• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 11

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
அடுத்த வாரமே ரிஷி மித்ரனுடன் தன்னூருக்கு பயணப்பட்டான்.

திருமணமாகிய பின் சென்னை வந்திருந்தவன் அதன் பின்னர் அந்த ஊர் பக்கம் தலை காட்டி இருக்க வில்லை. அன்று மதி வீட்டை விட்டு சென்ற போது வந்தவன் அதுவும் அவளது வீட்டிற்கு சென்று விட்டு அப்படியே மீண்டும் சென்னை கிளம்பி விட்டான்.

மதி அவனை விட்டு எப்போது பிரிந்து போனாளோ அன்றிலிருந்து வெளியே செல்வதையும் வெகுவாக குறைத்திருந்தான்.

அவள் வாழ்ந்த அந்த அறையே வாசம் என அங்கேயே அடங்கிக் கிடந்தவனை இன்று ராஜேந்திரன் வரச் சொல்லவும் வேறு வழியின்றி கிளம்பி இருந்தான்.

செல்லும் வழி முழுக்க தன்னவளின் நினைவுகளை சுமந்தவனாக வந்து கொண்டிருந்தவன் மீண்டும் இதே மனநிலையுடன் செல்வானா என்பது கேள்விக் குறியே..!

..

இங்கே தனதில்லம் வந்தவனை ராஜேந்திரன் வாங்கு வாங்கு என வாங்கி விட்டார். எத்தனை கேள்விகள்..? எத்தனை ஏச்சுக்கள்..?

அனைத்திற்கும் சிலை மாதிரி நின்றிருந்தவன் ஓர் கட்டத்தில் முடியாமல் ஓடிச் சென்று அவரை இறுக அணைத்திருந்தான்.

ராஜேந்திரன் அவனிடமிருந்து இப்படியான எதிர்வினையை எதிர்பார்த்திருக்கவில்லை என அப்பட்டமான அவரது அதிர்ந்த முகம் காட்டிக் கொடுத்தது.

இத்தனை வருடங்களின் பின்னரான மகனின் அணைப்பு உண்மையிலே அந்த தந்தைக்கு கழிவிரக்கத்தைத் தான் கொடுத்தது.

வார்த்தைகள் வர மறுக்க அமைதியாகிப் போன தந்தையின் காலடியில் தொப்பென விழுந்தவன் அதிசயமாக "அ..அ..அப்பா..." என்று அழைத்திருந்தான். அவனது குரலில் கலக்கம் என்றால் அந்தப் பெரியவரின் உடலில் சிறு அதிர்வு தோன்றி மறைந்தது.

பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் தாய்க்குமே கண்களில் கண்ணீர் குளம் கட்டி விட்டது.

தன் காலடியில் விழுந்து தன் மகன் கலங்கித் தவிப்பதை பார்க்க சகிக்காத தந்தையும் "எ..எழுந்திருப்பா..." என தூக்கி நிறுத்த அவரது முகம் பார்க்க முடியாமல் ரிஷி வேறு பக்கம் திரும்பினான்.

"இப்படி செய்து விட்டானே " என மகன் மேல் மலையளவு கோபம் இருந்தாலும் அந்த "அப்பா" என்ற ஒற்றை வார்த்தையில் அந்தக் கோபமும் இருந்த இடம் தெரியாமல் தானே போய்விட்டது.

மீண்டும் அவராகவே ரிஷியை இழுத்து அணைத்தவர் "எல்லாம் சரியா வரும்பா.. போய் ரெஸ்ட் எடு. மீதியை பிறகு பேசிக் கொள்ளலாம்..." என்றவாறு அவனை விடுவிக்க அவனும் ராஜேந்திரனை நிமிர்ந்து பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டான்.

பின், வாசல் பக்கம் நின்றிருந்த மித்ரனையும் பவித்ராவையும் உள்ளே வரவேற்றவர் மித்ரனின் மகனை கொஞ்சித் தீர்த்து விட்டார்.

அவரது இன்னொரு முகத்தைப் பார்த்த மித்ரனும் பவித்ராவும் தான் அதிசயித்துப் போய் நின்றிருந்தனர்.

...

மாலை நேரமதில் அந்த வீட்டின் வராண்டாவில் அமர்ந்து ரிஷி மொத்தக் கதையையும் தன் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான். சிலதை மறைத்து பலதை வெளிப்படையாக சொல்லியவனை கடிந்து திட்டவும் மனம் வரவில்லை அங்கிருந்தவர்களுக்கு.

அப்படி வலியை சுமந்திருந்திருந்தான் அந்த அசுரனும்.

"எ..எல்லாம் என் தப்புத் தான்ப்பா.. ப..பட் அவ எனக்கு திரும்ப வேண்டும்பா.." என கையெடுத்து கும்பிட்டவனிடம் ஏதோ சொல்ல தொண்டை வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கி விட்டார் .

முயன்று தன்னை சமப்படுத்திக் கொண்டவர் குரலைச் செறும, ரிஷி கேள்விகளை முகத்தில் தேக்கி வைத்துக் கொண்டு அவரையே பார்த்திருந்தான்.

பின்னர் "சரிப்பா வந்து இவ்வளவு நேரமாச்சு, போய் மதிநிலாட அப்பா அம்மாவ ஓரெட்டு போய் பார்த்துட்டு வா..." என்றார்.

அதில் கலைந்தவன் சரி எனும் விதமாக தலையாட்டி விட்டு மித்ரனுடன் கிளம்பி சென்றான் அங்கே தனக்காக அவர்கள் வைத்திருக்கும் அதிர்ச்சி அறியாமல்.

