• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மாலை மலரைப் பார்க்க அவளது இல்லம் வந்திருந்த செம்பியன், விக்ரமைக் கண்டதும் முகத்தை திருப்பிக்கொள்ள, விக்ரமோ கையை முறுக்கிக் கொண்டு செம்பியனை நெருங்கினான்.

ஒற்றை சாய்விருக்கையில் அமர்ந்திருந்த செம்பியனோ விக்ரமின் குணம் அறிந்து மீண்டும் அவனைத் திரும்பிப் பார்ப்பதற்குள் விக்ரம் அவனை நெருங்கி "மவனே... முகத்தையா திருப்புறே... இருக்குடா இன்னைக்கு...." என்று பொய் கோபமாய் கூறிட,

சட்டென இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவன் விக்ரமின் கைகளுக்கு அகப்படாமல் கத்திக் கொண்டே அடுக்களை புகுந்தான்.

"தெய்வமே.... என்ன காப்பாத்து..." என்று கத்தியபடி தன் தமக்கையைத் தேடிச் சென்றான்.

சரியாக அதே நேரம் தம்பிக்கு நொறுக்குத் தீனியாக ஒரு தட்டில் எள் சீடையும், மற்றொரு தட்டில் முறுக்கும் எடுத்துக்கொண்டு முன்னறை வந்து கொண்டிருந்த மலரும் அடுக்களை வாசலில் முட்டிக் கொள்வது போல் வந்து நின்றாள்.

செம்பியன் தமக்கையின் மேல் இடிக்காமல் அவளைச் சுற்றிக்கொண்டு அவள் பின்னால் சென்று நின்றான். செம்பியனைத் துரத்திக் கொண்டு வந்த விக்ரமும் அவளைச் சுற்றியபடி செம்பியனை விரட்டிட,

"ரெண்டு பேருக்கும் என்ன ப்ரச்சனை? ஏன் இப்படி என்னை சுத்தி வரிங்க?" என்றாள் மலர். அவளது குரல் இருவரது செவிகளையும் எட்டவே இல்லை...

"டேய் நில்றா!!! உன்னை யாருடா இங்கே வர சொன்னது? அதுவும் இவ்ளோ லேட்டா?" என்று மச்சினனை பிடிக்கும் ஆர்வத்தில் இருவருக்கும் நடுவில் நின்றிருந்தவளை விக்ரம் சற்றும் கவனிக்கவே இல்லை.

விக்ரம் எதற்கு விரட்டுகிறான் என்று தெரிந்திருந்த செம்பியனோ "ஏன் யாரும் சொல்லி தான் நான் வரனுமா? என் அக்காவுக்கு ஒரு அநியாயம் நடந்தா தட்டி கேட்க நான் இருக்கேன். நியாபகம் இருக்கட்டும்..." என்று வீராய்ப்பாய் விக்ரமின் கையில் அகப்படாமல் தமக்கையின் முதுகுப் பக்கம் நின்றபடி கூறினான்.

"தட்டி கேக்குற மூஞ்சியைப் பார்... முன்னாடி வந்து நில்லுடா மொதோ..." என்று அவனை அதட்டியபடி மலரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு தன்னோடு சேர்த்து மலரை இழுத்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

"கொஞ்சம் ரெண்டு பேரும் அந்த பக்கம் போயி விளையாடுங்களேன்... கையில இருக்குறது சிந்திடும்..." என்று மீண்டும் நடுவில் நின்று கத்தினாள் மலர்.

அதற்குள் விக்ரம் அழுந்தப் பிடிந்து இழுத்ததில் மலரின் கையிலிருந்த தட்டுகள் இரண்டும் கீழே விழுந்து சிதறியது.

"டங்... டங்... டங்... தட்... தட்... ருரன்.. ருரன்... ருரன்... ரிங்ரிங்ரிங்..." என்ற சத்ததோடு தட்டுகள் இரண்டும் கீழே சுழல, தின்பண்டங்கள் தரையில் சிதறிக்கிடக்க, மலர் தன் கொடியிடையில் கை வைத்து இருவரையும் முறைத்தாள்.

