• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மலரின் அமைதி நிறைந்த வதனத்தில் இருந்து விக்ரமால் எதுவும் கண்டுபிடித்திட முடிந்திடவில்லை. அவளின் கோபத்தை எதிர்நோக்கி காத்திருந்தவன் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம்.

மலர் தன் இடம் சென்று படுக்கத் தயாராக, விறுவிறுவென்று எழுந்து வந்த விக்ரம், "உனக்கு என்கிட்ட கேட்க எந்த கேள்வியும் இல்லேயா?" என்று கோபம் கொண்டு கத்தினான்.

"கேள்வி எல்லாம் நெறையா இருக்கு... கேட்டால் பதில் வருமா! எதிர்கேள்வி வருமா! இல்லே உத்தரவு வருமானு யோசனைலயே தள்ளி போட்டுட்டு இருக்கேன்..."

தன்னுடைய பனி மீண்டு வருவதைக் கண்டு சற்று நிம்மதியுற்று, எதிரில் இருந்த டீப்பாயில் அமர்ந்து

"ஒருமுறைனாலும் வாய் தெறந்து கேட்டு பார்த்தா தானே தெரியும்... நீயா ஒன்னை டிஸைட் பண்ணிட்டு சைலண்ட்டா இருந்தா என்ன அர்த்தம்?" என்று அதேபோல் கத்தியபடி திட்டிக்கொண்டே தான் வினவினான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் "வினோ அண்ணாகிட்ட ஏன் பொய் சொன்னிங்க?" என்று பட்டென்று அவன் கண்களை நேருக்குநேர் பார்த்தபடி வந்து அவளது கேள்வி.

ஒருநொடி தான் அவளை நினைத்து பிரம்மித்து அதனையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், "நான் உண்மை தான் சொன்னேன். நாம ரெண்டு பேரும் அக்ஸராவைப் பார்க்கப் போறோம்..." என்று அவள் கண்ணைப் பார்க்காமல் கூறி முடித்தான்.

அதனைக் கேட்டவுடனேயே படபடத்தாள் மலர், "பாத்திங்களா! பாத்திங்களா! இப்பவும் பொய் தான் சொல்றிங்க... நீங்க உண்மை பேசியிருந்தா இந்நேரம் என் கண்ணைப் பாத்து பேசியிருப்பிங்க தானே..."

அவளின் துடுக்குப் பேச்சில் அடமெண்ட் அரோகெண்ட் விக்ரம் வெளிவர, "இப்போ என்ன உன் கண்ணை பாத்து சொல்லனும் அவ்ளோ தானே... நாம ரெண்டு பேரும் அக்ஸராவைப் பார்க்கப் போறோம்... போதுமா!" என்று அவளை கண்களைப் பார்த்துக் கூறினான்.

அதற்கும் விறலியாள் சலைக்காமல் முட்டிக்கொண்டு நின்றாள். "நான் நம்பமாட்டேன்... இப்பவும் பொய் தான் சொல்றிங்க... நீங்க அக்ஸராவை இனிமே பார்க்கவே விரும்பலேனு அவங்ககிட்ட சொல்லிட்டு வந்துட்டு, இங்கே எல்லார்கிட்டேயும் ஏன் இப்படி நடக்கனும்! ஃப்ரெண்ட்ஸ்கிட்ட, என்கிட்ட நடிக்கிற அளவுக்கு அப்படி என்ன அவசியம்?" என்று தன் கேள்விகளை வரிசையாக அடுக்கினாள்.

அவளையும் அறியாமல் தன் வார்த்தைகளில் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் தன்னையும் இணைத்திருந்தாள்.

"ஆனாலும் நீ இவ்ளோ ஷார்ப்பா இருந்திருக்கக் கூடாது!!!" என்று கிண்டல் போல் கிரக்கமாகக் கூறினான்.

மலர் அவனை முறைக்க, அவனோ சாவதானமாக ஒரு பெருமூச்சு விட்டு "அக்ஸராகிட்ட எப்போ பேசினே? என்ன பேசினே!!" என்றான்.

மலரோ மாட்டிக்கொண்டோம் என்று தோன்றினாலும் அதனை வெளிக்காட்டாமல் "நான் யாரையும் மீட் பண்ணி பேசலே... எனக்கு அந்த அவசியமும் இல்லே..." என்றாள்.

