ஃப்ளேட்டிற்கு வந்த ரிஷியின் மனமோ வெறுமையாக இருந்தது.
எப்படி சரி தன்னவளை இங்கே அழைத்து வர வேண்டும் என நினைத்தவனுக்கு எப்படி என்பது தான் புரியவில்லை.
தான் அவளுடன் பேச செல்லும் போதெல்லாம் பதிலுக்கு அவள் பேசினால் பரவாயில்லை.
ஆனால் அவள் தான் வாயைத் திறந்து பேச மாட்டேன் என்கிறாளே..
அவளின் மௌனம் அவனை மிகவும் பாதிக்கிறது.
தலை கோதி தன்னை சமப்படுத்திக் கொண்டவன் தனது அழைபேசியை எடுத்து மதியின் எண்ணைப் பார்த்தான்.
அவளது நம்பரைக் கூட அவன் ஃபோனில் சேமித்து வைத்திருக்கவில்லை.
இன்று ஏனோ அந்த எண்ணைப் பார்த்தவன் தன்னுள்ளே சிரித்தவனாய் "ராட்சசி.." என சேர்வ் பண்ணினான்.
அடுத்த கணம் அவளது எண்ணிற்கு அழைத்திருக்க ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர மறு முனையில் யாரும் எடுத்தபாடில்லை..
மீண்டும் மீண்டும் அவன் முயற்சித்துக் கொண்டே இருந்தான்.
அதே சமயம் அங்கே மதியோ திரையில் மின்னிய தன்னவனின் பெயரை வெறித்துக் கொண்டிருந்தாள்.
இதற்கு முன்னர் எத்தனை தடவைகள் இந்த எண்ணிற்கு அவள் அழைத்திருப்பாள்.
அப்போதெல்லாம் வேண்டாமென அழைப்பை துண்டித்திருந்தவன் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறான்.
இப்போது ஏனோ அவளிற்கு அந்த அழைப்பை ஏற்க மனம் வரவில்லை.
அப்படியே ஃபோனைப் பார்த்துக் கொண்டே தலையை கட்டிலில் சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.
அதனுள் ரிஷியின் கோபத்தில் சிவந்த முகமே வந்து நின்றது.
அவளை அறியாமல் கண்கள் வேறு கலங்கியிருக்க மூடிய இமை வழியாக கண்ணீரும் கசிந்தது.
..
அடுத்த நாள் மதி தன் கேபினில் அமர்ந்து லேப்டாபை தட்டிக் கொண்டிருந்தாள்.
அவளது சிந்தனையை கலைக்கும் முகமாக அவளது பி ஏ "மேடம்.. மே ஐ கம் இன்..?" என்றாள்.
நிமிர்ந்து பார்க்காமலே அவளும் "எஸ் யூ கேன்..." என்றதும் உள்ளே வந்தாள் அந்தப் பெண்.
மதியைப் பார்த்தவள் "மேடம்.. உங்கள பார்க்க ஒருத்தர் வந்திருக்கிறார். யாருன்னு கேட்டதும் வெரி க்ளோஸ் ரிலேஷன் ன்னு சொல்ல சொன்னாரு... என்ன பண்ணட்டும்..?" என்றாள்.
மதியோ யோசனையுடன் "வட் இஸ் ஹிஸ் நேம்...?" என்றாள்.
"தெரியல மேடம்.. சொல்ல மாட்டிக்கிறாரு..." என்று அவள் இழுத்ததும், "சரி வர சொல்லுங்க.." என்றாள்.
"ஓகே மேடம்..." என்றவள் சென்று விட்டாள்.
சற்று நேரத்தில் "மே ஐ கம் இன் மிசிஸ்...?" என்ற ஆர்பாட்டமான குரலில் சட்டென மதி நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே ரிஷியோ தன் முத்துப் பற்கள் தெரிய அழகாய் புன்னகைத்தவனாய் நின்றிருந்தான்.
அவனை தன்னை மீறி ரசித்தன அவளது கண்கள்.
