• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 12

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 12

"ஓஹ்! அப்ப இப்போ பிரண்ட்ஸா தான் இருக்கீங்களா?" என்றவள் குரல் பேதத்தில் இவன் அவளையே பார்திருக்க,

"கவின் அண்ணா சொல்லி என் வீட்டுல என்னை ஃபோர்ஸ் பண்ணாங்க சரி.. அப்ப உங்க வீட்டுலையும் ஃபோர்ஸ் பண்ணி தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்களா?" மலர் கேட்க,

காதலை தெரிந்து கொண்டாள் ஏன நினைத்திருந்தவன் இப்பொழுது அவள் கேள்வியில் முழுதாய் குழம்பிப் போனான்.

"மலர் என்ன சொல்ற நீ? தெளிவா சொல்லு" என்றவன் இப்பொழுதாவது கூறி இருக்கலாம் அவளின் மீதான அவன் காதலை.

"ஏன்? புரியலையா? நேத்ரா மேம்க்கு இன்னும் கல்யாணம் ஆகலைனா அவங்க மேல தப்பில்லனு தானே அர்த்தம்? நான் காலேஜ் முடிக்குற வரை உங்களை பத்தின பேச்சு தான் அங்கே அதிகம்.. மோர்ஓவர் நான் காலேஜ் முடிச்சு ரெண்டு மாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள என்ன ப்ரோப்லேம்? எதனால வீட்டுல உங்களுக்கு வேற பொண்ணு பார்த்தாங்க? நீங்க எதனால சரினு சொன்னிங்க?"

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாய் ஒவ்வொரு கேள்வியும் கேட்க, அவள் கேள்வியினை இவன் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

அத்தோடும் நில்லாமல் அவன் யோசித்து விடை அறிவதற்குள் இன்னுமே வார்த்தைகளை மலரென்பவள் சருகாய் உதிர்த்திருந்தாள்.

"வேற பொண்ணு பார்த்தாங்கன்னா.. சோ நீங்க நேத்ரா மேம் பத்தி வீட்டுல பேசவே இல்லையா? இதுல நீ படிக்குறியா காலேஜ் போறியானு என் மேல கரிசனம் வேற!"

சாதாரணமாய் பேச ஆரம்பித்தவளுக்கு இந்த மூன்று நாட்களில் அவன் தன்னிடம் நடந்து கொண்ட விதமும் அதில் தனக்கு அவன்மேல் தோன்றி இருந்த பிடித்தமும் என குரலில் கோபத்துடன் முடிவில் ஏளனத்தையும் கொண்டு வந்திருந்தாள்.

"மலர்?" இன்னும் அவள் தான் பேசினால் என்ற அதிர்ச்சியில் நின்றவனுக்கு அவளின் கோபம் மட்டுமே முதலில் புரிந்திருக்க பேச்சின்றி அதிர்ந்து நின்றான்.

"மலர்! மலர்! மலர்! எத்தனை மலர்? நான்வேற என்னென்னவோ நினச்சு.. செல்ஃபிஷ்.."லவ்னா என்னனு தெரியுமா? என் அண்ணா அண்ணி பாத்து நான் நினைச்சது என்ன.. ஆனா இப்ப?..." என்றவள் கண்கள் கலங்கி நின்றது.

"இது என்ன? நேத்ரா மேம் கிபிட்டா இல்ல நீங்க அவங்களுக்கு குடுத்ததா?" கண்ணீரை துடைத்து செயினை அவன்முன் நீட்ட,

"ஸ்டாப் இட்!" என்று கத்தி இருந்தான் செழியன் அவள் பேசும் அர்த்தத்தை சகிக்க முடியாமல்.

நிச்சயம் வெளியில் இருப்பவர்களுக்கு அவன் சத்தம் கேட்டிருக்கும்.. மிரண்டு போனாள் மலர்விழி அவன் சத்தத்தில்.

"இன்னும் ஒரு வார்த்தை..!" என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க, அவள் அவனை தான் பார்த்து நின்றாள்.

"என் பேரு என்ன சொல்லு?" அவன் கேட்க, அவள் முறைத்தே பார்த்தாள் அவன் கண்களின் சிகப்பின் அர்த்தம் உணராமல்.

