• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 19

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
முருகனிடம் ஒப்பந்தத்தில் மதி கையெழுத்திட்டு விட்டாள் என்ற தகவலைத் தந்திருந்த ரிஷியும் சந்தோஷமாக தனது ஊருக்கு புறப்பட்டான்.

...


"அப்பா.. மதி திரும்ப கிடைச்சிட்டா.." என்று ஆரம்பித்து மொத்தக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்த ரிஷியைப் பார்த்து ராஜேந்திரன் ம்ம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனோ இறுதியில் ஆத்திரத்துடன் "ஆனாலும் மதிய வளர்த்தவங்க அவ இருக்கிற இடம் தெரிஞ்சும் நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லைல்ல.." என்றான்.

ராஜேந்திரனிடம் பதில் இல்லை.

அப்போது தான் தன் தந்தையை ஊன்றி கவனித்தவன் "அப்பா என்னப்பா.. நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க பேசாம இருக்கிங்க..?" என்றான்.

அவரோ ரிஷியைப் நிதானமாக ஏறிட்டுப் பார்த்து "நீ சொல்லுற விடயம் புதுசா இருந்தால் ஏதாவது சொல்லலாம்.. அது தான் பழைய விஷயமாச்சேப்பா..." என்றார்.

ரிஷியோ அதிர்ந்தவனாய் "என்ன சொல்லுறீங்க...?" என்றவன் ஒரு கணம் நிறுத்தி அவரை ஆழ்ந்து பார்த்தவனாய் "அவ இவ்வளவு நாளும் எங்கிருந்தான்ற உண்மை உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.. ரைட்..?" என்றான்.

அவரோ அதே புன்னகையுடன் "இல்லை.. தெரிஞ்சிருந்திருக்க, என் பையன் கஷ்டப்படுறத பார்த்துட்டு சும்மா இருந்திருக்க மாட்டேனேப்பா.." என்றார்.

அவர் சொல்வதும் உண்மையே..

அவனோ "பிறகு..." என்றிழுக்க ராஜேந்திரனோ "மதி, வெங்கட் சீதா பெற்ற பிள்ளை இல்லைன்றது எனக்கு ஏற்கனவே தெரியும்..." என்றார்.

ரிஷியும் "அப்போ ஏன் என்கிட்ட மொதல்லயே சொல்லைல்ல..?" என்றான் ஏமாற்றத்துடன்.

அவரோ "நீ நெனைக்கிற மாதிரி இல்லைப்பா.. இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சதுக்கு ஒரே காரணம் அவ சேதுராமனின் மகள் என்றது தான். சேதுராமனும் நம்ம ஊர் தான். அவரு இறக்குறதுக்கு முன்னாடி ஃபேமிலியோட வேற இடம் போய்ட்டாரு. ஏன் திடீர்னு போனாரு அப்படின்னு ஊருக்குள்ள கேள்வி வந்தப்ப தான் தெரிஞ்சுது அவருடைய சகோதரங்களோட பிரச்சினைன்னு. மனுஷன் நல்லவரைக் கண்டு, தானா ஒதுங்கிட்டாரு. அதுக்கப்பறம் அவர் எங்க போனாரு என்ன ஆனாருன்னு யாருக்குமே தெரியல.. திடீர்னு இறந்துட்டதா தகவல் வந்துச்சு. ஊரே உறங்கிப் போச்சு. அந்தளவுக்கு அடுத்தவங்களுக்கு கொடுத்து உதவின மனுஷன்." என்றவன் பெரு மூச்சுடன் திரும்ப ஆரம்பித்தார்.

"அவருக்கு மகள் ஒன்னு இருக்கதே வெங்கட் சொல்லித் தான் எனக்குத் தெரியும். உன்னோட சின்ன வயசு தான் அவளுக்கு. அதுக்கப்பறம் நடந்தத வெங்கட் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கிட்ட சொன்னாரு..."

"என் ஐயாக்கு கொடுத்த வாக்க நான் காப்பாத்தனும். அதுக்கு தகுந்த ஆள் நீங்க தான். இப்போ மதி என் பொண்ணு. அவளை நல்லபடியா நீங்க தான் பார்த்துக்கனும்..." என்று அன்று வெங்கட் சொல்லியதை இன்று ரிஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

அவரோ "வெங்கட் சேதுராமனுக்கு கொடுத்த வாக்க காப்பாத்திட்டாரு. ஆனால் நான் வெங்கட்க்கு கொடுத்த வாக்க காப்பாத்தைல..." என்றார் வலி மிகுந்த குரலில்.

