நாளை மதியை காணப்போகும் குஷியில் இருந்தவனுக்கு அவளை இன்றே காட்டிய விதியை நினைத்து சந்தோசப்படுவதா, இல்லை அவளை இன்னொருவனுடன் கண்டத்தில் கவலைப் படுவதா என்று இருந்தது ரிஷிக்கு. இருந்தும் "அவள் என்னவள்" என்ற நினைப்புடன் தூங்கிபோனான்.
...
இளம் சிவப்பு நிற பிளேன் ஷர்டும் கறுப்பு நிற பேண்டும் அணிந்து கேசத்தை கையால் ஸ்டைலாக எடுத்து விட்டுக்கொண்டிருந்தவன் பார்க்க அத்தனை லட்சணமாக இருந்தான் என்று தான் கூற வேண்டும்.
சும்மாவே கலையாக இருப்பவனுக்கு எடுப்பாக, இப்போது தன்னவளின் நினைவால் ஓர் புன்னகையும் முகத்தில் குடிகொள்ள "ப்பாஹ் இவனல்லவோ ஆணழகன்" என்று தோன்றியது. (எனக்கும் லைட்டா தோனுச்சு..ஹீஹீ..)
தன்னைக்காணும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை நினைக்கையில் உடல் புல்லரித்தது ஆடவனுக்கு. ஆனால் அவள் இவனை ஐந்து பைசாக்கும் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பதை பாவம் இவன் அறிந்திருக்கவில்லை.
...
இப்படி இவன் நிற்க, பின்னே நின்ற மித்ரன் "என்ன பொண்டாட்டிய பார்க்க போற குஷில ரெடி ஆகுறீங்க போல?" என்றான் கிண்டலாய்.
இங்கே ரிஷிக்கோ வெட்கப் புன்னகை ஒன்று வந்து மறைந்தது.
"ப்பாஹ் நீ இப்படிலாம் வெட்கப்படுவியா மச்சான்? பாரே எனக்கு இன்னைக்கு தான் தெரியும்" என வாயை பிளந்தவனை இப்போது முறைத்து வைத்தான் ரிஷி.
அந்த முறைப்பில் உஷாரான மித்ரன் "அதான பார்த்தேன், எங்கடா நம்ம ரிஷியை கொஞ்ச நாளா காணோம்னு. ஹீ இஸ் பேக்" என்றவன் போய் கட்டிலில் அமர அவனை நோக்கி சீப்பு பறந்து வந்தது.
"ஆஆ தடியனே" என மண்டையை தேய்த்து விட்டுக்கொண்டிருந்தவனை விரல் நீட்டி எச்சரித்தவன் வேண்டும் என்றே விசிலடித்துக்கொண்டு தயாராகினான்.
அதில் கடுப்பான மித்ரனும் எழுந்து வெளியே சென்று விட்டான். அவனை திரும்பிப் பார்த்து சிரித்தவனும் சிறிது நேரத்தில் டிப் டொப்பாக தயாராகி வெளியே வந்தான். அவனை பார்த்து வாயில் கை வைத்த மித்ரனுக்கு தலையில் தட்டியவன் வெளியேறி இருந்தான்.
இதில் முக்கியம் என்னவென்றால் இவ்வளவு அலப்பறைகளும் நடந்தது மதி தங்கி இருந்த அதே அறையில் தான். கடந்த சில தினங்களாக ஏனோ அந்த அறையே கதி என கிடக்கிறான் ஆடவன்.
...
"சேதுராமன் ப்ரைவேட் லிமிடெட்" என அழகாக வெள்ளி நிறத்தால் செய்திருந்த முகப்பு காலையிலே அந்த வெயிலுடன் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது.
முழுவதும் கண்ணாடியினாலான அந்தக் கம்பனியை நிர்மாணிக்க நிச்சயம் பல கோடி செலவாகி இருக்கும் என்பது பார்ப்பவர்களுக்கு நன்கே புரிவதாய்..
அப்படித் தான் காரில் வந்திறங்கிய மித்ரனும் ரிஷியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"மச்சான் இம்மாம் பெரிய கம்பனிய உன் ஆள் தனியே நின்னு சமாளிச்சிட்டிருக்காள். எனக்கென்னவோ நீ தெரியாம சிங்கத்துட குகைக்குள்ள வாய் விட்டுட்டியோனு தோனுது . நான் வேணா வந்த வழியே வெளியே போய்டட்டுமா...அவ்" என வாயில் விரல் வைத்து கடித்தவனின் பேச்சில் களைந்தவன் காலில் அணிந்திருந்த ஸூவை கண்காட்ட மித்ரனுக்கு விளங்கிற்று.
