• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 16

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 16

"அபி! இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகா தெரியுரியே.. வாட்ஸ் கோயிங்?" நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க தனத்தறைக்கு வந்த மனைவியிடம் கேட்டான் ஆனந்த்.

"இன்னைக்கு அச்சு வர்றா தெரியும் தானே?" என்றாள் பதிலுக்கு அபி.

"அதானே? எனக்காகவா அலங்காரம் செய்ய போற?"

"அச்சு வர்றது உண்மை தான்.. அலங்காரம்... அது உங்களுக்காக" என்றவள் அவள் கூறியதை அவன் உணரும் முன் ஓடி விட்டாள்.

"ஹ்ம்ம் இனி நீ தப்பிக்க முடியாது" சிரித்துக் கொண்டே நினைத்தும் கொண்டான் ஆனந்த்.

"ஆனந்த்! ராஜ் எங்கே? அப்ப இருந்து தேடுறேன்.. ஆளை காணும்" பவானி கேட்க,

"அவனை ஒரு முக்கியமான வேலையா அம்மா அனுப்பியிருக்காங்க"

"இன்னைக்கும் ஆபீஸ்ஸா?"

"ஆபீஸ் வேலை இல்லை அத்தை.. டிரைவர் வேலை.. உங்க மருமகளையும் அவ பேமிலியையும் போய் கூட்டிட்டு வர தான் ராஜ் போயிருக்கான்"

"இப்பவேவா? அப்ப என்ன பிளான்?"

"என்னை கேட்டா? நான் போட்ட பிளான் கான்செல் ஆயிடுச்சு இது அம்மா பிளான்"

"அண்ணி பிளான்னா சரியா தான் இருக்கும்.. சரி அந்த மாலையை எடுத்து வாசல்ல கட்டு.. எதாவது வேலை நடக்குதா.. ஒவ்வொண்ணும் நான் சொல்லனும்" கூறியப்படியே சென்றார் பவானி.

ஆனந்த் வாசலில் கட்டிக் கொண்டு இருக்க, கார் வந்து நின்றது. டிரைவர் சீட்டில் ராஜ், அருகே மது.. பின்னால் மதுவின் அன்னையும் தந்தையும்.

"டேய் அந்த பொண்ணு கையை விடு டா.. அவ அப்பா பாக்குறாரு!" சத்தமாய் ஆனந்த் எங்கோ பார்த்து சொல்ல, வேக வேகமாய் கைகளை பிரித்துக் கொண்டு காரில் இருந்து இறங்கினர் ராஜ், மது.

"நீயெல்லாம் நல்லா வருவ டா.. உன்னை யாரு வாசல்ல நிற்க சொன்னது.." வந்ததும் ராஜ் கேட்க,

"அம்மா தான் சொன்னாங்க இரு கூப்பிடுறேன்.. கனகாம்மா" என்று ஆனந்த் கத்த,

"அய்யோ அத்தையா?" என்று ஓடினான் ராஜ்.

"ஹலோ சீனியர்! அபி எங்கே?"- மது

"மேடம் பயங்கர பிஸி! அங்கே பாரு!" என்று காட்ட, அந்த பக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு மெஹந்தி போடும் வேளையில் மும்முரமாய் ஈடுபட்டு இருந்தாள் அபி.

"அய்யயோ! இது கஷ்டமான வேலையாச்சே!" என்று சொல்லியபடி அங்கே சென்றாள் மது.

"தேவ்!" தாத்தா அழைக்க,

"சொல்லுங்க தாத்தா!" என்று அவர் அருகே சென்றான் ஆனந்த்.

"உன் அம்மா என்ன தான் பிளான் பண்ணியிருக்கா? இன்னும் ஸ்ரீ பேமிலி வர்ல.. அந்த பொண்ணு நீ போட்ட பிளான் நம்பி தானே இருந்திச்சு? இப்ப அம்போன்னு விட்டா?" என்று கேட்ட கேள்வி நியாயமாய் தோன்ற, என்ன செய்வது என யோசித்தான் ஆனந்த்.

