• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 11

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 11

"தேவ்! நீ ரெடி தானே? ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு டா.. அத்தை கூப்பிட்டாங்க.. என்னனு பார்த்துட்டு வந்துடுறேன்" என்ற ராஜ் கனகாவின் அறைக்கு சென்றான்.

"சரி டா சீக்கிரம் வா" என்றவன் மது அப்பாவிடம் எப்படி பேசுவது என பேசும் முறை குறித்து யோசித்துk கொண்டிருந்தான்.

"அத்தை கூப்பிட்டிங்களா?" ராஜ் கனகாவிடம் கேட்க,

"மேரேஜ் டிரஸ் எடுக்க போகணும்னு பவானி சொன்னா.. நீயும் அவனும் கூட இருந்து பார்த்துக்கோங்க.. பவானி, அபி ரெண்டு பேரயும் கூட்டிட்டு போங்க.. பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு பத்திரமா கூட்டிட்டு வரணும்.. அதுனால தான் உன்கிட்ட சொல்றேன் புரியுதா?" கனகா சொல்ல,

"சரி அத்தை நாங்க பார்த்துக்குறோம்.. அப்புறம்.. நீங்களும் வரலாமே!"

"இல்ல! எனக்கு ஆபீஸ் வேலை இருக்கு.. நீங்க எப்ப போறீங்கனு கிளம்பும் போது சொல்லு"

"சரிங்க அத்தை! அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்" என்றவன் வெளியே பவானியை தேடி வந்தான்.

"ம்மா! டிரஸ் எடுக்க காலையில தான் எங்களுக்கு டைம் இருக்கும்.. கிளம்பி ரெடியா இருங்க" என்று சொல்லிவிட்டு ஆனந்திடம் வந்தான்.

"போலாமா தேவ்!"

"ம்ம் டா"

“டேய் ரொம்ப நேர்வஸ்ஸா இருக்கு டா.. மது அப்பா எதுவும் பிரச்சனை பண்ண மாட்டார்ல?” வீட்டிலிருந்து கிளம்பும்போதே படபடப்பாய் வந்தது ராஜிற்கு.

“எனக்கும் கொஞ்சம் ஜெர்க் ஆக தான் செய்யுது.. அபி வர்றேன்னு சொன்னா.. கூட்டிட்டு போலாமா?” என்றான் ஆனந்த்.

“கேட்காத டா! ஆள் சேர்ந்தால் தான் நம்ம உயிருக்கும் கேராண்டி! முதல்ல போய் சிஸ்டரை கூட்டிட்டு வா”

“சரி வெயிட் பண்ணு வர்றேன்” என்றவன் தன் அறைக்கு வர இன்னும் அழுது கொண்டிருந்தாள் அபி.

“ஹேய் என்னாச்சு அபி?” ஆனந்த் குரல் கேட்டதும் கண்களை துடைத்து அவனை பார்த்து சிரிக்க,

“இப்ப ஏன் மறைக்குற? என்னாச்சு? அம்மா எதுவும் சொன்னாங்களா?”

“அய்யோ அதெல்லாம் இல்லைங்க.. அச்சுவை பார்த்துட்டு வந்தேன்ல.. அதான்..”

“ஸ்ஸ்! அதை மறந்துட்டேன் டா.. அஸ்வினி எப்படி இருக்காங்க? ஒரு முக்கியமான ஒர்க்.. அதான் வர முடியல”

“அச்சு நல்லாருக்கா பா.. இருந்தாலும் அவ அங்கே தனியா கஷ்டப்படுறாளோனு தான் ஒரு மாதிரி இருக்கு..”

“கொஞ்ச நாள் தான்.. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்.. இதுக்கெல்லாம் அழக் கூடாது சரியா?”

“ஹ்ம்ம்!”

“ம்ம்! நானும் ராஜும் மது அப்பாவை பார்க்க போறோம்.. நீ வர்றதா இருந்தா வரலாம்” உன் இஷ்டம் என்பதாய் கூறினான்.

“ஓஹ்! கண்டிப்பா வர்றேன்! ராஜ் அண்ணாக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே?”

“அவன் தான் கூட்டிட்டு வர சொன்னதே! நீ இப்ப ஓகே தானே?”

“ம்ம் ஓகே தான்ங்க.. ஒரு அஞ்சு நிமிஷம்.. கிளம்பிடுறேன்”

“சரி டா..” என்று சொல்லி ராஜ் உடன் சென்று காத்திருக்க பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தாள்.

“ஆமா! ஈவ்னிங் டைம் போறோமே! அவங்க அப்பா வீட்ல இருப்பாங்களா?” அபி கேட்க,

“இருக்காங்கனு மது சொன்ன அப்புறம் தான் கிளம்பினோம்” என்று கூறி மூவரும் வெளியே வர எதிரே வந்தார் கனகா.

