• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 14

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 14

"சாப்பிடு மலர்.. செழியன் வந்துடுவான்" மகேந்திரன் கூற,

"சாரிண்ணா!" என்றாள் தலை குனிந்தே..

"அப்புறமா பேசிக்கலாம்.. சாப்பிடு" என்றவன் அவனே ஊட்டிவிட, கேவியபடியே சாப்பிட்டு முடித்தாள்.

"ஏன் மலர்! நான் ஒன்னு சொன்னா பொறுமையா கேட்பியா?" மகேந்திரன் கேட்கவும் அவள் நிமிர்ந்து பார்க்க,

"உனக்கு செழியனை முன்னாடி தெரியுமா?" என்று கேட்கவும் இல்லை என்று அவள் தலையசைக்க,

"ஏன் கேட்டேன் தெரியுமா? செழியன் மாசத்துக்கு மூணு நாலு மதுரை வந்திருக்கான்.. அதுவும் ரெண்டு மாசம் முன்னாடி வரை" என்று கூற, புரியாமல் விழித்தாள் மலர்.

"கல்யாணம் ஆன மூணு நாள்ல பெருசா தன்னோட பார்ட்னர் பத்தி தெரியாம சந்தேகம் வர்றது வரை ஓகே.. ஆனா அதை நீ எப்படி கேட்ருக்கணும்?" என அவன் கேட்கவுமே மீண்டும் தலை கவிழ்ந்தாள்.

"ரொம்ப தப்பு மலர்.. அம்மாவும் அப்பாவும் பயந்து போய் இருக்காங்க உன் வாழ்க்கையை நினச்சு.. காரணம் தெரியலைனாலும் செழியன் தான் தப்புன்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்க.. இதெல்லாம் எதனால?"

"என்னால பதில் சொல்ல முடியலை ண்ணா.. தப்பு தான்.. ஆனா.. ஆனா தெரியாம பண்ணிட்டேன் ண்ணா" என்றவள் கண்ணீரை துடைத்தவன்,

"புரியுது டா.. உன் அண்ணி சொல்ற மாதிரி நாங்களும் உன்னை ரொம்ப செல்லம் கொடுத்து இப்படி யோசிக்க விடாம வச்சிட்டோமோன்னு தோணுது" என்றவன் குரலில் கவலை.

"விடு! செழியன் காலையில வந்துடுவான்.. உன் மேல அவ்வளவு கோபம் எல்லாம் அவனுக்கு இருக்காது.. நிச்சயம் வருத்தம் இருக்கும்.. உன்னை அவனுக்கு ரொம்ப புடிக்கும்.." என்று கூறவும் அவள் பார்க்க,

"செழியன் கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பாகிட்டயும் எங்கிட்டயும் எல்லாம் சொல்லி தான் இந்த கல்யாணத்தை நடந்தினான்.. உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு வேற சொல்லிட்டான்.. செழியன் கவின் பிரண்ட்னாலும் நாங்களும் வெளில விசாரிச்சோம்.. என் தங்கச்சியை அப்படிலாம் யாருக்கும் ஈசியா குடுத்துடுவோமா என்ன? அப்பாக்கும் செழியன் அவங்க பேமிலின்னு ரொம்ப புடிச்சு போச்சு..அவங்க அப்பா கூட உன்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடி பேச சொன்னதுக்கு செழியன் தான் என்கிட்ட வரட்டும் அப்புறம் பேசிக்குறேன்னு சொல்லிட்டானாம்.. நீ தான் அவசரப்பட்டுட்ட" என்று கூறவும் பலவித உணர்வுகளில் அமர்ந்திருந்தாள் மலர்.