"செருப்பால அடிப்பேன்னு சொல்லாம சொல்லுறீங்களாக்கும்.." என அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன் "எனக்கென்ன வந்தது, என் பங்குக்கு சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.. இனி உன் இஷ்டம்.." என்றவனே மீதியை "இவன் என்ன இன்னைக்கு ஊமை பாசயால பேசிட்டு இருக்கான். ஒருவேளை விரதம் இருக்கானோ?" என வாய்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
"என் கையால சட்னி ஆகாம போக மாட்ட போல இன்னைக்கு.." என்ற ரிஷியின் குரலில் திடுக்கிட்டு விழித்தவன் ஹீ..ஹீ. என்றவனாக முன்னே நடந்தான்.
அவனைப் பார்த்து தலையிலடித்துக் கொண்ட ரிஷிக்குமே நெருங்க நெருங்க மனம் தடதடத்தது. ஏதோ முதன் முறை அவளைக் காணப் போவது போலவே இருந்தது.
...
உள்ளே,
மதி ஏதோ மீட்டிங்கில் இருக்க, அநாத்ரயனோ முக்கியமான கோப்பு ஒன்றை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த கம்பனியின் பெயரை பார்த்தவனின் நெற்றி யோசனையில் சுருங்க "இங்க தானே அந்த ரிஷியும் வேர்க் பண்ணுறான்" என்று நினைத்த மாத்திரமே அவனது முகம் கடுமையை தத்தெடுத்துக்கொண்டது.
அடுத்த கணம் "டேம்மிட்.." என கதிரையை தள்ளி விட்டு எழுந்து நின்றான்.
தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போக தலையை கோதிவிட்டவனுக்கு, மதிக்கு ரிஷி செய்த அநியாயத்தை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எரிச்சலில் திரும்பியவனின் கண்ணில் பட்டதுதான் சிசிடீவி ரெகார்டஸ். அடுத்த கணம் கண்ணில் அனல் தெரித்தது. ஆம் அங்கே இருந்தது ரிஷியும் கூடவே மித்ரனும் உள்ளே வரும் காட்சி தான்.
"இவன் ஏன் இங்க வரான் இடியட்?" என்று வாய் விட்டே சொன்னவன் விட்டென வெளியேறி இருந்தான்.
அதற்குள் மதி மீட்டிங்கை முடித்துவிட்டு வெளியேறி இருக்க, இவர்களும் உள்ளே வந்து விட்டனர்.
வந்தவர்கள் நேரே ரிசெப்ஷனை நோக்கி செல்ல அதற்கிடையில் இடையில் புகுந்தான் அநாத்ரயன்.
"வை டிட் யூ கம் ஹியர்?" என்றான் அதிகாரத்தொனியில்.
அந்த சத்தத்தில் அவனின் பக்கம் இருவரும் ஒன்றாக திரும்பினர். நினைவு வந்தவனாக மித்ரன் "மச்சான் இவன் அவன்ல?" என்று காதைக்கடிதான்.
ரிஷியுமே அநாத்ரயனை தான் பார்த்துக்கொண்டிருந்தான். ரிசப்ஷனில் நின்றிருந்த பொண்ணோ தங்களது முதலாளியை கண்டதும் "சார், இவங்க?" என ஏதோ சொல்ல வாய் எடுக்க அவன் பார்த்த பார்வையில் கப்சிப் அவள். இதுவும் அவர்களது கண்ணிலிருந்து தப்பவில்லை.
மித்ரனோ அடங்காமல் "மச்சி இதை பார்க்கும்போது என் மண்டைக்குள்ள ஒன்னு ஓடுதுடா.." என்றான் யோசனையாக.
அவனின் தொனியில் ரிஷியும் ம்ம் என சொல்ல சொல்லவும், அவனோ "கண் பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்.. இந்த சோங் தாண்டா நினைவு வருது.. பாரே.." என்றான் பச்சக் குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு.
ஏற்கனவே இவன் யாரென்றே கடுப்பில் நின்றிருந்த ரிஷிக்கு இவனது நேரம்காலம் தெரியாத ஜோக்கில் கை முஷ்டி கோபத்தில் இறுகியது. அவனை முறைத்தவன் அநாத்ரயனை நேருக்கு நேர் பார்த்து "சோ உங்களுக்கு என்னை தெரியும் போலயே?" என்றான் கேள்வியாய்.