அதிலும் தன் கையை தட்டிவிட்ட விக்ரமை கொஞ்சம் அதிகமாகவே முறைத்திட 'என்ன இவ புதுசா மொறைக்கலாம் செய்யிறா!!! ஒருவேளை கனவா இருக்குமோ!' என்று யோசித்தபடி, சட்டென செம்பியன் மீது பாய்ந்து அவன் தோளில் கைபோட்டபடி,

"செம்பியா உன் அக்கா என்னை மொறைக்கிறாளாடா?" என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தான்.

"மச்சா... அக்கா ரெண்டு பேரையும் தான் மொறைக்கிது... வாங்க ஆப்ஸ்கவுன்ட் ஆகிடலாம்..." என்று செம்பியன் கூறிட, மலரைத் திரும்பிப் பார்க்காமல் இருவரும் சத்தமே இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் காதுக்குள் கிசுகிசுத்தபடியே முன்னறைக்கு நடந்தனர்.

மலருக்கோ இருவரின் செயலிலும் நிறைய வித்தியாசம் தெரிந்திட 'இவ்வளவு நேரம் சண்டை போட்டுச்சுங்க!!! இப்போ என்னாடானா ஒட்டி ஒரசிக்கிட்டு போகுதுங்க!!! இதுங்களுக்குள்ள என்ன தான் நடக்குதுனு புரியலேயே!!!" என்று மாமனும், மச்சினனும் தோளில் கை போட்டுக்கொண்டு செல்வதை அதிசயமாகப் பார்த்தாள்.

"செம்பியா... உண்மையாவே பனி என்னை மொறைச்சி பாத்தாடா!" என்று உடல் புல்லறிக்கக் கூறினான் விக்ரம்.

"என்ன மச்சா நீங்க கப்பிதனமா பேசிகிட்டு இருக்கிங்க!!!... அக்கா உங்களை மொறைக்க தானே செய்துச்சு... ஏதோ உருகி உருகி உங்களை லவ்வோட பாத்த மாதிரி துள்ளிக் குதிக்காத கொறையா சொல்றிங்க!" என்று செம்பியனும் அதிசயமாக வினவினான்.

செம்பியனின் கிண்டலைக் கூட காதில் வாங்காதவனாய், "அய்யோ!!!... என் பனி என்னை பாத்து மொறைச்சிட்டாளே!!!" என சிரித்துக்கொண்டே கனவுலகில் மிதந்தபடி கூறினான் விக்ரம்.

விக்ரமின் இந்த குணம் பற்றி அறிந்திடாத செம்பியனோ தன் மச்சானை விசித்திரமாகப் பார்த்தான்.

"எப்படி டா ஒரே நாள்ல உங்க அக்காவை பேசியே இவ்ளோ மாத்திட்டே?" என்றான்.

"ம்க்கும்... நான் எங்கே பேசினேன்... வந்ததுல இருந்து அது தான் பேசுச்சி... நான் கேட்டுட்டு தான் இருந்தேன்... என்னை ஒரு வார்த்தை பேசவிடலே..." என்று சலித்துக்கொள்ள,

அப்போதைக்கு இருந்த சந்தோஷமான மனநிலையில் மலரைப் பற்றி யோசிக்கத் தவறினான் விக்ரம்...

சற்று நேரத்திற்கெல்லாம் பொய்கோபமாய் பல்லைக் கடித்துக்கொண்டு "என்னை மொறைக்கிற அளவுக்கு வந்துட்டாளா அவ!!! கவனிக்கிற விதமா கவனிச்சிட வேண்டியது தான்?" என்று ஏதோ அவளிடம் சண்டைக்கு தயாராவது போல் கூறினான் விக்ரம்.

"இது கோபம் மாதிரியே தெரியலேயே!!!" என்று தாடையை சொரிந்தபடி செம்பியன் வினவிட,

அதனையும் காதில் வாங்கிக் கொள்ளமல், "என்னை பாத்து எவ்ளோ அழகா மொறச்சா தெரியுமா!!!" என்று காதல் பித்தனாய் பினாத்தினான்.