"நான் உடனே அவரை பார்க்கணும் ண்ணா.. என்னை கூட்டிட்டு போயேன்.. கவிண்ணா அவர் எங்க இருக்கார்னு சொல்லவே இல்லை.. இன்னும் கோபமா தான் இருப்பார்.. நான் அவரை பார்க்கணும்.. ப்ளீஸ் ண்ணா" என்றவளிடம் உண்மையைக் கூறாமல்,

"செழியன் வரட்டும் மலர்.. நீயும் கொஞ்சம் டைம் எடுத்துக்கோ.. என்ன பேசனும்ன்றத விட எப்படி பேசனும்னு கொஞ்சம் யோசி.. இப்பவும் சொல்றேன்.. ஹி லவ்ஸ் யூ.. நீ ஹர்ட் பண்ணாத" என்று கூறி அவளுக்கு புரிய வேண்டுமே, உணர வேண்டுமே என்ற எண்ணத்துடன் வெளியேறி இருந்தான்.

காதலித்தான்.. தன்னை காதலித்தான் தன் கணவன் என்பதை எவ்வளவு கர்வமாய் உணர்வு வேண்டும்.. அந்த எண்ணம் வராமல் அவன் மனதில் தான் ஏற்படுத்திய காயம் மட்டுமே மேல் நின்று அவளை குத்திக் கொண்டிருந்தது.

சசிக்கா என்ற அவனின் கண்ணீர் கட்டிய குரலில் அழைப்பும் அதை தொடர்ந்த இவளது நேத்ரா மேடமின் அக்கறையான குரலும் கேட்ட நொடியில் தன்னை நினைத்து கூனி குறுகி இருந்தாள் மலர்.

பிடித்தம் என்ற ஒன்று வந்து சேர்ந்த நொடி இப்படி தான் அதிகப்பிரசங்கித் தனத்தால் அவன் காதலை இழந்து விடுவோமோ என்ற எண்ணம் அவளை ஒரு நிலையில் இருக்கவிடவில்லை.

அவன் காதலை உணரவோ அதை நினைக்கவோ முடியாமல் தன் வார்த்தைகளே அவளை கொன்று கொண்டிருந்தது.

மூன்றே நாட்களில் திருமணம் வேண்டாம் என்று தன்பிடியில் நின்றவள், தன்னவன் தன்னிடம் வந்து சேர்ந்துவிட மாட்டானா என்று ஏங்கும் நிலைக்கு வந்திருந்தாள்.

பலமுறை செழியன் எண்ணிற்கு அழைத்தவளுக்கு அவன் அணைத்து வைத்திருக்கும் செய்தியே மாற்றி மாற்றி வர, வருவானா என்ற பயமும் வரும் பொழுது அவன் முகத்தை பார்க்க முடியுமா என்ற பயமுமாய் உறக்கத்தை தொலைத்து இருந்தாள்.

"என்ன டா இன்னும் வர்ல?" பிரேம் தூக்க கலக்கத்தில் கவினிற்கு அழைத்து கேட்க,

"நீ ஒரு உருப்படாத பிரண்டு வச்சுருக்கல்ல? அவனை கூட்டிட்டு மதுரை போய்ட்டு இருக்கேன்.." என்று கோபமாய் கூறியவனிடம்,

"என்ன டா சொல்ற? செழியன் காலையிலே போய்ட்டான் இல்ல?" என்று கேட்க,

"அப்புறமா சொல்றேன் டா.. வேண்டாத வேலை பார்த்து வச்சுட்டான்.. நீ தூங்கு.. நாளைக்கு ஷாப்க்கு நீ போய்டு.. நைட்டு நான் வந்துடுவேன்" என்று கூறி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்க, உறக்கம் இல்லாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தான் செழியன்.

இடை இடையே இறங்கி முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து தன் தூக்கத்தை விரட்டி கவின் வண்டி ஓட்ட, தன்னையே நொந்தான் செழியன்.

"குடு டா நான் டிரைவ் பண்றேன்" செழியன் கேட்க,

"ஏன் ரொம்ப ஆசையோ?" நக்கலாய் கேட்டாலும் கோபம் தான் கவினிற்கு.