அதனை ரிஷியும் கண்டு கொண்டான். அதில் ஆடவனிற்குமே வெட்கப் புன்னகை தோன்றியிருக்க "க்கும்..." என்று கனைத்திருந்தான்.
அதில் சட்டென கலைந்தவள் தன்னையே நொந்து கொண்டாள்.
ரிஷி வேறு அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டிருக்க போலிக் கோபத்துடன் "உங்கள யாரு உள்ளே விட்டது...? மாயா..மாயா.." என கத்த அதற்குள் ரிஷி உள்ளே வந்து விட்டான்.
"என்ன ஒரு நொய்ஸ் பொழுஷன்டா..." என காதைக் குடைந்தவன் அவள் முன் இருந்த இருக்கையில் அனுமதியின்றியே அமர்ந்து "பொண்டாட்டியோட கேபின் வர யார் கிட்ட பேர்மிஷன் கேட்கனும்...?" என்றான்.
மதியோ கோபத்தில் எழுந்த நின்றிருக்க ரிஷியோ "புருஷனுக்கு இவ்வளவு மரியாதை போதும்.. சிட் மா..." என்றான் கூலாக..
அவனிடமிருந்து கேட்க வேண்டும் என அவள் எதிர்பார்த்திருந்த வார்த்தைகளை இன்று கேட்டதும் ஏனோ கசக்கியது.
முகத்தில் பல உணர்ச்சிகளைக் காட்டியவளை ரசித்துப் பார்த்தான் ஆடவன்.
அவனது ரசனைப் பார்வை வேறு அவளை மேலும் அங்கே நிற்க விடாமல் செய்திருக்க, அவனை முறைத்து விட்டு நடந்தவளை, அவள் சுதாரிப்பதற்குள் பிடித்து சுவரில் சாற்றி இருந்தான்.
அவளோ எதிர்பாராத நேரத்தில் நடந்த தாக்குதலில் அதிர்ந்து நின்று விட்டாள்.
அன்றைய அமைதியான மதியை வெறுத்தான் என்றால், இன்றைய திமிரான மதிநிலாவை இன்னும் இன்னும் காதலிக்கிறான் வேங்கையவன்.
இருவரின் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.
வார்த்தைகள் பேசியாராததை அந்த ஒற்றைப் பார்வையில் பறிமாறிக் கொண்டனர்.
நீண்ட நேரம் இருவரும் அப்படியே நின்றிருக்க, மாயாவின் சத்தமே இருவரையும் கலைத்திருந்தது.
அதில் திடுக்கிட்டவள் ரிஷியிடமிருந்து சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
ஆனால் அவளது கண்கள் கலங்கிப் போய் இருந்தன.
இவனை தள்ளி விட்டு போக எத்தணித்தவளின் கையைப் பற்றியவன் அவள் முன் வந்து நின்று அவளது முகத்தை கையில் தாங்கியதும் அவளது மேனியோ சிலிர்த்து அடங்கியது.
தாலி கட்டியவனின் முதல் தொடுகை பெண்ணவளை சிலிர்க்க வைத்திருந்தது.
ரிஷியோ மையிட்ட அவளது விழிகளில் தன்னைத் தொலைத்தவனாய் "சாரி கேட்கக் கூட தகுதியில்லாதவன் நான். இருந்தாலும் ஐ எம் ரியலி சாரி.. நான் எவ்வளவோ உன்னை ஹேட் பண்ணி இருக்கேன். எப்போ நீ என்னை விட்டு போனியோ அப்போவே என் தப்பை ரியலைஸ் பண்ணிட்டேன். இருந்தும் என்ன பிரயோசனம்..?" என விரக்தியாய் புன்னகைத்தவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதிநிலா.
"நவ் ஐ எம் இன் லவ் வித் யூ நிலா... நம்ம வீட்டுக் கதவு உனக்காக எப்போவுமே திறந்திருக்கும். நானும் காத்துட்டு இருப்பேன். என்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்காதடி. ஏற்கனவே ரொம்ப உடைச்சிட்டேன்..." என்றவன் அவளது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விட்டு விலகிச் சென்றான்.