ரிஷியோ விழுக்கென தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.

குற்றவுணர்ச்சியையும் மீறி அவனது முகத்தில் கேள்வியொன்று தொக்கி நிற்க ராஜேந்திரனோ "எனக்குப் புரிதுப்பா. இதையெல்லாம் ஏன் உனக்கிட்ட சொல்லைலனு தானே பார்க்குற...?" என்றவரிடம் ஆமோதிப்பாய் தலையசைத்து வைத்தவனிடம் "இதையெல்லாம் சொல்லி இருந்திக்க மிஞ்சி மிஞ்சிப் போனா அவளுடைய சொத்துக்காவும் வசதிக்காகவும் அவ கூட சேர்ந்து வாழ்ந்திருப்ப..." என்று அவர் கூறுவது உண்மை தானே.

ரிஷிக்கோ தன் தந்தையே அப்படி கூறுவது அவமானமாய் இருந்தது.

சிலை போல் உணர்ச்சியற்ற முகத்துடன் இருப்பவனிடம் "ஆனால் அவளுடைய தோற்றத்தை ஏற்று அவளுடைய குணத்தை புரிஞ்சுக்கிட்டு அவளுக்கொரு நல்ல வாழ்க்கையை நீ கொடுக்கனும்னு நான் யோசிச்சேன்..." என்றார் அவனிடம்.

ரிஷிக்கோ என்ன சொல்வதென புரியவில்லை. இருந்தும் தன் உணர்வுகளை மறைத்தவனாய் "ஆ..ஆனால் இப்போ நான் அவளை உயிருக்குயிரா லவ் பண்ணுறேன்..." என்றான் எங்கோ வெறித்துக் கொண்டு.

ராஜேந்திரனோ மெல்ல நகைத்தவராய் "ஒன்னு நமக்கிட்ட இல்லாத போது அதை நேசிச்சு என்ன பிரயோசனம்..?" என்றார்.

அவனது மூளைக்கு அதெல்லாம் புரிகிறது தான். ஆனால் மனம் ஏற்க மறுக்கிறதே.

அவனை புரிந்து கொண்டவராய் ராஜேந்திரனும் "சரிப்பா முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம். அந்தப் பொண்ணு தைரியசாலியும் பிடிவாதக்காரியும் என்றது உன் கல்யாணத்துக்கு முன்னாடி அவ கூட உன் அம்மா பேசுனப்போ எனக்கு புரிஞ்சுது. ஏற்கனவே அவளுக்கு நம்பிக்கை கொடுத்து உன்னை கல்யாணம் பண்ணி வச்சதுக்கு அவ அனுபவிச்சது போதும். இனியும் அவகிட்ட போய் என் பையன் கூட வாழுமான்னு என்னால கேட்க முடியாது. அவளுக்கு வேதனையை கொடுத்த நீயே அவளுக்கு திரும்பவும் நம்பிக்கையை கொடு. ஆனால் ஒன்னு, அந்த நம்பிக்கையை உடைச்சிடாம பார்த்துக்கோ..." என்றவது பேச்சு கட்டளையாகவே வெளி வந்தது.

அதில் தன் மகனுக்கு எப்படியோ, தன்னை நம்பி இந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவளின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற ஆவேசம் இருந்தது.

ரிஷியோ முகத்தை அழுந்த துடைத்து விட்டவனாய் ராஜேந்திரனை நேருக்கு நேர் பார்த்து "சத்தியமா அவட மனச திரும்ப உடைக்கமாட்டேன்..." என்றவனாய் திரும்பியும் பாராமல் எழுந்து சென்றான்.

போகும் அவனையைப் பார்த்தவர் ஏதோ நினைவு வந்தவராக "ரிஷி..." என்றழைத்தார்.

வீட்டு வாசலைத் தாண்ட காலைத் தூக்கி வைத்தவன் அவரது குரல் அப்படியே திரும்பிப் பார்க்க அவனை கண்ணால் அழைத்திருந்தார்.

அவனும் "சொல்லுங்கப்பா..." என்றவாறு வந்து நின்றவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை.

