• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 13

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 13

இரவு பதினோரு மணிக்கு ரெஸ்டாரண்ட் முழுவதையும் சுற்றி வந்து வேலை முடிந்ததை மேற்பார்வையிட்ட கவின் தங்களது அலுவலக அறை நோக்கி சென்றான்.

கணினியில் ஒரு முறை அனைத்தையும் சரி பார்த்துவிட்டு கிளம்புவது அவன் வழக்கம்.

உறக்கம் கண்ணை கட்டியது கவினிற்கு. வீடு பக்கமாய் இருப்பதால் பிரச்சனை இல்லை என்ற நினைவோடு கண்களை சோர்வாய் மூடி திறந்து அலுவலக அறையின் கதவை திறக்க, அங்கிருந்த டேபிளில் கை ஊன்றி தலையை தாங்கியபடி இருந்தவனைப் பார்த்து ஒரு நொடி திட்டுக்கிட்டான் கவின்.

செழியன் தான் என மூளை எடுத்து சொல்லவும் ஆசுவாசம் கிடைத்தாலும் இந்த நேரம் இங்கே எப்படி? எப்பொழுது வந்தான்? காலையில் தான் மதுரை சென்றிருந்தானே? என பல கேள்விகளில் இதயம் இன்னும் சீராய் இயங்கவில்லை கவினிற்கு.

"டேய்!" என்ற அழைப்பில் ஏற்கனவே கதவு திறக்கப்படும் சத்தத்திலும் விழிக்காமல் இருந்தவன் இப்பொழுது விழித்து அப்படியே அமர்ந்திருக்க,

"எப்ப டா வந்த? மதுரைக்கு மார்னிங் தானே கிளம்பின? அதுக்குள்ள எப்படி இங்க? மலர் எங்கே டா?" அடுக்கடுக்காய் கேள்விகளை அவன் தொடுக்க,

"ப்ச்!" என்ற ஒற்றை பதில் செழியனிடம்.

"செழியா! என்ன டா?" - கவின்.

"தப்பு பண்ணிட்டேன் டா" செழியனின் கூற்றில் என்னவோ என்ற பதட்டம் கூடியது கவினிற்கு.

"என்னன்னு சொல்லு டா.. பதறுது.. மலர் எங்க? நீ எப்படி இங்கே வந்த?" மீண்டும் வேகமாய் கவின் கேட்க,

"இப்ப தான் வந்தேன்.. எப்படி வந்தேன்னு எனக்கே தெரியல" என பாதிக்கு பாதியாய் பதில் சொல்பவனை கவின் கோபமாய் முறைத்த நேரம் கவின் அலைபேசி அழைக்க, எடுத்து பார்த்த போது மலர் எண்ணைக் காட்டியது.

செழியனைப் பார்த்தப்படியே அட்டன் செய்து காதில் வைத்தவன் "ஹலோ!" என்க,

"கவிண்ணா! அவங்களுக்கு இங்க யாரும் பிரண்ட்ஸ் இருக்காங்களா? மதியம் கிளம்பினவங்க இன்னும் காணும்.. பயமா இருக்கு.. கால் போகலை" என்றவள் அழும் குரலில் கவினிற்கு அதிர்ச்சி தான் முதலில்.

அங்கிருந்து யாரிடமும் கூறாமல் வந்திருக்கிறானா என்ற கேள்வி தான் முதலில் வந்தது.

"மலர்!" என்ற கவின் அழைப்பில் செழியன் சட்டென திரும்பி கவினைப் பார்க்க, அவனும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவன் சேஃப் தான்.. நீ ஏதாச்சும் சொல்லி வீட்டுல சமாளி.. மார்னிங் வந்துடுவான்" என்று கவின் கூற, மீண்டும் குனிந்து கொண்டான் செழியன்.

"எங்க போயிருக்காங்க கவிண்ணா" மீண்டும் அழுதபடி தான் கேட்டாள்.