விக்ரமோ தன் இடது கையை மடித்து இடது முழங்காலில் ஊன்றி, வலது கையால் அவள் காதோடு சேர்த்து காதின் பின்னால் இருக்கும் கேசத்தை கோதியபடி, "பனி..." என்றிட,

இத்தனை நாள் காணாத விக்ரமைக் கண்டு இமைக்கவும் மறந்து சிலையென அமர்ந்திருந்தாள் பெண்ணவள். இத்தனை நாட்களாக அவன் தன் செயல்களில் அவளுக்கு உணர்த்திட நினைத்த காதல் ஒட்டுமொத்தமாய் 'பனி' என்ற அழைப்பில் அடங்கிட பெண்ணவள் பேச்சிழந்து போனாள்.

நெஞ்சில் மட்டும் பனிமழை கொட்டியது போல் மனம் சில்லிட்டிட அதனை ஈடுகட்ட கழுத்திற்கு மேலே சூடேறி அவன் தொட்ட காதுகள் அந்த உணர்வில் சிவந்திட, பெண்ணவள் தானாக தலை கவிழ்ந்தாள். தனக்குள் தோன்றிய மாற்றங்களை தானே புதிதாகவும் உணர்ந்தாள்.

"நான் அக்ஸராவை இனிமே சந்திக்க விரும்பலேனு சொல்லிட்டு வந்தது உண்மை தான். அதை அவளையும் என்னையும் தவிர வேறு யாரும் உன்கிட்ட சொல்லியிருக்க வாய்ப்பில்லே... நான் உன்கிட்ட சொல்லலே... அப்போ அக்ஸரா தானே சொல்லிருக்கனும்...

உனக்கு இப்படி சின்னக்குழந்தை மாதிரி விளக்கம் சொல்லத் தேவையில்லே தான். ஆனா என்கிட்டே சொல்லக் கூடாதுனு முடிவு பண்ணிட்டு வாய் திறக்காம இருக்க... அதான் நான் இவ்ளோ பேச வேண்டியதா இருக்கு...

அதுவும் இல்லாம நீயும் அக்ஸராவும் என்ன பேசிக்கிட்டிங்கனு அக்ஸராவுக்கு ஒரு ஃபோன் கால் செய்தா போதும். அவளே எல்லாத்தையும் சொல்லிடுவா... ஆனா எனக்கு அது தேவையில்லே... சொல்லப்போனா அது பிடிக்கலே... எனக்கு நீ சொல்லனும். அதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..." என்று கனிவான குரலில் கூறி முடித்தான்.

விக்ரமின் கனிவு பேச்சு புதிதேயானாலும் அவனது பேச்சில் மலருக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. கணவன் மனைவிக்கு இடையேயான புரிதல்கள் அவர்களுக்குள்ளாக மட்டுமே பேசித் தீர்க்க வேண்டும் என்று அதிகமாகவே நினைக்கிறான் என்று.....

அவன் சுட்டிக்காட்டாவிட்டாலும் தான் தன் கணவனைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதோ ஒரு பெண்ணின் வீட்டில் சென்று நின்றிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்ந்தாள்.

தன் தம்பியே ஆனாலும் செம்பியனிடம் கூட என்ன நடந்தது என்னு கேட்டிருக்கக் கூடாதோ, தன்னவனிடம் கேட்டிருந்தாலே சொல்லியிருப்பானோ! என்று யோசித்து தலை குனிந்து கூனிக் குறுகி அமர்ந்திருந்தாள்.

அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு "பனி... நடந்த எதையும் மாத்த முடியாது... உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு.... நான் உன்னை கட்டாயப்படுத்தமாட்டேன்... ஆனா நீயா சொல்றவரைக்கும் யார்கிட்டேயும் கேட்கவும்மாட்டேன்..." என்று கூறிக்கொண்டிருந்தவன் கைகள் திடீரென இறுக்கம் அடைய, பெண்ணவள் குழப்பத்தோடு அவனை ஏறிட்டாள்.

"செய்த தப்புக்கு உன்கிட்ட ஒரு சாரி கூட சொல்லாம அவளை அப்படியே அனுப்பி வெச்சிடுவேனா என்ன? என்னை யாருனு நெனச்சா!!!.... அவ அவமதிச்சிட்டு போனது என் பனியை...." என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறியவனை இடைமறித்தாள் அவனது கிழத்தி.

"அவங்க சாரி சொல்லிட்டாங்களே!"

"எப்போ?" என்றான் சிறிய நெற்றிச் சுருக்கங்களுடன்.

"அடுத்த நாளே கால் பண்ணினாங்க... சாரி சொல்றதுக்கு..."