"சரி! தெரியாம வந்துட்டேன்.. இப்ப கீ குடு" என மீண்டும் அவன் கேட்க,

"ஒன்னும் தேவை இல்ல.. பேசாம வா" என்றுவிட்டவன் சாவியை கொடுக்கவில்லை.

"இன்னும் ரெண்டு மணி நேரம் தான டா.. நான் டிரைவ் பண்றேன்"

"பேசாம அமைதியா வா.. உன்னை விட்டுட்டு நான் என் வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு தான் கிளம்புவேன்.." என்ற கவின்,

"நீ அங்க வந்தது யாருக்கும் தெரியாது முக்கியமா மலருக்கு.. எதுவும் உளறி வைக்காத" என்று கூறினான்.

செழியன் அமைதியாய் இருக்க, "ஓஹ் அதான் பேச மாட்ட இல்ல.. மறந்துட்டேன் பாரு.." என்று வேறு கூற,

"ப்ச்! ஏன் டா" என்றான் சலிப்பாய்.

"நான் பாத்துக்குவேன் மச்சான்.. என் மலர் என்கிட்ட இருந்தா போதும்.." செழியன் கூறிய வார்த்தைகளை கவின் சொல்லிக் காட்ட, செழியன் மௌனம் காத்தான்.

"நான் தான் சொன்னேன்ல டா அவளும் உன்னை மாதிரி தான்னு.. அவ சின்ன பொண்ணு டா.. அவகிட்ட போய் சண்ட போட்டதும் இல்லாம கோச்சிக்கிட்டு..."

எவ்வளவு தான் தான் தலையிடக் கூடாது என நினைத்தாலும் மனம் கேட்காமல் செழியனிடம் தன் ஆதங்கத்தை கவின் காட்டினான்.

"உனக்கு சப்போர்ட் பண்ணி அவங்க வீட்ல நான் பேசினேன் பாரு.."

"புரியாம பேசாத கவின்.. அவ என்ன பண்ணினா தெரியுமா?" என்றவன் கண்களை மூடி தன்னை சிறிது அமைதிப்படுத்த,

"என்னவும் பண்ணட்டும்.. ஏன் உனக்கு வாய் இல்ல? பேச தெரியாது? கோபம்னாலும் அதை பக்கத்துல இருந்து காட்ட தெரியாது? இதை தான் என்கிட்ட வச்சுக்குவேன்.. என் கூட வச்சுப்பேன்னு டயலாக் அடிச்சியா?"

என்ன என்று கேட்காமல் எதுவாய் இருந்தாலும் நீ தானே சமாளித்து இருக்க வேண்டும் என்பதாய் இருந்தது கவினி வார்த்தைகள்.

நிஜமும் அது தானே? கோபத்தை அங்கிருந்து தானே நீ காட்டி இருக்க வேண்டும்? கவின் கேட்டது போதாது என்று மனமும் எடுத்துரைத்தது.

அங்கிருந்தால் இன்னும் பேசி விடுவோமோ என்ற பயத்தில் தான் அங்கிருந்து கிளம்பியது என்றாலும் போகும் வழியை அவன் கண்டு கொள்ளவில்லை.

கைகள் தானாய் இயங்கிக் கொண்டிருக்க தன் எண்ணத்திலேயே வந்தவன் தான்..

"உன்னை கேட்டு தானே நாளைக்கு கெட் டு கெதர் ஏற்பாடு பண்ணினாங்க?"

"எனக்கு அந்த நேரம் எதுவும் தோணல கவின்.. புரிஞ்சுக்கோயேன்.. எனக்கு கோபம் வரும் தான்.. இல்லைன்னு சொல்லல.. ஆனா என்னை சந்தேகப்பட்டா நான் என்னை ப்ரூப் பண்ணனும்.. அதுவும்.. அதுவும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட என் வைஃப்கிட்ட அடுத்த நாளே நான் நல்லவன் நீ நினைக்குற மாதிரி பொறுக்கி இல்லனு ப்ரூப் பண்ணனும்னு ஒரு சிடுவேஷன்.. சொல்லு.. என்னை என்ன பண்ண சொல்ற?" என்று வெடித்து கூற, சடன் பிரேக் இட்டு வண்டியை நிறுத்தி இருந்தான் கவின்.

