• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 12

Dheera

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 17, 2023
Messages
234
"அவ நம்மள மறந்திருப்பாள்ல..?" என்று சற்று கவலையுடன் மதியின் தாய் கேட்கவும் அவளது தந்தையிடம் சிறு மௌனம்.

காதில் ஒருவரின் குரல் மீண்டும் மீண்டும் வந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

திடீரென மனைவியிடம் "நான் சொன்ன வாக்க காப்பாத்தலயோ சீதா..?" என்றார்.

பதறிப்போன அவரும் "என்னங்க அப்படி சொல்லுறீங்க..? நாமளா அவளைப் போன்னு சொல்லலையே.. அந்தப் பொண்ணு போனதுக்கு நாம என்ன பண்ண முடியும்..?" என்றார் விட்டேறியாக.

ஆனால் அவருக்குத் தான் அப்படி விட மனம் வரவில்லை.

மீண்டும் "இல்லை சீதா.. நான் தான் தவறிட்டேன். ஐயா என்னை நம்பி விட்டுட்டுப் போனாரு. ஆனால் தப்புப் பண்ணிட்டேன். அப்போவே அவ இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னாள். அந்த குழந்தை முகத்துல ஒரு வலி தெரிஞ்சுது. அதை பார்க்க சகிக்க முடியாம தான் அன்னைக்கு எழுந்து போய்ட்டேன். நான் அ..அப்படி செஞ்சிருக்க கூடாது. கூர் உள்ள பொண்ணு சொன்னா சரியாத் தான் இருக்கும் என்று அவட சொல்ல கேட்டிருக்கனும்..." என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

சீதாவிற்கு அந்தக் கவலை கொஞ்சமும் இல்லை போலும்.

"சரி போய் விட்டாள். விட்டது தொல்லை" என இருந்து விட நினைத்தவர் கணவனிற்காக கவலைப்படுவது போல நடித்துக் கொண்டிருக்கிறார்.

"சரி இப்போ என்ன ஆகிப் போச்சு. அவ போக வேண்டிய இடத்துக்கு தானே போய்க்கா.. நமக்கு ஒரு பாரம் கொறஞ்சுதுனு நெனச்சுக்குவோம்.." என்றார் கல் நெஞ்சாய்.

அதில் விரக்தியாய் சிரித்தவர் "உன்னை மாதிரி என்னால நெனைக்க முடில.. ஏன்னா, அவ அப்பா இட்ட உப்பை சாப்பிட்ட உடம்பு இது.." என்றவாறு கதிரையில் சாய்ந்தார்.

அவரது பேச்சில் "ம்ஹூம்.." என முகத்தை சுழித்திருந்தார் சீதா.

எவ்வளவு தான் ஒருவர் செய்திருந்தாலும் சீதா என்பவர் நன்றி என்பதை மறந்து விடுபவர். ஆனால் அவரது கணவன் அப்படியில்லை. அவர் விசுவாசமான சேவகர். எனவே தான் தன் முதலாளியின் பிள்ளையை தன் பிள்ளை போல வளர்த்து வந்தார்.

ஆம் மதிநிலா என்பவள் இவர்களின் சொந்தப் பிள்ளை இல்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் பாதுகாப்பின் கீழ் அடைக்கலம் வந்து சேர்ந்தவள்.

முதலில் மதியை சீதாவிற்கு பிடித்துத் தான் இருந்தது. காலப் போக்கில் தன் கணவன் அவள் மேல் எடுத்துக் கொள்ளும் அக்கறையில் ஏனோ அவளை வெறுக்கத் தொடங்கினார்.

அதுவும் இவளுக்கு வரன்கள் சரிவர அமையாததால் அது தன் இளைய மகளின் வாழ்க்கையை பாதித்து விடுமோ என அஞ்சியவர் எப்படிப்பட்டாவது இவளுக்கு ஓர் வரனைப் பார்த்து திருமணம் முடித்து வைத்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டு கண்ணில் காண்பவனை எல்லாம் கட்டிக்கொள் என நச்சரிக்கத் தொடங்கியிருந்தார்.