"அத்தைகிட்டயே கேட்டுடலாம் டா" ராஜ் சொல்லவும் கனகாவின் அறைக்கு சென்றனர் இருவரும்.

"ம்மா!"

"உள்ளே வா டா" - கனகா.

"ம்மா! ஸ்ரீ பேமிலி ஏன் மா இன்னும் வர்ல? டைம் ஆயிடுச்சே?" ஆனந்த் கேட்க,

"அவங்க டைரக்டா மண்டபம் வந்திடுவாங்க.. மது வீட்ல எல்லாரும் வந்தாச்சா?" என்றார் ராஜை பார்த்து.

"வந்தாச்சு அத்தை.." என்றான் ராஜ்.

"ஆனா.. ம்மா! மது பேமிலி வந்துட்டாங்க ஓகே.. எப்படி ஸ்ரீ, ராஜ் எங்கேஜ்மென்ட்? என்ன பிளான் மா"

"சொல்றேன் டா.. எல்லாரும் வந்தாச்சா? வந்தாச்சுன்னா மண்டபம் கிளம்பிடலாம்.. நேரம் ஆகுதே" கனகா சொல்ல, அதற்கு மேல் அவரை வற்புறுத்தி கேட்க முடியாதே! அமைதி தான்.

"எனக்கென்னவோ இப்ப தான் டா பயமா இருக்கு.. பேசாம ஏதாவது ஒரு பொண்ணை கடத்திடுவோமா?" ராஜ் சொல்ல,

"லூசு! கண்ட பொண்ணை கடத்தினா கல்யாணம் எப்படி டா நிற்கும்? கல்யாணப் பொண்ணை கடத்தினா தான் கல்யாணம் நிற்கும்" என்றான் தெளிவாய் ஆனந்த்.

"அப்ப மதுவை கடத்தலாமா?"

"மதுவை கடத்திட்டு? ஸ்ரீக்கு தாலி கட்டுவியா?"

"ச்ச! ச்ச! வேணாம் வேணாம்! எல்லாம் கன்றாவி ஐடியாவா இருக்கு" என்றான் ராஜ்.

"அஸ்வினி எங்கே இன்னும் வரலையா?" அபியிடம் ஆனந்த் கேட்க,

"ஒருவேளை ஸ்ரீகூட இருக்காளோ என்னவோ! போன் பண்ணு" எனும் நேரம் ஆட்டோவில் வந்து இறங்கினாள் அஸ்வினி.

வாசலிலேயே அவள் தயங்கி நிற்க "உள்ளே வா அஸ்வினி மா" என வரவேற்றது கனகா தான்.

"அத்தை!" அஸ்வினி தயங்கி அழைக்க,

"ஆனந்த் சொல்ற வரை நானும் உன்னை தப்பா தான் நினைச்சுட்டு இருந்தேன். என்னை மன்னிச்சுடு மா" என்று கனகா கேட்க,

"என்ன அத்தை நீங்க போய் என்கிட்ட சாரி சொல்லிக்கிட்டு.." என பேசிக் கொண்டிருந்த நேரம் அவர்கள் அருகே ஓடி வந்துவிட்டாள் அபி.

"அச்சு!"

"அபி!" என இருவரின் பாசப் பிணைப்பயும் பார்த்து நின்றார் கனகா.

"அண்ணி! லேட் ஆகிடுச்சு மண்டபம் போலாமா?" பவானி வந்து கேட்க,

"போலாம் பவானி!" என்றவர் அனைவரையும் மண்டபத்துக்கு கிளப்பினார்.

விமலாவின் மனம் ஏனோ நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.

நேற்று அழுது கொண்டிருந்த மகள் இன்று மகிழ்ச்சியாய் நிச்சயத்துக்கு அலங்காரம் செய்து கொண்டிருக்க உள்ளுக்குள் திக்திக்கென்று தான் இருந்தது.

ஸ்ரீயை நம்பாமல் சென்று விடுவாளோ என பயந்து தன் கண்ணருகிலேயே வைத்திருந்தார்.

மண்டபம் வந்து மகளை அறைக்கு அழைத்து வந்த பின்னும் அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி குறையவே இல்லை என்பது இவருக்கு சோகத்தையே கொடுத்தது.