"என்னை யார் என்ன சொன்னாலும் என்னால ப்ரூப் பண்ண முடியும்.. நீ என்ன நினைக்குறது போ டானு கடந்து போக முடியும்.. ஆனா அவகிட்ட? அவ எப்படி டா எண்ணை அப்படி நினைக்கலாம்? என்ன தெரியும் என்னை அவளுக்கு" என்றவன், ஒரு கசந்த புன்னகையுடன்,

"அவளுக்கு என்னோட பேர் கூட தெரியல டா" என்றான்.

"செழியா!" என்ற கவின் அவன் தோள்களைப் பற்ற,

"முடில டா.. எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? மண்டபத்துல வச்சு நீ தான் மாப்பிள்ளையானு கேட்டா உன் தங்கச்சி.." என்றவன்,

"நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. அவ ட்ரீமை ஃபுல்ஃபில் பண்ண விட்ருக்கணும்.. அவ லைஃப்பை என் கையில கொண்டு வந்தது என்னோட தப்பு தான்.. நான் யாரு அவ லைஃப் எப்படி இருக்கனும்னு சொல்ல? அப்புறம் எப்படி நான் அவ மேல கோபப்படலாம்.. யூ ஆர் ரைட்" என்று முடித்து முகத்தினை அழுந்த மூடி எடுக்க, கவின் பேச்சின்றி ஆனான் இம்முறை.

கவின் அவன் தெருவிற்கு முன்பே இறங்கிக் கொண்டு செழியனை மட்டும் அனுப்பி வைத்திருந்தான்.

"நான் வந்தது யாருக்கும் தெரிய வேண்டாம்.. நான் போய் அம்மாவை பாக்குறேன்.. மலர் வீட்டுல எல்லாரும் பயந்து போய் இருப்பாங்க.. பார்த்துக்கோ" என்ற கவினிற்கு முன்பு போல கோபமாய் கூற முடியவில்லை அவன் பேசியதை கேட்ட பின்பு.

கவின் பேசியதை கேட்டாலும் எதுவும் கூறாமல் வந்தவனுக்கு மலர் குடும்பத்தினரை பார்த்ததும் வருத்தமாய் போனது.

தன் தவறு புரிந்தாலும் அந்த நிமிடம் தன்னால் வேறு என்ன செய்திருக்க முடியும் என்றும் தெரியவில்லை.

"மாப்பிள்ளை இன்னும் வரலையே மகி!" கண்ணன் மகேந்திரனிடம் கூற,

"இப்ப வந்துடுவாங்க ப்பா.. நீங்க எதுவும் நினைக்க வேண்டாம்.. அதெல்லாம் சரியாகிடும்.. அம்மாவை சமைக்க சொல்லுங்க.. செழியன் வந்ததும் சாப்பிடணும் இல்ல?" என்று கேட்க,

"அவங்க வந்தா தான் உங்க அம்மாக்கு கை நடுக்கமே நிக்கும்.. இதுல எங்க சமைக்குறது?" என்று அஜிதா கூற,

"மலர் மாமா எங்கேம்மா?" என்று ரச்சனாவும் கேட்க ஆரம்பித்து விட்டாள்.

பொட்டு உறக்கம் இன்றி விடிய விடிய அமர்ந்திருந்த மலர் இன்னும் அந்த இடத்தை விட்டும் நகரவில்லை.

அவனை கண்களால் பார்த்துவிட்டால் போதும் என்று நினைத்திருக்க, அனைவரின் நினைவில் இருப்பவன் வாசலில் வந்து நின்றான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
464
வருத்தம் கொண்டு அனைவரும்
வழி மேல் விழி வைத்து காத்திருக்க
வாயில் வந்து நின்றான்
வலியுடன் செழியன்.....
 
Top