அவரது ஆசைகளை பொய்யாக்கும் முகமாக பார்பவர்களையெல்லாம் தன்னிலை உணர்ந்து மதியும் வேண்டாமென மறுக்க வார்த்தை எனும் வாலால் அவளை அறுக்கத் தொடங்கினார்.

ஓர் கட்டத்தில் தாங்க முடியாமல் தான், மாப்பிள்ளை யாரென்பதையுமறியாமல் ரிஷியை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள் இத்தனை நாட்களும் அவர்களது வீட்டில் இருந்த நன்றிக் கடனிற்காக...

இத்தனை காலமும் மதியை தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு சீதா அமைதியாக இருக்க காரணமும் இருந்தது. அது அவளிடம் இருந்த பணம்..!
ஆம் பணமே தான்..!!


..


"உள்ளே வரலாமா..?" என்ற குரலில் வாசல் பக்கம் திரும்பினர் கணவன் மனைவி இருவரும்.

பார்த்ததும் அதிர்ந்து விட்டனர். அவனுமே அதிர்ச்சியில் தான் நின்றிருந்தான். ஆனால் முகத்தில் அதனை காட்டிக்கொடுக்கவில்லை.

அது வேறு யாராகத்தான் இருக்க முடியும். சாக்ஷாத் ரிஷியே தான்.

கேள்வியை கேட்டுக் கொண்டே அவன் உள்ளே வர, இங்கே இருவரும் தங்களை மாறி மாறி திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

மீண்டும் அவனே "என்ன அங்கிள் உள்ள வான்னு கூப்பிட மாட்டிங்களா..?" என அதே அழுத்தத்துடன் அவன் கேட்க தங்கள் திகைப்பிலிருந்து வெளியே வந்தவர்கள் வெகுவாக முகத்தில் அதிர்ச்சியை மறைத்தனர் என்று தான் கூற வேண்டும்.

பின்னர் சீதா தான் "வா..வாங்க மாப்பிள்ளை..." என்றார்.

"மாப்பிள்ளை..ம்ம்.." என்றவாறு ரிஷி மித்ரனிடம் கண்ணசைவில் இவர்களைக் காட்ட சீதா திருதிருத்தார்.

அவனது சாடைமாடையான பேச்சே இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ரிஷி கேட்டு விட்டான் என்பதை பறைசாற்ற என்ன பேசுவதென புரியவில்லை அவர்களுக்கும்.

எழுந்து நின்ற மதியின் தந்தை, இப்போது அவளை வளர்த்தவரிடம் "அட உட்காருங்க அங்கிள்" என்றான் ரிஷி.

அனைவருமாக அமர்ந்திருக்க சில கணம் நீடித்த அமைதியை கலைத்தவனாக ரிஷியே பேச்சை வளர்த்தான். "அப்பறம் ஆண்ட்டி, மதி இருக்குற இடம் தெரியும் போலயே?" என்றான் யோசனையாக. இருந்தும் குரலில் நக்கல்...

அவரோ "என்னப்பா சொல்லுற?" என்றார் எதுவும் அறியாதவர் போல.

திரும்பியவன் மித்ரனிடம் "மச்சி என்ன இப்படி சொல்லுறாங்க. இப்போ தானடா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பாவம் அதுக்குள்ள மறந்துட்டாங்க போல." என்றவாறு உதட்டை வளைத்தான்.

மித்ரனுக்கும் ஏக கடுப்பு.
எத்தனை தடவை சொல்லி இருப்பார்கள் மதியைப் பற்றி தகவல் தெரிந்தால் சொல்லும் படி. ஆனால் இங்கே, ஏதோ மிகப்பெரிய உண்மையை மறைப்பது போலல்லவா இருக்கிறது இவர்களின் இவ்வளவு நேரப் பேச்சும்.

சீதாவை தவிர்த்தவன் அவரின் கணவரிடம் "அங்கிள் நீங்க சரி உண்மையா சொல்லுவீங்கன்னு நம்புறேன்" என்றவனின் கண்களில் அத்தனை ரௌத்திரமும் உண்மையை தெரிந்து கொள்ளும் வெறியும். உண்மையை சொல்ல நினைத்தாரோ என்னவோ அவரது எண்ணம் பின்னோக்கி நகர ரிஷியை பார்த்து கூறலானார்.

