• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 21

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 21

"மலரம்மா! இதோட பில் பேமண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணு.. அண்ட் ஒன் மன்ந்த் டு பிரிவியஸ் மன்ந்த் அமௌன்ட் செக் பண்ணு.." என்ற கவின் கையில் இருந்த பேப்பரை மும்மரமாய் பார்த்தபடி இருக்க,

கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி ஏறிய வேண்டும் போல வந்தது மலருக்கு.

"ப்ரோபிட் இருக்கணும்.. அண்ட் அதுக்காக..." என சொல்லிக் கொண்டு இருந்தவன் நிமிர்ந்து மலர் முகத்தினைப் பார்க்க, அவள் கவனம் அங்கில்லை என்பதை பார்த்ததும் புரிந்து கொண்டான்.

"டேய்! என்னாச்சு?" கவின் கேட்க,

"உங்க பிரண்ட் எங்க?" என்றாள் கோபமாய்.

"இப்ப தானே உன்னை ட்ரோப் பண்ணிட்டு கம்பெனி போறதா சொல்லிட்டு போனான்?" புரியாமல் கவின் கேட்க,

"அப்படி சொன்னா சரினு விட்டுடுவீங்களா?" என்றாள் மலர்.

அவள் கோபம் புரிந்த கவினுக்கு எதற்கு அந்த கோபம் என்று தான் புரியவில்லை.

"என்னாச்சு மலர்? ஏதாச்சும் சண்டையா உங்களுக்குள்ள? இல்லையே! நல்லா தானே உன்கிட்ட பேசிட்டு போனான்.. நீ பேசினியானு நான் கவனிக்கலயே" கவின் தனக்குள் அதை ஆராய்ந்தபடி கூற,

"யாருக்கு புரியனுமோ அவங்களுக்கே தெரியல.. உங்களுக்கு தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?" என்று கவின் மேல் எரிந்து விழ, அங்கிருந்து வெளியே வந்த கவின் உடனே செழியனுக்கு அழைத்தான்.

நான்கு மாதங்கள் கடந்திருந்தது திருமணம் முடிந்து. செழியன் மலர் இடையே நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டு இருந்தாலும் செழியன் முதலில் கூறியதை என்றும் மாற்றுவதாய் இல்லை.

மலரின் அத்தனை அத்தனை கோபங்களையும் அழகாய் கையாண்டு தினம் தினம் தன்னோடு அழைத்து வந்துவிடுபவன் கம்பெனி, ரெஸ்டாரண்ட் என இருபக்கமும் அவளை பழக்கி இருந்தான்.

"பிடிவாதம்! பிடிவாதம்!" என முறைத்துக் கொண்டாலும் முதல் நாள் போல தன்னை தனியே விடாமல் இருப்பக்கமும் அழைத்து சென்று கூடவே இருப்பவனை அத்தனை பிடித்து தான் இருந்தது மலருக்கு.

இந்த நான்கு மாதங்களிலும் வெகு சில நாட்களை தவிர்த்து இருவரும் ஒன்றாய் வீட்டில் இருந்து கிளம்புவதே வழக்கம்.

இன்றும் அப்படி தான் என்றாலும் வீட்டில் செழியன் தயாரான பின்பும் உறங்கிக் கொண்டிருந்தவளை விடப்பிடியாய் எழுப்பி விட்டிருந்தான் செழியன்.

"இன்னைக்கு ஒரு நாள் தானே சொல்றேன்.. விடுங்களேன்" மலர் கோபமாய் என்றாலும் கெஞ்சவே செய்ய,

"இந்த கதையே வேணாம்.. நீயில்லைனா எனக்கு வேலையே ஓடாது" என்றவன் சோம்பலாயும் சொல்லத் தெரியாத எரிச்சலாயும் சுற்றி வந்தவளை கிளம்ப வைத்து அவள் கோபத்தினை எல்லாம் ஒன்றுமில்லை என்பதை போல கிளப்பி அழைத்து வந்தவன் ரெஸ்டாரண்ட்டில் இருக்க, முக்கியமான வேலை இருக்கவே தவிர்க்க முடியாமல் அவளை அங்கே விட்டுவிட்டு கம்பெனி சென்றுவிட்டான்.