அதில் சற்று மனம் நிம்மதி அடைந்தவனாய் "ஓஓஓ... அப்போ ஓகே..." என்று கூறி எழுந்து நின்று "செண்ட் ஆஃப் பண்ண நாம போகத் தேவையில்லே. உன் வினோ அண்ணன்கிட்ட சொல்றதுனா சொல்லிடு..." என்று கூறி நகர்ந்திட அவனது கைகளில் அழுத்தம் கொடுத்து மீண்டும் அமரச் செய்தாள் மலர்.

அவள் ஏதோ சொல்ல விரும்புகிறாள் என்று தெரிந்து அவளைப் பார்த்தபடி மீண்டும் டீப்பாயில் அமர்ந்தான்.

"அப்போ அவங்கள என்கிட்ட சாரி கேட்க வைக்கிறதுக்குத் தான் என்னையும் கூட்டிட்டு போறதா சொன்னிங்களா?" என்று இப்போது அவள் நெற்றி சுருக்கியபடி வினவினாள்.

"ம்ம்ம்... அக்ஸராவை சாரி கேட்க சொல்லி நான் சொல்லலே... பட் அவளா உனக்கு கால் பண்ணி சாரி சொல்லாருக்கானா, மனசளவுல செய்த தப்பை உணர்ந்து தான் சொல்லிருக்கா... அதுல கொஞ்சம் ஹாப்பி தான்" என்றவன், சொல்ல வேண்டியது அவ்ளோ தானே என்பது போல் தலையை அசைக்க,

அவன் கடகியவளோ தலை குனிந்தபடி, "சாரி.... நா... நான்... நான் உங்களை தப்பா.... சந்தேகப்பட்டு அங்கே போகலே..." என்றாள் தயங்கியபடி...

"வாட்!??? நீ அவ வீட்டுக்கு போனேயா?.ஏன் யாரும் என்கிட்ட சொல்லலே?" என்று கோபம் கொண்டு எழுந்தவன், வீட்டு பணியாட்களை சத்தமிட கதவின் பக்கம் வேக எட்டுகள் வைத்து சென்றான்.

அதற்குள் அவனை முந்திக்கொண்டு ஓடி வந்து அவன் முன்னே சென்று நின்றவள், இருகைகளை மறித்து நின்று "நான் தான் யாரையும் சொல்லக் கூடாதுனு சொல்லிருந்தேன்..."

"ஆர் யூ ஸ்டுப்பிட்? நீ ஏன் அவ வீட்டுக்குப் போனே?" என்று கேட்டபோதே தன்னையும், அக்ஸராவையும் தவறாக நினைத்து அதுபற்றி கேட்க சென்றிருப்பாளோ! என்று தோன்றிட,

"அந்த வீடியோவைப் பாத்து எனக்கும் அக்ஷூக்கும் என்ன மாதிரி ரிலேஷன்ஷிப்னு தெரிஞ்சுக்க நெனச்சேயா! அதை என்கிட்டேயே கேட்டிருக்கலாமே!" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கூறினான்.

அவனது வதனத்தில் படர்ந்திருந்தது கோபமா? வலியா? என்று பிரித்து அறிந்திட முடியாமலும், அதனை மேலும் ஆராய்ச்சி செய்திட விரும்பாமலும்

"நான் அதைபத்தி கேட்க போகலே... எனக்கு அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்குறதுக்கு முன்னுடியே அதுக்கான பதில் தெரிஞ்சிடுச்சே... நீங்க அந்த மாதிரி தப்பு செய்யக் கூடியவர் இல்லேனு..." என்று அவசரமாக மறுத்தாள்.

விக்ரமுமோ அவளது கூற்றில் கொஞ்சம் இதமாக உணர்ந்தவன், "பின்னே எதுக்கு அவ வீட்டுக்கு போனே!!" என்று 'நீ அவளது இல்லம் சென்றது தவறு' என்பதிலேயே குறியாக இருந்தான்...

அவனைப் பொருத்தவரை மதியாதார் வாசலை தன்னவள் ஏன் தேடிச்செல்ல வேண்டும் என்று அவளிடமே அவளை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அவளுக்காக அவளிடமே வாதாடினான்.

