ரிஷியின் வீட்டில் மதி அனுபவித்த கொடுமைகளை அறிந்திராத சீதாவும் கணவனும் அவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் மித்ரனுக்கோ ரிஷியைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளது பின்புலம் தெரியாமல் என்னவெல்லாம் பேசி விட்டான்.
இப்போது முகத்தை எங்கு தூக்கி வைத்துக் கொள்வதென்பது தெரியாமல் சிலை போல் எழுந்தவன் "அ..அங்கிள் எனக்கு ஒரே ஒரு கெல்ப் பண்ணுங்க..." என்றதும் அவர் குழப்பத்தில் அவனை ஏறிட்டுப் பார்க்க அவனோ "மதிநிலாட வீட்டு அட்ரஸ் சொல்ல முடியுமா..?" என்று வினவினான்.
அவருக்கும் என்ன சொல்வது என்பது புரியவில்லை. ஏற்கனவே அவள் தந்தைக்கு கொடுத்திருந்த வாக்கை மீறி அவளுக்கு திருமணம் செய்து வைத்திருந்தார். அந்த வாழ்க்கை பாதியிலே முடிந்து விட்டதில் அவள் கண்காணா இடத்திற்கு சென்றிருக்க, மீண்டும் இவன் கேட்டதில் மெய்யாகவே "இவனிடம் சொல்வோமா வேண்டாமா..?" என்ற சிந்தனை தான் அவரிடத்தில்.
ரிஷியும் இவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தானே நின்றிருந்தான்.
"தனக்கு அவளை மணந்து வைத்தது தவறு என்றல்லவா" அவர் கவலைப்பட்டார்.
இப்போது தான் இப்படிக் கேட்டதும் அவரது முகத்திலிருந்த சிந்தனையின் ரேகையில் ரிஷிக்கு மனம் சுட்டது.
முயன்று குரலை செறுமி சரி செய்து கொண்டவன் "கவலைப்படாதிங்க இனி அவளுக்கு எந்தக் கஷ்டத்தையும் நான் தரமாட்டேன். என்னை நம்புங்க..." என்றவனின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது.
மித்ரன் வந்து தோளைத் தொட, சுயத்தையடைந்தவன் கண்களை அழுத்தமாக துடைத்து விட்டு முயன்று புன்னகைத்தான். ஆனால் அதில் ஜீவனிருக்கவில்லை.
அவனைப் பார்த்து அந்த மனுஷன் என்ன நினைத்தாரோ அவளது வீட்டு முகவரியைக் கொடுக்க கேட்டுக் கொண்டு பேசாமல் வாசல்படி இறங்கிச் சென்றான்.
சீதாவிற்கும் இப்போது தான் முழுக் கதையும் தெரிந்தது. அவளைப் பற்றி முழுவதும் தெரியாமல் தான் என்னவெல்லாம் பேசி விட்டோமென கப்பென வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டார்.
...
போகும் வழி முழுக்க அவனில் மௌனம் மட்டுமே குடிகொண்டிருக்க மித்ரன் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான்.
வீட்டிற்கு வந்தவன் உடனே மீண்டும் சென்னைக்கு சென்று விட்டான். ராஜேந்திரனும் அவனை தடுக்கவில்லை.
...
அடுத்த நாள் காலை ஆஃபீஸ் சென்றவனை முருகன் அழைத்து "ரிஷி..! உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன், இந்த வீக் நம்மளோட கம்பெனில இருந்து எஸ். வீ கம்பெனிக்கு ரெண்டு பேர் போறத இருந்தாங்க." என்றதும் நெற்றி யோசனையில் சுருங்க ஆமென தலையாட்டி வைத்தான் ரிஷி.
தொடர்ந்தவராக "இப்போ அந்த கம்பெனி மதிநிலா என்ற பொண்ணோட கைக்கு வந்திக்குது. நியூஸ் கேள்வி பட்டிருப்பிங்கனு நெனைக்கிறேன்" என்றது தான் தாமதம் ரிஷியின் கண்களில் ஓர் தேடல்.
"அப்போ அது நம்ம ஆள் தானா?" என துள்ளிகுதிக்க நினைத்த மனதை அடக்கியவன் அச்சா பிள்ளையாக முருகன் முன் நின்று தலையாட்டி வைத்தான்.