கோபத்தை தாங்க வேண்டியவனும் எப்பொழுதும் போல என நினைத்து அதை தட்டிவிட்டு கிளம்பி இருக்க, அதை அப்படியே கவின் மேலும் காட்டி இருந்தாள் மலர்.

கவின் அழைத்து கூறி இரண்டு மணி நேரங்கள் கழித்தே வந்து சேர்ந்தான் செழியன்.

"என்ன டா பண்ணி வச்ச? உங்களுக்கு பஞ்சாயத்து பண்றதே என் வேலையா போச்சு" கவின் கூறவும்,

"அதுக்கு தான் உனக்கும் கல்யாணம் பண்ணலாம்னு சொல்றேன் கேட்குறீயா? இன்னும் நாலஞ்சு மாசத்துல பிரேம் மேரேஜ் முடிஞ்சுடும்.. அப்புறம் நீ தான் தனியா இருக்கனும்.. பார்த்துக்கோ" என்று கூற,

"என்னவோ அவனும் நீயும் இப்ப என் கூடவே இருக்குற மாதிரி தான்.. அடையார் வீட்டுல என்னை தவிர ஈ காக்கா கூட இருக்காது.. அதுவும் பிரேம்க்கு கல்யாணம் ஆச்சுன்னா இன்னும் சுத்தம்.. நமக்கு நாமே தான் எனக்கு சூட் ஆகும் சாமி" என்றான் கவின்.

"உனக்கெல்லாம் சொன்னா புரியாது.. உனக்குன்னு ஒரு கேர்ள் வரட்டும்.. அப்புறம் பாத்துக்குறேன்.." என்றவன்,

"என்னவாம் என் மலருக்கு?" என்றான்.

"இதே காரணத்துக்காக தான் டா நானும் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன்.. இந்த கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் நமக்கு ஆகாது.. போ போ.. நீயாச்சு உன் மலராச்சு" என்றான் கவினும்.

"என்னம்மா! மலருக்கு என்ன கோபம்?" என மலரின் முன் செழியன் அமர,

"எங்கயா போன?" என்றாள் எடுத்ததும் மரியாதைவிட்டு.

"பார்றா! செம்ம கோபம் போலயே! சரி சாரி.. ஒரு எமெர்ஜென்சி அதான்.. ஆனாலும் தப்பு தான்.. இனி போகல.. ஓகே" என உடனே சமாதானப்படுத்த அவன் படுத்துவிட, அவள் முகத்தில் இன்னும் கோபத்தை தவிர எந்த பாவனையும் இல்லை.

"கமான் டா.. என் கூடவே இருக்கனும் சொல்லிருக்கேன் இல்ல?" இன்னும் இன்னும் செழியன் கெஞ்ச,

"அப்ப நான் அப்படி நினைக்க கூடாதா?" என்றாள்.

"ப்ச்! என்னாச்சு மலர்? நான் எப்பவும் உன்னோட தானே இருக்கேன்.. என்ன வேணும் உனக்கு? என்னவோ பேஸ் சரி இல்லையே?" என அவன் கேட்க,

"அது கூட இப்ப தான் தெரியுது இல்ல.. என்னால முடியல" என்றாள் டேபிளில் தலைசாய்த்து.

"வாட்? என்னம்மா.. என்ன பண்ணுது?" என்றவன் அவளருகில் வந்து அமர்ந்து அவள் நெற்றியில் கழுத்தினில் என கைவைத்து பார்க்க, அவளும் தட்டி விட்டாள்.

"ஹாஸ்பிடல் போலாமா?" அவன் கேட்க, அவள் வேண்டாம் என தலையசைக்கவும்,

"சரி ஓகே! வா உன்னை வீட்டுல ட்ரோப் பண்றேன்.. ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்" என்றான்.