"சொல்லு என் பேர் என்ன?" அவன் குரல் அதிகரிக்கவே வெளியில் யாரும் கதவை தட்டிவிட கூடாதே என்று அவள் கதவையும் அவனையுமாய் பார்க்க, செழியனுக்கு அதை எல்லாம் பெரிதாய் தெரியவில்லை.

"நீ வெட்டிங் இன்விடேஷன் பாக்கவே இல்ல ரைட்?" அடுத்த கேள்வி கேட்க, அப்போதும் பதில் தரவில்லை அவள்.

அதிலேயே தொய்ந்துவிட்டான் செழியன். கவின் முதல் தன் தந்தை வரை என அனைவரும் எத்தனை முறை அவளிடம் பேச சொல்லியிருப்பர்.

அப்பொழுதே சொல்லி இருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதே! என நினைத்தவனுக்கு அடுத்த நொடி அவள் எப்படி இப்படி நினைக்கலாம் என்ற எண்ணம்.

தனது மொபைல் கேலரியை எடுத்தவன் "இது உங்க நேத்ரா மேம் தானே?" என்று அவளிடம் கேட்க, கோபம் பொங்கியது மலர்விழிக்கு.

நேத்ராவின் தோள்களில் அவன் கையிட்டு இருவரும் அமர்ந்தபடி இருந்த புகைப்படம்.

எவ்வளவு தைரியம் என்பதாய் அவள் அவனைப் பார்க்க,

"உங்க நேத்ரா மேம் யாருன்னு தெரியுமா?" என்றான் அவள் பார்வையில் இன்னும் சூடேற, சூடாக.

"நேத்ரா சசி! பிரேம் சிஸ்டர்" உணர்ச்சி துடைத்த குரலில் அவன் கூற, ப்ரேமை மட்டும் அறிந்தவளோ, சசி என்ற அழைப்பை அவன் ஏற்று பேசியதும் அன்று அவனின் பேச்சுக்களும் மட்டுமே நினைவில் வந்து நின்றாள்.

"ஓஹ்! பிரண்ட்டோட சிஸ்டர் வேற?" என்று அவள் கேட்கும் போதே,

"ஜஸ்ட் ஷட்டப் யுவர் பிளடி மைண்ட்" என்றவன் கைகளையும் ஓங்கி இருந்தான். விதிவிதிர்த்து போனாள்.

காதல் அனைத்தும் கானல் நீராய் போனதை போன்றதொரு உணர்வு. வார்த்தைகளை விட அந்த வார்த்தை அம்புகள் வருவது அவளிடம் இருந்து என்பது இன்னுமே தைத்திருந்தது அவனை.

வார்த்தைகள்.. அதை தேடினான்.. அவளிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய சூழல்.. அவன் தன் வாழ்நாளில் எதிர்பார்க்காத சூழல்.

கைகளை இறக்கி திரும்பிக் கொண்டவனை, கண்களை மூடி நின்றவனைப் பார்த்தவளுக்கு பயம் மனதை ஆட்டி வைத்தது மலர்விழிக்கு.

வாழ்க்கையின் ஆரம்பமே ஆட்டம் கண்ட நிலையில் இருந்தான் செழியன்.

நிரூபிக்கவே தோன்றவில்லை அவனுக்கு. புரிந்திருக்க வேண்டுமே அவள். யார் என்ன சொல்லி இருந்தாலும் அவள் புரிந்திருக்க வேண்டுமே! என்ற எண்ணம் மட்டுமே.

அரை நிமிடம் மட்டுமே நின்றிருப்பான்.. மீண்டும் மொபைலை கையில் எடுத்து சசி என்ற எண்ணிற்கு அழைத்தவன் அதன் ஸ்பீக்கரை அழுத்திவிட்டு அவளைப் பாராமல் திரும்பி நின்று கொண்டான்.

"சொல்லு டா.. என்ன மாமியார் வீட்டுல செம்ம விருந்தா?" எடுத்ததும் சசி கேட்க,

"சசிக்கா!" என்று குரல் தழுதழுக்க அழைத்தவன் வார்த்தையிலும் குரலிலும் ஆடிப் போனாள் மலர்.

