• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 19

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 19

"லோட் கிளம்பிடுச்சு.. நீ கொஞ்சம் பிக்கப் பண்ணிக்கோ.. நான் மார்னிங் தான் வருவேன்.. டீடெயில்ஸ் எல்லாம் பக்கவா இருக்கனும்" செழியன் மொபைலில் பேசியபடியே அறைக்கு வந்திருக்க, அவனைக் கண்டவளும் காணாததைப் போல புத்தகத்தில் கண்களை விட்டிருந்தாள்.

"பேமன்ட் அனுப்பியாச்சு.. ரிசிப்ட் மட்டும் வாங்கிக்கோ.. காப்பி எடுக்க சொல்லிடு" மொபைலில் உத்தரவுகளை இட்டுக் கொண்டிருந்தான் செழியன்.

"இவ்வளவு பேசுறதுக்கு இருந்து முடிச்சுட்டே வந்திருக்கலாம்" தெளிவாய் அவன் காதுகளில் விழுவது போலவே புத்தகத்தினை பார்த்து அவள் கூற,

"அனுப்பிட்டு ஒரு டெக்ஸ்ட் பண்ணிடு டா" என கூறி மொபைலை அணைத்து வைத்தவன் பார்வை அவளிடம் தான் இருந்தது.

"அம்மாகிட்ட என்ன சொன்ன?" என்ற கேள்வியில் சிரிப்பு வந்துவிட,

"நான் ஒன்னும் சொல்லலையே!" என்றாள் கொஞ்சமாய் சிரிப்பை வெளியில் இட்டு.

"ஓஹ்! அப்ப யார் சொன்னதாம்?"

"நீங்க யார்கிட்ட சொன்னிங்களோ அவங்க சொல்லி இருப்பாங்க.. என்கிட்ட சொன்னிங்களா என்ன?" என திருப்பி கேட்க,

"தெரிஞ்சதை ஏன் சொல்லணும்? பதில் தெரியலைனா கூட கேட்டு தெரிஞ்சிக்கலாம்.. எனக்கு தான் பதிலுமே தெரியுமே!" என்றவன் பாஷை புரிய நேரம் எடுத்தது.

"சுத்தமா புரியல.. எதாவது சண்டை போடணும்னே ரூம்க்குள்ள வருவீங்களா?" மலர் கேட்க,

"ஆமா வேண்டுதல்!" என்றவன்,

"லேப்டாப் ஆன்ல இருக்கு.. ஏதாச்சும் ஒர்க் பார்த்தியா?" என்ற கேள்வியில் கடுப்பாகியவள்,

"ஆமா ஆமா பார்த்தேன்! எப்ப பாரு ஒர்க் ஒர்க்ன்னு.. என்ன வேலைக்கு அனுப்பிட்டு உங்க மெயில்ல இருக்குற டிக்கெட்க்கு யாரை தான் கூட்டிட்டு போக போறீங்க? இல்ல தனியாவே போறதா ப்ளனா?" என்று கேட்க,

"என் மெயில் நீ எதுக்கு செக் பண்ணின?" என்றான் கைகளைக் கட்டி அவள் முன் வந்து.

"எனக்கு வேற வேலை இல்ல.."

"இல்ல! அதான் செக் பண்ணி இருக்க"

"நான் ஒன்னும் அப்படி பண்ணல.. என்னோடதை தான் ஓபன் பண்ண பார்த்தேன்.. உங்களோடது ஓபன்ல இருந்துச்சு"

"சோ!"