"என்ன சரியா போய்டும்?" அவள் கேட்க,

"டையார்ட்டா தெரியுற மலர்.. ஏதோ இரிடேஷன்னு புரியுது.. ரெஸ்ட் எடுக்கலாம் வா" அவளின் இவ்வளவு கோபம் ஏன் என்று புருவம் சுருக்கி யோசித்தபடி அவன் கூற,

"ஆமா ரெஸ்ட் தான்.. இன்னும் பத்து மாசத்துக்கு நான் ரெஸ்ட் தான் எடுத்துக்க போறேன்" என்றவளை,

"எது பத்து மாசத்துக்கா?" என அவன் அதிர்ந்து பார்க்க,

"ம்ம்! ஆமா! அப்புறமும் நான் உங்களோட இங்கேயும் ஆஃபிஸ்ம்னு எல்லாம் வர மாட்டேன்.. எனக்கு நம்ம பாப்பாவை பாத்துக்கவே டைம் பத்தாது" என்றாள்.

அவள் கூறியதை புரிந்து கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது செழியனிற்கு.

என்ன சொன்ன? என்ன சொன்ன மலர்? திரும்ப சொல்லு" விழி விரித்து சில நொடிகள் சிலையானவன் பின் அதே விழிகளுடன் திரும்பி கேட்க,

"சொல்லமாட்டேன்.. என்னை விட்டுட்டு போனீங்க தானே?" என்றவள் மீண்டும் டேபிளில் கவிழ்ந்து கொண்டாள்.

"மலர் மலர்! ப்ளீஸ் ப்ளீஸ் டா!" முகம் முழுதும் புன்னகையில் விகசித்து இருக்க, அப்படி கொஞ்சினான் தன் மனைவியை.

"நிஜமாவா? நான் அப்பாவா?" என்றவன் முகத்தை மூடி, அழுந்த துடைத்து என அந்த நேர மகிழ்ச்சியினை உள்வாங்கிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்தபடியே சாய்ந்திருந்தாள் மலர்.

"எப்ப சொல்ற மலர் நீ? இப்ப என்ன செய்யணும்னு கூட எனக்கு தெரியல.. அய்யோ! ஆமா அம்மாக்கு தெரியுமா? வீட்டுலயே உனக்கு தெரியுமா? அப்ப ஏன் வந்த?" என்றவனை அவள் முறைக்க,

"ஓகே ஓகே! நான் தான் கம்பல் பண்ணி கூட்டிட்டு வந்தேன் இல்ல.. ஆனா எனக்கு தெரியாதே! சொல்லியிருக்கலாமே மலர்? நான் இப்ப என்ன செய்யணும்?" என பிதற்றியவனைப் பார்த்து அவள் சிரித்தபடி இருக்க,

"ஒரு நிமிஷம் மலர்!" என்றவன் தனியே சென்று அலைபேசியில் பேசிவிட்டு வந்தான்.

"டேய்! மலர்.. ச்சோ.. இப்படி பண்றியே மலர்" என அவளருகே அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள எதற்கும் பேசிவிடவில்லை மலர்.

"வாழ்த்துக்கள் மலரம்மா!" என கையில் ஒரு பாக்ஸ் உடன் உள்ளே நுழைந்தான் கவின்.

புன்னகையுடன் செழியனிடம் இருந்து எழுந்தவள் கவினைப் பார்த்து நிற்க,

"எதுக்கு டா வாழ்த்து?" என்றான் செழியன்.

"நான் என்ன ட்யூப்லைட்டா? இந்த நேரத்துக்கு போன் பண்ணி ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றனா நியூஸ் என்னனு கூட கெஸ் பண்ண முடியாதா எனக்கு?" கவின் கூற,

"நீங்க எப்படி கவிண்ணா இவருக்கு பிரண்ட் ஆனீங்க?" என்றாள் மலர் புன்னகைத்து.