போகும் வழியில் ஒற்றைக் கண்ணிலிருந்து வடிந்த கண்ணீரை விரலால் சுண்டி விட்டு வெளியேறி இருந்தான்.
அவன் அழுது முதல் முறை பார்க்கிறாள்.
அப்படியே சுவரில் சாய்ந்து அவன் கூறியவைகளை மீட்டிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் மாயா மீண்டும் அனுமதி கேட்டு நிற்க சுயத்தையடைந்தவளாய் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் "உள்ளே வாங்க..." என்று அனுமதி வழங்கி இருந்தாள்.
...
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
ரிஷியோ ஒவ்வொரு நாளும் தன்னவளின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான்.
நாட்கள் தான் ஓடிக் கொண்டிருந்ததே தவிர அவளும் வருவது போல் தெரியவில்லை.
மித்ரனும் பவித்ராவும் தங்கள் குழந்தையுடன் அழகாக நாட்களை செலவழித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ ஓர் மூலையில் ரிஷி பற்றிய கவலையும் எஞ்சியிருக்கத் தான் செய்தது.
அங்கே வெங்கட் வழமை போல மதியின் உதவியால் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவள் மீண்டும் அந்த வாசல் படியை மிதித்திருக்கவில்லை. காரணம் சீதா.
அநாத்ரயனோ இப்போதெல்லாம் எப்படியாவது மதியை ரிஷியுடன் சேர்த்து வைக்க போராடிக் கொண்டிருந்தான்.
இந்த இடைப்பட்ட காலத்தில் ரிஷியைப் பற்றி நன்கு ஆராய்ந்திருந்திருந்தவன் தன் தங்கை மீது அவன் வைத்திருந்திருக்கும் அளவு கடந்த காதலையும் புரிந்து கொண்டான்.
ஆனால் அவள் தான் பிடி கொடுத்தாளில்லை.
இதற்கெல்லாம் மாறாக மதி இருந்தாள்.
மீண்டும் ரிஷியுடன் வாழப் பயப்படுகிறாள் காரிகை.
மனதில் ரணங்களுடன் அவனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தன்னுள்ளே தவிப்பவளை சிறை மீற்க மன்னவன் வருவானா..?
...
அன்று விடுமுறை நாளென்பதால் மதிநிலா வீட்டிலே இருந்திருந்தாள்.
ஹாலிங் பெல் சத்தம் கேட்டு மேலிருந்து எட்டிப் பார்த்தாள்.
கீழே தான் அநாத்ரயன் பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.
"டேய் தடியா.. பெல் அடிக்கிறாங்க இல்ல.. காது கேட்கலையா..?" என்று கோபத்துடன் கத்தினாள்.
அவனோ அவளை பார்த்து விட்டு மீண்டும் குனிந்து பேப்பரை புரட்ட ஆரம்பித்து விட்டான்.
கடுப்பானவள் படிகளில் இறங்கி வந்து நேரே கதவை திறக்கச் சென்று, அப்படியே திரும்பி வந்தாள்.
பற்களை நறநறுத்தவாளாக தன்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அநாத்ரயனின் தலையில் ஓங்கி கொட்டி விட்டு விறுவிறுவென சென்று கதவைத் திறந்தாள்.
இவனோ "ஆஆஆ ராட்சசி..." என்று விட்டு தலையை தடவிக் கொண்டான்.
அங்கே வாசலில் காவலாளி கையில் பூ பொக்கேயுடனும் கிஃப்ட் பார்க்ஸ் ஒன்றுடனும் நின்றிருத்தான்.
"மேடம் கொரியர்..." என அவள் கையில் கொடுத்து விட்டு சென்றான்.
அவளோ நெற்றி யோசனையில் சுருங்க அதிலிருந்த டேக்கை திருப்பிப் பார்த்தாள்.
"ஹேப்பி பர்த்டே டு மை பியூட்டிஃபுல்..." என்றதன் கீழ் ரிஷி என அழகாக கையெழுத்திடப்பட்டிருந்தது.
"யாரு சொல்லி இருப்பா..?" என்று யோசித்தவளுக்கு மின் வெட்டியது போல நினைவு வந்தவளாய் முகம் சிவக்க அநாத்ரயனின் முன் போய் நின்றிருந்தாள்.