"அது..." எனத் தயங்கியவர் பின் எதையோ யோசித்து விட்டு "நீ நினைக்கிற மாதிரி மதிநிலா ஒன்னும் பத்தாம் வகுப்பு மட்டும் படிக்கவில்லை..." என்றதும் அவரை கேள்வியாய் பார்த்தவனிடம் "அவ ஒரு பீ.எச்.டி ஹோல்டர்.. லண்டன்ல படிச்சு வந்தவ..." என்றார்.

விரக்தியாய் சிரித்தவன் எதுவும் பேசாமல் காரை நோக்கி நடந்தான்.

...


சேதுராமனின் இல்லம்.

முழுவதும் வெள்ளை நிறப் பூச்சுப் பூசி அந்தக் கால அரண்மனையை ஒத்து வீற்றிருந்தது மதியின் மாளிகை.

பல ஏக்கர் கணக்கை உள்ளடக்கி கட்டப்பட்டிருந்த அந்த மாளிகையின் முன் முற்றம் முழுவதும் தோட்டம் போல் அமைக்கப்பட்டிருந்தது.

இயற்கையுடன் கூடிய அந்த இடமே ரம்மியமாக தோற்றமளித்துக் கொண்டிருக்க அதனை ரசிக்கக் கூட மறந்து ஏதோ கலவையான உணர்ச்சியின் பிடியில் அந்த வீட்டின் முன் நின்றிருந்தனர் ரிஷியும் மித்ரனும்.

அவனது காதுகளிலோ நேற்று ராஜேந்திரன் சொல்லியவையே மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.

இவளை படிப்பறிவில்லாதவள் என எத்தனை தடவை மட்டம் தட்டி பேசி இருப்பான்.

அப்படிப்பட்டவள் பீ.எச்.டி ஹோல்டர் என்பது அவனுக்கு அதிர்ச்சியே.. கூடவே தன்னை நினைத்தே அவனுக்கு அவமானமாய் இருந்தது.

சிந்தனையில் மூழ்கி இருந்தவனின் தோளைச் சுரண்டிய மித்ரன் "மச்சி.. எனக்கென்னவோ இந்த வாட்ச்மேன் பார்க்குறத பார்த்தா நம்மள உள்ள விடுவான்னு நம்பிக்கை இல்லை..." என்றான் தங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த வாட்ச்மேனைப் பார்த்து.

அதில் கலைந்தவன் "ப்ச்..வா.." என்றவாறு முன்னே நடந்தான்.

"இது மதிநிலா வீடு தானே...?" என்று கேட்ட ரிஷியை மேலிருந்து கீழ் பார்த்த வாட்ச்மேன் "என்ன வேணும் உங்களுக்கு...?" என்றான்.

"மச்சான் இவன்ட பார்வையே சரியில்லை.. வா கெளம்புவோம்.." என்று ரிஷியின் காதோரம் மித்ரன் குசுகுசுத்தான்.

அவனை முறைத்து வைத்தவன் "நாங்க மதிநிலாவ பார்க்கனும்..." என்றதும் அந்த வாட்ச்மேனோ "மேடமோட பர்மிஷன் இருக்கா...? அவங்கட பர்மிஷன் இல்லாம யாரையும் உள்ளே விட வேண்டாம்னு அநாத்ரயன் சார் சொல்லி இருக்காரு.." என்றான்.

மித்ரனோ "மேடமோட ஹஸ்பண்ட் வந்திருக்காருனு சொல்லு..." என்றவனை ரிஷி தடுக்க, வாட்மேனோ அவர்களை நம்பிக்கையில்லாத பார்வை பார்த்து வைத்தான்.

அதற்கிடையே அநாத்ரயன் தயாராகி வெளியே வந்திருந்தான்.

வாசலில் வாட்ச்மேன் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் அவர்களை நோக்கி நடந்தான்.

அதற்கிடையே மித்ரன் அந்த நபரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்திருந்தான்.

ரிஷியும் பின்னே வந்திருக்க, இவர்களைக் கண்ட மாத்திரத்தில் அநாத்ரயனின் நரம்புகள் கோபத்தில் புடைத்தன.

"ஹௌ டேர் யூ.. யாரைக் கேட்டு இவனுங்கள உள்ளே விட்ட...?" என்று கத்தியவனின் பேச்சில் அப்போது தான் அந்த அப்பாவி மனிதனும் திரும்பிப் பார்த்தார்.