விக்ரமை ஏற இறங்க ஒரு மாதிரியாகப் பார்த்த செம்பியன், "இப்போ தான் தெரியிது.... வினோ அண்ணாவும், உதி அண்ணாவும் ஏன் அக்கா சரியானதுக்கு அப்பறமும் கூட, உங்க கூட பேசத் தயாரா இல்லேனு!!!" என்று தன் மச்சானை கலாய்த்திட,

விக்ரமோ "டேய்.... உன்னை
மார்னிங்-கே வர சொன்னேன்ல டா... எதுக்கு டா ஈவ்னிங் வந்தே!" என்று தான் விரட்டியதன் காரணத்தை மீண்டும் நினைவுபடுத்தி அவனைத் திட்ட ஆரம்பாத்தான்.

"ம்... காலேஜ் எங்க அப்பாது பாருங்க!... கேட்டவுடனே லீவ் தரதுக்கு!...." என்று நக்கலாகக் கூறினான் செம்பியன்.

"வர வர வாய் ரொம்ப பேசுறே நீ..." என்ற படி, செம்பியனை ஷோஃபாவில் தள்ளி அவனை நகர விடாமல் பிடித்திருந்தான் விக்ரம்.

"மச்சா... பேச்சு பேச்சா தான் இருக்கனும்... அடிதடில இறங்கப்படாது..." என்று வடிவேலு பாணியில் சரண்டர் ஆகினான் செம்பியன்.

அதற்குள் மலர் இருவருக்குமாக மாலை நேர சிற்றுண்டி எடுத்துவந்தவள், இருவரையும் கண்டு மீண்டும் முழித்தாள்.

'இதுங்க ரெண்டுத்துக்கும் என்ன தான் ஆச்சு? வந்ததும் வராததுமா முட்டிகிச்சுங்க! அப்பறம் கட்டிக்கிடுச்சுங்க! இப்போ திரும்பவும் முட்டிக்கிட்டு நிக்கிது! என் தம்பியவா கட்டிப் போறிங்கனு இவர்கிட்ட கேட்டது ரெம்ப தப்போ!!!' என்று தன் மனதிற்குள் யோசித்தபடி விக்ரமையேப் பார்த்திருந்தாள்.

மலரின் வருகையில் இருவரும் விலகிக்கொள்ள, அவளது பார்வை மாற்றத்தை உணர்ந்த விக்ரம் 'இவளுக்கு இன்னைக்கு என்னாச்சு? ஏன் என்னையே குறுகுறுனு பாக்குறா? என் செல்லத்தோட பார்வையே சரியில்லேயே!!!' என்று நினைத்தபடி அவனும் அவனது பனியைத் தான் பார்த்திருந்தான்.

இருவரின் பார்வை பரிமாற்றத்தைக் கண்ட செம்பியன், தொண்டையைக் கணைத்து தன் இருப்பையும் காட்டிக்கொண்டு, மலரின் கையிலிருந்த சிற்றுண்டி ட்ரேவை வாங்கிக் கொண்டு "வா வந்து உக்கார் மேச் பாக்கலாம்" என்று அழைத்தான்.

மலரோ விக்ரமை ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு, "இல்லே... நீங்க பாருங்க... நான் பின்பக்கம் இருக்கேன்" என்று கூறி தன் திறன்பேசியை எடுத்துக்கொண்டு மரங்களுக்கு நடுவே போடப்பட்டிருந்த மூவர் அமரும் சாய்விருக்கை ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்.

செல்லும் அவளையே பார்த்திருந்த விக்ரம், "பனி மேச் பாப்பாளா செம்பியா!" என்றான் புதிதாக ஒரு விஷயம் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில்.

அவனும் தான் அவளுடன் பழகியதில்லையே!!! பேசிய ஒரு நாளிலும் தன்னைப் பற்றியே தான் அவளிடம் அதிகம் பேசினான். அதன்பிறகு விதியின் சதி, அவளை இரண்டு வருடம் நினைவிழக்கச் செய்துவிட்டது... இப்போதோ அவளைப் பற்றி அவளே மறந்த நிலையில் இருக்கிறாள்... என்ன தான் பல விஷயங்கள் செம்பியன் மூலமாக அறிந்துகொண்டாலும் இந்த விஷயம் புதிதே...