“அத்..தை..” ராஜ் முழிக்க,

“இந்நேரம் எங்கே டா கிளம்பிட்டீங்க?” மணியையும் மூவரையும் பார்த்துக் கொண்டே கேட்டார் கனகா.

“இல்ல அத்தை.. சும்மா.. அப்படியே..”

“சரி சரி லேட் ஆகாமல் சீக்கிரம் வர பாருங்க” என்றவர் என்ன நினைத்தாரோ எதுவுமே கேட்காமல் அனுப்பி வைத்தார்.

“ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சாச்சு!” சொல்லியபடி தான் வண்டி ஏறினான் ராஜ்.

“என்ன ண்ணா இது? ஆபீஸ்லேர்ந்து அப்படியே வர்றிங்க.. டிரஸ் சேஞ்ச் பண்ணலையா?” முழு போர்மலில் காரில் இருந்தவனைக் கேட்டாள் அபி.

“அதை ஏன் அபிமா கேட்குற.. மது அப்பாக்கு இப்படி போனா தான் புடிக்குமாம்”

“நல்லா கேட்டுக்கோ டா.. சேல்ஸ்மேன்னு நினச்சு வெளில நிற்க வச்சுட போறாரு” ஆனந்த் கிண்டல் செய்ய,

“அதோட விட்டா பரவால்ல.. மிலிட்டரி துப்பாக்கிய எடுத்துட்டா என்ன பண்றதுன்னு தான் டா பயமா இருக்கு”.

“மாமனார்க்கு இவ்வளவு பயமா! நம்ப முடியலையே!” – அபி.

“அடேய் புருஷனும் பொண்டாட்டியும் கொஞ்ச நேரம் சும்மா வாங்க டா.. மனுஷன் கடுப்புல இருக்கான்.. நீ வேற!” என்றதும் அபி, ஆனந்த் சிரிப்புடன் அமைதியாய் வந்தனர்.

காலிங் பெல்லை அழுத்திவிட்டு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, வந்து கதவை திறந்தது மது அன்னை.

“வாங்க ப்பா! மது பிரண்ட்ஸ் தானே நீங்க? அப்பவே வர்றதா சொன்னா” என உள்ளே அழைத்து சென்றார்.

“பிரண்ட்டா?” ஆனந்த் ராஜ் காதில் கேட்க,

“எவ்வளவு ட்ரிக்கா நம்மை கோர்த்து விட்டு பிரண்ட்னு எஸ்கேப் ஆகி இருக்கா பார்த்தியா? சரியான கேடி டா அவ” என்றான் ராஜ்.

“உட்காருங்க.. நல்ல நேரம்.. இன்னைக்கு மது அப்பா வெளில எங்கேயும் போகல.. இருங்க கூப்பிடுறேன்” என்றவர் காபி எடுத்து வர உள்ளே செல்ல, இன்னொரு வழியில் இவர்களிடம் ஓடி வந்தாள் மது.

“ஹாய்! ஹாய்! ஹாய்!” – மது

“என்ன டி ஹாய்! பிரண்ட் வர்ராங்கன்னு சொல்லி எவ்வளவு பிராடுதனம் பண்ணி வச்சுருக்க.. மகளே! உன் அப்பன் மட்டும் கல்யாணத்துக்கு சம்மதிக்கல ஆசிட் தான்” ராஜ் கொந்தளிக்க,

“அய்யோ! இப்ப எதுவும் பேச முடியாது ராஜ்.. ப்ளீஸ் அப்பாகிட்ட சம்மதம் வாங்கிடு.. செல்லம்ல.. சீனியர், அபிமா! எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணிடுங்க ப்ளீஸ்” என்றவள் வந்த வேகத்தில் மின்னலாய் மறைந்தாள்.

“வெல்கம்! வெல்கம்! சோட்டா பாய்ஸ்!” என்றவாறு கம்பீரமாய் வெளிவந்தார் மதுவின் தந்தை தினகரன்.

“ஹெல்லோ அங்கிள்!”

“அப்புறம் எப்படி இருக்கீங்க? நீங்க எல்லாரும் காலேஜ் பிரண்ட்ஸ் தானே?”

“ஆமா அங்கிள்! இது என்னோட வைஃப் அபிநயா”

“குட்!” என்று பேசிக் கொண்டிருக்க காபியோடு வந்தார் மதுவின் அன்னை.

“மது எங்கேம்மா? வர சொல்லு” மனைவியிடம் சொல்லியவர்

“அப்புறம்?” என்றார் திரும்பி மூவரிடமும்.