அவனது கேள்வியில் அவனை மெச்சும் பார்வை பார்த்து வைத்த அநாத்ரயன், பேண்ட் பாக்கெட்டினுள் கையிட்டு நின்றுகொண்டு "எஸ், யூ ஆர் ரைட். எனக்கு உன்னையும் தெரியும், த்தோ பக்கத்துல நிக்கிறானே அவனையும் தெரியும்" என்றான் எள்ளலாய்.
அவன் தன்னையும் சுட்டிக்காட்டியதில் மித்ரன் திருதிருத்தான் என்றால், ரிஷியோ உதட்டைப் பிதுக்கினான்.
பின் "அப்போ நாங்க வந்த ரீசனும் தெரிஞ்சிருக்குமே சாருக்கு?" என்றான் தோளை உலுக்கி.
அநாத்ரயனோ "எனக்கு வேற வேல இல்ல பாரு, நீ ஏன் வந்தாய் எதுக்கு வந்தானு பார்த்துட்டு இருக்க" என்றவனிடம், மித்ரன் "அப்போ போய் வேலைய பாருங்க சார்' என்றது தான் தாமதம் பாய்ந்து அவனை தாக்க சென்றிருந்தான் அநாத்ரயன்.
ரிஷி தடுக்க, அவனை இவன் தள்ளவென அங்கே கை கலப்பாகப்போக திடீரென வந்து நின்றாள் மதி.
"அனா.. வாட் இஸ் திஸ்?" என்ற சத்தத்தில் அநாத்ரயனை தாக்க சென்ற ரிஷியின் கை அந்தரத்தில் அப்படியே நின்று விட்டது.
தன்னவளை கண்டதும் அவனது முகம் பூவாய் மலர, உதடு சிரிப்பில் விரிந்தது. நேற்று போல் இன்றும் அதே ட்ரெஸ் கோர்ட்டில் நின்றிருந்தவள் அதட்கேற்ப போனிடெயில் இட்டிருந்தாள். வாரி இழுத்து தூக்கி கொண்டை போட்டிருந்தவளின் பிறை நுதலோ அவனை முத்தமிட அழைக்க, சுயத்தை இல்லாமல் முன்னேறப்போனவனின் கால்கள் அவளது பேச்சில் தடைபட்டு நின்றது.
"திலா.. இவன்?" என ரிஷியை கை காட்டிய அநாத்ரயனின் கை போன திக்கில் அவள் பார்க்கவேயில்லை. பார்வை முழுக்க அநாத்ரயனையே துளைத்துக்கொண்டிருந்தது.
அவனின் பேச்சை கை நீட்டி தடுத்தவள் "இதுதான் நீ ஆஃபீஸ்க்கு தேடி வந்தவர்கள பார்த்துக்குற லட்சணமா அனா?" என்றவளின் உடல் மொழியோ இதை உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட முகத்தை திருப்பினான் அநாத்ரயன்.
அவளின் அந்தப் பேச்சு நொடியில் அவர்களை அவளை விட்டும் எட்ட நிறுத்தியிருந்தது. முகம் கறுக்க நின்றிருந்தனர் இருவரும்.
"திலா நான் சொல்லுறது.." என்பதை முடிப்பதற்குள், "கம் டு மை கேபின்" என்றவள் ரிஷப்சனிஸ்ட்டிடம் "ஆஸ்க் தெம் த ரீசன் ஃபோர் தெயார் விசிட்..." (அவர்கள் வந்ததற்கான காரணத்தை கேளுங்க) என்றதும் அந்தப் பெண்ணும் "ஓகே மேம்.." என்றாள் பவ்வியமாக.
அவளுக்குத் தெரியுமே தன் கட்டளையை மீறினால் மதியின் கோபம் எந்தளவு இருக்கும் என்பதை.
மதியோ இவர்களை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. தன் ஹீல்ஸ் பூமியில் அழுந்தப் பதிய டக்டக்கென்ற சத்தத்துடன் கையோடு அநாத்ரயனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
..
இது போதுமே அவள் தங்களை இப்போது எங்கே வைத்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள.
ரிஷியோ போகும் அவளையே அடிபட்ட பார்வை பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னை அவள் கவனியாதது ஓர் புறம் வலியுடன் கூடிய கோபத்தைத் தந்தது.
மித்ரனுக்கோ "ரிஷி தப்பு பண்ணினான் சரி.. நான் என்ன செய்தேன்..?" என்றிருந்தது.
மனதுடைந்து நின்றிருந்தவனை மதி திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தாள்.
ப்பாஹ்.. தொய்ந்து போயிருந்த மித்ரனின் முகம் புன்னகையில் விகசித்தது.
ரிஷியோ அசையாமல் சிலைபோல் நின்றிருந்தான்.
தொடரும்...
தீரா.