"ஓ... பாப்பாளே... தீவிர CSK fan அவ... ரைனா, விராட் ரெண்டு பேரையும் ரெம்ப பிடிக்கும்... ஒரு மேச் விடாம எல்லாமே பாத்திடுவா..." என்று தொலைகாட்சியில் மூழ்கியபடி கூறினான் செம்பியன்.

"இனிமே கூல் கேப்டன் தான் பிடிக்கும்னு சொல்ல வெச்சிட வேண்டியது தான்..." என்று எப்போதும் போல் வீம்புக்கார விக்ரமாக செம்பியனுக்கு பதில் கூறிவிட்டு, மீண்டும் அவள் சென்ற திசையைத் திரும்பிப் பார்த்தான். மனதிலோ ஏதோ ஒன்று பிடிபட, அவளது ஓரப்பார்வைக்கான அர்த்தம் தேடத் தொடங்கினான்.

சற்று நேரத்தில் இருட்டத் தொடங்கிவிட, மலர் இன்னும் வீட்டிற்குள் வரவில்லை என்றவுடன் விக்ரம் அவளைத் தேடிச் சென்றான்.

"இருட்டுக்குள்ள உக்காந்து இன்னு என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவள் அருகே சென்று கேட்க,

அந்த நேரத்தில் திடீரென கேட்ட அவனது குரலில் கையிலிருந்த திறன்பேசியை மடியில் தவறவிட்டவள், பதிலேதும் கூறாமல் திருதிருவென முழித்தபடி எழுந்து நின்று தன் கைகளுக்குப் பின்னால் மொபைல்லை மறைத்து வைத்தாள்.

அதனைக் கண்டவன் முரட்டுத்தனமாக கையைப் பிடித்து இழுத்து அவளது கைபேசியை வாங்கிப் பார்த்தான். அதில் வந்த மட்டைப்பந்து மதிப்பீட்டு பட்டியலைக் கண்டு கள்ளத்தனமாக சிரித்துக் கொண்டு, பிடித்திருந்த கையை விடாமல் அவளையும் இழுக்காத குறையாக இழுத்து உள்ளே அழைத்துச் சென்றான்.

'நல்லவேளை ஏதோ நல்ல மூட்ல இருக்கார் போல... திட்ட மறந்துட்டார்...' என்று நினைத்த மலரின் மனசாட்சி அவளோடு சேர்ந்து அவனைப் பின்தொடர்ந்தது.

செம்பியனின் அருகே அவளை அமர்த்திவிட்டு, செம்பியனுக்கு மற்றொருபுறம் விக்ரம் அமர்ந்து கொண்டான்.

'பரவாயில்லே இந்த விஷயத்துல இவரை நல்லாவே பாராட்டலாம்... மத்தவங்க முன்னாடி உரிமை காட்டுறேன்ற பேர்ல வம்பு பண்ணினதோ திட்டினதோ இல்லே... கொஞ்சம் நல்லவர் தான் போல' என்று நினைத்து தனக்குத் தானே சிரித்தபடி மீதி ஆட்டத்தைப் பார்த்தாள்.

அவளது விருப்ப அணி ஆடி முடித்ததும் எழுந்து இரவு உணவு தயாரிக்க சென்றவள், தம்பியை திரும்பிப் பார்த்து "செம்பியா நைட் சாதம் சாப்பிடுறேயா?" என்றாள்.

"நீ ஊட்டிவிடுறேயா! சாப்பிடுறேன்?" என்று மலருக்கும் தனக்கும் இருக்கும் கொஞ்ச நஞ்ச இடைவெளியையும் குறைத்து அக்கா, தம்பி உறவை வழுப்படுத்திக்கொள்ள நினைத்து கேட்டான்.