“அங்கிள் நான் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்” அபி தைரியமாய் ஆரம்பிக்க, ஒரு நிமிடம் மூச்சு விட மறந்தனர் ராஜ், ஆனந்த் இருவரும்.

“சொல்லு மா! என்ன விஷயம்” என தினகரன் கேட்க, கால்கள் பின்ன இவர்கள் அருகே வந்து நின்று விதியே என சிரித்து வைத்தாள் மது.

“அங்கிள்! இது கொஞ்சம் சீரியஸ்ஸான விஷயம்.. நீங்க கோபப்படாமல் முழுசா கேட்டுட்டு முடிவு எடுக்கணும்” அபியே தைரியமாய் பேச, வயடைத்து நின்றனர் மற்ற மூன்று திருடர்களும்.

பெண்ணை திரும்பி பார்த்த தினகரன் மிலிட்டரி புத்திக்கு ஏதோ ஒன்று புரிவதாய் இருக்க தலையாட்டி சம்மதம் தெரிவித்தார்.

“நீங்க நடராஜ் இண்டஸ்ட்ரிஸ் பத்தி கேள்விபட்ருப்பீங்களே? அவங்களோட கிராண்ட் சன்ஸ் தான் இவங்க” அபி சொல்ல,

“எஸ்டீடி (ஹிஸ்டரி) எல்லாம் இப்ப அவசியமா டா.. அபிமாகிட்ட கொஞ்சம் பார்த்து பதமா பேச சொல்லு தேவ்” ஆனந்த் அருகில் சென்று ராஜ் சொல்ல, அதற்கெல்லாம் வாய்ப்பு யாரும் கொடுக்கவில்லை.

“என்னோட ஃபால்ட் இல்ல பா.. உன் சிஸ்டர் அதுக்கெல்லாம் வாய்ப்பு தர போறதில்ல”

“அட நடராஜன் அங்கிள் கிராண்ட் சன்ஸ்ஸா? அங்கிளை எனக்கு நல்லா தெரியுமே!” என்றார்.

“ஓஹ் நைஸ் அங்கிள்! அப்புறம் ராஜ் அண்ணாவும்...” அபி ஒரு நொடி நிறுத்தி வைக்க, இங்கே ஒவ்வொரு நொடியும் இதயம் நின்று துடித்தது மற்றவர்களுக்கு.

“ராஜ் அண்ணாவும் மது..வும்... ஆக்ட்சுவல்லி ரெண்டுபேருக்கும் புடிச்சிருக்கு.. உங்ககிட்ட..” என்று சொல்லிக் கொண்டு இருக்க, கோபமாய் எழுந்துவிட்டார் தினகரன்.

“என்ன இதுக்கே எழுந்துட்டாரு” சொன்னபடியே தான் எழுந்தான் ராஜ்.

“அங்கிள் ப்ளீஸ் முழுசா கேளுங்க” அபி சொல்ல,

“போதும்! மது என்ன இது..” என்று பெண்ணிடம் கேட்க,

“அப்பா.. ராஜ்...!”

“இப்ப நீ அவங்களை வெளில போகணும் சொல்றியா இல்ல நான் பண்ணவா?” விறைப்பாய் நின்று அவர் கேட்க,

“அங்கிள்! உங்க பொண்ணு வாரத்துக்கு மூணு நாள் கிளாஸ் வர்ராங்க.. என்னைக்காவது ஒரு நாள் கிளாஸ் போனவங்க திரும்ப வரலைனா என்ன செய்விங்க?” அபி துணிந்து கேள்வி கேட்க,

“செம்ம ஃபார்ம்ல இருக்காங்க சிஸ்டர்..” நினைத்துக் கொண்டதோடு வாயே திறக்காமல் நின்றான் ராஜ்.

“என்ன மிரட்டுறியா?” அவரும் கோபமாய் பதில் பேச,

“நிச்சயமா இல்ல.. அப்படி நடக்க போறதும் இல்ல.. ஏன்னா என்னைக்கும் என் அண்ணா அப்படி ஒரு தப்பை பண்ணமாட்டாங்க” என்றாள் அபி.

“அப்படினு நான் சொல்லவே இல்லையே” ராஜ் மீண்டும் ஆனந்த் காதில் சொல்ல, அவன் காலிலேயே மிதித்தான் ஆனந்த்.

இப்போது அமைதியாகி இருந்தார் தினகரன். மதுவின் அன்னை எதிலும் தலையிடாமல் தான் நின்றார்.