"என்ன செழியா வாய்ஸ் சரி இல்ல.. கோல்டா?" அக்கறையாய் சசி கேட்க, தன் தவறின் முழு அளவையும் புரிந்து மலர் அதிர்ந்து சிலையாய் நிற்க, சசியின் கேள்வியில் சுதாரித்து இருந்தான் செழியன்.

"ஹ்ம் ஆமாக்கா.. புது இடம் இல்ல.." என்ற போதும் மலர்புறம் திரும்பவோ அவள் நிலை அறியாவோ அறிய விரும்பவோ இல்லை அவன்.

"இதுக்கேவா? உனக்கு ஹனிமூன் டிக்கெட் என்னோட கிப்ட்டா மெயில் பண்ணிருக்கேன் பாரு.. அன்னைக்கு முழுசா சொல்றதுக்குள்ள அவ்ளோ வெட்கம் உனக்கு?" என்று சொல்லி அவள் சிரிக்க, அந்த நினைவில் இவன் கண்களை மூட, தன் முட்டாள்தனத்தின் உச்சத்தை அறிந்தாள் மலர்.

"டேய் இருக்கியா?" நீண்ட அமைதியில் சசி கேட்க,

"ஹான் இருக்கேன்க்கா.. நான் பாக்குறேன்" என்றான்.

"ஹ்ம்ம்! ஃப்ரை டே ஃப்ரை டே காலேஜ் வாசல்ல வந்து மலரை பாக்குறதுக்கு என்னை காவலுக்கு நிக்க வைக்கிறது.. இப்போ உன் ஆளு கூட இருந்ததும் நாங்கல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியல இல்ல?"

செழியன் எதுவும் கூறாமலே சசி கூறிக் கொண்டிருக்க கண்களை விரித்தால் மலர் அவள் பெயர் கேட்டு.

"எனிவே! என்னை பத்தி உன் ஆளுகிட்ட கேட்கணும்னா நேத்ரா சசி தெரியுமானு கேளு.. சசின்னு சொன்னா அவளுக்கு தெரிய வாய்ப்பில்ல.." சசி கூற,

"தெரியும் க்கா.. உங்களை தெரியாம எப்படி" என்றவன் குரலில் இங்கே குறுகிப் போனாள் மலர்.

"என்ன சொல்லு.. உனக்கெல்லாம் தைரியமே இல்ல டா.. லவ்வை சொல்லி ஓகே பண்ண பயந்து கவினை யூஸ் பண்ணி எவ்வளவு நேக்கா கல்யாணத்தை முடிச்சுட்ட.. ப்ச்! வருங்கால இளைஞர்கள் எல்லாம் உன் வழியை தான் யூஸ் பண்ண போறாங்க பாரு"

"வேண்டாம் க்கா.. லவ் பண்ணினா அதை சொல்லணும்னு இப்ப தான் எனக்கு புரியுது.." என்றவன் குரலில் வெறுமை. அதை மலர் உணர்ந்தாளோ இல்லையோ சசி உணர்ந்தாள்.

"ஹேய்! என்ன டா எனிதிங் ப்ரோப்லேம்?" சசி உடனே கேட்க, மலர் மனம் அங்கே அடித்துக் கொண்டிருந்தது சசியின் வார்த்தைகளில்.

"ம்ஹும் நத்திங்.. நான் அப்புறம் பேசுறேன் க்கா.." என்றவன் சசி என்னவோ என யோசனையுடன் இருக்கும் பொழுதே அழைப்பை துண்டித்துவிட்டான்.

நொடியும் தாமதிக்காமல் அவன் கால்களில் விழுந்திருந்தாள் மலர்.

"மன்னிச்சிடுங்க.. தெரியாம பேசிட்டேன்.. மன்னிச்சுடுங்க ப்ளீஸ்.." என்று அழுதவள்,

"அய்யோ! அய்யோ!" என்று தன் தலையிலேயே அடித்துக் கொள்ள, அசையவே இல்லை அவன்.

"நினைச்சேனே.. உங்ககிட்ட கேட்கணும் நினைச்சேன்.." என்றவள் அழுகை கூட, தன்னை நினைத்தே அவமானமாய் உணர்ந்தாள் மலர்.