"சரி அவருக்கு தோசை ஊத்தி கொடுத்துட்டு உனக்கு ஊட்டிவிடுறேன்..." என்று அவளும் சாதாரணமாகக் கூறி சமையலறை நுழைந்தாள்.

விக்ரமிற்கோ வயிறு எரிய அதன் பிரதிபலிப்பாய் காது புகைந்தது. "டேய்... நீ என்ன!!! இன்னு சின்ன பாப்பாவா ஊட்டிவிடுறதுக்கு!!! நீயா சாப்பிடேன் டா"

"என்னோட அக்கா, எனக்கு ஊட்டிவிடுது... உங்களுக்கு அவ்ளோ பொறாமையா இருந்தா நீங்களும் அக்காகிட்ட ஊட்டிவிட சொல்லி கேட்க வேண்டி தானே!!!" என்று நமட்டு சிரிப்போடு கூறி எப்போதும் போல் விக்ரமை கடுப்பேற்றினான்...

செம்பியனுக்கு பதிலேதும் கூறாமல் எழுந்து சமையலறை நுழைந்தான் விக்ரம். செம்பியனோ 'பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் இவரும் வாய் திறந்து கேட்கமாட்டாரு. அக்காவும் இவரா கேட்காமேலாம் செய்யாது...' என்று முனுமுனுத்தான்.

அங்கே மலரோ விக்ரமிற்கு தோசை வார்த்து அதில் துருவிய பீட்ருட் மற்றும் இஞ்சியுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய், மல்லியிழை, சிறிது மிளகுத்தூள் தூவி தோசை மொறுமொறுவென சிவந்தவுடன் குழல் போல் சுருட்டி ஒரு தட்டில் வைத்தாள்.

தடாலடியாக உள்ளே நுழைந்த விக்ரம் தட்டை கையில் எடுத்து கொத்தமல்லி சட்னி வைத்து அவளுக்கு ஊட்டிவிட வாயருகே கொண்டு செல்ல, முதலில் திடுக்கிட்டவள் பின் அவனை ஒரு ஆழப்பார்வை பார்த்துவிட்டு, மறுப்பு கூறாமல் வாங்கிக் கொண்டாள்.

மலர் தோசையை வரிசையாக ஊற்றி அடுக்கிட, அவளுக்கும் கொடுத்து தானும் உண்டபடியே, "இன்னைக்கு உன் கண்ணுல ஒருமுறை கூட பயம் தெரியலே! நேத்து தெரிந்த வெறுப்பும்... இன்னைக்கு இல்லவே இல்லே..." என்று நிறுத்தினான்.

பெண்ணவளோ 'அச்சச்சோ கண்டுபிடிச்சிட்டாரோ!' என்று நினைத்தபடி என்ன பேசுவது என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள். கடைசி துண்டை அவள் வாயில் திணித்துவிட்டு தட்டையும் அவளிடமே கொடுத்துவிட்டு கைகழுவிக்கொண்டு மீண்டும் அவளின் பின்புறம் வந்து, அவளது துப்பட்டாவில் கை துடைத்தபடி,

"ஏதோ என்கிட்ட மறைக்கிறே... பாதி கண்டுபிடிச்சுட்டேன், மீதியையும் சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன்..." என்று அவளை நெருங்கி நின்று காதில் கூறி வெளியேறிச் சென்றான்.

'உண்மையாவே கண்டுபிடிச்சுடுவாரா!!!' என்று நினைத்து "க்ளிச்... கண்டுபிடிச்சா சமாளிப்போம் மலரு... நம்மலால முடியாதா என்ன!!!" என்று வாய்திறந்து கூறியபடி செம்பியனுக்கு உணவு எடுத்துச் சென்றாள்.

CSK வின் வெற்றியை விக்ரமும், செம்பியனும் ஷோஃபாவில் ஏறி கூச்சலிட்டு கொண்டாடிட, மலர் அதில் கலந்துகொள்ள முடியாமல் பொறாமை கண் கொண்டு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த வெற்றியைக் கொண்டாடி 'என்னப்பன் புதருக்குள்' என்று தானாக வழியே வந்து தன்னைக் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.