பயத்தில் "சா..சார் இவங்க தான் ஏதோ பேசிக்கிட்டு அப்படியே உள்ளே வந்துட்டாங்க.." என்றவன் அவர்களிடம் "பசங்களா..! நான் தான் அப்போவே சொன்னேன்ல.. கெளம்புங்கப்பா..." என்று துரிதப்படுத்தினான்.

அவரை சட்டை செய்யாமல் அநாத்ரயனிடம் "நான் மதியைப் பார்க்கனும்..." என்றான் ரிஷி.

அவனை அனல் தெறிக்கப் பார்த்த அநாத்ரயன் "மதியா...? மரியாதையா இங்கிருந்து கெளம்பு.." என்றான்.

மித்ரனோ "மச்சி வாடா போய்றலாம்..." என்றான் வீண் சண்டையை தவிர்க்க நாடியவனாய்.

அவனை முறைத்த ரிஷி "என் வைஃப பார்க்க நான் யாருக்கிட்டையும் பேர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமில்லை..." என்றவனாய் முன்னேறப் போனவனின் நெஞ்சில் கை வைத்து தடுத்த அநாத்ரயன் "என்னைத் தாண்டி எவனாலையும் ஒரு..." என்றவன் தலை முடியைக் காட்டி "புடுங்க முடியாது..." என்றான்.

ஆத்திரத்தில் கை முஷ்டி மடக்கி அவனை அடிக்க சென்றவனை பாய்ந்து தடுத்திருந்தான் மித்ரன்.

"டேய் ரிஷி வீணான பிரச்சினை வேண்டான்டா..." என்றான்.

"டேய் விடுடா.. இந்த இடியட் எவ்வளவு கீழ்தரமா பேசுறான்.. அதை கேட்டுட்டு இருக்க சொல்லுறியா...?" என்றவனாய் மீண்டும் தாக்க சென்றவனை இப்போது வாட்ச்மேனும் வந்து தடுத்திருந்தார்.

அவரது கையை வேகமாக தட்டி விட்டவன் அநாத்ரயனை முறைக்க, அவனோ உதட்டை சுளித்து சிரித்தவனாய் "கொஞ்ச முதல் என்ன சொன்ன..? வைஃபா...? செம்ம காமெடி போ..." என்றவனின் குரலில் அத்தனை கோபம்.

மித்ரனோ நண்பனுக்காக "இங்க பாருங்க.. இது அவங்கட வாழ்க்கை அதுல நீங்க வீணா தலைப் போடாதிங்க.. இவனை பார்க்க விருப்பமில்லைனு மதி சொல்லட்டும்.. அதுக்கப்பறம் பார்த்துக்கலாம்..." என்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவன் மேலே கண் காட்டினான்.

இவனது பார்வை சென்ற திக்கில் இவர்கள் திரும்பிப் பார்க்க அங்கே மதிநிலா தான் இவர்களை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த மாத்திரமே ரிஷிக்கு இவ்வளவு நேரமும் இருந்த கோபம் காணாமல் போய் விட்டது.

ரிஷி அவளைப் பார்த்து சிரிக்க மித்ரனோ "மதி இவரு..." என்று அநாத்ரயனை கை காட்டி ஏதோ சொல்ல வருவதற்குள் சட்டென உள்ளே சென்று விட்டாள்.

அவளது செயலில் முகம் கறுக்க நின்றிருந்தனர் இருவரும்.

ரிஷியோ ஓர் படி மேலே சென்று கோபத்தில் கை முஷ்டியை மடக்கிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்து ஏளனமாக சிரித்த அநாத்ரயன் "இதுக்கு மேல நானே வெளிய போங்கன்னு சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை..." என்றான் பேண்ட் பாக்கெட்டினுள் கையிட்டவாறு.

அதற்கு மேலும் அங்கே நிற்க தன்மானம் இடம் கொடுக்காததால் ரிஷி விட்டென வெளியேறி விட்டான்.

அவன் பின்னே மித்ரனும் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே வெளியேறி இருந்தான்.

இங்கே அநாத்ரயன் அந்த வாட்ச்மேனிடம் இவர்களின் காதுப்படவே "இதுக்குப் பிறகு கண்டவனையெல்லாம் உள்ளே விட்டே.. அது தான் நீ இங்க வேலை பார்க்குற கடை
சி நாளா இருக்கும்..." என்று விரல் நீட்டி எச்சரித்தவனாக உள்ளே சென்றான்.

இதனைக் கேட்ட மித்ரனுக்குமே அத்தனை ஆத்திரம்...


தொடரும்...

தீரா.