"வந்துடுவான் மலரம்மா.. அழாத.. அவன் என்ன குழந்தையா? நான் மகிண்ணாகிட்ட பேசிடுறேன்.. நீ எதுவும் சொல்லிக்க வேணாம்.. தூங்கு" என்றவன்,

"ஆமா சாப்பிட்டியா?" என்ற கேள்விக்கு அவள் அமைதியாய் இருக்க,

"சரி தூங்கு டா.. மார்னிங் வந்துடுவான்" என்று வைத்த கவின், மகேந்திரனுக்கு அழைத்து பேசி வைக்க, மலரின் அறைக்கு சாப்பாட்டுடன் சென்றிருந்தான் மகேந்திரன்.

செழியன் முகமும் மலரின் குரலும் என வைத்தே பிரச்சனை என்ற அளவில் புரிந்திருந்த கவினிற்கு நண்பனின் மேல் அவ்வளவு கோபம்.

இருந்தும் எதுவும் பேசாமல் இருந்தவன் சப்பாட்டை எடுத்து செழியன் முன் நீட்ட, அதை அவன் தொடாமல் அமர்ந்திருந்தான்.

"சாப்பிடுங்க சார்.. இப்ப கிளம்பினா தான் விடிஞ்சதும் மதுரைல இருக்க முடியும்" கோபமாய் கவின் கூற,

"நான் வர்ல" என்றான் செழியன்.

"வேணாம் டா.. என் வாயை கிளறாத.. எதாவது சொல்லிடுவேன்.. சாப்பிட தான் சொன்னேன் உன்னை.. எதுவா இருந்தாலும் இப்ப பேச வேண்டாம்" என்ற கவின் தட்டை அவன் முன் வைக்க, செழியன் அசைவதாய் இல்லை.

"பொறந்த குழந்தை இவரு.. சண்டை போட தெரியும்.. சாப்பிட தெரியாது.. ச்சை.. எங்கிருந்து தான் வந்து சேருறானுங்களோ" திட்டியபடியே ஒரு வில்லை எடுத்து செழியன் வாயறுகே கவின் கொண்டு செல்ல, தயக்கமாய் பார்த்தான் செழியன்.

"அதான் உன் மச்சான் அங்க ஊட்டுறானே.. சாப்பிட்டு தொலை.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று அவன் பார்வை புரிந்து கூறிய கவினின் பேச்சில் மிகமெல்லிய புன்னகை செழியன் முகத்தில்.

"கிளம்பு!" என்ற கவின் செழியனின் கார் கீயை டேபிளில் இருந்து கைகளில் எடுத்துக் கொள்ள, செழியன் சாய்ந்து அமர்ந்தான்.

"வான்னு சொன்னா வர மாட்டியா? எண்ணை பேச வைக்காத டா" கதவறுகே சென்று திரும்பிப் பார்த்த கவின் கோபமாய் கூற,

"நான் வர்ல டா.. வேண்டாம்" என்றான் செழியன்.

"என்ன வேண்டாம்னு தெளிவா சொல்லேன்" என்ற கவின் கேள்விக்கு செழியன் முறைக்க,

"புரிஞ்சா சரி! இப்ப நீ வர்ற அவ்வளவு தான்.. ஏன் டா சின்ன பசங்களா டா நீங்க? அதுவும் அவ்வளவு தூரம்.. எப்படி டா வர முடிஞ்சது உனக்கு?" என்ற கவினிற்கு நண்பனை அறையும் அளவுக்கு கோபம் இருந்தது.

"என்ன ஸ்பீட்ல வந்த?" என்ற கேள்விக்கு பதிலே இல்லை.. எப்படி வந்து சேர்ந்தான் என்றே தெரியாதவனிடம் ஸ்பீடை கேட்டால் என்னவென்று கூறுவான்.

"அம்மாகிட்ட சொன்னியா?" என்று கேட்ட கவின்,

"சொல்ற மூஞ்சிய பார்த்துட்டாலும்" என்றபடி செழியன் மொபைலை எடுத்துப் பார்க்க, ஆறு அழைப்புகள் லட்சுமியிடம் இருந்து.