......


பல வருடங்களுக்கு முன்,

"டாட் யூ நோவ், ஐ எம் சோ இன்டெலிஜென்ட்" என இல்லாத காலரை தூக்கி விட்டாள் மதிநிலா. அந்த வீடு இளவரசி, அத்தனை சொத்துக்களுக்கும் ஒற்றை வாரிசு.

அவளது தந்தை சேதுராமனோ "ஐ நோ மா..." என்று சிரித்து வைத்தார்.

இந்தப் பக்கம் அவளது தாயோ "அப்படியே அசையாம நில்லும்மா.." என்றவர் திருஷ்டி கழிக்க தட்டுடன் வந்து நின்றார்.

பத்தாம் தர பொதுப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தாள். அதுவும் ஆங்கில மீடியத்தில். அதற்கு தான் இந்த அக்கப்போர்.

அதனைப் பார்த்தவள் "மாம்.. இட்ஸ் நியூ ஈரா..இங்க தட்டோட வரிங்க..." என்றவளே திரும்பி தன் தந்தையிடம் "டாட் ஹவ் இஸ் மை தமிழ்...?" என்றாள் கண் சிமிட்டி.

அதற்குள் அவளது தாய் சுத்திப் போட்டு விட்டு உள்ளே சென்று விட்டார்.

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க உள்ளே வந்தான் சேதுராமனின் தம்பியின் மகன், மதிநிலாவின் அண்ணன் அநாத்ரயன்.

"கங்ராட்ஸ் டி வாயாடி..." என்றவன் பைக் சாவியை கையில் ஆட்டிக் கொண்டு வர, கோபம் வரப்பெற்றவள் பற்களை நறநறுத்தவளாக அவனருகில் வேகமாக சென்று "ஏம் ஐ வாயாடி..?" என்றவாறு விட்டாள் தலையில் ஓர் கொட்டு..

ஆஆ என தலையைத் தேய்த்துக் கொண்டவன் வெறியில் "வாயாடி என்றதே உருப்படியா உன் வாய்ல நுழைய மாட்டிக்கு..இதுல எனக்கு அடிக்கிறியா...? இருடி.." என அவளை அடிக்கத் துரத்த, அதோ அவர்களுக்குள் போர்களம் ஆகிவிட்டது.

மீண்டும் வெளியே வந்த அவளது தாய், இந்தக் கூத்தை பார்த்து விட்டு தலையிலடித்து விட்டு கடந்து சென்றார்.

சமாதானம் செய்யப் போய் இறுதியில் இந்த வாலில்லா குரங்குகளிடம் மாட்டிக் கொள்ள அவர் தயாராக இல்லை. எனவே தான் தப்பித்தோம் பிழைத்தோம் என சமயலறைக்குள் நுழைந்து விட்டார்.

இந்த இரண்டும் அடித்துப் பிடித்து ஓய்ந்து போய் தொப்பென வந்து சோஃபாவில் அமர்ந்த பின்னர் தான் சேதுராமனும் தலையை நிமிர்த்தி இவர்களைப் பார்த்தார்.

அனுபவசாலி அவரோ இந்த சண்டைக்குள் தலையை கொடுத்து சிக்கி விடாமல் தப்பிக்க நினைத்து அப்போதே பத்திரிகையினுள் தலையை நுழைத்து விட்டிருந்தார்.

அவரருகில் வந்தமர்ந்த அநாத்ரயன் "பெரியப்பா பார்த்து பேப்பருக்குள்ள தலை போய்ராம..." என்று கூறி விட்டு மதியுடன் ஹைஃபை போட்டு சிரித்துக் கொண்டான்.

இது தானே தினம் தினம் நடப்பது. இப்போது சட்டையை பிடித்து சமர் செய்யும் இரண்டும் அடுத்த நிமிடம் பாசமலர் போல் ஒட்டிக் கொண்டு அடுத்தவர்களை ஓட்டித் தள்ளும்.

தெரிந்தவர்களின் தலை தப்பித்துக் கொள்ளும்.

இதுவே மதியின் குடும்பம். அவளுக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள் கடைசியில் உயிரையே கொடுத்து விட்டனர்.


தொடரும்...


தீரா.
 
Top