"சோ என்ன சோ? ஓபன்ல இருந்தா யார்னாலும் பார்க்க தான் செய்வாங்க" என்றதும் அவன் அமைதியாய் பார்க்க,

"பேச்சை விட்டாச்சு! அந்த டிக்கெட்ஸ் பத்தி கேட்டேனே பதில் சொன்னிங்களா? யார் கூட வேணா போய்ட்டு வாங்க.. நான் கேட்கவே மாட்டேன்.. கேட்டா தானே சந்தேகம்னு பேரை கூப்பிடாம அழுச்சாட்டியம் செய்விங்க.. தேவையே இல்ல.. நீங்க யாரை வேணா..." என்று பேசிக் கொண்டிருந்தவள் வாயை பின்னிருந்து கைகளால் அடைக்க விழிவிரித்து அமைதியானாள் மலர்.

"ஏன் இவ்ளோ பேசுற? கேட்காமலே என்னை பேசினது நீ.. கோபப்பட்டது நீ.. ஆனா எல்லாரும் என்னை வில்லன் மாதிரி பாக்குறாங்க.. ஈவன் என்னோட அம்மா கூட.." கைகளை எடுக்காமலே அவன் கூற, அவனுக்கு மிக அருகில் அவன் கைகள் தன் உதட்டினில் என தன்னிலை மறந்து நின்றிருந்தாள் மலர்.

"என்ன வாய்ஸ் காணும்.. இப்ப பேசு" என்றவன்,

"ஓஹ் சாரி!" என்று கைகளை எடுத்தாலும் அப்படியே நிற்க, அசையாமல் நின்றிருந்தாள் மலர்.

"ஸ்பீக் அவுட்! உன்னை லவ் பண்ணினதை உன்கிட்ட சொல்லல.. அந்த ஒரு தப்பை தவிர வேற என்ன பண்ணினேன் சொல்லு?" என்று கேட்க, அது எதுவும் அவள் காதுகளிலும் அங்கிருந்து மூளைக்கும் சென்றதா என்று தான் தெரியவில்லை.

"டிக்கெட்ஸ் யார் அனுப்பி இருக்காங்க பார்த்தியா?" என்ற கேள்விக்கு தலை தன்னால் தெரியும் என ஆட,

"என்ன பண்ணலாம் மலர்... விழி!" என்றதும் தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல விழித்துக் கொண்டாள்.

"என்ன சொன்னிங்க?"

"ஏன் கேட்கலையா? டிக்கெட்ஸ் என்ன பண்ணலாம்னு கேட்டேன்.."

"ம்ம் பிளாக்ல வித்துடுங்க.. உங்ககிட்ட போய் எக்ஸ்பேக்ட் பண்ணினேன் பாரு" என தலையில் கைவைத்து அவள் அமர்ந்துவிட,

"ம்ம்ஹ்ம்ம்! என்ன எக்ஸ்பெக்ட் பண்ணின?" என்றான் அவளருகே அமர்ந்து.

"எல்லாம் நானே என் வாயால சொல்லணும்.. லவ் பண்ணினது நானா அவரா?" என்று முணுமுணுத்தது அவன் காதுகளிலும் இறுதி வரிகள் விழ,

"நான் அப்பவே... நீ?" என்றான்.

"இதுக்கு பேசாமலே இருக்கலாம்.. பாஷையும் புரியல.. ஒன்னும் புரியல.. முதல்ல மலர்னு கூப்பிடுங்க.. இல்லைனா நைட்டு சாப்பிட மாட்டேன்" மிரட்டல் விட,

"ப்ளாக்மெயில் எல்லாம் அப்புறம்" என்றவன்,

"என்ன இவ்வளவு தத்தியா இருக்க.. நான் அப்பவே லவ் பண்றேன்.. அப்போ நீ? புரியுதா?" என்று தெளிவாய் கூற,

"நானெல்லாம் ஒன்னும் லவ்வல!" என்றதும் சிரித்தவன்,

"அப்ப டிக்கெட்ஸ் பிரேம்க்கு குடுத்துடலாம்.. அவனாச்சும் ஜோடியா லவ்வரோட போய்ட்டு வரட்டும்"

"அவங்க அக்கா அனுப்பின டிக்கெட் தானே? குடுங்க.. குடுங்க.. இப்பவே அவங்களுக்கு கால் பண்றேன்"

"இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு.. போறதுன்னா நாம தான் போனும்.. இல்லைனா கான்செல் பண்ணனும்.. இப்ப சொல்லு என்ன பண்ணலாம்?" மீண்டும் விளையாட்டை கை விட்டு அவன் நிஜமாய் கேட்க,

"என்ன என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்னு கேட்டுட்டு இருக்கீங்க? நானா உங்ககிட்ட பேசாம போனேன்? நானா மலர்னு கூப்பிடாம உங்க உயிரை வாங்குறேன்.. நானா நீ என் லவ்வரே இல்லன்ற மாதிரி பத்து நாளா சுத்தி வர்றேன்? சும்மா வெறுப்பேத்திகிட்டு.. என்னவோ பண்ணுங்க.." என்றவள் புத்தகத்தை ஓரமாய் வைத்துவிட்டு படுத்துவிட,

"ஐ லவ் யூ மலர்!" என்ற வார்த்தைகள் காதை உரசி செல்லும் அவன் உதடுகள் வழி கேட்க, உயிரை தீண்டி வந்தது அந்த குரல். அத்தோடு கன்னத்தின் ஓரமாய் சிறு ஈரம்.

சட்டென எழுந்து அமர்ந்து அவள் திரும்பிப் பார்க்க, அருகே அமர்ந்திருந்தான் புன்னகை முகமாய்.

"பிரம்மயோ?" வாய்விட்டு கூறி யோசிப்பது போல பார்க்க, மீண்டும் அதே போல செய்து காண்பித்தான்.

"இது பிரம்மயா?" என்ற கேள்வியுடன்.

"நிஜமாவா? அப்ப உங்க கோபம் போயிடுச்சா?" மலர் மலரென விரிந்த கண்களும் உதடுகளுமாய் கேட்க,

"நான் எப்ப கோபமா இருக்கேன்னு சொன்னேன்?" என்றான் முறைத்து.

"சரி சரி கோபம் இல்ல.. ஆனா வருத்தம்னு சொன்னிங்க இல்ல?"

"அதுக்கு தான் டெய்லி மருந்து கொடுத்துட்டு இருந்தியே!"

"நானா?"

"ஆமா! கம்பெனி வந்து சும்மாவா இருந்த? லொடலொடன்னு.. ஒரு வேலை ஓடல.. ரெண்டு நாள் முன்னாடியே சொல்லியிருப்பேன்.. என்ன தான் பண்றனு பார்க்கலாம்னு விட்டா நீ புகழ் முன்னாடி திட்ற.. அம்மாகிட்ட ஒன்னு சொல்லிட்டு வந்திருக்க..என்ன பண்ணலாம் உன்னை?"

"தேங்க் காட்! இன்னும் ஒரே ஒரு முறை மலர்னு கூப்பிடுங்களேன்!" ஒற்றை விரலைக் காட்டி அவள் கேட்க,

"திரும்பு!" என்றவன் சொன்னதை அவள் செய்யவும், அவள் கழுத்தினில் ஒன்றை அணிவித்து மீண்டுமாய் கூறினான் "ஐ லவ் யூ சோ மச் மலர்!" என்று.

அதே சங்கிலியா என அவள் கைகளில் எடுத்துப் பார்க்க MS என்ற எழுத்துக்கள்.

"மலர் செழியன்! மலரின் செழியன்! இப்ப மீனிங் மாறாது இல்ல?" என்று அவன் அதற்கு விளக்கமும் கொடுக்க, கண்களில் கண்ணீர்.. இம்முறை ஆனந்தமாய் நனைத்திருந்தது மலரினை.

"சாரி!" மீண்டுமாய் அவள் கூற, இட வலமாய் தலையசைத்தான்.