ராம் தன் குடும்பத்துடன் மண்டபதிற்கு வந்துவிட்டான். கோர்ட் சூட் விகிதம் மாப்பிள்ளைக்கான சர்வ லட்சணமும் பொருந்தி இருந்தது.

ஸ்ரீயை ராம் சந்தித்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. ஏற்கனவே ஆனந்த் பிளானை நம்பி இருந்த ராமிற்கு இப்போது கனகா கூடுதல் வலுக் கொடுத்திருந்தார்.

இதோ கனகாவின் குடும்பமும் மண்டபம் வந்து சேர்ந்தாகிவிட்டது.

ராம் போலவே ராஜ் அலங்காரத்தில் குறை இல்லை என்றாலும் இன்று நடக்க போவது ஸ்ரீ- ராமின் திருமணம் என்பதாலும் பெரிதாய் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது.

மது சாதாரணமாய் பட்டுப் புடவையில் வந்திருக்க அவளுக்கு இருவீட்டாரின் ஒப்புதல் கிடைத்ததே அத்தனை மகிழ்ச்சி.

"வாங்க அக்கா! வாங்க எல்லாரும்" விமலா வரவேற்க, மரியாதைக்காய் மற்றவர்கள் புன்னகைத்தனர். கனகா அதுவும் இல்லை.

"ஐயர் மாப்பிள்ளை பொண்ணை கூப்பிடுறார்" உறவுக்கார பெண்மணி வந்து சொல்ல, அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாய் மூச்சு வந்தது விமலாவிற்கு.

இதற்கு மேல் ஸ்ரீயை காவல் காக்க தேவை இல்லை என்கின்ற நிம்மதி மூச்சு.

"அபி, அஸ்வினி போய் ஸ்ரீ யை கூட்டிட்டு வாங்க" விமலா சொல்லவும் சரி என சொல்லி ஸ்ரீயை மேடைக்கு அழைத்து வந்தனர் அபி, அஸ்வினியோடு மதுவும்.

மேடையில் ஏறி ஐயரின் காதில் எதுவோ சொல்லி வந்தார் பவானி.

விமலா நின்ற இடத்திற்கு அருகில் வந்து அமர்ந்தார் கனகா. அவரைப் பார்த்ததும் அவர் அருகிலேயே அமர்ந்தார் விமலா.

வினோதன் குமரன் அருகில் நிற்க அவர்கள் அருகே நடராஜனை அமர வைத்தான் ஆனந்த்.

"தேவ்! ஸ்ரீ அம்மாக்கு அத்தை செக் வச்சுட்டாங்க போல டா.. இப்ப என்ன டா நடக்கும்? ஸ்ரீ - ராம் நிச்சயம் தானே?" ராஜ் கேட்க,

"இல்ல ஸ்ரீ- ராம் கல்யாணம்" என்றான் ஆனந்த்.

"ஹ்ம்ம் பெஸ்ட்டு! இல்லைனா வில்லி என்ட்ரி கொடுத்து நிச்சயமாவது மண்ணாவதுன்னு ஸ்ரீயை கொன்னுடும்"

"அம்மா பக்கத்துல வேற ஸ்ரீ அம்மா உட்கார்ந்துட்டு இருக்கு.. பிரச்சனை பண்ணிட கூடாது டா.. வா நாம அங்கே போய் நிற்கலாம்" ஆனந்த் ராஜை கூட்டிச் சென்றான்.

ஸ்ரீ வந்து மந்திரங்கள் சொல்லி ஒவ்வொன்றாய் நடக்க, மாப்பிள்ளையை அழைக்கும் நேரம் ஆனந்த், ராஜ் இருவரும் சென்று ராமை அழைத்து வந்து நிறுத்தினர்.

ஒரே நாள் தான் தூரத்தில் பார்த்தது என்றாலும் ராம் முகம் நன்றாய் மனதில் பதிந்து போய் இருந்தது விமலாவிற்கு.

"இவனா?" சொல்லியவாறே விமலா எழுந்து கொள்ள பார்க்க, அவர் கைகளைப் பிடித்திருந்தார் கனகா.