"எஸ் ரிஷி, அந்த அக்ரீமெண்ட் சைன் பண்ற மேட்டருக்கு மட்டும் மிஸ். மதிநிலா ஓகே சொல்லிட்டாங்களாம். சோ சம்வன் ஹேஸ் டு கோ ஃபோர் தட் மீட்டப்"
"நான் இங்க உங்கள வர சொன்னதுக்கு ரீசன் நம்ம கம்பெனி சார்பா நீங்களும் மித்ரனும் போய்ட்டு வாங்க. ஐ க்நொவ் காய்ஸ், யு கேன் டூ வெல் தட்" என்று முடித்துக்கொண்டார்.
ரிஷிக்கு இப்போதே போய்விட்டு வந்துருவோமா என்று இருந்தது. அந்தளவுக்கு மதியை காணத் துடித்தது அவன் மனம்.
"ஓகே சார்" என்றுவிட்டு திரும்பி நடந்தான்.
வெளியே வந்தவனின் முகத்தில் தெரிந்த பிரகாசத்தில் மித்ரன் விசாரிக்க அனைத்தையும் கூறி முடித்தவனிடம் "பார்ரா.. இதுக்கு தான் சாரோட முகம் வெளிச்சமா இருக்கோ?" என்றவன் அவனை ஓட்டித்தள்ள, ஆடவனுக்கோ முகத்தில் ஓர் வெட்கப் புன்னகை...
...
"ஹேய் திலா.. வா ஜாலியா வெளில ஒரு ரௌண்ட்ஸ் போயிட்டு வரலாம்" என்றவாறு அநாத்ரயன் வந்து மதியின் முன் இருக்கையில் அமர, அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் லாப்பினுள் தலையை நுழைத்துக்கொண்டாள்.
அதில் கடுப்பானவன் "ஏய் என்னடி திமிரா..? மொதல்ல எழுந்துருச்சு வாடி" என்றான் அவள் தன்னை கண்டுகொள்ளாமல் விட்டதில் .
இப்போது இவளோ "முடியாது போடா.." என்றதும் இல்லாமல் எழுந்து வெளியே செல்லவும், பற்களை நறநறுத்தவன் "வர வர உனக்கு துளிர் விட்டு போச்சு.. ஒரு அண்ணனு மரியாதை தரியா என்ன? கொழுப்புடி வேற ஒன்னும் இல்லை." என்றவனும் அவள் பின்னே நடந்தான்.
மதி வெளியே வரவும் மரியாதைக்காக ஊழியர்கள் எழுந்து கொள்ளவும், கண் அசைவிலே அவர்களை அமர சொன்னவள் கூலர்ஸை கண்ணில் மாட்டிக்கொண்டு கார் பார்க் செய்திருக்கும் இடத்தை நோக்கி நடையை காட்டினாள்.
பின்னால் வந்த அநாத்ரயன் கத்திய கத்தல் எல்லாவற்றையும் செவியில் ஏற்றிக் கொண்டும், கேளாதவள் போல நடந்தாள் உதட்டில் உறைந்த புன்னகையுடன்.
அவள் சட்டென நிற்பாள் என எதிர்பாராதவன் திட்டிக் கொண்டே அவள் மீது மோதி நின்றான்.
பின் தலையை தேய்த்தவனாக "ஏன்டி நின்ன காட்டெருமை" என்றவனை முறைத்தவள் இடுப்பில் கைகுற்றி "இப்படியே தன் பாட்டுக்கு கதைச்சிட்டு இருக்க போறியா, இல்ல எங்க கூப்பிட்டியோ அங்க கூட்டிட்டு போறியா" என்றதும் இவ்வளவு நேரமும் தேஞ்ச ரெகார்ட் போல ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவன் சட்டென பல்லைக்காட்டி "வாவ் திலாமா.. வா வா.." என்றவனாக கார் சாவியை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஏறி அமர்ந்தான்.
தலையில் அடித்துக்கொண்டவள் "கொடுன்னா கொடுக்க போறேன். அதுக்கு ஏன் நாலு நாள் பட்டினி கிடந்தவன் மாதிரி பறிக்கிற" என்று கடுப்படித்தவளிடம் "கிழவி மாதிரி வாய்கிழிய பேசாம வந்து ஏறு" என்றான் அண்ணன்.
"யாருடா கிழவி? இரு வரேன்.." என்று ஏறி அமர்ந்தாள் மதியும்.
அவன் பிளான் பண்ணியது போல அந்த இடத்துக்கு செல்வதுக்குள் இருவருக்கும் ஆயிரம் சண்டைகளும் வாக்குவாதங்களும் வந்து ஓய்ந்து விட்டன.
தொடரும்...
தீரா.