அவள் வந்து நின்றிருந்தும் அவளை அவன் ஏறிட்டுப் பார்க்கவில்லை.
"டேய்.. நீ தானே சொன்னே...?" என்று கேட்டாள்.
அவனோ நிமிர்ந்தும் பார்க்காமல் "நான் சொல்ல இல்லை..." என்றான்.
அவளுக்கோ சந்தேகம் உறுதியாக "நான் எதை சொன்ன... யாருக்கிட்ட சொன்ன என்றதே இன்னும் சொல்லைல. அதுக்குள்ள எப்படி இல்லைன்னு சொல்லுவ..?" என்றதும் திருதிருத்தான் ஆடவன்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் "திலா... அது..." என்பதற்குள் "ச்சீ போ..." என்றவளாய் வேகமாக படியேறினாள்.
அநாத்ரயனோ "அது தான் பிடிக்கயில்லைல.. பின்ன எதுக்கு கையோட கொண்டுட்டு போற..? எனக்கிட்ட தந்தா ரிட்டர்ன் பண்ணிடுவேன்.." என்று கத்தி சொன்னான்.
அவளோ "நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.. எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்.." என்று அவனைப் போலவே சத்தமிட்டு சொன்னாள்.
ஆனால் அதற்கு எதிர்மாறாக அவளது உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தன.
அநாத்ரயனும் அவளை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
...
இங்கே அறைக்குள் வந்தவளுக்கு கையிலிருந்த கிஃப்ட் பார்க்ஸை பார்த்ததும் அத்தனை சந்தோஷமாக இருந்தது.
அடுத்த கணம் மனத் துள்ளலுடன் அந்த பரிசை பிரித்துப் பார்த்தாள்.
உள்ளே அவளுக்காக காத்திருந்த பரிசைப் பார்த்ததும் இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷம் காணாமல் போயிருந்தது.
ஆம் அன்று அவனது கையில் கொடுத்து விட்டுச் சென்ற தாலி..
மனம் வலிக்க அதனை கையில் எடுத்துப் பார்த்தாள்.
அதன் கீழ் ஒரு கடிதம் இருந்தது.
எடுத்துப் படித்தாள்.
"என் மனைவிக்கு.." என்று ஆரம்பித்து இருந்தது.
"வாழ்க்கையில் எந்த ஆணுமே செய்யக் கூடாத ஒரு பெரும் தவறை நான் என்னவளுக்கே செய்து விட்டேன். முடிந்தால் மன்னித்து விடு... வாழ்க்கையில் எனக்கென ஓர் வட்டத்தைப் போட்டு எனக்கானவள் இப்படித் தான் இருக்க வேண்டுமென நான் போட்ட கோட்பாட்டை தகர்த்தெறிந்தவளாய் என் வாழ்க்கையில் நுழைந்த அழகே..
வார்த்தைகள் கொண்டு உன்னை வலிக்க செய்தேன்..
இப்போது நினைக்கையில் என்னையே என்னால் மன்னிக்க முடியவில்லை..
உன் கையிலிருப்பது நான் வேண்டா வெறுப்பாக அன்று உன் கழுத்தில் கட்டியது தான்.
ஆனால் நாளை விரும்பியே உன் கழுத்தில் அதனை அனுவிக்க கண்களில் கண்ணீருடன் நெஞ்சம் முழுக்க காதலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்..
முடிந்தால் நான் தந்த பிறந்த நாள் பரிசுடன் நம் வீட்டிற்கு வந்து விடு..." என்றதுடன் முடிவடைந்திருந்தது.
கண்ணீர் கன்னம் வழிய தாலியை தூக்கி பார்த்தவள் அருகில் இருந்த பொக்கேயை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
பூக்களின் நறுமணம் நுரையீரலை நிரப்பி இருக்க மனமோ தன்னவன் மீதான காதலை சுமந்து கொண்டு நாளைய விடியலுக்காக காத்துக் கொண்டிருந்தது.
தொடரும்...
தீரா.