இரவு அறைக்குள் நுழைந்திட, இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தனர். விக்ரமின் மனதை, மலரின் மாற்றங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, தானாக எதுவும் சொல்லவோ, செய்யவோ தயங்கியபடி, 'அவளது விருப்பம்' என்பது போல் பால்கனி சென்றுவிட்டான்.

மலரோ 'நேத்து கோபத்துல ஷோஃபால படுத்துட்டோம்... இன்னைக்கு என்ன செய்யிறது!!!' என்று யோசித்தபடி, தானாக பஞ்சணை சென்று படுக்க தயங்கியபடி மீண்டும் ஷோஃபாவில் படுத்துக்கொண்டாள்.

அவள் உறங்கியப்பின் உள்ளே வந்தவன் சற்று ஏமாற்றத்துடன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, முதல் நாளைப் போலவே அவளுக்கு போர்வை போர்த்திவிட்டு மஞ்சம் சென்று படுத்துக்கொண்டான்.

மறுநாள் விக்ரம் ஸ்டூடியோ சென்றவுடன் செம்பியனிடம் தன் அடுத்த தேடலை கேட்கத் தொடங்கினாள்.

"செம்பியா உனக்கு உன் மச்சானை ரெம்ப பிடிக்குமா?"

"உன்னை எங்களுக்கு திருப்பிக்கொடுத்தவரை எப்படி எனக்கு பிடிக்காமப் போகும்!!!" என்று அவனும் பதில் கேள்வி கேட்க, பெண்ணவளோ அது எப்படி சாத்தியம் என்பது போல் பார்த்தாள்.

இந்த இரண்டு வருடத்தில் அப்படி என்ன நடந்திருக்கும் என்ற சந்தேகம் தோன்றிட, "ஆக்ஸிடன்ட்-க்கு அப்பறம் என்னாச்சுனு சொல்லேன்?" என்றாள்.

தன் தமக்கை அனைத்தையும் மறந்தவள் என்பதால் அடிமுதல் நுனிவரை கூறினான் செம்பியன். அந்தோ பரிதாபம் விபத்து தான் நிகழ்ந்தது என்று தன் தமக்கை எப்படி ஊகித்தாள் என்று யோசியாமல் போனான். முதல் நாள் பண்ணைவீடு சென்றதில் இருந்து ஆரம்பித்து, மலர் கண்விழிப்பதற்கு முதல்நாள் வரை அவனுக்குத் தெரிந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

"மச்சான் உன்னை நிறையா லவ் பண்றார் க்கா... ஆரம்பத்துல இவர் ஏன் இப்படி உன்னை கண்டுக்காம இருக்கார்னு நெனச்சிருக்கேன். கோபபட்டிருக்கேன்... ஆனா சரியான நேரத்துல நீ மட்டும் தான் அவருக்கு முக்கியம்னு காண்பிச்சிட்டார்...

இப்போவும் அந்த மாடலிங் பொண்ணு தான் ஏதோ கோல்மால் பண்ணிருப்பா... மச்சானுக்கும் அந்த வீடியோவுக்கு எந்த சம்மந்தமும் இருக்காது... எனக்கு தான் நல்லாவே தெரியுமே மச்சான் உன்னை எவ்ளோ விரும்புறார்னு... மச்சான் மனசு நெறஞ்சு சிரிக்கிறதே நீ கோமால இருந்து எழுந்ததும் தான்!" என்று தன் மச்சானைப் புகழாரம் பாடும் ஆவலில் தமக்கை பற்றி யோசிக்காமல் போனான்.

'அந்த உர்ரான்கொட்டான் சிரிக்கிதுனு நீ தான் சொல்லிக்கணும்' என்று நினைத்துக்கொண்டு சலிப்பாக உதட்டை சுழித்தபடி எழுந்து சென்றாள் மலர்.



-தொடரும்.​



முழு உண்மை அறிந்த பின்னும் மலர் தன்னை விக்ரமின் பனியாக உணர்வாளா!!!
 
Top