“ப்ளீஸ் அங்கிள்! நீங்க வேணாம்னு சொல்ற அளவுக்கு அண்ணாகிட்ட எந்த பேட் ஹாபிட்டும் இல்ல.. அவரே தனியா ஆபீஸ் மைண்டைன் பன்றாரு.. இதைவிட என்ன க்வாலிடீல நீங்க மதுக்கு மாப்பிள்ளை பார்ப்பீங்க?”

“நியாயமான கேள்விகள்.. அபிமா! பிண்றடா” – ராஜ்.

“இன்னும் உங்களுக்கு சந்தேகம்னா நீங்க நடராஜன் தாத்தாகிட்ட பேசுங்க.. அவரு சொன்ன அப்புறமாச்சும் ஓகே சொல்லுவீங்க இல்ல?” என்றாள் முடிவாய்.

“நீங்க சொல்லுங்க” ஆனந்த் அருகில் சென்று மெதுவாய் அபி சொல்ல,

“அங்கிள்! ராஜ் ரொம்ப நல்லவன். நான் சொல்ல வேண்டியது எல்லாமே அபி சொல்லிட்டா.. இனி உங்க இஷ்டம்” என்றான் ஆனந்த் சுருக்கமாய்.

“அவரு இஷ்டமா?” ராஜ் கேட்க, அபி, ஆனந்த் இருவரும் முறைத்தனர் அவனை.

“ப்பா ப்ளீஸ் பா!” மதுவும் சொல்ல,

‘நாமளும் எதாவது பேசியாகணுமே’ என யோசித்த ராஜ்

“அங்கிள்! மது மேல தப்பில்ல.. நீங்க கோபப்படுறதா இருந்தா என்கிட்ட பேசுங்க.. நான் உங்களுக்கு பதில் சொல்றேன்” என்றான்.

“அப்ப ஒரு முடிவோட தான் வந்திருக்கிங்க.. இல்ல?” மது தந்தை கேட்க, நால்வரும் அமைதி.

“இப்ப நான் என்ன பண்ணனும் எதிர்பாக்குறீங்க? உங்க வீட்ல வந்து சம்மந்தம் பேசணுமா..” கொஞ்சம் கோபம் தான் தெரிந்தது அவர் குரலில். அதை அபி அப்படியே பிடித்துக் கொண்டாள்.

“இல்லவே இல்லை அங்கிள்! சின்ன சின்ன பிரச்சனைகள் கல்யாணத்துல வர்றது சகஜம் தானே?” அபி சொல்ல,

“புரியலையே!” என்றார் குழப்பம் சூழ,

“இவங்க ரெண்டு பேருமே உண்மையா இருக்காங்க..அதை எல்லாரும் புரிஞ்சிக்கணும்”

“சுத்தி வளைக்காமல் நேரா சொல்லுமா”

“இல்ல அங்கிள்! எங்க வீட்லயே பிரச்சனையை வச்சுட்டு தான் உங்களை தேடி நாங்க வந்திருக்கோம்” என்ற அபி முழுதாய் தெளிவாய் நடந்ததை கூறினாள்.

“அப்ப! உங்க வீட்லயே இன்னும் சம்மதம் கிடைக்கல அப்படித்தானே?”

“மொத்தமா அப்படியா சொல்ல முடியாது.. எல்லாருக்கும் சம்மதம் தான்.. எங்க அத்தை மட்டும் வாக்கு கொடுத்ததனால..”

“இது என்ன சின்ன பசங்க விளையாட்டா? முதல்ல பையன் நீ தெளிவா இருந்தா மட்டும் போதாது.. உன் வீட்டுக்கு என் பொண்ணு வரணும்னா உன் வீட்ல இருக்குற எல்லாரோட சம்மதமும் முக்கியம். போ! போய் எத்தனை வருஷம் வேணாலும் நான் இவளை பார்த்துக்குறேன்.. நீ உன் குடும்பத்தோட வந்து இவளை கூட்டிட்டு போ” என்றவர் சட்டென்று உள்ளே சென்றுவிட்டார்.

“அங்கிள்! அங்கிள்!” அபி சத்தமாய் கூப்பிட,

“அபிமா! தேங்க் யூ சோ மச் அபி மா” என கட்டிக் கொண்டாள் மது.

“மது! ஆனா அப்பா என்ன இப்படி சொல்லிட்டு போறாங்க”

“இனி அப்பாவை நான் பார்த்துக்குறேன் அபி.. அப்பாகிட்ட இவ்வளவு பேசிட்டோம்ல.. இனி கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாம்” என்று சமாதானம் கூறினாள் மது.

“உங்க எல்லாரையும் எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.. எல்லாம் நல்லதே நடக்கும்னு நம்பி போய்ட்டு வாங்க தம்பி” என அனுப்பி வைத்தார் மது அன்னை.

தொடரும்..
 
Top