"அம்மா என்ன டா பண்ணினாங்க? எனக்கு வர்ற கோபத்துக்கு..." என்ற கவின் மீண்டும் மகேந்திரனுக்கு அழைத்து கேட்டான் லட்சுமி அம்மா கால் செய்தாரா என்று.

"உன்னால எத்தனை பொய்யி யார் யார்கிட்டல்லாம்னே மறந்துடும் போல.. மனுசனா நீ? கோபம் வரலாம் மகனே.. இந்த கொழுப்பு ஆகாது.. பாத்துக்கோ" என்றவன் பேசிய பேச்சில் சத்தமே இல்லாமல் எழுந்து வந்து வண்டியில் அமர்ந்திருந்தான் செழியன்.

"ஏசப்பா.. அல்லாஹூ.. முருகய்யா... இருக்குற தூக்கத்துக்கு வண்டிய எங்கேயும் கொண்டு விட்ற கூடாது.." என வேண்டியபடி காரை இயக்கிய கவின் செழியனை பாராமல் பென்டிரைவ் சொருகி சத்தமாய் ஓடவிட்டான் குத்துப் பாட்டினை.

அவன் செயல்களில் புன்னகை வந்த போதும் எதுவும் பேசாமல் பின்னால் சாய்ந்து செழியன் கண்களை மூடிக் கொள்ள,

"நீங்க ரெஸ்ட் எடுங்க சார்.. களைப்பா தான் இருக்கும்" என்றான் கடுப்பாய் கவின்.

"அறிவிருக்க எவனும் எவ்வளவு கோபம் வந்தாலும் இப்படி கண்ணை மூடி டிரைவ் பண்ணிருக்க மாட்டான்.. என்ன சண்டைனு எல்லாம் கேட்க மாட்டேன்.. என்னவோ பண்ணு.. எப்படியோ போ.. ஆனா வீட்டாளுங்கள பதற வைக்காத.. செம்ம காண்டாகிடுவேன் பாத்துக்கோ.." கவின் கூற, அவ்வளவு இரைச்சல் நிறைந்த பாட்டு சத்தத்திலும் தெளிவாய் செழியன் காதுகளில் அவன் குரல் விழுந்திருந்தது.

கதவை திறந்து செழியன் வெளியே வரவும் அஜிதா நிமிர்ந்து பார்க்க, எதுவும் கண்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி வண்டியை எடுத்திருந்தான் செழியன்.

அஜிதா மலர் அறைக்குள் சென்ற போது நின்ற இடத்திலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அவள்.

மலர் அறையில் செழியனின் கோபமான குரல் முதலில் வெளியே வரவேற்பரையில் கேட்ட போது அங்கே அஜிதா மட்டும் தான் நின்று கொண்டிருந்தாள்.

மகேந்திரன் அப்போது தான் வெளியே சென்றிருந்தான். அதற்கு முன்பே கண்ணனை சித்ரா கடைக்கு அனுப்பி இருக்க, சித்ராவும் ரச்சனாவும் சமையலறையில் இருந்தனர்.

அங்கேயே வரவேற்பரையில் அமர்ந்துவிட்ட அஜிதாவிற்கு தன் குடும்பத்தினர் யாருக்கும் இது தெரிய வேண்டாம் என்ற எண்ணம்.

செழியன் வெளியேறவும் உள்ளே சென்றவள் "மலர் என்னாச்சு மலர்?" என அவளை கைகளில் தூக்கிவிட, அஜிதா மேலேயே சாய்ந்து அழுதாள் மலர்.

அஜிதாவிற்கு அவளை சமாதானப்படுத்தவும் நேரம் இல்லை. வீட்டில் அனைவர்க்கும் தெரிந்தால் கவலை பயம் என வீடே நிலைமை மாறிவிடும் என நினைத்தவள் மலரை கண்டிப்பாய் முறைத்து,கேட்டு விஷயத்தையும் அவள் வாயால் வாங்கி இருந்தாள்.