என்ன கூறி அவனிடம் மன்னிப்பு கேட்க என அவள் மனமே அவளிடம் கேட்க, அவன் கால்களையும் விடாமல் அழுகையும் குறையாமல் அமர்ந்திருந்தவளுக்கு தன் மீதே அவ்வளவு ஆத்திரம்.

கொஞ்சமும் சிந்தனை செய்யாமல் அபாண்டமாய் தான் வீசிய சொற்கள்.. எத்தனை காயம் கொடுத்திருக்கும்!..

அதுவும் சசி இறுதியில் கூறிய செழியனின் மலர் மீதான காதல் என்ற வார்த்தைகளில் இனிமையாய் உணர வேண்டிய தருணம் எதிர்மாறாய் அவள் செய்கையால் அவளால் உணரவே முடியாத நிலையில் இருந்தது.

"எழுந்திரு" என்றவன் அசையாமல் அப்படியே நின்றான்.

"நான்.. நான் பேசினது தப்பு தான்.. ப்ளீஸ்.." என்று அவள் கூறவுமே, கைநீட்டி தடுத்துவிட்டான் செழியன்.

மனம் பதறியது மலருக்கு. வார்த்தைக்கு வார்த்தை மலர் என்பவனையும் அந்த மலரினை வருடுவது போன்ற குரலையும் அவள் மனம் தேட, தன்னையே புரிந்து கொள்ளாமல் நின்றிருந்தாள் அவள்.

"இல்ல.. நான் வேணும்னு பேசல.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்.." அவள் கெஞ்ச,

"தயவு செஞ்சு நிறுத்து" என்றவன் குரலில் அவள் நின்றது போலவே அவனைப் பார்த்திருக்க,

"எதையும் சொல்லி இன்னும் காயத்தை ஆழமாக்கிடாத.. எதையும் இப்போ நான் கேட்க விரும்பல" என்றவன் இன்னும் அவள்புறம் திரும்பி அவள் முகத்தினை பார்திருக்கவில்லை.

"நீ அப்படி பேசி இருக்க கூடாது ம.." என்றவன் அவள் பெயரைக் கூறாமல் விட, ஏங்கிக் கொண்டிருந்தவள் அழுகையாய் மாறியது.

"வார்த்தையால என்னை கொன்னுட்ட.. இதை நான் எதிர்பார்க்கல.. அதுவும் உன்கிட்ட..." என்ற பொழுது அவன் குரலுமே அவளுள் அவன் வலியை கடத்தி சென்றது.

"என்கிட்ட பேசி இருக்கனும் நீ.. என்னை எப்படி உன்னால அப்படி நினைக்க முடிஞ்சது மலர்விழி?" என்று அவன் கேட்டபொழுது அவளிடம் இருந்து அவன் தூரமாய் சென்றதை போல உணர்ந்தாள் மலர்.

"நான் சாதாரணமா கேட்ட கேள்வி தான் நீ படிக்குறியா வேலைக்கு போனுமான்னு கேட்டது.. ஆனா அதையும் நீ...." என்றவனுக்கு மொத்தமாய் விட்டு போனது.

"ப்ச்!" என்றவன் அவள் முகத்தினை காணாது காண விருப்பமும் இல்லாது கதவை திறக்க சென்று, பின் அப்படியே நின்றவன்,

"என் பேரு நெடுஞ்செழியன்!" என்று கூறிவிட்டு வேகமாய் கதவை திறந்து வெளியே சென்றுவிட, சில நிமிடங்கள் தேவைப்பட்டது மலர்விழிக்கு அந்த சங்கிலியில் இருக்கும் எழுதுகளின் காரணமும் அவன் பெயரைக் கூறி சென்றதன் காரணமும்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
வார்த்தைகளை விட்டு விட்டு
வருந்தி என்ன செய்ய மலர்😭😭😭
விரும்பி ஏற்றுக் கொண்டவள்
வார்த்தையில் வதைக்க
வலியுடன் விலகி செல்ல......
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
வார்த்தைகளை விட்டு விட்டு
வருந்தி என்ன செய்ய மலர்😭😭😭
விரும்பி ஏற்றுக் கொண்டவள்
வார்த்தையில் வதைக்க
வலியுடன் விலகி செல்ல......
🙏🙏🙏