"அப்பறம் என்ன செய்றதா இருக்க..?" என்றான் காஃபியின் சிப் ஒன்றை அருந்தியவனாக.
மதியோ சீரியஸாக "அப்பறம்..?" என யோசிப்பது போல பாவனை செய்து விட்டு, பின் அநாத்ரயனிடம் "ம்ம் என் ஃபேவரிட் ரெட் வெல்வெட் கேக் ஆடர் பண்ணி சாப்பிட இருக்கேன்.. எவ்ளோ நாளாச்சு சாப்பிட்டு?" என கண்களை அகல விரித்தவளை பார்த்து சிரிப்பில் துடித்த உதட்டை மறைத்தவனாக அவனும் போலியாக முறைத்துப் பார்த்து "என்ன ஜோக்கா..?" என்றான்.
அவளும் நார்மலாக "இல்லையே.. அப்படி ஒன்னும் நான் ஜோக் சொல்லலயே.. சீரியஸ்லி.." என்று சிரித்தவள் அதனுடன் நிறுத்தாமல் வெயிட்டரை அழைத்து "வன் பீஸ் ஒஃப் ரெட் வெல்வெட் கேக் என்ட்...?" என்றவள் திரும்பி அநாத்ரயனிடம் "வட் டூ யூ வான்ட்..?" என்றாளே பார்க்க சீற்றத்துடன் அவளைப் பார்த்தவன் வெயிட்டரிடம் "நத்திங்..தட்ஸ் ஓல்..." என்றான்.
அவளோ போகும் வெயிட்டரை அழைத்து "வன் மோர் சாக்லேட் ஐஸ்கிரீம்..." என்று அனுப்பி வைத்தாள்.
இதற்குப் பிறகும் அநாத்ரயனுக்கு தன் கோபத்தை இழுத்து வைத்திருக்க முடியவில்லை.
முறைக்க நினைத்து தோற்றவனாக மீசை துடிக்க சிரித்தவன் "இன்னும் நீ மறக்கலல..?" என்றான்.
"அதெப்படி அவ்ளோ ஈசியா மறந்துறுவேனா என்ன..?" என்றாள் அவளும் பதிலுக்கு.
பின் தன்னையே கண்ணில் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் புருவத்தை உயர்த்தி என்னவென கேட்ட, "ம்ஹும் ஒன்னுமில்லை..." என்றான்.
அவனும் தோளை உலுக்கு விட்டு திரும்ப, வெயிட்டரும் ஆடருடன் வந்து நின்றான்.
அதனை ஆவலுடன் வாங்கி மேசையில் வைத்தவள் சுற்றம் மறந்து சுவைத்து உண்ண ஆரம்பித்திருந்தாள்.
"ஹேய்..!! கேக் உன்னை விட்டு எங்கேயும் பறந்துறாதுடி..மெதுவா சாப்பிடு..." என்று அநாத்ரயன் சொன்னதெல்லாம் அவளது காதில் விழவில்லை.
அந்தளவுக்கு அவள் ஓர் கேக் பிரியன்..!
...
சிறிது நேரத்தில் அங்கே வந்து நின்றது ஓர் ஆறு வயது நிரம்பிய சிறுமி.
வந்த சிறுமியோ மதியின் ப்ளேசரை இழுக்க அவளோ புரியாமல் விழித்தாள்.
அதுவோ அவளை குனியச் சொல்லி "அக்கா இந்த கேக்க நீங்க ருசிச்சு சாப்பிடும் போது சூப்பரா இருந்திங்க, லய்க் எ பேபி.." என பட்டென முத்தமிட்டு விட்டு பறந்து விட்டது.
திகைப்பிலிருந்தவளை அநாத்ரயனே சொடக்கிட்டு நனவுலகிற்கு கொண்டு வந்திருந்தான்.
நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு முகத்தில் ஓர் வெட்கப் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள, அவளுக்கு பின்னே அமர்ந்திருந்தவனின் உதடுகளும் சிரிப்பில் விரிந்தன.