..


இங்கே சென்னையில் சண்முக வேலிடமிருந்து அவள் கைபற்றிய தனது சொத்துக்கள் அனைத்தையும் அநாதை ஆச்சிரமங்களுக்கு தானமாக வழங்க கையெழுத்திட்டுக் கொண்டிருந்தவளின் மனக் கண்ணில் அவளது தாய் தந்தையின் சிரித்த முகங்கள்...

எத்தனை சந்தோஷங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். தன்னைப் போலவே இருந்த தாயின் அழகிய வதனத்தை நினைக்கையில் மூடிய இமைகள் கண்ணீரில் நனைந்தன.

கேவலம் இந்த சொத்துக்காக அவர்களின் உயிர்களை பறித்து விட்டனரே..
நெஞ்சம் வேதனையில் துடிக்க சட்டென கண்களை திறந்தவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்காக முகத்தை முயன்று மாற்றிக் கொண்டவள் "இந்த சொத்துக்காகத் தானே கழுகள் இரை தேடி அழைவது போல தன்னை மீண்டும் மீண்டும் துரத்தி வருகின்றனர். இனி அந்த சொத்தே இல்லையென்றால்...!?" என நினைத்தவள் நொடியும் தாமதியாது டோக்கிமென்டில் கையெழுத்திட்டிருந்தாள்.

அவளை மீறி அங்கிருந்தவர்களுக்கு வாய் திறக்க முடியாத நிலை.

அங்கிருந்தவர்களில் அநாத்ரயன் என்பவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணவள். அவனோ தனது அதிருப்தியை வாயை வளைத்து இல்லையென்னும் முகமாக வெளிப்படுத்த அவனுக்கு சிரிப்பை பதிலளித்தவள் தான் உருவாக்கிய ஒரு கம்பனியையும் தன்னைப் பெற்றவர்கள் வாழ்ந்த மாளிகையையும் மட்டும் கையில் எடுத்துக் கொண்டவளாக தனக்காக காத்திருந்த காரையும் தவிர்த்து விட்டு கேப் புக் பண்ணி வீட்டிற்கு விரைந்து சென்று விட்டாள்.

மீதி செய்ய வேண்டி இருந்த பாக்கி கடமைகளை அநாத்ரயன் செய்து முடித்து விட்டு கையோடு கார் சாவியை எடுத்துக் கொண்டு அவளுக்குப் பின்னே விரைந்து சென்றான்.

கேப்பில் ஏறி அமர்ந்தவளுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது. தலையை தாங்கி குனிந்தவளை மிரரினூடாகப் பார்த்த ஓட்டுனர் "மேம் ஆர் யூ ஓகே...?" எனக் கேட்க சட்டென நிமிர்ந்தவளைப் பார்த்து அவனே பயந்து விட்டான்.

அவளோ "ஸ்டாப் த கேப்..." என சத்தமிட அவனது கைகளோ கேப்பின் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.

எதையோ தேடி அவசரமாக வெளியே இறங்கி ஓடியவள் இடுப்பில் கை வைத்து மூச்சு வாங்கினாள்.

அவளது முகத்தைப் பார்த்தும் அந்த ஓட்டுனருக்கு அவளருகில் செல்லத் தயக்கமாய் இருந்தது. அவரும் செய்வதறியாது நின்றிருக்க அவளோ ஓர் கட்டத்தில் நடு வீதி என்பதையும் மறந்து ஆழ்ந்து நுரையீரலினுள் ஒட்சிசனை நிரப்பிக் கொண்டாள்.

அவளைத் தொடர்ந்து வந்த அநாத்ரயன் திடீரென கேப் நிற்கவும் பதறிக் கொண்டு இறங்கி வர அவளோ வெளியே வேகமாக வந்து சுவாசித்துக் கொண்டிருந்தாள்.

அவளருகில் வந்தவன் "ஹேய் திலா..!! ஆர் யூ ஓகே..?" என்றான் தவிப்பாய்.

அவளோ கொஞ்ச நேரம் அப்படியே இருக்க "ஹேய் வீர் ஆர் இன் த ரோட்.. கம் லெட்ஸ் கோ.." என அவளை நினைவுக்குத் திருப்ப முயல அவனை பார்த்தவளின் கையைப் பிடித்து பாதையின் ஓரம் கூட்டி வந்தவன் மீண்டும் "வட் ஹெப்பன்ட் டு யூ...?" என்கவும் அவளிடம் அதே புன்னகை மாறாமல்..!

அநாத்ரயன் குழம்பிப் போய் அவளைப் பார்த்திருக்க திலா என்பவளோ "நீயும் என்னைய தனிய இந்த கழுகள் நிறைஞ்ச பூமில விட்டுட்டு போய்டுவியா...?" என்றவளின் முகத்தில் எந்த சஞ்சலமும் இருக்கவில்லை. மாறாக குரலில் அத்தனை இறுக்கம்.

அவனோ திடீரென்ற அவளது கேள்வியில் திகைத்தாலும் பின் புன்னகைத்தவனாக "நெவர்.. ஐ வில் நெவர் லீவ் யூ.. ஐ ஸ்வேர்.." என்றான் உணர்ந்து.

அவனது கண்ணில் உண்மையைக் கண்டவள் பேசாமல் சென்று அவனது காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். தலையைக் கோதி சிரித்தவனாக அவனும் அவளுடன் இணைந்து நடந்தான்.


தொடரும்...


தீரா.
 
Top