"நீங்க கோபத்துல அவங்களை..... காயப்படுத்தி..... அதனால தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனிங்களோனு ஒரு டவுட்"

அவனோ சற்று முன் இருந்த இதமான மனநிலையில் இருந்து மாறி, மீண்டும் வலி நிறைந்த பார்வை பார்த்திட, அவன் பதியவளோ,

"ஏன் அப்படி பாக்குறிங்க!!! அவங்க ஏதோ நீங்க ரெம்ப நல்லவரு... பொண்ணுங்கள மதிக்கத் தெரிஞ்சவருனு ரெம்ப பெறுமையா சொன்னாங்க.... ஆனா நீங்க அந்தளவுக்கெல்லாம் வொர்த் இல்லே..." என்று அவனை வம்பு வளர்க்க நினைத்தே ஏளனம் போல் கூறினாள்.

"ஏன்?" என்று டெரர் லுக் விட்டபடி ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவினான்.

"பொண்ணுங்களை மதிக்கத் தெரிஞ்சவரு பொண்டாட்டியையும் மதிச்சு ஒரு வார்த்தை என்ன நடந்ததுனு கேட்டிருக்க வேண்டியது தானே! கோவிச்சிட்டு போய் அவங்க கால்ல சுடு தண்ணி கொட்டிட்டு வர சொன்னாங்களா என்ன!" என்று பேசிக்கொண்டே ஒருபுறமாகத் திரும்பி நின்று கைகளை கட்டிக்கொண்டு,

"இதுல கொதி தண்ணிய மூஞ்சில கொட்டலேனு சந்தோஷப்பட்டுக்கனுமாம்!!!" என்று சலித்துக் கொண்டாள்.

அக்ஸராவின் மீதிருந்த தன் கோபத்தையும் தாண்டி மலரின் இலகுவான பேச்சும், செல்லக் கோபமும் அவனை கிரங்கடிக்க கட்டியிருந்த அவள் கைகளைப் பிடித்து தன்புறம் திருப்பி, அவள் கன்னங்களைப் பற்றி விறுட்டென தன்னருகே இழுத்தான்.

அவனின் செயலில் முதலில் அதிர்ந்தவள் பிடிமானத்திற்காக அவன் கைகளை தொற்றிக்கொண்டதோடு வெகுநாட்களுக்குப் பிறகு அவனது சீண்டலில் தன் பெண்மை வெளிப்படுவது போல் தோன்றிட அவன் கண்களை நேருக்கு நேர் காணும் சக்தியின்றி இமைகளை குடையென வளைத்து நாணத்திற்கு அரணிடுவதாக நினைத்து அந்த நாணத்தை வெளிக்காண்பித்திருந்தாள்.

"சாரி.... ஐ ம் சோ சாரி... உன்கிட்ட கேட்காம போனது தப்பு தான். ஆனா அக்ஸராகிட்டேயும் சாரி கேட்கனுமா? நீ சொன்னா நான் இப்போவே அவகிட்டேயும் சாரி கேட்க ரெடியா இருக்கேன்...." என்று அவள் கண்களைப் பார்த்து உரைத்தான்.

கவிழ்ந்திருந்த அவளது இமைகளை முத்தமிட்டு மலரச்செய்யும் ஆசை ஆழ்மனதில் அளவில்லா வெள்ளமாய் பெருக்கெடுத்திட, அதற்கு அணையிடும் மார்க்கம் தெரியாமல் திண்டாடினான் அவளது கண்ணாளன்.

வேகமாக அவனை நிமிர்ந்து பார்த்து வேண்டாம் என் தலையசைத்தாள் மலர். தன்னைக் கணைகொண்டு தாக்கும் விழிகளில் மேலும் மேலும் மூழ்கியவன், அவளது பிறைநெற்றியில் இதழ் பதித்து, "குட் நைட்" என்று மனமே இல்லாமல் குரல் எழும்பாமல் கூறிவிட்டு படுக்கையில் சென்று படுத்துக்கொண்டான்.

பெண்ணவளோ 'அவ்ளோ தானா!!!' என்று மனதில் எழுந்த கேள்வியில் ஏமாற்றத்தோடு தன் இருப்பிடம் சென்று படுத்துக்கொண்டாள்.

படுத்தாலும் உறக்கம் வரவில்லை. 'நான் இன்னைக்கு சரியா தானே பேசினேன். நான் அவருடைய மனைவி என்றும், அதனை நானும் மனதளவில் ஏற்றுக் கொண்டேன் என்றும்.... நான் கூறியவிதத்தில் அவருக்கு புரியவில்லையா!!! ஒருவேளை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லனுமோ!!!' என்று யோசித்தபடி எப்போது உறங்கினோம் என்று கூடத் தெரியாமல் உறங்கிப் போனாள்.



தொடரும்​
 
Top