"அது விதி ம்மா.. சரி வீட்டுல சொல்லிட்டிங்களா? ஹாஸ்பிடல் போனியா? டேய் முதல்ல ஹாஸ்பிடல் போய்ட்டு வீட்டுல எல்லாருக்கும் சொல்லு.." என பேசிக் கொண்டே இனிப்பை பிரித்து செழியனிடம் நீட்ட,

அதை பிட்டு மலருக்கு முதலில் கொடுத்த செழியன் பின் கவினுடன் பகிர்ந்து கொண்டான்.

"கவின் இல்லைனா எனக்கு எதுவும் இல்லை" செழியன் அன்று ஒருநாள் கூறியது நினைவில் வர அந்த நினைவில் நின்றிருந்தாள் மலர்.

"நீ பார்த்துக்கோ டா.. நான் கால் பண்றேன்" என்ற செழியன் முதலில் மலரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

பரிசோதனை முடிந்து அருகில் வரும்வரை அவன் பரிதவிப்பிலேயே இருக்க, வந்தவளோ அசால்ட்டாய் கண் சிமிட்டி வைத்தாள்.

"மலர் என்ன சொல்றது உன்னை?" அவன் முறைப்பாயும் தவிப்பாயும் கேட்க,

"பொதுவா பொண்ணுங்க தான் ரொம்ப நெர்வசா இருப்பாங்க இந்த மாதிரி டைம்ல.. நீங்க கொஞ்சம் வித்யாசமா இருக்கீங்க" அவர்களை பார்த்தபடி இருந்த மருத்துவர் கூற, தன்னை நிதானப்படுத்த முயன்றான் செழியன்.

"இல்ல டாக்டர்! மார்னிங் கொஞ்சம் அப்நார்மலா இருந்தா.. சரியா சொல்ல தெரியல.. ஆனா அப்ப இருந்த மலருக்கும் இப்ப இருக்குற மலருக்கும் டிப்பரென்ட் பீல் பண்ண முடியுது" செழியன் கூற,

"எக்ஸாக்ட்டா கண்டுபிடிச்சிருக்கீங்க.. நிறைய ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்குள்ள இந்த மாதிரி டைம்ல மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் வர்றதே இதனால தான்.. அவங்களுக்கு ரெண்டு மாசம் முடிஞ்சிருச்சு.. இதைவிட அதிகமாவே இனிமேல் நீங்க பார்த்துக்க வேண்டியதிருக்கும்.. எப்ப எப்படி பிகேவ் பண்ணினாலும் நீங்க தான் பார்த்துக்கணும்" மருத்துவர் கூற,

"ஓஹ்!" என கேட்டுக் கொண்டவன் திரும்பி மலரைப் பார்த்தான்.

'ரெண்டு மாசமா?' என்ற கேள்வியும் அவனிடம் இருந்தது.

"எனக்குமே தெரியாது" அவள் கூற, செழியன் மருத்துவரிடமே கேட்டு வைத்தான்.

"இர்ரெகுலரா கூட அவங்க நினைச்சிருக்கலாம்.. இது ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல.." என்றவர் செழியனின் முகம் பார்த்து மருத்துவராய் சில அறிவுரைகளையும் அவனுக்கு வழங்கி வைத்தார்.

"அப்புறம் டாக்டர்!.." என செழியன் கேட்க வர,

"கேட்ட வரை போதும்.. வாங்க போகலாம்" என இழுத்து தான் வந்தாள் மலர்.

"இரு மலர் இன்னும் கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு.. கேட்டுட்டு வந்துடறேன்" செழியன் கூற,

"ஏன் இனிமேல் ஹாஸ்பிடல் வர போறதே இல்லையா? அதான் அடுத்த செக்கப் டேட் குடுத்துருக்காங்க இல்ல?" மலர் கூறவும்,

"ஆனா நீ நடக்கலாமா... எவ்வளவு தூரம் நடக்கலாம்னு எல்லாம் இப்பவே தெரியணும்ல?" என்றவன் கேள்வியில் இவள் விழிக்க, மலர் தெளியும் முன்பே மீண்டும் உள்ளே சென்றுவிட்டான் தன் சந்தேகத்தை கேட்க.

தலையில் கைவைத்து நின்றுவிட்டாள் மலர்விழி.

தொடரும்..
 
Top