பத்துல அவள எனக்கு பிடிக்கல தான். ஆ..ஆனால் போகப் போக அவ பண்ணுற சேட்டைக்காகவே அவ மேல எறிஞ்சு எறிஞ்சு விழுவேன். அவ அமைதியா இருந்தா எனக்கு புடிக்காது. அதனாலே என்னை சீண்ட சரி வாய் தெறப்பாலேனு அவ முன்னாடி முறைச்சிட்டு நிற்பேன்.. நே..நேத்து ஏதோ கோபத்துல அப்படியெல்லாம் பேசிட்டேன்.. நான் அப்படி பேசி இருக்கக் கூடாது தான்.. இருந்தும் அடுத்த நாள் எல்லாத்தையும் மறந்துட்டு வந்து என் கூட அவளே பேசிருவா.. பட் இன்னைக்கு..?? எ..என்னை தனிய விட்டுட்டு போய்டாடா மச்சான்..." என ரிஷி அவனை அணைத்து அழ ஆதரவாக அவனது முதுகை தடவி விட்ட மித்ரன் "இங்க பாரு...அவ எங்கேயும் போய்க்கமாட்டா. உன் மாமனார் வீட்டுக்குத் தான் போய்ப்பா.. அவ போய் பிரச்சினை பெருசாகுறதுக்குள்ள வா போய் தங்கச்சிய கூட்டிட்டு வருவோம்..." என பொறுப்பான அண்ணனாக பேசினான் மித்ரன்.

கண்களை துடைத்துக் கொண்டவன் அவனுடன் எழுந்து சென்றான்.

அங்கே மதியின் வீட்டிற்கு சென்று விசாரிக்க அவள் வரவில்லை என்ற செய்தி காதையடைய அதிர்ந்தனர் இருவரும். மகளைத் தேடி வந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்து பெற்ற உள்ளம் துடித்துப் போக அதை இதைச் சொல்லி சமாதானப்படுத்தி விட்டு இவளைத் தேடி அழைந்தனர்.

இரவு நேரமாகியும் அவளை தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் போக தலையில் கை வைத்து பாதையிலமர்ந்து விட்டான் ரிஷி.

"நிலா..நிலா.." என அவனுள்ளம் ஊமையாக கதறியழ அவளுக்கு எதுவுமாகி விடக்கூடாது என இதோ நூறாவது தடவையாக கடவுளிடம் கை கூப்பி வணங்கி விட்டான். அது இறைவனின் காதில் விழவில்லை போல.. மூன்று மாதங்களாக அவளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவனுள் எத்தனையோ மாற்றங்கள். தன் காதலை உணர்ந்து மனதில் அவளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை முழுக்க தொடர்ந்த ஊடல் நிரந்தர பிரிவொன்று வந்த பின்னே முற்றுப் பெற்றிருந்தது.

...

இதற்க்கு தலைகீழாக மதியின் தாய் தந்தை இருந்தனர்.

அவள் சென்று விட்டாள்.. செல்ல வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விட்டாள் என்று விரக்தியாய் சொல்லிக் கொண்டனர்...


தொடரும்...


தீரா.