"அ..க்.. கா..!" தடுமாறி வந்தது விமலாவின் வார்த்தை.

"எங்க போற?" ஒரே வார்த்தையில் கேள்வியை கேட்டுவிட்டு அவர் முகம் பார்த்தார் கனகா.

"மேடையில என்ன நடக்குது? பார்த்துட்டு இருக்கீங்க?"கனகாவிற்கு தெரிந்து தான் நடக்கிறது என்பது அவர் முகம் பார்த்தே தெரிந்து கொண்டார் விமலா.

"இது தான் உன் பொண்ணோட ஆசை. சத்தம் போடாமல் இருந்தா உனக்கு நல்லது" கனகா அமைதியாய் குரல் மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் தான் பேசினார்.

மேடையில் நின்ற அஸ்வினி, அபி, ஆனந்த், ராஜ், ராம், ஸ்ரீ, மது என அனைவரின் கண்களும் இவர்கள் மேலேயே இருக்க, கீழே அமர்ந்திருந்த அனைவருக்கும் மாப்பிள்ளை மாறியதில் சத்தம் வர ஆரம்பித்தது.

"மிரட்டுரிங்களா? என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீங்க யாரு?" - விமலா.

"வேற ஒருத்தனை காதலிக்குற பொண்ணுக்கு என் பையனை கட்டி வைக்க பார்த்தியே அது சரினா இது சரி தான்" - கனகா.

"பழி வாங்குறீங்களா?" விமலா.

"நிச்சயமா இல்ல.. ஸ்ரீ ஆசைப்பட்டதை நாங்க செஞ்சிருக்கோம் அவ்வளவு தான்" என்ற போது தான் இது அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு செய்த செயல் என புரிந்தது விமலாவிற்கு.

"கெட்டி மேளம்! கெட்டி மேளம்!" ஐயர் சொல்ல, திடிர் திருமணம் என்ற போதும் அது சிறப்பாய் நடந்து முடிந்தது ராம்-ஸ்ரீக்கு.

"என்னை எல்லாரும் சேர்ந்து ஏமாத்திட்டீங்க இல்ல" என்றவாறு மேடையை விமலா பார்க்க, அங்கே தன் கணவர் வினோதணும் அட்சதை தூவிக் கொண்டிருந்தார்.

"தனி ஒருத்தியா எல்லாரையும் ஏமாத்தலாம்னு நினைச்சீங்க.. அது உங்களுக்கேட்ட திரும்பிடுச்சு.. சின்ன பசங்களை தண்டிக்க எனக்கு விருப்பமா இல்லை" என்ற கனகா அவ்வளவு தான் என்பதை போல அந்த இடத்தில் இருந்து எழுந்து மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

சில நிமிடங்களில் நடந்து முடிந்த திருமணத்தை ஜீரணிக்க முடியாமல் இருப்போரை எதிர்க்கும் சக்தியும் இல்லாமல் அவமானப்பட்ட வலியோடு அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறினார் விமலா.

அவரை மாற்ற முடியாது என்பது வினோதனே அறிந்த ஒன்று என்பதால் யாரும் அதற்கு கவலைப்பட அவர் விரும்பவில்லை.

அடுத்தடுத்த திருமண சடங்குகள் முடிந்த பின் இனிதாய் ஆரம்பித்து வைத்தார் ராஜ்-மதுவின் நிச்சயதார்த்த விழாவை கனகா.

இது வீட்டில் உள்ளோரே எதிர்பாராதது எனினும் இன்பமாய் தான் அமைந்தது.

ஆனந்த் கூறியது போல ஊர் கூடி இருக்கும் இந்த சபையில் இரண்டு ஜோடிகளும் நன்றாய் புரிந்து கொண்டனர் எத்தனை பெரிய சந்தோஷம் இது என்பதை.

நிச்சயம் சிறப்பாய் முடிய ஸ்ரீயை ராம் வீட்டினர் அழைத்து செல்ல, அடுத்த நாள் விருந்திற்கு கனகா அழைத்தார். வினோதனும் முழு மனதாய் சம்மதம் தெரிவித்தார்.