"சாரி அண்ணி நான் பண்ணினது தப்பு தான்.. பிரியா பேச்சை கேட்டு..." என்றவள் முடிக்காமல் மீண்டும் அஜிதா மேல் சாய்ந்து அழ,

"ஷ்ஷ்! அழாத.. விடு எல்லாம் சரியாகிடும்.. அவங்க வரட்டும்.. பேசி புரிய வை.. சாரி கேளு.. எல்லாம் சரி ஆகிடும்.. கொஞ்ச நேரம் உள்ளேயே இரு.. முக்கியமா அழாத.. அவங்ககிட்ட எப்படி பேசலாம்னு யோசி.. உங்க அம்மா இதை எல்லாம் தாங்க மாட்டாங்க.. அதனால தெரிய வேண்டாம்" என்ற அஜிதா மலரை வெளியே வரவிடவில்லை.

அனைவரிடமும் செழியன் அவன் நண்பனை பார்க்க சென்றிருப்பதாக அஜிதாவே நம்ப வைத்திருக்க, மதிய உணவுக்கும் அஜிதா வெளியே வரவில்லை.

நேரம் ஆக ஆக தான் பெரியவர்களுக்கு எதுவோ சரி இல்லை என்று தோன்ற ள், அஜிதாவிற்கும் சமாளிக்க முடியாமல் திணற ஆரம்பித்தாள்.

எட்டு மணி அளவில் மலர் அறை பக்கம் மகேந்திரன் சென்ற போது தானும் அவனுடன் உள்ளே சென்றாள் அஜிதா.

"அண்ணா!" என அவனைப் பார்த்ததும் மலர் கட்டிக் கொண்டு அழ,

"ப்ச்! பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப ஏன் அழுற?" என அஜிதா கோபமாய் கேட்க,

"அஜி!" என உறுத்து விழித்தான் மகேந்திரன்.

"என்னை பேசணும்னா வாய் எங்க வர வேணா நீளுமே உங்களுக்கு.. உங்க தங்கச்சி என்ன பண்ணி வச்சிருக்கா தெரியுமா?" என்று அஜிதா கேட்கவும் மலர் தேம்பி தேம்பி அழ,

"ப்ச்!" என்ற அஜிதா அதை கூறாமல், கணவனுக்கு கண் அசைக்க, அவனும் என்னவென்றே கேட்காமல் சமாதானப்படுத்தினான் தங்கையை.

வெளியே வந்து தன் அறையில் வைத்து அஜிதா வேறு வழி இன்றி கணவனிடம் கூற , தலையில் கைவைத்துவிட்டான் அவன்.

"அத்தை மாமா என்னவோன்னு பயப்படுறாங்க.. நான் தான் மலரை பார்க்க விடல" என அஜிதா கூற, வெளியே வந்தவன், அன்னை தந்தையிடம் மேலோட்டமாய் சண்டை என்று மட்டும் கூறியதற்கே இடிந்து அமர்ந்துவிட்டனர் இருவரும்.

வாசலைப் பார்த்தே அனைவரும் அமர்ந்திருக்க யாரிடம் கேட்பது செழியனைப் பற்றி என தெரியாமல் திண்டாடிப் போனாள் மலர். மதுரையை விட்டே செழியன் சென்றிருப்பான் என துளியும் எண்ணவில்லை அவள்.

பதினோரு மணி அளவில் வேறு வழி இன்றி கவினிடம் கேட்டுவிட அவள் அழைக்க, அவனும் தெரிந்தது போல பேசவும் பக்கத்தில் தான் எங்கேயோ இருப்பதாய் நம்பினாள் மலர்.

வீட்டிலும் அதைக் கூற, மகேந்திரனிடம் கவின் பேசவுமே அவன் அறிந்து கொண்டான் செழியன் இங்கில்லை என்பதை.

ஆனாலும் யாரிடமும் கூறிக் கொள்ளாதவன் சாப்பாட்டுடன் மலரின் அறைக்குள் நுழைந்தான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
காதலும் அதிகமாய் இருக்கு
கோபமும் அதிகமாக இருக்கு....
கவின் தான் பாவம்..... 😂😂😂😂😂
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
காதலும் அதிகமாய் இருக்கு
கோபமும் அதிகமாக இருக்கு....
கவின் தான் பாவம்..... 😂😂😂😂😂
Ama pa
 
Top