"இப்ப சொல்லு டிக்கெட்ஸ் என்ன பண்ணலாம்?" புருவத்தினை ஏற்றி இறக்கி அவன் கேட்க,

"மலர்விழியும் நெடுஞ்செழியனும் போய்ட்டு வரட்டும்" என்றவள் அவன் ஆழ்ந்தப் பார்வையில் வெட்கம் தாளாமல் அவன் தொள்களோடு இணைந்து கொண்டாள்.

தன்னோடு அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் செழியன்.

"எவ்வளவு நாள் ஆசை தெரியுமா மலர்? உன் படிப்புக்காக மட்டும் தான் வெயிட் பண்ணினேன்" என்றான் தனக்குள் அவளை வைத்தபடி.

"ஆமா ஆமா! லவ் மேரேஜை அர்ரேஞ் மேரேஜா கொண்டு வந்து!" என்ன கிண்டல் செய்ய,

"உனக்கும் அம்மாக்கும் தான் தெரியாது.." என்றான் உடனே அவள் மூக்கினை உரசி.

"மாமாக்கு மட்டும் தானே தெரியும்?" அவள் கேட்க,

"இல்லையே என்னோட மாமா, அத்தை, மச்சா எல்லாருக்கும் தெரியுமே!" என்று கூற, அதிர்ச்சி அவளுக்கு.

"என்ன சொல்றிங்க நீங்க?" அவனை தன்னில் இருந்து பிரித்துக் கேட்க,

"நான் ஒன்னும் பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணலன்னு சொல்றேன்" என்றான் அவள் கைகளைக் கோர்த்தபடி.

"ஓஹ்! அப்ப என்னை மட்டும் தான் ஏமாத்தி இருக்கீங்க?" அவன் வார்த்தைகளை உள்வாங்கி மகிழ்ந்தவள் அவனை வெறுப்பேற்ற கேட்க,

"ப்ச்! மலர்!" என்றவன் மீண்டும் தனக்குள் கொண்டு வந்தான் அவளை.

"உன்னோட ட்ரீம்னு நான் அமைதியா இருந்தா மூணு வருஷம் நாலு வருஷம்னு ஆகும்.. ஐ காண்ட்! அதனால தான் என்கிட்ட உன்னை கொண்டு வந்துட்டு உன் ட்ரீமை ஃபுல்ஃபில் பண்ணலாம் நினைச்சேன்.. ரெண்டு வாரத்துல என்னென்னவோ நடந்து முடிஞ்சிடுச்சு" என்றான்.

"ஆனா இனி அப்படியே விட மாட்டேன்.. சூர்! இனி உன்னோட சாய்ஸ் தான்.. அதுக்கு அப்புறம் தான் நம்மோட லைஃப் கூட" தெளிவாய் செழியன் கூற,

"ஓஹ்! அப்படி? அப்படி சாய்ஸ் கொடுக்கவங்க தான் ஹனிமூன்க்கும் பிளான் பண்ணுவாங்களா?" நக்கலாய் அவள் கேட்க,

"அது ஒன்னும் நான் பிளான் பண்ணல.. சசிக்காவோட கிப்ட்!" என்றவன்,

"போகலைனா அக்கா பீல் பண்ணுவாங்க!" என்றான் அவள் பதில் வேண்டி.

"ஓஹ்! உங்களுக்காக கல்யாணம்.. அக்காக்காக ஹனிமூன்.. அடுத்து என்ன? அத்தைக்காக குழந்தையா?" என்று மீண்டும் கிண்டல் செய்ய,

"பெரியவங்க ஆசையை நிவர்த்தி பண்ணலைனா தெய்வ குத்தம் ஆகிடும் மலர்.. விழி" என்றான் கண்ணடித்து.

"உங்களை!..." என்றவள் அவன் நெஞ்சினில் அடிக்க, கைகளைப் பிடித்தவன் நெஞ்சோடு அவளை சாய்த்துக் கொண்டான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
மனசு மயங்கும்
மௌன ராகம்.....
🎻🎻🎻🎻
 
Top