அடுத்த நாள் ராஜ் மதுவின் திருமணம். அனைத்து சொந்தங்களும் மண்டபத்திலேயே தங்கி இருக்க பெரிதாக எந்த விபரீதமும் நடக்கவில்லை.. விமலாவால் எந்த பிரச்சனையும் இல்லை என்பது கூடுதல் நிம்மதியானது.

"ஆனந்த்! உனக்கு எல்லாம் ஓகேனு தோணுதா?" கனகா ஆனந்த்தை அழைத்து கேட்க,

"என்ன கேள்விம்மா இது? சீரியஸ்லி சான்ஸ்லெஸ்.. இன்னைக்கு ஸ்ரீ கல்யாணம் நாளைக்கு ராஜ் கல்யாணம்னு தான் நாங்க எல்லாம் நினைச்சோம். ஆனா நீங்க சொன்ன மாதிரியே ராஜ் நிச்சயத்தை கூட செம்மயா நடத்திட்டிங்க.. இதுக்கு மேல வேற என்ன வேணும்?"

"ஆனா நானும் விமலா மாதிரி உன் கல்யாணத்துக்கு கோச்சிட்டு போய்ட்டேன்னே! நீ அப்ப கஷ்டப்பட்ருப்ப இல்ல?"

"அய்யோ ம்மா! அவங்களும் நீங்களும் ஒன்னா? அது தப்பு யாரு மேலனு நான் தான் அன்னைக்கே சொன்னேனே! விடுங்க மா அதையே ஏன் நினைச்சிட்டு இருக்கீங்க.. உங்களுக்கு கஷ்டமா இருந்தா சொல்லுங்க.. நானும் அபியும் வேணா உங்களுக்காக இன்னொரு முறை தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்குறோம். என்ன அபி" கண்ணடித்து அபியை பார்த்து கேட்க, செல்லமாய் அவன் காதை பிடித்து திருகினார் கனகா.

"நீ செஞ்சாலும் செய்வ டா" கனகா சொல்ல,

"சரியா சொன்னிங்க அத்தை! இவன் ராமன் இல்ல க்ருஷ்ணன்.. அபி கேர்புல்" என்றான் ராஜ்.

"டேய் உன்னை!... " ஆனந்த் ராஜை முறைக்க,

"இப்ப தான் நிம்மதியா இருக்கு டா.. எவ்வளவு பெரிய தப்பு பண்ண இருந்தேன்" என்றார் கனகா.

"கனகா! அதுல இருந்து வெளில வா மா.. இன்னும் நீயே அதையே சொல்லிட்டு இருக்கலாமா?" நடராஜன் சொல்ல,

"இல்ல பா இனி சொல்ல மாட்டேன்" என்றார் தன் தந்தையிடம்.

அபி ஆனந்த் அருகருகே நிற்க, ராஜ் அருகே மது நின்று கொண்டிருக்க அடுத்ததாய் அவர்களை மகிழ்ச்சியுடன் பார்த்து நின்றாள் அஸ்வினி.

"அஸ்வினி! இங்கே வா மா" கனகா அழைக்க, அருகே சென்றாள் அஸ்வினி.

"உனக்கு இனி நாங்க இவ்வளவு பேர் இருக்கோம்.. இனி அடிக்கடி வீட்டுக்கு வரணும் சரியா?" என்றவர் அவள் தலையாட்டவும்

"இல்ல! இல்ல! ஆமா நீ ஏன் இன்னும் ஹாஸ்டல்ல இருக்கணும்? ஆனந்த் நீயும் ராஜும் போய் அடுத்த வாரம் இவளோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க.. இவ வேலை பார்த்தது போதும்.. கொஞ்ச நாள் நம்ம வீட்ல ஜாலியா இருக்கட்டும்.. அப்புறம் இவளுக்கு ஒருத்தனை தேடி கண்டுபுடிச்சு கட்டி வச்சு அனுப்பிடலாம்" அஸ்வினி கண்ணம் பிடித்து சொல்ல, அவளும் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"அத்தை! ரொம்ப தேங்க்ஸ் அத்தை! அச்சு நினச்சு எவ்வளவு பயந்தேன் தெரியுமா?" கண் கலங்கி அபி கனகா அருகே வந்து சொல்ல,

"ஏய்! இனி நீ எனக்கு பொண்ணு மாதிரினா இவளும் அப்படி தானே? இதுக்கு தேங்க்ஸ் சொல்லுவியா?" என்று முறைக்க, அவர் கைகளை பற்றி கொண்டாள் அபி.