எஸ், சாக்ஷாத் அது ரிஷியே. அவனும் இதே ஹாட்டலுக்குத் தான் மித்ரனுடன் வந்திருந்திருந்தான்.
இவ்வளவு நேரமும் அநாத்ரயன் மற்றும் மதியின் உரையாடலை கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.
முதலில் அநாத்ரயன் சீரியஸாக ஏதோ வினவ, அதற்கு இவளும் சிரியாமல் பதில் சொன்னது, அடுத்து அந்த ரெட் வெல்வெட் கேக்கை அவள் சப்புக் கொட்டி சாப்பிட்டது, பின் அந்தக் குழந்தை வந்து கூறியது, என மொத்தக் கதையையுமே காதில் உள்வாங்கிக் கொண்டே தான் இருந்தான்.
ஆனால் அது மதியென்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
அந்தக் குரல் அவளை நினைவுபடுத்தியது என்பது உண்மை.
ஆனால் அவன் மனமோ "அவள் எங்கே இங்கு?" என விட்டேறியாக நினைத்து விட்டது.
அந்தக் குழந்தையின் மழலை மொழியில் அவளைப் பார்க்க வேண்டும் போலிருக்க யதார்த்தமாக திரும்பியவனே அதனை கண்டான்.
ஆம் அது மதிநிலாவே தான்.. அதே நடை, அதே முகம்..
சட்டென அவனுள் பதற்றமாகியது. இதயம் வேறு படுவேகமாக துடிக்க நெஞ்சை தடவி விட்டவனுக்கு அவனது கண்களை நம்ப முடியவில்லை. முடியவில்லை தானே...
"மதியா இது..?" என்று தான் இருந்தது.
ப்பாஹ்..!
டாப், ஜீன்ஸ், ப்ளசர் என பக்கா மாடல் மாதிரி அல்லவா இருக்கிறாள்..
அந்த நடையில் தான் எத்தனை நிமிர்வு..?!
இமைக்க மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..
திடீரென மின்வெட்டினாற் போன்று "அப்போ இவ்வளவு நேரமும் இங்கே தனக்குப் பின்னால் அமர்ந்திருந்தது அவளா..? அந்தக் குழந்தை பேசியது இவளுடனா..? தவறில்லையே அந்தக் குழந்தை சரியாகத்தானே சொல்லி விட்டு சென்றிருக்கிறது.. இவளும் குழந்தை தானே.. ஆம் என் நிலா மனதால் குழந்தையானவள்.." என்று நினைத்து சிரித்தவனே குழப்பத்துடன் "பிறகு அவன் யாரு பக்கத்துல...?" என்று அதிர்ந்து நின்றிருந்தான்.
"மச்சி இது மதி தானே.. பக்கத்துல போறவன் யாருடா...?" என்றவாறு மித்ரனும் அதே போல் கேட்டுக் கொண்டு வந்து அவனது தோளில் கை வைக்க, அவனை திரும்பிப் பார்த்தவன் அதே அதிர்ந்த முகத்துடன் "அதைத் தான்டா நானும் யோசிச்சுட்டு இருக்கேன்..." என்றான்.
...
வீட்டிற்கு திரும்பி செல்லும் வழி முழுக்க ரிஷியின் நினைவுகளோ இன்று கண்ட காட்சியில் தான் வந்து நின்றது.
"யாரந்த அறியா முகம் கொண்டவன்..?" என்பதிலே அவனது மனம் உலன்று கொண்டிருக்க அப்படியே சீட்டில் சாய்ந்து கண்களை மூடி விட்டான்.
மூடிய இமைகளுக்குள் மதியே வந்து நின்றாள். அத்துடன் அவளை திருமணம் முடித்தது தொடக்கம் இன்றுவரை நடந்தவைகளை நினைத்துப் பார்த்தான்.
"எப்படியெல்லாம் அவளை தூற்றி அவமானப்படுத்தி விட்டோம்.." நினைக்கையில் கண்களினோரம் கண்ணீர் கசிந்தது.
துடைக்க மறந்து அமர்ந்திருந்தவனுக்கு இப்போது நெஞ்சம் பாரமாகியது..
தொடரும்...
தீரா.