"நீ பவானியை பவானிம்மானு கூப்பிடுவியே அப்ப நான் எவ்வளவு ஆசையா பார்ப்பேன் தெரியுமா? நீ அப்படி கூப்பிடுறது அவளுக்கு புடிக்குதோ இல்லையோ எனக்கு அது ரொம்ப புடிக்கும். அதுல தான் நான் உன்கிட்ட மயங்கினதே! அதுனால தான் உன் அக்காவையும் வீட்லயே வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று சொல்ல பவானியும் அவர்களோடு இணைந்து கொண்டார்.

அதன்பின் தான் தந்தையிடம் தான் கேட்கவில்லை என்று தோன்றிட திரும்பி தந்தையை பார்த்தார். அவரும் சந்தோசமாய் தலையசைத்து சம்மதம் சொல்ல குமரனோடு ராஜ், ஆனந்த் இருவரும் சேர்ந்து இந்த காட்சியை பார்த்து நின்றனர்.

"சரி நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க.. நாளைக்கு மேரேஜ் விஷயமா நான் மதுகிட்ட கொஞ்சம் தனியா டிஸ்கஸ் பண்ணிட்டு வர்றேன்.. மது வா போலாம்" ராஜ் மதுவின் கைப்பிடித்து சொல்ல,

"ம்மா! பார்த்தீங்களா? யாரு கண்ணன்னு இப்ப தெரியுதா?" என்றான் ஆனந்த்.

"டேய்! உதை வாங்குவேன்.. இப்ப என்ன டா டிஸ்கஸ்ஸு நாளைக்கு கல்யாணத்துக்கு.." பவானி சொல்ல,

"அதெல்லாம் ஆயிரம் இருக்கு.. பப்ளிக்கா சொல்ல வேணாம் பாக்குறேன்" முணுமுணுத்தது கூட அனைவரின் காதிலும் கேட்டது.

"சும்மா இரு டா பொறுக்கி" மது ராஜ் காதில் சொல்ல, இது யார் காதிலும் கேட்டிருக்காது என நம்புவோமாக.

"அப்ப நானும் அபியும் போலாமா அத்தை!" ஆனந்த் குறுஞ்சிரிப்புடன் கேட்க,

"நீங்க ஆயுசு முழுக்க கூட பேசுங்க.. பொண்ணுங்களா இன்னைக்கு நாம எல்லாரும் அங்கே ஒன்னா தூங்கலாம் வாங்க" பவானி சொல்ல, கனகா சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அபி வாயை திற" ஆனந்த் சொல்ல,

"ஏன் டா?" என்றார் பவானி.

"இல்ல வாயில கொழுக்கட்டை வச்சிருக்காளானு பார்க்க தான்.. நான் சொன்னதும் என் புருஷன் கூட தான் போவேன்னு ஓடி வந்திருக்க வேணாம்" பாவனையாய் அவன் சொல்ல,

"டேய்! மரியாதையா ஓடிடு" என்றது கனகா.

"போச்சா! போச்சா! இதுக்கு தான் போட்டி போடக் கூடாதுன்றது.. இப்ப ரெண்டு பேரும் பிளாட்ஃபார்ம்ல தான் தூங்கணும் வா" என்றான் ராஜ் ஆனந்திடம்.

"நீங்க ஏன் டா பிளாட்ஃபார்ம்ல தூங்கணும்? வாங்க நாம எல்லாம் ஒன்னா தூங்கலாம்" குமரனுடன் நின்று அழைத்தார் நடராஜன்.

"அதுக்கு பிளாட்ஃபார்ம் பரவால்ல" சொல்லியபடி அவர்களுடன் இருவரும் சென்றனர்.

தொடரும்..
 
Top